24 April 2017

BK Murli 24 April 2017 Tamil

BK Murli 24 April 2017 Tamil

24.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தாய் தந்தையின் வம்சத்தில் வர வேண்டும் என்றால் முழுமையாகப் பின்பற்ற வேண்டும், அவர்களைப் போல இனிமையாகுங்கள். நன்றாகப் படிப்பை படியுங்கள்.கேள்வி:

எந்த ஆழமான இரகசியம் நிறைந்த விசயங்களைப் புரிந்துக் கொள்ள மிக நல்ல புத்தி வேண்டும்?பதில்:

பிரம்மா சரஸ்வதி உண்மையில் மம்மா பாபா இல்லை, சரஸ்வதி பிரம்மாவின் மகள் ஆவார். அவரும் பிரம்மா குமாரி. பிரம்மா தான் உங்களுடைய பெரிய அம்மா. ஆனால் ஆணாக இருக்கிறார். ஆகையால் தாய் என்று ஜகதம்பாவைக் கூறி விட்டனர். இது மிகவும் இரகசியம் நிறைந்த ஆழமான விஷயம் ஆகும். இதை புரிந்துக் கொள்ள மிக நல்ல புத்தி வேண்டும். 2. சூட்சும வதனவாசி பிரம்மாவை பிரஜா பிதா என்று கூற முடியாது. பிரஜா பிதா இங்கே இருக்கிறார். இவர் சம்பூர்ண பவித்திரமாகும் போது சம்பூரண அவ்வயக்த ரூபம் வெளிப்படுகிறது. அங்கே சைகை மொழி இருக்கிறது. தேவதைகளின் சபையைப் போன்று இருக்கிறது. இதுவும் புரிந்துக் கொள்ள வேண்டிய ஆழமான விஷயம் ஆகும்.பாட்டு

மாதா ஓ, மாதா...........ஓம் சாந்தி.

இது பல்கலைக்கழகம் என குழந்தைகளுக்குத் தெரியும் யார் படிக்க வைக்கிறார்? ஈஸ்வர். ஈஸ்வர் ஒருவர் தான். அவருடைய சாஸ்திரமும் ஒன்று தான் இருக்க வேண்டும். தர்ம ஸ்தாபகர் ஒருவர் என்றால் அவருடைய தர்மமும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். பிறகு சிறியதாகவோ பெரியதாகவோ ஆக்கி விட்டனர். அப்படியே ஒரு சாஸ்திரமாகி விட்டது. எனவே இது இறைவனின் பல்கலைக் கழகம் ஆகும். தந்தையின் பல்கலைக்கழகம் என எதுவும் கிடையாது. அரசு பல்கலைக்கழகம் தான் இருக்கின்றது. இதற்கு தாய் தந்தையின் பல்கலைக்கழகம் என்று பெயர். எப்படிப்பட்ட தாய் தந்தை? தேவி தேவதைகள் என்பார்கள். தாயும் நீயே, தந்தையும் நீயே என பாடுகிறார்கள் என்றால் நிச்சயமாக, தந்தை முதலில் இருக்கிறார். பகவான் வாக்கு. பகவான் அமர்ந்து படிக்க வைக்கின்றார். மற்ற இடங்களில் மனிதர்கள் மனிதர்களைப் படிக்க வைக்கிறார்கள். இங்கே நிராகார தந்தை ஆத்மாக்களாகிய உங்களைப் படிக்க வைக்கிறார். இந்த விசித்திரமான விஷத்தை மனிதர்கள் எளிதாகப் புரிந்துக் கொள்ள முடியாது. நிராகார் பரம்பிதா பரமாத்மா (காட் பாதர்) இறை தந்தை நம்மை படிக்க வைக்கிறார் என யாரும் கூற மாட்டார்கள். இங்கே உங்களை பரம்பிதா பரமாத்மா படிக்க வைக்கிறார். இது யாருடைய புத்தியிலும் இல்லை. படிப்பவர்களின் புத்தியிலும் இல்லை. படிக்க வைப்பவர்களின் புத்தியிலும் இல்லை. இறை தந்தை நம்மை படிக்க வைக்கிறார் என உங்களுக்குத் தெரியும். அனைவருக்கும் தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அவர் ஒருவரே ! வேறு எந்த தந்தையும் இல்லை. பிரம்மாவிற்கும் தந்தை அவரே. உங்களைப் படிக்க வைப்பவரும் அவரே! பிரம்மா படிக்க வைப்பதில்லை. நிராகார் தந்தை படிக்க வைக்கிறார். பிரம்மா சரஸ்வதி ஆதாம் மற்றும் ஏவாள் என மனிதர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களையும் விட உயர்ந்தவர் நிராகார் ஆவார். இருப்பினும் அவர் சாகாரத்தில் இருக்கிறார். நிராகார் வந்து படிக்க வைக்கின்றார் என குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு ஞானம் கொடுப்பவர் அதே காட் ஃபாதர் ஆவார். குடும்ப விவகாரத்தில் இருந்து நீங்கள் இந்த ஞானத்தைப் படிக்க வேண்டும் என கூறுகிறார். உண்மையில் இல்லறத்தில் இருந்து யாரும் படிப்பதில்லை. யாரோ ஒரு சிலர் தான் கஷ்டப்பட்டு இரண்டாம் முறை (மீண்டும்) கோர்ஸ் எடுப்பார்கள். இங்கே நமக்கு நிராகார் பரம்பிதா பரமாத்மா படிக்க வைக்கின்றார் என்ற நிச்சயம் முழுமையாக உங்ளுக்கு இருக்கிறது. இந்த சாகார மம்மா பாபா கூட அவரிடம் தான் படிக்கின்றனர். இது மிகவும் ஆழமான விஷயம் ஆகும். எது வரை புரிய வைக்கவில்லையோ அது வரை புரிந்துக் கொள்ள முடியாது. நீங்கள் இவரை (சரஸ்வதி) மம்மா என்கிறீர்கள். ஆனால் இவர் பிரம்மாவின் தத்தெடுக்கப்பட்ட மகள் ஆவார். நீங்களும் தத்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் உங்களை மம்மா என்று கூற முடியாது. மம்மா பாபா, தாதா, சகோதரன் சகோதரி, நீங்கள் பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள். அவர் கூட பிரம்மா குமாரி சரஸ்வதி ஆவார். ஆனால் அவரை ஜகதம்பா என்கிறீர்கள். ஏனென்றால், மம்மாவைக் கூட சிவபாபா தான் படைத்திருக்கிறார். ஆனால் முறைப்படி தாய் வேண்டும். ஆகையால் இவரை நிமித்தமாக்கி விட்டார். இது மிகவும் ரமணிகரமான விஷயம் ஆகும். புதியவர்கள் யாரும் புரிந்து கொள்ள முடியாது. அப்பா மற்றும் படைப்பின் அறிமுகம் இல்லாத வரை புரிந்துக் கொள்வது மிகவும் கடினமாகும். யாருக்கும் புரிய வைக்கவும் முடியாது.வேத சாஸ்திரங்களைப் படித்தல் மருத்துவம் படித்தல் போன்றவை மனிதர்களின் படிப்பாகும். மனிதர்கள் மனிதர்களைப் படிக்க வைக்கிறார்கள். நான் ஆத்மா ஆத்மாக்களைப் படிக்க வைக்கிறேன் என யாரும் கூற முடியாது. இங்கே உங்களை தேக அபிமானத்தில் இருந்து விடுவித்து ஆத்ம அபிமானியாக்குகிறார். தேக அபிமானம் முதல் நம்பர் விகாரம் ஆகும். யாரும் ஆத்ம அபிமானி கிடையாது. ஆத்மா மற்றும் உடல் இரண்டு பொருட்கள் இருக்கிறது என தெரியும். ஆனால் ஆத்மா எங்கிருந்து வருகிறது? அதனுடைய தந்தை யார்? இது யாருக்கும் தெரியாது. இது புது உலகத்திற்கான புது விஷயம் ஆகும். புதுடில்லி என்கிறார்கள். ஆனால் புது உலகத்தில் இதனுடைய பெயர் டில்லி என்று இருக்காது. அது பரிஸ்தான் என அழைக்கப்படுகிறது. நாம் ஈஸ்வரனுடைய வாரிசு என்பது முதன் முதலில் நிச்சயம் வேண்டும். தெய்வீக வாரிசு மற்றும் அசுர வாரிசு என்பதில் இரவு பகல் வித்தியாசம். அவர்கள் பிரஷ்டாச்சாரிகள், நீங்கள் சிரேஷ்டாச்சாரிகள், பதீத பாவனா, வாருங்கள் வந்து மிக உயர்ந்தவர்களாக மாற்றுங்கள் என பாடுகிறார்கள். பகவான் வந்து மிகவும் அழுக்கான துணிகளைத் துவைக்கிறார் என குரு நானக் கூட கூறியிருக்கிறார். நீங்களே பூஜைக்குரியவராகவும் நீங்களே பூஜாரியாகவும் எப்படி மாறுகிறீர்கள், இது அனைத்தும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். சதா பூஜைக்குரியவர் ஒரு பரம்பிதா பரமாத்மா. அவரே லஷ்மி நாராயணரை பூஜைக்குரியவராக மாற்றினார். அவர் கூட முதலில் தாய் தந்தையரை உருவாக்கினார், மம்மா பாபாவை தத்தெடுத்தார். பதீதர்களை பாவனமாக மாற்றுகின்றார். பதீத உலகத்தை பாவனமாக்குவதற்காக வருவதால் பிரம்மாவின் படத்தை மேலே காண்பித்துள்ளனர். கீழே தவம் செய்துக் கொண்டிருக்கின்றார். பதீதரை தத்தெடுக்கிறார். பிரம்மா சரஸ்வதி மற்றும் குழந்தைகளின் பெயர் மாறுகின்றது. பிரம்மாகுமார்-குமாரிகள் தேவி தேவதைகளாவதற்காக இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் அறிகிறீர்கள். இது ஈஸ்வரிய சந்தானம் மற்றும் குலமாகும். ஒரு விதையில் இருந்து இந்த வம்சம் வந்திருக்கிறது. அது ஆத்மாக்களின் வம்சமாகும். இது மனிதர்களின் வம்சமாகும். ருத்ர மாலை கூட ஆத்மாக்களின் வம்சத்தைக் குறிக்கிறது. மனிதர்களின் வம்சம் என்னென்ன? தேவதா, சத்திரிய, வைஷிய, சூத்திரர்................ இதுவே படைக்கக் கூடியவர் மற்றும் படைப்பினுடைய ஞானம். குழந்தைகளாகிய நீங்களே கேட்கிறீர்கள். ஆனால் வரிசைக் கிரமத்தில் தாரணைக்கேற்ப இராஜா இராணியாகவும் மாறுகிறீர்கள். பிரஜைகளாகவும் மாறுகிறீர்கள். மம்மா பாபாவைப் பின்பற்ற வேண்டும். மிகவும் இனிமையாக மாற முயற்சிக்க வேண்டும். மம்மா இனிமையானவர். ஆகவே அனைவரும் நினைக்கிறார்கள். இந்த மம்மா, பாபா மற்றும் குழந்தைகளாகிய உங்களை இனிமையாக மாற்றுபவர் சிவபாபா. நன்றாகப் படிக்கக் கூடிய மம்மா பாபா மற்றும் குழந்தைகள் அவர்களின் வம்சமாகும். அவர்கள் மிகவும் இனிமையாக மாற வேண்டும். சரஸ்வதியின் கையில் வீணையைக் கொடுத்திருக்கிறார்கள். பிறகு கிருஷ்ணரிடம் புல்லாங்குழலைக் கொடுத்திருக்கிறார்கள். பெயரை மட்டும் மாற்றிவிட்டனர். நன்றாக, படியுங்கள் என பாபா கூறுகிறார். குழந்தைகள் நன்றாகப் படிக்கிறார்கள் என்றால், அவர்களுடைய புத்தியில் முழு வரலாறு, புவியலும் இருக்கிறது. கஜினி முகமது எப்போது வந்தார்? எப்படி கொள்ளையடித்துச் சென்றார். இஸ்லாமியர்கள் இந்தந்த இடத்தில் போர் செய்தனர். இஸ்லாமியர் பௌத்தர் யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ அவர்களுடைய வரலாறு அவைருக்கும் தெரியும். ஆனால் இந்த எல்லையற்ற வரலாறு புவியியலை வேறு யாரும் அறியிவில்லை. புது உலகம் எப்படி பழையதாகிறது. நாடகம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? மூல வதனம், சூட்சுமவதனம் பிறகு ஸ்தூல வதனம். பிறகு இங்கு சக்கரம் எவ்வாறு சுழல்கிறது. இந்த படிப்பை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மூலவதனம் ஆத்மாக்கள் வசிக்கக் கூடிய இடமாகும். சூட்சும வதனத்தில் பிரம்மா, விஷ்ணு, சங்கர் இருக்கின்றனர். முதலில் பாவனமாக இருந்த ஆத்மாக்கள் பிறகு எப்படி பதீதமாகிறார்கள்? பிறகு எப்படி பாவனமாகிறார்கள்? இது அனைத்தும் புரிய வைக்கப்படுகிறது. சூட்சும வதனவாசி பிரம்மாவை பிரஜா பிதா என கூற முடியாது. பிரஜா பிதா இங்கே வேண்டும். பிரஜா பிதா இங்கிருக்கிறார். உங்களுக்கு காட்சிகள் கொடுக்கிறார். இந்த உடலில் இருக்கும் பிரம்மா பவித்ரமாகும் போது அங்கே சம்பூர்ண அவ்யக்த ரூபம் வெளிப்படுகிறது. வெண்மையான ஒளியின் சூட்சும வடிவத்தை போன்று இருக்கிறது. சூழ்நிலையே சைகையில் மாறுகிறது. சூட்சும வதனம் என்றால் என்ன? அங்கே யார் செல்ல முடியும்? இது உங்களுக்குத் தெரியும். அங்கே மம்மா பாபாவை நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கே தேவதைகள் கூட வருகிறார்கள். கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் தேவதைகள் பதீத உலகத்தில் கால் வைக்க முடியாது. எனவே சூட்சும வதனத்தில் சந்திக்கிறார்கள். அது தந்தை வீடு மற்றும் மாமியார் வீட்டாளர்களுக்கான சந்திப்பாகும். இல்லையென்றால் நீங்கள் பிராமணர் மற்றும் தேவதைகள் எப்படி சந்திப்பீர்கள்? எனவே இது சந்திப்பதற்கான ஒரு யுக்தியாகும் எதிரில் காட்சி கிடைப்பது கூட புத்தியினால் புரிந்துக் கொள்ள வேண்டும். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மீராவிற்கு வீட்டில் அமர்ந்தபடியே வைகுண்டத்தின் சாட்சாத்காரம் கிடைத்தது, நடனமாடினார். ஆரம்பத்தில் உங்களுக்குக் கூட காட்சிகள் கிடைத்திருக்கிறது. இராஜ்யம் எப்படி நடக்கிறது. பழக்க வழக்கங்கள் அனைத்தையும் தெரிவித்தனர். அச்சமயம் நீங்கள் சிலரே இருந்தனர். மற்றவர்கள் அனைவரும் கடைசியில் பார்ப்பார்கள். உலகத்தில் இருப்பவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். உங்களுக்கு காட்சிகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். மனிதர்கள் ஐயோ, ஐயோ ! என்று அலறிக் கொண்டிருப்பார்கள். சிலர் செல்வத்தை மண்ணில் மறைத்து வைத்திருப்பார்கள்.......... இச்சமயம் மக்கள் மக்களை ஆளுகின்றனர். இருப்பினும் அவர்களின் நிலை எவ்வளவு உயர்வாக இருக்கிறது. ஆனால் இச்சமயம் யாருடைய புத்தியோகமும் பரமாத்மாவுடன் இல்லாத காரணத்தால் அவரை அறிந்துக் கொள்ளவில்லை. கன்னிகை ஒரு முறை மணமகனை தெரிந்துக் கொண்டால் அன்பு இணைந்து விடுகிறது. தெரியவில்லை என்றால், அன்பில்லை. உங்களுக்குள் கூட வரிசைக் கிரமமாகத்தான் அன்பிருக்கிறது. நிரந்தரமாக நினைப்பதற்கு அன்பு வேண்டும். ஆனால் காதலனை மறந்து விடுகிறார்கள். இந்த பாபாவும் (பிரம்மா) நான் கூட மறந்து விடுகிறேன் என கூறுகிறார்.குழந்தைகளாகிய உங்களுக்கு 5000 வருடத்திற்குப் பிறகு தன்னை ஆத்மா என்று உணருங்கள். பரமாத்மாவை நினையுங்கள் என்ற பாடம் கிடைத்திருக்கிறது. இந்த நினைவினால் தான் விகர்மம் எரிந்து விடும். இப்போது விகர்மாஜீத் ஆக வேண்டும். முதன் முதலில் யார் சத்யுகத்தில் வருவார்களோ அவர்களை விகர்மாஜீத் என்பார்கள். பதீதர்களை விகர்மி (தீய காரியம் செய்பவர்கள்) என்றும் பாவனமானவரை சுகர்மி (சுகம் தரும் காரியம் செய்பவர்கள்) என்றும் கூறுவார்கள். சத்யுகத்தில் விகர்மாஜீத் இராஜ்யம் நடைபெறுகிறது. பிறகு விகர்மத்தின் இராஜ்யம் நடக்கிறது. 2500 வருடங்கள் விகர்மாஜீத் பிறகு அவர்களே விகர்மம் செய்பவர்களாகி விடுகிறார்கள். இப்போது நீங்கள் விகர்மாஜீத் இராஜ்யத்தில் வருவதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். மோகஜீத் இராஜாவின் பெரிய கதை இருக்கிறது. பதீத ராஜ்யம் எப்போது நடக்கிறது, பாவன ராஜ்யம் எப்போது நடக்கிறது என்பதை நீங்கள் அறிகிறீர்கள். சிவபாபா பாவனமாக்குகிறார். அவருடைய படமும் இருக்கிறது. இராவணன் பதீதமாக்குகிறான் அவருடைய படமும் இருக்கிறது. நிச்சயமாக இப்போது இராவண ராஜ்யம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால் இந்த சிருஷ்டி சக்கரத்தின் படத்தில் இன்றைய பாரதம், நாளைய பாரதம் என்று எழுத வேண்டும். மாற வேண்டும் அல்லவா?இது மரண உலகம் என்று உங்களுக்குத் தெரியும். இங்கே அகால மரணம் ஏற்படுகிறது. அங்கே இவ்வாறு நடக்காது. ஆகவே அதை அமர லோகம் என்கிறார்கள். இராம இராஜ்யம் சத்யுகத்தில் இருந்து ஆரம்பமாகிறது. இராவண ராஜ்யம் துவாபரயுகத்திலிருந்து ஆரம்பமாகிறது. இந்த விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் தான் அறிகிறீர்கள். மனிதர்கள் அனைவரும் கும்பகர்ண தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் குழந்தைகாளகிய உங்களுக்கு அனைத்து இரகசியங்களையும் புரிய வைக்கிறேன். நீங்களே பிரம்மா முக வம்சாவளி, உங்களுக்குப் புரிய வைக்கிறேன். இதில் இந்த பிரம்மா சரஸ்வதி கூட வந்து விடுகிறார்கள். இவர் ஜெகதம்பா, மகிமை அதிகப்படுத்தும் வகையில் இவருடைய புகழ் இருக்கிறது. மற்றபடி உண்மையில் பெரிய அம்மா பிரம்மா தான் அல்லவா? ஆனால் ஆண் உடலில் இருக்கிறார். இதுவே மிகவும் ஆழமான விஷயம் ஆகும். ஜெகதம்பாவிற்கு நிச்சயமாக யாராவது அம்மா இருப்பார்கள் அல்லவா? பிரம்மாவிற்கு மகள், ஆனால் சரஸ்வதியின் அம்மா எங்கே யார் மூலமாக இவரைப் படைத்தார். எனவே இந்த பிரம்மா பெரிய அம்மா ஆகிவிடுகிறார். இவர் மூலமாக ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் படைக்கிறார். இந்த விஷயங்களைப் புரிந்துக் கொள்ள மிக நல்ல புத்தி வேண்டும். குமாரிகள் நன்கு புரிந்துக் கொள்கின்றனர். மம்மா கூட குமாரி ஆவார். பிரம்மச்சரியத்திற்கு பங்கம் ஏற்பட்டால் தாரணை ஆவதில்லை. சத்யுகத்தில் இல்லற தர்மம் இருந்தது. ஆனால் அவர்களைப் பாவனமானவர் என்பார்கள். இங்கே பதீதமாக இருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணருக்கு சர்வகுண சம்பன்னர், பதினாறுகலை நிறைந்தவர்... என்று எவ்வளவு மகிமை இருக்கிறது. இங்கேயோ எந்த ஒரு மனிதருக்கும் இவ்வாறு கூற முடியாது. அங்கே இராவண இராஜ்யமே இல்லை. தேக அகங்காரத்தின் பெயரே இல்லை. அங்கே நாம் இந்த பழைய உடலை விட்டு விட்டு இன்னொன்று எடுப்போம் என்ற ஞானம் இருக்கிறது. ஆத்ம அபிமானியாக இருக்கிறார்கள். இங்கே தேக அபிமானியாக இருக்கிறார்கள். இப்போது தன்னை ஆத்மா என்று உணருங்கள். நீங்கள் இந்த பழைய உடலை விட்டு விட்டு திரும்ப போக வேண்டும் என்று உங்களுக்கு கற்பிக்கப்படுகிறது, பிறகு புதிய உலகத்தில் புதிய உடல் எடுப்பீர்கள். புரிந்ததா? நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே !தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நிரந்தரமாக நினைவு இருப்பதற்கு மனப்பூர்வமான அன்பு ஒரு தந்தையிடம் இருக்க வேண்டும். காதலனை ஒரு போதும் மறக்கக் கூடாது.2. விகர்மாஜீத் இராஜ்யத்தில போவதற்கு மோகஜீத் ஆக வேண்டும். நல்ல கர்மங்களைச் செய்ய வேண்டும். எந்த ஒரு விகர்மமும் செய்யக் கூடாது.வரதானம்:

பரந்த மனப்பான்மை கொண்டு, அளவிலா கஜானாவின் மூலம் அனைவரையும் நிரப்பக் கூடிய மாஸ்டர் வள்ளல் ஆகுக !வள்ளலின் குழந்தைகளாகிய நீங்கள் மாஸ்டர் வள்ளல்கள் ! எவரிடமிருந்தாவது வாங்கி, அதை பிறருக்கு கொடுப்பது கொடையாகாது. வாங்கி கொடுப்பது வியாபாரமாகிவிடுகிறது. வள்ளலின் குழந்தைகள் பரந்த உள்ளத்துடன் வழங்கிக் கொண்டேயிருங்கள். அளவிலா கஜானாக்கள் உள்ளன. யாருக்கு என்ன தேவையோ அதை வழங்கி நிறைத்து கொண்டே செல்லுங்கள். எவருக்கு குஷி வேண்டுமோ, சினேகம் வேண்டுமோ, சாந்தி வேண்டுமோ கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். இது திறந்த கணக்கு கணக்கு வழக்கு கிடையாது. வள்ளலின் தர்பாரில் இச்சமயம் அனைத்தும் திறந்தே இருக்கும். எனவே எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு கொடுங்கள். இதில் கருமிகளாக இருக்க வேண்டாம்.சுலோகன் :

தனது மனவிருத்தியை அப்படி வாய்ந்ததாக்குங்கள். அதனால் கெட்டவைகளும் நல்லதாக ஆகிவிடட்டும்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only