BK Murli 25 April 2017 Tamil

BK Murli 25 April 2017 Tamil

25.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! நீங்கள் கர்மயோகி ஆவீர்கள். நீங்கள் நடந்தாலும், சென்றாலும் நினைவின் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு தந்தையின் நினைவில் இருந்து நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான முயற்சி செய்யுங்கள்.கேள்வி:

நிச்சய புத்தி குழந்தைகளின் முக்கிய அடையாளம் என்னவாக இருக்கும்?பதில்:

அவர்களுக்கு தந்தை மீது முழுக்க முழுக்க அன்பு இருக்கும். தந்தையின் ஒவ்வொரு கட்டளையையும் முழுக்க முழுக்க கடைப்பிடிப்பார்கள். அவர்களுடைய புத்தி வெளியில் அலைய முடியாது. அவர்கள் இரவு விழித்து கூட தந்தையை நினைவு செய்வார்கள். நினைவில் இருந்து உணவு சமைப்பார்கள்.பாடல்:

நீ இரவெல்லாம் தூங்கியே இழந்தாய் .. .. ..ஓம் சாந்தி.

முதலில் பாபா இங்கு வசிப்பவர் ஒன்றும் அல்ல, என்ற நிச்சயம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். பரந்தாமத்திலிருந்து இங்கு வந்து நமக்கு கற்பிக்கிறார். என்ன கற்பிக்கிறார்? உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை மனிதனிலிருந்து தேவதை ஆவதற்கான உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பை படிப்பிக்கிறார். இந்த படிப்பு பிரசித்தமானது ஆகும். இதன் மூலம் அசுரரிலிருந்து தேவதை அல்லது குரங்கிலிருந்து கோவிலுக்கு உகந்தவர் ஆகிறீர்கள். இச்சமயம் மனிதர்களுடைய முகம் மனிதர்கள் போல இருந்தாலும் கூட விகாரங்கள் அவரிடம் குரங்கை விடவும் அதிகமாக உள்ளது. குரங்கை விட மனிதனிடம் நிறைய பலம் என்னவோ இருக்கிறது. கற்றுக் கொண்டு பலத்தைப் பெறுகிறார்கள். இங்கு கூட ஒரு சிலர் தந்தையிடம் கற்றுக் கொண்டு சொர்க்கத்தின் ராஜாங்கத்தை ஸ்தாபனை செய்கிறார்கள். ஒரு சிலரோ பின் விஞ்ஞானத்தைக் கற்று கொண்டு நரகத்தை விநாசம் செய்கிறார்கள். உண்மையில் ஸ்தாபனை மற்றும் விநாசத்தின் காரியம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே பழைய பொருட்கள் அழிக்கப்படுகின்றது. அவர்கள் எல்லோரும் இராவணனை (சலாம்) வணங்குகிறார்கள். நீங்கள் மட்டுமே இராமருக்கு சலாம் போடுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இராமர் மற்றும் இராவணன் இருவரையும் அறிந்துள்ளீர்கள். மனிதர்கள் கீதையை வியாசர் கூறினார் என்று கூறுகிறார்கள். அதில் எழுதப்பட்ட பகவானுவாச என்ற வார்த்தை சத்தியமானது. ஆனால் பகவானின் பெயரை மாற்றி பொய்யானதாக ஆக்கி விட்டுள்ளார்கள். பாபா எவ்வளவு புரிய வைக்கிறார் - கீதையின் பகவான் நிராகார சிவன் ஆவாரேயன்றி, மனிதர் அல்ல என்ற ஒரு விஷயத்தை மட்டுமே கண்காட்சியில் புரிந்து கொண்டு விட வேண்டும் என்று. இது புரிந்து கொள்வதில்லை. இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. சந்நியாசிகள் மட்டுமே தங்களை துக்கமுடையவர்கள் என்று நினைப்பதில்லை. உண்மையில் அவர்கள் கூட அவசியம் துக்கமுற்றிருப்பவர்கள் தான். ஆனால் நாங்கள் துக்கமுற்றவர்கள் அல்ல என்கிறார்கள். அல்லது சரீரம் துக்கமடைகிறது என்று கூறி விடுகிறார்கள். ஆத்மா துக்கமடைகிறதா என்ன என்பார்கள். ஆத்மாவே பரமாத்மா ! அது எப்படி துக்கமடையும் என்பார்கள். இது தவறான ஞானமாகும். இப்பொழுது இருப்பதே பொய்யான கண்டமாக. பாரதம் சொர்க்கமாக இருக்கும் பொழுது உண்மையான கண்டமாக இருந்தது. நாடகப்படி நாளுக்கு நாள் துக்கம் அதிகரித்துக் கொண்டே போகும் என்று தந்தை புரிய வைக்கிறார். எவ்வளவு தான் யக்ஞம், தானம், புண்ணியம் ஆகியவை செய்தாலும் சரி, ஆனால் விளைவு என்ன ஆயிற்று? கீழேயே இறங்கி வந்து விட்டார்கள். அச்சமயம் 100 சதவிகிதம் (ப்ரஷ்ட்டாச்சாரி) தாழ்ந்த நிலையில் இருக்கும் நரகவாசிகளாக ஆகி உள்ளார்கள். எனவே எல்லோரும் துக்க முற்றிருக்கும் பொழுது, மேலும் எல்லா நடிகர்களும் வந்து விட்டிருக்கும் அப்பேர்ப்பட்ட நேரத்தில் தான் தந்தை வர வேண்டி உள்ளது. கொஞ்சம் பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள். பெரும்பான்மையானோர் வந்து விட்டுள்ளார்கள். இனி போகப் போக நிறைய பேர் துக்கமடைவார்கள். பகவானை நினைவு செய்வார்கள். உங்களுக்கோ சுயம் பகவான் அவரே கற்பிக்கிறார். எனவே எவ்வளவு நல்ல முறையில் படிக்க வேண்டும். தந்தை, ஆசிரியர், சத்குரு மூவருமே ஒன்றாகக் கிடைத்துள்ளார். இப்பொழுது வேறு யாரிடம் போக வேண்டும்? இல்லற விவகாரங்களில் தாராளமாக இருங்கள். ஆனால் நிராகார பரமாத்மாவாகிய என் வழிப்படி நடவுங்கள் என்று தந்தை கூறுகிறார். அப்பொழுது நீங்கள் சிறந்தவர்களாக ஆக முடியும். மேலும் வேறு எந்த குருமார்கள் ஆகியோரின் வழிப்படி நடக்காதீர்கள். பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று நீங்கள் கேட்கிறீர்கள். காட்ஃபாதர் ஆவார். எனவே அவசியம் தந்தையிடமிருந்து புது உலகத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டி உள்ளது. ஃபாதர் என்றால் படைப்புகர்த்தா ஆவார் என்பது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. சொர்க்கத்தின் படைப்பை படைப்பவர் ஆவார். ஆனால் இவர் நிராகாரமானவர் ஆவார். ஆத்மாவும் நிராகாரமானது ஆகும். இது மனிதர்களுக்குத் தெரியவே தெரியாது. ஆத்மாவின் ரூபம் என்ன? பரமாத்மாவின் ரூபம் என்ன? ஆத்மா அழியாதது ஆகும். பரமாத்மாவும் அவினாஷி ஆவார். ஒவ்வொரு ஆத்மா விற்குள்ளும் அழியாத பாகம் பொருந்தி உள்ளது. இந்த விஷயங்களைக் கேட்கும் பொழுது மனிதர்களின் புத்தி வியப்பிலாழ்ந்து விடுகிறது. யார் முந்தைய கல்பத்தில் ஆஸ்தி எடுத்தார்களோ அவர்களே முயற்சிக்கேற்ப எல்லா விஷயங்களையும் புரிந்து கொண்டு விடுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் பக்குவமான நிச்சயம் உள்ளது. மேலும் தந்தையிடம் அன்பு கூட உள்ளது. உண்ணும் பொழுதும் அருந்தும் பொழுதும் என்னை நினைவு செய்யுங்கள் என்று சிவபாபா கட்டளையிடுகிறார். நினைவினால் விகர்மங்கள் விநாசம் ஆகும். மேலும் உயர்ந்த பதவியும் அடைவீர்கள். ஒரு சிலரோ இங்கு தான் அமர்ந்துள்ளார்கள் என்றாலும் கூட புத்தி வெளியில் அலைந்து கொண்டிருக்கிறது. எப்படி பக்தி மார்க்கத்தில் ஆகிறது. மாயையினுடைய இராஜ்யம் ஆகும் அல்லவா? புத்தி வெளியில் சென்று விடுகிறது என்றால், தாரணை ஆவதில்லை. தந்தையின் கட்டளைப்படி யாரோ ஒருவர் தான் அரிதாக நடக்கிறார்கள். தலை மீது பாவங்களின் சுமை நிறைய உள்ளது. எனவே இரவு விழித்து என்னை நினைவு செய்தீர்கள் என்றால், உங்களுக்கு நிறைய உதவி கிடைக்கும் என்று தந்தை கூறுகிறார். போகும் போதும், வரும்போதும் கூட நினைவின் பயிற்சி செய்யுங்கள். நினைவில் இருந்து உணவை சமையுங்கள். இதில் மிகுந்த உழைப்பு உள்ளது. அடிக்கடி மறந்து விடுகிறார்கள். குழந்தைகள் மிகவும் நல்ல முறையில் நினைவு செய்ய வேண்டும். 24 மணி நேரத்தில் 16 மணி நேரம் சுதந்திரமாக (ஃப்ரீ) இருக்கிறீர்கள். மீதி 8 மணி நேரமோ யோகத்தில் அவசியம் இருக்க வேண்டும். நீங்கள் கர்மயோகி ஆவீர்கள். எல்லாமே செய்தபடியே என்னுடைய நினைவில் இருங்கள் என்று பாபா கூறுகிறார். நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்தீர்கள் என்றால் வீட்டில் அமர்ந்திருந்தாலும் கூட பலத்த சம்பாத்தியம் செய்ய முடியும். பெரிய பெரிய மனிதர்கள் கூட வருவார்கள். ஆனால் டூ லேட் - மிகுந்த தாமதம் ஆகி விடும். உங்களிலும் கூட நிறைய பேர் நாங்கள் இலட்சுமியை அல்லது நாராயணனை வரன் முடிப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் அடிக்கடி மறந்து விடுகிறார்கள். சிவபாபா இவருக்குள் வருகிறார் என்ற இந்த விஷயம் எங்களுடைய புத்தியில் பதிவதில்லை என்று கூறுவோர் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏதோ சக்தி இருக்கிறது. கவர்ச்சி இருக்கிறது. ஆனால் குழந்தைகள் தந்தையைப் புரிந்து கொள்வதில்லை. ஏனெனில் சாஸ்திரங்களில் தந்தை வருகிறார் என்பது போன்ற விஷயங்கள் இல்லை. கீதை எல்லாவற்றையும் விட உயர்ந்த சாஸ்திரம் ஆகும். அதில் கூட மனிதனினுடைய பெயரைப் போட்டு விட்டுள்ளார்கள். பிறகு உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் பெயர் கீழே இருக்கக் கூடிய சாஸ்திரத்தில் எப்படி வர முடியும்? எவ்வளவு தவறு செய்துவிட்டுள்ளார்கள் என்று தந்தை கூறுகிறார். நான் தான் இந்த ருத்ர வேள்வியை இயற்றினேன். கிருஷ்ணரை ஷியாம் சுந்தர் என்று கூறுகிறார்கள். இராதை கிருஷ்ணர் தான் இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள். அவர்களே முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார்கள். 84 இலட்சம் என்று கூறினாலும் கூட முதலில் சொர்க்கத்தில் வருபவர்களோ இலட்சுமி நாராயணரே ஆவார்கள். தேவி தேவதா தர்மத்தினரான நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் தான் முதல் நம்பராக இருந்தீர்கள். உங்களுடைய இராஜாங்கமே இப்பொழுது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இலட்சுமி நாராயணர் உங்களுடைய தாய் தந்தையராக இருந்தார்கள். இப்பொழுது உங்களுடைய இராஜதானி உருவாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இப்பொழுது சம்பூர்ணம் ஆகவில்லை. அவசியம் ஆக வேண்டும். அதனால் தான் சூட்சுமவதனத்தில் சாட்சாத்காரம் ஆகிறது. தன்னை சம்பூர்ண ஃபரிஷ்தா என்று புரிந்துள்ளீர்கள். ஃபரிஷ்தா ஆன பிறகு இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள். அவர்களுடையதும் சாட்சாத்காரம் ஆகிறது. தத்-த்வம் - நீங்களும் அதே போல - நீங்களும் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கப்படுகிறது. தற்காலத்தில் பள்ளிக் கூடங்களில் கூட கீதையைக் கற்பிக்கிறார்கள்.யார் படித்து புத்திசாலி ஆகி விடுகிறார்களோ அவர்கள் பின்னர் மற்றவர்களுக்கு கற்பிப்பார்கள். ஆக பண்டிதர் ஆகி விடுகிறார்கள். கேட்பவர்கள் ஏராளமாகப் பின்பற்றுபவர்களாக ஆகி விடுகிறார்கள். இனிமையான குரல் இருக்கும். நல்ல முறையில். சுலோகம் ஆகியவற்றை மனப்பாடம் செய்து கொண்டு விடுகிறார்கள். கிடைப்பது எதுவும் இல்லை. தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளார்கள். பாபா தான் வந்து சதோபிரதானமாக ஆக்குகிறார். அது கூட வரிசைக்கிரமமாக, முயற்சிக்கேற்பவே ஆகிறார்கள். எல்லா ஆத்மாக்களும் சக்திவானாக ஆக முடியாது. தந்தைக்கு சர்வ சக்திவான் என்று கூறுவார்கள். இலட்சுமி நாராயணருக்குக் கூற மாட்டார்கள். சக்தியின் விஷயம் இப்பொழுது ஆகிறது. இப்பொழுது நீங்கள் இராஜ்யத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு வரம் கிடைத்து கொண்டிருக்கிறது. அமரபவ, நீடூழி வாழ்க என்று தந்தை கூறுகிறார். சத்யுகத்தில் உங்களை காலன் சாப்பிட மாட்டான். அங்கோ மரணம் என்ற வார்த்தையே கிடையாது. இன்னார் இறந்து விட்டார் என்று கூறமாட்டார்கள். நாம் பழைய வயோதிக சரீரத்தை விட்டு விட்டு புதியதை எடுக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். மகாகாலனின் கோயில் கூட உள்ளது. அதில் சிவலிங்கத்தை மட்டும் வைத்து கொடிகள் ஆகியவை வைத்திருக்கிறார்கள். இது போன்ற நிறைய கற்கள் இருக்கின்றன. அதில் தங்கம் இடப்பட்டு இருக்கும். பிறகு அதை தேய்த்து தேய்த்து அமைக்கிறார்கள். நேபாளத்தில் நதியின் மணலில் தங்கம் வழிந்து வந்து கொண்டிருந்தது. சத்யுகத்தில் உங்களுக்கு நிறைய தங்கம் கிடைத்து விடுகிறது. இப்பொழுதோ தங்கமே இல்லை. முற்றிலுமே இல்லாமல் போய் விட்டுள்ளது. சுரங்கங்கள் எல்லாமே காலி ஆகிவிட்டுள்ளது. சொர்க்கத்தில் தங்க மாளிகைகள் அமைகின்றன. மீண்டும் நாம் நமது சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். பாபா நாங்கள் உங்களுடையவராக ஆகி விட்டுள்ளோம் என்று நிறைய குழந்தைகள் எழுதுகிறார்கள். ஒரு பொழுதும் பார்த்தது கூட இல்லை. இப்பொழுது நீங்கள் அமரலோகத்திற்காக அமர கதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நிச்சயத்தினால் தான் வெற்றி ஆகிறது. நிச்சயம் கூட பக்குவமாக இருக்க வேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நிச்சய புத்தி உடையவராக ஆகி ஒரு தந்தையிடம் முழுமையான அன்பு கொள்ள வேண்டும். தந்தையின் கட்டளைப்படி நடந்து மாயை மீது வெற்றி அடைய வேண்டும்.2. சரீர நிர்வாகத்தின் பொருட்டு கர்மம் செய்தபடியே கர்மயோகி ஆக வேண்டும். நினைவினுடைய சார்ட் 8 மணி வரை அவசியம் அமைக்க வேண்டும்.வரதானம்:

(ஸ்மிருதி) நினைவின் மகத்துவத்தை அறிந்து தங்களது சிரேஷ்ட ஸ்திதியை அமைத்துக் கொள்ளக் கூடிய அவினாஷி திலகம் அணிந்தவர் ஆவீர்களாக !பக்தி மார்க்கத்தில் திலகத்திற்கு மிகுந்த மகத்துவம் உள்ளது. இராஜ்யம் கொடுக்கும் பொழுது திலகம் இடுகிறார்கள். சுமங்கலம் மற்றும் பாக்கியத்தின் அடையாளம் கூட திலகம் ஆகும். ஞான மார்க்கத்தில் பின் ஸ்மிருதியின் (நினைவு) திலகத்திற்கு மிகுந்த மகத்துவம் உள்ளது. எப்படி ஸ்மிருதியோ அப்படி ஸ்திதி ஆகிறது. ஸ்மிருதி சிரேஷ்டமாக (சிறந்ததாக) இருந்தது என்றால் ஸ்திதி (நிலை) கூட சிரேஷ்டமாக இருக்கும். எனவே பாப் தாதா குழந்தைகளுக்கு மூன்று ஸ்மிருதிகளின் திலகம் அளித்துள்ளார். சுயத்தின் ஸ்மிருதி, தந்தையின் ஸ்மிருதி மற்றும் சிரேஷ்ட கர்மத்திற்காக டிராமாவின் ஸ்மிருதி – அமிர்தவேளை இந்த மூன்று ஸ்மிருதிகளின் திலகம் இடக் கூடிய அவினாஷி திலகம் அணிந்த குழந்தைகளின் ஸ்திதி எப்பொழுதும் சிரேஷ்டமாக இருக்கும்.சுலோகன்:

எப்பொழுதும் நல்லது நல்லதையே சிந்தித்து கொண்டே இருந்தீர்கள் என்றால், எல்லாமே நன்றாக ஆகி விடும்.


***OM SHANTI***