27 April 2017

BK Murli 28 April 2017 Tamil

BK Murli 28 April 2017 Tamil

28.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! இந்த கலியுகத்தில் அனைவரும் இராவணனின் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கின்றனர், ஜீவன்பந்தனத்தில் இருக்கின்றனர், அவர்களுக்கு ஜீவன்முக்தி கொடுக்க வேண்டும்.கேள்வி:

எந்த ஆஸ்தி பிராமணர்களாகிய உங்கள் கூடவே அனைத்து மனித ஆத்மாக்களுக்கும் கிடைக்கிறது?பதில்:

ஜீவன்முக்திக்கான ஆஸ்தி அனைவருக்கும் கிடைக்கிறது. பிரம்மாவின் வம்ச குழந்தைகளாக பிராமணர்களாக நீங்கள் ஆகிறீர்கள், ஆகையால் 21 பிறவிகளுக்கு ஜீவன்முக்திக்கான ஆஸ்தி கிடைக்கிறது, மற்றபடி அனைவருக்கும் அவரவர்களது தர்மத்தில் முதன் முதலில் ஜீவன்முக்தி அதாவது சுகம் பிறகு துக்கம் கிடைக்கிறது. ஒவ்வொருவரும் பாதி காலம் சுகம் மற்றும் பாதி காலம் துக்கம் அனுபவிக்கின்றனர். மற்றபடி ஒவ்வொருவரும் சொர்க்கத்தின் சுகத்தை அனுபவிக்க முடியாது. அதற்கு பிராமணர்களாக ஆக வேண்டியிருக்கும், பாடசாலையில் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும், மாயாவை வெல்ல வேண்டியிருக்கும்.பாட்டு:

தன் முகத்தை தானே பார்த்துக் கொள்ளுங்கள் .......ஓம்சாந்தி.

இதை கூறியது யார்? தனது உள்ளம் என்ற கண்ணாடியில் நான் எவ்வளவு பாவம் செய்திருக்கிறேன்? எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன்? அதாவது 5 விகாரங்களின் மீது எந்த அளவிற்கு வெற்றியடைந்திருக்கிறேன்? ஸ்ரீ நாராயணனை வரனாக அடையுமளவிற்கு நான் தகுதியானவனாக ஆகியிருக்கிறேனா? என்று பாருங்கள். ஏனெனில் ஜீவன்முக்தி அல்லது சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இராஜா, இராணியும் ஆகின்றனர், பிரஜைகளும் ஆகின்றனர். ஆக உள்ளம் என்ற கண்ணாடியில் தாய், தந்தையைப் போன்று நான் சேவை செய்து கொண்டிருக்கிறேனா? என்று பார்க்க வேண்டும். இது கலியுகம் மற்றும் அனைவரும் ஜீவன்பந்தனத்தில் இருக்கின்றனர் என்பதை பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். ஒருவரும் ஜீவன்முக்தியில் கிடையாது. நீங்களும் ஜீவன்பந்தனத்தில் இருந்தீர்கள். இப்போது ஜீவன்முக்தி அடைவதற்காக தந்தை முயற்சி செய்விக்கின்றார். இந்த நேரத்தில் அனைத்து மனிதர்களும் ஜீவன்பந்தனத்தில் இருக்கின்றனர் என்பதை தந்தை புரிய வைத்திருக்கின்றார். ஏனெனில் இருப்பதோ கலியுகம்! இராவணனின் சங்கிலியில் கட்டப்பட்டு இருக்கின்றனர். கலியுகம் என்றால் ஜீவன்பந்தனம். சத்யுகம் என்றால் ஜீவன்முக்தி. சத்யுகத்தில் இராஜா, ராணியைப் போன்று பிரஜைகள் அனைவரும் ஜீவன்முக்தியுடன் இருப்பர். இராவண இராஜ்யத்தில் ஜீவன்பந்தனத்தில் இருக்கின்றனர், இராஜா, ராணியைப் போன்று பிரஜைகளும் இருக்கின்றனர். இந்த நேரத்தில் அனைத்து மனிதர்களும் ஜீவன்பந்தனத்தில் இருக்கின்றனர், தமோபிரதானமாக, துக்கமாக இருக்கின்றனர். இப்போது அனைவரும் சதோபிரதானத்தில் செல்ல வேண்டும். சதோபிரதானம் சத்யுகத்தில் ஆரம்பமாகும். ஒவ்வொரு ஆத்மாவும் அவரவர்களது பாகத்தில் நடித்தே ஆக வேண்டும். ஆத்மா எப்போது சாந்திதாமத்திலிருந்து தனது தர்மத்தில் வருகிறதோ அப்போது முதன் முதலில் ஜீவன்முக்தியுடன் இருக்கிறது. சத்யுகம், திரேதாவில் யாரையும் ஜீவன்பந்தனம் என்று கூறுவது கிடையாது, ஏனெனில் இராவண இராஜ்யமே கிடையாது. கலியுகத்தில் இராவண இராஜ்யம் இருக்கிறது. முழு பூமியிலும் ஜீவன் பந்தனத்தின் இராஜ்யம் இருக்கிறது. ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தின் முதல் நம்பரில் உள்ளவர்களும் ஜீவன் பந்தனத்தில் இருக்கின்றனர். இப்போது ஜீவன்முக்தி அடைந்து கொண்டிருக்கின்றனர். ஜீவன்முக்தி என்றால் அனைவரும் சத்யுகம், திரேதாவில் வந்து விடுவர் என்று பொருள் கிடையாது. இராவணனின் துக்கத்திலிருந்து விடுவிப்பது தான் ஜீவன்முக்தி என்று கூறப்படுகிறது. மனிதன் மனிதனுக்கு முக்தியோ அல்லது ஜீவன்முக்தியோ கொடுக்க முடியாது. முக்தி என்றால் நிர்வாணதாமத்திற்கு அனைவரையும் தந்தை தான் அழைத்துச் செல்கிறார். முதலில் அனைவரும் முக்திக்குச் செல்வார்கள், பிறகு ஜீவன்முக்திக்கு வரிசைகிரமமாக, தர்மத்தின் படி வருவார்கள். சத்யுகத்திற்கு வரவில்லையெனில் ஜீவன்முக்தி என்று கூற முடியாது என்று கிடையாது. முதன் முதலில் யாரெல்லாம் அவர்களது தர்மத்தில் வருகிறார்களோ அவர்கள் ஜீவன்முக்தியில் இருக்கின்றனர். ஆத்மா முதலில் சதோபிரதானமாக ஆக வேண்டும். பிறகு சதோ, ரஜோ, தமோவில் வர வேண்டும். ஒவ்வொரு பொருளும் புதியதிலிருந்து பழையதாக ஆகிறது, பிறகு பழையதிலிருந்து புதியதாக ஆகிறது. இந்த நேரத்தில் சாது, சந்நியாசி போன்ற அனைவரும் ஜீவன் பந்தனத்தில் இருக்கின்றனர். தந்தை எதுவரை வரவில்லையோ! அதுவரை கலியுகம். அவர் பாபா என்று கூறப்படுகின்றார், பிறகு மகா காலன் என்றாலும் சரி அல்லது வேறு எந்த பெயர் வைத்தாலும் சரியே. அசல் பெயர் சிவபாபா. பாபா, பாபா என்று கூறிக் கொண்டே இருக்கிறீர்கள். இறை தந்தை என்று பரம்பிதா பரமாத்மா கூறப்படுகின்றார். நான் வந்து குழந்தைகளுக்கு முக்தி, ஜீவன்முக்தி இரண்டும் கொடுக்கிறேன் என்று தந்தை புரிய வைக்கின்றார். முதன் முதலில் யார் வந்தாலும் அவசியம் சுகத்திற்குத் தான் அடைவார்கள், பிறகு தான் துக்கம் அடைவார்கள். முக்திக்குப் பிறகு ஜீவன் முக்தி வருகிறது, பிறகு ஜீவன் பந்தனமாகும். முதன் முதலில் அவசியம் சுகத்திற்குத் தான் வர வேண்டும். தந்தை அனைவருக்கும் சுகத்தின் ஆஸ்தியை கொடுக்கின்றார். சிலருக்கு ஒரே ஒரு பிறப்பிற்கான சுகம் இருக்கலாம். வருவார்கள், சிறிது சுகம் அடைவார்கள் பிறகு இறந்து விடுவார்கள். அவர்களுக்கு நாடகத்தில் அவ்வளவு தான் பாகம் இருக்கிறது. மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்று வரையிலும் கூட வந்து கொண்டே இருக்கின்றனர். அதிகம் இருக்கக் கூடியவர்கள் கிடையாது. அழிவு எதிரில் இருக்கிறது. கலியுகத்தில் புதிதாக வருபவர்கள் வந்தவுடனேயே துக்கத்தை அடையமாட்டார்கள். அவர்களுக்கு அவசியம் மரியாதை நன்றாகவே இருக்கும். முக்திதாமத்திலிருந்து முதலில் ஜீவன்முக்திக்குச் செல்ல வேண்டும். மாயையின் பந்தனத்திலிருந்து முக்தியாகி முதலில் சுகதாமத்தில் இறங்குவீர்கள், பிறகு துக்கத்தில் வருவீர்கள். இந்த நேரத்தில் அனைத்தும் இற்றுப் போய்விட்டது. தனது சுகம் மற்றும் துக்கத்தின் பாகத்தை நடித்து அனைவரும் முக்தி மற்றும் ஜீவன்முக்திதாமத்திற்கு வருவார்கள். முக்தி என்பது ஒரு மார்க்கமாகும் (வழி). செல்வீர்கள், பிறகு அவசியம் வருவீர்கள். முழு உலகிலும் யார் எந்த தர்மத்தில் வந்தார்களோ அவர்கள் மீண்டும் அவ்வாறே வருவார்கள். ஜனகருக்கும் ஜீவன்முக்தி கிடைத்தது அல்லவா! இந்த நேரத்தில் இராஜாக்கள் கிடையாது என்று கிடையாது. அவர்களும் கடைசியில் வந்து அவசியம் ஞானம் கேட்பார்கள். உங்கள் அனைவருக்கும் ஜீவன்முக்தி கிடைக்கும், ஆனால் வரிசைக்கிரமமான முயற்சியின் படி கிடைக்கும். மற்ற தர்மத்தினர் அனைவருக்கும் வரிசைக்கிரமமான முயற்சியின் படி மற்றும் தர்மத்தின் படி கிடைக்கும் என்று கூறலாம். மற்ற தர்மங்களுக்கு மாறி சென்றிருக்கும் தேவி தேவதா தர்மத்தினர்கள் அனைவரும் வெளிவருவார்கள். அனைவரும் திரும்பி வர வேண்டும். முதலில் பிராமணர்களாக ஆக வேண்டும். அனைவரும் பிராம்மாவின் வம்சத்தினர்கள் தான், ஆனால் அனைவரும் பிராமணர்களாக ஆகமாட்டார்கள். யார் பிராமணர்களாக ஆகிறார்களோ அவர்களுக்கு 21 பிறவிகளுக்கு ஜீவன்முக்தி என்று கூறப்பட்டிருக்கிறது. இராஜ்ய அரியணையில் அமர வேண்டுமெனில் இராஜயோகம் கற்றுக் கொள்ள வேண்டும். இது பாடசாலையாகும். பாடசாலையில் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும். நியமங்களும் அதிகம் இருக்கின்றன. ஒரே ஒரு முறை இலட்சியம் அறிந்துக் கொண்டால் பிறகு அயல்நாட்டில் இருந்தாலும் படிப்பு படிக்க முடியும். உண்மையில் நாம் சிவபாபாவின் குழந்தைகள். தந்தையிடமிருந்து அவசியம் ஆஸ்தி பெற வேண்டும். பாபா, இராவணன் என்ற பூதம் தொந்தரவு செய்கிறது என்று கடிதமும் எழுதுகின்றனர். சில நேரம் காமம், சில நேரம் கோபத்தின் லேசான போதை வந்து விடுகிறது. இவைகளின் மீது வெற்றியடைய வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். யோக பலத்தின் மீது தான் உங்களது யுத்தம் இருக்கிறது. நீங்கள் நினைவு செய்வீர்கள், மாயை உங்களது புத்தியோகத்தை துண்டித்து விடும். ஆக பாபா புரிய வைக்கின்றார் - அனைவருக்கும் ஜீவன்முக்தி கிடைக்கும். அதற்காக அனைவரும் சொர்க்கத்திற்கு வந்து விடுவார்கள் என்பது கிடையாது. நமக்கு முக்தி தேவை என்று அனைவரும் விரும்புகின்றனர். கடைசி நேரத்தில் நடிப்பு நடிக்க வருகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆக அவ்வளவு காலம் முக்தியில் இருப்பார் அல்லவா! எவ்வளவு அமைதி கிடைத்து விடுகிறது! 4500 ஆண்டுகள் சாந்தியாக இருப்பார்கள். அவர்களது பாகமே இவ்வாறு இருக்கிறது. நாம் சுகம் மற்றும் சாந்தி இரண்டிலும் இருக்கிறோம். அவர்களைப் போன்று நாமும் சாந்தியாக இருக்க வேண்டும், அங்கேயே அமர்ந்து விட வேண்டும் என்று மனிதர்கள் கூறுவதனால் மட்டும் கிடைத்து விடாது. அழிவற்ற நாடகம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் மாற்றம் ஏற்பட முடியாது. அமைதிக்காக ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். உங்களது சுகத்தை விட அவர்களுக்கு அதிக அமைதி கிடைக்கிறது. நீங்கள் சுகம் மற்றும் அமைதி இரண்டும் அடைகிறீர்கள். இங்கு அல்ப கால சுகம் இருக்கிறது. இங்கு அமைதி கிடையாது. துக்கதாமம் அல்லவா! மற்றபடி காட்டிற்குச் சென்று அமர்ந்து விடுவதால் அமைதி கிடைத்து விடாது. ஒருவேளை அங்கு அமைதி இருக்கிறது எனில் அங்கேயே அமர்ந்து விட வேண்டும், பிறகு ஏன் நாட்டிற்குள் வந்து இவ்வளவு கட்டடங்கள் உருவாக்குகின்றனர்! அங்கு சத்யுகத்தில் அமைதியோ அமைதி தான். கடைசியில் வருபவர்கள் இங்கு அசாந்தியோ அசாந்தி என்பதை உணர்வார்கள். தான் அமைதியாக இருப்பதாவும் மற்றவர்கள் அசாந்தியுடன் இருப்பதாகவும் நினைக்கின்றனர். இந்த விசயங்கள் மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். அனைவருக்கும் ஜீவன்முக்தி கிடைக்கிறது. 21 பிறவிகளுக்கு நீங்கள் இராஜ்யம் செய்கிறீர்கள் எனில் மற்றவர்கள் தாமதமாக வருகின்றனர், அவர்கள் மேலே சாந்தியாக இருப்பர். சிலர் சத்யுகத்திலோ அல்லது திரேதாவிலோ கடைசியில் வருகின்றனர் எனில் அப்போதும் சாந்திதாமத்தில் தான் இருந்திருப்பர் அல்லவா! அங்கு எந்த துக்கமும் கிடையாது. பிறகு வரிசைக்கிரமமாக வருவார்கள், கணக்கு வழக்கு இருக்கிறது அல்லவா!விஞ்ஞானம் மிகவும் வேகமாக இருப்பதாக மனிதர்கள் நினைக்கின்றனர். ஆனால் நமது அமைதி தான் அனைத்தையும் விட மிக வேகமானது என்று நாம் கூறுகிறோம். பாபாவின் நினைவின் மூலம் தான் சக்தி கிடைக்கிறது. அந்த விஞ்ஞான சக்தியின் மூலம் மேலே சந்திர மண்டலம் வரை செல்வதற்கான முயற்சி செய்கின்றனர், நீங்கள் ஒரு விநாடியில் சூரியன், சந்திரனையும் விட மேலே சென்று விடுகிறீர்கள். மூலவதனம், சூட்சுமவதனத்திற்கும் மேலே எதுவும் கிடையாது. சூரியன், சந்திரமண்டலத்தையும் விட மூலவதனம், சூட்சுமவதனம் மிக தொலைவில் இருக்கிறது. யாருக்கும் தெரிவது கிடையாது. இவை அனைத்தும் விளக்கமான விசயங்களாகும். சூரியவம்சி ராஜா, ராணி ஆவதற்கான அதிர்ஷ்டம் இல்லையெனில் எதையும் புரிந்து கொள்ள முடியாது, யாருக்கும் புரிய வைக்கவும் முடியாது. என்னிடத்தில் முக்தி, ஜீவன்முக்திக்கான ஞானம் இருக்கிறது என்று யாரும் கூற முடியாது. (ஜனகரின் உதாரணம் இருக்கிறது). அனைவரையும் சிறையிலிட்டார். இந்த நேரத்தில் இராவணன் அனைவரையும் சிறையில் அடைத்து விட்டான். இராமர் வந்து அனைவரையும் விடுவிக்கின்றார். இராவணனின் சிறையிலிருந்து அனைவரையும்விடுவித்து ஜீவன்முக்தி கொடுப்பதற்காக தந்தையின் மூலம் நீங்கள் நிமித்தமாக ஆகியிருக்கிறீர்கள். சிவசக்தி சேனை என்ற உங்களது பெயர் பிரபலமாக இருக்கிறது. இந்த நாடகத்தில் உங்களது பெயர் கடைசியில் மிகவும் உயர்ந்ததாக ஆகும். எப்போது தந்தை வந்தாரோ அப்போதிலிருந்தே தாய்மார்களின் பதவியும் உலகில் மிகவும் உயர்ந்ததாக ஆகிவிட்டது. முன்பு அயல்நாட்டில் தாய்மார்களின் பதவி உயர்வாக இருந்தது. அங்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர், இங்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் தலைகீழாக்கி விடுகின்றனர். பிறந்த நாளும் கொண்டாடுவது கிடையாது. கன்னிகைகளுக்கு கன்னையா என்று பாடப்பட்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் அனைவரும் கன்னிகைகள். இது உங்களது புது பிறப்பாகும். மற்றபடி படிப்பு வரிசைக்கிரமமாக இருக்கிறது. ஆத்மா சிறியது, பெரியதாக ஆவது கிடையாது. சரீரம் சிறியது, பெரியதாக ஆகிறது. சிலர் உடனேயே புரிந்து கொண்டு விடுகின்றனர், அதிர்ஷ்டம் இல்லாதவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது. ஜீவன்முக்தி மற்றும் ஜீவன்பந்தன் இந்த இரண்டும் இந்த ஸ்தூல உலகிற்கான விசயமாகும். சத்யுகத்திலிருந்து ஜீவன்முக்தி இருக்கும். பிறகு துவாபரத்திலிருந்து ஜீவன்பந்தன் ஆகிவிடுகிறது. இப்போது அனைவரையும் சுகத்தை மறந்து விட்டனர், துக்கத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர். நான் 21 பிறவிகளுக்கான சுகம் அடைந்திருந்தேன் என்று கூறக்கூடியவர்கள் யாரும் கிடையாது. இப்போது இராவண இராஜ்யமாக இருக்கின்ற காரணத்தினால் ஆடை (சரீரம்) அசுத்தமானதாக ஆகிவிட்டது. அங்கு இராவண இராஜ்யமே கிடையாது எனும் போது ஆடை அசுத்தமானதாக எப்படி ஆக முடியும்! யோகபலம், போகபலம் என்றும் பாடப்பட்டிருக்கிறது. அங்கு யோக பலத்தின் மூலம் குழந்தைகள் பிறக்கும். நீங்கள் சடங்குகளை (வழக்கங்களை) அறிவீர்கள். மற்றவர்களுக்கான விசயமே கிடையாது. அமெரிக்கர்களின் வழக்கங்களை அவர்கள் அறிவார்கள். நாம் நமது வழக்கங்களை அறிந்து கொண்டோம். நாம் சத்யுகத்தில் வாழக் கூடியவர்கள். அங்கு நமது வழக்கங்களே புதிதாக இருக்கும், அதன் படி நடப்போம். கல்பத்திற்கு முன்பு நீங்கள் நடந்தது போன்று! எது நடந்திருக்குமோ அதுவே இப்போதும் நடக்கும். குழந்தைகள் தியானத்தில் (டிரான்ஸில்) சென்று பழக்க வழக்கங்களை பார்த்து வருகின்றனர். இருப்பினும் உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். யாரெல்லாம் அங்கிருக்கும் வழக்கங்களைப் பற்றி கூறினார்களோ அவர்கள் அனைவரும் இன்று கிடையாது. ஆக அதன் மூலம் எந்த நன்மையும் கிடையாது. ஆக அனைத்திற்கும் ஆதாரம் படிப்பில் இருக்கிறது. யோகா மற்றும் ஞானம். யோகா என்றால் தந்தையை நினைவு செய்வது. ஞானம் என்றால் சக்கரத்தை சுற்றுவதாகும். இது எளிதாகும். என்னிடத்தில் வர வேண்டுமென்றால் என்னை நினைவு செய்யுங்கள் என்ற தந்தை கூறுகின்றார். மனிதர்கள் இறக்கும் தருவாயில் ராம், ராம் என்று கூறுங்கள் என்று கூறப்படுகின்றனர். எந்த பொருளும் புரிந்து கொள்வது கிடையாது. ஸ்ரீகிருஷ்ணர் என்று கூறுவதனால் அங்கு சென்று விட முடியாது. அழைத்துச் செல்லக் கூடியவர் தந்தை ஒருவரே. விகர்மங்கள் விநாசம் ஆகாமல் நீங்கள் திரும்பி எப்படி செல்வீர்கள்? இப்போது அனைவருக்கும் கடைசி நேரமாகும். பிறகு அவரவர்களது நேரத்தில் வருவீர்கள். இந்த கருத்தை தாரணை செய்ய வேண்டும், குறிப்பெடுக்க வேண்டும்.நீங்கள் தாய், தந்தையை பின்பற்ற வேண்டும். மம்மா ஒருபோதும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. பலரது ரிப்போர்ட் (புகார்) அதிகமாக வருகிறது. நடத்தை சரியில்லை. பரம்பிதா பரமாத்மா கற்பிக்கின்றார் எனில் எவ்வளவு புத்தி வேண்டும்! நல்ல நடத்தையுள்ளவர்களின் மீது அனைவரின் அன்பும் இருக்கும். சிலர் அதிக தொந்தரவு செய்கின்றனர். தன்னைத் தான் வருத்திக் கொள்கின்றனர். ஆக பதவியும் குறைந்து விடும். இந்துக்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இராஜ்ய பாக்கியத்தை கொடுத்த ஈஸ்வரனை சர்வவியாபி என்று கூறி விட்டது தான் தன்னைத் தானே வருத்திக் கொள்வதாகும், அதனால் தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நான் சர்வவியாபி என்று பகவான் கூறியதாக சாஸ்திரங்களில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களைப் போன்று வருத்திக் கொள்பவன் அல்ல என்று பகவான் கூறுகின்றார். நான் நாய், பூனையில் இருக்கிறேனா என்ன? நீங்கள் என்ன நிந்தித்து விட்டீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இதுவும் நாடகமாகும். மீண்டும் இவ்வாறே நடக்கும். நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) எந்த தவறான நடத்தையும் இருக்கக் கூடாது. நல்ல குணங்களை தாரணை செய்ய வேண்டும். தாய், தந்தையை பின்பற்ற வேண்டும்.2) யோக பலத்தின் மூலம் காமம், கோபத்தின் லேசான போதையைக் கூட அழித்து விட வேண்டும். நிமித்தமாகி அனைவரையும் இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்கும் சேவை செய்ய வேண்டும்.வரதானம்:

கவலையற்ற சக்கரவர்த்தி என்ற மனநிலையில் இருந்து வாயுமண்டலத்தில் தனது (பிரபாவத்தை) தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மாஸ்டர் படைப்பவர் ஆகுக.தந்தைக்கு எவ்வளவு பெரிய குடும்பம் இருந்தும் கவலையற்ற சக்கரவர்த்தியாக இருக்கின்றார், அனைத்தும் அறிந்திருந்தும். பார்த்தாலும் கவலையற்று இருக்கின்றார். இவ்வாறு தந்தையை பின்பற்றுங்கள். வாயுமண்டலத்தில் தனது செல்வாக்கை பரப்புங்கள். வாயுமண்டலத்தின் தாக்கம் உங்கள் மீது ஏற்படக் கூடாது. ஏனெனில் வாயுமண்டலம் உங்களது படைப்பாகும், நீங்கள் மாஸ்டர் படைப்பவர்கள். படைப்பவரின் செல்வாக்கு படைப்புகளின் மீது ஏற்பட வேண்டும். எந்த விசயம் வந்தாலும் நான் வெற்றி ஆத்மா என்று நினைவு செய்யுங்கள். இதனால் சதா கவலையற்று இருப்பீர்கள், பயப்படமாட்டீர்கள்.சுலோகன்:

மகிழ்ச்சி என்ற நிழலின் மூலம் குளிர்ச்சியின் அனுபவம் செய்யும் போது களங்கமற்ற (நிர்மல்) மற்றும் பணிவாக (நிர்மாண்) இருப்பீர்கள்.

***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only