BK Murli 11 May 2017 Tamil

BK Murli 11 May 2017 Tamil

11.05.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! தற்சமயம் இந்த பாரதத்திற்கு ஸ்ரீமத் (உயர்ந்த வழி) -தேவைப்படுகிறது ஸ்ரீமத் மூலம் தான் சோழி போன்ற பாரதம் வைரத்தைப் போல் மாற்றமடையும். அனைவருக்கும் கதி, சத்கதி ஏற்படும்.கேள்வி:

மனிதரிடம் இல்லாத எந்த ஒரு சக்தி சர்வசக்திவான் தந்தையிடம் உள்ளது?பதில்:

ராவணனை அழிக்கக் கூடிய சக்தி ஒரு சர்வ சக்திவான் தந்தையிடம் உள்ளது, மனிதர்களிடம் இல்லை. இராமனின் சக்தியல்லாமல் இராவணன் இறக்க முடியாது. தந்தை வரும்போது குழந்தைகளாகிய நீங்களும் கூட இராவணன் மீது வெற்றி அடையும்படியான சக்தியை கொடுக்கிறார்.ஓம் சாந்தி.

இது புனித அன்னப்பறவைகளின் சபை, இங்கே பிராமணர்கள் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர் என இனிமையான குழந்தைகள் தெரிந்திருக்கிறீர்கள். தூய்மையானவர்கள் என்று பிராமணர்களை கூறுகின்றனர், தூய்மையற்றவர்களை சூத்திர வர்ணத்தவர் என சொல்வோம். யார் முயற்சியாளர்களாக இருக்கின்றனரோ அவர்களை பாதி தர்மத்தவர் என சொல்வோம் - அதாவது இங்கும் அல்ல, அங்கும் அல்ல. ஒரு காலை அக்கரைக்குச் செல்லும் படகிலும், மற்றொரு காலை இக்கரைக்குச் செல்லும் படகிலும் வைத்தால் தடுமாறி விழுந்து விடுவீர்கள், ஆகையால் எந்தப் பக்கம் செல்வது என தீர்மானிக்க வேண்டும். யாராவது அசுரர்கள் வந்து அமர்ந்து கொண்டால் தடைகளை ஏற்படுத்துவார்கள். இதனை யார் புரிய வைப்பது? சிவாபாபா.சிவனைக் குறித்துத்தான் பாபா என்ற வார்த்தை வாயிலிருந்து வெளிப்படுகிறது. சிவபாபாதான் பையை நிரப்பக் கூடியவர். தந்தையிடமிருந்து கண்டிப்பாக ஆஸ்தி கிடைக்கும். சிவனுக்கு எவ்வளவு அதிகமாக கோவில்கள் உள்ளன, அவர் நிராகாரமானவர், உலகைப் படைப்பவர். உலகில் இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது என்றால் கண்டிப்பாக தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்திருக்கும். இப்போது நீங்கள் சூத்திரரிலிருந்து பிராமணராக ஆகியுள்ளீர்கள், சூத்திரர்கள் கல்புத்தியானவர்கள், இலட்சுமி நாராயணர் தங்க புத்தியானவர்களாக இருந்தனர் அல்லவா. மாயையால் புத்தி வீழ்த்தப்படுகிறது (கெடுக்கப்படுகிறது). மாயையின் பெயர் பாரதத்தில் புகழ் வாய்ந்தது. இந்த சமயத்தில் மாயையின் இராஜ்யமாக உள்ளது அதாவது இராவண சம்பிரதாயம் உள்ளது, ஆகையால் இராவணனை கொல்கின்றனர், ஆனால் சாவதில்லை. இராமனின் சக்தி இல்லாமல் இராவணன் மீது வெற்றி அடைய முடியாது. சர்வ சக்திவானிடமிருந்து தான் சக்தி கிடைக்கும். அவர் ஒருவர் தான் பரமபிதா பரமாத்மா ஆவார். அவருக்கு சூட்சும சரீரமோ ஸ்தூல சரீரமோ கிடையாது - பிறகு அந்த நிராகாரமானவர் பாரதத்தில் எப்படி வந்தார் என்பதும் கூட யார் புத்தியிலும் வருவதில்லை. ஆத்மா கர்மேந்திரியங்கள் இல்லாமல் கர்மம் செய்ய முடியாது. எதையும் புரிந்து கொள்வதில்லை, ஆகையால் கல்புத்தி என சொல்லப்படுகிறது. தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார், பகவான் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். அவருடைய வழி அனைவரையும் விட உயர்வானதாகும். இல்லாவிட்டால் பகவானை ஏன் நினைவு செய்கிறார்கள். அவருடைய வழியை நினைக்கின்றனர். கண்டிப்பாக பகவான் வருவதும் கூட நாடகத்தில் அவரது நடிப்பு இருக்கிறது. மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. கிறிஸ்துவுக்கு 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கீதை சொல்லப்பட்டது என பல மனிதர்கள் சொல்கின்றனர். ஆனால் அந்த கீதை எந்த தேசத்திற்காக, எந்த யுகத்தில் சொல்லப்பட்டது, மேலும் யார் சொன்னது என்பதை சொல்லுங்களேன். ஒரே ஒரு சாஸ்திரத்தில் மட்டும் கிருஷ்ண பகவானுடைய மகா வாக்கியம் என எழுதப்பட்டுள்ளது, பிறகு ருத்ர ஞான யக்ஞம் என்றும் கூட சொல்கின்றனர். ருத்ரன் என சிவபாபாவுக்கு சொல்லப்படுகிறது. கிருஷ்ணரை ஒருபோதும் தந்தை என சொல்ல மாட்டார்கள். சிவபாபா (தந்தை என) சொல்லப்படுகிறார். சிவபாபாதான் ஞானம் நிறைந்தவர், ஆனந்தம் நிறைந்தவர் என சொல்லப்படுகிறார், ஆகவேதான் பக்தர்களும் கூப்பிடுகின்றனர். பக்தி செய்த பிறகு பகவான் கிடைப்பார் என புரிந்து கொள்கின்றனர். நல்லது, பக்தி எப்போது தொடங்குகிறது, பகவான் எப்போது கிடைப்பார்? பாவாத்மாக்களின் உலகத்திலிருந்து புண்ணியாத்மாக்களின் உலகத்திற்கு எப்போது செல்வது என்பது யாருக்கும் தெரியாது. நீங்களும் சூத்திர வர்ணத்தவராக இருந்தீர்கள். இப்போது நீங்கள் பிரம்மாவின் முக வம்சாவளி பிராமணர் என சொல்லிக் கொள்கிறீர்கள். பிராமணராக யார் மாற்றியது? சிவபாபா. இவர் தான் படைப்பவர் ஆவார். பிராமண வர்ணம் அனைத்திலும் உயர்ந்ததாகும். பிராமணர்களின் குடுமியும் உள்ளது, ஏனென்றால் சாகாரத்தில் இருக்கின்றனர் அல்லவா. ஆனால் அவர்களை உருவாக்குபவர் நிராகாரமானவர். அவர் பரமபிதா பரம ஆத்மா அதாவது பரமாத்மா. இந்த வார்த்தையை உறுதியாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாடகத்தின்படி சிருஷ்டி தமோபிரதானமாகும் போது நான் வரவேண்டியிருக்கிறது. நானும் கூட நாடகத்தின் பந்தனத்தில் கட்டப்பட்டுள்ளேன். உங்களை தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆக்கி சுகம், அமைதியின் ஆஸ்தியை வந்து கொடுக்கிறேன். மற்ற அனைவருக்கும் அமைதியின் ஆஸ்தி கிடைத்து விடுகிறது. சத்யுகம், திரேதா யுகத்தில் புதிய உலகமாக இருந்தது, அதனை இராமன் ஸ்தாபனை செய்தார். இராமன் என்பதை விட சிவபாபா எனும் வார்த்தையே சரியானது. சிவபாபா எனும் வார்த்தை அனைவரின் வாயிலும் உள்ளது. ஆக பாபா புதிய உலகத்தை படைப்பவர், அவர் வந்து ஆஸ்தியை கொடுக்கிறார். கீதை பிராமணருக்குத்தான் சொல்ல வேண்டும். சூத்திரரிலிருந்து பிரம்மா முக வம்சாவளி பிராமணர் ஆகும்போது அவர்களுக்கு கீதையை சொன்னார். பிராமணர்களுக்கு ஞானத்தின் மூன்றாம் கண் திறந்தது, ஆகவே சொல்கின்றனர் - ஞானத்தின் மையை சத்குரு கொடுத்தார், அஞ்ஞானத்தின் காரிருள் வினாசம் ஆனது. இந்த நரகம் போன்ற உலகத்திலிருந்து சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் பாபா என்று குழந்தைகள் சொல்கின்றனர். இது சிவபகவானின் வாக்கியம், சிவாச்சாரியரின் வாக்கியம். சிவாச்சாரியார் (சிவபாபா) எல்லைக்காப்பாற்பட்ட சன்னியாசத்தைக் கற்றுக்கொடுக்கிறார். சங்கராச்சாரியாரு டையது எல்லைக்குட்பட்ட சன்னியாசம் ஆகும். பழைய உலகத்தை மறந்துவிடுங்கள் என்று எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொல்கிறார். இப்போது நீங்கள் சதா சுகம் நிறைந்த உலகத்திற்கு செல்ல வேண்டும். கிருஷ்ணபுரி மற்றும் கம்சபுரி என்று சொல்கிறீர்கள் அல்லவா! கிருஷ்ணபுரி என்று சத்யுகத்தையும் கம்சபுரி என்று கலியுகத்தையும் சொல்லப்படுகிறது. இரண்டும் சேர்ந்திருக்க முடியாது. சத்யுகத்தில் கம்சன் எங்கிருந்து வந்தார்? புத்தி மூலம் சிந்தனை செய்ய வேண்டும். இப்போது சொர்க்கத்தின் அளவற்ற சுகத்தைக் கொடுப்பதற்காக பாபா அவரே வந்துள்ளார்.பாபா சொல்கிறார், இந்த கடைசிப் பிறவியில் யார் படித்திருந்தார்களோ, அவர்களே படிக்கிறார்கள், பிறகு இராஜ்யம் ஸ்தாபனை ஆகிவிடுகிறது. பாபா வந்து சூத்திரனிலிருந்து பிராமணனாக தேவதையாக மாற்றுகிறார். அந்த மனிதர்கள் ஹிந்துவை கிறிஸ்தவனாக, புத்த மதத்தவனாக மாற்றுவார்கள். ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும் - நாம் முதலில் எந்த தர்மத்தைச் சேர்ந்தவராக இருந்தோம்? எந்த வர்ணத்தில் இருந்தோம்? குருவாக யார் இருந்தார்? எந்த சாஸ்திரங்களைப் படித்திருந்தோம்? குருவிடமிருந்து என்ன மந்திரம் கிடைத்தது? பிறகு எப்போது சிவபாபா பிரம்மா மூலமாக பிராமண வர்ணத்தில் கொண்டு வந்தார்? இதை ஒவ்வொருவரையும் எழுத வைக்க வேண்டும். இப்போது என்னை நினைவு செய்யுங்கள் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா சொல்கிறார். மாயை இராவணன் உங்களுக்கு எப்படிப்பட்ட கெட்ட திசையை (துர்கதியை) உருவாக்கிவிட்டான்! இப்போது நீங்கள் பிராமண சம்பிரதாயத்தவராக ஆகியுள்ளீர்கள், பிறகு தெய்வீக சம்பிரதாயத்தவராக ஆக வேண்டும். உங்களை நிராகார பரமபிதா பரமாத்மா மாற்றியுள்ளார். குழந்தைகள் ஒவ்வொருவரையும் எழுத வைக்க வேண்டும்: எந்த தர்மத்தவராக இருந்தோம்? யாரை பூஜை செய்து வந்தோம்? ஏதாவது குருவிடம் சென்றோமா? இல்லையா? பிறகு பிராமண வர்ணத்துக்கு யார் அழைத்து வந்தார்? இந்த பாபா (பிரம்மா பாபா) கூட எழுதுவார் - நான் இந்து தர்மம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். நிறைய குருக்களிடம் சென்றேன். நிறைய சாஸ்திரங்கள் படித்தேன் என்று . சீக்கிய தர்மத்தவர் நான் சீக்கியன் என்று சொல்வார்கள். பாரதவாசிகளுக்குத் தான் தன்னுடைய தேவி தேவதா தர்மத்தைப் பற்றித் தெரியவில்லை. மற்றபடி சீக்கிய தர்மத்தினர் தன்னை தேவதா தர்மம் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஒவ்வொருவரும் தத்தமது தர்மத்தைத் தான் கூறுவார்கள். இப்போது பாபா சொல்கிறார் - யார் சிவனுடைய பக்தர்கள் அல்லது சிவனுடைய படைப்பாகிய தேவி தேவதைகளின் பக்தர்களோ அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் நன்றாகக் கேட்பார்கள். சத்யுகம் திரேதா யுகத்தில் சூர்யவம்சத்தவர், சந்திரவம்சத்தவர் இருந்தார்கள். அவர்களுடைய சித்திரமும் கூட இருக்கிறது. ஆங்கிலத்தில் டெய்டிசம் (தேவி தேவதா தர்மம்) என்று சொல்லப்படுகிறது. இப்போது பாபா தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் பிராமண வர்ணத்திலிருந்து தேவதா வர்ணத்தினராக மாறிக்கொண்டிருக்கிறீர்கள். பாரதவாசிகள் பூஜைக்குரியவர்களாக இருந்து பின்பு அவர்களே பூஜாரி ஆகின்றார்கள். சத்யுகத்தில் பூஜைக்குரியவர்களாக இருந்தார்கள். பாபா சொல்கிறார், நான் எப்போதும் பூஜைக்குரியவராக இருக்கிறேன். இப்போது நீங்கள் இங்கே இராஜயோகம் கற்றுக் கொள்ள வந்துள்ளீர்கள். எதிர்கால 21 பிறவிகளுக்காக சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய வந்துள்ளீர்கள். எனவே அவர் வழியைப் பின்பற்ற வேண்டும். எதுவரை பிரம்மாவம்சத்தவர் ஆகவில்லையோ, அதுவரை பிராமணன் என்று எப்படி சொல்ல முடியும்? நல்லது. இன்று போக் தினம். பிராமணர்களுக்கு உணவு ஊட்டக்கூடிய பழக்கம் (திதி) உள்ளது. மற்றபடி ஞானத்திற்கும் இதற்கும் சம்மந்தம் கிடையாது. இங்கே ஞானக்கடல் மற்றும் ஞான நதிகளின் சங்கமம். பிறகு அங்கே தேவதைகளுக்கும் பிராமணர்களாகிய உங்களுக்கும் சந்திப்பு நடக்கிறது. இதில் குழப்பமடைவதற்கான எந்த விசயமும் இல்லை. பாபா சொல்கிறார் - தேகத்தின் கூடவே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களிலிருந்தும் பற்றுதலை நீக்கிக்கொண்டே செல்லுங்கள். என் ஒருவனை நினைவு செய்யுங்கள், அப்போது கடைசியில் புத்தியில் என்ன இருக்கிறதோ அதற்கேற்ப பதவி கிடைக்கும். உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன் என உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். தினம்தோறும் வகுப்பில் கேளுங்கள் - சிவபாபாவிடம் வாக்குறுதி கொடுப்போமா? சிவபாபா சொல்கிறார் - என்னுடைய வழிப்படி நடந்திடுங்கள். தந்தையின் ஸ்ரீமத் புகழ் வாய்ந்தது. ஸ்ரீமத் என்றால் சிரேஷ்டமான வழி. பிரம்மாவின் வழியும் பாடப்பட்டுள்ளது. பிரம்மாவை விட பிரம்மாவின் தந்தை சிவபாபா உயர்ந்தவர் அல்லவா. உணவு உண்ண அமரும்போதும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். மிகவும் அன்பான தந்தையாக இருக்கிறார். அவருடன் சேர்ந்து நாம் உணவு உண்கிறோம். இந்த நினைவின் மூலம் மிகுந்த சக்தி கிடைக்கும். ஆனால் குழந்தைகள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். பாரதத்தில் இப்போது சிவபாபாவின் ஸ்ரீமத் தேவையாக உள்ளது. ஏனென்றால் தந்தைதான் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல், பதித பாவனராக இருக்கிறார் அல்லவா. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். மாயை பலவிதமான தடைகளை ஏற்படுத்தும், அதைக் கண்டு பயப்படக் கூடாது. ஞானம் மிக எளிமையானது, மற்றபடி யோகத்தில் இருப்பது, ஒருவருடன் (தந்தையோடு)  புத்தியை இணைப்பது - இதில்தான் உழைப்பு உள்ளது. மற்ற விசயங்களில் மனம் அலைபாய்வதை விட ஒரு சிவபாபாவை நினைவு செய்வது நல்லது. கீதை படிக்கக் கூடிய விசயம் அல்ல. ஏனெனில் தந்தை தாமே வந்திருக்கிறார். மற்ற சாஸ்திரங்கள் அனைத்தும் குழந்தை குட்டிகள் ஆகும். அதன் மூலம் ஆஸ்தி கிடைக்க முடியாது. எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி ஒரே ஒரு எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து கிடைக்கிறது. நல்லது.பாப்தாதா குழந்தைகளின் முன்னால் அமர்ந்திருக்கிறார். தந்தை சொல்கிறார் - நான் உங்களுடைய தந்தை, பிரம்மாவின் மூலம் மம்மாவினுடைய, தாதாவினுடைய, குழந்தைகளுடைய, அனைவருடைய அன்பு நினைவுகளை கொடுக்கிறேன். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. மிகவும் அன்பான தந்தையை உடன் வைத்துக் கொண்டு உணவு உண்ண வேண்டும். ஒரு தந்தையிடம் தான் புத்தியின் தொடர்பை இணைக்க வேண்டும். ஒருவரின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும்.2. புத்தியிலிருந்து எல்லைக்கப்பாற்பட்ட பழைய உலகை மறக்க வேண்டும், இதைத்தான் சன்னியாசம் செய்ய வேண்டும்.வரதானம்:

புயல்களை பறக்கும் கலைக்கான பரிசாக புரிந்து கொள்ளக் கூடிய இடை விடாத (நிரந்தரமாக) சுகம் சாந்தி நிறைந்தவர் ஆகுக.இடைவிடாத (சதா) சுகம் சாந்திமயமான, நிறைவான வாழ்வின் அனுபவத்தை செய்வதற்காக சுயராஜ்ய அதிகாரி ஆகுங்கள். சுயராஜ்ய அதிகாரிக்கு புயல் என்பது பறக்கும் கலையை அனுபவம் செய்விக்கக்கூடிய பரிசாக ஆகி விடுகிறது. அவர்களுக்கு சாதனங்கள், உதவி மற்றும் புகழின் ஆதாரத்தில் சுகத்தின் அனுபவம் ஏற்படுவதில்லை, ஆனால் பரமாத்ம பிராப்தியின் ஆதாரத்தில் றிரந்தர சுகம், சாந்தியின் அனுபவத்தை செய்கின்றார். எந்த விதமான அசாந்தி ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையும் அவர்களுடைய நிரந்தர அமைதியை குலைக்க முடியாது.சுலோகன்:

எப்போதும் நிரம்பியிருக்கும் அனுபவத்தை செய்ய வேண்டும் என்றால் ஆசீர்வாதம் கொடுங்கள் மற்றும் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.ஓம் சாந்தி

சாகார முரளிகளிலிருந்து கீதையின் பகவானை நிரூபிக்கக் கூடிய கருத்துக்கள்.

1. பாரதத்தின் யோகத்திற்கு மிகுந்த மகிமை உள்ளது. ஆனால் அந்த யோகத்தை யார் கற்றுக் கொடுக்கிறார் என்பது யாருக்கும் தெரிவதில்லை. கீதையில் கிருஷ்ணரின் பெயரை போட்டு விட்டனர், ஆனால் கிருஷ்ணரை நினைவு செய்வதால் எந்த பாவமும் அழியாது. ஏனெனில் அவர் சரீரமுடையவர். சரீரம் ஐந்து தத்துவங்களால் ஆக்கப்பட்டது, அதை நினைவு செய்வது என்றால் மண்ணை, ஐந்து தத்துவங்களை நினைவு செய்வது போலாகும். சிவபாபா அசரீரி ஆவார். ஆகையால் அசரீரி ஆகுங்கள், தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று சொல்கிறார்.2. ஏ பதித பாவனரே என்று சொல்லி நீங்கள் நினைவு செய்கிறீர்கள், அந்த பதித பாவன பகவான், படைப்பவர் ஒருவர் தான் அல்லவா. மனிதர் யாரேனும் தன்னை பகவான் என்று சொல்லிக்கொண்டாலும் கூட நீங்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள் என ஒருபோதும் சொல்ல மாட்டார். ததத்வம் என்று சொல்வார் அல்லது ஈஸ்வரன் சர்வவியாபி என்று சொல்வார். நானும் கடவுள், நீயும் கடவுள், எங்கு பார்த்தாலும் நீதான், கல்லிலும் நீதான் என சொல்லி விடுகின்றனர். ஆனால் நீங்கள் என்னுடைய குழந்தைகள் என்று சொல்ல முடியாது. ஹே என்னுடைய செல்லமான ஆன்மீகக் குழந்தைகளே என்று தந்தை தான் சொல்கிறார்.3. எப்படி வக்கீல், டாக்டர் போன்ற அனைவருக்கும் புத்தகங்கள் உள்ளனவோ அது போல இந்த லட்சுமி நாராயணர் கூட படிப்பின் மூலம் உருவாகிறார்கள். இவர்களுடைய புத்தகம் கீதையாகும். கீதையை யார் சொன்னது? அவருடைய பெயரையும் மாற்றி விட்டனர். சிவ ஜெயந்தி கொண்டாடுகின்றனர், ஆனால் சிவன் கீதையின் ஞானத்தைக் கொடுத்து கிருஷ்ணபுரிக்கு எஜமானராக்கினார் என்பதை மனிதர்கள் தெரிந்து கொள்ளவில்லை.4. கிருஷ்ணர் சொர்க்கத்தின் எஜமானராக இருந்தார், ஆனால் மனிதர்கள் சொர்க்கத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. ஆகவே தான் கிருஷ்ணர் துவாபர யுகத்தில் கீதையை சொன்னதாக சொல்லி விட்டனர். கிருஷ்ணரை துவாபர யுகத்திற்குக் கொண்டு சென்று விட்டனர். லட்சுமி நாராயணரை சத்யுகத்தில், இராமரை திரேதா யுகத்தில் சொல்லப்படுகிறது. இலட்சுமி நாராயணரின் இராஜ்யத்தில் எந்த உபத்திரவங்களையும் (கலியுகம் போன்றதை) காட்டவில்லை. கிருஷ்ணருடைய இராஜ்யத்தில் கம்சனையும், இராமனுடைய இராஜ்யத்தில் இராவணனையும் காட்டியுள்ளனர். இராதா கிருஷ்ணர் தான் லட்சுமி நாராயணர் ஆகின்றனர் என்பது யாருக்கும் தெரிவதில்லை, முற்றிலும் அஞ்ஞான இருளில் இருக்கின்றனர்.5. மனிதர்கள் கீதையை கேட்கின்றனர் எனும்போது கிருஷ்ண பகவானுடைய மகா வக்கியம் என புரிந்து கொள்கின்றனர். கிருஷ்ணரிடம் அனைவருக்கும் அன்பு உள்ளது. கிருஷ்ணரைத் தான் ஊஞ்சலில் வைத்து ஊஞ்சலாட்டுகின்றனர். நாம் யாரை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவது என இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டப்படுகிறது, தந்தையை ஊஞ்சலில் ஆட்டுவது கிடையாது. நீங்கள் சிவபாபாவை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவீர்களா என்ன? அவர் பாலகனாக ஆவதில்லை. மறுபிறவிகளில் வருவதில்லை. அவர் புள்ளியாக இருக்கிறார், அவரை எப்படி ஊஞ்சலில் ஆட்டுவது?6. பலருக்கு கிருஷ்ணரின் காட்சி கிடைக்கிறது, கிருஷ்ணரின் வாயில் உலக உருண்டை உள்ளது, ஏனென்றால் அவர் உலகின் எஜமானாக ஆகிறார். ஆக தாய்மார்கள் உலகம் எனும் வெண்ணை உருண்டையை அவருடைய வாயில் பார்க்கின்றனர்.7. கீதையை சிவபாபா சொன்னார், அவர்தான் பிரம்மாவின் மூலம் இராஜயோகம் கற்பிக்கிறார். மனிதர்கள் கிருஷ்ண பகவானுடைய கீதை என புரிந்து கொண்டு சத்தியம் செய்கின்றனர். அவர்களிடம் கேளுங்கள் -கிருஷ்ணர் எங்கும் இருப்பதாக பார்க்க வேண்டுமா அல்லது பகவானை பார்க்க வேண்டுமா? ஈஸ்வரன் இருக்கிறார் என தெரிந்து உண்மையைச் சொல் என சொல்கின்றனர். இப்போது குழப்பம் ஆகி விட்டதல்லவா. ஆகையால் செய்யும் சத்தியம் கூட பொய்யானதாகி விடுகிறது.8. இந்த கீதையின் ஞானத்தை சுயம் பகவான் (சிவபாபா) சொல்லிக் கொண்டிருக்கிறார். இதில் சாஸ்திரங்களின் எந்த விஷமும் கிடையாது. இது படிப்பு (கற்றுக் கொள்வது) இங்கே கீதையின் புத்தகம் கிடையாது. தந்தை படிப்பிக்கிறார், கையில் புத்தகத்தை எடுப்பதில்லை. பிறகு இந்த கீதையின் பெயர் எங்கிருந்து வந்தது? இந்த தர்ம சாஸ்திரங்கள் அனைத்தும் பிற்காலத்தில் உருவாகின்றன. அனைத்து சாஸ்திரங்களின் தாயாக கீதை பாடப்பட்டுள்ளது. கீதையின் ஞானத்தை ஞானம் நிறைந்த தந்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் கையில் சாஸ்திரம் எதையும் எடுப்பதில்லை. அவர் சொல்கிறார் - குழந்தைகளே, விதையான என்னை நினைவு செய்தீர்கள் என்றால் முழு மரமும் புத்தியில் வந்து விடும்.9. கீதை முக்கியமானது. கீதையில் தான் பகவானின் அறிவுரை உள்ளது. இதில் நினைவு செய்வது என்பது அனைத்திலும் பெரிய விசயமாகும். அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கிறது - மன்மனாபவ. இப்போது நீங்கள் கீதையின் ஞானத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது கீதையின் பாகம் நடந்து கொண்டிருக்கிறது மற்றும் தந்தை (பகவான்) கற்பித்துக் கொண்டிருக்கிறார். பகவானுடைய மகா வாக்கியம், அந்த பகவான் ஒருவர் தான். அவர் அமைதிக் கடலாக இருக்கிறார். அவர் இருப்பதும் கூட சாந்திதாமத்தில், அங்கே ஆத்மாக்களாகிய நீங்களும் வசிக்கிறீர்கள்.10.கிருஷ்ணரை இறைத்தந்தை என சொல்ல முடியாது. ஓ இறைத்தந்தையே என ஆத்மா சொல்கிறது எனும்போது அவர் நிராகாரமானவராகி விட்டார். நிராகாரமான தந்தை ஆத்மாக்களுக்குச் சொல்கிறார் – என்னை நினைவு செய்யுங்கள். நான்தான் பதித பாவனர், ஓ பதித பாவனா வாருங்கள் என என்னை அழைக்கவும் செய்கின்றனர். கிருஷ்ணரோ தேகதாரி ஆவார். எனக்கு சரீரம் கிடையாது. நான் நிராகாரமாக (சரீரமற்றவராக) இருக்கிறேன், மனிதர்களின் தந்தை அல்ல, ஆத்மாக்களின் தந்தையாக இருக்கிறேன்.


***OM SHANTI***