18 May 2017

BK Murli 19 May 2017 Tamil

BK Murli 19 May 2017 Tamil

19.05.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஞானச் சிந்தனை செய்து பாரதத்தின் சரித்திர, பூகோளம் மற்றும் புது உலகின் ஆண்டை (சகாப்தம்) நிரூபணம் செய்து கூறும் பொழுது கல்பத்தின் ஆயுள் நிரூபணம் ஆகிவிடும்.கேள்வி:

மனிதர்களிடத்தில் இல்லாத எந்த ஒரு ஆர்வம் இப்போது குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கிறது?பதில்:

மூழ்கியிருக்கக் கூடிய உலகம் என்ற படகை மீட்டு கரை சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளிடத்தில் இருக்கிறது. அனைவருக்கும் உண்மையிலும் உண்மையான சத்திய நாராயணன் கதை அல்லது அமரக் கதை கூற வேண்டும், அதன் மூலம் அனைவருக்கும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இவ்வளவு பெரிய பெரிய மாளிகைகள், மின்சாரம் போன்ற அனைத்தும் இருக்கிறது, ஆனாலும் இவை அனைத்தும் செயற்கையான, பொய்யான முன்னேற்றம் என்பது அவர்களுக்கு தெரியாது. உண்மையான முன்னேற்றம் சத்யுகத்தில் இருந்தது, தந்தை வந்து அதே போல உயர்வாக்கி முன்னேற்றுகின்றார்.பாட்டு:

கடைசியில் அந்த நாள் வந்தது .........ஓம்சாந்தி.

ஏழைப் பங்காளன் வந்தது உண்மை தான், ஆனால் யாரும் சரியான நாள், கிழமை எழுதுவது கிடையாது. ஏதாவது தேதி, ஆண்டு இருக்க வேண்டும் அல்லவா! இன்று இந்த நாள், இந்த கிழமை, இந்த மாதம், இந்த ஆண்டு என்று கூறுகிறீர்கள். ஏழைப் பங்காளன் எப்போது வந்தார்? என்பது எழுதப்படவில்லை. லெட்சுமி, நாராயணன் சத்யுகத்தின் ஆரம்பத்தில் இருந்தனர் எனில் அதற்கும் எந்த ஆண்டு என்று இருக்க வேண்டும். இந்த ஆண்டில் இவரது இராஜ்யம் இருந்தது. லெட்சுமி, நாராயணனுக்கும் ஆண்டு, மேலும் மற்ற அனைவருக்கும் அவரவர்களுக்கான துவக்கம் ஆண்டு இருக்கிறது. இந்த ஆண்டில் பிறந்தார் என்று குருநானக்கிற்கும் எழுதப்பட்டிருக்கிறது. ஆண்டு இல்லாமல் அறிந்து கொள்ள முடியாது. இந்த லெட்சுமி, நாராயணன் பாரதத்தில் இராஜ்யம் செய்திருந்தனர் எனில் அவசியம் (அரசாண்ட) ஆண்டு இருக்க வேண்டும். இவர்களுக்கான ஆண்டு என்றால் அதுவே சொர்டககத்தின் ஆண்டாகும். லெட்சுமி, நாராயணன் சத்யுகத்தில் இராஜ்யம் செய்தனர், எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை? இருப்பினும் 5 ஆயிரம் ஆண்டு என்று தான் கூறுவோம். கீதையின் ஜெயந்திக்கு சிறிது குறைத்துக் கூற வேண்டியிருக்கும். சிவஜெயந்தி மற்றும் கீதை ஜெயந்தி இரண்டிற்கும் வேறுபாடு கிடையாது. கிருஷ்ண ஜெயந்திக்கு வேறுபடும். லெட்சுமி, நாராயணனுக்கு அதே ஆண்டு எழுத வேண்டும். இதையும் சிந்திக்க வேண்டும். பொது மக்களுக்கு இதை எப்படி கூறுவது? லெட்சுமி, நாராயனனுக்கு ஏன் ஆண்டு (கணக்கு) காண்பிப்பது கிடையாது? விக்ரம ஆண்டு காண்பிக்கின்றனர், ஆனால் விகர்மாஜீத் ஆண்டு எப்போது? இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நல்ல முறையில் அறிந்திருக்கிறீர்கள். பாரதத்தின் சரித்திர, பூகோளம், புது உலகின் ஆண்டையும் காண்பிக்க வேண்டும். புது உலகில் ஆதி சனாதன தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, ஆக அவர்களது ஆண்டையும் கூறுவீர்கள். கணக்கு பார்க்கும் போது அவர்களுக்கு 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. இதை நிரூபித்து கூறும் போது கல்பத்தின் ஆயுளும் நிரூபணம் ஆகிவிடும். மேலும் இலட்சம் ஆண்டுகள் என்று எழுதப்பட்டது பொய்யாகி விடும். இந்த விசயங்களை தந்தை வந்து புரிய வைக்கின்றார். அவர் மனித சிருஷ்டியின் விதையாக இருக்கின்றார், சிருஷ்டியின் முதல், இடை, கடையை அறிந்தவர் ஆவார். லெட்சுமி, நாராயணன் இராஜ்யம் ஏற்பட்டு 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டது. மேலும் இராமர், சீதையின் இராஜ்யம் ஏற்பட்டு 3750 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பிறகு அவர்களது இராஜ்யம் முடிந்து விட்டது. பிறகு விக்ரம ஆண்டு ஆரம்பமாகிறது. விக்ரம ராஜாவின் ஆண்டும் சரியானது கிடையாது, இடையில் சில ஆண்டுகள் மறைந்து விட்டது. 2500 ஆண்டுகள் என்று தான் இருக்க வேண்டும். இஸ்லாமி, பௌத்த தர்மமும் சிறிது ஆண்டிற்குப் பிறகு தான் ஆரம்பமாகிறது. இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் என்று தனது ஆண்டை கொடுத்திருக்கின்றனர்.நாம் அனைவரும் தேவி தேவதைகளாக இருந்தோம், சக்கரத்தில் சுற்றி வந்து இப்போது பிராமணர்களாக ஆகியிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த சரித்திர, பூகோளத்தை நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். பிராமண நிலையிலிருந்து பிறகு தேவதைகளாக ஆகிறீர்கள். சரித்திரம், பூகோளம் புரிந்திருக்கிறீர்கள் எனில் ஆண்டையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். ஏணிப்படி சித்திரத்தில் ஆண்டு எழுதப்பட்டிருக்கிறது. பாரதத்தின் ஆண்டே காணாமல் போய் விட்டது. யார் பூஜைக்குரியவர்களாக இருந்தார்களோ அவர்களது ஆண்டே மறைந்து விட்டது. பூஜாரிகளுக்கான ஆண்டு ஆரம்பமாகி விட்டது. அசோக் பில்லர் என்று கூறுகின்றனர். துவாபரத்தில் அசோகமாக (சோகமற்றவர்கள்) யாரும் கிடையாது. அசோக் பில்லர் பாதி கல்பம் சத்யுகம், திரேதா வரை நடைபெறுகிறது. அதற்கான மகிமை தான் இது. சோக பில்லருக்கு மகிமை கிடையாது. இங்கு துக்கமோ துக்கம் தான் இருக்கிறது. அசோக் ஹோட்டல் என்று பெயர் வைத்திருக்கின்றனர், ஆனால் அவ்வாறு கிடையாது. அரைக் கல்பத்தில் துளியளவு சுகத்தையும் அசோக் என்று கூறி விடுகின்றனர். இங்கு சோகமற்றவர்கள் யாரும் கிடையாது. மாமிசம், இறைச்சி போன்ற அசுத்தங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். நாம் துக்கமானவர்களாக எப்படி ஆனோம்? காரணம் என்ன? என்று புரிந்து கொள்வது கிடையாது.யார் கல்பத்திற்கு முன்பு சொர்க்கத்தில் சுகமாக இருந்தார்களோ அவர்கள் தான் இந்த விசயங்களை கேட்பார்கள் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். யார் அங்கு இல்லையோ அவர்கள் கேட்கவே மாட்டார்கள். யார் பக்தி முழுமையாக செய்திருக்கிறார்களோ அவர்கள் வந்து சிறிது (ஞான) போதனைகளையாவது பெறுவார்கள். ஞானம் கேட்டு மனிதர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆண்டும் எழுதப்பட்டிருக்கிறது. பிரம்மா, விஷ்ணுவின் பிறப்பும் இங்கு இருக்க வேண்டும். மற்றபடி சங்கர் சூட்சுமவதனத்தைச் சார்ந்தவர், மேலும் சிவன் மூலவதனத்தில் இருப்பவர். சூட்சுமம், மூலவதனத்தையும் அறியவில்லை, அதனால் தான் சிவன், சங்கரை ஒன்றாக்கி விட்டனர். சிவன் பரம்பிதா பரமாத்மா ஆவார், சங்கர் தேவதை ஆவார். இருவரையும் ஒன்றாக்க முடியாது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு அறிவு கிடைத்திருக்கிறது! எவ்வளவு போதை அதிகரிக்கிறது! மனிதர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்ற ஆர்வம் இரவு, பகல் இருக்க வேண்டும். புத்தியற்றவர்களுக்குத் தான் புரிய வைக்கப்படுகிறது. பாரதம் முதலில் எப்படி இருந்தது? பிறகு எப்படி வீழ்ச்சியடைந்தது? என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நாம் அதிக முன்னேற்றம் அடைந்து விட்டோம் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். முன்பு இந்த அளவிற்கு பெரிய மாளிகைகள், மின்சாரம் போன்ற எதுவும் கிடையாது. இப்போது அதிக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறோம், ஆனால் இது செயற்கையானது, பொய்யானது என்பது அவர்களுக்குத் தெரியாது. உண்மையான முன்னேற்றம் சத்யுகத்தில் இருந்தது. அவர்கள் அவர்களது ஈடுபாட்டில் இருக்கின்றனர், உங்களது ஈடுபாடு தனிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மூழ்கியிருக்கும் உலகம் என்ற படகை நாம் பாபாவின் ஞானத்தின் மூலம் மீட்டு கரை சேர்க்கிறோம் என்ற மகிழ்ச்சி உங்களிடம் இருக்கிறது. பாபா நமக்கு சத்திய நாராயணன் கதை அல்லது அமரக் கதையை மீண்டும் கூறுகின்றார். பக்திமார்க்கத்தில் பல கதைகளை கூறுகின்றனர். அவை அனைத்தும் பொய்யான கதைகள், அதனால் எந்த லாபமும் கிடையாது என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இந்த சாஸ்திரம் போன்றவைகளை படித்து வந்தீர்கள், இருப்பினும் உலகம் தமோபிரதானமாக ஆகிக் கொண்டே செல்கிறது. ஏணியில் இறங்கியே வந்தோம், என்ன லாபம் இருக்கிறது? சீக்கியர்களுக்கும் திருவிழா நடைபெறுகிறது. அங்கு குளத்தில் குளிக்கின்றனர். அவர்கள் கங்கை, யமுனை போன்றவைகளை ஏற்றுக் கொள்வது கிடையாது. கும்பமேளாவிற்கு சீக்கியர்கள் செல்லமாட்டார்கள். அவர்கள் அவர்களது குளத்திற்கு செல்வார்கள். அதற்கான விசேஷ நிகழ்ச்சியும் இருக்கும். சில நேரங்களில் அதை சுத்தப்படுத்துவதற்கும் செல்கின்றனர். சத்யுகத்தில் இந்த விசயங்கள் இருக்காது. சத்யுகத்தில் நதி போன்றவைகள் முழு தூய்மையாக ஆகிவிடும். அங்கு கங்கை, யமுனையில் அசுத்தம், குப்பைகள் ஏற்படாது. அங்கிருக்கும் கங்கை நீருக்கும், இங்கிருக்கும் கங்கை நீருக்கும் இரவு, பகல் வித்தியாசம் இருக்கும். இங்கு அதிக குப்பைகள் ஏற்படுகிறது. அங்கு ஒவ்வொரு பொருளும் முதல் தரமானதாக இருக்கும்.நமது இராஜ்யம் இவ்வாறு இருக்கும் என்ற மகிழ்ச்சி குழந்தைகளாகிய உங்களிடம் அதிகம் இருக்கிறது. நாம் மீண்டும் 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு ஸ்ரீமத் படி சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். பெயரே சொர்க்கம், வைகுண்டமாகும், அதில் லெட்சுமி, நாராயணனின் இராஜ்யம் இருந்தது. சாந்திதாமம் அதாவது நிர்வாணதாமம் ஒன்றே ஒன்று தான். நாம் சாந்திதாமத்தில் எப்படி இருப்போம்? என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலே சிவபாபா இருப்பார், பிறகு பிரம்மா-விஷ்ணு-சங்கர், பிறகு தேவதைகளின் மாலை, பிறகு சத்ரியர், வைஷ்யர், சூத்ரர். நிராகார மரத்திலிருந்து ஆத்மாக்கள் வரிசைக்கிரமமாக வந்து கொண்டே இருக்கின்றன. யார் சத்யுகத்தில் வரக் கூடியவர்களாக இல்லையோ அவர்கள் படிப்பதற்கு ஒருபோதும் வரவே மாட்டார்கள். இந்து தர்மமே தனிப்பட்டதாக ஆகிவிட்டது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. அந்த தர்மம் எப்போது? மற்றும் எப்படி ஸ்தாபனை ஆனது? என்பது யாருக்கும் தெரியாது. இந்த ஞானம் இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, மற்றவர்களுக்கும் புரிய வையுங்கள். சித்திரங்கள் மிக எளிதாக இருக்கிறது. இவர்கள் இந்த இராஜ்யத்தை எப்போது மற்றும் எப்படி அடைந்தார்கள்? மேலும் எவ்வளவு காலம் இராஜ்யம் செய்தனர்? என்பதை யாருக்கு வேண்டுமென்றாலும் புரிய வைக்க முடியும். இந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை இவர்கள் இராஜ்யம் செய்தனர் என்று இராமர், சீதைக்கும் ஆண்டு இருக்க வேண்டும். பிறகு தூய்மையற்ற இராஜாக்கள் ஆரம்பமாகி விட்டனர். இந்த தேவதைகள் முக்கியமானவர்கள், இவர்களுக்கு பூஜை நடைபெறுகிறது. உண்மையில் மகிமைகள் அனைத்தும் ஒரே ஒரு பூஜைக்குரியவருக்குத் தான் இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் அனைவரையும் பூஜித்துக் கொண்டிருக்கின்றனர். அவரவர்களது நேரத்தில் ஒவ்வொருவரின் மகிமையும் ஏற்படுகிறது. கோயில்களுக்குச் சென்று பூஜை செய்கின்றனர், ஆனால் அவர்களைப் பற்றி எதுவும் அறியவில்லை. நீங்கள் இப்போது புரிய வைக்கின்ற போது கேட்டு மகிழ்ச்சி அடைகின்றனர், அதனால் தான் சென்டர் திறக்கின்றனர். இந்த ஞானத்தின் மூலம் நாம் தேவதைகளாக ஆவோம் என்பதை புரிந்திருக்கின்றனர். தந்தை வந்து ஏழைகளை செல்வந்தர்களாக ஆக்கியிருக்கின்றார். தந்தை வந்து குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார், பிறகு குழந்தைகள் மற்றவர்களுக்கு புரிய வைத்து அவர்களது பாக்கியத்தை உருவாக்க வேண்டும். உலகின் சரித்திர, பூகோளத்தை இப்போது நீங்கள் தந்தையின் மூலம் கேட்கிறீர்கள். அதை புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் அனைத்தும் அறிந்து கொள்கிறீர்கள். உலகின் சரித்திர, பூகோளத்தை அவசியம் உலகை படைத்தவர், விதை ரூபமானவர் தான் கூறுவார். அவர் தான் ஞானம் நிறைந்தவர் ஆவார். தேகதாரிகளை பகவான் என்றோ, படைப்பவர் என்றோ கூற முடியாது. நிராகாரமானவர் தான் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார். அவர் வந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார். நான் பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவன். இப்போது நான் இந்த சரீரத்தில் வந்திருக்கிறேன். நானும் ஆத்மா தான். நான் விதை ரூபமாக, ஞானம் நிறைந்தவனாக இருக்கின்ற காரணத்தினால் குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறேன். இதில் ஆசிர்வாதம், கருணை போன்ற விசயங்கள் எதுவும் கிடையாது. அல்ப கால சுகத்திற்கான விசயமும் கிடையாது. அல்ப கால சுகத்தை மனிதர்கள் கொடுத்து விடுகின்றனர். ஒருவருக்கு சிறிது நன்மை ஏற்பட்டு விட்டால் அவ்வளவு தான் பெயர் பிரபலமாகி விடுகிறது. உங்களது பிராப்தி 21 பிறவிகளுக்கானது. இப்படிப்பட்ட பிராப்தி தந்தையைத் தவிர வேறு யாரும் செய்விக்க முடியாது. 21 பிறவிகளுக்கு நோயற்ற சரீரத்தை யாரும் கொடுக்க முடியாது. பக்தி மார்க்கத்தில் மனிதர்களுக்கு சிறிது சுகம் கிடைத்தாலே மகிழ்ச்சியடைந்து விடுகின்றனர். இங்கு 21 பிறவிகளுக்கு பிராப்தி அடைகிறீர்கள். இருப்பினும் பலர் முயற்சி செய்வதே கிடையாது. அவர்களது அதிர்ஷ்டத்தில் கிடையாது. அனைவருக்கும் ஒரே மாதிரியான முயற்சியைத் தான் செய்விக்கின்றார். அந்த படிப்பில் சில நேரங்களில் வேறு ஒரு ஆசிரியர் கூட கிடைத்து விடுவர். இவர் ஒரே ஒரு ஆசிரியர் ஆவார். விசேஷமாக அமர்ந்து நீங்கள் புரிய வைக்கலாம், ஆனால் ஞானம் ஒன்று தான், ஒவ்வொருவரும் எடுத்துக் (புரிந்து) கொள்வதில் தான் இருக்கிறது. இதுவும் ஒரு கதையாகும், இதில் அனைத்து ரகசியங்களும் வந்து விடுகிறது. பாபா சத்திய நாராயணனின் கதை கூறுகின்றார். நீங்கள் நாள், தேதி போன்ற அனைத்தையும் கூற முடியும். சத்திய நாராயணன் கதையை கூறக் கூடியவர்கள் சிலர் பிரபலமானவர்களாகவும் இருப்பர். அவர்களுக்கு முழு கதையும் மனப்பாடமாகி இருக்கும். நீங்கள் இந்த சத்திய நாராயணன் கதையை மனப்பாடம் செய்து விடுங்கள். மிகவும் எளிது. தந்தை முதலில் மன்மனாபவ என்று கூறுகின்றார், பிறகு சரித்திரத்தைப் புரிய வையுங்கள். இந்த லெட்சுமி, நாராயணனின் ஆண்டை கூற முடியும் அல்லவா! தந்தை எப்படி சங்கமயுகத்தில் வருகின்றார்! என்பதை வாருங்கள் நாங்கள் உங்களுக்குப் புரிய வைக்கிறோம் என்று சொல்லுங்கள். பிரம்மாவின் சரீரத்தில் வந்து புரிய வைக்கின்றார். யாருக்கு? பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர்களுக்கு. அவர்களே பிறகு தேவதைகளாக ஆகின்றனர், 84 பிறவிகளின் கதையாகும். பிராமணர்கள் பிறகு தேவதைகளாக ஆகின்றனர். முழு ஞானமும் இருக்கிறது, இதை கேட்டு பிறகு மீண்டும் படிக்க வேண்டும், அப்போது தான் நாம் தேவதைகளாக இருந்தோம், பிறகு இவ்வாறு சக்கரத்தில் வந்தோம் என்பது போன்ற அனைத்தும் புத்தியில் வந்து விடும். இது சத்திய நாராயணன் கதையாகும். எவ்வளவு எளிதானது! இராஜ்யத்தை எப்படி அடைந்தோம், பிறகு எப்படி இழந்தோம் ...... எவ்வளவு காலம் இராஜ்யம் செய்தோம்? லெட்சுமி, நாராயணன் மற்றும் அவர்களது குலம், வம்சம் இருந்தது அல்லவா! சூரியவம்சி வம்சம், பிறகு சந்திரவம்சி வம்சம் பிறகு சங்கமத்தில் தந்தை வந்து சூரிய வம்சத்தினர் களுக்காக பிராமண வம்சத்தை படைக்கின்றார். இந்த உண்மையிலும் உண்மையான கதையை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சத்யுகத்தில் லெட்சுமி, நாராயணனுக்கு தங்கம், வைரத்தினால் மாளிகை இருந்தது. இப்போது என்ன இருக்கிறது? தந்தை இந்த கதையை கூறுகின்றார் அல்லவா!என்னை நினைவு செய்தால் கறை நீங்கி விடும் என்று தந்தை கூறுகின்றார். எந்த அளவு கறைகள் நீங்குமோ அந்த அளவு உயர்ந்த பதவி அடைவீர்கள். வரிசைக்கிரமமாக புரிந்து கொள்கிறீர்கள். யார், யார் நல்ல முறையில் புத்தியில் தாரணை செய்கின்றனர் என்பதை பாபா அறிவார். புரிய வைப்பதில் எந்த கஷ்டமும் கிடையாது. மிகவும் எளிது. மனிதனிலிருந்து தேவதையாவது என்பது புகழ் பெற்றது. அடிக்கடி இந்த சத்திய நாராயணன் கதை கூறிக் கொண்டே இருங்கள். அது பொய்யானது, இது உண்மையானது. சென்டர்களிலும் சத்திய நாராயணன் கதையை கூறிக் கொண்டே இருங்கள் அல்லது முரளி கூறிக் கொண்டே இருப்பது மிகவும் எளிதாகும். யார் வேண்டுமென்றாலும் சென்டர் நடத்தி விட முடியும். ஆனால் இலட்சணமும் நன்றாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உப்பு நீர் போன்று இருக்கக் கூடாது. தங்களுக்குள் இனிமையாக நடந்து கொள்ளவில்லையெனில் மரியாதையை இழந்து விடுகிறீர்கள். எனக்கு நிந்தனை செய்தீர்களானால் உயர்ந்த பதவி அடைய முடியாது என்று தந்தை கூறுகின்றார். அந்த குருக்கள் இதை தங்களுக்கு சாதகமாக கூறி விட்டனர். அவர்கள் எந்த இலட்சியத்தையும் கூறுவது கிடையாது. இலட்சியத்தை கூறக் கூடியவர் ஒரே ஒருவர் தான், அவருக்கு நிந்தனை செய்வித்தால் நஷ்டமடைந்து விடுவீர்கள், பிறகு பதவியும் குறைந்து விடும். முகத்தை கருப்பாக்கிக் கொள்கிறீர்கள் எனில் தன்னையே அழித்துக் கொள்கிறீர்கள். சிலர் தோல்வியடைந்து விடுகின்றனர், பிறகு சிலர் உண்மையை எழுதுகின்றனர், சிலர் பொய்யும் கூறுகின்றனர். ஒருவேளை உண்மையான கதையை கூறிக் கொண்டே இருந்தால் புத்தியிலிருந்து பொய் நீங்கி விடும். தந்தைக்கு நிந்தனை ஏற்படும் படியாக நடந்து கொள்ளக் கூடாது. யாருக்கு இப்படிப்பட்ட மனநிலையிருக்கிறதோ அவர்கள் எங்கு சென்றாலும் இவ்வாறே நடந்து கொள்வார்கள். என்னால் மாற முடியவில்லை என்று தானும் புரிந்து கொள்கின்றனர், அப்படிப்பட்டவர்களுக்கு இல்லறத்திலேறே இருங்கள் என்று ஆலோசனை கூறப்படுகிறது. எப்போது தாரணை ஏற்படுகிறதோ அப்போது தான் சேவை செய்ய வேண்டும். வீட்டில் இருந்தீர்கள் எனில் உங்கள் மீது அந்த அளவிற்கு பாவங்கள் அதிகரிக்காது. இங்கு அதுபோன்ற சாதாரண நடத்தையுடையவராக இருந்தால் நிந்தனை செய்வித்து விடுவீர்கள், இதற்குப் பதிலாக இல்லறத்தில் இருந்து கொண்டு தாமரை மலர் போன்று இருப்பது நல்லதாகும். நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தன்னுள்ளிருக்கும் பொய் நீங்கி விட வேண்டும், அதற்கு சத்திய நாராயணன் கதை கேட்க வேண்டும் மற்றும் கூற வேண்டும். தந்தைக்கு நிந்தனை ஏற்படும் படியாக நடந்துகொள்ளக் கூடாது.2) தங்களுக்குள் மிக இனிமையானவர்களாக இருக்க வேண்டும், ஒருபோதும் உப்புநீராக (வெறுக்கத்தக்கவராக) ஆகக் கூடாது. நல்ல இலட்சணத்தை தாரணை செய்து பிறகு சேவை செய்ய வேண்டும்.வரதானம்:

திருப்தியின் ஆதாரத்தில் ஆசிர்வாதம் கொடுக்கக் கூடிய மற்றும் அடையக் கூடிய இயல்பான முயற்சியாளர் ஆகுக.யார் சுயம் திருப்தியாக இருந்து அனைவரையும் திருப்திபடுத்துகிறார்களோ அவர்களுக்குத் தான் அனைவரின் ஆசிர்வாதமும் கிடைக்கும். எங்கு திருப்தி இருக்கிறதோ அங்கு ஆசிர்வாதம் இருக்கும். ஒருவேளை அனைத்து குணங்களை தாரணை செய்வதில் அல்லது சர்வ சக்திகளை பயன்படுத்துவதில் உழைப்பு ஏற்படுகிறது எனில் அதையும் விட்டு விடுங்கள், அமிர்தவேளையிலிருந்து இரவு வரை ஆசிர்வாதம் கொடுப்பது மற்றும் அடைவது என்ற ஒரே ஒரு காரியம் மட்டும் செய்தால் போதும், இதில் அனைத்தும் வந்து விடும். யாராவது துக்கம் கொடுத்தாலும் நீங்கள் ஆசிர்வாதம் கொடுத்தீர்கள் எனில் உழைப்பின்றி இயல்பாகவே முயற்சியாளர்களாக ஆகிவிடுவீர்கள்.சுலோகன்:

யார் தன்னை (ஆன்மீக சேவைக்காக சமர்ப்பணம்) அர்ப்பணித்துக் கொண்ட மன நிலையுடன் இருக்கிறார்களோ அவர்கள் முன் அனைவரிடமிருந்தும் ஒத்துழைப்பு தானாகவே கிடைத்து விடும்.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only