06 May 2017

BK Murli 7 May 2017 Tamil

BK Murli 7 May 2017 Tamil

07.05.2017           காலை முரளி                ஓம் சாந்தி        அவ்யக்த பாப்தாதா       மதுபன்ரி   வைஸ்  27.03.1982


விதை ரூப நிலை மற்றும் ஆன்மீக அனுபவங்கள்


சப்தத்திலிருந்து விலகியிருக்கும் தந்தை, சப்தமான உலகத்தில் சப்தம் மூலமாக அனைவரையும் சப்தத்திலிருந்து விலகிய நிலைக்கு அழைத்துச் செல்கிறார். தன்னுடன் அழைத்துச் செல்வதற்குத் தான் பாப்தாதாவிற்கு வர வேண்டியதாக இருக்கிறது. அனைவரும் உடன் செல்வதற்குத் தயாராக இருக்கிறீர்களா? அல்லது இப்பொழுது வரையிலும் தயார் ஆவதற்காக நேரம் வேண்டுமா? உடன் செல்வதற்காக பிநது (புள்ளி) ஆக வேண்டும். மேலும் பிந்து ஆவதற்காக சிதறிக்கிடக்கும் விஸ்தாரத்தை அதாவது அனேக கிளைகள் உள்ள மரத்தை விதையில் உள்ளடக்கி விதை ரூப நிலை அதாவது பிந்துவில் அனைவரும் நிரம்பி விட வேண்டும். உலகீய முறையில் கூட எப்பொழுது மிக விஸ்தாரத்தின் கணக்கு போடும் பொழுது அனைத்து கணக்குகளையும் முடித்து கடைசியில் என்ன கூறுகிறீர்கள்? சிவம் என்றால் பிந்து என்று சொல்லுங்கள என்று கூறப்படுகிறது. அதேபோல் படைப்புச் சக்கரம் மற்றும் கல்ப விருக்ஷ்த்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை எவ்வளவு கணக்கு வழக்கின் விஸ்தாரத்தில் வந்திருக்கிறீர்கள். தனது கணக்கு வழக்கின் கிளைகளை மற்றும் விஸ்தாரம் என்ற மரத்தை தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? உடலின் கணக்கின் கிளை, உடலின் சம்பந்தங்களின் கிளைகள், உடலின் விதவிதமான பொருட்களின் பந்தனமாகும். ஆத்மா ஆவதின் கிளை பக்தி மார்க்கம் மற்றும் குருக்களின் பந்தனங்களின் கிளைகள், பல வகையான பாவங்களின் பந்தனங்களின் கிளைகள், கர்மத்தின் விளைவுகளை அனுபவிக்கும் கிளைகள் அப்படி எவ்ளவு விஸ்தாரம் ஆகிவிட்டது. இப்பொழுது இந்த முழு விஸ்தாரத்திற்கு பிந்து ரூபமாகி, பிந்து அதாவது முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். முழுவிஸ்தாரத்தையும் விதையில் நிரப்பி விட்டீர்களா அல்லது இப்பொழுது கூட விஸ்தாரம் இருக்கிறதா? இந்த இத்துப்போன மரத்தின் எந்த விதமான கிளையோ தங்கிக் போய் விடவில்லையே. சங்கமயுகமே பழைய மரத்தை முடிவு கட்டுவதற்கான யுகம். எனவே ஹே! சங்கமயுக பிராமணர்களே ! பழைய மரத்தை முடிவு கட்டி விட்டீர்களா? எப்படி ஒவ்வொரு இலைக்கும் தண்ணீர் ஊற்ற முடியாது. விதைக்கு கொடுப்பது என்றால் அனைத்து இலைகளுக்கும் தண்ணீர் கிடைப்பது ! அந்த மாதிரி இத்தனை 84 பிறவிகளின் பல விதமான கணக்கு வழக்கு என்ற மரத்திற்கு முடிவு கட்ட வேண்டும். ஒவ்வொரு கிளையையும் அழிக்க வேண்டும் என்பதல்ல. இன்று உடலின் நினைவு என்ற கிளையை வெட்டுங்கள், அடுத்து, நாளை உடல் சம்பந்தப்பட்ட உறவினர்களின் கிளையை அகற்றுவதினால் முடிவடையாது. ஆனால் விதையாக விளங்கும் தந்தையோடு முழு ஈடுபாட்டை ஏற்படுத்தி, ஈடுபாட்டின் அக்னி மூலமாக சுலபமாக முடிவடைந்து விடும். வெட்டக் கூடாது. ஆனால் சாம்பலாக்க வேண்டும். இன்று வெட்டுவீர்கள், பிறகு சிறிது காலத்திற்குப் பிறகு முளைத்து விடும். ஏனென்றால், வாயுமண்டலம் மூலமாக மரத்திற்கு இயற்கையாகவே தண்ணீர் கிடைத்துக் கொண்டேயிருக்கும். மரம் பெரியதாக வளர்ந்து விட்ட பிறகு விசேஷமாக தண்ணீர் ஊற்றுவதற்கு அவசியம் இருப்பதில்லை. இயற்கையாகவே வாயுமண்டலம் மூலம் மரம் வளர்ந்து கொண்டேயிருக்கும் மேலும் பசுமையாக வளர்ந்து கொண்டிருக்கும். அப்படி விஸ்தாரத்தை அடைந்திருக்கும் இத்துப்போன மரத்திற்கு இப்பொழுது தண்ணீர் ஊற்றுவதற்கான அவசியம் இல்லை. இது இயல்பாகவே வளர்ந்து கொண்டேயிருக்கும். முயற்சியின் மூலமாக உடல் சம்பந்தத்தின் நினைவு என்ற கிளையை அழித்துவிட்டேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எரித்து அழிக்கப்படாதது மீண்டும் கிளை முளைத்து விடுகிறது. பிறகு நீங்கள் உங்களிடம் மற்றும் தந்தையிடம் நானோ இதை அழித்துவிட்டிருந்தேன். பிறகு எப்படி வந்தது என்று கூறுகிறீர்கள்? முன்போ இருக்கவில்லை பிறகு எப்படி ஆனது. என்ன காரணம்? வெட்டினீர்கள் ஆனால் சாம்பலாக்கவில்லை. நெருப்பில் போடப்பட்ட பொருள் ஒருபொழுதும் பலன் கொடுப்தில்லை. எனவே இந்த கணக்கு வழக்கின் விஸ்தார ரூப மரத்தை முழு ஈடுபாட்டின் அக்னி மூலம் அழித்துவிடுங்கள். பிறகு என்ன இருந்து விடும்? உடல் மற்றும் உடலின் சம்பந்தம் மற்றும் பதார்த்தத்தின் விஸ்தாரம் அழிந்துவிட்டது என்றால் மிச்சம் பிந்து ஆத்மா மற்றும் விதை ஆத்மா இருந்து விடும். எப்பொழுது அந்த மாதிரி பிந்து விதை சொரூபமாகி விடுவீர்களோ அப்பொழுது தான் சப்தத்திலிருந்து விலகிய விதை ரூப தந்தையுடன் செல்ல முடியும். எனவே சப்தத்திலிருந்து விலகிச் செல்ல தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டோம். விஸ்தாரத்தை அழித்து விட்டீர்களா? விதை ரூப தந்தை விதை ரூப ஆத்மாளைத் தான் அழைத்துச் செல்வார். விதை சொரூபமாக ஆகிவிட்டீர்களா? யார் எப்பொழுதும் தயாரானவராக ஆகிவிட்டாரோ அவருக்கு இப்பொழுதுதிலிருந்தே ஆன்மீக அனுபவங்கள் ஆகிக் கொண்டே இருக்கும். என்னவாகும்? என்ன ஆகும்?போனாலும், வந்தாலும், அமர்ந்திருந்தாலும், பேசிக் கொண்டே - இந்த உடல், கணக்கு வழக்கு என்ற மரத்தின் முக்கிய தண்டு, அதிலிருந்து தான் இந்தக் கிளைகள் வெளியாகின்றன, அப்படி இந்த உடல் மற்றும் ஆத்மா என்ற விதை இரண்டுமே முற்றிலும் வேறு வேறு என்று முதலில் அனுபவம் ஆகும். அந்த மாதிரி ஆத்மா நடைமுறையில் காரியங்கள் செய்து கொண்டே விலகிய நிலையை அடிக்கடி அனுபவம் செய்யும். ஞானத்தின் அனுசாரம் நான் ஆத்மா வேறு, உடல் வேறு என்பதுமட்டுமல்லாமல் நான் ஆத்மா இந்த உடலில் இருந்து வேறுபட்ட தனிப்பட்ட ஒரு பொருள் என்பது அனுபவத்திலும் ஏற்படும். எப்படி ஸ்தூலமாக உடலின் ஆடை மற்றும் அணியப்படும் உடல் வேறு என்று அனுபவம் ஆகிறதோ அதேபோல் ஆத்மா எனக்கு இந்த உடல் ஆடை, இந்த ஆடையை அணியும் நான் ஆத்மா என்று தெளிவாக அனுபவம் ஆகும். எப்பொழுது விரும்புகிறீர்களோ அப்பொழுது இந்த உடல் உணர்வு என்ற ஆடையை அணியுங்கள், எப்பொழுது விரும்புகிறீர்களோ அப்பொழுது இந்த ஆடையிலிருந்து விடுபட்ட அதாவது தேக உணர்விலிருந்து விலகிய நிலையில் நிலைத்து விட வேண்டும். அந்த மாதிரி விலகிய நிலையின் அனுபவம் ஏற்படுகிறதா? ஆடையை நான் அணிகிறேனா அல்லது ஆடை என்னை அணிகிறதா, சைதன்யமாக இருப்பது யார்? எஜமானன் யார்? அப்படி ஒரு அடையாளம் விலகிய நிலையின் அனுபவம். தனியாக பிரிய வேண்டியது இல்லை. ஆனால் நான் வேறு என்ற தெளிவான அனுபவம்.இன்னுமொரு அடையாளம் அல்லது அனுபவம் எப்படி பக்தர்களுக்கு, ஆத்ம ஞானிகளுக்கு அல்லது ஏதோ ஒரு சில பரமாத்ம ஞானிகளுக்கு திவ்ய திருஷ்டி மூலமாக ஜோதி பிந்து ஆத்மாவின் சாட்சாத்காரம் ஆகிறது. சாட்சாத்காரம் அற்பகாலத்திற்கு இருக்கும் ஒன்று. சாட்சாத்காரம் தன்னுடைய பயிற்சியின் பலனானது அல்ல. இதுவோ நாடகத்தில் இருந்த பங்கு அல்லது வரதானம். ஆனால் எவரெடி என்றால் உடன் செல்வதற்காக சமமாக ஆகியருக்கும் ஆத்மா சாட்சாத்காரம் மூலமாக ஆத்மாவைப் பார்க்காது, ஆனால் புத்தியின் நினைவு மூலமாக எப்பொழுதும் தன்னை சாட்சாத் ஜோதி பிந்து ஆத்மா என்று அனுபவம் செய்யும். சாட்சாத் சொரூபமாவது சதா காலத்திற்கானது மற்றும் சாட்சாத்காரம் அற்ப்காலத்திற்கானது. சாட்சாத் சொரூப ஆத்மா, நான் ஒரு பொழுதும் ஆத்மாவின் சாட்சாத்காரத்தைப் பார்க்கவில்லை என்று கூறாது. நான் பார்க்கவில்லை. ஆனால் அந்த அனுபவம் மூலமாக சாட்சாத் ரூபத்தின் நிலையில் நிலைத்திருப்பார். எங்கு சாட்சாத் சொரூபம் இருக்குமோ சாட்சாத்காரத்திற்கு அவசியம் இல்லை. அந்த மாதிரி சாட்சாத் ஆத்மா சொரூபத்தின் அனுபவம் செய்பவர் அதிகாரத்துடன், நிச்சயத்துடன் நான் ஆத்மாவை பார்ப்பது என்ன ! அனுபவமே செய்திருக்கிறேன் என்று கூறுவார். ஏனென்றால், பார்த்த பிறகு கூட அனுபவம் செய்யவில்லை என்றால் பார்ப்பது ஒன்றும் பிரயோஜனம் இல்லாதது. அந்த மாதிரி சாட்சாத் ஆத்ம அனுபவி நடைமுறையில் காரியங்கள் செய்து கொண்டே தன்னுடைய ஜோதி சொரூபத்தின் அனுபவம் செய்து கொண்டே இருப்பார்.மூன்றாவது அனுபவம் - அந்த மாதிரி சமமான ஆத்மா அதாவது எவரெடி ஆத்மா பௌதீக உலகில் மற்றும் பௌதீக உடலில் இருந்த போதிலும், புத்தியின் நினைவு சக்தி மூலமாக எப்பொழுதும் நான் ஆத்மா தந்தையுடன் சூட்சும உலகத்திலோ அல்லது மூலவதனத்திலோ இருக்கிறேன் என்று அனுபவம் செய்யும். ஒரு நொடியில் சூட்சுமவதனவாசி, ஒரு நொடியில் மூலவதனவாசி, ஒரு நொடியில் சாகார வதனவாசியாகி கர்மயோகியாகி பங்கைச் செய்பவன், ஆனால் அநேக தடவைகள் தன்னை தந்தையுடன் சூட்சுமவதனம் மற்றும் மூலவதனத்தில் இருப்பதின் அனுபவம் செய்வார்கள். நேரம் கிடைத்தது, சூட்சும வதனம் மற்றும் மூல வதனம் ùன்று விட்டார். எப்படி வேலையை முடித்த பிறகு வீட்டுக்குச் செல்கிறார்கள், அந்த மாதிரி சூட்சும வதனவாசி, மூலவதனவாசி என்று அனுபவம் செய்வார்கள், அலுவலகத்தில் வேலை முடிந்து விட்டது என்றால் வீட்டிற்கு செல்வார்களா அல்லது அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பார்களா? அந்த மாதிரி ஆத்மா அடிக்கடி தன்னை தன்னுடைய வீட்டிலிருப்பவராக அனுபவம் செய்யும். எப்படி எதிரில் இருப்பது போன்று, இந்த நேரம் இங்கே, அடுத்த நேரம் அங்கே. சாகார வதனம் என்ற அறையிலிருந்து மூலவதனம் என்ற அறைக்கு சென்று விட்டார்.இன்னும் வேறு அனுபவம் - அந்த மாதிரி சமமான ஆத்மா பந்தனத்திலிருந்து விடுபட்டு இருக்கும் காரணத்தினால், பறக்கும் பறவையாகி, மிக உயரத்தில் பறந்து சென்று கொண்டிருக்கிறேன். மேலும் மிக உயர்ந்த நிலை என்ற ஸ்தானத்தில் அமர்ந்திருந்து இவர்கள் அனைவரும் கீழே இருக்கிறார்கள் என்று அனுபவம் செய்வார்கள். நான் அனைவரையும் விட மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறேன். எப்படி அறிவியல் சக்தி மூலம் விண்வெளிக்குச் சென்று விடுகிறார்கள் என்றால், பூமியின் ஈர்ப்பு இருக்காது. மேலும் தன்னை மிக உயர்ந்த இடத்தில் இருப்பதாக மேலும் எடையற்ற நிலையில். லேசாக இருப்பதாக அனுபவம் செய்வார்கள். பறப்பதின் அனுபவம் அனைத்து ஈர்ப்புகளிலிருந்தும் விடுபட்ட நிலை. அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுபட்ட நிலை. இந்த நிலையின் அனுபவம் ஆவது என்றால் உயர்ந்த பறக்கும் கலை மற்றும் பறந்து கொண்டிருக்கும் நிலையின் அனுபவம் ஆவது. காரியங்கள் செய்து கொண்டே சென்று கொண்டிருக்கிறேன், பறந்து கொண்டிருக்கிறேன், தந்தையும் பிந்து, நானும் பிந்து இருவரும் சேர்ந்தே சென்று கொண்டிருக்கிறோம். சமமான ஆத்மாவிற்கு இந்த அனுபவம் செய்து கொண்டிருப்பது தெளிவாக இருக்கும். அனுபவம் என்ற கண் மூலம் பார்ப்பது, திவ்ய திருஷ்டி மூலம் பார்ப்பதை விடத் தெளிவாக இருக்கும். புரிந்ததா? விஸ்தாரமோ மிக அதிகம் இருந்தாலும் சாரமாக சிறிதளவு அடையாளங்களை கூறினோம். எனவே அந்த மாதிரி எவரெடியாக இருக்கிறீர்களா அதாவது அனுபவி சொரூபமாக இருக்கிறீர்களா? உடன் செல்வதற்கு தயாராக இருக்கிறீர்கள் தான் இல்லையா? அல்லது இன்னும் இந்த வேலை பாக்கி இருக்கிறது என்று கூறுவீர்களா? அந்த மாதிரி எவரெடியாக இருக்கிறீர்களா அதாவது அனுபவி சொரூபமாக இருக்கிறீர்களா? உடன் செல்வதற்குத் தயாராக இருக்கிறீர்கள் தான் இல்லையா? அல்லது இன்னும் இந்த வேலை பாக்கி இருக்கிறது என்று கூறுவீர்களா? அந்த மாதிரி அனுபவம் ஆகிறதாஅல்லது வீடே மறந்து விடும் அளவிற்கு சேவையில் பிஸியாகி விட்டீர்களா? ஆத்மாக்களுக்கு முக்தி ஜீவன் முக்தியின் ஆஸ்தியை பிராப்தி செய்விக்க வேண்டும் என்பதற்காகத் தான் சேவை செய்கிறீர்கள்.சேவையிலும் இவர்களையும் தந்தையுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நினைவு இருந்தது என்றால், சேவையில் எப்பொழுதும் ஆடாத நிலை இருக்க முடியும். சேவையின் விஸ்தாரத்தில், சார ரூப விதையின் அனுபவத்தை மறந்து விடாதீர்கள். விஸ்தாரத்தில் காணாமல் போய் விடாதீர்கள். விஸ்தாரத்தில் வந்தாலும் நீங்கள் சார சொரூபத்தில் நிலைத்து இருங்கள், மேலும் மற்றவர்களுக்கும் சார சொரூபத்தின் அனுபவத்தை செய்வியுங்கள். புரிந்ததா? நல்லது.அந்த மாதிரி எப்பொழுதும் சாட்சாத் ஆத்ம சொரூபத்தின் அனபவம் செய்யும், எப்பொழுதும் அனைத்து கணக்கு வழக்கு என்ற மரத்தை அழித்து முற்றுப்புள்ளி இட்டு பிந்து ரூபத்தில் நிலைத்திருக்கும், பிந்துவான தந்தையுடன் எப்பொழுதும் இருக்கக்கூடிய, இந்த ரேநம் கர்மயோகி, அடுத்த நேரம் சூட்சும வதனவாசி, இன்னுமொரு நேரம் மூலவதனவாசி என்று எப்பொழுதும் பயிற்சி நிறைந்த ஆத்மாவிற்கு எப்பொழுதும் தன்னுடைய பறக்கும் நிலையின் அனுபவம் செய்யும் ஆத்மாவிற்கு அந்த மாதிரி தந்தைக்குச் சமமான ஆத்மாவிற்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.பார்ட்டிகளுடன் சந்திப்பு - (பஞ்சாப் மற்றும் குஜராத் மண்டலம்)1.மாயாவின் நிழலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு குடை நிழலின் கீழே இருங்கள்

எப்பொழுதும் தன் மேல் தந்தையின் நினைவின் குடை நிழலை அனுபவம் செய்கிறீர்களா? நினைவின் குடை நிழல் இருக்கிறதா? இந்தக் குடைநிழலை எப்போதாவது விட்டு விடுவதில்லையே? யார் எப்பொழுதும் குடை நிழலின் உள்ளே இருக்கிறாரோ அவர் அனைத்து விதமான மாயாவின் தடைகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறார். எந்த விதத்திலும் மாயாவின் நிழல் விழ முடியாது. இந்த 5 விகாரங்கள் எதிரிக்குப் பதிலாக தாசனாகி சேவாதாரி ஆகிவிடுகின்றன. எப்படி விஷ்ணுவின் சித்திரத்தில் பார்த்திருக்கிறீர்கள், பாம்பின் படுக்கை மற்றும் பாம்புகளே குடை நிழலாக ஆகிவிட்டன. இது வெற்றியின் அடையாளம். இது யாருடைய சித்திரம்? உங்களுடைய சித்திரம் தான் இல்லையா? யார் மீது வெற்றியடைகிறார்களோ அந்த எதிரி சேவாதாரியாகி, விடுகிறார். நீங்கள் அந்த மாதிரியான வெற்றி இரத்தினம். சக்திகளும் குடும்பத்தின் மாதர்களாக இருந்தவர்கள், சக்தி சேனையின் சக்திகள் ஆகிவிட்டார்கள். சக்திகளின் சித்திரங்களல் இராவண வம்ச அசுரர்களை காலின் கீழே இருப்பதாக காண்பிக்கிறார்கள். சக்திகள் அசுரர்களை தன்னுடைய சக்தி என்ற கால்களின் கீழே அழுத்தி விட்டார்கள். சக்தி எந்த ஒரு விகார சம்ஸ்காரத்தையும் மேலே வரவேவிடாது.2. ஞானத்தை தானம் செய்யும் உண்மையிலும் உண்மையான மகாதானி ஆகுங்கள்

எப்பொழுதும் புத்தி மூலமாக ஞானக்கடலின் கரையில் இருக்கக்கூடிய அதாவது கடலின் மூலமாக கிடைத்த அளவற்ற களஞ்சியத்தின் அதிபதி என்று தன்னை நினைக்கிறீர்களா? எப்படி கடல் நிரம்பி இருக்கிறது, அளவற்று இருக்கிறது, நிரந்தரமாக இருக்கிறது, அதேபோலவே ஆத்மாக்களும் அந்த குறைவற்ற களஞ்சியங்களுக்கு மாஸ்டர் அதிபதிகளாக இருக்கிறார்கள். என்ன பொக்கிஷங்கள் கிடைத்திருக்கின்றனவோ அவற்றை மகாதானியாகி மற்றவர்களுக்காக காரியத்தில் ஈடுபடுத்திக் கொண்டே இருங்கள். சம்பந்தத்தில் வரும் பக்த ஆத்மாக்கள் மற்றும் சாதாரண ஆத்மாக்கள் அவர்களுக்காக, பக்தர்களுக்கு பக்தியின் பலன் கிடைத்து விடட்டும் என்ற ஆர்வம் இருக்கும். பாவம் அலைந்து கொண்டிருக்கிறார்கள், அலைவதைப் பார்த்து இரக்கம் வருகிறது இல்லையா? எவ்வளவு இரக்க மனமுடையவர்களாக ஆவீர்களோ அந்த அளவு அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு சுலபமாக வழி கூறுவீர்கள். செய்தியைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். யாரும் வருவதில்லையே என்று நினைக்காதீர்கள். நீங்கள் மகாதானி ஆகுங்கள், செய்தியை கொடுத்துக் கொண்டேயிருங்கள். முறையீடு எதுவும் இருந்துவிடக்கூடாது. அழியாத ஞானம் ஒருபொருழுதும் விநாசஷம் ஆவதில்லை. இன்று கேட்பார்கள், ஒரு மாதம் கழித்து யோசிப்பார்கள், பிறகு யோசித்து அருகில் வந்து விடுவார்கள். எனவே ஒருபோதும் மனமுடைந்து போகாதீர்கள். யார் செய்வார்களோ அவர்களுக்கு உருவாகும். மேலும் யாருக்கு செய்கிறீர்களோ அவர்களும் இன்று இல்லையென்றாலும் அவசியம் நாளை ஏற்றுக் கொள்வார்கள். எனவே அளவற்ற சேவையை களைப்பற்றவராக செய்து கொண்டே இருங்கள். ஒருபொழுதும் களைப்படையக் கூடாது. ஏனென்றால், பாப்தாதாவிடம் அனைவருடையதும் சேமிப்பாகியே விடுகிறது. மேலும் என்ன செய்கிறீர்களோ அதற்கான உடனடிப் பலனான குஷியும் கிடைத்து விடுகிறது.3) சூழ்நிலையை சக்திசாலி ஆக்க வேண்டும் என்ற இலட்சியம் வைத்தீர்கள் என்றால், சேவையின் வளர்ச்சியின் லட்சணம் தென்படும்.

எப்டி கோயிலின் சூழ்நிலை தூரத்திலிருந்தே இழுக்கிறது, அதேபோன்று, நினைவின் நறுமணத்தின் சூழ்நிலை உயர்ந்ததாக இருக்கட்டும். அதன் மூலம் இது ஏதோ விசேஷ ஸ்தானம் என்று ஆத்மாக்களை தூரத்திலிருந்தே ஈர்க்க வேண்டும். எப்பொழுதும் நினைவின் சக்தி மூலம் தன்னை முன்னேற்றிக் கொண்டே இருங்கள். மேலும் கூடவே வாயுமண்டலத்தையும் சக்திசாலி ஆக்குங்கள். சேவை நிலையத்தின் சூழ்நிலை அந்த மாதிரி இருக்க வேண்டும். அதன் காரணமாக அனைத்து ஆத்மாக்களும் ஈர்க்கப்பட்டு வந்து விட வேண்டும். சேவை வாய்மொழி மூலமாக மட்டும் நடப்பதில்லை. மன சக்தி மூலமாகவும் சேவை செய்யுங்கள். சூழ்றிலையை சக்திசாலி ஆக்க வேண்டும், இது என்னுடைய பொறுப்பு என்று ஒவ்வொருவரும் நினைக்க வேணடும் எப்பொழுது அந்த மாதிரி இலட்சியத்தை வைத்தீர்கள் என்றால், சேவையின் வளர்ச்சியின் இலட்சணம் தென்படும். அனைவரும் வரத்தான் வேண்டும், இதுவோ உறுதியாக இருக்கிறது. ஆனால் சிலர் நேராக வந்து விடுவார்கள், சிலர் சுற்றியடித்து அலைந்த பிறகு வந்து விடுகிறார்கள். எனவே ஒவ்வொருவரும் நான் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும் ஜோதியாக அந்த மாதிரி தீபம் ஆக வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும், அதன் காரணமாக விட்டில் பூச்சிகள் தானாகவே வந்து விடவேண்டும். நீங்கள் பிரகாசமாக எரியும் ஜோதியாக அமர்ந்து விட்டீர்கள் என்றால் விட்டில் பூச்சிகள் தானாகவே வந்து விடும். நல்லது.வரதானம்:

பரமாத்ம அன்பு மற்றும் அதிகாரத்தின் ஆன்மீகக் குஷி மற்றும் போதையில் இருக்கக்கூடிய அனைத்து பிராப்திகளும் நிரம்பியவர் ஆகுக !எற்தக் குழந்தைகள் தந்தையுடன் எப்பொழுதும் இணைந்து இருந்து அன்போடு என்னுடைய பாபா என்று கூறுகிறார்களோ அவர்களுக்கு பரமாத்ம அதிகாரம் பிராப்தி ஆகிவிடுகிறது. எல்லையற்ற வள்ளல் அனைத்து பிராப்திகளினால் சம்பன்னம் ஆக்கிவிடுகிறார். மூன்று உலகங்களின் அதிகாரி ஆகிவிடுகிறார்கள். பிறகு என்ன அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டோம், அடைவதற்கு இன்னும் ஒன்றுமில்லை என்ற இந்தப் பாடலைத்தான் பாடுகிறார்கள். அவர்களுக்கு 21 பிறவிகளுக்கு உறுதி (கேரண்டி கார்டு) கிடைத்து விட்டது என்ற இந்த ஆன்மீகக் குஷி மற்றும் போதையில் இருங்கள்.சுலோகன்:

சாதனங்களின் ஆதாரத்தில் சாதனை (இடைவிடாத பயிற்சி) இருக்க வேண்டாம், சாதனம் சாதனையில் தடை ரூபம் ஆக வேண்டாம்.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only