BK Murli 25 June 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 25 June 2017 Tamil

    25.06.2017   காலை முரளி  ஓம் சாந்தி    அவ்யக்த பாப்தாதா,  ரிவைஸ்           13.04.1982           மதுபன்

    தியாகி, மஹாதியாகியின் விளக்கம்


    பிராமண ஆத்மாக்களில் சர்வஸ்வ (அனைத்து வித) தியாகி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மூன்று விதமான குழந்தைகள் இருக்கிறார்கள். ஓன்று தியாகி, இன்னொன்று மஹாதியாகி, மூன்றாவது சர்வதியாகி. மூவர்களுமே தியாகிகள் தான், ஆனால் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள்.



    தியாகி –

    யார் ஞானம் மற்றும் யோகா மூலமாக தன்னுடைய பழைய சம்பந்தம், பழைய உலகம், பழைய தொடர்பு மூலமாக பிராப்தி ஆகியிருக்கும் அற்பகால பிராப்திகளை தியாகம் செய்து எண்ணம் மூலமாக பிராமண வாழ்க்கை அதாவது யோகி வாழ்க்கையைக் கடைப்பிடித்திருக்கிறாரோ, அதாவது பழைய வாழ்க்கையை விட இந்த யோகி வாழ்க்கை சிரேஷ்டமானது என்று அனைத்தையும் தாரணை செய்திருக்கிறார். அற்ப கால பிராப்தியை விட இந்த சதா காலத்து பிராப்தியை பிராப்தி செய்வது அவசியமாகும். அப்படி அதை அவசியம் என்று புரிந்ததின் ஆதாரத்தில் ஞான, யோகத்தின் பயிற்சியுள்ளவராக ஆகிவிட்டார். பிரம்மா குமார் மற்றும் பிரம்மா குமாரி என்று கூறிக்கொள்ள உரிமையுள்ளவர்கள் ஆகிவிட்டீர்கள். ஆனால் பிரம்மா குமார், பிரம்மா குமாரி ஆன பிறகு கூட பழைய சம்பந்தம், எண்ணம் மற்றும் சம்ஸ்காரம் சம்பூர்ணமாக மாற்றம் ஆகவில்லை, ஆக மாற்றம் செய்வதின் யுத்தத்தில் எப்பொழுதும் முழுமையாக ஈடுபட்டிருக்கிறீர்கள். இந்த நேரம் பிராமண சம்ஸ்காரம், அடுத்த நேரம் பரிவர்த்தனை (மாற்றம்) செய்வதின் யுத்த சொரூபத்தில் இருக்கிறீர்கள். இந்நிலையைத்தான் தியாகி ஆகியிருக்கிறீர்கள், ஆனால் சம்பூர்ண பரிவர்த்தனை செய்யவில்லை என்று கூறுவது. தியாகம் செய்வது தான் மஹா பாக்கியவான் ஆவது என்று நினைப்பவராக மற்றும் புரிந்து கொள்பவராக மட்டும் ஆகியிருக்கிறீர்கள். செய்வதற்கான தைரியம் குறைவாக இருக்கிறது. அலட்சியத்தின் சம்ஸ்காரம் அடிக்கடி வெளிப்படுவதினால் தியாகத்தின் கூடவே ஓய்வு விரும்பியாகவும் ஆகிவிடுகிறார்கள். புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள், இந்த வாழ்க்கையில் இருந்து கொண்டும் இருக்கிறார்கள், முயற்சியும் செய்கிறார்கள், பிராமண வாழ்க்கையை விடவும் முடியாது, பிராமணனாகத் தான் இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணமும் உறுதியாக இருக்கிறது. மாயா மற்றும் மாயாவி உறவினர்கள் பழைய வாழ்க்கையில் வருவதற்காக தன் பக்கம் கவர்ந்து இழுக்கவும் செய்தாலும், பிராமண வாழ்க்கை தான் உயர்ந்தது என்ற இந்த எண்ணத்தில் உறுதியாக இருக்கிறார்கள். இதில் உறுதியான நிச்சயபுத்தி உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சம்பூர்ண தியாகி ஆவதற்காக இரண்டு விதமான தடை முன்னேற விடுவதில்லை. அது எது? ஒன்று எப்பொழுதும் தைரியம் வைக்க முடிவதில்லை அதாவது, தடைகளை எதிர்நோக்குவதற்கான சக்தி குறைவாக இருக்கிறது. இரண்டாவது அலட்சியத்தின் சொரூபமான ஓய்வு விரும்பியாக ஆகி நடந்து கொள்வது. படிப்பு, நினைவு, தாரணை மற்றும் சேவை அப்படி அனைத்து பாடங்களையும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் மிகவும் நிதானமாக சம்பூர்ண பரிவர்த்தனை செய்வதால் ஆயுதம் தரித்த சக்தி சொரூபத்தில் குறை ஏற்பட்டு விடுகிறது. அன்பு வைத்திருப்பவர்தான், ஆனால் சக்தி சொரூபமாக இல்லை. மாஸ்டர் சர்வசக்திவான் சொரூபத்தில் நிலைத்திருக்க முடிவதில்லை, எனவே மஹாதியாகி ஆக முடியாது. இவர்கள் தான் தியாகி ஆத்மாக்கள்.



    மஹாதியாகி –

    எப்பொழுதும் சம்பந்தம், எண்ணம் மற்றும் சம்ஸ்காரம் அனைத்தையும் பரிவர்த்தனை செய்வதற்கு எப்பொழுதும் தைரியம் மற்றும் உற்சாகத்தில் இருப்பார்கள். பழைய உலகம் மற்றும் பழைய சம்பந்தத்திலிருந்து எப்பொழுதும் விலகி இருப்பார். மஹாதியாகி ஆத்மாக்கள் எப்பொழுதும் இந்தப் பழைய உலகம் மற்றும் உறவினர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று அனுபவம் செய்வார்கள். இதற்காக யுத்தம் செய்ய வேண்டியதாக இருக்காது. எப்பொழுதும் அன்பானவராக, சகயோகி, சேவாதாரி சக்தி சொரூபத்தின் நிலையில் நிலைத்திருப்பார்கள், மிச்சம் வேறு என்ன இருந்து விடுகிறது. மஹாதியாகியின் பலன் சொரூபமாக, தியாகத்தின் பாக்கியமாக இருக்கும் மஹாஞானி, மஹாயோகி, சிரேஷ்ட சேவாதாரி ஆகிவிடுகிறார்கள். இந்த பாக்கியத்தின் அதிகாரத்தை அங்கங்கே தவறான போதையின் ரூபத்தில் உபயோகப் படுத்தி விடுகிறார்கள். கடந்த கால வாழ்க்கையின் சம்பூர்ண தியாகம் இருக்கிறது. ஆனால் தியாகத்தினும் தியாகம் இல்லை. இரும்புச் சங்கிலிகளை துண்டித்து விட்டார்கள், இரும்புக் காலத்திலிருந்து பொற்காலமாகவோ ஆகிவிட்டார், ஆனால் சில நேரங்களில் பரிவர்த்தனை, இந்த இனிமையான வாழ்க்கையின் தங்கச் சங்கிகளால் பிணைக்கப்பட்டு விடுகின்றன. இந்த தங்கச் சங்கிலிகள் எவை? நான் மற்றும் என்னுடையது. நான் நல்ல ஞானி, நான் ஞான சொரூப ஆத்மா, யோக சொரூப ஆத்மா. இந்த தங்கச் சங்கிலிகள் சில நேரம் பந்தனத்திலிருந்து விடுபட்டவராக ஆக விடுவதில்லை. மூன்று விதமான குடும்பம் இருக்கிறது. 1) உலகியல் குடும்பம் மற்றும் வேலை, தொழிலின் குடும்பம், 2) தன்னுடைய உடல் என்ற குடும்பம் 3) சேவை என்ற குடும்பம்.



    தியாகியாக இருப்பவர் உலகத்து குடும்பத்திலிருந்து விடுபட்டு விட்டார். ஆனால் உடல் என்ற குடும்பம் அதாவது தன்னை தானே நடத்துவிப்பதில் மற்றும் உருவாக்குவதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருப்பது மற்றும் தேக உணர்வின் சுபாவத்திற்கு வசமாவது, மேலும் அந்த சுபாவத்தின் காரணமாகத் தான் அடிக்கடி தைரியம் அற்றவர் ஆகிவிடுகிறார். புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள், விரும்பவும் செய்கிறார்கள், ஆனால் அவர்களே கூறுகிறார்கள் இது என்னுடைய நேச்சர் என்று. இதுவும் தேக உணர்வின், தேகத்தின் குடும்பம், இதில் சக்தி சொரூபமாக இருக்க வேண்டும். மேலும் இந்தக் குடும்பத்திலிருந்தும் விலகி விட வேண்டும் என்பதை அவர்களால் செய்ய முடிவதில்லை. இது தியாகியின் விஷயத்தைக் கூறினோம் ஆனால் மஹா தியாகி உலகத்து குடும்பம் மற்றும் தேகத்தின் குடும்பம் இரண்டிலிருந்தும் விலகி விடுகிறார். ஆனால் சேவை என்ற குடும்பத்தில் சில நேரம் விலகுவதற்குப் பதிலாக மாட்டிக் கொள்கிறார். அந்த மாதிரி ஆத்மாக்களுக்கு தன்னுடைய தேக உணர்வும் தொந்தரவு செய்வதில்லை, ஏனென்றால் இரவு பகலாக சேவையில் மூழ்கியிருக்கிறார். தேகத்தின் குடும்பத்திலிருந்தோ விலகி விடுகிறார். இந்த இரண்டின் தியாகத்தின் பாக்கியமாக - ஞானி மற்றும் யோகி ஆகி விட்டார், சக்திகளின் பிராப்தி, குணங்களின் பிராப்தி ஆகிவிட்டது. பிராமண பரிவாரத்தில் பிரசித்தி பெற்ற ஆத்மாக்கள் ஆகிவிட்டனர். ஆனால் இந்த சேவையின் குடும்பத்தின் விஸ்தாரமாக என்ன இருக்கிறதோ அந்த விஸ்தாரத்தில் ஒட்டிக் கொள்கிறார்கள். இந்த அனைத்து பிராப்தியையும் மஹாதானி ஆகி மற்றவர்களுக்கு தானம் செய்வதற்குப் பதிலாக தனக்காக எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். அப்படி நான் மற்றும் என்னுடையது என்ற சுத்த உணர்வின் தங்கச் சங்கிலி ஆகி விடுகிறது. நான் எனக்காக கூறவில்லை, சேவைக்காக கூறுகிறேன் என்ற உணர்வு மற்றும் வார்த்தைகள் மிகவும் சுத்தமாக இருக்கும். நான் என்னை ஒரு பொழுதும் தகுதியான டீச்சர் என்று கூறியதில்லை. ஆனால் அனைவரும் என்னை விரும்பி அழைக்கிறார்கள். நானோ விலகி இருப்பவளாக இருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் என்னை அன்பானவராக ஆக்கி விடுகிறார்கள். இதை என்னவென்று கூறுவது? தந்தையைப் பார்த்தார்களா அல்லது உங்களைப் பார்த்தார்களா? உங்களுடைய ஞானம் நன்றாக இருக்கிறது, நீங்கள் சேவை செய்யும் முறை நன்றாக இருக்கிறது என்று பிடித்திருக்கிறது என்றால், தந்தை எங்கே சென்று விட்டார்? தந்தையை பரம்தாம நிவாசியாக ஆக்கி விட்டார்கள். இந்த பாக்கியத்தையும் தியாகம் செய்ய வேண்டும். அதாவது நீங்கள் தென்படக்கூடாது, தந்தை தென்பட வேண்டும். மஹான் ஆத்மா மேல் அன்பு வைத்திருப்பவர்களாக ஆக்காதீர்கள், பரமாத்மா மேல் அன்புள்ளவர்களாக ஆக்குங்கள். இதைத் தான் மற்ற குடும்பங்களைக் கடந்து வந்து இந்த கடைசி குடும்பத்தில் அனைத்தையும் தியாகம் செய்தவர் ஆவதில்லை என்று கூறுவது. அப்படி மஹாபாக்கியம் நிறைந்தவராகவே ஆகியிருக்கிறார், ஆனால் அனைத்தையும் தியாகம் செய்தவராக ஆகவில்லை. அப்படி இரண்டாம் நம்பரின் மஹாதியாகியைப் பற்றி கேட்டீர்களா? இன்னும் இருப்பது அனைத்தும் தியாகம் செய்தவர் பற்றி....



    இது தான் தியாகப் படிப்பின் இறுதி முழுமையான பாடம். இறுதிப் பாடமாக இருக்கிறது. அதை பின்பு கூறுவோம், ஏனென்றால் 83-ல் மஹா யக்ஞம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ மேலும் மஹான் ஸ்தானத்தில் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அனைவரும் கொஞ்சமாவது ஆஹுதி போடுவார்கள் இல்லையா அல்லது ஹால் கட்டுவதற்கான ஏற்பாடு மட்டும் செய்வீர்களா? மற்றவர்களுக்கு சேவையோ செய்வீர்கள். தந்தையின் பிரத்யக்ஷத்தின் ஓசை நாலா புறங்களிலும் நன்றாக ஒலிப்பதற்காக பெரிய பெரிய மைக்குகளையும் அழைத்து வருவீர்கள். இந்த திட்டத்தை தீட்டி இருக்கிறீர்கள் இல்லையா? ஆனால் தந்தை தனியாக பிரத்யக்ஷம் ஆவாரா அல்லது சிவ சக்தி இருவர்களும் பிரத்யக்ஷம் ஆவார்களா? சக்தி சேனை என்றால் ஆண், பெண் இருவர்களுமே வந்து விடுகிறார்கள். தந்தை குழந்தைகளுடன் சேர்ந்து பிரத்யக்ஷம் ஆவார். அப்படி மைக் மூலமாக செய்தியை நன்றாக ஒலிக்கச் செய்வது பற்றியோ யோசித்திருக்கிறீர்கள் ஆனால் உலகில் செய்தி பரவி விடும், மேலும் பிரத்யக்ஷத்தின் திரையும் அகற்றப் பட்டுவிடும். ஆனால் பிரத்யக்ஷம் ஆகக்கூடிய மூர்த்திகளும் சம்பன்னமாக இருக்க வேண்டும் இல்லையா? அல்லது திரை அகன்று விட்டது சிலர் தயாராகிக் கொண்டிருக்கிறார், சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள், அந்த மாதிரி காட்சியோ காண்பிக்க வேண்டாம் இல்லையா. சிலர் சக்தி சொரூப கேடயத்தைப் பிடித்திருக்கிறார்கள், சிலர் வாளை பிடித்திருக்கிறார்கள். அந்த மாதிரி புகைப்படமோ எடுக்க வேண்டாம் இல்லையா? எனவே என்ன செய்ய வேண்டும்? சம்பூர்ண சுவாஹா செய்ய வேண்டும். இதற்காகவும் நிகழ்ச்சி தயாரிக்க வேண்டும் இல்லையா. அப்படி மஹாயக்ஞத்தில் தங்கச் சங்கிலிகளையும் சுவாஹா செய்து விட வேண்டும். ஆனால் அதற்கு முன்பு இப்பொழுதிலிருந்தே பயிற்சி வேண்டும். 83-ல் செய்ய வேண்டும் என்று அப்படி இல்லை. எப்படி நீங்களும் முதலில் சேவாதாரியாகவோ முன்பே ஆகிவிடுகிறீர்கள். மேலும் சமர்ப்பணம் நிகழ்ச்சி பிறகு நடக்கும். இந்த அனைத்தையும் சுவாஹா செய்யும் நிகழ்ச்சியும் 83-ல் செய்ய வேண்டும். ஆனால் நீண்ட காலத்து பயிற்சி வேண்டும் புரிந்ததா? நல்லது.



    அந்த மாதிரி எப்பொழுதும் தந்தைக்குச் சமமாக அனைத்தையும் தியாகம் செய்த, எப்பொழுதும் பிரம்மா பாபாவிற்கு சமமாக பிராப்தி ஆகியிருக்கும் பாக்கியத்தையும் அளவற்று தானம் செய்யும், அந்த மாதிரி எப்பொழுதும் தந்தைக்கு உண்மையான கட்டளைப்படி மற்றும் தந்தையைப் பின்பற்றி நடக்கும் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    அவ்யக்த பாப்தாதாவின் முரளிகளிலிருந்து கேள்வி – பதில்



    கேள்வி:

    காரியங்கள் செய்து கொண்டே கர்மபந்தனத்திலிருந்து விடுபட்டு இருப்பதற்கான வழி என்ன?



    பதில்:

    எந்தக் காரியம் செய்யும் பொழுதும் தந்தையின் நினைவில், அன்பில் ஐக்கியமாகி இருங்கள். அன்பில் மூழ்கியிருக்கும் ஆத்மா காரியம் செய்து கொண்டும் விலகியிருப்பார். கர்மயோகி என்றால் நினைவில் இருந்து கொண்டே காரியம் செய்பவர் எப்பொழுதும் கர்மபந்தனத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார். காரியம் செய்து கொண்டிருக்கவில்லை, ஆனால் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று அனுபவம் ஆகும். எந்த விதமான களைப்பும், சுமையும் அனுபவம் ஆகாது. கர்மயோகி என்றால் காரியங்களை விளையாடுவது மாதிரி விலகியிருந்து செய்பவர். அந்த மாதிரி விலகியிருக்கும் குழந்தைகள் கர்ம இந்திரியங்கள் மூலமாக காரியம் செய்து கொண்டே தந்தையின் அன்பில் ஐக்கியமாகியிருக்கும் காரணத்தினால் பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆகிவிடுகிறார்.



    கேள்வி:

     எந்த ஆன்மீக  லிஃப்ட் மூலமாக ஒரு நொடியில் உயர்ந்த இலக்கை சென்றடைய முடியும்? உயர்ந்த இலக்கு எது?



    பதில்:

    எண்ணம் தான் உயரே கொண்டு செல்வதற்கும் மற்றும் கீழே கொண்டு வருவதற்குமான ஆன்மீக லிஃப்ட். நிராகாரி (உடலற்ற) நிலையில் நிலைத்து விடுவது தான் உயர்ந்த இலக்கு. இதற்காக எஜமானத் தன்மை என்ற நிலையில் நிலைத்திருந்து எண்ணத்தின் சக்தியை ஒருமுகப்படுத்துவதற்கான பயிற்சி வேண்டும். எப்பொழுது விரும்புகிறீர்களோ, எங்கே விரும்புகிறீர்களோ, எப்படி விரும்புகிறீர்களோ அப்படி அனைத்து சக்திகளையும் காரியத்தில் ஈடுபடுத்துவது தான் மாஸ்டர் சர்வ சக்திவானின் நிலை.



    கேள்வி:

    தற்சமயம் முழு உலகின் அத்தனை ஆத்மாக்களும் என்ன விருப்பம் வைத்திருக்கிறார்கள்? உலகிற்கு நன்மை செய்வதற்கான சுலபமான வழி என்ன?



    பதில்:

    தற்சமயம் முழு உலகின் அனைத்து ஆத்மாக்களும் அலைந்து கொண்டிருக்கும் புத்தி ஒரு நிலைப்பட்டு விட வேண்டும் என்ற இந்த விருப்பத்தைத் தான் வைத்திருக்கிறார்கள். மனதின் சஞ்சலம் ஒருநிலைப்பட்டு விட வேண்டும் என்று விரும்புகிறார்கள். உலகிற்கு நன்மை செய்வதற்காக உயர்ந்த எண்ணங்களின் நிலைக்கான பயிற்சி வேண்டும். இந்த ஒருமித்த நிலை மூலம் தான் அனைத்து ஆத்மாக்களின் அலைந்து கொண்டிருக்கும் புத்தியை ஒருநிலைப்படுத்த முடியும்.



    கேள்வி:

    ஒருமித்த நிலை என்று எதைக் கூறுவது? ஒருமித்த நிலையின் பயிற்சியை யார் செய்ய முடியும்?



    பதில்:

    ஒருமித்த நிலை என்றால் ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை என்று அந்த மாதிரி நிரந்தரமாக ஒரே சீரான நிலையில் நிலைத்திருப்பதற்கான பயிற்சியை, முதலில் யார் வீணான எண்ணங்களை சுத்த எண்ணங்களாக மாற்றி விடுகிறாரோ அவரால் தான் செய்ய முடியும். இன்னொன்று மாயா மூலம் வரக்கூடிய அனேக விதமான தடைகளை தன்னுடைய ஈஸ்வரிய ஈடுபாட்டின் மூலம் முடித்து விட வேண்டும்.



    கேள்வி:

    தடைகளைக் கண்டு பயப்படுவதற்கான முக்கிய காரணம் என்ன?



    பதில் –

    எப்பொழுது ஏதாவது தடை வருகிறது என்றால் முழு ஈடுபாட்டின் சோதனையில் இவை அனைத்தும் வரும் என்று முன்பாகவே பாப்தாதா ஞானம் கொடுத்திருக்கிறார் என்பதை மறந்து விடுகிறீர்கள். தடை கண்டிப்பாக வரும் என்று முன்பே தெரிந்திருக்கும் பொழுது பயப்படுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது.



    கேள்வி:

    எந்தக் கேள்வி தடைகளை அகற்றுவதற்குப் பதிலாக முழு ஈடுபாட்டை அகற்றுவதற்கு காரணமாகி விடுகின்றது?



    பதில்:

    மாயா ஏன் வருகிறது? வீணான எண்ணங்கள் ஏன் வருகின்றன? புத்தி ஏன் அலைகிறது? சூழ்நிலை ஏன் பிரபாவத்தை ஏற்படுத்துகிறது? உறவினர்கள் ஏன் ஒத்துழைப்பு தருவதில்லை? பழைய சம்ஸ்காரங்கள் ஏன் இப்பொழுது வெளிப்படுகின்றன? இந்த அனைத்து கேள்விகளும் தடைகளை அகற்றுவதற்குப் பதிலாக தந்தை மேல் உள்ள ஈடுபாட்டை அகற்றுவதற்கு காரணமாகி விடுகின்றன.



    கேள்வி:

    தடையற்றவர் ஆவதற்கான வழி என்ன?



    பதில்:

    தடைகள் வருவதற்கான காரணத்தை யோசிக்காதீர்கள். ஆனால் எவ்வளவு முன்னேறிச் செல்வீர்களோ அந்த அளவு மாயா சோதனை செய்வதற்காக வேறு வேறு ரூபங்களில் வரும். மேலும் இந்த சோதனைகள் தான் முன்னேறிச் செல்வதற்கான சாதனமேயன்றி கீழே தள்ளுவதற்காக அல்ல என்ற பாப்தாதாவின் மஹாவாக்கியத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காரணத்தை யோசிப்பதற்குப் பதிலாக நிவாரணத்தைப் பற்றி யோசியுங்கள், பிறகு தடையற்றவராகி விடுவீர்கள். ஏன் வந்தது? என்றில்லாமல் இது கண்டிப்பாக வரும் என்ற நினைவில் இருந்தீர்கள் என்றால் சக்தி நிறைந்த சொரூபம் ஆகி விடுவீர்கள்.



    கேள்வி:

    மிகச்சிறிய தடையில் கேள்வி எழுவதற்கான காரணம் என்ன? சூழ்நிலை ஏன் பிரபாவத்தை ஏற்படுத்துகிறது?



    பதில் –

    கேள்வி எழுவதற்கான முக்கிய காரணம் - ஞானி ஆகியிருக்கிறீர்கள். ஆனால் ஞான சொரூபமாக ஆகவில்லை எனவே மிகச்சிறிய தடையில் வீணான எண்ணங்களின் க்யூ வரிசை உருவாகி விடுகிறது. மேலும் அந்த க்யூவை அகற்றுவதற்கு அதிக நேரம் எடுத்து விடுகிறது. நாம் நம்முடைய சக்திசாலியான உள் உணர்வு மூலமாக வாயுமண்டலத்தை பரிவர்த்தனை செய்பவர்கள் என்பதை எப்பொழுது மறந்து விடுகிறீர்களோ அப்பொழுது சூழ்நிலை உங்கள் மீது பிரபாவத்தை ஏற்படுத்துகிறது. நல்லது.



    வரதானம் :

    எப்பொழுதும் அனைத்து பிராப்திகளின் நினைவு மூலமாக யாசிக்கும் சம்ஸ்காரங்களிலிருந்து விடுபட்டு இருக்கக்கூடிய சம்பன்னம் மற்றும் நிரம்பியவர் ஆகுக.



    ஒரு நிரம்பிய நிலை வெளிமுகமானது, ஸ்தூல பொருட்களால், சாதனங்களினால் நிரம்பிய நிலை. ஆனால் இன்னொன்று மனதின் நிரம்பிய நிலை. யார் மனதால் நிரம்பி இருக்கிறாரோ அவரிடம் ஸ்தூல பொருட்கள், சாதனங்கள் இல்லா விட்டாலும் மனம் நிரம்பியிருக்கும் காரணத்தினால் அவர் தன்னிடம் குறையை அனுபவம் செய்ய மாட்டார். அனைத்தையும் அடைந்து விட்டோம் என்ற இந்தப் பாடலைத் தான் எப்பொழுதும் பாடிக் கொண்டே இருப்பார். அவரிடம் யாசிக்கும் சம்ஸ்காரம் அம்ச மாத்திரம் கூட இருக்காது.



    சுலோகன்:

    தூய்மை அந்த மாதிரியான அக்னி, அதில் அனைத்து தீயவைகளும் எரிந்து சாம்பலாகி விடுகின்றன.



    ***OM SHANTI***