BK Murli 7 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 7 July 2017 Tamil

    07.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! தந்தைக்குச் சமமாக தூய்மையற்ற தூய்மையாக்கும் தொழில் செய்யுங்கள், அப்போது தான் தந்தையின் மனதில் அமர்வீர்கள்.



    கேள்வி:

    எந்த குழந்தைகளிடத்தில் குணங்களின் தாரணை எளிதாக ஏற்படும்? அவர்களது அடையாளம் என்ன?



    பதில்:

    எந்த குழந்தைகள் உற்றார், உறவினர்கள், பழைய உலகிலிருந்து புத்தியோகத்தை நீக்கி பற்றற்றவர்களாக ஆகிறார்களோ அவர்களிடத்தில் அனைத்து குணங்களின் தாரணை எளிதாக ஏற்படும். அவர்கள் ஒருபோதும் யாருக்கும் நிந்தனை செய்து ஒருவருக்கொருவரின் மனதை கெடுக்க மாட்டார்கள். தந்தையை முழுமையிலும் முழுமையாக பின்பற்றுவார்கள். கருமையானவர்களை வெண்மையாக, கசப்பானவர்களை இனிமையானவர்களாக மற்றும் தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் ஆக்கும் சேவையில் நிரூபணம் கொடுப்பார்கள். சதா மகிழ்ச்சியாக இருப்பார்கள்.



    பாட்டு:

    யார் இந்த அனைத்து விளையாட்டுக்களையும் உருவாக்கியது ........



    ஓம்சாந்தி.

    நாம் இப்போது ஈஸ்வரிய குழந்தைகள் அல்லது குடும்பத்தினர்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதற்கு முன்பு நாம் அசுர குடும்பத்தினர்களாக இருந்தோம். இப்போது நமக்கு ஈஸ்வரிய வழி கிடைக்கிறது. ஈஸ்வரிய வழி என்ன கற்றுக் கொடுக்கிறது? தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குவது. இப்போது ஒவ்வொருவரும் தங்களது உள்ளத்தைக் கேளுங்கள் - பதீத பாவனனாகிய தந்தையின் குழந்தைகளாக நாம் ஆன பின்பு தந்தையின் தொழிலை நாம் செய்கிறோமா? இல்லையா? உலகில் தந்தையின் தொழில் தனியாகவும், குழந்தைகளின் தொழில் தனியாகவும் இருக்கும். பல வகையான தொழில்கள் உள்ளன. பல வகையான வழிமுறைகள் உள்ளன. தந்தையின் வழி தனிப்பட்டது எனில் குழந்தையின் வழி தனிப்பட்டது. இது ஈஸ்வரிய வழியாகும். நீங்கள் தந்தையை அறிவீர்கள். உலகத்தினர்கள் பாட மட்டுமே செய்கின்றனர், பதீத பாவனனாகிய தந்தை எப்படி வந்து பாவனமாக ஆக்குகின்றார்? என்பதை அறியவில்லை. பதீத பாவனனாகிய தந்தை நம்மை பாவனமாக்கி, பாவன சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு உங்களுடையது ஒரே ஒரு வழியாகும். உயர்ந்ததிலும் உயர்ந்த வழி தந்தை தான் வந்து கொடுக்கின்றார். யார் தன்னை ஈஸ்வரிய வம்சத்தினர் என்று நிச்சயம் செய்கிறார்களோ அவர்கள் தங்களது உள்ளத்தை கேட்டறிய வேண்டும். யாரிடத்தில் நிச்சயம் இல்லையோ அவர்களால் இந்த தொழில் நடைபெற முடியாது. யார் தந்தையினுடையவர்களாக ஆகவேயில்லையோ அவர்கள் இந்த தொழில் செய்ய முடியாது. நமது இலட்சியமே பாவனம் (தூய்மை) ஆவது என்பதை குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். சித்திரமும் எதிரில் வைத்திருக்கிறீர்கள். நரனிலிருந்து நாராயணன் மற்றும் நாரியிலிருந்து லெட்சுமி ஆவதாகும். லெட்சுமி நாராயணனின் வம்சத்தினர்களாக நாம் ஆக வேண்டும். நம்மை பாவனம் ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார், எனில் நாம் தந்தையின் கடமையை செய்கிறோமா? இல்லையா? என்று தன்னை சோதித்துப் பார்க்க வேண்டும். தந்தை என்ன செய்தார்? இந்த மருத்துவமனை அல்லது பல்கலைக்கழகம் திறந்தார். குழந்தைகளின் காரியமும் இதுவே. ஆரம்பத்தில் தந்தை வந்த பொழுது கட்டடம் சிறியதாக இருந்தது. மம்மாவின் அறையை விட சிறியதாக இருந்தது. அதில் வந்து தான் பரம்பிதா பரமாத்மா மருத்துவமனை அதாவது பல்கலைக்கழகத்தை திறந்தார். பிறகு சிறிது சிறிதாக கட்டடங்கள் உருவாகின. முதலில் ஒரு தெருவில் சிறிய கட்டடமாக இருந்தது. சிறிது சிறிதாக பெரிதானது. ஆக குழந்தைகளின் கடமையும் இதுவே. பிறகு கல்வியும் கொடுக்க வேண்டியிருக்கும். படித்தவர்கள் தான் பல்கலைக்கழகம் திறப்பார்கள் அல்லவா! ஆம் படிக்காதவர்களும் கூட திறக்க முடியும். திறந்தபின் யார் படிக்க மற்றும் பாடம் கற்பிக்கச் செல்கிறார்களோ அவர்களிடம் கொடுப்பர். நீங்கள் பிரின்சிபல் ஆகிவிடுங்கள், இதன் மூலம் பலருக்கு நன்மை ஏற்படும். பிராமணர்களாகிய உங்களது தொழிலே பதீதமானவர்களை பாவனமாக்குவது என்று தந்தையும் கூறுகின்றார். எந்த அசுத்தமான காரியமும் செய்யக் கூடாது. ஒருபோதும் விகாரத்தில் செல்லக் கூடாது. தூய்மையாக ஆகுங்கள் என்று மற்றவர்களுக்குக் கூறுவது மிகவும் நல்லது. தூய்மையானவர்கள் முன் அசுத்தமானவர்கள் தலை வணங்கியே தீருவர் என்று புரிய வைக்கப்படுகிறது. முதன் முதலில் பக்தி ஆரம்பமான போது சந்நியாசிகள் கிடையாது. அவர்கள் பின் நாட்களில் வந்தனர், அந்த காலத்தில் சந்நியாசிகள் யாரும் ஞானம் கொடுக்கவில்லை. பின் நாட்களில் தான் சர்வவியாபி என்று ஞானம் வெளிப்பட்டிருக்கிறது. நாம் ஈஸ்வரன் மற்றும் ஈஸ்வரனின் படைப்புகளைப் பற்றி அறியவில்லை என்று முன்பு கூறினர். அவர் தந்தை என்பதையும் புரிந்திருக்கவில்லை. பிறகு தந்தை எப்படி சர்வவியாபியாக இருக்க முடியும்! இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். சர்வவியாபி என்ற ஞானம் தான் பாரதத்தை ஏழையாக, முகத்தை திருப்பியும், நாஸ்திகர்களாகவும், செல்வமற்றவர்களாகவும் அஞ்ஞானிகளாக்கி விட்டது. இப்போது நீங்கள் (ஞான) செல்வந்தர்களாக ஆகிறீர்கள். பிறகு செல்வமற்றவர்களை (அஞ்ஞானிகளை) ஞானம் உள்ளவர்களாக ஆக்கக் கூடிய முயற்சி செய்யுங்கள். யார் வழிகாட்டியாக வருகிறார்களோ அவர்களை (ஞானத்தால்) செல்வந்தர்களாகி செல்வந்தனிடத்தில் தந்தையிடம் அழைத்து வருகின்றனர் அல்லவா! நமக்கு எல்லையற்ற செல்வந்தராகிய தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கிறது என்ற கவர்ச்சி ஏற்படுகிறது. எல்லையற்ற ஆஸ்தி என்றால் எல்லையற்ற சொர்க்கத்தின் இராஜ்யமாகும். எல்லைக்குட்பட்ட ஆஸ்தி நரகமாகும். நரகத்தில் துக்கம் இருக்கிறது. ஆகையால் இதை இராஜ்யம் என்று கூற முடியாது, பிச்சை எடுக்கின்றனர் என்று கூறலாம். இப்போது குழந்தைகள் தந்தையின் சேவை செய்ய வேண்டும். பதீதமானவர்களை பாவனம் ஆக்க வேண்டும். முழு நாளும் பதீதமானவர்களை பாவனமாக்குவது எப்படி? என்ற இதே தொழில் செய்ய வேண்டும். நான் சுயம் பாவனமாகியிருக்கிறேனா? என்று முதலில் கேட்டுக் கொள்ள வேண்டும். என்னிடத்தில் எந்த விகாரமும் கிடையாது தானே? எனக்கு பரம்பிதா பரமாத்மாவிடம் அந்த அளவிற்கு அன்பு இருக்கிறதா? ஒருவேளை அன்பு இருக்கிறது எனில் அதற்கான நிரூபணம் என்ன? நிரூபனம் என்றால் பதீதமானவர்களை பாவனம் ஆக்கும் தொழில் (சேவை) செய்வதாகும். இந்த தொழில் செய்யவில்லையெனில் தானும் பாவனம் ஆகவில்லை, மற்றவர்களையும் தூய்மை ஆக்கவும் முடியாது என்பதாகும். இந்த தொழில் செய்யவில்லையெனில் உயர்ந்த பதவியடைய முடியாது. கல்ப கல்பத்திற்கான விசயமாகி விடும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். ஈஸ்வரனை அடைந்தும் இந்த தொழிலை கற்றுக் கொள்ளவில்லை. யார் பாவனமாக்கும் தொழில் செய்கிறார்களோ அவர்களே தந்தையின் உள்ளத்தில் அமருவார்கள். மனிதர்களை சோழியிலிருந்து வைரம் போன்று தேவதைகளாக ஆக்கும் முயற்சி செய்ய வேண்டும். பாபா, மம்மாவும் இதே முயற்சியை செய்தனர். பாபாவும் சேவைக்காக செல்கின்றார், குழந்தைகளின் உடலில் அமர்ந்து பதீதமானவர்களை பாவனமாக்கும் வழி கூறுகின்றார். ஆக நானும் அவரைப் போன்று சேவை செய்கிறேனா? என்று தன்னைப் பார்க்க வேண்டும். ஒருவேளை செய்யவில்லையெனில் அவரது உள்ளத்தில் அமர முடியாது. சிலர் பற்றின் வசமாகி மாட்டிக் கொண்டிருப்பர். தந்தையின் மீது ஒரே நிலையான (ஏக்ரஸ்) அன்பு இருக்க வேண்டும் அல்லவா! மற்ற அனைவரின் மீதும் உள்ள பற்றிலிருந்து நீங்கியவர்களாக வேண்டும். பழைய உற்றார், உறவினர்கள், பழைய உலகின் மீதிருக்கும் பற்று நீங்கி விட வேண்டும். எப்போது அது நீங்குகிறதோ அப்போது குண தாரணை ஏற்படும். சில குழந்தைகள் முழு நாளும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் - ஒருவருக்கொருவரின் மன நிலையை கெடுக்கின்றனர், நிந்தனை செய்து கொண்டே இருக்கின்றனர். இன்னார் இப்படி இருக்கின்றனர், அவர் இப்படி இருக்கின்றார்! முதலில் தன்னைப் பாருங்கள் - நான் என்ன செய்கிறேன்? நான் தந்தையை பின்பற்றி கொண்டிருக்கிறேனா? பின்பற்றும் போது தான் குஷியின் அளவு அதிகரிக்கும். சேவை செய்பவர்கள் குஷியில் சதா மகிழ்ச்சியாக இருப்பர். பெயர் வெளிப்படும் அல்லவா! நீங்கள் வனவாசத்தில் இருக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். 8 கெஜமுடைய உடை அணிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நேரமும் வரும். உடுத்திக் கொள்ள கிழிந்த ஆடைகள் கிடைப்பதும் கடினமாகி விடும், ஆகையால் இவை அனைத்தி-ருந்தும் பற்றுதலை நீக்கி விட வேண்டும். அசுர சம்மபந்தங்கள் அனைத்தி-ருந்தும் புத்தி யோகத்தை நீக்கி விட வேண்டும். தனது முன்னேறும் கலை இருப்பதற்கான நிரூபணமும் வேண்டும் அல்லவா! யார் வழிகாட்டியாகி வருகிறார்களோ அவர்கள் நிரூபணம் கொடுக்கின்றனர். சேவைக்கு தகுதியானவர்களாக ஆக வேண்டும். தீங்கு செய்வது, உப்பு நீராகி தங்களுக்குள் சண்டையிட்டு கொள்வது போன்று இருக்கக் கூடாது. எதிரான சேவை செய்பவர்களின் பதவி குறைந்துது விடும். மனிதன் மனிதனுக்குள் எவ்வளவு உப்பு நீர் போன்று இருக்கின்றனர் என்பதை கேட்கவே கேட்காதீர்கள். அவர்களை மிக இனிமையானவர்களாக ஆக்குவது தான் உங்களது தொழிலாகும். இருப்பினும் உப்பு நீராகவே இருக்கின்றனர் எனில் விதி என்று கூறுகிறோம். இதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் நாம் அன்பாக உப்பையும் இனிப்பாக மாற்ற வேண்டும். சூரியனிடம் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை பாருங்கள்! உப்பு நீராகி கடல் நீரை ஆவியாக்கி இனிப்பாக ஆக்கி விடுகிறது. இதுவும் அதன் சேவை அல்லவா! அதனால் தான் இந்திர தேவதை என்று கூறுகின்றனர். மழை பொழிகின்றார். ஆக குழந்தைகளிடத்திலும் அந்த அளவிற்கு சக்தி இருக்க வேண்டும். மேலும் உப்பு நீராக ஆக்கி விடக் கூடாது. சிலர் உப்பு நீராகவும் ஆக்கி விடுகின்றனர். அவர்களது முகமே வெளிப்படுத்தி விடுகிறது. உப்பு நீராக இருப்பவரது முகம் கருமையாகவும், இனிமையானவர்களின் முகம் வெள்ளையாகவும் இருக்கும். நீங்கள் சுயம் வெள்ளையாகி மற்றவர்களையும் கருமையிலிருந்து வெண்மையாக்க வேண்டும். தந்தை எவ்வளவு தூரத்தி-ருந்து வந்து இந்த சேவையை கற்றுக் கொடுக்கின்றார். தந்தையின் சேவையே பதீதமானவர்களை பாவனம் ஆக்குவது தான். பலரை பாவனம் ஆக்கும் போது தந்தை பரிசு கொடுப்பார். நான் எத்தனை பேரை தூய்மையாக்குகிறேன்? என்று மனதைக் கேளுங்கள். ஒருவேளை அவ்வாறு செய்யவில்லையெனில் அவசியம் ஏதோ விகர்மம் செய்கிறீர்கள். தந்தையின் வழிப்படி நடக்ககாததால் தான் விகர்மங்களை செய்கிறீர்கள். பிறகு பாவனம் ஆக்குபவரின் முன் சுமை தூக்க செய்ய வேண்டியிருக்கும். யாரிடத்தில் சக்தியிருக்கிறதோ அவர்கள் பாபா எங்களை எங்கு வேண்டுமென்றாலும் அனுப்புங்கள் என்று கூறுவர். பல மருத்துவமனைகளை திறக்க முடியும், ஆனால் நல்ல மருத்துவர்களும் தேவை அல்லவா! தவறான மருந்துக்களை கொடுத்து இறக்க வைக்கும் மருத்துவர்களும் சிலர் இருக்கின்றனர். இங்கு இது ஈஸ்வரிய சபையாகும். அனைவரின் கணக்கும் தந்தையிடம் இருக்கிறது. அவர் அந்தர்யாமி அல்லவா! அனைத்து குழந்தைகளுக்குள் இருப்பதை அறிவார். இவர் (பிரம்மா) வெளிப்படையாக இருப்பவர். இவரும் மற்றவர்களை பாவனம் ஆக்கக் கூடிய முயற்சி செய்து கொண்டிருக்கின்றார். யார் பாவனம் ஆகவில்லையோ அவர்கள் தண்டனை அடைந்து அவரவர்களது பிரிவுகளுக்கு (செக்சன்) சென்று விடுவர். அனைவரும் அவரவர்களது பாகம் நடித்தே ஆக வேண்டும். வரிசைக்கிரமமாக வர வேண்டும். முன்னால், (ஆரம்பத்திலேயே) அல்லது பிற்காலத்தில் வருவர் அல்லவா! இடையில் யாரும் வர முடியாது. மரம் எப்படிப்பட்டதோ அப்படி தான் பலம் கிடைக்கும், இதில் எந்த வித்தியாசமும் இருக்க முடியாது. இப்போது மரம் பரந்திருக்கிறது (சிதறிபோய்). சிலர் மற்ற தர்மங்களுக்கு மாற்றலாகி சென்று விட்டனர். ஒவ்வொருவருடைய சார்ந்த தேசத்தின் மக்களின் எண்ணிக்கையை புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொருவரின் சடங்கு, வழக்கம் தனித்தனியானது. மூலவதனத்தில் இருந்தோம், வரிசைக்கிரமமான முயற்சியின் படி கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு அங்கு சென்று அனைவரும் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலே நிராகார ஆத்மாக்களின் மரம் இருக்கிறது. எவ்வளவு இடம் தேவைப்பட்டிருக்கும்! மிகவும் குறைவாக இருக்கும். எவ்வாறு ஆகாய தத்துவம் மிகவும் பரந்திருக்கிறது! மனிதர்கள் எவ்வளவு குறைந்த இடத்தில் இருக்கின்றனர்! இவ்வளவு வரை மனிதர்கள் இருக்கின்றனர் என்று புரிந்து கொள்ள முடிகிறது. கடலில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். பூமியில் தான் மனிதர்கள் இருக்கின்றனர். கடலின் இறுதியை அடைய முடியாது. நடக்காத காரியமாகும். மேலே செல்வதற்கு முயற்சி செய்கின்றனர். ஆனால் எல்லையற்றதாக இருக்கிறது அல்லவா! வந்து பதீதமானவர்களை பாவனம் ஆக்குங்கள் என்று தந்தையை அழைக்கின்றனர். நாம் அங்கு சென்று ஆகாய தத்துவத்தின் இறுதியை அடைவோம் என்பது கிடையாது. ஆத்மாக்களாகிய நாம் மேலே இருக்கிறோம். இருப்பினும் குறைந்த இடத்தை தான் எடுத்துக் கொள்கிறோம். ஆகாய தத்துவம் மிகவும் பெரியதாகும். ஆகாய தத்துவம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பார்க்கலாம் என்று ஈஸ்வரன் அங்கிருந்து கொண்டு முயற்சிப்பார் என்பது கிடையாது. அவரது புத்தியில் ஒருபோதும் இந்த எண்ணம் வரவே முடியாது. நடிப்பதற்கான விசயம் தான் அவரது புத்தியில் இருக்கும். மகா தத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இருக்காது. இங்கிருந்து சென்றதும் அவரது இடத்தில் அமர்ந்து விடுவார். அங்கு எந்த முயற்சியும் செய்வது கிடையாது. நான் இந்த முயற்சி ஒருபோதும் செய்வது கிடையாது என்று பாபா கூறுகின்றார். நான் எல்லையற்றவனாக இருக்கிறேன். சரி, முடிவு அடைவதனால் (அறிவதால்) என்ன இலாபம் இருக்கிறது? எந்த நன்மையும் கிடையாது. பதீதமானவர்களை பாவனம் ஆக்குவதில் தான் நன்மை இருக்கிறது. ஆத்மாக்கள் நிர்வாணதாமத்திலிருந்து வந்து இங்கு நடிப்பு நடிக்கிறது. தந்தையும் வந்து நடிப்பு நடிக்கின்றார். அது சாந்திதாமம் ஆகும். இதை பார்க்க வேண்டும், அதை பார்க்க வேண்டும் போன்ற எந்த சங்கல்பமும் அங்கு வராது. இங்கு மனிதர்கள் என்ன என்ன செய்கின்றனர்? எவ்வளவு முயற்சி செய்து (எல்லையின்) முடிவை பார்க்க செல்கின்றனர்! நேரம் குறைவாக இருக்கிறது என்பது குழந்தைகளுக்குத் தெரியும். யுத்தம் ஏற்பட்டு விட்டால் பிறகு அவர்களது ஓசைகள் அனைத்தும் அடங்கி விடும். மேலிருந்து வருவது நின்று விடும். இவ்வாறு செல்வம் அனைத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர். நன்மை எதுவும் கிடையாது. யாராவது செல்கின்றனர் என்று வைத்துக்கொள்ளுங்கள், வந்து என்ன வேண்டுமென்றாலும் கூறட்டும், இதில் நேரம் வீணாகிறது, செல்வம் வீணாகிறது, சக்தி வீணாகிறது. குழந்தைகளாகிய உங்களைத் தவிர அனைவருக்கும் இதே நிலை தான் இருக்கிறது. நாம் சென்று தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும், தந்தையிடமிருந்து ஆஸ்தியடைய வேண்டும் என்று முயற்சி செய்த கொண்டிருக்கிறீர்கள். நாடகத்தில் தந்தைக்கு மிக உயர்ந்த பாகம் இருக்கிறது, புது உலகை ஸ்தாபனை செய்து அதற்கு தகுதியானவர்களை உருவாக்குவது. இப்போது உலகம் கடைசி நேரத்திற்கு வந்து விட்டது. எவ்வளவு தான் மனிதர்களை தலை உடைத்துக் கொள்ளட்டும்! நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர். எவரெஸ்டுக்கு சென்று நிற்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள், நின்றாலும் என்ன நன்மை இருக்கிறது? முக்தி, ஜீவன்முக்தி கிடைப்பது கிடையாது. மற்றபடி உலகில் துக்கமோ துக்கம் தான் இருக்கிறது. உங்களது புத்தி இப்போது ஞானம் நிறைந்ததாக (செல்வம்) ஆகிவிட்டது. மற்றவர்களை தனக்குச் சமமாக ஆக்குவதற்கான முயற்சி நீங்கள் செய்கிறீர்கள். பள்ளியில் ஆசிரியர், பிரின்சிபல் போன்றவர்களும் இதை புரிய வையுங்கள். எல்லையற்ற சரித்திர, பூகோளத்தை கற்றுக் கொடுப்பது கிடையாது. சத்யுகத்திலிருந்து, திரேதா, துவாபர், கலியுகமாக எப்படி ஆகிறது? இது எல்லையற்ற சரித்திர, பூகோளம். இதை அறிந்து கொள்வதனால் நீங்கள் சக்கரவர்த்திகளாக ஆவீர்கள். நாம் இந்த உலகின் சரித்திர பூகோளத்தை புரிய வைக்கிறோம். சிருஷ்டிச்சக்கரம் எப்படி சுழல்கிறது? வாருங்கள், உங்களுங்கு நாம் பரம்பிதா பரமாத்மாவின் அறிமுகம் கொடுக்கிறோம், அவர் நிராகாரமானவர் என்று கூறப்படுகின்றார், அவரது சரித்திரத்தை நாம் கூறுகிறோம். பிரம்ம யோகிகளாக இருப்பவர்கள் பிரம்மத்தின் ஞானத்தை மட்டுமே கொடுப்பர். பிறகு பிரம்மம் எங்கும் வியாபித்திருக்கிறது என்று கூறுவர். பரமாத்மா ஞானம் நிறைந்தவர் ஆவார். ஞானக்கடல் ஆவார். தத்துவத்தை ஞானக்கடல் என்று கூற முடியாது. தந்தை குழந்தைகளையும் தனக்குச் சமமாக ஞானக் கடலாக ஆக்குகின்றார். அந்த தத்துவம் தனக்குச் சமமாக எப்படி ஆக்க முடியும்? நல்லது.



    இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) முன்னேறும் கலைக்கான நிரூபணம் கொடுக்க வேண்டும். அனைத்திலிருந்தும் பற்றுதலை நீக்கி சேவைக்கு தகுதியானவர்களாக ஆக வேண்டும். தன்னைத் தான் சோதித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களை நிந்தனை செய்து ஒருவருக்கொருவரின் மனதை கெடுக்கக் கூடாது. எந்த விகர்மமும் செய்யக் கூடாது.



    2) தந்தைக்குச் சமம் கருணையுள்ளம் உடையவர் ஆக வேண்டும். சோழியிலிருந்து வைரம் ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். உப்பு நீரை இனியதாக ஆக்கும் சேவை செய்ய வேண்டும்.



    வரதானம்:

    மாஸ்டர் வள்ளல் ஆகி குஷியின் பொக்கிஷத்தை பகிர்ந்து கொடுக்கக் கூடிய அனைவரின் ஆசிர்வாதத்திற்கும் பாத்திரமானவர் ஆகுக.



    நிகழ்காலத்தில் அனைவருக்கும் அழிவற்ற குஷியின் பொக்கிஷம் அவசியமானதாக இருக்கிறது. அனைவரும் குஷியை யாசிப்பவர்களாக இருக்கின்றனர், நீங்கள் வள்ளலின் குழந்தைகளாக இருக்கிறீர்கள். வள்ளலின் குழந்தை களின் காரியம் கொடுப்பதாகும். யாரெல்லாம் சம்மந்தம், தொடர்பில் வருகிறார்களோ அவர்களுக்கு குஷி கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். யாரும் வெறும் கையுடன் சென்று விடக் கூடாது, அந்த அளவிற்கு நிறைந்து இருங்கள். மாஸ்டர் வள்ளல் ஆகி ஏதாவது கொடுத்துக் கொண்டே இருக்கிறேனா? அல்லது தனக்குள்ளேயே குஷியாக இருக்கிறேனா? என்பதை ஒவ்வொரு நேரத்திலும் பாருங்கள். எந்த அளவிற்கு மற்றவர்களுக்கு கொடுப்பீர்களோ அந்த அளவிற்கு அனைவரின் ஆசிர்வாதத்திற்கு பாத்திரமானவர்களாக ஆவீர்கள், மேலும் இந்த ஆசிர்வாதங்கள் எளிய முயற்சியாளர்களாக ஆக்கி விடும்.



    சுலோகன்:

    சங்கமத்தின் பிராப்திகளை (நற்பலன்களை) நினைவில் வைத்துக் கொண்டால் துக்கம் அல்லது குழப்பத்தின் விசயங்கள் நினைவிற்கு வராது.



    ***OM SHANTI***