BK Murli 19 August 2016 In Tamil

BK Murli 19 August 2016 In Tamil

19.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்

இனிமையான குழந்தைகளே! நினைவில் இருப்பதன் மூலம் நல்ல திசை (சத்குருவின் பார்வை) அமர்கிறது இப்போது உங்களுக்கு குரு திசை நடைபெறுகிறது, ஆகையால் நீங்கள் முன்னேறும் கலையில் இருக்கிறீர்கள்.

கேள்வி:

நினைவில் முழு கவனம் செலுத்தவில்லையெனில் அதன் பலன் என்னவாக இருக்கும்? நிரந்தரமாக நினைவில் இருப்பதற்கான யுக்தி என்ன?

பதில்:

நினைவின் மீது முழு கவனம் செலுத்தவில்லையெனில் நாளடைவில் மாயை பிரவேசம் ஆகிவிடும், கீழே விழுந்து விடுவர். 2) தேக அபிமானமுடையவர்களாகி பல தவறுகள் செய்து கொண்டே இருப்பர். மாயை தவறான காரியங்களைச் செய்வித்துக் கொண்டே இருக்கும். தூய்மை இழக்கச் செய்துவிடும். நிரந்தரமாக நினைவில் இருப்பதற்கு வாயில் கூழாங்கல்லைப் (வாய்ப்பூட்டு) போட்டுக் கொள்ளுங்கள், கோபப்படாதீர்கள், தேகம் உட்பட அனைத்தையும் மறந்து, நான் ஆத்மா, பரமாத்மாவின் குழந்தை என்ற பயிற்சி செய்யுங்கள். யோக பலத்தினால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

பாட்டு:

ஓம் நமச் சிவாய .......

ஓம்சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் தங்களது ஆன்மீகத் தந்தையாகிய சிவபாபா வின் மகிமை கேட்டீர்கள். எப்போது பாவம் அதிகரிக்கிறதோ அதாவது மனிதர்கள் பாவ ஆத்மாக்களாக ஆகிவிடுகிறார்களோ அப்போது தான் அனைவரையும் தூய்மையாக்குகின்ற தந்தை வருகின்றார், வந்து தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குகிறார். அந்த எல்லையற்ற தந்தைக்குத் தான் மகிமை இருக்கிறது, அவர் விருட்சபதி என்றும் அழைக்கப்படுகின்றார். இந்த நேரத்தில் எல்லையற்ற தந்தையின் மூலம் எல்லையற்ற திசை, குரு திசை உங்களுக்கு (நன்மை) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுவாக மற்றும் குறிப்பாக இரண்டு வார்த்தைகள் இருக்கும் அல்லவா! இதற்கான பொருளும் இங்கு தான் நிரூபணம் ஆகிறிது. குரு திசையின் மூலம் குறிப்பாக பாரதம் ஜீவன்முக்தி உடையதாக ஆகிவிடுகிறது, அதாவது தனது சுய இராஜ்ய பதவியை அடைகிறது, ஏனெனில் எந்த சத்திய தந்தையை சத்தியமானவர் என்று கூறுகிறார்களோ அவர் வந்து நம்மை நரனிலிருந்து நாராயணனாக ஆக்குகின்றார். மற்றவர்கள் அனைவரும் வரிசைக் கிரமமாக அவரவர்களது தர்மத்திற்கான பிரிவில் (செக்சன்) சென்று அமருவார்கள் மற்றும் வருவதும் வரிசைக் கிரமமாக வருவார்கள். கலியுகத்தின் கடைசி வரை வந்து கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அவரவது தர்மத்தில் அவரவர்களுக்கென்று பாகம் கிடைத்திருக்கிறது. இராஜ்யத்தில் இராஜாவிலிருந்து பிரஜை வரைக்கும் அனைவருக்கும் அவரவர்களுக்கான பாகம் கிடைத்திருக்கிறது. நாடகம் என்றாலே இராஜாவிலிருந்து பிரஜை வரைக்கும் ஆகும். அனைவரும் அவரவர்களது பாகம் நடிக்க வேண்டும். இப்போது நமக்கு குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். ஒரே ஒரு நாள் மட்டுமே அமர்கிறது என்பது கிடையாது. உங்களுக்கு குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் முன்னேறும் கலையில் இருக்கிறீர்கள். எந்த அளவு நினைவு செய்வீர்களோ அந்த அளவு முன்னேற்றம் ஆகும். நினைக்க மறந்து விடுவதால் மாயையின் தடைகள் வருகின்றன. நினைவின் மூலம் நல்ல திசை வந்து விடுகிறது. நல்ல முறையில் நினைவு செய்யவில்லையெனில் அவசியம் கீழே விழுவார்கள். பிறகு அவர்கள் மூலம் ஏதாவது தவறுகள் நிகழும். நாடகப்படி அனைத்து தர்மத்தினர்களும் ஒருவருக்குப் பின்னால் நடிப்பு நடிப்பதற்காக வருகின்றனர் என்பதை பாபா புரிய வைத்திருக்கின்றார். சொர்கத்தின் திசை அதாவது ஜீவன்முக்தி அடைவதற்கான குரு பார்வை இப்போது நம் மீது ஏற்பட்டிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இந்த நாடகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? என்பதையும் விரிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த சிருஷ்டிச் சக்கரம் குறிப்பாக பாரதத்திற்காகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. தந்தையும் பாரதத்தில் தான் வருகின்றார். ஆச்சரியத்துடன் கேட்பர், கூறுவர் பிறகு சென்று விடுவர் ........ என்றும் பாடப்பட்டிருக்கிறது. நாளடைவில் மாயை பிரவேசம் ஆகின்ற காரணத்தினால் கீழே விழுந்து விடுவர். யோகா மீது முழு கவனம் கொடுப்பது கிடையாது, பிறகு தந்தை வந்து சஞ்சீவினி மூலிகை கொடுக்கின்றார், அதாவது மயக்கத்தைப் போக்கக் கூடிய மூலிகையாகும். நீங்கள் தான் ஹனுமானாகவும் இருக்கிறீர்கள். இராவணனை விரட்ட இந்த மூலிகையை முகரச் செய்வதற்காகக் கொடுக்கிறேன் என்ற தந்தை புரிய வைத்திருக்கின்றார். தந்தை உங்களுக்கு அனைத்து சத்தியமான விசயங்களையும் கூறுகின்றார். சத்தியமானவர் ஒரே ஒரு தந்தை ஆவார், அவர் வந்து உங்களுக்கு சத்திய நாராயணன் கதை கூறி சத்திய யுகத்தை ஸ்தாபனை செய்கின்றார். இவர் சத்தியமானவர் என்று அழைக்கப் படுகின்றார், சத்தியத்தை கூறக் கூடியவர். நீங்கள் சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்வீர்களா? என்று உங்களிடம் கேட்கின்றனர். ஆம், நாங்கள் ஏன் சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்ளமாட்டோமா என்ன ! இவை அனைத்தும் பக்தி மார்கத்தின் சாஸ்திரங்கள் ஆகும் என்பதை அறிவீர்கள். இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறுங்கள். ஞானம் மற்றும் பக்தி இரண்டு விசயங்களாகும். ஞானம் கிடைத்து விடும் போது பிறகு பக்திக்கு என்ன அவசியம் இருக்கிறது? பக்தி என்றால் கீழே இறங்கும் கலையாகும். ஞானம் என்றால் முன்னேறும் கலையாகும். இந்த நேரத்தில் பக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது நமக்கு ஞானம் கிடைத்திருக்கிறது, இதன் மூலம் சத்கதி கிடைக்கிறது. பக்தர்களை பாதுகாக்கக் கூடியவர் ஒரே ஒரு பகவான் ஆவார். பாதுகாப்பது என்றால் எதிரியிடமிருந்து பாதுகாப்பதாகும் அல்லவா! நான் வந்து உங்களை இராவணனிடமிருந்து உங்களை பாதுகாக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். இராவணனிடமிருந்து எப்படியெல்லாம் பாதுகாப்பு கிடைக்கிறது! என்பதை பார்க்கிறீர்கள் அல்லவா! இந்த இராவணனின் மீது வெற்றி அடைய வேண்டும். இனிமையான குழந்தைகளே! இந்த இராவணன் உங்களை தமோபிரதானமாக ஆக்கி விட்டது என்று தந்தை புரிய வைக்கின்றார். சத்யுகமானது சதோ பிரதானம், சொர்க்கம் என்று கூறப்படுகிறது. பிறகு கலைகள் குறைய ஆரம்பித்து விடுகிறது. கடைசியில் எப்போது முற்றிலும் தேக அபிமானத்தில் வந்து விடுடூர்களோ அப்போது தூய்மையை இழந்து விடுகிறீர்கள். புது கட்டடம் உருவாக்கப்படுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு அதாவது 6 மாதத்திற்குப் பிறகு சிறிது கலைகள் குறைந்து விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கட்டிடத்திற்கு சுண்ணாம்பு பூசப்படுகிறது. கலைகள் குறைந்து விடுகிறது அல்லவா! புதியதிலிருந்து பழையது, பழையதிலிருந்து பிறகு புதியதாக ஆகிவிடுகிறது, இவ்வாறு ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு விசயத்திற்கும் நடைபெற்று வருகிறது. இந்த கட்டடம் 100, 150 ஆண்டு காலம் வரை இருக்கும் என்று கூறுவர். புது உலகம் தான் சத்யுகம் என்று கூறப்படுகிறது என்று தந்தை புரிய வைக்கின்றார். பிறகு திரேதாவை 25 சதவிகிதம் குறைந்து விட்டது என்று கூறலாம். ஏனெனில் சிறிது பழையதாக ஆகிவிடுகிறது. அது சந்திரவம்சமாகும். அதற்கு சத்ரியனின் அடையாளம் கொடுக்கின்றனர், ஏனெனில் புது உலகிற்கு தகுதியானவர்களாக ஆகவில்லை, அதனால் தான் குறைந்த பதவி ஏற்பட்டு விட்டது. கிருஷ்ணபுரிக்குச் செல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். இராமபுரிக்கு செல்ல வேண்டும் என்று ஒருபோதும் கூறுவது கிடையாது. அனைவரும் கிருஷ்ணபுரி தான் கூறுகின்றனர். பிருந்தாவனம் செல்லுங்கள், இராதா கோவிந்தன் என்று பஜனை செய்யுங்கள் ........ என்றும் பாடுகின்றனர் அல்லவா! பிருந்தாவனத்திற்கான விசயமாகும். அயோத்தியாவிற்காக கூறுப்படுவது கிடையாது. அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ணர் மீது மிகுந்த அன்பு இருக்கிறது. கிருஷ்ணரை மிக அன்பாக நினைவு செய்கின்றனர். கிருஷ்ணரைப் பார்த்ததும் இவரைப் போன்று கணவர் கிடைக்க வேண்டும், இவர் போன்ற குழந்தை வேண்டும், இவர் போன்ற சகோதரன் வேண்டும் என்று கூறுகின்றனர். புத்திசாலி சகோதர சகோதரிகள் கிருஷ்ணரின் மூர்த்தியை எதிரில் வைத்ததும் இவர் போன்று குழந்தை வேண்டும் என்று நினைப்பர். கிருஷ்ணரின் அன்பில் பலர் இருக்கின்றனர் அல்லவா! அனைவரும் கிருஷ்ணபுரியை விரும்புகின்றனர். இப்போது கம்சபுரியாக, இராவணபுரியாக இருக்கிறது. கிருஷ்ணபுரிக்கு மிகுந்த மகத்துவம் இருக்கிறது. கிருஷ்ணரை அனைவரும் நினைவு செய்கின்றனர். அதனால் தான் தந்தை கூறுகின்றார் - நீங்கள் அதிக காலம் நினைவு செய்து வந்தீர்கள். இப்போது கிருஷ்ணபுரி செல்வதற்கான முயற்சி செய்யுங்கள், அவரது வம்சத்தில் வந்து விடுங்கள். சூரியவம்சத்தில் 8 வம்சம் இருக்கிறது எனில் அந்த அளவிற்கு முயற்சி செய்யுங்கள், அதாவது இராஜ்யத்தில் வந்து இராஜகுமாரருடன் ஊஞ்சல் ஆட வேண்டும். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா! தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! எவ்வளவு முடியுமோ மன்மனாபவ, இந்த நிலையில் இருங்கள். நினைவில் இல்லாததால் தான் கீழே விழுந்து விடுகிறீர்கள். ஞானம் ஒருபோதும் கீழே விழு வைப்பது கிடையாது. நினைவில் இருப்பது கிடையாது, அதனால் தான் கீழே விழுந்து விடுகிறீர்கள். இதைப் பற்றி தான் அல்லா, அலாவுதீன், ஹாத்மதாயி போன்ற நாடகங்களையும் உருவாக்கியிருக்கின்றனர். நினைவில் இருப்பதற்காகவே வாயில் கூழாங்கற்களை போட்டுக் கொள்கின்றனர். யாருக்காவது கோபம் வந்து விட்டால் பேசி விடுகின்றார், அதனால் தான் வாயில் ஏதாவது போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுவர். பேசவேயில்லை எனில் கோபம் வராது. ஒருபோதும், யார் மீதும் கோபப்படக் கூடாது என்று தந்தை கூறுகின்றார். ஆனால் இந்த விசயங்களை முழுமையாக புரிந்து கொள்ளாததால் சாஸ்திரங்களில் வேறு விதமாக எழுதி விட்டனர். தந்தை யதார்த்தமாக அமர்ந்து புரிய வைக்கின்றார். தந்தை எப்போது வருகின்றாரோ அப்போது தான் வந்து புரிய வைக்க முடியும். யார் வாழ்ந்திருந்து சென்றிருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் மகிமை பாடப்படுகிறது. தாகூர், ஜான்சி ராணி போன்றவர்கள் வாழ்ந்து சென்றிருப்பதால் அதை நாடகமாக உருவாக்குகின்றனர். நல்லது, சிவனும் இருந்து சென்றிருப்பதால் தான் சிவஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது அல்லவா! ஆனால் சிவன் எப்போது வந்தார்? வந்து என்ன செய்தார்? என்பது தெரியாது. அவர் முழு சிருஷ்டிக்கும் தந்தை ஆவார். அவர் வந்து அனைவருக்கும் அவசியம் சத்கதி கொடுத்திருக்க வேண்டும். இஸ்லாமி, பௌத்தர் போன்று யாரெல்லாம் தர்மத்தை ஸ்தாபனை செய்து விட்டு சென்றிருக்கிறார்களோ அவர்களுக்கு ஜெயந்தி கொண்டாடுகின்றனர். அனைவருக்கும் தேதி, நாள் இருக்கிறது, இவரைப் (சிவபாபா) பற்றி யாருக்கும் தெரியாது. கிறிஸ்து பிறப்பதற்கு இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது என்று கூறவும் செய்கின்றனர். சுவஸ்திகா வரைகின்ற போது அதில் முழு 4 பாகமாக செய்கின்றனர். 4 யுகங்களாகும். ஆயுள் குறைவாகவோ, அதிகமாக இருக்க முடியாது. ஜெகந்நாத் புரியில் அண்டா நிறைய சாதம் படைக்கின்றனர், அதை 4 பாகங்களாக பிரித்து விடுகின்றனர். பக்தி மார்க்கத்தில் இவ்வாறு ஒழுங்கு முறை இல்லாமல் ஆக்கி விட்டனர் என்று தந்தை கூறுகின்றார். தேக சகிதமாக இவை அனைத்தையும் மறந்து விடுங்கள் என்று இப்போது தந்தை கூறுகின்றார். நான் ஆத்மா, பரம்பிதா பரமாத்மாவின் குழந்தை என்ற பயிற்சி செய்யுங்கள். பாபா சொர்க்கத்தை படைப்பவர் எனில் அவசியம் அவர் நம்மை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்திருக்கக் கூடும். நரகத்திற்கு அனுப்பி வைத்திருக்கமாட்டார். தந்தை யாரையும் நரகத்திற்கு அனுப்பி வைப்பது கிடையாது. முதன் முதலில் அனைவரும் சுகம் அனுபவிக்கின்றனர். முதலில் சுகம், பிறகு துக்கம். தந்தை அனைவரின் துக்கத்தைப் போக்கி சுகம் கொடுப்பவர் அல்லவா! ஆத்மா முதலில் சுகம், பிறகு துக்கத்தை அனுபவிக்கிறது. நாம் முதலில் சதோ பிரதானமாக, பிறகு சதோ, ரஜோ, தமோவில் வருகிறோம் என்று விவேகம் கூறுகிறது. அயல்நாட்டினர் புத்திசாலிகள் என்று மனிதர்களும் புரிந்திருக்கின்றனர். அங்கு அணு ஆயுதங்களை அந்த அளவிற்கு தயாரிக்கின்றனர், அதாவது உடனேயே அழிந்து விடுவர். எவ்வாறு இன்றைய நாட்களில் பிணத்தை கரண்ட் மூலம் உடனேயே எரித்து விடுகின்றனரோ, அவ்வாறு அணு குண்டு போடுவதன் மூலம் நெருப்பு பற்றிக் கொள்கிறது, மனிதர்கள் உடனேயே அழிந்து விடுவர். காடு தீ பற்றி எரிய வேண்டும். அந்த அளவிற்கு புயல் வருகிறது அதாவது ஊர் முழுவதும் அழிந்து விடுகிறது. பிறகு பாதுகாப்பதற்கான எந்த ஏற்பாடும் அந்த நேரத்தில் செய்ய முடியாது. விநாசம் ஏற்பட்டே ஆக வேண்டும். பழைய உலகம் அழிய வேண்டும். கீதையிலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பியர்கள் யாருக்கும் தெரியாத அளவிற்கு அணுகுண்டுகளை ஏவுவார்கள். கல்பத்திற்கு முன்பும் விநாசம் ஏற்பட்டிருந்தது, இப்போதும் ஆகப் போகிறது என்பதை குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள். நீங்களும் முந்தைய கல்பத்தைப் போன்று படித்துக் கொண்டிருக்கிறீர்கள். சிறிது சிறிதாக மரம் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். வளர்ச்சி அடைந்து அடைந்து பிறகு ஸ்தாபனை ஆகிவிடும். மாயையின் புயல்கள் மிகவும் நல்ல நல்ல குழந்தைகளையும் கீழே தள்ளி விடுகிறது. யோகாவில் முழுமையாக இல்லையெனில் மாயை தடைகளை உருவாக்குகிறது. தந்தையின் குழந்தையாக ஆகி, தூய்மைக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பிறகு விகாரத்தில் விழுந்து விட்டால் பெயர் கெடுத்து விடுவீர்கள். பிறகு மிகவும் ஜோராக அடி விழுகிறது. இந்த காமத்திடம் ஒருபோதும் அடி வாங்கி விடக் கூடாது என்று தந்தை கூறுகின்றார். இங்கு ரத்த நதி பாயும் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். சத்யுகத்தில் பாலாறு ஓடும். அது புது உலகம், இது பழைய உலகமாகும். கலியுகத்தில் பாருங்கள் என்ன இருக்கிறது! புது உலகின் மேன்மையை (செழிப்பை) பாருங்கள்! இங்கு இருப்பது அதற்கு ஈடாகாது. குழந்தைகள் சாட்சாத்காரத்தின் போது சென்று பார்த்து விட்டு வருகின்றனர். சூட்சுமவதனத்தில் சூபீரஸ் (அமுதம்) குடித்தனர், இது செய்தனர், அது செய்தனர் போன்ற சாட்சாத்காரம் ஏற்பட்டது. நாம் மூலவதனத்திற்குச் செல்கிறோம் என்று கூறுகின்றனர். பாபா வைகுண்டத்திற்கு அனுப்பி வைத்து விடுவார். இது போன்ற ஆரம்ப கால சாட்சாத் காரமும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. இதனால் எந்த லாபமும் கிடையாது. பல குழந்தைகள் சூட்சும வதனத்திற்கு சென்றவர், சூபீரஸ் (அமுதம்) போன்றவைகளை குடித்தனர், இன்று கிடையாது. நல்ல நல்ல முதல்தரமான குழந்தைகள் காணாமல் போய் விட்டனர். அதிகமாக காட்சி பார்த்தவர்களும் சென்று திருமணம் செய்து கொண்டனர். மாயை எப்படியெல்லாம் இருக்கிறது - ஆச்சரியமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் எப்படி தலை கீழாக ஆகிவிடுகிறது! பலர் நல்ல நல்ல பாகங்கள் நடித்திருக்கின்றனர். கஷ்டமான நேரத்தில் அதிக உதவிகளும் செய்திருக்கின்றனர். இருப்பினும் இன்று கிடையாது. அதனால் தான் தந்தை கூறுகின்றார் - மாயையே! நீ மிகவும் வலிமையுடையதாக இருக்கிறாய். மாயையிடம் நீங்கள் யுத்தம் செய்கிறீர்கள். இது தான் யோக பலத்தின் யுத்தம் என்ற கூறப்படுகிறது. யோக பலத்தின் மூலம் என்ன பலன் கிடைக்கும்? என்பது யாருக்கும் தெரியாது. பாரதத்தின் பழமையான யோகா என்று மட்டுமே கூறுகின்றனர். இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு யோகா பற்றி புரிய வைக்கப்படுகிறது - பழமையான இராஜயோகா என்று கூறப்பட்டிருக்கிறது. தத்துவ ஞானிகள் யாராக இருந்தாலும் யாரிடத்திலும் ஆன்மீக ஞானம் கிடையாது. ஆன்மீகத் தந்தை தான் ஞானக் கடல் ஆவார். அவரைத்தான் சிவாய நமஹ ! என்று பாடுகின்றனர். அவரது மகிமைதான் பாடப்பட்டிருக்கிறது. தந்தை வந்து உங்களுக்கு எவ்வளவு ஞானத்தைப் புரிய வைக்கின்றார்! இது தான் ஞானத்தின் மூன்றாவது கண் என்று கூறப்படுகிறது, தன்னை திரிகாலதர்சி என்ற கூறக் கூடிய சக்தி வேறு யாரிடத்திலும் கிடையாது. திரிகாலதர்சிகளாக பிராமணர்கள் தான் ஆகின்றனர், அந்த பிராமணர்களின் மூலம் யக்ஞத்தை படைத்திருக்கின்றார். ருத்ர ஞான யக்ஞம் அல்லவா! ருத்ரன் என்ற சிவனையும் கூறுகின்றனர். பல பெயர்கள் வைத்து விட்டனர். ஒவ்வொரு தேசத்திலும் வெவ்வேறு பெயர்கள் பல வைத்திருக்கின்றனர். ஒரு தந்தைக்குத் தவிர வேறு யாருக்கும் இந்த அளவிற்கு பெயர்கள் கிடையாது. இவரை பபுல்நாத் (முட்களை மலராக ஆக்கக் கூடியவர்) என்றும் கூறுகின்றனர். யாரிடம் முட்கள் இருக்கிறதோ அவர்கள் தான் பபுல் (முள் போன்றவர்) என்று அழைக்கப்படுகின்றனர். பாபா முட்களை மலர்களாக ஆக்கக் கூடியவர் ஆவார். அதனால் தான் அவருக்கு பபூல்நாத் என்று பெயர் வைத்திருக்கின்றனர். மும்பையில் அவருக்கு அதிகமாக திருவிழா நடைபெறுகிறது. அர்த்தம் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. அவரது சரியான பெயர் சிவன் என்பதை தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். வியாபாரிகளும் பிந்துவை சிவன் என்று கூறி விடுகின்றனர். ஒன்றையொன்று எண்ணும் போது, 10 வருகின்ற பொழுது சிவா என்று கூறுவர். தந்தையும் கூறுகின்றார் - நான் பிந்துவாக, நட்சத்திரமாக இருக்கிறேன். பலர் இவ்வாறு இரண்டு திலகமும் வைத்துக் கொள்கின்றனர். தாய் மற்றம் தந்தை. ஞான சூரியன் மற்றும் ஞான சந்திரனின் அடையாளமாகும். அவர்கள் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ளவில்லை. ஆக பாபா யோகாவைப் பற்றி புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். யோகா எவ்வளவு பிரபலமாக இருக்கிறது! இப்போது குழந்தைகளாகிய நீங்கள் யோகா என்ற வார்த்தையை விட்டு விடுங்கள், நினைவு செய்யுங்கள். தந்தை கூறுகின்றார் - யோகா என்ற வார்த்தையின் மூலம் புரிந்து கொள்ளமாட்டார்கள், நினைவு என்பதன் மூலம் புரிந்து கொள்வர். தந்தையை அதிகமாக நினைவு செய்ய வேண்டும். அவர் நாயகன் என்றம் கூறப்படுகின்றார். பட்டத்து ராணிகளாக ஆக்குகின்றார் அல்லவா! உலக இராஜ்யத்திற்கான ஆஸ்தியை தந்தை கொடுக்கின்றார். சத்யுகத்தில் ஒரே ஒரு தந்தை தான் இருப்பார். பக்தியில் இரண்டு தந்தைகள் இருப்பர், மற்றும் ஞான மார்க்கத்தில் இப்போது உங்களுக்கு மூன்று தந்தைகள் உள்ளனர். எவ்வளவு ஆச்சரியமான விசயமாகும்! நீங்கள் அர்தத்துடன் அறிவீர்கள் - சத்யுகத்தில் அனைவரும் சுகமாக இருப்பர். அதனால் தான் பரலௌகீகத் தந்தையை அறியவில்லை. இப்போது நீங்கள் மூன்று தந்தையை அறிவீர்கள். புரிந்துக் கொள்வதற்கு எவ்வளவு எளிய விசயமாகும்! நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) நினைவில் இருப்பதற்காக வாயினால் எதுவும் பேசக் கூடாது. வாயில் கூழாங் கற்களை போட்டுக் கொண்டால் கோபம் அழிந்து விடும். யாரிடமும் கோபித்து கொள்ளக் கூடாது.

2) இந்த துக்கதாமம் இப்போது தீ பற்றி எரியப் போகிறது, ஆகையால் இதை மறந்து புது உலகை நினைவு செய்ய வேண்டும். தந்தையிடம் செய்த தூய்மைக்கான உறுதிமொழியில் உறுதியாக இருக்க வேண்டும்.


வரதானம்:

கட்டளைப்படி நடப்பதன் மூலம் அனைத்து ஆசைகளையும் அழிக்கக் கூடிய மாயை புரூஃப் ஆகுக.

அமிர்தவேளையிலிருந்து இரவு வரைக்குமான தினச்சரியங்களில் என்ன கட்டளை கிடைத்திருக்கிறதோ அதன் படி தனது மனநிலை, பார்வை, எண்ணம், நினைவு சேவை மற்றும் சம்மந்தங்கள் இருக்கிறதா? என்று சோதனை செய்யுங்கள். யார் ஒவ்வொரு எண்ணத்திலும், ஒவ்வொரு அடியிலும் கட்டளைப்படி நடக்கிறார்களோ அவர்களது அனைத்து ஆசைகளும் அழிந்து போய் விடும். ஒருவேளை உள்ளுக்குள் முயற்சி அல்லது வெற்றிக்காக ஆசை இருந்தாலும் அவசியம் ஏதோ ஒரு கட்டளையை கடைபிடிக்கவில்லை என்பதாகும். ஆக எப்போதெல்லாம் குழப்பம் வருகிறதோ அப்போது நாலாபுறமும் சோதனை செய்யுங்கள் - இதன் மூலம் தானாகவே மாயா புரூஃப் ஆகிவிடுவீர்கள்.

சுலோகன்:

தனது சூட்சும (மிகச் சிறிய) பலவீனங்களை சிந்தனை செய்து அதனை அழித்து விடுவது தான் சுய சிந்தனை ஆகும்.
ஓம் சாந்தி

***ஓம் சாந்தி***