BK Murli 5 August 2016 Tamil

BK Murli 5 August 2016 Tamil

05.08.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! பாபாவின் வலது கரமாக ஆக வேண்டுமெனில் ஒவ்வொரு விசயத்திலும் நேர்மையானவர்களாக ஆகுங்கள், சதா சிரேஷ்ட காரியங்களை செய்யுங்கள்.கேள்வி:

எந்த சம்ஸ்காரம் சேவையில் அதிக தடை ஏற்படுத்துகிறது?பதில்:

கருத்து வேறுபாடு - சுபாவங்களின் காரணத்தினால் தங்களுக்குள் ஏற்படக் கூடிய பிரிவினைக்கான சம்ஸ்காரம் சேவையில் அதிக தடைகளை ஏற்படுத்துகிறது. இரண்டு கருத்துகளினால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது. கோபம் என்ற பூதம் பகவானையும் எதிர்கொள்ள தாமதிப்பது கிடையாது, அதனால் தான் பாபா கூறுகின்றார் - இனிமையான குழந்தைகளே! அதுபோன்ற ஏதாவது சம்ஸ்காரம் இருந்தால் அதை நீக்கி விடுங்கள்.பாட்டு:

அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன் ........ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். ஆன்மீகக் குழந்தைகள் என்றால் பரமாத்மாவாகிய சிவனின் குழந்தைகளாகிய ஆத்மாக்கள் சரீரம் என்ற கர்மேந்திரியங்களின் மூலம் பாட்டு கேட்டீர்கள். இப்போது குழந்தைகள் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். அதிக உழைப்பும் இருக்கிறது. அடிக்கடி தன்னை ஆத்மா என்று புரிந்துக் கொண்டு தந்தையை நினைவு செய்ய வேண்டும். இது குப்தமான முயற்சியாகும். தந்தையும் குப்தமானவர் எனில் முயற்சியும் குப்தமாக செய்விக்கின்றார். தந்தை சுயம் வந்து கூறுகின்றார் - குழந்தைகளே! என்னை நினைவு செய்தால் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு போல் மீண்டும் சதோபிரதானமாக ஆவீர்கள். நாம் சதோபிரதானமாக இருந்தோம், பிறகு மீண்டும் நாமே இப்போது சதோபிரதானமாக ஆகிறோம் என்பதை குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். அவசியம் சதோபிரதானமாக ஆக வேண்டும். எந்த அதிர்ஷ்டத்தை இழந்தீர்களோ அதை மீண்டும் அடைவதற்கான முயற்சியை செய்விக்கக் கூடியவர் ஒரே ஒரு சர்வசக்திவான் தந்தை ஆவார் என்பது பாடலிலும் இருக்கிறது. ஏனெனில் அனைவரையும் தூய்மை ஆக்குகிறார் அல்லவா! தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் - ஹே ஆன்மீக குழந்தைகளே! இப்போது அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள வந்திருக்கிறீர்கள். மாணவ வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள செல்கின்றனர் அல்லவா! அவர்கள் சிறு குழந்தைகளாக இருப்பர். நீங்கள் சிறியவர்கள் கிடையாது, நீங்கள் பெரியவர், வயதானவர்கள். அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆம் சிலர் மிக வயதானவர்களாகவும் இருக்கின்றனர். வயோதிக நிலையை விட இளமையில் படிப்பது மிகவும் நல்லதாகும், இளையவர்களின் புத்தி மிக நன்றாக இருக்கும். இது அனைவருக்கும் மிக எளிதானதாகும். உங்களது சரீரம் பெரியது அல்லவா! இவர்கள் குழந்தைகள், அந்த அளவிற்கு புரிந்துக் கொள்ள முடியாது. ஏனெனில் கர்மேந்திரியங்கள் சிறியதாகும். புகழ்-இகழ், துக்கம்-சுகம் போன்ற விசயங்களை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மா பிந்துவாக இருக்கிறது. சரீரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆத்மா ஒரே மாதிரியாக இருக்கிறது. ஒருபோதும் சிறியதாக, பெரியதாக ஆவது கிடையாது. அந்த ஆத்மாவின் புத்திக்காக தந்தை (கஸ்தூரி போன்ற) பரிசு கொடுத்துக் கொண்டிருக்கின்றார், ஏனெனில் புத்தி இப்போது முற்றிலும் தமோபிரதானமாக ஆகி விட்டது. அது இப்போது தூய்மையானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த சித்திரங்கள் புரிய வைப்பதற்கு உங்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் தேவதைகளின் முன் சென்று தலை வணங்குகின்றனர், பூஜை செய்கின்றனர். முன்பு நீங்களும் குருட்டு நம்பிக்கையுடன் சென்று வந்தீர்கள். சிவன் கோயிலுக்கு சென்றீர்கள், இவர் சிவபாபா என்பது உங்களுக்குத் தெரியாமல் இருந்தது பாபாவிடமிருந்து ஆஸ்தி அவசியம் கிடைத்திருக்கிறது, அதனால் தான் அவரது மகிமை பாடப்படுகிறது. யாராவது நல்ல காரியங்கள் செய்து விட்டு செல்கின்றனர் எனில் அவரது மகிமை பாடப்படும். சிவபாபாவின் ஸ்டாம்ப் உருவாக்க வேண்டும். சிவபாபா கீதை ஞானம் அளிப்பவர் ....... இந்த ஸ்டாம்ப் எளிதாக உருவாக்கப்படும். அந்த தந்தை அனைவருக்கும் சுகம் கொடுக்கக் கூடியவர். நான் உங்களை சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்கக் கூடியவன் என்று தந்தை கூறுகின்றார். தேகமற்ற சிவபாபாவிடம் நாம் வந்திருக்கிறோம் என்பதை வயோதிகர்களும் புரிந்து கொள்கின்றனர். அவர் இந்த தேகத்தில் பிரவேசமாகியிருக்கின்றார். நிராகாரமானவரைத் தான் சித்திரமற்றவர் (அசரீரி) என்று கூறப்படுகின்றார். நாம் சிவபாபாவிடம் செல்கிறோம், அவர் இந்த சரீரத்தை தற்காலிகமாக எடுத்திருக்கின்றார் என்பது புத்தியில் இருக்கிறது. தூய்மை இழந்தவர்களை தூய்மையானவர்களாக்கி, முக்தி, ஜீவன் முக்தி கொடுக்கின்றார். அதாவது சாந்திதாமம், சுகதாமத்தில் வசிக்கக் கூடியவர்களாக ஆக்குகின்றார். மனிதர்கள் அமைதிக்காகவே முயற்சி செய்கின்றனர். பகவான் கிடைத்து விட்டால் அமைதி கிடைத்து விடும், சுகத்திற்கான முயற்சி செய்வது கிடையாது. தந்தையின் கூடவே வீட்டிற்குச் செல்ல வேண்டும், பகவானை சந்திக்க வேண்டும், அவ்வளவு தான். இந்த நேரத்தில் அனைவரும் முக்தியை விரும்புகின்றவர்களாக இருக்கின்றனர். ஜீவன்முக்தி அடையக் கூடியவர்கள் பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே. மற்ற அனைவரும் முக்திக்கான விரும்பம் வைத்திருக்கின்றனர். ஜீவன்முக்திக்கான வழி கூறக்கூடியவர் யாரும் கிடையாது. சந்நியாசி போன்றவர்களிடம் சென்று அமைதி கேட்கின்றனர். மன அமைதி எப்படி கிடைக்கும்? என்று கேட்கின்றனர். வழி கூறக் கூடிய அனைவருமே முக்திக்கு செல்லக் கூடியவர்கள் தான். மோட்சம் என்றால் என்ன? என்பது கூட புத்தியில் வருவது கிடையாது. களைப்படைந்து விட்டதால் முக்திக்குச் சென்றால் நல்லது என்று களைப்புடன் கூறுகின்றனர். உண்மையில் முக்திதாமம் என்பது ஆத்மாக்கள் வசிக்கும் இடமாகும். நாம் புது உலகிற்கான இராஜ்ய பாக்கியத்தை அடைகிறோம் என்பதை இத்தனை சென்டர்களிலும் இருக்கும் குழந்தைகள் அனைவரும் அறிந்திருக்கிறீர்கள். பாபா நமக்கு புது உலகின் இராஜ்யத்தைக் கொடுக்கின்றார். எங்கு கொடுப்பார்? புது உலகில் கொடுப்பாரா? அல்லது பழைய உலகில் கொடுப்பாரா? நான் சங்கமத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். நான் சத்யுகத்திலோ அல்லது கலியுகத்திலோ வருவது கிடையாது. இரண்டிற்கும் நடுவில் வருகிறேன். தந்தை அனைவருக்கும் சத்கதி கொடுப்பார் அல்லவா! துர்கதியில் விட்டு விட்டு சென்று விடுவார் என்பது கிடையாது. சத்கதி மற்றும் துர்கதி இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது. இந்த பழைய உலகம் விநாசம் ஆகிவிடும் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். ஆகையால் இதன் மீது அன்பு செலுத்தாதீர்கள். இப்போது நாம் சங்கமத்தில் இருக்கிறோம் என்று புத்தி கூறுகிறது. இந்த உலகம் மாறப் போகிறது. இப்போது தந்தை வந்திருக்கின்றார், நான் கல்ப கல்பத்தின் சங்கமத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். உங்களை துக்கத்திலிருந்து விடுவித்து ஹரியின் வாசலுக்கு அழைத்துச் செல்கிறேன். இது ஞான விசயமாகும். ஹரிதுவார், கிருஷ்ண துவார் என்றால் கிருஷ்ணபுரி என்று கூறப்படுகிறது. நல்லது, இவருக்குப் பிறகு லெட்சுமனனை ஊஞ்சலில் அமர்த்தி விட்டனர். முதலில் ஹரிதுவார் வரும். சத்யுகம் தான் ஹரிதுவார் என்று கூறப்படுகிறது. பிறகு இராம், லெட்சுமன் போன்றவர்களைக் காண்பிக்கின்றனர். அந்த மாதிரி எந்த விசயமும் கிடையாது. அது உருவாக்கப்பட்ட விசயங்களாகும். இராமருக்கு எத்தனையோ சகோதரர்களைக் கொடுத்து விட்டனர்! 4 சகோதரர்கள் இருக்க மாட்டார்கள். இங்கு தான் 4-8 சகோதரர்கள் இருக்கின்றனர். ஒருபுறம் ஈஸ்வரிய குழந்தைகள், மற்றொருபுறம் அசுர குழந்தைகள்.சிவபாபா பிரம்மாவின் உடலில் வந்திருக்கிறார் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். சிவன் பாபா, பிரம்மா தாதா ஆவார். பிரஜாபிதா ஆவார். அவர் ஆத்மாக்களுக்குப் பிதா, அநாதியானவர், (ஆதி, அந்தமில்லாதவர்) இந்த நேரத்தில் பிராமணர்களைப் படைக்கின்றார். சிவபாபா சாலிகிராமங்களைப் படைக்கின்றார் என்பது கிடையாது. சாலிகிராமங்கள் அழிவற்றவைகளாக இருக்கவே செய்கின்றன. தந்தை வந்து தூய்மையானவர்களாக ஆக்குகின்றார், அவ்வளவு தான். எதுவரை ஆத்மா தூய்மையாக ஆகவில்லையோ அதுவரை சரீரம் எவ்வாறு தூய்மையாக ஆக முடியும்! ஆத்மாக்களாகிய நாம் தூய்மையாக இருந்த போது சதோபிரதானமாக இருந்தோம். இப்போது அசுத்தமாக, தமோபிரதானமாக இருக்கிறோம், மீண்டும் சதோபிரதானமாக ஆவது எப்படி? இது எளிதாக புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். இந்த நேரத்தில் கறை படிந்ததன் மூலம் நீங்கள் தூய்மையற்றவர்களாக, தமோபிரதானமாக ஆகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு அனைவரும் சாந்திதாமம் அல்லது சுகதாமத்திற்கு வருவீர்கள். ஆத்மாக்கள் எப்படி வருகின்றன? என்பதையும் கிறிஸ்தவர்கள் மரத்தில் விளக்கு எரிய விட்டு கொண்டாடுகின்றனர். இவை அனைத்தும் தர்மத்தின் தனித் தனியாக கிளைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கிருந்து ஆத்மாக்கள் முதன் முதலில் எப்படி கீழே இறங்குகின்றன? என்ற ஞானம் உங்களுக்குக் கிடைத்து விட்டது. ஆத்மாக்களாகிய நமது வீடு சாந்திதாமம் ஆகும். இப்போது சங்கமமாகும். அங்கிருந்து அனைத்து ஆத்மாக்களும் வந்து விடும், பிறகு அனைவரும் செல்வோம். பிரளம் ஏற்படாது. பாபாவிடத்தில் மீண்டும் அதிர்ஷ்டம் உருவாக்கிக் கொண்டும் மீண்டும் சுய இராஜ்யத்தை அடைவதற்காக வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது பெயரளவிற்கு சொல்வதுடன் இருந்து விடுவது கிடையாது. நினைவின் மூலம் தான் ஆஸ்தி கிடைக்கும். தேகம், தேக சகிதமாக அனைத்து உற்றார், உறவினர்களையும் மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். சித்திரம் (சாகாரம்) மற்றும் விசித்திரம் (நிராகார்) அல்லவா! யாரை பார்க்க முடியாதோ அவர் தான் விசித்திரம் என்று கூறப்படுகின்றார். இது மிகவும் ஆழமான விசயமாகும். ஆத்மா எவ்வளவு சிறிதாக இருக்கிறது! அது அடிக்கடி நடிப்பு நடிக்க வேண்டியிருக்கிறது, வேறு யாருடைய புத்தியிலும் இப்படிப்பட்ட விசயங்கள் கிடையாது. முதன் முதலில் நான் ஆத்மா, அவர் நமது தந்தை என்பதை புத்தியில் அமர வைக்க வேண்டும். அவரைத் தான் பதீத பாவன், ஹே பகவான் என்று கூறி நினைவு செய்கின்றனர். வேறு எந்த இடத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆக நினைவும் ஒரே ஒருவரைத் தான் செய்ய வேண்டும் அல்லவா! பகவானை நினைவு செய்கின்றனர் எனில் அவசியம் அவரிடமிருந்து ஏதோ அடைந்திருக்க வேண்டும். பிறகு ஏன் வீதி வீதியாக சென்று ஏமாற்றம் அடைகிறீர்கள்? பகவான் பரந்தாமத்திலிருந்து வர வேண்டியிருக்கிறது அல்லவா! நாம் செல்ல முடியாது, ஏனெனில் தூய்மையற்றவர்களாக இருக்கிறோம். தூய்மை இல்லாதவர்கள் அங்கு செல்ல முடியாது. இப்போது நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். பக்தி மார்க்கத்தின் பாகம் எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கிறது! ஒரே ஒரு பகவானைத் தான் ஹே ஈஸ்வரனே!, ஹே பரம்பிதா, ஓ இறை தந்தையே என்று நினைவு செய்கின்றனர். அவர் ஒரே ஒருவர் தான் எனும் போது பிறகு ஏன் வேறு பக்கம் சென்று ஏமாற்றம் அடைகிறீர்கள்? அந்த ஒருவர் மேலே இருக்கிறார். ஆனால் இவை அனைத்தும் பதிவாகியிருக்கிறது. நாடகப்படி எல்லையற்ற புத்தியற்றவர்களாக ஆகி பக்தி செய்கின்றனர். இப்போது நீங்கள் எல்லையற்ற புத்திசாலிகளாக ஆகிறீர்கள். ஸ்ரீமத் படி நடப்பவர்கள் தான் புத்திசாலிகளாக ஆகின்றனர். அவர்கள் மறைந்து இருக்க முடியாது. அவர்கள் எப்போதும் சிரேஷ்ட காரியம் மட்டுமே செய்வர். நான் துக்கத்தை நீக்கி சுகம் கொடுக்கக் கூடியவன் எனில் குழந்தைகளும் எவ்வளவு இனிமையானவர்களாக ஆக வேண்டும் என்று தந்தை கூறுகின்றார்! தந்தையின் வலது கரமாக ஆக வேண்டும். இப்படிப்பட்ட குழந்தைகள் தான் தந்தைக்கு பிரியமானவர்கள். வலது கரம் அல்லவா! இடது கைகளினால் அந்த அளவிற்கு காரியம் செய்ய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் வலது கரம் எப்போதும் சரியான காரியம் மட்டுமே செய்யும். அதனால் தான் இந்த வலது கையை மட்டுமே சுப காரியங்களில் பயன்படுத்துகின்றனர். பூஜை எப்போதும் வலது கைளால் செய்வர். ஒவ்வொரு விசயத்திலும் நன்னெறியுடையவர்களாக, நேர்மையானவர்களாக ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தை கிடைத்து விட்டார் எனில் குஷி ஏற்பட வேண்டும்.தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்தால் இறுதிக் கால நிலை நல்ல நிலையாக ஆகிவிடும். நல்ல வழி அல்லது நல்ல நிலை ஏற்படுத்தும் வழி ஒரே ஒருவருடையது ஆகும். அதனால் தான் ஈஸ்வரனின் வழி தனிப்பட்டது என்று பாடப்பட்டிருக்கிறது. அவரே பதீத பாவன் ஆவார். மனிதர்களை தூய்மை ஆக்கி துர்கதியிலிருந்து சத்கதிக்கு எப்படி அழைத்துச் செல்வது என்பதை அவர் அறிவார். பக்தி மார்க்கத்தில் எவ்வளவோ தீவிர முயற்சி செய்கின்றனர்! ஆனால் சத்கதி ஏற்படுவது கிடையாது.  பலன் எதுவும் கிடைப்பது கிடையாது. சத்கதி கொடுக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். பக்தியில் யார், எந்த பாவனையுடன் பூஜை செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த பலனை கொடுக்கக் கூடியவர் நான் ஒருவனே. அதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது - அவர்களது முயற்சியின் படி தானாகவே அவர்களுக்கு கிடைத்து விடும். இப்போது குழந்தைகளும் தனது முயற்சியின் மூலம் தூய்மையாக ஆக வேண்டும். தந்தை கூறுகின்றார் – இனிமையிலும் இனிமையான தந்தையை நினைவு செய்யுங்கள். அவர் தான் சர்வசக்திவானாக இருக்கின்றார், எவ்வளவு உயர்வானவர்களாக ஆக்குகின்றார்! நீங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டீர்கள், மீண்டும் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் உங்களது புத்தியில் இருக்கிறது. இந்த ஞானம் நம்மிடத்தில் இல்லாமல் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். யாகம், தவம் போன்றவைகள் செய்வது, சாஸ்திரம் போன்றவைகளை கேட்பது - இவைகள் சாஸ்திரங்களின் ஞானமாகும். அது பக்தி என்று கூறப்படுகிறது. அதில் இலட்சியம் எதுவும் கிடையாது. படிப்பில் இலட்சியம் இருக்கும். ஏதாவது ஒரு வகையான ஞானம் இருக்கும். தூய்மை இல்லாமலிருந்து தூய்மை ஆவதற்கான ஞானம் பதீத பாவன் தந்தை கொடுத்திருக்கின்றார். சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் தந்தை கொடுத்திருக்கின்றார். இந்த சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? இதில் அனைவரும் நடிகர்கள் ஆவர். இது அழிவற்ற, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகமாகும். இந்த எல்லையற்ற ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.இப்போது நாம் காரிருளிலிருந்து நீங்கி வெளிச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்போது தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைத் தான் இந்து தர்மம் என்று கூறிவிட்டனர் என்பதையும் புரிய வைக்க வேண்டும். சிறிது சிறிதாக இந்த விசயத்தை புரிந்து கொண்டு விடுவர். குழந்தைகள் எழுந்து நிற்க வேண்டும். இதற்கு நிறைய குழந்தைகள் தேவை. டெல்லியில் மாநாடு நடத்த வேண்டியிருக்கும். பரிஸ்தான் என்று டெல்லி தான் கூறப்படுகிறது. இது தான் யமுனை நதிக்கரையில் இருந்தது, டெல்லி தலைநகரமாகும். பலரது ஒத்துழைப்பு இருக்கிறது. தேவதைகளின் தலைநகரமாகவும் இது இருந்தது. டெல்லியில் மிகப் பெரிய மாநாடு நடத்த வேண்டும். ஆனால் மாயை செய்ய விடுவது கிடையாது. பல தடைகளை ஏற்படுத்துகிறது. இன்றைய நாட்களில் கருத்து வேறுபாடு மற்றும் எண்ணங்களின் வேறுபாடுகள் அதிகம் எற்பட்டு விட்டது அல்லவா! குழந்தைகள் தங்களுக்குள் ஒன்றாக சேர்ந்து சேவையில் ஈடுபட வேண்டும். அவர்களும் தங்களுக்குள் சேர்ந்து இருக்கவில்லையெனில் இராஜ்யமே இல்லாமல் போய் விடுகிறது. இரண்டு பிரிவினர்களாக ஆகிவிடும் போது ஜனாதிபதியையும் நீக்கி விடுகின்றனர். கருத்து வேறுபாடு அதிக நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. பிறகு பகவானை எதிர்கொள்ளவும் கூட தாமதிப்பது கிடையாது. அதிக நஷ்டம் அடைகின்றனர். கோபம் என்ற பூதம் வந்து விட்டால் பிறகு கேட்கவே கேட்காதீர்கள், அதனால் தான் பாபா கூறுகின்றார் – அவரவர்களுக்குத் தெரியும், பகவானுக்குத் தெரியும். தந்தை குழந்தைகளுக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் கூறிக் கொண்டிருக்கின்றார். தாரணை செய்வது, செய்யாதது அவரவர்களது முயற்சியில் இருக்கிறது. யார் மீதாவது பாபா ஆசீர்வாதம் செய்வார் அல்லது கருணை காட்டுவார் என்பது கிடையாது. இதில் கருணை கேட்பதற்கான விசயம் கிடையாது. ஒருவேளை தூண்டுதலின் மூலம் ஞானம் மற்றும் யோகா கற்பிப்பார் எனில் பிறகு ஏன் நான் இந்த அசுத்த உலகிற்கு வர வேண்டும்? என்று ந்தை கேட்கின்றார். தூண்டுதல், ஆசீர்வாதம் இது போன்ற வார்த்தைகள் பக்தி மார்க்கத்தினுடையது. இங்கு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. தூண்டுதலுக்கான விசயம் கிடையாது. உங்களுக்கு ஒன்றாக 3 இன்ஜின் கிடைத்திருக்கிறது. அங்கு தந்தை தனியாகவும், ஆசிரியர் தனியாகவும், கடைசியில் குருவும் இருப்பார்கள். இங்கு இந்த மூவரும் சேர்ந்திருக்கின்றனர். தந்தை கூறுகின்றார் - நான் உங்களை பூஜைக்குரியவர்களாக ஆக்குகிறேன். நீங்கள் மீண்டும் பூஜாரிகளாக ஆகிவிடுவீர்கள். மிகவும் யுக்தியாக புரிய வைக்க வேண்டும். கேட்டு யாரும் மயக்க மடைந்து விடக் கூடாது. முதல் முக்கிய விசயம் இரண்டு தந்தைக்கானது. பகவான் தந்தை ஆவார், அவரது பிறப்பை சிவஜெயந்தியாக இங்கு கொண்டாடுகின்றனர். அவசியம் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கியிருக்க வேண்டும். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. இப்போது நரகம் விநாசமாவதற்காக மகாபாரத யுத்தம் எதிரிலேயே இருக்கிறது. தந்தை அவசியம் புது உலகை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஆவார். தந்தையின் ஸ்ரீமத்தின் ஆதாரத்தில் நாம் கூறுகிறோம் - பாரதத்தை நாங்கள் தூய்மையாக ஆக்கியே தீருவோம். நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தந்தை எவ்வாறு துக்கம் நீக்கி சுகம் கொடுக்கிறாரோ அதே போன்று பாபாவிற்குச் சமமாக வேண்டும். மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். சதா சுப காரியங்கள் செய்து வலது கரமாக ஆகிவிட வேண்டும்.2) ஒருபோதும் கருத்து வேறுபாடு உடையவர்களாக ஆக்கி விடக் கூடாது. கருத்து மற்றும் எண்ணங்களில் வேறுபாடு - வந்து ஒருவரையொருவர் எதிர்த்துக் கொள்ளக் கூடாது. கோபம் என்ற பூதத்தை நீக்கி விட வேண்டும்.வரதானம்:

நிமித்தமாக இருக்கின்ற ஆத்மாக்களின் மூலம் கர்மயோகி ஆவதற்கான வரதானத்தை பலனாக அடையக் கூடிய மாஸ்டர் (வரதாதா) வரமளிக்கும் வள்ளல் ஆகுக !எந்த ஒரு பொருளையும் உருவமாக (ஸ்தூலமாக) பார்க்கின்ற போது அதை உடனேயே ஏற்றுக் கொண்டு விடுவர். ஆகையால் நிமித்தமாக இருக்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்கள் தங்களது சேவை, தியாகம், அன்பு, அனைவருக்கும் ஒத்துழைப்பு போன்ற நடைமுறை காரியத்தைப் பார்த்து என்ன தூண்டுதல் ஒருவருக்கு கிடைக்கிறதோ அதுவே வரதானமாக ஆகிவிடும். எப்போது நிமித்தமாக இருக்கும் ஆத்மாக்கள் காரியங்கள் செய்கின்ற போது இந்த குணங்களை தாரணை செய்திருப்பதை பார்த்து விடுகிறார்களோ அப்போது எளிதாக கர்மயோகி ஆவதற்கான வரதானம் கிடைத்து விடும். யார் இந்த வரதானத்தை பலனாக அடைந்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சுயம் மாஸ்டர் வரதாதா ஆகிவிடுவர்.சுலோகன்:

பெயரின் (புகழின்) ஆதாரத்தில் சேவை செய்வது என்றால் உயர்ந்த பதவி அடைவதில் பெயரை பின்னுக்கு (புறம்) தள்ளி விடுகிறீர்கள்.***OM SHANTI***