BK Murli 15 September 2016 Tamil

BK Murli 15 September 2016 Tamil

15.09.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களை பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவராக மாற்றுவதற்காக தந்தை வந்துள்ளார், பூஜைக்குரியவரிலிருந்து பூஜாரியாகவும், பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவராகவும் ஆகக் கூடிய கதையை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.கேள்வி:

எந்த விஷயம் உலகினருக்கு நடக்காத ஒன்றாகவும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சகஜமாக தாரணை செய்யக்கூடியதாகவும் உள்ளது?பதில்:

இல்லறத்திலிருந்தபடியே தூய்மையாக வாழ்வது என்பது முற்றிலும் நடக்காத ஒன்று என உலகினர் புரிந்து கொள்கின்றனர், மேலும் நீங்கள் சகஜமாக தாரணை செய்து கொள்கிறீர்கள். ஏனென்றால், இதன் மூலம் சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கிறது என நீங்கள் அறிவீர்கள். ஆக இது மிகவும் மலிவான வியாபாரம் அல்லவா!பாடல்:

இன்று அதிகாலையில் வந்த இவர் யார்? . . .ஓம் சாந்தி.

காரிருள் மற்றும் அதிகாலை - இது உலகினருக்காக முற்றிலும் தனிப்பட்டதாகும். இதுவோ பொதுவானதாகும். குழந்தைகளாகிய உங்களின் அதிகாலை அசாதாரணமானதாகும். காரிருள் மற்றும் அதிகாலை என எதற்கு சொல்லப்படுகிறது என உலகிற்குத் தெரியாது. உண்மையில் இந்த காரிருளும் அதிகாலையும் கல்பத்தின் இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில் ஏற்படுகிறது. இப்போது அஞ்ஞானத்தின் காரிருள் நீங்கிப் போகிறது. ஞான சூரியன் உதித்தது என பாடவும் செய்கின்றனர். அந்த சூரியன் வெளிச்சத்தைக் கொடுப்பதாகும். இது ஞான சூரியனின் விஷயமாகும். பக்தி காரிருள் எனவும், ஞானம் வெளிச்சம் எனவும் சொல்லப்படுகிறது. அதிகாலை ஆகிக்கொண்டிருக்கிறது என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தின் காரிருள் முடிவடைந்து விடுகிறது. பக்தி அஞ்ஞானம் எனப்படுகிறது, ஏனென்றால், யாரை பக்தி செய்கின்றனரோ அவரைப் பற்றிய ஞானம் கொஞ்சமும் கிடையாது. நேரம் வீணாகிப் போகிறது. பொம்மைகளின் பூஜை நடந்தபடி இருக்கிறது. அரை கல்ப காலமாக இந்த பொம்மைகளின் பூஜை நடக்கிறது. யாருக்கு பூஜை செய்கின்றனரோ அவரைப் பற்றிய முழுமையான ஞானமும் இருக்க வேண்டும். தேவி தேவதைகளுடையது பூஜைக்குரியவர்களின் குலமாகும். அதே பூஜைக்குரியவர்களே பின் பூஜாரிகளாகின்றனர். பூஜைக்குரியவரிலிருந்து பூஜாரி, பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவராக ஆகக் கூடிய கதை எவ்வளவு நீண்டதாக உள்ளது. மனிதர்கள் பூஜைக்குரியவர்கள், பூஜாரிகள் என்பதன் அர்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளவில்லை. பரமபிதா பரமாத்மா வருவதே சங்கமயுகத்தில், அது காரிருள் முடியக் கூடிய நேரமாகும். அதிகாலையாக ஆக்குவதற்காக வருகிறார். ஆனால் அவர்கள் கல்பத்தின் சங்கமயுகம் தோறும் என்பதற்குப் பதிலாக யுகே யுகே (ஒவ்வொரு யுகத்திலும்) என எழுதிவிட்டனர். 4 யுகங்கள் முடியும்போது பழைய உலகம் முடிந்து பிறகு புதிய உலகம் தொடங்குகிறது. ஆக இது கல்யாணகாரி (நன்மைகள் நிறைந்த) சங்கமயுகம் எனப்படுகிறது. இந்த சமயத்தில் அனைவருமே நரகவாசிகள் ஆவர். யாராவது இறந்து விட்டால் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என சொல்கின்றனர் எனும்போது அதுவரை நரகத்தில் கண்டிப்பாக இருந்திருப்பார். நாம் நரகத்தில் இருக்கிறோம் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இராவணன் அனைவரின் புத்திக்கு ஒரேயடியாக பூட்டு போட்டு விட்டுள்ளார். அனைவரின் புத்தியும் ஒரேயடியாக சாகடிக்கப்பட்டுள்ளது. பாரதவாசிகளின் புத்தி அனைவரை விட விசாலமாக இருந்தது என தந்தை புரிய வைக்கிறார். பிறகு முற்றிலும் கல் புத்தியாக ஆகிவிடும் போதுதான் துக்கத்தை அடைகின்றனர். நாடகத்தின் திட்டப்படி புத்தியற்றவர்களாக ஆகத்தான் வேண்டும். மாயை புத்தியற்றவர்களாக ஆக்குகிறது. பூஜைக்குரியவர்கள் புத்திசாலிகள் எனவும் பூஜாரிகள் புத்தியற்றவர்கள் என்றும் சொல்லப்படுகின்றனர். நாங்கள் கீழான பாவிகள் என சொல்லவும் செய்கின்றனர். ஆனால் எப்போது புத்திசாலிகளாக இருந்தனர் என்பது தெரிவதில்லை. இராவணன் எனும் மாயை முற்றிலுமாக புத்தியற்றவர்களாக ஆக்கி விடுகிறது. நாம்தான் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், பிறகு பூஜாரிகளாக ஆகினோம் என இப்போது உங்களுக்குப் புரிய வந்துள்ளது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு குஷி ஏற்படுகிறது. எனக்கு அமைதி கிடைக்க வேண்டும், அல்லது பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட வேண்டும் என பல நாட்களாக கதறியபடி வந்தீர்கள். ஆனால் இந்த மாயையின் சங்கிலிகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஞானம் கூட யாருடைய புத்தியிலும் இல்லை. ஏணியில் இறங்கியபடி வருகிறோம் என நீங்கள் அறிவீர்கள். எனினும் கூட சத்யுகத்தில் மெது மெதுவாக இறங்குகிறீர்கள், நேரம் பிடிக்கிறது. சுகத்தின் ஏணியில் ஏறுவதற்கு நேரம் பிடிக்கிறது. துக்கத்தின் ஏணியில் வேக வேகமாக இறங்குகின்றனர். சத்யுகத்தில் 21 பிறவிகள், துவாபர கலியுகத்தில் 63 பிறவிகள் என ஆயுள் குறைந்து கொண்டே போகிறது. நம்முடைய ஏறும் கலை இப்போது கை சொடுக்கும் நேரத்தில் ஆகி விடுகிறது என நீங்கள் அறிகிறீர்கள். ஜனகருக்கு ஒரு வினாடியில் ஜீவன்முக்தி கிடைத்தது என பாடவும் செய்கின்றனர். ஆனால் ஜீவன்முக்தியின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. ஒரு ஜனகருக்கு ஜீவன்முக்தி கிடைத்ததா அல்லது முழு உலகிற்கும் கிடைத்ததா? இப்போது உங்கள் புத்தியின் பூட்டு திறந்து விட்டது. யாருக்காவது மந்தமான புத்தி இருந்தது என்றால் பரமாத்மா இவருக்கு நல்ல புத்தி கொடுங்கள் என சொல்கின்றனர். சத்யுகத்தில் இப்படிப்பட்ட விஷயம் எதுவுமில்லை. எந்த ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து வெகு காலம் பிரிந்திருந்தனரோ அவர்களுடைய கணக்கும் உள்ளது. தந்தை பரமதாமத்தில் இருந்தபோது, அவருடன் பரந்தாமத்தில் அந்த சமயத்தில் இருந்த ஆத்மாக்கள் கடைசியில் வருகின்றனர், அவர்கள் வெகு காலம் அவருடன் இருக்கின்றனர். நாம் கொஞ்ச காலம் அங்கே இருக்கிறோம். முதன் முதலாக நாம் பாபாவைப் பிரிந்தோம், ஆகையால் ஆத்மாவும் பரமாத்மாவும் வெகுகாலம் பிரிந்திருந்தனர் என பாடப்படுகிறது. யார் தந்தையை வெகுகாலம் பிரிந்திருந்தனரோ அவர்களுடைய சந்திப்பு தான் இப்போது நடக்கிறது. யார் வெகுகாலம் அங்கே உடன் இருந்தனரோ அவர்களை சந்திப்பதில்லை. குறிப்பாக குழந்தைகளாகிய உங்களுக்கு படிப்பிப்பதற்காக வருகிறேன் என தந்தை சொல்கிறார். குழந்தைகளாகிய உங்களுடன் இருக்கும்போது அனைவருக்கும் நன்மை நடக்கிறது. இப்போது அனைவரின் இறுதிக்காலமாக உள்ளது. இப்போது அனைத்து கணக்கு வழக்குகளையும் முடித்துவிட்டு செல்வார்கள். மற்றபடி நீங்கள் ராஜ்ய பாக்கியத்தை அடைவீர்கள். இந்த விஷயங்கள் யாருடைய புத்தியிலும் கிடையாது. இறைத் தந்தை, விடுவிப்பவர், வழிகாட்டி என பாடவும் செய்கின்றனர். துக்கத்திலிருந்து விடுவித்து சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வழிகாட்டி ஆகிறார். சுகதாமத்திற்கு வழிகாட்டியாக ஆவதில்லை. ஆத்மாக்களை சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார், அது நிராகாரமான உலகம் – அங்கே ஆத்மாக்கள் இருக்கின்றனர். ஆனால் அங்கே யாரும் போக முடியாது, ஏனென்றால் தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர், ஆகையால் பதீத பாவன தந்தையை கூப்பிடுகின்றனர். குறிப்பாக பாரதவாசிகள் தலை கீழாக ஆகிவிடும்போது எல்லைக்கப்பாற்பட்ட தந்தையையே நாய்-பூனை, கல்-முள்ளில் எடுத்துச் சென்று விடுகின்றனர். அதிசயமாக உள்ளதல்லவா? தம்மை விடவும் என்னை கீழே எடுத்துச் செல்கின்றனர். இதுவும் நாடகமாக உருவாகியுள்ளது. யாருடைய குற்றமும் இல்லை, அனைவரும் நாடகத்தின் வசப்பட்டுள்ளனர். ஈஸ்வரனுக்கு வசப்பட்டவராக அல்ல. ஈஸ்வரனை விடவும் நாடகம் பெரிது. தந்தை சொல்கிறார் - நானும் நாடகத்தின்படி என்னுடைய சமயத்தில் வருகிறேன். என்னுடைய வருகை ஒரே முறைதான் ஏற்படுகிறது. பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் எவ்வளவு ஏமாற்றங்கள் அடைகின்றனர். உங்களுக்கு தந்தை கிடைத்திருக்கிறார், தந்தையிடமிருந்து கை சொடுக்கும் நேரத்தில் ஆஸ்தியை எடுக்க வேண்டும். ஆஸ்தி கிடைத்து விட்டது எனில் பிறகு ஏமாற்றம் அடைய வேண்டியதில்லை. நான் வந்து வேதங்கள், சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறேன். முதலில் உண்மையான கண்டமாக இருந்தது பின் பொய்யான கண்டமாக எப்படி ஆகியது என்பது யாருக்கும் தெரியாது. கீதையை யார் சொன்னது என்பதும் கூட பாரதவாசிகளுக்குத் தெரியாது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் பாரதத்தினுடையதாகத்தான் இருந்தது. தேவதா தர்மத்தவர்கள்தான் சதோபிரதானமான பூஜைக்குரியவர்களாக இருந்து பூஜாரி ஆகிவிடும்போது தேவதா தர்மம் மறைந்து போய் விடுகிறது, பின் தந்தை வந்து மீண்டும் அந்த தர்மத்தின் ஸ்தாபனை செய்கிறார். படங்களும் உள்ளன, சாஸ்திரங்களும் உள்ளன. பாரதவாசிகளின் ஒரே சாஸ்திர சிரோமணி கீதையாகும். அனைவரும் தம்முடைய தர்மத்தையே மறந்து விட்டுள்ளனர். ஆகையால் பெயரை மாற்றி இந்துக்கள் என வைத்துவிட்டனர். நாடகத்தில் பதிவாகியுள்ளது. ஆத்மாதான் மறுபிறவிகளில் வந்து தமோபிரதானமாகி விடுகிறது, துரு படிந்து விடுகிறது. நாம் உண்மையான ஆபரணமாக இருந்தோம், இப்போது பொய்யானதாக ஆகிவிட்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆபரணம் என்று சரீரத்தை குறிப்பிடப்படுகிறது. சரீரத்தின் மூலம்தான் நடிப்பை நடிக்கிறோம். நமக்கு எவ்வளவு நீண்ட 84 பிறவிகளின் நடிப்பு கிடைத்துள்ளது. தேவதை, சத்திரியர், . . . நீங்களேதான் பூஜைக்குரியவர்களாகவும், பூஜாரிகளாகவும் ஆகிறீர்கள். நான் ஒருவேளை பூஜைக்குரியவராகவும் பிறகு பூஜாரியாகவும் ஆவேன் என்றால், உங்களை பூஜைக்குரியவர்களாக யார் ஆக்குவார்? நான் எப்போதும் தூய்மையாக, ஞானக் கடலாக, பதீத பாவனராக இருக்கிறேன். நீங்கள்தான் பூஜைக்குரியவராக, பூஜாரியாக ஆகி பகல் மற்றும் இரவில் வருகிறீர்கள். ஆனால் அவர்கள் தெரிந்து கொள்வதில்லை. உலகம் பொய்யானதாக ஆகிச் செல்கிறது எனும்போது இவ்வளவு பொய்யான கதைகளை அமர்ந்து உருவாக்கியுள்ளனர். வியாசரும் கூட அதிசயம் செய்திருக்கிறார். இப்போது வியாசர் பகவான் அல்ல. பகவான் வந்து பிரம்மாவின் மூலம் வேத சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைத்திருக்கிறார். அவர்கள் சாஸ்திரங்களை பிரம்மாவுக்குக் கொடுத்து விட்டனர். இப்போது பகவான் எங்கே? விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்தார் என்பது கிடையாது. ஆக விஷ்ணு வந்து சாஸ்திரங்களின் சாரத்தை உரைத்தாரா? இல்லை, பிரம்மாவின் மூலம் புரிய வைத்தார். திரிமூர்த்திகளுக்கு (மும்மூர்த்திகளுக்கு) மேல் இருப்பவர் சிவபாபா, அவர் அமர்ந்து பிரம்மாவின் மூலம் சாரத்தை உரைக்கிறார். யார் மூலமாகப் புரிய வைக்கிறாரோ அவர் பிறகு பாலனை செய்வார். நீங்கள் பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள். பிராமண வர்ணம் உயர்ந்ததிலும் உயர்ந்ததாகும். நீங்கள் இப்போது ஈஸ்வரிய குழந்தைகளாக இருக்கிறீர்கள். ஈஸ்வரனால் படைக்கப்பட்ட யக்ஞத்தை நீங்கள் பார்த்துக் கொள்கிறீர்கள். இந்த ஞான யக்ஞத்தில் முழு உலகமும் ஸ்வாஹா (அர்ப்பணம்) ஆகவுள்ளது. ராஜஸ்வ அஷ்வமேத அவினாசி ருத்ர ஞான யக்ஞம் என இதற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராஜ்ஜியத்தை பிராப்தி செய்விப்பதற்காக தந்தை யக்ஞத்தை படைத்திருக்கிறார். அவர்கள் யக்ஞத்தை ஏற்பாடு செய்யும்போது மண்ணால் ஆன சிவன் மற்றும் லிங்கங்களை உருவாக்குகின்றனர். தயாரித்து, பாலனை செய்து பின் அழித்து விடுகின்றனர். தேவதைகளின் மூர்த்திகளைக் கூட இப்படித்தான் செய்கின்றனர். எப்படி சிறு குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடுகின்றனரோ அப்படி இவர்களும் செய்கின்றனர். இப்போது தந்தையைக் குறித்து சொல்கிறோம் ஸ்தாபனை, பாலனை மற்றும் வினாசம், முதலில் ஸ்தாபனை ஆகும்.இப்போது நீங்கள் மரணலோகத்திலிருந்து அமரலோகத்திற்குச் செல்வதற்காக படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மரணலோகத்தில் இது உங்களுடைய இறுதிப் பிறவியாகும். அமரலோகத்தை ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வருகிறார். ஒரு பார்வதிக்கு கதை சொல்வதன் மூலம் என்ன ஆகப் போகிறது? சங்கரரை அமர்நாத் என்று சொல்கின்றனர், அவருக்கு பார்வதியைக் கொடுக்கின்றனர். சங்கரன் பார்வதியை சூட்சும வதனத்தில் காட்டியிருக்கும்போது இப்போது ஸ்தூலத்தில் எப்படி வரமுடியும்? ஜகத் அம்பாவும் ஜகத் பிதாவும் லட்சுமி நாராயணர் ஆகின்றனர் என இப்போது உங்களுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. லட்சுமி-நாராயணர் பின்னர் 84 பிறவிகளுக்குப் பிறகு ஜகத் அம்பா, ஜகத் பிதாவாக ஆகின்றனர். உண்மையில் ஜகதம்பா முயற்சியாளராக இருக்கிறார், பிறகு தூய்மையான லட்சுமி பலனை அடைந்தவர் ஆவார். யாருக்கு மகிமை அதிகம்? ஜகதம்பாவுக்கு பாருங்கள் எவ்வளவு விழாக்கள் நடைபெறுகின்றன. கல்கத்தாவின் காளி பிரசித்தமானவர். காளி (கருப்பான) மாதாவுக்கு அருகில் கருப்பான பிதாவை ஏன் உருவாக்கவில்லை? உண்மையில் ஜகத் அம்பா ஆதி தேவி ஞானச் சிதையில் அமர்ந்து கருப்பிலிருந்து வெள்ளையாக ஆகிறார். முதலில் ஞான ஞானேஸ்வரி, பிறகு ராஜ ராஜேஸ்வரி ஆகிறார். இங்கே நீங்கள் ஈஸ்வரனிடம் ஞானத்தை எடுத்து ராஜ ராஜேஸ்வரி ஆவதற்காக வந்திருக்கிறீர்கள். லட்சுமி நாராயணருக்கு யார் ராஜ்ஜியத்தைக் கொடுத்தது? ஈஸ்வரன் கொடுத்தார். அமர கதை, சத்ய நாராயணன் கதையை தந்தைதான் சொல்கிறார். அதன் மூலம் ஒரு வினாடியில் நரனிலிருந்து நாராயணன் ஆகின்றனர்.காமம் மிகப்பெரிய எதிரி என்பது இப்போது உங்கள் புத்தியில் புரிந்திருக்கிறீர்கள். இல்லற விஷயங்களில் இருந்தபடி தூய்மையாய் இருப்பது என்பது நடக்காத ஒன்று என சொல்கின்றனர். தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் எனும்போது கண்டிப்பாக அவர் தமது குழந்தைகளுக்கு சொர்க்க இராஜ்யத்தை தருவார். எனவே சொர்க்கதின் இராஜ்யத்தை அடைவதற்காக ஒரு பிறவி தூய்மையாய் இருக்க வேண்டும். இது மலிவான வியாபாரமாக உள்ளதல்லவா! வியாபாரிகள் இந்த விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்வார்கள், ஏனென்றால் வியாபாரிகள் தானம் கூட செய்கின்றனர். தர்மத்திற்காக பணத்தை எடுத்து வைக்கின்றனர். இந்த வியாபாரத்தை ஒரு சிலரே செய்கின்றனர் என தந்தை சொல்கிறார். எவ்வளவு மலிவான வியாபாரமாக உள்ளது. என்றாலும் பலர் வியாபாரம் செய்து விட்டு பின் மணமுறிவும் (டிவோர்ஸ்) கொடுத்து விடுகின்றனர். இந்த ஞானத்தை தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. ஞானக் கடல் ஒருவரே ஆவார், அவர்தான் புரிய வைக்கிறார். தூய்மையான பூஜிக்கத் தகுந்தவராக இருந்தவர்களே பிறகு 84 பிறவிகளின் கடைசியில் பூஜாரிகள் ஆகின்றனர். இவருடைய உடலில் நான் பிரவேசமாகி இருக்கிறேன். பிரஜாபிதா என்பவர் இங்கே இருப்பார் அல்லவா? இப்போது நீங்கள் முயற்சி செய்து பரிஸ்தா ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். இப்போது பக்தி மார்க்கத்தின் இரவுக்குப் பிறகு ஞானம் அதாவது பகல் ஆகிறது. நாள் கிழமை என எதுவும் இல்லை - சிவபாபா எப்போது வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. கிருஷ்ண ஜெயந்தியை ஆரவாரமாகக் கொண்டாடுகின்றனர். சிவஜெயந்தி பற்றி முழுமையாக யாருக்கும் தெரியவும் தெரியாது. நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. இந்த கல்யாணகாரி (நன்மை நிறைந்த) யுகத்தில் ஒரு தந்தையிடமிருந்தே சத்ய நாராயணன் கதை, அமர கதை கேட்க வேண்டும். மற்ற எதையெல்லாம் கேட்டிருக்கிறீர்களோ அவற்றை மறக்க வேண்டும்.2. சத்யுகத்தின் ராஜ்ஜியத்தை எடுப்பதற்காக இந்த ஒரு பிறவியில் தூய்மையாய் இருக்க வேண்டும். பரிஸ்தா ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.வரதானம் :

எப்போதும் சக்திமிக்க உள்ளுணர்வின் மூலம் எல்லைக்கப்பாற்பட்ட சேவையில் மும்முரமாக இருக்கக் கூடிய எல்லைக்குட்பட்ட விஷயங்களிலிருந்து விடுபட்டவர் ஆகுக.விளக்கம்: எப்படி சாகார தந்தைக்கு சேவை தவிர வேறு எதுவும் தெரியவில்லையோ, அதே போல் குழந்தைகளாகிய நீங்களும் சக்தி வாய்ந்த உள்ளுணர்வின் மூலம் எல்லைக்கப்பாற்பட்ட சேவையில் எப்போதும் மும்முரமாக இருந்தீர்கள் என்றால், எல்லைக்குட்பட்ட விஷயங்கள் தாமாகவே முடிந்து விடும். எல்லைக்குட்பட்ட விஷயங்களுக்கு நேரம் கொடுப்பதும் கூட பொம்மை விளையாட்டே ஆகும், இதில் நேரம் மற்றும் சக்தி வீணாகிறது, ஆகவே சின்னச் சின்ன விஷயங்களில் நேரம் மற்றும் சேமித்து வைத்திருக்கும் சக்திகளை வீணாக்காதீர்கள்.சுலோகன் :

சேவையில் வெற்றியை பிராப்தியாக அடைய வேண்டும் என்றால், பேச்சு மற்றும் நடத்தை பிரபாவசாலியாக (தாக்கம் நிறைந்ததாக) இருக்க வேண்டும்.***OM SHANTI***