BK Murli 12 October 2016 Tamil

BK Murli 12 October 2016 Tamil

12.10.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களைப் போல் பாக்கியசாலி வேறு யாரும் கிடையாது. ஏனென்றால் எந்தத் தந்தையை முழு உலகமுமே அழைத்துக் கொண்டிருக்கிறதோ, அவர் உங்களுக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவரோடு உரையாடுகிறீர்கள்.கேள்வி:

எந்தக் குழந்தைகளுக்கு விசார் சாகர் மந்தன் (புத்தியில் ஞான சிந்தனை) செய்ய வருகிறதோ, அவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்?பதில்:

அவர்களின் புத்தியில் நாள் முழுவதும் இதே ஆர்வம் இருந்து கொண்டிருக்கும் – அதாவது எப்படி அனைவருக்கும் வழி சொல்ல வேண்டும். யாருக்கும் எவ்வாறு நன்மை செய்வது? இப்படி அவர்கள் சேவைக்கான புதுப்புது திட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் புத்தியில் ஞானம் முழுவதும் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் தங்கள் நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.ஓம் சாந்தி.

குழந்தைகளுக்கு முன் நிராகார் பரமபிதா பரமாத்மா பேசிக் கொண்டிருக்கிறார். இதைக் குழந்தைகள் தான் அறிவார்கள். பகவான் உயர்ந்தவர் எனச் சொல்லப் படுகிறார். உயர்ந்தது அவரது இருப்பிடம். வசிப்பிடமோ புகழ் வாய்ந்தது. குழந்தைகள் அறிவார்கள், நாம் மூலவதனத்தில் வசிப்பவர்கள். மனிதர்களுக்கு இந்த அனைத்து விஷயங்கள் பற்றித் தெரியாது. காட் ஃபாதர் எனச் சொல்கின்றனர். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, நிராகார் பகவான் பேசுகிறார் என்பது. நிராகாராக இருக்கும் காரணத்தால் யாருடைய புத்தியிலும் வருவதில்லை-பகவான் எப்படிப் பேச முடியும் என்று. இது தெரியாத காரணத்தால் கீதையில் கிருஷ்ணரின் பெயரை எழுதி விட்டனர். இப்போது தந்தை குழந்தைகளுக்கு முன் பேசிக் கொண்டிருக்கிறார். முன்னால் வராமலோ கேட்க முடியாது. தூரத்திலிருந்து கேட்கலாம். ஆனால் நிச்சயம் ஏற்படுவதில்லை. கேட்பதோ பகவான் வாக்கு. யதார்த்த ரீதியில் நீங்கள் அறிவீர்கள். பகவானோ சிவபாபா தான். நடைமுறையில் அறிந்திருக்கிறீர்கள், பாபா நமக்கு ஞானம் சொல்லிக் கொண்டிருக்கிறார். உங்களுடைய புத்தி உடனே மேலே சென்று விடுகின்றது. சிவபாபா உயர்ந்ததிலும் உயர்ந்த இடத்தில் வசிப்பவர். எப்படி யாராவது பெரிய மனிதர்கள், ராணி முதலானவர்கள் வருகின்றனர் என்றால் அறிந்திருக்கிறார்கள், இவர்கள் இன்ன இடத்தில் வசிப்பவர்கள், இச்சமயம் வந்துள்ளனர் என்று. குழந்தைகள் நீங்களும் அறிவீர்கள், பாபா வந்திருக்கிறார் - நம்மை அழைத்துச் செல்வதற்காக. நாமும் பாபாவுடன் கூடவே திரும்பிச் செல்வோம். நாம் பரந்தாமத்தில் வசிப்பவர்கள். உங்களுக்கு இப்போது பாபா மற்றும் வீட்டின் நினைவு வருகின்றது. அதே தந்தை தான் சிருஷ்டியின் படைப்பாளர். பாபா வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு மூலவதனம், சூட்சுமவதனம் மற்றும் ஸ்தூலவதனம் பற்றிய ரகசியத்தைப் புரிய வைத்துள்ளார். யாருடைய புத்தியில் உள்ளதோ, அவர்கள் தான் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக நாம் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறோம் - வரும் 21 பிறவிகளுக்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்காக. புருஷார்த்தமோ செய்து தான் ஆக வேண்டும். புருஷார்த்தத்தை ஒரு போதும் விட்டுவிடக் கூடாது. பள்ளிக்கூடப் பிள்ளைகள் அறிவார்கள், எது வரை பரீட்சை வருகிறதோ, அது வரை படித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். நோக்கம்-குறிக்கோள் உள்ளது. நாம் பெரியதிலும் பெரிய பரீட்சை பாஸ் செய்வோம். ஒரு கல்லூரியை விட்டு இரண்டாவது, மூன்றாவது கல்லூரிக்குச் செல்வோம். இதன் அர்த்தமோ, படித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்பதாகும். பெரிய மனிதர்களின் குழந்தை என்றால் நிச்சயமாக பெரிய பரீட்சை பாஸ் செய்ய வேண்டும் என்ற சிந்தனை இருக்கும். நீங்கள் அறிவீர்கள், நாம் மிகப் பெரிய தந்தையின் குழந்தைகள். உலகத்தில் யாருக்கும் தெரியாது-நாம் சிவபாபாவின் குழந்தைகள் என்று. நீங்கள் மிகப்பெரிய உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தையின் குழந்தைகள். மிகப்பெரிய படிப்பைப் படிக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், இது உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பு. படிப்பு சொல்லித் தருபவர் தந்தை என்றால் எவ்வளவு ஊக்கம் மற்றும் மகிழ்ச்சியில் இருக்க வேண்டும்! இதை யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்க முடியும். நாம் மிகப் பெரியவரிலும் பெரிய தந்தையின் குழந்தைகள். மிகப்பெரிய சத்குருவின் வழிப்படி நாம் நடக்கிறோம். ஆசிரியருடைய, குருவினுடைய வழிப்படி நடக்க வேண்டியுள்ளது இல்லையா? அவர்களை சிஷ்யர்கள் எனச் சொல்லி விடுகின்றனர். இங்கே தந்தையின் வழிப்படியும் நடக்க வேண்டும், ஆசிரியரின் வழிப்படியும் நடக்க வேண்டும். நீங்கள் அறிவீர்கள், அவர் நம்முடைய தந்தை, ஆசிரியர், சத்குருவாக உள்ளார். அவருடைய வழிப்படி அவசியம் நடக்க வேண்டும். இவரோ ஒருவர் தான் - உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் சிவபாபா, அவர் தான் பேசுகிறார்.பாபா குழந்தைகளிடம் கேட்கிறார்-சிவபாபா பேசுகிறார். நல்லது, சங்கர் பேசுகிறாரா? பிரம்மா பேசுகிறாரா? விஷ்ணு பேசுகிறாரா? (யாரோ சொன்னார், சிவன் மற்றும் பிரம்மா பேசுகின்றனர் - விஷ்ணு மற்றும் சங்கர் பேசவில்லை) விஷ்ணுவின் இரண்டு ரூபங்கள் லட்சுமி-நாராயணர் எனச் சொல்கிறீர்கள் என்றால் அவர்கள் பேசவில்லையா என்ன? ஊமைகளா? (ஞானம் பேசுவதில்லை). நாம் ஞானத்தின் விஷயங்களைச் சொல்லவில்லை. பேசுவதைப் பற்றிய விஷயத்தைக் கேட்கிறேன். விஷ்ணு, லட்சுமி-நாராயணர் பேசுகின்றனரா? சங்கர் பேசவில்லை- அது சரி தான். மற்ற மூவரும் ஏன் பேச மாட்டார்கள்? விஷ்ணுவின் இரண்டு ரூபமாகிய லட்சுமி-நாராயணர் என்றால் அவசியம் பேசுவார்கள் இல்லையா? சிவபாபாவைப் பற்றி மனிதர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள், அவர் நிராகார் எப்படிப் பேசுவார்? குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், சிவபாபாவும் இவருக்குள் வந்து பேசுகிறார். பிரம்மாவும் கூட பேச வேண்டியுள்ளது. தத்தெடுக்கப்பட்டவர் அல்லவா? சந்நியாசிகளும் கூட தங்கள் பெயர்களை சந்நியாசத்திற்குப் பிறகு மாற்றுகின்றனர். நீங்களும் கூட சந்நியாசம் செய்திருக்கிறீர்கள். ஆகவே உங்கள் பெயர் மாற வேண்டும். முதலில் பாபா பெயர் வைத்தார். ஆனால் பார்த்தார்-பெயர் வைக்கப்பட்டவர்களும் கூட இறந்து போனார்கள் - அதாவது ஆச்சரியப்படும் வகையில் ஞானத்தைக் கேட்டார்கள், மற்றவர்களுக்கும் சொல்கிறார்கள், பிறகு பாபாவை விட்டு ஓடிப்போகிறார்கள். அதனால் எத்தனை பேருக்கு வைத்தாயிற்று, எத்தனைப் பேருக்கு வைப்பது? தற்சமயமோ மாயாவும் மிகவும் வேகமாக உள்ளது. புத்தி சொல்கிறது- லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்த போது அது விஷ்ணுபுரி எனச் சொல்லப்பட்டது. இந்த நோக்கம்-குறிக்கோள் புத்தியில் உள்ளது. விஷ்ணுவின் இரண்டு ரூபங்களான லட்சுமி-நாராயணர் ஆட்சி செய்கின்றனர் என்றால் ஏன் பேச மாட்டார்கள்? பாபா இங்குள்ள விசயத்தைப் பேசவில்லை. மனிதர்களோ சொல்வார்கள்-நிராகார் எப்படிப் பேசுவார் என்று? நிராகார் எப்படி வருகிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவரைப் பதீத பாவனர் எனச் சொல்கின்றனர். அவர் ஞானக்கடலாகவும் உள்ளார். சைதன்யமாகவும் உள்ளார். அன்பின் கடலாகவும் உள்ளார். இப்போது அன்பு பிரேரணை மூலம் ஏற்பட முடியாது. அவரும் இவருக்குள் பிரவேசமாகி குழந்தைகளிடம் அன்பு காட்ட முடியும் இல்லையா? அதனால் நாம் பரமபிதா பரமாத்மாவின் மடியில் இருக்கிறோம் எனச் சொல்கின்றனர். பாபா, உங்களோடு மட்டுமே உண்பேன், நீங்கள் சொல்வதையே கேட்பேன்....... புத்தி அந்தப் பக்கம் (நிராகாரரிடம்) சென்று விடுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் புத்தியில் வருவதில்லை. ஆக, பாபா குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார். உங்களைப் போல் சௌபாக்கியசாலி வேறு யாரும் கிடையாது. நாம் எவ்வளவு உயர்ந்த பார்ட்தாரி (நடிகர்) என்பதை நீங்கள் அறிவீர்கள். இது விளையாட்டு இல்லையா? இதற்கு முன்போ நீங்கள் எதுவும் அறியாதிருந்தீர்கள். இப்போது பாபா பிரவேசித்துள்ளார் என்றால் டிராமா பிளான் படி அவர் மூலமாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். தந்தை கூறுகிறார் : இனிமையிலும் இனிமையான குழந்தைகளே பாபா சரீரமில்லாதவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தை. இந்த விசயம் சாஸ்திரங்களில் எழுதப்படவில்லை. இப்போது உங்களுடையது பரந்த புத்தி. மாணவர்கள் படிக்கின்றனர் எனில் அவர்கள் புத்தியில் வரலாறு-புவியியல் முழுவதும் வருகிறது. ஆனால் பாபா எங்கு வசிக்கிறார் என்பது பற்றி யாருடைய புத்தியிலும் இல்லை. சரியான முறையில் நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள், மேலும் நடைமுறையில் அதைப் பற்றிய மகிழ்ச்சியும் இருக்கிறது. பாபா பரம் தாமத்திலிருந்து வந்து நமக்கு ஞானத்தை கற்பிக்கிறார். முழு நாளும் தங்களுக்குள் இந்த ஆன்மீக உரையாடல் மட்டுமே இருக்க வேண்டும். ஞானத்தைத் தவிர மற்ற விசயங்கள் அனைத்தும் அழிவை ஏற்படுத்தக் கூடியது. சரீர நிர்வாகத்திற்காக தொழில்கள் செய்யலாம், அத்துடன் இந்த ஆன்மீக சேவையும் செய்ய வேண்டும்.நீங்கள் அறிவீர்கள், நிச்சயமாக இந்த பாரதம் சொர்க்கமாக இருந்தது. இந்த லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. தேவதைகளின் சித்திரங்கள் என்னென்ன உள்ளனவோ, அவற்றின் யதார்த்த ஞானம் புத்தியில் வந்து விட்டுள்ளது. நம்பர் ஒன் லட்சுமி-நாராயணரின் சித்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், சிந்தனை செய்யுங்கள்- நிச்சயமாக இவர்கள் பாரதத்தில் அரசாட்சி செய்தனர் என்றால் ஒரே தர்மம் தான் இருந்தது. இரவு முடிந்து பகல் ஆரம்பமாயிற்று, அதாவது கலியுகம் முடிவடைந்து சத்யுகம் தொடங்கியது. கலியுகம் என்பது இரவு. சத்யுகம் என்பது காலைப்பொழுது. விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும்-இவர்கள் இந்த இராஜ்யத்தை எப்படி அடைந்தார்கள்? எப்படி சொல்லப்படுகிறது - கடலில் கல்லைப் போட்டால் அலைகள் எழும்பும் என்பது போல, நீங்களும் ஞான இரத்தின கற்களைப் போடுங்கள். மனிதர்களுக்குப் புரிய வையுங்கள். இந்தச் சிந்தனை செய்யுங்கள்-பாரதத்தில் தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது இல்லையா? அவர்கள் தான் பிறகு பக்தி மார்க்கத்தில் கோவில் கட்டியுள்ளனர். அதைப் பிறகு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது நேற்றைய விஷயம். இப்போது பக்தி மார்க்கம் உள்ளது என்றால் நிச்சயமாக அதன் பிறகு ஞான மார்க்கம் இருக்கும். இந்த அனைத்து விஷயங்களும் இப்போது தான் உங்கள் புத்தியில் உள்ளது. பாபாவும் வந்து தமது வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறார். உங்களுக்கு இந்த நினைவு ஏன் வருவதில்லை? பாபா வந்து நமக்கு இந்த ஞானம் முழுவதையும் சொல்கிறார். அதைப் புரிந்து கொள்வதற்கான புத்தியும் வேண்டும் இல்லையா? யாருக்கு வேண்டு மானாலும் இதே விஷயத்தைச் சொல்லுங்கள். இந்தச் சித்திரம் (லட்சுமி-நாராயணர்) நோக்கம் மற்றும் குறிக்கோளாகும். இந்த லட்சுமி-நாராயணரோ, அனைவரைக் காட்டிலும் பெரிய ராஜா-ராணி ஆகி இருந்தனர். பாரதம் சொர்க்கமாக இருந்தது இல்லையா? பிறகு இவர்கள் இந்த இராஜ சிம்மாசனத்தை எப்படி இழந்தார்கள்? தங்களின் குழந்தைகளும் இவை அனைத்தையும் கேட்டாலும் கூட புத்தியில் இந்த ஞானம் பதிவதில்லை. புத்தியில் நினைவும் கூட வருவதில்லை. நினைவு வருகிறது என்றால் மற்றவர்களுக்கும் அவர்கள் புரிய வைக்க முடியும். மிகவும் சுலபமானது தான். நீங்கள் இங்கே வருகிறீர்கள், லட்சுமி-நாராயணன் போல் ஆவதற்காக. இது 5000 ஆண்டுகளின் விஷயம் என்பது புரிய வைக்கப் பட்டுள்ளது. இதைவிட மிக நீண்ட காலத்துக்கு முன்பு என எதுவும் கிடையாது. இது அனைத்திலும் பழையதிலும் பழைய பாரதத்தின் கதையாகும். உண்மையில், உண்மையிலும் உண்மையான கதை என்பது இதுவாகத் தான் இருக்க வேண்டும். அனைத்திலும் பெரிய கதை இது தான். இவர்களுக்கு இராஜ்யம் இருந்தது. இப்போது இந்த இராஜ்யம் இல்லை. ஒரு சிறிதும் இது பற்றி யாருக்கும் தெரியாது. உங்கள் புத்தியில் நம்பர்வார் உள்ளது. பாபா சொல்கிறார் - என்னை நினைவு செய்யுங்கள். இதையும் முழுமையாக யாரும் நினைவு செய்வதில்லை. பாபா ஒரு புள்ளியாக உள்ளார். நாமும் புள்ளியாகவே இருக்கிறோம். இதுவும் கூட புத்தியில் நிற்பதில்லை. ஒரு சிலருடைய புத்தியிலோ நல்லபடியாக வெளிப்படுகின்றது. யாருக்காவது புரிய வைக்க வேண்டுமானால் 4-5 மணி நேரம் தேவைப்படுகிறது. இது மிகவும் அதிசயமான விசயங்கள். சத்திய நாராயணன் கதையை 2-3 மணி நேரம் அமர்ந்து கேட்கின்றனர். அது அவர்களின் மனதுக்குப் பிடித்ததாக உள்ளது. இதிலும் அது போல் தான். யாருக்கு அதிக ஆர்வம் உள்ளதோ, அவர்களுக்கு வேறு ஏதுவும் பிடிக்காது. இந்த விசயங்களைப் புரிந்து கொள்வதில் தான் மகிழ்ச்சி வருகிறது. இந்த விஷயங்கள் மிகவும் பிடித்துள்ளன. இந்த சேவையில் ஈடுபட்டு இருந்தாலே போதும், மற்ற வேலை-வெட்டிகளை விட்டு விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அது போலவோ யாரும் அமர வேண்டியதில்லை. ஆக, குழந்தைகள் நீங்கள் இந்த சத்திய நாராயணனின் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்கள் புத்தியில் எவ்வளவு நல்ல விஷயங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன! நாம் இந்த சாதனங்களைக் கொண்டு சேர்ப்பதற்கு எப்போதும் தயார் நிலையில் உள்ளோம். சாதனங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இந்தச் சித்திரங்களையும் நீங்கள் காட்டி யாருக்கும் புரிய வைக்க முடியும் - இந்த லட்சுமி- நாராயணருக்கு இந்த இராஜ்யம் எப்படிக் கிடைத்தது? எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் உலகின் எஜமானர்களாக இருந்தனர்? அச்சமயம் சிருஷ்டியில் மனிதர்கள் எவ்வளவு பேர் இருந்தனர்? இப்போது எவ்வளவு பேர் உள்ளனர்? கொஞ்சமாவது ஞானக் கருத்துகளை சிந்தனை செய்ய வேண்டும் (அமைதியில்) அப்போது விசார் சாகர் மந்தன் நடைபெறும். தங்களுடைய இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் உடனே ஞான அலைகள் உருவாகும் (அவர்களது புத்தியில் பதியும்). தங்களின் குலத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றால் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். போய் விடுவார்கள். இது நாடி பிடித்துப் பார்ப்பதற்கான விஷயம். நீங்கள் இந்த இனிமையிலும் இனிமையான ஞான விஷயங்கள் தவிர வேறு எதையும் பேசத் தேவையில்லை. ஞானத்தைத் தவிர வேறு எதையாவது பேசினால் அது கெடுதலை விளைவிக்கும் எனப் புரிந்து கொள்ளுங்கள். அதில் எந்த ஒரு சாரமும் இருக்காது. நம்மிடம் அந்த மாதிரி அநேகக் குழந்தைகள் உள்ளனர். அவர்களிடம் கேட்பதற்கான ஆர்வம் உள்ளது. பாபா புரிய வைக்கிறார் - தீய (தவறான) விஷயத்தையோ ஒரு போதும் கேட்கக் கூடாது. நன்மையின் விசயங்களை மட்டுமே கேளுங்கள். இல்லை என்றால் வீணாகத் தன்னை அழித்துக் கொண்டு விடுவீர்கள். பாபாவோ வந்து ஞானத்தையே உங்களுக்குச் சொல்கிறார். சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய இரகசியத்தைப் புரிய வைக்கிறார். பாபா சொல்கிறார், வேறு எதைப் பற்றியும் பேச வேண்டாம். இதில் அதிகமாக நேரத்தை வீணாக்குகிறீர்கள். இன்னார் இப்படி இருக்கிறார், அவர் இப்படிச் செய்கிறார்.... இது (விதி மீறல்) தீய செயல் எனச் சொல்லப்படுகிறது. உலகத்தின் விஷயம் வேறு. உங்களுக்கோ ஒவ்வொரு விநாடியும் மதிப்பு வாய்ந்தது. நீங்கள் ஒரு போதும் அப்படிப் பட்ட விஷயங்களைக் கேட்காதீர்கள். செய்யாதீர்கள். இதைவிட நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள். அதனால் உங்களுக்கு மிகுந்த வருமானம் உள்ளது. அங்கங்கே சென்று பாபாவின் அறிமுகம் கொடுங்கள். இதே ஆன்மிக சேவை செய்து கொண்டே இருங்கள்.உண்மையிலும் உண்மையான மகாவீர் நீங்கள் தான். நாள் முழுவதும் இதே ஈடுபாடு-அக்கறை இருக்க வேண்டும் - யாராவது இருக்கிறார்களா, (கண்டு பிடித்து) அவர்களுக்கு இந்த வழியைச் சொல்ல வேண்டும். பாபா சொல்கிறார்-அலஃப் (அல்லா) ஆகிய என்னை நினைவு செய்வீர்களானால் இராஜ பதவி கிடைத்து விடும். எவ்வளவு சுலபம்! இப்படியெல்லாம் போய் சேவை செய்ய வேண்டும். குழந்தைகள் சேவையின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். தனக்கும் மற்றவருக்கும் நன்மை செய்ய வேண்டும். பாபாவும் குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைப்பதற்காகவே வந்துள்ளார் இல்லையா? குழந்தைகள் நீங்களும் படிப்பதற்காகவும் மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதற்காகவும் வந்திருக்கிறீர்கள். நேரத்தை வீணாக்குவதற்கோ வெறுமனே ரொட்டி செய்வதற்கோ நீங்கள் வரவில்லை. நாள் முழுவதும் சேவை செய்வதில் தான் புத்தி செல்ல வேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) எந்த விஷயங்கள் தனக்குப் பயனுள்ளதாக இல்லையோ, அதைக் கேட்பது அல்லது சொல்வதில் தனது சமயத்தை வீணாக்கக் கூடாது. முடிந்த வரை படிப்பின் மீது முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.2) சதா குஷி மற்றும் ஊக்கத்தில் இருக்க வேண்டும் - நமக்குப் படிப்பு சொல்லித் தருபவர் யார்? புருஷார்த்தத்தை ஒரு போதும் விடக் கூடாது. வாயிலிருந்து ஞான இரத்தினங்களையே வெளிப்படுத்த வேண்டும்.வரதானம் :

விஸ்தாரத்தின் கவர்ச்சிகரமான விசயங்களில் இருந்து விலகி இருந்து, கடினமானதை சுலபமாக ஆக்கக் கூடிய சகஜயோகி ஆகுக.எப்போது தந்தையைப் பார்ப்பதற்கு பதிலாகப் பிரச்சினைகளைப் பார்க்கத் தொடங்குகிறீர்களோ, அப்போது அநேகக் கேள்விகள் எழுகின்றன. மேலும் சகஜமான விஷயமும் கடினமானதாக அனுபவமாகத் தொடங்கி விடும். ஏனென்றால் பிரச்சினைகள் என்பவை மரம். மற்றும் பாபா விதையாக உள்ளார். யார் விசயங்களை விஸ்தாரமாக்கி கையில் எடுக்கின்றனரோ, அவர்கள் பாபாவை விலக்கி வைத்து விடுகின்றனர். பிறகு விஸ்தாரம் ஒரு வலையாக ஆகிவிடுகின்றது. அதில் சிக்கிக் கொண்டே செல்கின்றனர். பிரச்சினைகளின் விஸ்தாரத்தில் வண்ணமயமான கவரக்கூடிய விசயங்கள் உள்ளன. அவை தங்களின் பக்கமாகக் கவர்ந்திழுத்துக் கொள்கின்றன. அதனால் விதை வடிவமான தந்தையின் நினைவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்து, அதிலிருந்து விலகி விடுங்கள். அப்போது சகஜயோகி ஆகி விடுவீர்கள்.சுலோகன் :

நான் மற்றும் எனது என்ற கறையை (அகங்காரத்தை) முடித்து விடுவது தான் உண்மையான தங்கமாக ஆவதாகும்.


***OM SHANTI***