BK Murli 17 October 2016 Tamil

BK Murli 17 October 2016 Tamil

17.10.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! இதுவரை நீங்கள் யாருடைய மகிமையைப் பாடிக் கொண்டிருந்தீர்களோ அவரே உங்கள் முன்பாக இருக்கிறார். ஆகவே எப்போதும் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே இருங்கள். எந்த விஷயத்திலும் துன்பம் வேண்டாம்.கேள்வி :

முயற்சி செய்யக் கூடிய குழந்தைகள் தன்னுடைய மனதிற்குள் அவசியம் என்ன சோதிக்க வேண்டும்?பதில்:

ஆத்மாவாகிய எனக்குள் இது வரை சிறிய பெரிய முள் எதுவும் இல்லையா? காமத்தின் முள் எல்லாவற்றையும் விட கூர்மையானது. கோபம் என்கிற முள் கூட மிகவும் கெட்டது. தேவதைகள் கோபப்படு வதில்லை. ஆகையால் இனிமையான குழந்தைகளே ! ஏதாவது முள் இருந்தால் நீக்கி விடுங்கள். தனக்கு தானே நஷ்டம் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.பாடல் :

தாயும் நீயே, தந்தையும் நீயே.....ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் தன்னுடைய தந்தையின் மகிமையைக் கேட்டீர்களா? அவர்கள் பாடிக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே நீங்கள் நடைமுறையில் அந்த தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். பாபா நம் மூலமாக பாரதத்தை சொர்க்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என அறிகிறீர்கள். யார் மூலமாக மாற்றுகின்ராறோ நிச்சயமாக அவர்களே சுகதாமத்திற்கு அதிபதியாவார்கள். குழந்தைகளுக்கு மிகவும் குஷி இருக்க வேண்டும். பாபாவின் மகிமைகள் அளவு கடந்தது. அவரிடமிருந்து நாம் ஆஸ்தியை அடைந்துக் கொண்டிருக்கிறோம். இப்போது குழந்தைகளாகிய உங்கள் மீது மட்டும் அல்லாமல் முழு உலகத்திற்கும் குரு தசை இருக்கிறது. இதை பிராமணர்களாகிய நீங்கள் தான் அறிகிறீர்கள். முக்கியமாக பாரதம் மற்றும் உலகம் முழுவதின் மீதும் குரு தசை இருக்கிறது. 16 கலைகளிலும் நிறைந்தவர்களாக மாறுகிறீர்கள். இச்சமயமோ எந்த ஒரு கலையும் இல்லை. குழந்தைகளுக்கு நிறைய குஷி இருக்க வேண்டும். இங்கே இருக்கும் போது குஷி இருக்கிறது. வெளியில் சென்றதும் மறைந்து போகிறது. அவ்வாறு இருக்கக் கூடாது. யாருடைய மகிமையைப் பாடிக் கொண்டிருந்தீர்களோ அவர் உங்கள் முன்பாக இருக்கிறார். 5000 வருடத்திற்கு முன்பு கூட இராஜ்யத்தை கொடுத்து விட்டு சென்றார் என பாபா புரிய வைக்கிறார். இன்னும் போகப் போக அனைவரும் அழைத்துக் கொண்டே இருப்பார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். அதாவது ஒரு தர்மம், ஒரு இராஜ்யம், ஒரு மொழி என்று சிலர் சொல்கிறார்கள். அது போன்று உங்களுடைய சுலோகனை கூட சொல்வார்கள். அவைகளையும் ஆத்மாக்கள் தான் கூறுகிறது அல்லவா? உண்மையில் பாரதத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என ஆத்மா அறிகிறது. இந்த நறுமணம் பரவிக் கொண்டே போகும். நீங்கள் நறுமணத்தை பரப்பிக் கொண்டே செல்கிறீர்கள். நாடகத்தின் படி போரின் அறிகுறி எதிரில் நிற்கிறது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. பாரதம் 16 கலைகளிலும் நிறைந்ததாக நிச்சயம் மாற வேண்டும். நாம் இந்த யோக பலத்தினால் 16 கலைகளில் சம்பூரணமாக மாறிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். தானம் அளித்தால் கிரகச்சாரம் விலகி போகும் என கூறுகிறார்கள் அல்லவா ! விகாரங்கள், அவகுணங்களை தானமாக அளியுங்கள் என பாபாவும் கூறுகின்றார். இது இராவண இராஜ்யம் அல்லவா! பாபா வந்து இவைகளிலிருந்து விடுவிக்கின்றார். இதில் கூட காம விகாரம் மிகப் பெரிய அவகுணமாகும். நீங்கள் தேக உணர்வுடையவராகிவிட்டீர்கள். இப்போது ஆத்ம உணர்வுடையவராக வேண்டும். சரீரத்தின் உணர்வை விட்டு விட வேண்டும். இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்துக் கொள்கிறீர்கள். உலகத்தினர் அறியவில்லை. பாரதம் 16 கலைகளிலும் நிரம்பியதாக இருந்தது. சம்பூரண தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இந்த லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்போது 5 விகாரங்களின் கிரகச்சாரம் பிடித்திருக்கிறது. தானம் அளித்தால் கிரகணங்கள் விலகிப் போகும் என பாபா கூறுகின்றார். இந்த காம விகாரம் தான் விழ வைக்கக் கூடியதாக இருந்தது. இந்த தானத்தை அளித்தால் 16 கலைகளில் நிரம்பி யவராகலாம் என பாபா கூறுகின்றார். கொடுக்கவில்லை என்றால் மாற மாட்டீர்கள். ஆத்மாக்களுக்கு தனக்கென்று பாகம் கிடைத்திருக்கிறது அல்லவா? இது கூட உங்களுடைய புத்தியில் இருக்கிறது. உங்களுடைய ஆத்மாவில் எவ்வளவு பாகம் இருக்கிறது. நீங்கள் உலகத்தின் இராஜ்ய பாக்கியத்தை அடைகிறீர்கள். இது எல்லையற்ற நாடகமாகும். அளவற்ற நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் முதன்மையான நடிகர்கள் லஷ்மி நாராயணன் ஆவர். அவர்களுடையது நம்பர் ஒன் பார்ட் ஆகும். விஷ்ணுவிலிருந்து பிரம்மா சரஸ்வதி, பிரம்மா சரஸ்வதியிலிருந்து விஷ்ணு ஆகிறார்கள். இந்த 84 பிறவிகளின் சக்கரம் எப்படி சுழல்கின்றது, அது அனைத்தும் புத்தியில் வந்து விடுகிறது. வியாபாரிகள் கணக்கு வைக்கும் போது அதில் ஸ்வஸ்திக் போடுகிறார்கள். கன்ணஷின் பூஜை கூட செய்கிறார்கள். இது எல்லையற்ற கணக்காகும். ஸ்வஸ்திக்கில் 4 பாகம் இருக்கிறது. எப்படி பூரியில் (ஜெகந்நாத் கோவில்) சாதத்தின் அண்டாவை வைக்கிறார்கள். அது வெந்ததும் 4 பாகமாகிறது. அங்கே அது தான் பிரசாதமாக படைக்கப்படுகிறது. இப்போது குழந்தைகளாகிய உங்களை யார் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் இனிமையான தந்தை வந்து உங்களுடைய வேலைக்காரனாகி இருக்கிறார். உங்களின் சேவை செய்கிறார். ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என மனிதர்கள் கூறுகிறார்கள். ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் இருக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். அவைகளை எதுவும் ஒட்டாது என கூறினால் எவ்வளவு இரவு பகல் வித்தியாசம் ஆகிவிடுகிறது. யாராவது நன்கு ஒரு மாதம் ஒன்றரை மாதம் உட்கார்ந்து புரிய வைத்தால் தான் கருத்துக்கள் புத்தியில் பதியும். ஒவ்வொரு நாளும் கருத்துக்கள் நிறைய வந்துக் கொண்டே இருக்கின்றன. இது கஸ்தூரி போன்றாகும். சாஸ்திரங்களில் எந்த சாரமும் இல்லை. அவைகளை புத்தியிலிருந்து வெளியே எடுத்து விடுங்கள் என பாபா கூறுகின்றார். ஞானக் கடல் மீது முழுமையாக நிச்சயம் வரும் போது தான் இது அனைத்தும் முற்றிலும் பக்தி மார்க்கம் (வழி) என்பதைப் புரிந்துக் கொள்வார்கள். பரம்பிதா பரமாத்மாவே வந்து துர்க்கதியிலிருந்து சத்கதி அளிக்கிறார். ஏணிப்படியில் கூட தெளிவாகக் காட்ட வேண்டும். பக்தி மார்க்கம் ஆரம்பம் ஆகியதுமே இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆகிறது. இப்போது கீதையின் பாகம் திரும்ப நடந்துக் கொண்டிருக்கிறது. நான் கல்ப கல்பமாக கல்பத்தின் சங்கமத்தில் வருகிறேன் என பாபா கூறுகிறார். பிறகு அவர்களோ ஆமை, மீன் அவதாரம் என கூறிவிட்டனர். 24 அவதாரம் என்கிறார்கள். இப்போது உங்கள் மீது குரு தசை இருக்கிறது என பாபா கூறுகிறார். நான் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றினேன். இப்போது இராவணன் இராகு திசையில் அமர வைத்து விட்டான். இப்போது மீண்டும் சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுவதற்காக தந்தை வந்திருக்கின்றார். எனவே தனக்குத் தானே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. வியாபாரிகள் தனது கணக்கை எப்போதும் சரியாக வைக்கிறார்கள். நஷ்டம் அடைபவர்களுக்கு அறிவில்லாதவர்கள் என கூறப்படுகிறது. இப்போதோ இவர் அனைவரையும் விட பெரிய வியாபாரி ஆவார். யாராவது ஒரு சில வியாபாரி தான் இந்த வியாபரத்தைச் செய்வர். இது அழிவற்ற வியாபாரமாகும். மற்ற வியாபாரங்கள் அனைத்தும் மண்ணோடு கலந்து போகும். இப்போது உங்களுடைய உண்மையான வியாபாரம் நடந்துக் கொண்டிருக்கிறது. பாபா எல்லையற்ற ஒப்பந்ததாரர், இரத்தின வியாபாரி..... மேலும் ஞானக் கடல் என்றும் கூறப்படுகிறது. படக் கண்காட்சிகளில் எத்தனை பேர் வருகிறார்கள் பாருங்கள். சென்டரில் ஒரு சிலரே கஷ்டப்பட்டு வருகிறார்கள். பாரதம் மிகப் பெரியதாக நீண்டு இருக்கிறது. அனைத்து இடங்களுக்கும் நீங்கள் செல்ல வேண்டும். நீருள்ள கங்கைகள் முழு பாரதத்திலும் நீருடைய கங்கை ஒன்றும் பதீத பாவனி கிடையாது என்பதை நீங்கள் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஞான கங்கைகளாகிய நீங்கள் போக வேண்டும். நாலாபுறங்களிலும் படக் கண்காட்சிகள் திருவிழாக்கள் செய்துக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நாளும் நல்ல நல்ல சித்திரங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். இவர்கள் சரியாகப் புரிய வைக்கிறார்கள் என்று பார்க்கும் போதே மகிழ்ச்சி ஏற்படுகின்ற வகையில் மிகவும் அழகான சித்திரங்கள் இருக்க வேண்டும். இப்போது லஷ்மி நாராயணனின் இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்போது பிராமண தர்மத்தின் ஸ்தாபனை நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த பிராமணர்கள் தான் தேவி தேவதைகளாக மாறுகிறார்கள். இப்போது நீங்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் மனதில் நமக்குள் ஏதாவது சிறிய பெரிய முள் இல்லையா என்று கேட்டுக் கொள்ளுங்கள். காமத்தின் முள் எதுவும் இல்லையே? கோபத்தின் சிறிய முள் கூட மிகவும் மோசமானது. தேவதைகள் கோபப்படமாட்டார்கள். சங்கர் கண்களைத் திறந்தால் உலகம் அழிந்து விடும் என காண்பிக்கிறார்கள். இவ்வாறு ஒரு களங்கம் ஏற்பட்டிருக்கிறது. அழியத்தான் போகின்றது. சூட்சும வதனத்தில் எந்த பாம்பும் இருக்க முடியாது. அங்கே பாம்பு வருவதற்கு பூமி எங்கே இருக்கிறது? ஆகாயத்தில் பாம்பு சுற்ற முடியாது. சூட்சும வதனத்திலும் மூல வதனத்திலும் தோட்டமோ, பாம்போ எதுவும் இருக்காது. இது அனைத்தும் இங்கே இருக்கிறது. சொர்க்கம் கூட இங்கே தான் இருக்கிறது. இச்சமயம் மனிதர்கள் முள் போன்று இருக்கிறார்கள். ஆகையால் இதற்கு முள் காடு என கூறப்படு கிறது. சத்யுகம் மலர்களின் தோட்டமாகும். பாபா எவ்வாறு தோட்டத்தை உருவாக்குகிறார் என நீங்கள் பார்க்கிறீர்கள், மிகவும் அழகாக மாற்றுகின்றார். அனைவரையும் அழகாக மாற்றுகிறார். அவர் எப்போதுமே அழகாக இருக்கிறார். அனைத்து மணப்பெண்களையும் அதாவது குழந்தைகளையும் அழகாக மாற்றுகிறார். இராவணன் முற்றிலும் கருப்பாக இருக்கிறான். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நம் மீது பிரகஸ்பதி தசை இருக்கிறது என்ற மகிழ்ச்சி இருக்க வேண்டும். பாதி காலம், துக்கம் பாதி காலம் சுகம் என்றால் இதில் என்ன நன்மை இருக்கிறது? இல்லை ! மூன்று பங்கு சுகமாகும். இவ்வாறு இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாடகம் ஏன் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது என பலர் கேட்கிறார்கள். இதுவோ அனாதி அல்லவா? ஏன் உருவாக்கப்பட்டது என்ற கேள்விளை எழுப்ப முடியாது. இது அனாதி அழிவற்ற ஏற்கனவே உருவாக்கப்பட்ட நாடகம் ஆகும். நடந்த நிச்சயிக்கப்பட்ட நடந்துக் கொண்டிருக்கின்ற..... யாருக்கும் மோட்சம் கிடைப்பதில்லை. இதுவோ அனாதி சிருஷ்டி சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கிறது. சுற்றிக் கொண்டே இருக்கும். பிரளயம் நடப்பதில்லை. பாபா புது உலகத்தை உருவாக்குகின்றார். ஆனால் இதில் எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருக்கிறது. மனிதர்கள் பதீதமாக துக்கம் அடையும் போது தான் அழைக்கிறார்கள். பாபா வந்து அனைவரின் உடலையும் கல்ப விருக்ஷ்ம் போன்று மாற்றுகின்றார். உங்களுடைய ஆத்மா தூய்மையாகி விடுகிறது என்றால் உடலும் தூய்மையாகக் கிடைக்கும். பாபா உங்களுடைய உடலை கல்பதருவாக மாற்றுகின்றார். அரைக் கல்பத்திற்கு ஒரு போதும் உங்களுக்கு அகால மரணம் ஏற்படாது. நீங்கள் காலனை வெற்றி அடைகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் முயற்சி செய்ய வேண்டும். எவ்வளவு உயர்ந்த பதவி அடைகிறீர்களோ அவ்வளவு நல்லது. ஒவ்வொருவரும் அதிக வருமானத்திற்காக முயற்சி செய்கிறார்கள். விறகு விற்பவர்கள் கூட நாம் நிறைய கட்டைகளை எடுத்துச் சென்றால் அதிகமாக சம்பாதிக்கலாம் என கூறுவார்கள். சிலரோ ஏமாற்றிக் கூட சம்பாதிக்கிறார்கள். அங்கே இது போன்று துக்கப்படுவதற்கான விஷயம் கிடையாது. இப்பொழுது நீங்கள் தந்தையிடமிருந்து எவ்வளவு சொத்தை அடைகிறீர்கள். நாம் சொர்க்கத்திற்குச் செல்வதற்கு தகுதியை அடைந்து விட்டோமா என்று தன்னையே சோதித்துக் கொள்ள வேண்டும் (நாரதரின் எடுத்துக்காட்டு). சாஸ்திரங்களில் நிறைய விஷயங்களை எழுதி விட்டனர். இந்த தீர்த்த யாத்திரை போன்ற அனைத்தையும் விடுங்கள். நாலாபுரங்களிலும் சுற்றி அலைந்தோம். இருப்பினும்...... பாடல் கூட இருக்கிறதல்லவா& இப்போது பாபா உங்களுக்கு எவ்வளவு நல்ல யாத்திரையைக் கற்பிக்கின்றார். இதில் எந்த துன்பமும் இல்லை. என்னை மட்டும் நினைத்தால் விகர்மம் அழிந்து போகும் என்று மட்டும் பாபா கூறுகின்றார். மிகவும் நல்ல யுக்திகளை உங்களுக்குக் கூறுகின்றேன். குழந்தைகள் கேட்கிறீர்கள். இது என்னுடைய கடனாக பெறப்பட்ட ரதமாகும். இந்த தந்தைக்கு எவ்வளவு மதிப்பு ஏற்படுகிறது. நான் பாபாவிற்கு எனது உடலைக் கடனாகக் கொடுத்திருக்கிறேன். பாபா என்னை உலகத்திற்கே அதிபதியாக மாற்றுகிறார். பெயர் கூட பாக்கிய ரதம் ஆகும். அணுகுண்டு போன்றவைகள் தயாராகிக் கொண்டு இருக்கிறது என உங்களுக்குத் தெரியும். தீப்பற்றி எரியத்தான் வேண்டும். அடிப்பதற்காக இராவணனின் கொடும் பாவி செய்கிறார்கள். இங்கே அடிப்பது போன்ற விஷயங்கள் எதுவும் கிடையாது. எங்கே அடிப்பது, எங்கே இந்த இராவணபுரி. முடிந்து கொண்டு இருக்கிறது, குழந்தைகளாகிய நீங்கள் இராமபுரிக்கு செல்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். எனவே முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். முள்ளாகக் கூடாது.நீங்கள் பிராமண பிராமணிகள் அனைத்திற்கும் ஆதாரம் முரளி ஆகும். முரளி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள், ஒரு பிராமணி தான் முரளி சொல்ல வேண்டும் என்பது கிடையாது. யார் வேண்டுமானாலும் முரளியைப் படித்து சொல்லலாம். இன்று நீங்கள் கூறுங்கள் என்று சொல்ல வேண்டும். இப்போது புரிய வைப்பதற்காக நல்ல படங்கள் கூட உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த முக்கியப் படங்களை தங்களின் கடையில் வைத்து நிறைய பேருக்கு நன்மை செய்யலாம். அந்த வியாபாரத்தின் கூடவே இந்த வியாபாரத்தையும் செய்யுங்கள். இது பாபாவின் அழிவற்ற ஞான ரத்தினங்களின் கடையாகும். கட்டிடங்களை கட்டாதீர்கள் என்றெல்லாம் பாபா எதையும் தடுக்கவில்லை. நல்லது கட்டுங்கள். பைசாவோ மண்ணோடு கலக்கப்போகிறது. இதைக் காட்டிலும் வீடு கட்டி ஏன் வசதியாக இருக்க கூடாது. பணத்தை பயன்படுத்த வேண்டும். வீடு கட்டுங்கள். சாப்பிடுவதற்காக வைத்துக் கொள்ளுங்கள், தான- புண்ணியமும் செய்யுங்கள். காஷ்மீர் இராஜா இறந்ததும் தனது தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் ஆரிய சமாஜத்தினருக்கு தானமாக கொடுத்து விட்டார். தனது தர்மத்திற்கு என்று செய்கிறார்கள் அல்லவா? இங்கே இது போன்ற விஷயங்கள் கிடையாது. அனைவரும் குழந்தைகள். தானம் போன்ற எந்த விஷயமும் இல்லை. அது எல்லைக்குட்பட்ட தானம் ஆகும். நானோ உங்களுக்கு உலகத்தின் இராஜ்ய பதவியை கொடுக்கிறேன். நாடகத்தின் படி பாரத நாட்டினர் தான் இராஜ்ஜிய பாக்கியத்தை அடைகிறார்கள். பக்தி வழியினர் சிறிதளவாவது தர்மத்திற்கென எடுத்து வைக்கின்றார்கள். அதன் பலன் அடுத்த பிறவியில் அல்பகாலத்திற்குக் கிடைக்கின்றது. இப்பொழுதோ நான் நேரடியாக வந்திருக்கிறேன் என்றால் நீங்கள் இந்த காரியத்தைப் பயன்படுத்துங்கள். எனக்கு ஒன்றும் தேவையில்லை. சிவபாபா தனக்காக வீடு கட்ட வேண்டுமா? இது அனைத்தும் பிராமணர்களுக்காகும். ஏழை, பணக்காரர் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். எனவே இது அனைத்தும் குழந்தைகளுக்காகத் தான். இவர்கள் வீட்டில் எவ்வளவு வசதியாக இருக்கிறார்கள் என்று பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காகத் தான் அனைவரையும் உபசரியுங்கள் என்று கூற வேண்டியிருக்கிறது. ஏதாவது பொருள் இல்லை என்றால் கிடைத்து விடும். பாபாவிற்கு குழந்தைகள் மீது அன்பு இருக்கிறது. இவ்வளவு அன்பு வேறு யாரும் வைக்க முடியாது. முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுக்காக வழியைக் கண்டுபிடியுங்கள் என குழந்தைகளுக்கு எவ்வளவு புரிய வைக்கப்படுகிறது. இங்கே மூன்றடி நிலம் தான் வேண்டும், அதில் குழந்தைகள் புரிய வைத்து கொண்டேயிருக்க வேண்டும். யாரிடமாவது பெரிய ஹால் இருந்தால் அவர்களிடம் நாங்கள் முக்கியமான படத்தை வைக்கின்றோம், ஒருமணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் காலை மாலை வகுப்பு எடுத்து விட்டு சென்று விடுவோம், செலவு முழுவதும் எங்களுடையது, பெயர் உங்களுடையதாக இருக்கும், பல பேர் வந்து கிளிஞ்சலில் இருந்து வைரமாக மாறுவர்கள் என கூறுங்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. அழிவற்ற தந்தையிடமிருந்து உண்மையிலும் உண்மையான அழிவற்ற வியாபாரம் செய்ய வேண்டும். அந்த வியாபாரத்துடன் இந்த வியாபாரத்திற்கும் நேரம் தரவும். ஞான கங்கையாகி அனைவரும் தூய்மையாக மாற்ற வேண்டும்.2. பிராமண வாழ்க்கையின் ஆதாரம் முரளியாகும். அதை அன்போடு கேட்கவும், சொல்லவும் வேண்டும். உள்ளுக்குள் ஏதாவது முள் இருந்தால் அதை நீக்கி விடவும். அவகுணங்களை தானமாக கொடுத்து விடவும்.வரதானம் :

தமோகுண வாயு மண்டலத்திலும் தனது நிலையை ஒரே நிலையில் ஆடாது அசையாது வைக்கக்கூடிய மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகுக.ஒவ்வொரு நாளும் சூழ்நிலைகள் மிகவும் தமோபிரதானமாக மாறுகின்றது. வாயு மண்டலம் இன்னும் கெட்டுப் போகும். இப்படிப்பட்ட வாயுமண்டலத்தில் தாமரை மலருக்கு சமமாக விடுபட்டு இருங்கள், தனது நிலையை சதோபிரதானமாக மாற்றுங்கள். இதற்கு இவ்வளவு தைரியம் அல்லது சக்தி அவசியம் ஆகும். நான் மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற வரதானம் நினைவில் இருக்கும் பொழுது இயற்கை மூலமாக, லௌகீக உறவுகள் மூலமாக, தெய்வீக பரிவாரத்தின் மூலமாக எந்த ஒரு பரீட்சை வந்தாலும் அதில் எப்போதும் ஒரே நிலையில் ஆடாமல் அசையால் இருக்கலாம்.சுலோகன் :

வரமளிக்கும் வள்ளல் பாபாவை தன்னுடைய உண்மையான துணைவன் ஆக்கிக் கொண்டால் வரதானங்களினால் பையை நிரப்பிக் கொள்ளலாம்.


***OM SHANTI***