BK Murli 18 October 2016 Tamil

BK Murli 18 October 2016 Tamil

18.10.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! இப்பொழுது கற்றுக் கொள்வதுடன் கூடவே ஆசிரியராக ஆகி கற்பிக்கவும் வேண்டும். இந்த படிப்பு இந்த கடைசி பிறவிக்காக மட்டுமே உள்ளது. எனவே நல்ல முறையில் கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் கற்பியுங்கள்.கேள்வி:

சத்யுக ராஜாங்கம் எந்த ஆதாரத்தில் ஸ்தாபனை ஆகிறது?பதில்:

சங்கமத்தின் படிப்பின் ஆதாரத்தில். யார் நல்ல முறையில் படிக்கிறார்கள் அல்லது யார் மீது (பிரஹஸ்பதி) குருதசை உள்ளதோ அவர்கள் சூரிய வம்சத்தில் வருகிறார்கள். யார் படிப்பதில்லையோ மற்றும் சேவை செய்வதில்லையோ அவர்கள் மீது புத்துவின் தசை அமருகிறது. அவர்கள் புத்து - முட்டாள்கள் போல. அவர்கள் பிரஜையில் வந்து விடுகிறார்கள். உயர்ந்த பிரஜை, வேலைக்காரர்கள், ஊழியர்கள் ஆகிய எல்லோருமே இப்பொழுதைய படிப்பின் ஆதாரத்தில் தான் ஆகிறார்கள்.ஓம் சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகளுக்காக அல்லது ஆத்மாக்களுக்கு ஆன்மீகத் தந்தை அதாவது பரமாத்மா வந்து புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். ஆன்மீகத் தந்தைக்கு பரமாத்மா என்று கூறப்படுகிறது. அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒரு பரமபிதா பரமாத்மா ஆவார். அவர் அமர்ந்து பிரம்மாவின் உடல் மூலமாக புரிய வைக்கிறார். பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் திரிமூர்த்தி பிரம்மா என்று கூறுகிறார்கள். இப்பொழுது பிராமணர்களாகிய நீங்கள் அது போல கூறமாட்டீர்கள். நீங்கள் திரிமூர்த்தி சிவன் அதாவது பிரம்மா, விஷ்ணு, சங்கரனின் படைப்புக்கர்த்தா சிவன் என்று கூறுவீர்கள். திரிமூர்த்தி பிரம்மா என்பதற்கு எந்த பொருளும் வெளிப்படுவதில்லை. இந்த மூன்று தேவதைகளின் படைப்புக்கர்த்தாவே சிவன் ஆவார். எனவே திரிமூர்த்தி சிவன் என்று கூறப்படுகிறது. படைப்புக்கர்த்தா ஒருவர் மற்ற எல்லாமே படைப்பு ஆகும். எல்லையில்லாத தந்தை ஒரே ஒருவர் ஆவார். லௌகீக தந்தை ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக இருப்பார்கள். இச்சமயத்தில் எல்லோரும் சிவபாபாவின் குழந்தைகளாகி உள்ளார்கள். ஆத்மாக்களாகிய நாம் 84 பிறவியின் சக்கரம் சுற்றி வருகிறோம் என்பது குழந்தை களுக்குத் தெரியும். அப்பொழுது எல்லைக்குட்பட்ட 84 தந்தையர் அமைகிறார்கள். சத்யுகத்தில் கூட தாய் தந்தையர் ஒன்றும் எல்லையில்லாத ஆஸ்தி அளிப்பது இல்லை. சத்யுகத்திற்கான எல்லையில்லாத ஆஸ்தி இப்பொழுது உங்களுக்குக் கிடைக்கிறது. அங்கு இலட்சுமி நாராயணரின் இராஜதானி இருக்கிறது. மேலும், யாரெல்லாம் இராஜ்யம் உடைய இராஜாக்கள் இருப்பார்களோ அவர்களுடைய குழந்தைகளுக்கு தங்களுடைய தந்தையின் ஆஸ்தி கிடைக்கும். இருந்தாலும் அங்கு சுகம் நிறைய இருக்கும். இச்சமயத்தில் உங்களை எல்லையில்லாத தந்தை, எல்லையில்லாத உலகிற்கு அதிபதி ஆக்குகிறார். 21 பிறவிகளுக்கு எப்பொழுதிற்குமான சுகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. அங்கு துக்கத்தின் பெயர் அடையாளம் இருக்காது. வாம மார்க்கம் (விகார வழி) ஆரம்பமான உடனேயே துக்கம் ஆரம்பமாகி விடுகிறது. யார் வந்தாலும் உங்களுக்கு இரண்டு தந்தையர் இருக்கிறார்கள் என்பதைப் புரிய வையுங்கள். 84 பிறவிகளில் 84 எல்லைக்குட்பட்ட தந்தையர்கள் கிடைக்கிறார்கள். எல்லையில்லாத தந்தை ஒரே ஒருவர் ஆவார். மூலவதனம் என்ன என்ற அறிவு கூட இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. நீங்கள் படத்தில் காண்பிக்கும் மூலவதனத்தைக் கூட பெரிது பெரியதாக அமைக்க வேண்டும். அதில் சிறு சிறு ஆத்மாக்கள் நட்சத்திரங்கள் போல தென்பட வேண்டும். படம் பெரியதாக இருக்க வேண்டும். அதில் சிறு சிறு ஆத்மாக்கள் நட்சத்திரம் போல பிரகாசித்துக் கொண்டு இருக்க வேண்டும். எப்படி முன்பு நீங்கள் மின் மினிப் பூச்சியின் மாலை அமைத்துக் கொண்டிருந்தீர்கள், அதேப் போல இந்த மூலவதனத்தினுடையதும் அமைக்க வேண்டும். புரொஜெக்டர் ஷோ காண்பிக்கிறீர்கள் என்றால், அதில் கூட மூலவதனத்தின் படத்தை இது போல காண்பிக்க வேண்டும். விருட்சம் பெரியதாக இருக்க வேண்டும். அப்பொழுது ஆத்மாக்களாகிய நாம் அங்கு இருக்கிறோம் என்பது தெளிவாகத் தென்படும். குழந்தைகளுக்கு புரிய வைப்பதிலும் சுலபமாக இருக்கும். இவர் எல்லையில்லாத பாபா ஆவார். அவர் பிரம்மா மூலமாக தெய்வீக சம்பிரதாயத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது நீங்கள் பிராமணர் ஆவீர்கள். பிறகு தெய்வீக குணங்கள் உடைய தேவதையாக ஆகிடுவீர்கள். இப்பொழுது எல்லோரிடமும் அசுர குணங்கள் உள்ளது. அதற்கு அசுர அவகுணங்கள் என்பார்கள். வாம மார்க்கத்திலிருந்து துக்கம் ஆரம்ப மாகிறது. அப்படியின்றி இரஜோபிரதானம் ஆன உடனேயே சட்டென்று துக்கமுடையவர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதல்ல. சிறிது சிறிதாக கலைகள் குறைந்து கொண்டே போகிறது. திரி மூர்த்தி, கால சக்கரம் மற்றும் நரகம் சொர்க்கத்தின் உருண்டைகள் இவையே முக்கியமான படங்கள் ஆகும். முதன் முதலில் புரிய வைப்பதற்கு இவை மிகவும் அவசியம் ஆகும். விருட்சத்தின் படத்தில் கூட பாதிப் பாதி கல்பத்தின் அளவு முழுமையாக இருக்கிறது. மிகக் கச்சிதமாக இருக்கும் பொழுது முழுமையாக புரிய வைக்க முடியும். இந்த ஞானத்தை தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. அடிக்கடி புரிய வைப்பதற்காக திரி மூர்த்தியின் படம் அவசியம் வேண்டும். இவர் நிராகார எல்லையில்லாத தந்தை ஆவார். அவரை எல்லோரும் நினைவு செய்கிறார்கள். அவர் நமது எல்லையில்லாத தந்தை ஆவார் என்பதை ஆத்மா அறிந்திருக்கிறது. அவர்களை துக்கத்தில் எல்லோரும் நினைவு செய்கிறார்கள். சத்யுகத்தில் நினைவு செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. அது இருப்பதே சுகதாமமாக! தேவதைகள் தான் மறுபிறவி எடுத்துக் கொண்டே வந்துள்ளார்கள். இது கூட யாருக்குமே தெரியாது.சதோபிரதான நிலையிலிருந்து நாம் எப்படி சதோ ரஜோ தமோவில் வருகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆத்மாவில் துரு ஏறிக் கொண்டே போகிறது. நாம் 84 பிறவிகளின் பாகம் ஏற்று நடிக்க வேண்டும் என்பதை உங்களது ஆத்மா அறிந்துள்ளது. அது மிகச் சரியாக நமது ஆத்மாவில் பொருந்தி உள்ளது. எவ்வளவு சிறிய ஆத்மாவில் முழு பாகம் பொருந்தி உள்ளது. இது ஆழத்திலும் ஆழமான புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். எந்த ஒரு மனிதன், சந்நியாசி, விரக்தியுடையவர்கள் ஆகியோரின் புத்தியில் இந்த விஷயங்கள் வர முடியாது. நாடகம் என்று கூறுகிறார்கள். நாடகத்திற்கு டிராமா என்று கூறப்படுவதில்லை. இது டிராமா ஆகும். டிராமா, திரைப்படம் ஆகியவை முன்பு இருக்கவில்லை. முதலில் ஊமைப்படம் இருந்தது. இப்பொழுது பேசும்படம் ஆகி உள்ளது. ஆத்மாக்களாகிய நாம் கூட மௌனத்திலிருந்து பேசும் உலகிற்கு வருகிறோம். பேசும் உலகத்திலிருந்து பிறகு (மூவி) சூட்சும உலகிற்கு சென்று பிறகு சைலன்ஸில் சென்று விடுகிறோம். எனவே அதிகமாக பேச்சில் வராதீர்கள் என்று குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ராயல் மனிதர்கள் மிகவும் மெதுவாக பேசுவார்கள். நீங்கள் சூட்சுமவதனத்திற்கு செல்ல வேண்டும். சூட்சுமவதனத்தின் ஞானத்தை இப்பொழுது தந்தை புரிய வைத்துள்ளார். இது பேசும் உலகமாகும். அது அசைவுகளின் உலகம். அங்கு இறைவனிடம் உரையாடல் நிகழ்கிறது. அங்கு வெண்மையான ஒளியின் ரூபம் இருக்கும். சப்தம் கிடையாது. அங்கு அசைவுகளின் மொழியை ஒருவொருக்கொருவர் புரிந்து கொண்டு விடுகிறார்கள். எனவே இப்பொழுது நீங்கள் மூவி வழியாக சைலன்ஸில் செல்ல வேண்டும். நான் முதன் முதலில் சூட்சும சிருஷ்டி படைக்க வேண்டி உள்ளது. பிறகு ஸ்தூல படைப்பு. மூலவதனம், சூட்சும வதனம், ஸ்தூல வதனம் .. .. .. என்று பாடவும் படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் கூட சூட்சுமவதனவாசி ஆவார்கள் என்பது கூட மனிதர்களுக்கு தெரியாது. அங்கு ஒன்றும் உலகம் கிடையாது. பிரம்ம, விஷ்ணு, சங்கரர் மட்டும் தென்படுகிறார்கள். விஷ்வை நான்கு புஜங்கள் உடையவராக பார்க்கிறீர்கள். இதிலிருந்து இல்லற மார்க்கம் என்பது நிரூபணமாகிறது. சந்நியாசிகளினுடையது துறவற மார்க்கம் (வழி) ஆகும். இதுவும் நாடகம் ஆகும். அதை வர்ணனை செய்து தந்தை புரிய வைக்கிறார். முக்கியமான விஷயம் மன்மனா பவ என்று தந்தை கூறுகிறார். மற்றது விரிவான விஷயங்கள் அவற்றைப் புரிந்து கொள்வதில் நேரம் பிடிக்கிறது. சுருக்கமான விஷயம் விதை மற்றும் விருட்சம். விதையை பார்க்கும் பொழுது முழு விருட்சம் புத்தியில் வந்து விடுகிறது. தந்தை விதை ரூபம் ஆவார். அவருக்கு இந்த விருட்சம் மற்றும் சிருஷ்டி சக்கரத்தின் முழு ஞானம் உள்ளது. புரிய வைப்பதற்கு சிருஷ்டி சக்கரம் தனியாக உள்ளது. விருட்சம் தனியாக உள்ளது. விருட்சத்தில் இந்த எல்லா படங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தர்மத்தினருக்கும் காண்பித்தீர்கள் என்றால் புரிந்து கொள்வார்கள். நாம் சொர்க்கத்தில் வர முடியாது. பாரதம் பழமையாக இருக்கும் பொழுது தேவி தேவதைகள் மட்டும் தான் இருந்தார்கள். மற்றபடி எல்லோரும் சாந்தி தாமத்தில் இருப்பார்கள். நீங்கள் விதை மற்றும் விருட்சம் இரண்டையும் அறிந்துள்ளீர்கள். விதை மேலே உள்ளது. அவருக்கு விருட்சபதி என்று கூறுவார்கள். இப்பொழுது நீங்கள் தந்தையினுடையவர்களாக ஆகி உள்ளீர்கள். எனவே உங்கள் மீது (பிருகஸ்பதி) குருதசை அமர்ந்துள்ளது. யார் தந்தையினுடையவர்களாக ஆகிறார்களோ அவர்கள் மீது குரு தசை என்று கூறுவார்கள். பிறகு இருப்பது சுக்கிரதசை, புத்து தசை. குருதசையுடையவர்கள் சூரியவம்சத்தினர் ஆகிறார்கள். புத்து தசை உடையவர்கள் பிரஜைகளில் சென்று விடுகிறார்கள். சேவை செய்ய முடியாமல் இருப்பார்கள். தந்தையை நினைவு செய்ய முடியவில்லை என்றால் புத்து முட்டாள் ஆகிறார்கள். இதில் கூட வரிசைக்கிரமமான முட்டாள் ஆகிறார்கள். ஒரு சிலர் உயர்ந்த பிரஜை, ஒரு சிலர் குறைவான பிரஜை, பணக்கார பிரஜை எங்கே பிறகு அவர்களுடைய வேலைக்காரர்கள் அவர்களுக்கும் வேலைக்காரர்கள் எங்கே? எல்லாமே கற்கும் கல்வியைப் பொறுத்ததாகும். கல்வியில் கூட சதோ குணம், ரஜோகுணம், தமோ குணம் உடையவர்களாக இருக்கிறார்கள். ராஜாங்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. யார் புத்திசாலியாக இருப்பார்களோ அவர்கள் தந்தையின் நினைவில் கூட இருப்பார்கள். முழு விருட்சம் புத்தியில் இருக்கிறது. படிப்பினால் தான் ஆசிரியர், வழக்கறிஞர் ஆகிறார்கள். ஆசிரியர் பிறகு மற்றவர்களுக்கும் கற்பிக்கிறார். படிப்பதோ எல்லாமே படிக்கிறார்கள். ஒரே ஒரு படிப்பாகும். பின் ஒரு சிலர் படித்து உயர்ந்த நிலைக்கு ஏறி விடுகிறார்கள். ஒரு சிலர் அங்கேயே ஆசிரியர் ஆகி விடுகிறார்கள். எதை கற்றிருக்கிறார்களோ அதை கற்பிக்கிறார்கள். இப்பொழுது நீங்களும் படிக்கிறீர்கள். ஒரு சிலர் படித்து படித்து ஆசிரியர் ஆகி விடுகிறார்கள். தனக்குச் சமானமாக ஆசிரியராக ஆக்குவது ஆசிரியருடைய வேலை ஆகும் என்று சுயம் கூறுகிறார். ஆசிரியராக ஆகவில்லை என்றால் மற்றவர்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும். காலம் குறைவாக உள்ளது. விநாசம் ஆகும் வரையும் கற்றுக் கொண்டே இருப்பீர்கள். பிறகு கற்பது நின்று போய் விடும். பாபா 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்து கற்பிப்பார். இந்த படிப்பு ஒன்றும் ஆயிரக்கணக்கான வருடங்கள் நடக்கப் போவதில்லை. இது இருப்பதே இந்த கடைசி பிறவிக்கான படிப்பு ஆகும். படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க வேண்டும். எல்லோருமே ஆசிரியராக ஆக முடியாது. ஒரு வேளை எல்லோரும் ஆசிரியராக ஆகி விட்டார்கள் என்றால் பிறகு மிகவும் உயர்ந்த பதவியை அடைய முடியும். வரிசைக்கிரமமாகவோ இருக்கவே இருப்பார்கள். முதன் முதலில் எவரொருவருக்கும் இரண்டு தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். படங்கள் இருந்தால் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். திரிமூர்த்தியின் படம் அவசியம் கூட வைத்திருக்க வேண்டும். இவர் சிவபாபா, இவர் பிரஜாபிதா பிரம்மா அனைவருக்கும் கிரேட் கிரேட் கிராண்டு ஃபாதர்! எனவே அவசியம் முதலில் வந்திருக்கக் கூடும் இல்லையா? எல்லோரையும் விட முன்னால் இருப்பவர் பிரம்மா ஆவார். இப்பொழுது படைப்பைப் படைத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது நீங்கள் பிராமணர் ஆகி உள்ளீர்கள். பிறகு பிராமணர் தான் தேவதை ஆவார்கள். பிராமணர்களின் செடி சிறியதாகும். தேவதைகள் குறைவாக இருப்பார்கள். பிறகு பின்னால் விருத்தி அடைந்து கொண்டே இருப்பார்கள். இது உங்களுடைய புதிய செடி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அது மற்ற மதத்தினைச் சேர்ந்த ஆத்மாக்கள் பாகம் ஏற்று நடிப்பதற்காக மேலிருந்து வருகிறார்கள். விழ வேண்டிய விஷயம் கிடையாது. இங்கே உங்களுடைய புதிய விருட்சம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. மாயை கூட எதிரிலேயே உள்ளது. நீங்கள் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆகவே வேண்டி உள்ளது. டிரான்ஸ்ஃபர் ஆக வேண்டி உள்ளது. ஏனெனில் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. எனவே உழைப்பு ஏற்படுகிறது. தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை இங்கு சங்கமயுகத்தில் ஆகிறது. சத்யுகத்திற்கு எத்தனை வருடங்கள் என்பதையும் நீங்கள் கூறுகிறீர்கள். சத்யுகத்திலிருந்து பிறகு கலியுகம் எப்படி ஆகிறது? கலியுகத்தில் தமோபிரதானமாக ஆகவே வேண்டி உள்ளது. தமோபிரதானம் ஆனால் தான் பிறகு சதோபிரதானமாக ஆவார்கள். நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள். பிறகு துரு ஏறிக் கொண்டே சென்றுள்ளது. இப்பொழுது யாராவது ஒரு புது ஆத்மா 2-3 பிறவிகள் எடுத்தாலும் கூட உடனே துரு ஏறி விடுகிறது. அந்த பிறவியிலேயே சுகம், அதிலேயே துக்கத்தையும் அனுபவிக்கிறது. ஒரு சிலருக்கு ஒரு பிறவி கூட இருக்கக் கூடும். ஆத்மாக்கள் வருவது நின்று விடும் பொழுது விநாசம் ஆகும். பிறகு அனைத்து ஆத்மாக்களும் திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும். பாவ ஆத்மாக்கள் மற்றும் புண்ணிய ஆத்மாக்கள் ஒன்று சேர்ந்து செல்வார்கள். பிறகு புண்ணிய ஆத்மாக்கள் கீழே இறங்குவார்கள். சங்கமத்தில் முழுமையாக மாற்றங்கள் ஆகி விடும். எனவே குழந்தைகள் முழு நாடகத்தை புத்தியிலிருத்த வேண்டும். தந்தையிடம் இந்த முழு ஞானம் உள்ளது அல்லவா? நான் வந்து சிருஷ்டி சக்கரத்தின் முதல் இடை கடை பற்றிய முழு இரகசியத்தைப் புரிய வைக்கிறேன் என்று கூறுகிறார். பக்தி மார்க்கத்தில் இந்த ஞானத்தை கூறுகிறேனா என்ன? பக்தர்கள் நினைவு செய்யும் பொழுது அவர்களுக்கு சாட்சாத்காரம் செய்விக்கிறேன். பக்தி மார்க்கம் ஆரம்பமாகும் பொழுது எனது பாகம் (பார்ட்) கூட ஆரம்பமாகிறது. சத்யுக திரேதாவில் நான் வானப்பிரஸ்த நிலையில் இருக்கிறேன். குழந்தைகளை சுகத்தில் அனுப்பி விட்டேன். இனி மீதி என்ன உள்ளது. நான் வானப்பிரஸ்தம் எடுக்கிறேன். இந்த வானப்பிரஸ்தம் எடுக்கும் வழக்கம் பாரதத்தில் தான் உள்ளது. நான் வானப்பிரஸ்த நிலையில் அமர்ந்து விடுகிறேன் என்று எல்லையில்லாத தந்தை கூறுகிறார். எல்லையில்லாத தந்தை தான் வந்து குருவின் ரூபத்தில் வானப்பிரஸ்தத்திற்கு அழைத்துச் செல்கிறார். மனிதர்கள் பகவானை சந்திப்பதற்காக குருக்களின் சகவாசம் கொள்கிறார்கள். சாஸ்திரங்கள் படிப்பார்கள், தீர்த்தங்களுக்குச் செல்வார்கள். கங்கா ஸ்நானம் செய்வார்கள். ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களுக்கு எல்லையில்லாத தந்தை கிடைத்துள்ளார். துக்கத்திலிருந்து விடுவித்து இராவண இராஜ்யத்திலிருந்து வெளியேற்றி இராம இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறார். எல்லையில்லாத தந்தை ஒரே ஒரு முறை வந்து இராவணனினுடைய துக்கங்களிலிருந்து விடுவிக்கிறார். எனவே அவரை லிபரேட்டர் (விடுவிப்பவர்) என்று கூறுகின்றனர். சத்யுகத்தில் இருப்பதே இராம இராஜ்யமாகும். மற்ற ஆத்மாக்கள் சாந்தி தாமம் சென்று விடுகிறார்கள். இதுவும் யாருக்கும் தெரியாது. ஆத்மாவாகிய உங்களது சுயதர்மமே சாந்தி ஆகும். இங்கு பாகத்தை ஏற்று நடிக்க வரும் பொழுது அசாந்தமாக ஆகி உள்ளீர்கள். பிறகு சாந்தி நினைவிற்கு வருகிறது. உண்மையில் சாந்திதாமத்தில் வசிப்பவர்கள் ஆவீர்கள். இப்பொழுது எனக்கு அமைதி வேண்டும் என்று கூறுகிறார்கள். மனதிற்கு அமைதி வேண்டும் என்பார்கள். ஆத்மா மனம் புத்தி சகிதமாக உள்ளது என்று புரிய வைக்கப்படுகிறது. ஆத்மா இருப்பதே அமைதியின் சொரூபமாக. பிறகு இங்கு கர்மத்தில் வருகிறார். இங்கு அமைதி எப்படி கிடைக்கும். இது இருப்பதே அசாந்தி தாமமாக. சத்யுகத்தில் சுகம் சாந்தி இரண்டும் இருக்கும். தூய்மையும் இருக்கும். பணம், செல்வம் கூட இருக்கும்.உங்களிடம் எவ்வளவு சுகம், சாந்தி, பணம், செல்வம் ஆகியவை எல்லாமே இருந்தது. இப்பொழுது நீங்கள் பின் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். யார் முந்தைய கல்பத்தில் ஆஸ்தி எடுத்திருந்தார்களோ, அவர்களே நல்ல முறையில் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். தாமதமாக வந்திருந்தார்கள் என்றாலும் கூட பழையவர்களை விட சட்டென்று முன்னால் சென்று விடுகிறார்கள். தாமதமாக வருபவர்களுக்கு இன்னுமே நல்ல பாயிண்ட்ஸ் கிடைக்கிறது. நாளுக்கு நாள் சுலபமாகிக் கொண்டே போகிறது. இப்பொழுது எல்லாமே புரிந்து கொண்டு விட்டோம் என்பதையும் புரிந்து கொள்வார்கள். இனி தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆவதற்கான உழைப்பும் செய்ய வேண்டும் என்பதையும் புரிந்துக் கொண்டு விடுவார்கள். அதற்காக தீவிர முயற்சி செய்ய முற்படுவார்கள். ஏனெனில் காலம் குறைவாக உள்ளது என்றும் அறிவார்கள். கூடுமானவரை முயற்சியில் ஈடுபட்டு விடுவோம். மரணத்திற்கு முன்னதாக நாம் முயற்சி செய்து கொண்டு விடுவோம். அவர்கள் தங்களது சார்ட் வைத்திருப்பார்கள். படிப்பு சுலபம் ஆகும். மற்றது நினைவின் விஷயம் ஆகும். அதிகாலை எழுந்து இராமரை நினைவு செய்வாய் என் மனமே என்று பாடவும் பட்டுள்ளது. ஹே, எனது மனமே இராமரை நினைவு செய்! என்று ஆத்மா கூறுகிறது. பக்தி மார்க்கத்தில் இராமர் யார் என்பது கூட தெரியாது. அவர்கள் இரகுபதி இராகவ இராஜாராம் என்று கூறி விடுகிறார்கள். எவ்வளவு குழப்பம் செய்து விட்டுள்ளார்கள். அனைவரின் பகவானான அந்த இராமர் யார் என்பதை மனிதர்கள் ஒன்றும் புரியாமல் அறியாது. நேரத்தையும் பணத்தையும் வீணடித்துக் கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு நான் உலக இராஜ்ய பாக்கியத்தைக் கொடுத்திருந்தேன். பிறகு அதை எங்கே இழந்தீர்கள். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யத்தை அளித்திருந்தேன். அதை பிறகு எவ்வாறு இழந்தீர்கள்? நாம் எப்படி கீழே விழுந்துக் கொண்டே வந்துள்ளோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் ஏற வேண்டும். ஏறும் கலை ஒரு நொடியில். இறங்கும் கலை 5 ஆயிரம் வருடங்களில். பிரம்மாவே விஷ்ணு ஆவதற்கு ஒரு நொடி. விஷ்ணுவிலிருந்து பிரம்மா ஆவதற்கு 5 ஆயிரம் வருடங்கள் பிடிக்கின்றன. எவ்வளவு பாயிண்ட்ஸ்களை புரிய வைக்கிறார். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இப்பொழுது டாக்கி (பேசும் உலகத்திலிருந்து) மூவி (அசைவுகளின் உலகம்) மற்றும் மூவியிலிருந்து சைலன்ஸ் (அமைதியான உலகத்திற்கு) செல்ல வேண்டும். எனவே மிகவும் குறைவாகப் பேச வேண்டும். கம்பீரமாக மிகவும் மெதுவாக பேச வேண்டும்.2. ஞானம் புரிந்த பிறகு தீவிர முயற்சி செய்து சதோபிரதானமாக ஆக வேண்டும். நினைவின் சார்ட் வைக்க வேண்டும்.வரதானம்:

அமிருத வேளையின் உதவி அல்லது ஸ்ரீமத்தின் பாலனை மூலமாக (ஸ்மிருதி) நினைவை (ஸமர்த்) சக்திசாலியாக ஆக்கிக் கொண்டு விடக் கூடிய ஸ்மிருதி சொரூபம் ஆவீர்களாக.தங்களது நினைவை சக்திசாலி ஆக்க வேண்டும் அல்லது இயல்பாகவே ஸ்மிருதி சொரூபம் ஆக வேண்டும் என்றால் அமிருத வேளையின் நேரத்தின் மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். எப்படி ஸ்ரீமத் உள்ளதோ அதற்கேற்பவே காலத்தைக் கண்டறிந்து காலத்திற்கேற்ப நடந்தீர்கள் என்றால் சுலபமாகவே சர்வ பிராப்திகளை அடைய முடியும். மேலும் உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். அமிருத வேளையின் மகத்துவத்தை புரிந்து கொண்டு நடப்பதால் ஒவ்வொரு செயலும் மகத்துவத்திற்கேற்ப இருக்கும். அச்சமயம் விசேஷமாக சைலன்ஸ் இருக்கும். எனவே சுலபமான நினைவை சக்திசாலியாக ஆக்கிக் கொள்ள முடியும்.சுலோகன்:

நினைவு மற்றும் சுயநலமில்லாத சேவை மூலமாக மாயையை வென்றவராக ஆகுபவர்களே சதா வெற்றி அடைபவர்கள் ஆவார்கள்.***OM SHANTI***