हिंदी मुरली
ENGLISH

BK Murli 19 October 2016 Tamil


BK Murli 19 October 2016 Tamil

19.10.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன் 


இனிமையான குழந்தைகளே! தாமதமாக வந்தாலும் வேகமான புருஷார்த்தம் செய்வீர்களானால் மிகவும் முன்னேறிச் செல்ல முடியும். மற்றவர்கள் பற்றிய சிந்தனையை விட்டு தனது புருஷார்த்தத்தில் ஈடுபட்டு இருங்கள்.கேள்வி :

எந்த ஒரு காரியம் ஒரு தந்தையினுடையது, அது எந்த ஒரு மனிதருடையதாகவும் இருக்க முடியாது?பதில் :

மனிதரை தேவதை ஆக்குவது, அவர்களை சாந்திதாமம், சுகதாமத்தின் எஜமானர் ஆக்குவது - இந்தக் காரியம் ஒரு தந்தையினுடையதாகும். அதை எந்த ஒரு மனிதரும் செய்ய இயலாது. சங்கமயுகத்தில் தான் நாம் பகவானின் வாக்கியங்களைக் கேட்கிறோம் என்பது உங்களுக்கு நிச்சயம் உள்ளது. இப்போது சுயம் பகவான் கல்பத்திற்கு முன் போலவே இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.ஓம் சாந்தி.

ஆன்மிக எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஆன்மிகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இந்த ஒவ்வொரு சொல் அல்லது ஞானரத்தினம் லட்சம் ரூபாய் பெறுமானது. பாபா புரிய வைத்துள்ளார் - பரமாத்மாவை ரூப்-பஸந்த் (யோகி-ஞானி) என்றும் சொல்கின்றனர். அவருக்கு ரூபமும் உள்ளது, பெயர் சிவபாபா. அவர் ஞானக்கடல். அந்த ஞானத்தினால் சத்கதி கிடைக்கின்றது. ஞானம் செல்வமாகவும் உள்ளது, ஞானம் படிப்பாகவும் உள்ளது. இந்த ஞானத்தைத் தருபவர் ஆன்மிகத் தந்தை. ஆத்மா, ஸ்பிரிச்சுவல் ரூஹ் (ஆம்முக ஆத்மா) எனச் சொல்லப்படுகின்றது. பக்தி மார்க்கத்தில் ஆத்மாக்கள், தந்தையைச் சந்திப்பதற்காக எவ்வளவு அலைகின்றனர்! அவரைத் தேடுகின்றனர். புரிந்து கொண்டும் இருக்கின்றனர், பகவான் ஒருவர்-சிவன் என்று. பிறகும் கூட அலைந்து கஷ்டப் பட்டுக் கொண்டே இருக்கின்றனர். பாபா வந்து புரிய வைக்கிறார், ஆன்மிகக் குழந்தைகளே, நீங்களோ அழியாதவர்கள், பரந்தாமத்தில் வசிப்பவர்கள். அங்கிருந்து பிறகு இங்கே பாகத்தை நடிப்பதற்காக வருகிறீர்கள். நீங்கள் தூரதேசத்தில் வசிப்பவர்கள். இது டிராமா - இதன் பெயர் வெற்றி-தோல்வியின் விளையாட்டு. சுகம்-துக்கத்தின் விளையாட்டு. பாபா புரிய வைக்கிறார் - நான் மற்றும் நீங்கள் அனைவரும் சாந்திதாமத்தில் வசிப்பவர்கள். அது நிர்வாணதாமம் எனச் சொல்லப் படுகின்றது. முதலிலோ இந்த நிச்சயம் செய்ய வேண்டும் - நாம் அங்கே வசிப்பவர்கள். ஆத்மாக்களாகிய நமது சுயதர்மம் சாந்தி. ஆத்மாவாகிய புள்ளிக்குள் முழுமையான, அழியாத பாகம் நிரம்பியுள்ளது. பாபா கற்பிப்பதும் உங்களுக்குத் தான். நீங்கள் உலகத்திலுள்ள மனிதர்களைப் பற்றிக் கவலைப் படுகிறீர்கள். உங்களுக்கு நிச்சயம் உள்ளது - பகவான் வந்து பேசுவதே சங்கமயுகத்தில் தான். பிறகு எப்போதுமே இது நடைபெறுவதில்லை. யாருமே மனிதர்களை தேவதை ஆக்க முடியாது. சாந்திதாமம், சுகதாமத்தின் அதிபதியாக ஆக்க முடியாது. கல்பத்திற்கு முன்பும் கூட பாபா ஆக்கியிருந்தார். இப்போது யார் குடியரசுத் தலைவராக ஆகியிருக்கிறாரோ, அவரே 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆவார். முழு உலகத்தின் காட்சிகள் இப்போது என்னென்ன நடைபெற்றுக் கொண்டுள்ளனவோ, அவை 5000 ஆண்டுகளுக்குப் பிறகு ரிப்பீட் ஆகும். வயதானவர்கள் இவை அனைத்தையும் தாரணை செய்ய இயலவில்லை என்றால் அவர்களுக்குச் சொல்லப் படுகின்றது - 3 விஷயங்களை மட்டும் நினைவு செய்யுங்கள்- நாம் ஆத்மா, சாந்திதாமத்தில் வசிப்பவர்கள், பிறகு சுகதாமத்தில் வருகிறோம். பிறகு அரைக்கல்பத்திற்குப் பின் இராவணராஜ்யம் ஆரம்பமாகும் போது விகாரி ஆகி விடுகிறோம். இது துக்கதாமம் எனச் சொல்லப்படுகின்றது. எப்போது துக்கதாமம் முடிவடைகின்றதோ, அப்போது என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா சொல்கிறார். உங்களை சாந்திதாமம், சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நான் வரவேண்டி உள்ளது. இப்போது யார் வந்து பாபாவுடையவர்களாக ஆகியிருக்கிறார்களோ, அவர்கள் தான் ஆஸ்தி பெறுவார்கள். இப்போது சூரியவம்சி, சந்திரவம்சி சாம்ராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான மனிதர்கள் வந்து ஒரு சிறிதாவது பாபாவிடம் கேட்பார்கள், புரிந்து கொள்வார்கள். பெருகிக் கொண்டே போகும். எல்லாப் பக்கமும் நீங்கள் சென்று புரிய வைக்க வேண்டியதிருக்கும். செய்தித் தாள்கள் மூலமாகவும் அநேகர் கேட்பார்கள். பாகிஸ்தானிலும் கூட செய்தித் தாள்கள் மூலம் படிப்பார்கள். இங்கே அமர்ந்து கொண்டும் கூட இந்த ஞானத்தைக் கேட்பார்கள். கீதையின் பிரச்சாரம் முழு உலகிலும் மிகுதியாக உள்ளது. பாபா சொல்கிறார் - என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். இந்தச் செய்தியை செய்தித் தாள்களில் படிப்பார்கள். அதனாலும் கூட அநேகர் பிராமணராக ஆவார்கள். யார் ஆஸ்தி பெற வேண்டுமென இருக்கிறதோ, அவர்கள் வந்து அவசியம் பெறுவார்கள். இப்போது இன்னும் கொஞ்சம் சமயம் உள்ளது. அதிகரித்துக் கொண்டே இருக்கும். தாமதமாக வருவார்களானால் பிறகு வேகமாகப் புருஷார்த்தம் செய்ய வேண்டியதிருக்கும். கல்பத்திற்கு முன் எத்தனைப் பேர் சொர்க்கவாசி ஆகியிருந்தார்களோ, அத்தனைப் பேர் இப்போதும் நிச்சயமாக ஆவார்கள். இதில் கொஞ்சம் கூட வித்தியாசம் இருக்க முடியாது. சாந்திதாமம் செல்பவர்கள் சாந்திதாமத்திற்குச் செல்வார்கள். பிறகு அவரவர் சமயத்தில் பாகத்தை நடிப்பதற்காக வருவார்கள். இப்போது பாபா சொல்கிறார், குழந்தைகளே, என்னை நினைவு செய்வீர்களானால் வீடு சென்று சேர்ந்து விடுவீர்கள். சந்நியாசிகள் முக்திக்காக அதிகக் கஷ்டப் படுகிறார்கள். அதனால் முக்தி தான் சரியானது என்று அனைவருக்கும் சொல்கின்றனர். சுகமோ காக்கையின் எச்சத்திற்குச் சமமானது. சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது - சத்யுகத்தில் கூட துக்கத்தின் விஷயங்கள் இருந்தன என்று. எதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பரமாத்மா வர வேண்டும் எனச் சொல்கின்றனர். பதீத-பாவனா பரமாத்மா வாருங்கள், வந்து எங்களுக்கு வழி சொல்லுங்கள் என அழைக்கின்றனர். இன்னொரு பக்கம் கங்கை பதீத-பாவனி எனச் சொல்கின்றனர். கங்கா ஸ்நானம், யக்ஞம்-தவம், யாத்திரை செல்வது - இவையனைத்தும் பகவானோடு சந்திப்பதற்கான வழிகள் என நினைக்கின்றனர். பரமாத்மாவை அழைக்கிறீர்கள் எனும் போது ஏன் அலைந்து கஷ்டமடைகிறீர்கள்? இவையனைத்தும் பக்தி மார்க்கத்தில் விதிக்கப் பட்டுள்ளன. மனிதர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைப் பேசிக் கொண்டே இருக்கின்றனர். பரமாத்மாவைச் சந்திப்பதற்காக எவ்வளவு முயற்சி செய்கின்றனர்! இப்போது பகவானோடு சந்திப்பதற்காக பக்தர்கள் செல்வார்களா, அல்லது பகவான் இங்கே வர வேண்டியதிருக்குமா? தூய்மையில்லாத ஆத்மாவோ செல்ல முடியாது. அழைத்துச் செல்வதற்காகவே தந்தை இங்கே வருகிறார். அனைத்து ஆத்மாக்களுக்கும் வழிகாட்டி ஒரே ஒருவர் தான். நீங்களும் தூய்மையாகி அவருக்குப் பின்னால் சென்று விடுவீர்கள். நாயகன் உங்களை ஞான ரத்தினங்களால் அலங்கரிக்கிறார்- மகாராஜா-மகாராணி ஆக்குவதற்காக. மற்றப்படி கிருஷ்ணர் பற்றிக் காட்டுகின்றனர் – இன்னாரை விரட்டினார், பட்டத்துராணி ஆக்கினார் என்று. இது போன்ற விசயங்கள் எதுவும் நடப்பதில்லை. நீங்கள் தான் சொர்க்கவாசியாக இருந்தீர்கள். இப்போது பாபா மீண்டும் அது போல் ஆக்குவதற்காக வந்துள்ளார். 84 பிறவிகளின் விசயமாகும். 84 லட்சம் பிறவிகளை யாருமே நினைவு செய்ய முடியாது. சத்யுகத்திற்கு இலட்சம் வருடங்கள் கொடுத்துள்ளனர். திரேதாவுக்குக் குறைவாகக் கொடுத்துள்ளனர். இந்த கணக்கே சரியாக வருவதில்லை. பாபா எவ்வளவு சுலபமாக ஆக்கிச் சொல்கிறார் - இரண்டு விஷயங்களை மட்டும் நினைவு செய்ய வேண்டும் - தந்தை மற்றும் ஆஸ்தி. ஆக, நீங்கள் தூய்மையாகவும் ஆவீர்கள், பறக்கவும் முடியும், உயர்ந்த பதவியும் பெறுவீர்கள். ஆக, எப்படியாவது பாபாவை நினைவு செய்ய வேண்டும் என்ற அக்கறை வைக்க வேண்டும். மாயாவின் புயல்களும் வரும். ஆனால் தோல்வியடைந்துவிடக் கூடாது. யாராவது உங்கள் மீது கோபப் படவும் செய்யலாம். ஆனால் நீங்கள் பேசக் கூடாது. சந்நியாசிகளும் சொல்கின்றனர் - வாயில் தாயத்தைப் (நாவடக்கத்திற்காக) போட்டுக் கொள்ளுங்கள். அப்போது அவர்கள் பேசிப் பேசிப் பார்த்துவிட்டுக் கடைசியில் அமைதியாகி விடுவார்கள். பாபாவும் சொல்கிறார் - யாராவது கோபமாகப் பேசினால் நீங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபாவின் மூலம் தான் ஆஸ்தியும் கூட நினைவு வரும். உங்களுடைய அதிந்திரிய சுகம் பற்றிய மகிமையின் பாடல் - நாங்கள் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் பாரிஜாத மலராக ஆவோம். அங்கே துக்கத்தின் பெயரும் கூட இருக்காது. நீங்கள் 50-60 பிறவிகளுக்கு சுகம் அனுபவிப்பீர்கள். சுகத்தின் கணக்கு அதிகம். சுகம்-துக்கம் சமமாக இருந்தால் என்ன பயன்? உங்களிடம் செல்வமும் அதிகம் இருக்கும். கொஞ்ச காலத்துக்கு முன் இங்கேயும் மிக மலிவாகத் தானியங்கள் கிடைத்தன. இராஜாக்களின் பெரிய இராஜ்யம் இருந்தது. (பிரம்மா) பாபா 10 அணாவுக்கு ஒரு மணங்கு கம்பு தானியம் விற்றுள்ளார். அப்படியானால் அதற்கும் முன்பு எவ்வளவு மலிவாக இருந்திருக்கும்! மனிதர்கள் கொஞ்சம் பேர் இருப்பார்கள். அன்னத்தைப் (உணவு) பற்றிய கவலை இருக்காது. இப்போது இதுவோ நினைவிருக்க வேண்டும் - முதலில் நாம் வீட்டுக்குச் சென்று பிறகு புது உலகத்தில் வந்து புதிய பார்ட்டை நடிப்போம். அங்கே நமது சரீரமும் கூட சதோபிரதான தத்துவங்களால் ஆனதாக இருக்கும். இப்போது 5 தத்துவங்கள் முற்றிலும் தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளன. ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மையின்றி உள்ளன. அங்கே உடல் நோய்வாய்பட்டு இருக்காது. இவை அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். குழந்தைகளுக்கு இங்கே நல்லபடியாகப் புரிய வைக்கிறார். பிறகு வீட்டுக்குப் போய் மறந்து போகின்றனர். இங்கே மேகத்தை நிரப்பிக் கொண்டு எவ்வளவு குஷியாகின்றனர். வெளியில் சென்றதும் மறந்து விடுகின்றனர். முன்பு ராஸ் (மகிழ்ச்சியின் நடனம்) முதலியவை அதிகம் நடைபெற்றன. பிறகு அவை அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டன. மனிதர்கள் இது மாயாஜாலம் என நினைத்தனர். பக்தியில் தீவிர பக்தி செய்யும் போது அபூர்வமாகவே சாட்சாத்காரம் கிடைக்கிறது. இங்கே பக்தியின் விஷயம் கிடையாது. அமர்ந்திருக்கும் போதே சாட்சாத்காரத்தில் சென்று விட்டனர். அதனால் மாய மந்திரம் எனப் புரிந்து கொண்டு விட்டனர்.இன்றைய உலகத்தில் எத்தனை பகவான்கள் உருவாகி விட்டனர்! சீதாராம், ராதாகிருஷ்ணன் முதலான பெயர்களை வைக்கின்றனர். எங்கே அந்த சொர்க்கத்தின் எஜமானர், எங்கே இந்த நரகவாசிகள்! இச்சமயம் அனைவரும் நரகவாசிகள். ஏணிப்படியில் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளது. ஏணிப்படியின் சித்திரத்தைக் குழந்தைகள் தங்களின் விசார்சாகர் மந்தன் (ஞான சிந்தனை) மூலம் உருவாக்கியுள்ளனர். பாபா பார்த்துக் குஷியடைந்தார். ஏணிப்படியில் அனைத்து விஷயங்களும் வந்து விடுகின்றன. துவாபரயுகத்திலிருந்து விகாரி ராஜாக்கள் எப்படி பக்தி செய்து-செய்தே கீழே வந்துள்ளனர். இப்போதோ எந்த ஒரு கிரீடமும் கிடையாது. சித்திரங்களை வைத்துப் புரிய வைப்பது சுலபமாக உள்ளது. 84 பிறவிகளில் எப்படி இறங்கும் கலை நடைபெறுகிறது, பிறகு உயரும் கலை எப்படி ஏற்படுகிறது. பாடவும் செய்கின்றனர்- உயரும் கலை உங்களுக்கு என்றால் அதனால் அனைவருக்கும் நன்மை என்று. பாபா வந்து அனைவருக்கும் சுகம் தருகிறார். அனைவரும் அழைக்கின்றனர், ஹே பாபா, எங்கள் துக்கத்தைப் போக்குங்கள், சுகம் கொடுங்கள். ஆனால் எப்படி துக்கத்தைப் போக்குகிறார், சுகம் எப்படிக் கிடைக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.தற்போது மனிதர்கள் கீதையை மனப்பாடம் செய்து சொல்கின்றனர். சுருக்கமாக அர்த்தத்தைப் புரிய வைக்கின்றனர். சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து சொல்கின்றனர் என்றால் இவர் நல்ல மகாத்மா எனச் சொல்லி விடுகின்றனர். இலட்சக்கணக்கான மனிதர்கள் வந்து காலில் விழுகின்றனர். அந்த லௌகிகப் படிப்பிலோ 15-20 ஆண்டுகள் ஈடுபடுகின்றனர். இதில் யாராவது புத்திவான் இருப்பார்களானால் மனப்பாடம் செய்து சொல்கின்றனர். அப்போது ஏராளமான பணம் சேர்ந்து விடுகிறது. இவையனைத்தும் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள். யாராவது திவாலாகி விட்டார்களானால் போய் சந்நியாசத்தை மேற்கொள்கின்றனர். ஆக, அனைத்துக் கவலைகளும் விலகிப் போய் விடுகின்றன. பிறகு ஏதேனும் மந்திர-தந்திரங்களை நினைவு செய்கின்றனர். சுற்றிக் கொண்டே இருக்கின்றனர். இரயிலிலும் சுற்றிக் கொண்டே இருக்கின்றனர். இங்கோ பாபா சொல்கிறார், தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை மற்றும் ஆத்மாக்கள் அனைவரும் நிராகாரி (நிர்வாண் தாமம்) உலகத்தில் வசிக்கின்றனர். அங்கிருந்து சாகாரி (ஸ்தூல) உலகத்திற்குத் தங்களின் பாகத்தை நடிப்பதற்காக வருகின்றனர். இப்போது நாடகம் முடிவடையப் போகிறது. நீங்கள் தமோபிரதானமாக இருப்பதால் திரும்பிச் செல்ல முடியாது. இப்போது உங்களை சதோபிரதானமாக ஆக்குவதற்காக பாபா வந்துள்ளார். அனைவரும் தங்களின் வீட்டுக்குச் சென்று விடுவார்கள். மற்றப்படி சொர்க்கத்தில் தேவி-தேவதைகளின் ஆட்சி இருக்கும். சாந்திதாமம், சுகதாமம், துக்கதாமம்..... எந்த-எந்தச் சமயம் இருந்தது- இதுவும் யாருடைய புத்தியிலும் வராது. ஏனென்றால் பயங்கர இருளில் உள்ளனர். கலியுக முடிவு இன்னும் இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் எனப் புரிந்து கொண்டுள்ளனர். எந்த ஒரு கணக்கும் இல்லை. மனிதர்களின் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது, உண்ண உணவு கிடைப்பதில்லை. இன்னும் 40 ஆயிரம் ஆண்டுகள் போனால் என்னவாகும் என்றே தெரியாது. என்ன பேசுகிறார்களோ, அவை முற்றிலும் பொய்யாகும். உண்மை என்பது சிறிதளவு கூட இல்லை. இப்போது இராவணன் மீது எப்படி வெற்றி கொள்வது என்பது பற்றி பாபா கற்றுத் தருகிறார். இராவணன் மீது நீங்கள் தான் வெற்றி பெறுகிறீர்கள். முழு உலகத்தையும் இராவணனிடம் இருந்து விடுவித்து விடுகிறார். உங்களுடையது சக்தி சேனை. நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு நல்ல-நல்ல விஷயங்களைச் சொல்லிப் புரிய வைக்கிறார்! பிறகு நீங்கள் தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து எவ்வளவு குஷியடைய வேண்டும்! ஞான மார்க்கத்தில் குஷி அதிகம் உள்ளது. இப்போது பாபா வந்துள்ளார். இப்போது நாம் இந்தப் பழைய உலகத்திலிருந்து போயே விட்டோம். பாபாவை நினைவு செய்வதன் மூலம் சதோபிரதான் ஆவோம். இல்லையென்றால் தண்டனைகள் அடைய நேரிடும். பிறகு ரொட்டித் துண்டு கிடைக்கலாம். இதனால் என்ன பயன்? எவ்வளவு முடியுமோ, தனது புருஷார்த்தத்தைச் செய்ய வேண்டும். ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். ஒவ்வோர் அடியிலும் பாபாவிடமிருந்து அறிவுரை பெற வேண்டும். சிலர் சொல்கின்றனர்-பாபா, தொழிலில் பொய் பேச வேண்டியுள்ளது. பாபா சொல்கிறார்-(உலகாயத) தொழிலிலோ பொய் இருக்கவே செய்கிறது. நீங்கள் பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். விகாரத்தில் போய்விட்டுப் பிறகு நான் பாபாவின் நினைவில் இருந்தேன் என்று அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. விகாரத்தில் சென்றால் இறந்து விட்டீர்கள். இதுவோ பாபாவிடம் வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளது இல்லையா? உறுதிமொழிக்காகவே தான் ராக்கி கட்டப் படுகின்றது. கோபத்திற்காக ஒரு போதும் ராக்கி கட்டப்படுவதில்லை. ராக்கி கட்டுவதன் அர்த்தமே விகாரத்தில் போகக் கூடாது என்பது தான். மனிதர்கள் அழைக்கின்றனர், பதீத-பாவனா வாருங்கள் என்று.குழந்தைகளாகிய உங்களுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். பாபா நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். பிறகு பாபா கூடவே அழைத்துச் செல்வார். அங்கிருந்து சொர்க்கத்திற்குச் சென்று விடுவோம். எவ்வளவு முடியுமோ, அதிகாலை எழுந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். நினைவு செய்வது என்றால் வருமானத்தைச் சம்பாதிப்பதாகும். இதில் ஆசிர்வாதம் என்ன செய்வார்? நீங்கள் ஆசிர்வாதம் செய்தால் நினைவு செய்வேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது. அனைவருக்கும் ஆசிர்வாதம் செய்தால் அனைவருமே சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள். இங்கோ முயற்சி செய்ய வேண்டும். எவ்வளவு முடியுமோ, பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா என்றால் ஆஸ்தி. எவ்வளவு நினைவு செய்கிறீர்களோ, அந்த அளவு இராஜ்யம் கிடைக்கும். நினைவினால் அதிக நன்மை உள்ளது. இது மலிவான வியாபாரமாகும். இது போன்ற மலிவான வியாபாரத்தை யாராலும் தர முடியாது. இதையும் அபூர்வமாக யாரோ சிலர் தான் பெற்றுக் கொள்கின்றனர். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) யாராவது கோபப் பட்டால் மிகமிக சாந்தமாக இருக்க வேண்டும். கோபப் படுபவருடன் கோபக்காரராக ஆகிவிடக் கூடாது. மாயாவின் எந்த ஒரு புயலிடமும் தோல்வியடையக் கூடாது.2) அதிகாலையில் பாபாவை நினைவு செய்ய வேண்டும். தனது வருமானத்தை சேமிக்க வேண்டும். பவித்திரதாவின் (தூய்மை அடைய) உறுதியான ராக்கியைக் கட்டிக் கொள்ள வேண்டும்.வரதானம் :

தன்னுடைய உண்மையான சம்ஸ்காரங்களை வெளிப்படுத்தி சதா மகிழ்ச்சியுடன் இருக்கக் கூடிய ஞான சொரூபம் ஆகுக !எந்தக் குழந்தைகள் ஞானத்தைச் சிந்தனை செய்து அதன் சொரூபமாக ஆகின்றனரோ, அவர்கள் சதா மகிழ்ச்சியாக இருப்பார்கள். சதா மகிழ்ச்சியாக இருப்பது என்பது பிராமண வாழ்க்கையின் அசல் (ஒரிஜினல்) சம்ஸ்காரமாகும். திவ்ய குணம் தன்னுடைய பொருளாகும். அவகுணம் மாயாவின் பொருள் - அது சேர்க்கைக் குற்றத்தால் (சங்கதோஷம்) வந்தது. இப்போது அதைப் பின்னுக்குத் தள்ளுங்கள் மற்றும் தன்னுடைய சர்வசக்திவான் என்ற இடத்தில் இருங்கள். அப்போது சதா மகிழ்ந்திருப்பீர்கள். எந்த ஓர் அசுர அல்லது வீணான சம்ஸ்காரமும் முன்னால் வருவதற்கான தைரியம் கூட வைக்க முடியாது.சுலோகன் :

சம்பூர்ண நிலையை அடைவதற்கான இலட்சியத்தை முன்னால் வைப்பீர்களானால் சங்கல்பத்தில் கூட எந்த ஒரு கவர்ச்சியும் கவர்ந்திழுக்க முடியாது.


***OM SHANTI***

Powered by Blogger.
Copy on Your FaceBook