BK Murli 20 October 2016 Tamil

BK Murli 20 October 2016 Tamil

20.10.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது ஓசைகளுக்கும் அப்பால் செல்ல வேண்டும், ஆகையால் வாயால் சிவா சிவா என்று கூட சொல்லத் தேவையில்லை.கேள்வி:

ஒரு தந்தையை மட்டுமே சர்வசக்திவான், ஞானக் கடல் என சொல்வோம், வேறு யாரையும் சொல்வதில்லை - ஏன்?பதில்:

ஏனென்றால் ஒரு தந்தையை நினைவு செய்வதால்தான் ஆத்மா தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாய் ஆகி விடுகிறது. தந்தைதான் தூய்மையற்றவர்களை தூய்மையானவர்களாக ஆக்குகிறார், மற்ற எந்த தேகதாரி மனிதர்களும் தூய்மையாக ஆக்க முடியாது. தந்தை உங்களை இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து விடுகிறார். நீங்கள் சிவபாபாவிடமிருந்து சக்தியை எடுக்கிறீர்கள், எந்த அளவு அதிகமாக நினைவு செய்கிறீர்களோ அந்த அளவு சக்தி கிடைக்கும், துரு நீங்கியபடி செல்லும். பாடல்: ஓம் நம: சிவாய. . .ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுத்த செல்லக் குழந்தைகள் பக்தியின் மகிமையை கேட்டீர்கள். நீங்களும் கூட மகிமையை பாடிக் கொண்டிருந்தீர்கள். இப்போது மகிமை பாடுவதில்லை, மேலும் நீங்கள் மகிமை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. பக்தர்கள் செய்வதை குழந்தைகளாகிய நீங்கள் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் பக்தர்களாக இருந்தீர்கள், இப்போது உங்களுக்கு பகவான் கிடைத்துள்ளார். அனைவருக்கும் ஒன்றாக கிடைக்க மாட்டார். அனைவரையும் ஒன்றாக தந்தை எப்படி படிக்க வைப்பார்? அது முடியாத ஒன்று. அனைத்து பக்தர்களும் கூட ஒன்றாக இருக்க முடியாது. ஆம், தந்தை கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும், ஏனென்றால் இது இராஜயோகமாகும். சூரிய வம்சத்தவர், சந்திர வம்சத்தவரின் இராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டும். குழந்தைகள் கண்காட்சிகளில் புரிய வைக்க வேண்டும். பண்டிகைகள் வந்தது என்றால் அப்போது சேவை செய்யலாம். நீங்கள் உங்களுக்காகவே இராஜ்யத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டும். நீங்கள் சிவசக்தி, மகாரதி சேனையாக இருக்கிறீர்கள், மற்றபடி டிரில் (உடற்பயிற்சி) முதலான எதுவும் கற்றுக் கொள்வதில்லை. நீங்கள் ஆன்மீக டிரில் கற்கிறீர்கள். இந்த டிரில் பாரதத்தின் பெயர் புகழ் வாய்ந்த ஒன்றாகும். இது யோகத்தின் (நினைவு) டிரில் ஆகும். ஆத்மா பரமபிதா பரமாத்மாவுடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்த வேண்டும், அவரிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டும். இதில் சண்டையின் விஷயம் எதுவும் கிடையாது. நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைகிறீர்கள், இதில் சண்டைக்கான எந்த தொடர்பும் கிடையாது. நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் வாரிசுகள். தந்தையுடையவர்கள் ஆகி தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தந்தையின் வழி சண்டை குறித்த எதுவும் கிடையாது. தந்தை சொல்கிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள், இராஜ்யம் செய்து கொண்டிருந்தீர்கள், இப்போது உங்களுக்கு நினைவு வந்துள்ளது. தந்தை சொல்கிறார்- நீங்கள் உங்களுடைய பிறவிகள் பற்றி அறியவில்லை. மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றனர் என பாடவும் செய்கின்றனர். 84 லட்சம் பிறவிகள் என்பது கட்டுக் கதையாகும். பக்தி மார்க்கத்தில் யாருக்கு என்ன வருகிறதோ அதனை கூறியபடி இருக்கின்றனர். நாடகத்தின்படி இந்த பக்தி மார்க்கத்தின் பொருட்கள் ஆகும். சத்யுகம், திரேதாவில் பக்தி இருப்பதில்லை. பக்தி வேறு, ஞானம் வேறு. குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எந்த ரிஷி, முனிவர்கள் முதலானவர்களிடமும் இந்த ஞானம் கிடையாது. அவர்களுக்கு சுகம் வேறு, துக்கம் வேறு என்பது கூட தெரியாது. சுகத்தை தந்தை கொடுக்கிறார், துக்கத்தை இராவணன் கொடுக்கிறார். சூரிய வம்சத்தவராக, சந்திர வம்சத்தவராக இருந்த நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றி வந்து சூத்திர வம்சத்தினராக ஆகியுள்ளீர்கள். தந்தை நினைவூட்டுகிறார் - நீங்கள் உலகின் எஜமானாக இருந்தீர்கள். நீங்கள் 84 பிறவிகளை அனுபவித்து கீழே இறங்கி துச்சபுத்தி, தமோபிரதானமாக ஆகியுள்ளீர்கள். சதோபிரதானமாக உள்ளவர்களுக்கு சுத்தமான, உயர்வான புத்தியுள்ளவர் எனப்படுகின்றனர். தமோபிரதானமானவர்கள் கீழான புத்தியுள்ளவர் என சொல்லப்படுகின்றனர். கீழான புத்தியுள்ளவர்கள் உயர்வான புத்தியுள்ளவர்களை நமஸ்காரம் செய்கின்றனர். நாம்தான் உயர்ந்தவர்களாக இருந்தோம் என உங்களுக்கும் கூட தெரிந்திருக்கவில்லை, இப்போது நாம்தான் கீழானவராக ஆகியுள்ளோம். யார் முதல் நம்பரில் பிறவி எடுத்திருப்பாரோ, அவரே சதோபிரதானமாக ஆவார். 84 பிறவிகளும் கூட சூரியவம்சத்தவர்கள்தான் எடுப்பார்கள். நாம் உலகின் எஜமானாக இருந்தபோது தூய்மையாக சதோபிரதானமானவர்களாக இருந்தோம் என இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தூய்மை யற்றவர்கள் உலகின் எஜமானாக ஆக முடியாது. அவர்களின் மகிமையைப் பாருங்கள் எவ்வளவு உயர்வானதாக உள்ளது. அனைத்து குணங்களில் நிறைந்தவர். . . திரேதாவில் 14 கலைகளில் நிரம்பியவர் என சொல்வதில்லை. சூரியவம்சத்தினரை 16 கலைகளில் நிரம்பியவர் என சொல்வோம். 14 கலைகள் என்ற வார்த்தைக்குப் பின் நிரம்பியவர் என்பது வராது. சம்பூரண என 16 கலைகள் நிறைந்தவர்களுக்கு எழுத வேண்டும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் 16 கலைகளில் நிறைந்தவர்களாக ஆகிறீர்கள்.இந்த ஞானம் மிகவும் சகஜமானது என்பதும் கூட குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. இதை விட சகஜமான விஷயம் எதுவும் கிடையாது. பாபா இரக்க மனம் கொண்டவர் அல்லவா. குழந்தை கள் பக்தியில் அலைந்து திரிந்து களைத்திருப்பார்கள் என தந்தைக்குத் தெரியும். இதனால் திரௌபதியின் காலை அமுக்கியதாக காட்டியுள்ளனர். பாபாவிடம் வயதான மூதாட்டிகள் வருகின்றனர். நீங்கள் பக்தியில் அலைந்து திரிந்து களைத்திருக்கிறீர்கள் என தந்தை சொல்கிறார். ஆகையால் பாபா இப்போது உங்களின் களைப்பு அனைத்தையும் நீக்குகிறார். பக்தியில் ராமா ராமா என ஜபித்து மாலையை உருட்டியபடி இருக்கின்றனர். பாபாவுக்கு பாதிரிமார்களுடனும் தொடர்பு இருந்தது. பாதிரிகளும் கூட பைபிளை எடுத்து அமர்ந்து புரிய வைத்தபடி இருக்கின்றனர். நிறைய பேர் கிறிஸ்தவர்களாக ஆகி விடுகின்றனர். இங்கே மாலை முதலானவை உருட்ட வேண்டிய விஷயம் கிடையாது. தந்தை சொல்கிறார் - தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு பாபாவை நினைவு செய்யுங்கள். சிவா சிவா என வாயால் சொல்லக் கூடாது. நாம் ஓசைகளிலிருந்து கடந்து செல்லக் கூடியவர்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் துரு நீங்கி விடும் என்று பாபா மிகவும் சகஜமான யுக்தியை சொல்கிறார். மேலும் இல்லற விஷயங்களில் இருந்தபடி தூய்மை யடைய வேண்டும். தாமரை மலர் மிகவும் பெயர் புகழ் வாய்ந்தது. அது மிகவும் அழுக்கான இடத்தில் இருக்கும், ஆனாலும் கூட விடுபட்டு மற்றும் பிரியமானதாக இருக்கும். நீங்களும் கூட விஷக் கடலில் இருந்தபடி விடுபட்டு அன்பானவராக இருங்கள். இது விஷக்கடல் ஆகும், இதனை நதி என சொல்ல மாட்டோம்.குழந்தைகளாகிய நீங்கள் இப்போது எவ்வளவு புத்திசாலிகளாக ஆகிறீர்கள். இதே புத்திசாலித்தனத்தின் மூலம் நீங்கள் மகாராஜகுமாரர்களாக ஆகிவிடுகிறீர்கள். உங்களுக்கு மிகவும் குஷி இருக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும், ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை இருபாலாரும் முயற்சி செய்ய வேண்டும். லௌகிக சம்மந்தத்தில் தந்தையின் ஆஸ்தி மகனுக்கு மட்டும் கிடைக்கிறது, மகளுக்கு கிடைப்பதில்லை. இங்கே அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆஸ்தி கிடைக்கிறது. நினைவின் யாத்திரையின் மூலமே நீங்கள் உயர் பதவியை அடைய முடியும் என தந்தை புரிய வைக்கிறார். கண்காட்சியில் முதன் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும், அதன் பிறகு தந்தையின் ஆஸ்தி பற்றி சொல்ல வேண்டும். இவர் உங்களுடைய எல்லைக்கப்பாற்பட்ட தந்தை என இந்த நிச்சயத்தை ஏற்படுத்துங்கள். பகவான் ஒருவர் என அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். பிரம்மா, விஷ்ணு, சங்கரரும் கூட பகவான் அல்ல, தேவதைகள். பகவான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்கக் கூடிய நிராகாரமான தந்தை ஆவார். அவருடைய மகிமையே தனிப்பட்டதாகும். இன்றைய நாட்களில் கண்காட்சியில் திரிமூர்த்திகள் (மும்மூர்த்திகள்) பற்றி புரிய வைக்க வேண்டும். இவர் தந்தை, இவர் தாதா. ஆஸ்தி அவரிடமிருந்து கிடைக்கிறது. அவர் நிராகாரமாக இருக்கிறார், இவரிடமிருந்து (தாதாவிடமிருந்து) எப்படி ஆஸ்தி கிடைக்கும்! அவர் அனைவரையும் படைப்பவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரனும் கூட படைப்புகளே ஆவர். படைப்புக்கு படைத்தவரிடமிருந்தே ஆஸ்தி கிடைக்க முடியும். அந்த நிராகார தந்தை இவர் மூலமாக ஆஸ்தி கொடுக்கிறார். அனைவரையும் படைப்பவர் ஒருவர்தான் ஆகையால் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒருவர் என பாடப்படுகிறது. அவர் ஞானக்கடல் எனப்படுகிறார். மற்றவர்கள் அனைவரும் சாஸ்திரங்களின் அத்தாரிட்டி. இவர் ஞானக்கடல், தாமே அத்தாரிட்டியாக இருப்பவர். உலக ஆல்மைட்டி அத்தாரிட்டி (சர்வசக்திவான்) தாமே சொல்கிறார் - எனக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் தெரியும், உங்களுக்கு சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறேன். இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் பொருட்கள் ஆகும். இவை சத்ய, திரேதா யுகங்களில் இருப்பதில்லை. பக்தியினால்தான் ஏணியில் கீழே இறங்க வேண்டியிருக்கிறது. சர்வ சக்திவான் என ஒரு தந்தைதான் பாடப்படுகிறார். அவருடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்துவதன் மூலமே நாம் தூய்மை அடைகிறோம் எனும்போது அவர் சர்வசக்திவான் ஆகிறார் அல்லவா. நான் அனைவரையும் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்குகிறேன். இராவண இராஜ்யத்திலிருந்து விடுபட வைக்கிறேன். நீங்கள் இப்போது சிவபாபாவிடமிருந்து சக்தி அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். எந்த அளவு அதிகமாக நினைவு செய்வீர்களோ அந்த அளவு சக்தி கிடைக்கும், மேலும் துரு நீங்கி விடும். தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்களாக, தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும் என்ற கவலை உங்களுக்கு இரவும் பகலும் இருக்க வேண்டும். மாயையின் புயல்கள் வரும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாபா சொல்கிறார். உங்களின் சண்டை மாயையுடன் உள்ளது. வீணான தவறான எண்ணங்கள் நிறைய வரும். அஞ்ஞானத்தில் ஒருபோதும் வந்திராதது கூட வரும். நீங்கள் யுத்த மைதானத்தில் இருக்கிறீர்கள். நினைவு யாத்திரையில் அனைத்து முயற்சியும் அடங்கியுள்ளது. பாரதத்தின் இராஜ யோகம் பெயர் புகழ் வாய்ந்ததாகும். நீங்கள் தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள் என யோகத்தைப் பற்றித்தான் பாபா புரிய வைக்கிறார். இப்படி வேறு எந்த மனிதரும் புரிய வைக்க முடியாது. அனைத்தும் பகவானின் ரூபங்களாகும் என அவர்கள் சொல்லி விடுகின்றனர். எங்கு பார்த்தாலும் பரமாத்மாவே பரமாத்மாதான். நீங்கள் ஆத்மாக்கள், 84 பிறவிகள் அனுபவிக்கிறீர்கள் என தந்தை புரிய வைக்கிறார். ஒரு வேளை அனைத்தும் பரமாத்மா என்றால் பரமாத்மா ஜனன மரண சக்கரத்தில் வருபவரா என்ன? ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்கிறது. ஆத்மாவில் நல்ல கெட்ட சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. நல்ல சம்ஸ்காரங்கள் உள்ளவரின் மகிமையைப் பாடுகின்றனர். கெட்ட சம்ஸ்காரங்கள் உள்ளவரை பாவி, கீழானவன் என சொல்கின்றனர். பாபா தூய்மை அடைவதற்கான சகஜமான யுக்தி சொல்கிறார். மனம், சொல், செயலால் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. தனக்கும் கூட துக்கம் கொடுத்துக் கொள்ளக் கூடாது. எந்த பாவ கர்மமும், திருட்டு முதலானவையும் செய்யக் கூடாது. எங்காவது பொய் சொல்ல வேண்டியிருந்தது என்றால் தந்தையிடம் வழி கேட்டுக் கொள்ளுங்கள். அனைத்திலும் பெரிய பாவம் - காமக் கோடரியை வீசுவது ஆகும். அதை வீசாதீர்கள்.குழந்தைகளே கைகளால் வேலை செய்தபடி புத்தியின் தொடர்பை என்னிடம் ஈடுபடுத்துங்கள்.பாபா சர்ஜனாகவும் (மருத்துவராகவும்) இருக்கிறார். அனைவரின் நோயும் ஒரே மாதிரி இருக்காது. கர்மங்களும் கூட ஒரே போல இருக்க முடியாது. ஆக ஒவ்வொரு காலடியிலும் கேட்க வேண்டும். இலட்சியம் மிகப் பெரிது. அமர்நாத் யாத்திரை செல்லும்போது அமர்நாத் கி ஜே, பத்ரிநாத் கி ஜே என சொல்கின்றனர். ஓ பத்ரிநாதா எங்களைக் காப்பாற்ற வேண்டும். இப்போது நீங்கள் தீர்த்த யாத்திரை முதலான எதையும் செய்ய வேண்டியதில்லை. இந்த ஞானத்தின் விஷயங்களை தந்தைதான் புரிய வைக்கிறார். இந்த நடிப்பு அவருக்குண்டானதே ஆகும். பாபாவுடன் நீங்களும் கூட நடிகர்களாக இருக்கிறீர்கள். யார் எவ்வளவு படிக்கின்றனரோ அவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கும். இதில் யாருடைய பெருமையும் கிடையாது. பெருமை ஒருவருடையதேயாகும், அவர் அனைத்து மனிதர்களுக்கும் சத்கதி கொடுக்கிறார். அனைத்து குழந்தைகளையும் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆக்குகிறார். நாடகத்தில் எனக்கும் கூட பாகம் கிடைத்திருக்கிறது என தந்தை கூறுகிறார். 5 தத்துவங்களுக்கும் கூட தத்தமது பாகம் கிடைத்திருக்கிறது, அதனை நடிக்க வேண்டும். பூமி அதிர வேண்டும், வினாசம் ஆக வேண்டும். நாடகத்தில் உங்களுடைய நடிப்பும் உள்ளது. இதில் பெருமைப்பட என்ன உள்ளது? இராஜ்யம் செய்து செய்து தூய்மையற்றவர் ஆகினீர்கள். நீங்களும் முன்னர் என்னவாக இருந்தீர்கள்? பைசாவுக்குப் பயனற்றவர்களாக. இப்போது நீங்கள் உலகின் எஜமான் ஆகிறீர்கள், இது உங்களுடைய நடிப்பு மீண்டும் நாம் இப்படி ஆக வேண்டும். இதில் பெருமைக்கோ அல்லது மகிமைக்கோ ஆன விஷயம் எதுவுமில்லை. இந்த நாடகம் உருவாகியுள்ளது. பாபாவும் வந்து தம்முடைய நடிப்பை நடிக்கிறார். பக்தர்கள் பெருமைப்படுத்துகின்றனர், மகிமை பாடுகின்றனர், இங்கே நாம் அந்த வேலையை செய்யலாகாது. இங்கே தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாபா இந்த நாடகத்தின் ரகசியம் மிகவும் அதிசயமானது! இது யாருக்கும் தெரியாது. பாபா நாங்கள் சத்யுகத்தில் இதையும் மறந்து விடுவோமா! மிகவும் விந்தையான நாடகம். இப்படி இப்படியாக தனக்குள் தானே பேசுங்கள். நடிகர் யாராவது நன்றாக தன் நடிப்பை நடித்தால் கை தட்டுகின்றனர். இனிமையான பாபாவின், சிவபாபாவின் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது என நாமும் சொல்கிறோம். நாமும் பாபாவுடன் நல்ல நடிப்பை நடிக்கிறோம். எவ்வளவு நல்ல விதமாக புரிய வைக்கிறார், என்றாலும் கூட யாருக்காவது புரியவில்லை என்றால் நம்முடைய இராஜ்யத்தில் இவர் வரப்போவதில்லை என புரிந்து கொள்கிறோம். யார் பிராமணராகி இருந்தனரோ, அவர்கள்தான் பிராமணர் ஆகி பிறகு தேவதை ஆவார்கள். தேவதைகளிலும் கூட பிரஜைகள் முதலானவர்களாக ஆவார்கள், அனைவருக்கும் அனாதியான நடிப்பு கிடைத்திருக்கிறது. சிருஷ்டியும் ஒன்றே ஆகும், அது நடந்தபடி இருக்கிறது. இறைவன் ஒருவரே, படைப்பும் ஒன்றே. அதே சக்கரம் சுற்றியபடி இருக்கிறது. சந்திரனில் என்ன உள்ளது என்பதை பார்க்கலாம் என மனிதர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர். அதற்கும் மேல் என்ன உள்ளது? அதற்கும் மேல் இருப்பது சூட்சும வதனம். அங்கே எதைப் பார்ப்போம்? ஒளியே ஒளி. மிகவும் முயற்சி செய்கின்றனர் - அறிவியலுக்கும் எல்லை உள்ளதல்லவா. மாயையின் பகட்டும் கூட உள்ளது. அறிவியல் சுகத்திற்காகவும் இருக்கிறது, துக்கத்திற்காகவும் இருக்கிறது. அங்கே ஆகாய விமானம் ஒருபோதும் கீழே விழாது. துக்கத்தின் விஷயம் இல்லை. இங்கே துக்கமே துக்கம் உள்ளது. திருடர்கள் திருடிச் செல்கின்றனர், நெருப்பு எரித்து விடுகிறது. அங்கே வீடுகள் மிகவும் பெரிதாக இருக்கும். அபு அளவுக்கு நிலம் ஒவ்வொரு ராஜாவுக்கும் இருக்கும். சொர்க்கவாசி ஆவதற்காக நீங்கள் வந்துள்ளீர்கள். பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் துரு நீங்கும். நீங்கள் அனைவரும் பிரியதர்ஷினிகள், இப்போது பிரியதர்ஷன் சொல்கிறார் - என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் அமரபுரிக்கு எஜமான் ஆகி விடுவீர்கள். அங்கே அகால மரணம் ஏற்படுவதில்லை. சத்யுகத்தில் இருப்பது சிரேஷ்டாச்சாரி (உயர்தரமான) உலகம், இது பிரஷ்டாச்சாரி (கீழ்தரமான) உலகம் ஆகும். எத்தனை பி.கு.க்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்துக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் ஆஸ்தியை பெற்றுக் கொள்ளுங்கள். ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் உயர் பதவியை அடைய முடியாது. ஒவ்வொரு 5000 வருடங்களுக்குப் பிறகும் பாபா சொர்க்கத்தை உருவாக்க வருகிறார். கலியுகத்தில் அளவற்ற மனிதர்கள், சத்யுகத்தில் கொஞ்சம் பேர் இருப்பார்கள் எனும்போது வினாசம் கண்டிப்பாக நடக்கும். அதற்காக மஹாபாரதப் போர் முன்னால் நடக்க உள்ளது. நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. மனம், சொல், செயலால் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. கெட்ட சம்ஸ்காரங்களை நீக்கி இப்போது நல்ல சம்ஸ்காரங்களை தாரணை செய்ய வேண்டும். எந்த விகர்மமும் (பாவ கர்மமும்) ஆகாதிருக்க கவனம் வைக்க வேண்டும்.2. இந்த அதிசயமான நாடகத்தில் தன்னுடைய உயர்ந்த பாக்கியத்தை உணர்ந்து நாம் பகவானுடன் நடிப்பை நடிக்கும் நடிகர்கள், நம்முடையது எவ்வளவு நல்ல நடிப்பு என்று தனக்குள் தானே பேசிக் கொள்ள வேண்டும்.வரதானம் :

 சாகார (பிரம்மா) மற்றும் நிராகார (சிவபாபா) தந்தையின் துணையின் மூலம் அனைத்து எண்ணங்களிலும் வெற்றியாளர் ஆகக் கூடிய எப்போதும் வெற்றி மூர்த்தி ஆகுக.விளக்கம்: எப்படி நிராகாரமான ஆத்மா மற்றும் சாகார (ஸ்தூல) சரீரம் இரண்டின் சம்மந்தத்தின் மூலம் அனைத்து காரியங்களையும் செய்ய முடிகிறதோ, அதுபோலவே நிராகார மற்றும் சாகார தந்தையர் இருவரையும் (பாப்-தாதா) துணையாக மற்றும் முன்னால் வைத்தபடி அனைத்து கர்மங்கள் மற்றும் சங்கல்பங்களை செய்தீர்கள் என்றால் வெற்றி மூர்த்தி ஆகி விடுவீர்கள். ஏனென்றால் பாப்தாதா முன்னால் இருக்கும்போது கண்டிப்பாக அவர் மூலம் (வெரிஃபை) சரி பார்த்துக் கொண்டு நிச்சயத்துடன் மற்றும் பயமற்று செயல்படுவீர்கள். இதன் மூலம் நேரம் மற்றும் சங்கல்பத்தின் சேமிப்பு ஏற்படும். கொஞ்சமும் வீணாகாது. அனைத்து காரியங்களும் தாமாகவே வெற்றியடையும்.சுலோகன் :

ஆன்மீக அன்பு, எல்லாவித செல்வங்களையும் விட மிகவும் மதிப்பு வாய்ந்தது, ஆகையால் மாஸ்டர் அன்புக் கடல் ஆகுங்கள்.

***OM SHANTI***