BK Murli 23 October 2016 TamilBK Murli 23 October 2016 Tamil

23.10.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

'' சகயோகி தான் சகஜயோகி ''

இன்று பாப்தாதா தன்னுடைய சுயராஜ்ஜிய அதிகாரி, இராஜரிஷி, எதிர்காலத்தில் இராஜ வம்சத்தினராகும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அனைவரும் சகஜயோகிகள் அதாவது இராஜரிஷிகள். பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் தற்சமயம் வரமளிக்கும் நேரத்தில் விசேஷமாக எந்த வரதானம் கொடுக்கிறார்? சகஜ யோகி ஆகுக. இந்த வரதானத்தை அனுபவம் செய்கிறீர்களா? யோகிகளாகவோ அனேகர் ஆகிறார்கள் ஆனால் சகஜயோகியாக சங்கமயுகத்து சிரேஷ்ட ஆத்மாக்கள் நீங்கள் மட்டும் தான் ஆகிறீர்கள். ஏனென்றால், வரம் அளிக்கும் தந்தையின் வரதானம் உங்களுக்குத் தான் இருக்கிறது. பிராமணன் ஆனீர்கள் என்றால் இந்த வரதானத்தைப் பெறுபவராக ஆனீர்கள். இந்த ஜென்மத்தில் அனைத்தையும் விட முதல் வரதானமே இந்த சகஜயோகி ஆகுக என்பது தான். எனவே வரமளிக்கும் தந்தை, இது வரம் அளிக்கும் நேரம் மேலும் நீங்களும் வரதானம் பெறக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்கள் என்ற நினைவு இருக்கிறதா என்று உங்களிடமே நீங்கள் கேளுங்கள். இந்த வரதானத்தை எப்பொழுதும் புத்தியில் நினைவில் வைப்பது என்பது தான் வரதானத்தை வாழ்க்கையில் கொண்டு வருவது. அந்த மாதிரி நான் எப்பொழுதும் அந்த மாதிரி வரதானத்தை பிராப்தி செய்திருக்கும் ஆத்மா, பிராப்தி சொரூபமான ஆத்மா என்று நினைக்கிறீர்களா? அல்லது கடின முயற்சியும் செய்ய வேண்டியதாக இருக்கிறதா? எப்பொழுதும் வரம் பெறும் ஆத்மாக்களாக இருக்கிறீர்களா? இந்த வரதானத்தை எப்பொழுதும் நிலைத்திருக்கச் செய்வதற்கான விதியை தெரிந்திருக்கிறீர்களா? அனைத்தையும் விட சகஜமான விதி எது? அதைத் தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? எப்பொழுதும் அனைவரின் மற்றும் சேவையில் சகயோகி ஆகுங்கள். சகயோகி தான் சகஜயோகி. அனேக பிராமண ஆத்மாக்கள் சகஜயோகாவின் அனுபவத்தை எப்பொழுதும் செய்ய முடிவதில்லை. யோகா எப்படி செய்வது? எங்கே செய்வது? இதே கேள்வியில் இன்று வரை இருக்கிறார்கள். சகஜயோகாவில் கேள்வி இருப்பதில்லை. கூடவே வரதானம் இருக்கிறது, வரதானத்தில் கடின முயற்சி இருப்பதில்லை. மேலும் சகஜமாக, எப்பொழுதுமே இயல்பாகவே இருக்கிறது. அதாவது சகஜயோகியின் வரம் பெற்ற ஆத்மா இயல்பாகவே நிரந்தர யோகியாக இருப்பார். அவ்வாறு இருப்பதில்லை என்றால் இதற்கான காரணம் என்ன? கிடைத்திருக்கும் வரதானத்தை மற்றும் பிராமண ஜென்மத்தின் இந்த ஆன்மீகப் பரிசை பாதுகாக்கத் தெரிவதில்லை. நினைவு மூலமாக சக்தி நிறைந்தவர் ஆவதில் அலட்சியமானவர் ஆகிவிடுகிறார்கள். இல்லை என்றால் பிராமணன் மேலும் சகஜயோகியாக இல்லை என்றால் பிராமண வாழ்க்கையின் விசேஷமே என்னவாக இருக்கிறது. வரம் பெற்றவராக இருந்தும் சகஜயோகியாக இல்லை என்றால் பின்பு எப்பொழுது ஆவீர்கள்? இது என்னுடைய இந்த ஜென்மத்தின் வரதானம் என்ற போதையை மற்றும் நிச்சயத்தை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். இதே வரதானத்தை அனைத்து ஆத்மாக்களுக்காக சேவையில் ஈடுபடுத்துங்கள். சேவையில் சகயோகி ஆவது தான் சகஜயோகி ஆவதற்கான விதி.

 

அமிர்தவேளையில் தொடங்கி சகயோகி ஆகுங்கள். முழு நாளின் நடவடிக்கையில் சகயோகம் கொடுக்க வேண்டும் என்ற இந்த அடிப்படை லட்சியத்தை நினைவில் வையுங்கள். நான் சகயோகி ஆக வேண்டும். அமிர்தவேளையில் தந்தையுடன் சந்திப்பை செய்து தந்தைக்குச் சமமாக  மாஸ்டர் விதை ரூபம் ஆகி, மாஸ்டர் உலகிற்கு நன்மை செய்பவராகி, அனைத்து ஆத்மாக்களுக்கும் தனக்கு கிடைத்திருக்கும் சக்திகள் மூலமாக ஆத்மாக்களின் உள்உணர்வு மற்றும் வாயுமண்டலத்தை பரிவர்த்தனை (மாற்றம்) செய்வதற்காக சகயோகி ஆகுங்கள். விதை மூலமாக முழு மரத்திற்கும் ஆன்மீக நீர் கொடுப்பதின் சகயோகி ஆகுங்கள். அதன் மூலம் அனைத்து ஆத்மாக்கள் என்ற இலைகளுக்கு பிராப்தி என்ற நீர் கிடைத்த அனுபவம் ஆகட்டும். அதே போல் அமிர்தவேளையில் தொடங்கி முழு நாளும் என்னென்ன காரியம் செய்கிறீர்களோ அந்த ஒவ்வொரு காரியத்திலும் 'சகயோகம் கொடுக்க வேண்டும்' என்ற லட்சியம் இருக்கட்டும். வேலை, தொழில் சம்மந்தப்பட்ட விவகாரங்களின் காரியத்தில் சென்றாலும், குடும்பத்தை நடத்துவதற்கான காரியத்தில் இருந்தாலும் ஆனால் உலகியல் விவகாரத்திலும் கூட தனக்காகவும் மற்றும் உடன் இருக்கும் மற்றவர்களுக்காகவும் சுபபாவனை மற்றும் நல்விருப்பங்களினால் வாயுமண்டலத்தை ஆன்மீகமாக ஆக்குவதற்கான சகயோகம் கொடுத்தேனா? அல்லது அப்படியே சாதாரண முறையில் தன்னுடைய வேலையை செய்து விட்டு வந்தேனா? எப்படி யாருக்கு வேலை இருக்கிறதோ அதன் பிரகாரம் அவர் எங்கே சென்றாலும் காரியத்தை அவசியம் செய்வார். உங்கள் அனைவரின் விசேஷ பதவியே 'சகயோகி ஆவது' இதை எப்படி மறக்க முடியும்? அப்படி ஒவ்வொரு காரியத்திலும் சகயோகி ஆகிறீர்கள் என்றால் இயல்பாகவே சகஜயோகி ஆகிவிடுவீர்கள். ஒரு விநாடி கூட சகயோகி ஆகாமல் இருக்க வேண்டாம். வாய்மொழி மூலம் சகயோகி ஆகுங்கள் அல்லது மன சக்தி மூலம் சகயோகி ஆகுங்கள். உறவு தொடர்பு மூலம் சகயோகி ஆகுங்கள். ஸ்தூல காரியங்கள் மூலமாக சகயோகி ஆகுங்கள். ஆனால் அவசியம் சகயோகி ஆக (வேண்டும். ஏனென்றால் நீங்கள் அனைவரும் வள்ளலின் குழந்தைகள். வள்ளலின் குழந்தைகள் எப்பொழுதும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். எனவே என்ன கொடுக்க வேண்டும்? 'சகயோகம்'.

 

சுயமாற்றத்திற்காக தனக்குத் தானே சகயோகி ஆகுங்கள். சாட்சியாகி, சதா நற்சிந்தனைகளின் உள்உணர்வு மற்றும் ஆன்மீக வாயுமண்டலத்தை உருவாக்கி தனக்குத் தானே சகயோகி ஆகுங்கள். எப்படி இயற்கை தன்னுடைய வாயுமண்டலத்தின் பிரபாவத்தால் அனைவருக்கும் அனுபவம் செய்விக்க முடிகிறது. குளிர் மற்றும் வெப்பத்தை இயற்கை தன்னுடைய வாயுமண்டலத்தின் மீது பிரபாவத்தை ஏற்படுத்தி விடுகிறது, அதே போன்று இயற்கையை வென்ற நிரந்தர சகயோகி, சகஜயோகி ஆத்மாக்கள் தன்னுடைய ஆன்மீக வாயுமண்டலத்தின் பிரபாவத்தின் அனுபவம் செய்விக்க முடியாதா? எப்பொழுதும் தனக்காகவும், பிறருக்காகவும் சகயோகம் கொடுக்க வேண்டும் என்று சுபபாவனை வைத்துக் கொண்டே சகயோகி ஆத்மாக்கள் ஆகுங்கள். அவர் அந்த மாதிரியானவர் அல்லது அந்த மாதிரி யாராவது செய்வார்களா என்று இது போன்று யோசிக்காதீர்கள். எப்படிப்பட்ட வாயுமண்டலமாக இருந்தாலும், நபராக இருந்தாலும் 'நான் சகயோகம் கொடுக்க வேண்டும்'.

அந்த மாதிரி அனைத்து பிராமண ஆத்மாக்களும் நிரந்தர சகயோகி ஆகிவிட்டார்கள் என்றால் என்னவாகிவிடும்? அனைவருமே இயல்பாகவே சகஜயோகி ஆகிவிடுவார்கள். ஏனென்றால், அனைத்து ஆத்மாக்களுக்கும் சகயோகம் கிடைப்பதால் பலஹீனமானவர்களும் கூட சக்திசாலி ஆகிவிடுகிறார்கள். பலஹீனம் முடிந்த பிறகு சகயோகியாகவோ ஆகிவிடுவார் இல்லையா? எந்தவிதமான பலஹீனம் கஷ்டத்தையும் கடினத்தையும் அனுபவம் செய்விக்கிறது. சக்திசாலியாக இருக்கிறீர்கள் என்றால், அனைத்தும் சுலபம். எனவே என்ன செய்ய வேண்டியதாக இருக்கும்? எப்பொழுதும் சரீரத்தாலோ, மனதாலோ, பணம், செல்வத்தினாலோ, மனசக்தியினாலோ, வாய்மொழி மூலமாகவோ அல்லது காரியங்கள் மூலமாகவோ சகயோகி ஆக வேண்டும். ஒருவேளை யாராவது மனதால் செய்ய முடியவில்லை என்றால் உடலால் மற்றும் பணம் செல்வத்தினால் சகயோகி ஆகுங்கள். மனசக்தி, வாய்மொழி மூலம் செய்ய முடியவில்லை என்றால் செயல் மூலம் சகயோகி ஆகுங்கள். சம்மந்தத்தை இணைப்பதற்கும் மற்றும் தொடர்பை வைப்பதற்குமான சகயோகி ஆகுங்கள். செய்தி கொடுப்பதின் சகயோகியாக மட்டும் ஆகாமல், தன்னுடைய பரிவர்த்தனை மூலம் சகயோகி ஆகுங்கள். தன்னுடைய அனைத்து பிராப்திகளின் அனுபவத்தைக் கூறுவதின் சகயோகி ஆகுங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் தன்னுடைய முகம் மூலமாக சகயோகி ஆகுங்கள். யாருக்காவது குணங்களின் தானம் மூலமாக சகயோகி ஆகுங்கள். யாருக்காவது ஊக்கம் உற்சாகத்தை அதிகரிப்பதின் சகயோகி ஆகுங்கள். எதில் சகயோகி ஆக முடியுமோ அதில் நிரந்தர சகயோகி ஆகுங்கள். இது தான் சகஜயோகா ஆகும். என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா? இதுவோ சுலபம் தான் இல்லையா? என்ன இருக்கிறதோ அதைக் கொடுக்க வேண்டும். என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். அனைத்தையும் செய்ய முடியவில்லை என்றால் ஒன்றிரண்டையாவது செய்ய முடியும் இல்லையா? ஏதாவது ஒரு விசேஷம் இருந்தாலும் அந்த விசேஷத்தை காரியத்தில் ஈடுபடுத்துங்கள். அதாவது சகயோகி ஆகுங்கள். இதையோ செய்ய முடியும் தான் இல்லையா? எனக்குள் எந்த விசேஷமும் இல்லை, எந்த குணமும் இல்லை என்று யோசிக்கவில்லையே! அப்படி இருக்கவே முடியாது. பிராமணன் ஆனதே பெரிய விசேஷம் ஆகும். தந்தையைத் தெரிந்து கொண்டதின் பெரிய விசேஷம் இருக்கிறது. எனவே தன்னுடைய விசேஷம் மூலமாக நிரந்தர சகயோகி ஆகுங்கள். நல்லது.

 

அந்த மாதிரி நிரந்தர சகயோகி அதாவது சகஜயோகி, எப்பொழுதும் தன்னுடைய உயர்ந்த உள்உணர்வு மூலமாக வாயுமண்டலத்தை உருவாக்கும் சகயோகி ஆத்மாக்களுக்கு, பலஹீனமான ஆத்மாக்களுக்கு உற்சாகம் கொடுக்கக்கூடிய சகயோகி ஆத்மாக்களுக்கு, அந்த மாதிரி அமிர்தவேளையில் தொடங்கி ஒவ்வொரு நேரமும் சகயோகி ஆகும் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு :

அமைதியின் சக்தி மூலம் தெய்வீக சுயராஜ்ஜியத்தின் ஸ்தாபனை - அமைதியின் சக்தி மூலம் முழு உலகத்தின் மேல் தெய்வீக ராஜாங்கத்திற்கான அஸ்திவாரம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் தான் இல்லையா? அவர்கள் அவர்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். மேலும் நீங்கள் தெய்வீக இராஜாங்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். என்ன ஆக வேண்டும்? என்று அவர்களுக்கு என்ன தெரியும்! அவர்களோ அவரவர்களின் முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். அனைத்து குழந்தைகளும் அமைதியின் சக்தி மூலம் தெய்வீக சுயராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் தான் இல்லையா? அவர்களுடையது வார்த்தைகளின் சக்தி அல்லது உடல் பலம், சாஸ்திரங்களின் சக்தி மேலும் உங்களுடையது அமைதியின் சக்தி. இந்த சக்தி மூலமாக தெய்வீக இராஜ்யம் ஸ்தாபனை ஆகியே விடும் என்ற இந்த உறுதியான நிச்சயம் இருக்கிறது தான் இல்லையா? அவர்களும் தற்சமயத்தில் காரியம் செய்கிற மாதிரி ஏதாவது ஈஸ்வரிய சக்தி வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர் (ஈஸ்வரன்) புலப்படாது இருக்கும் காரணத்தினால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். மேலும் செய்து கொண்டும் இருக்கிறீர்கள். பஞ்சாபில் வளர்ச்சி ஆகிக் கொண்டிருக்கிறது தான் இல்லையா? பஞ்சாபும் சேவையின் ஆரம்பகால இடமாகும். அப்படி ஆரம்ப இடத்திலிருந்து ஏதாவது விசேஷ காரியம் நடக்க வேண்டும். ஆன்மீகத் தந்தையின் குழந்தைகளாக ஆன காரணத்தினால் ஆன்மீக சேவை செய்வது ஒவ்வொரு குழந்தைகளின் கடமை ஆகும். எது தந்தையின் காரியமோ அதுவே தான் குழந்தைகளின் காரியம். எப்படி ஆன்மீக சேவை செய்வது ஆன்மீகத் தந்தையின் கடமையாக இருக்கிறதோ, அதே போன்று குழந்தைகளும் இந்தக் காரியத்திலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். இந்த ஆன்மீக சேவை ஒவ்வொரு அடியிலும் உடனடி பலனை பிராப்தி செய்விக்கிறது. உடனடி பலன் குஷி. எவ்வளவு சேவை செய்கிறீர்களோ அந்த அளவு குஷியின் பொக்கிஷம் அதிகரிக்கிறது, ஒன்றிற்கு பல மடங்கு கிடைக்கிறது. அந்த மாதிரி நினைக்கிறீர்களா? உங்களுடைய பதவியே ஆன்மீக சேவாதாரி. உலகீய ரீதியில் எந்த பதவியில் (வேலை) இருந்தாலும் சரி, ஆனால் ஆன்மீகத்தில் ஆன்மீக சேவாதாரி. உங்களில் யாராவது டாக்டராக இருக்கிறார் என்றால், ஆத்மாவிற்கும் மற்றும் உடலுக்குமான இரட்டை டாக்டர் ஆகுங்கள். அந்த சேவை செய்து கொண்டும் மூல கடமையானது ஆன்மீக டாக்டர் ஆவது. அடிக்கடி நோய் வருகிறது, இதன் மூலமாகவோ நிரந்தரமாக நோயே அழிந்து விடும். அந்த மாதிரி மருந்து கொடுக்க வேண்டும் தான் இல்லையா? நோயாளி வருவதே நிரந்தரமாக ஆரோக்கியத்தை அடைவதற்காக. அந்த நிரந்தர ஆரோக்கியம் ஆன்மீக சேவை மூலம் கிடைக்கும். நல்லது.

 

லண்டன் குரூப்புடன் பாப்தாதாவின் சந்திப்பு -

லண்டனில் நல்ல நல்ல இரத்தினங்கள் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். அப்படி அனைத்து வெளிநாட்டு சேவை நிலையங்களும் ஒன்றிலிருந்து இரண்டாக, இரண்டிலிருந்து மூன்றாக என்று அப்படி திறக்கிறார்கள். இப்பொழுது மொத்தமாக எத்தனை சேவை நிலையங்கள் இருக்கின்றன? (1982-ல் 50) இந்த 50 இடங்களின் அஸ்திவாரம் லண்டன். மரம் மிக அழகானதாக ஆகிவிட்டது தான் இல்லையா? எந்த தண்டிலிருந்து 50 கிளைகள் உருவாகியிருக்கின்றன என்றால் அந்த மரம் எவ்வளவு அழகாக இருக்கும். அப்படி வெளிநாட்டின் மரமும் நன்றாகப் பரந்து விரிந்து பசுமையாக ஆகிவிட்டது. பாப்தாதாவும், லண்டனைச் சேர்ந்த குழந்தைகளிடம் மட்டும் இல்லை. அனைத்து குழந்தைகளின் சேவையின் ஊக்கம் உற்சாகத்தைப் பார்த்து குஷி அடைகிறார். வெளிநாட்டில் ஆர்வம் மிக நன்றாக இருக்கிறது. நினைவு செய்வதற்கும் மற்றும் சேவை செய்வதற்கும் இரண்டிற்குமான ஆர்வம் நன்றாக இருக்கிறது. ஆனால் மாயாவின் சின்ன ரூபத்தை கண்டும் மிக விரைவில் பயப்படுகிறார்கள் என்ற விஷயமும் இருக்கிறது. எப்படி இங்கே பாரதத்தில் அனேக பிராமணர்கள் எலியைக் கண்டும் பயப்படுவார்கள், கரப்பான் பூச்சியைக் கண்டும் பயப்படுவார்கள். அதே போன்று வெளிநாட்டுக் குழந்தைகள் இந்த விஷயத்தில் பயந்து விடுகிறார்கள். சிறியதை பெரியது என்று நினைத்து விடுகிறார்கள் ஆனால் அது ஒன்றுமே இல்லை. காகிதப் புலியை உண்மையான புலி என்று நினைத்து விடுகிறார்கள். எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அந்த அளவு பயப்படும் சம்ஸ்காரமும் சிறிதளவு சேவைக்களத்தில் வந்து விடுகிறது. வெளிநாட்டுக் குழந்தைகள் மாயாவைக் கண்டு பயப்படக் கூடாது, விளையாட வேண்டும். காகிதப்புலியோடு விளையாடுவது இருக்குமா அல்லது பயப்படுவது இருக்குமா? பொம்மையாக ஆகிவிட்டது தான் இல்லையா? பொம்மையைக் கண்டு பயப்படுபவர்களை என்னவென்று கூறுவது! எந்த அளவு கடுமையாக முயற்சி செய்கிறீர்களோ அந்த கணக்குப்படி அனைத்து வெளிநாட்டினரும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க முடியும். ஏனென்றால், மற்றொரு மதத்தின் திரைச்சீலைக்கு உள்ளே, இரட்டை திரைச்சீலைக்கு உள்ளே இருந்து கொண்டும் தந்தையைத் தெரிந்து கொண்டீர்கள். ஒன்றோ சாதாரண சொரூபம் என்ற திரைச்சீலை மற்றும் இன்னொன்று தர்மத்தின் திரைச்சீலையும் இருக்கிறது. பாரதத்தைச் சேர்ந்தவர்களுக்கோ ஒரே ஒரு திரைச்சீலையை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டு குழந்தைகள் இரண்டு திரைச்சீலைக்கு உள்ளே இருந்து கொண்டு தெரிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். தைரியம் உள்ளவர்களும் அதிகம் இருக்கிறார்கள், அசம்பவத்தை சம்பவமாகவும் ஆக்கியிருக்கிறார்கள். கிரிஸ்தவ அல்லது மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் நம்முடைய மதத்தைச் சேர்ந்தவர் பிராமணனாக எப்படி ஆக முடியும்? அசம்பவம் (நடக்க முடியாது) ஆகும் என்று நினைக்கிறார்கள். அந்த அசம்பவத்தையும் சம்பவம் ஆக்கியிருக்கிறீர்கள், தெரிந்து கொள்வதிலும் திறமை நிறைந்தவர்கள் மற்றும் ஏற்றுக் கொள்வதிலும் திறமை நிறைந்தவர்கள். இரண்டிலும் நம்பர் ஒன் ஆக இருக்கிறீர்கள். மற்றபடி இடையில் எலி வந்து விட்டது என்றால் பயந்து விடுகிறீர்கள். சகஜமான வழி தான் ஆனால் தன்னுடைய வீணான எண்ணங்களை கலந்து விடுவதினால் சகஜமானது கடினமாகி விடுகிறது. எனவே இதிலும் உயரம் தாண்டுதல் செய்யுங்கள். மாயாவைப் பகுத்தறிந்து தெரிந்து கொள்ளும் கண் பார்வையை துல்லியமாக்குங்கள். தவறாகப் புரிந்து கொள்பவராக ஆகிவிடுகிறீர்கள். காகிதத்தை உண்மை என்று நினைப்பது தவறாகப் புரிந்து கொள்வதாகத்தானே அர்த்தம், இல்லையா. இல்லை என்றால் இரட்டை வெளிநாட்டினரின் விசேஷமும் அதிகம். இந்த ஒரு பலஹீனம் மட்டும் இருக்கிறது. பின்பு தன் மீதும் மிகவும் சிரித்துக் கொள்கிறார்கள். இது காகிதப்புலி, உண்மையானது அல்ல என்று எப்பொழுது தெரிந்து  ள்கிறார்களோ அப்பொழுது சிரிக்கிறார்கள். சோதனையும் செய்து விடுகிறார்கள் தன்னை மாற்றவும் செய்து விடுகிறார்கள். ஆனால் அந்த நேரம் பயப்படும் காரணத்தினால் கீழே வந்து விடுகிறார்கள் அல்லது இடை நிலையில் வந்து விடுகிறார்கள். பின்பு மேலே செல்வதற்காக கடுமையாக முயற்சி செய்கிறார்கள் என்றால் சகஜமானதற்குப் பதிலாக கடும் முயற்சி செய்வதின் அனுபவம் ஆகிறது. பார்க்கப்போனால் சிறிது கூட கடின உழைப்பே இல்லை. தந்தையின் குழந்தை ஆனீர்கள், அதிகாரி ஆத்மாவாக ஆனீர்கள், பொக்கிஷத்திற்கு, வீட்டிற்கு, இராஜ்யத்தின் அதிபதி ஆக வேண்டும். வேறு என்ன வேண்டும். அப்படி இப்பொழுது என்ன செய்வீர்கள்? பயப்படும் சம்ஸ்காரத்தை (பழக்கத்தை) இங்கேயே விட்டுச் செல்லுங்கள். புரிந்ததா? பாப்தாதாவும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார், சிரித்துக் கொண்டே இருக்கிறார். குழந்தைகள் ஆழத்திலும் செல்கிறார்கள், ஆனால் ஆழத்தின் கூடவே சில நேரங்களில் பயப்படவும் செய்கிறார்கள். கடைசியில் வந்தும் வேகமாகச் செல்வதின் சம்ஸ்காரமும் இருக்கிறது. முன்பு வெளிநாட்டினரிடம் விசேஷமாக மாட்டிக் கொள்ளும் சம்ஸ்காரம் இருந்தது. இப்பொழுது வேகமாகச் செல்வதற்கான சம்ஸ்காரம் வேண்டும். ஒன்றில் மட்டும் மாட்டிக்கொள்வதில்லை ஆனால் அனேகர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரே வாழ்க்கையில் எத்தனை கூண்டுகள் இருக்கின்றன. ஒரு கூண்டிலிருந்து வெளியாகி இன்னொரு கூண்டில் மாட்டிக்கொள்கிறார்கள், அதிலிருந்து வெளிப்பட்டு மூன்றாவதில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த மாதிரி எவ்வளவு மாட்டிக் கொள்ளும் சம்ஸ்காரம் இருந்ததோ அந்த அளவே வேகமாக செல்லும் சம்ஸ்காரமும் இருந்தது. ஆனால் சின்ன விஷயத்தை பெரியதாக ஆக்காதீர்கள் என்ற இந்த ஒரு விஷயம் மட்டும் கவனத்தில் இருக்க வேண்டும். பெரியதை சிறியதாக ஆக்குங்கள். இப்படியும் நடக்குமா என்ன? இந்தக் கேள்வி கூட இருக்க வேண்டாம். இது என்ன இப்படி ஆயிற்று!? அந்த மாதிரியும் நடக்குமா? என்ற இந்த கேள்விகளுக்குப் பதிலாக, என்ன நடக்கிறதோ அதில் நன்மை அடங்கியிருக்கிறது என்றிருக்க வேண்டும். கேள்வி அகன்று விட வேண்டும். முற்றுப்புள்ளி. புத்தியை இந்த விஷயத்தில் அதிகம் செலுத்தாதீர்கள். இல்லையென்றால் சக்தி வீணாகச் சென்று விடும். மேலும் தன்னை சக்திசாலியாக அனுபவம் செய்வதில்லை. கேள்விக்குறி அதிகமாக இருக்கும். இப்பொழுது மதுபன் வரதான பூமியில் கேள்விக்குறியை அகற்றிவிட்டு முற்றுப்புள்ளி இட்டுவிட்டுச் செல்லுங்கள். கேள்விக்குறி கடினமானது முற்றுப்புள்ளி சுலபமானது. சுலபமானதை விட்டு விட்டு கடினமானதை ஏன் கையில் எடுக்கிறீர்கள்? அதில் சக்தி வீணாகிறது. மேலும் முற்றுப்புள்ளியில் வாழ்க்கையே சிறந்ததாக ஆகிவிடும். அங்கே வீணானது, இங்கே சிறப்பானது. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? இப்பொழுது வீணாக்காதீர்கள். ஒவ்வொரு எண்ணமும் சிறப்பானது, ஒவ்வொரு விநாடியும் சிறப்பானது. நல்லது - லண்டனிலிருப்பவர்களுடன் ஆன்மீக உரையாடல் முடிந்து விட்டது. லண்டனில் அனைத்து தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் பாப்தாதாவின் பலகோடி மடங்கு அன்பு நினைவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். ஸ்தூலமாக மதுபன்னில் வந்து சேரவில்லை. ஆனால் பாப்தாதா எப்பொழுதும் குழந்தைகளைத் தன் எதிரில் பார்க்கிறார். யாரெல்லாம் சேவை செய்யும் குழந்தைகளோ, ஒவ்வொருவரின் பெயரை ஏன் கூற வேண்டும்? யாரெல்லாம் இருக்கிறார்களோ அனைவருக்கும், அனைவரும் சகயோகி ஆத்மாக்கள், அனைவரும் கவலையற்றவராகி பெருமிதத்தில் இருங்கள். ஏனென்றால் உங்கள் அனைவரின் துணைவனாக சுயம் தந்தை இருக்கிறார். நல்லது.

ஓம் சாந்தி.

 

வரதானம் :

இகழ்ச்சி - புகழ்ச்சி, வெற்றி-தோல்வியில் சமநிலையை வைக்கக்கூடிய தந்தைக்குச் சமமான சம்பன்னம் மற்றும் சம்பூரணமானவர் ஆகுக.

 

ஆத்மாவின் சம்பன்னம் மற்றும் சம்பூரண நிலை உருவாகி விடுகிறது என்றால், இகழ்ச்சி - புகழ்ச்சி, வெற்றி - தோல்வி, சுகம் - துக்கம் அனைத்திலும் சமநிலை வந்து விடுகிறது. துக்கத்திலும் முகத்தில் மற்றும் நெற்றியில் துக்கத்தின் உணர்வுகளுக்கு பதிலாக சுகம் மற்றும் மகிழச்சியின் உணர்வுகள் தென்பட வேண்டும். இகழ்ச்சியை கேட்டுக் கொண்டும் இது இகழ்ச்சி இல்லை சம்பூர்ண நிலையை பரிபக்குவமாக ஆக்குவதற்காக இது மகிமைக்குத் தகுதியான வார்த்தைகளாகும் என்று அனுபவம் ஆக வேண்டும். அந்த மாதிரி சமநிலை இருந்தது என்றால் தான் தந்தைக்குச் சமமானவர் என்று கூறுவோம். கொஞ்சம் கூட உள்உணர்வில் இவர் எதிரி, தீய வார்த்தைகளால் திட்டுபவர், மேலும் இவர் மகிமை செய்பவர் என்று உள்உணர்வில் வரக் கூடாது!

 

சுலோகன் –

நிரந்தர யோகப் பயிற்சியின் மீது கவனம் செலுத்தினீர்கள் என்றால், முதல் வரிசை (டிவிஷனில்) வரிசை எண் கிடைத்து விடும்.

 

***ஓம் சாந்தி.***