BK Murli 31 October 2016 TamilBK Murli 31 October 2016 Tamil

31.10.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தாய், தந்தையைப் பின்பற்றி சிம்மாசனத்தில் அமரக் கூடியவர் ஆகுங்கள். இதில் எந்த துன்பமும் இல்லை. தந்தையை மட்டும் நினையுங்கள், தூய்மையாகுங்கள்.

கேள்வி :

ஏழைப் பங்காளன் தன்னுடைய குழந்தைகளின் பாக்கியத்தை உருவாக்குவதற்காக என்ன ஆலோசனை வழங்குகிறார்?


பதில் :

குழந்தைகளே, உங்களுடையது எதுவும் சிவபாபாவிற்குத் தேவையில்லை. நீங்கள் சாப்பிடுங்கள், குடியுங்கள், படியுங்கள்-புத்துணர்வு அடைந்து செல்லுங்கள். ஆனால் ஒரு பிடி அவலுக்கு கூட மகிமை இருக்கிறது. 21 பிறவிகளுக்கு பணக்காரர் ஆக வேண்டும் என்றால் ஏழையின் ஒரு பைசா கூட பணக்காரரின் 100 ரூபாய்க்குச் சமமாகும். ஆகையால் பாபா நேரடியாக வரும் போது தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணம் செய்து விடுங்கள்.

பாடல் :

 தாயும் நீயே, தந்தையும் நீயே.....

ஓம் சாந்தி.

பாடலின் பொருளை குழந்தைகள் புரிந்துக் கொண்டீர்கள். அவர்கள் அழைக்கிறார்கள். ஆனால் புரிந்துக் கொள்ளவில்லை. அவர் நம்முடைய தந்தை என்பதைப் புரிந்துக் கொள்கிறீர்கள். உண்மையில் அவர் உங்களுடைய தந்தை மட்டும் அல்ல. அனைவருக்கும் தந்தையாவார். இது புரிந்துக் கொள்ள வேண்டியதாகும். எத்தனை ஆத்மாக்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தந்தை நிச்சயம் பரமாத்மா ஆவார்.  அப்பா-அப்பா என்று கூறுவதால் சொத்து நிச்சயம் நினைவிற்கு வருகிறது. அப்பாவை நினைத்தால் தான் விகர்மங்கள் அழியும். உங்களுடைய ஆத்மா அழுக்காகி இருக்கிறது. இப்போது ஆத்மாவை தூய்மையாக மாற்ற வேண்டும் என பாபா குழந்தைகளுக்குக் கூறுகின்றார். அனைவருக்கும் தந்தை என்றால் குழந்தைகள் நிச்சயமாக நிர்விகாரியாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு நேரத்தில் அனைவரும் நிர்விகாரிகளாக இருநதனர். லஷ்மி நாராயணனின் ராஜ்ஜியம் இருந்த போது அனைவரும் நிர்விகாரியாக இருந்தனர் என பாபாவே கூறுகிறார். எவ்வளவு மனித ஆத்மாக்களைப் பார்க்கிறீர்கள். அவர்களும் நிர்விகாரியாக இருப்பார்கள். ஏனென்றால் உடல் அழிந்து போகும். மற்ற ஆத்மாக்கள் சென்று நிராகார உலகத்தில் இருக்கின்றன. அங்கே விகாரத்தின் பெயர் அடையாளம் கூட இல்லை. உடலும் இல்லை. அங்கிருந்து தான் அனைத்து ஆத்மாக்களும் இந்த உலகத்தில் நடிப்பை நடிப்பதற்காக வருகின்றன. முதன் முதலில் பாரதவாசி வருகிறார்கள். பாரதத்தில் முதன் முதலில் இந்த லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. அப்போது மற்ற தர்மத்தினர் அனைவரும் நிராகார உலகத்தில் இருந்தனர். இச்சமயம் அனைவரும் சாகார உலகத்தில் இருக்கிறார்கள். இப்போது பாபா குழந்தைகளாகிய உங்களை நிர்விகாரி தேவி தேவதைகளாக மாற்றுவதற்காக நிர்விகாரியாக மாற்றுகிறார். நீங்கள் தேவி தேவதையாக மாறி விடும் போது உங்களுக்கு நிச்சயமாக புதிய உலகம் வேண்டும். பழைய உலகம் முடிந்து போக வேண்டும். சாஸ்திரங்களில் மகாபாரத போர் கூட காண்பிக்கப்பட்டிருக்கிறது. மீதம் பஞ்ச பாண்டவர்கள் இருந்ததாக காண்பிக்கிறார்கள். அவர்களும் மலையில் சென்று கரைந்து விட்டனர். யாரும் தப்பிக்கவில்லை. சரி, இவ்வளவு ஆத்மாக்களும் எங்கே சென்றனர். ஆத்மா அழிவதில்லை. எனவே, நிராகாரி, நிர்விகார உலகத்திற்குச் சென்று விட்டனர் என கூறுவார்கள். பாபா விகார உலகத்திலிருந்து நிராகாரி, நிர்விகாரி உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். பாபாவிடமிருந்து நிச்சயமாக சொத்து கிடைக்க வேண்டும் என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது துக்கம் பெருகி விட்டது. இச்சமயம் நமக்கு சுகம், சாந்தி இரண்டும் வேண்டும். அனைவரும் பகவானிடம் ஓ, பகவான் எங்களுக்கு சுகம் அளியுங்கள். அமைதியை அளியுங்கள் என கேட்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் சொத்திற்காக முயற்சி செய்துக் கொண்டு தான் இருக்கிறான். உங்களுக்கு எல்லையற்ற தந்தை நிறைய செல்வம் கொடுக்கிறார். நீங்கள் சத்யுகத்தில் எவ்வளவு பணக்காரராக இருந்தீர்கள். வைர வைடூரியங்களின் மாளிகை இருந்தது. நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைய வந்திருக்கிறாம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். முழு உலகமும் வராது. பாபா பாரதத்தில் தான் வருகிறார். பாரதவாசிகள் தான் இச்சமயம் நரகவாசிகளாக இருக்கின்றார்கள். பிறகு சொர்க்கவாசியாக பாபா மாற்றுகின்றார் பக்தியில் துக்கத்தின் காரணமாக பல பிறவிகளாக பாபாவை நினைத்தீர்கள். ஓ, பரம்பிதா பரமாத்மா, ஓ, கல்யாணகாரி துக்கத்தை நீக்குபவரே, சுகத்தை அளிக்கும் தந்தையே என்றெல்லாம் அவரை நினைத்தீர்கள் என்றால், நிச்சயமாக அவர் வருவார். சும்மா நினைக்க மாட்டார்கள். பகவான் தந்தை வந்து பக்தர்களுக்குப் பலனை கொடுப்பார் என நினைக்கிறார்கள். அதுவும் அனைவருக்கும் கொடுப்பார் அல்லவா. அனைவருக்கும் தந்தை அல்லவா?

 

நாம் சுகதாமத்திற்குச் செல்கிறோம் என அறிகிறீர்கள். மற்ற அனைவரும் சாந்தி தாமத்திற்குச் செல்கிறார்கள். சுகதாமத்தில் இருக்கும் போது முழு உலகத்திலும் சுகம், சாந்தி இருக்கிறது. பாபாவிற்கு குழந்தைகள் மீது அன்பு இருக்கிறது அல்லவா? மேலும் குழந்தைகளுக்கும் தாய், தந்தையின் மீது அன்பு இருக்கிறது. தாயும் நீயே, தந்தையும் நீயே..... என பாடுகிறார்கள். உடலுக்குத் தாய் தந்தை இருந்தாலும், தாயும் நீயே, தந்தையும் நீயே..... உன்னுடைய கருணையினால் தான் சுகம் கிடைக்கும் என பாடுகிறார்கள். லௌகீக தாய் தந்தையைப் பார்த்து இவ்வாறு பாட மாட்டார்கள். அவர்களும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். நல்லது. உழைக்கிறார்கள், சொத்து அளிக்கிறார்கள், நிச்சயதார்த்தம் செய்விக்கிறார்கள். இருப்பினும் மிகுந்த சுகத்தை பரலோக தாய் தந்தை தான் அளிக்கிறார்கள். இப்போது நீங்கள் ஈஸ்வரிய தர்மத்தின் குழந்தைகள். அவர்கள் அனைவரும் அசுர தர்மத்தின் குழந்தைகள். சத்யுகத்தில் ஒரு போதும் யாரும் தர்மத்தின் குழந்தைகள் என கூற மாட்டார்கள். அங்கேயோ சுகமே சுகம் தான். துக்கத்தின் பெயர் அடையாளமே இருக்காது. உங்களுக்கு 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் ஆழ்ந்த சுகத்தை அளிப்பதற்காக நான் வந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார்.

 

எல்லையற்ற தந்தையிடமிருந்து நாம் சொர்க்கத்தின் அளவிலா சுகத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிகிறீர்கள், இந்த துக்கத்தின் அனைத்து பந்தனங்களும் அழிந்து போகும் சத்யுகத்தின் சுகத்தின் சம்பந்தம் இருக்கும். கலியுகத்தில் துக்கத்தின் பந்தனம் ஆகும். பாபா சுக சம்பந்தத்தில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் என்று அவருக்கு பெயர். தந்தை வந்து குழந்தைகளுக்கு சேவை செய்கிறார். நான் உங்களின் கீழ்ப் படிந்த சேவகன் என்று பாபா கூறுகிறார். நீங்கள் ஓ, பாபா வந்து எங்களுக்கு நிறைய சுகத்தை அளியுங்கள், என்று என்னை அரை கல்பமாக நினைத்தீர்கள். இப்போது கொடுப்பதற்காக நான் வந்திருக்கிறேன். ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். இந்த மரண உலகம் அனைத்தும் முடியப் போகின்றது. அமரலோகம் ஸ்தாபனை ஆகிறது. அமரபுரிக்குச் செல்வதற்காக அமரநாத் பாபாவிடமிருந்து நீங்கள் அமர கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே யாரும் இறப்பதில்லை. ஒரு போதும் இவர்கள் இறந்து விட்டார்கள் என்று வாயிலிருந்து வராது. நான் இந்த இற்றுப் போன உடலை விட்டு விட்டு புதியதை எடுக்கிறேன் என ஆத்மா கூறுகிறது. அது சரிதான் அல்லவா? அங்கே யாருக்கும் நோய் எதுவும் கிடையாது. மரணலோகம் என்ற பெயர் இல்லை. உங்களை அமரபுரிக்கு அதிபதியாக்குவதற்காக நான் வந்திருக்கிறேன். அங்கே நீங்கள் இராஜ்யம் செய்யும் போது மரண உலகத்தைப் பற்றிய நினைவு எதுவும் வராது. கீழே இறங்கி இறங்கி நாம் என்னவாக மாறுவோம் என்பதும் தெரியாது. தெரிந்து விட்டால் சுகம் காணாமல் போய்விடும். அங்கே நமக்கு முழு சக்கரமும் புத்தியில் இருக்க வேண்டும். முற்றிலும் சொர்க்கமாக இருந்தது. இப்போது நரகமாக இருக்கிறது. ஆகவே தான் தந்தையை அழைக்கிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். இங்கே வந்து நடிக்கிறீர்கள். இங்கிருந்து நீங்கள் சம்ஸ்காரத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறீர்கள். பிறகு அங்கிருந்து வந்து புதிய உடலை எடுத்து இராஜ்யம் செய்வீர்கள். இப்போது உங்களுக்கு நிராகாரி, ஆகாரி, மற்றும் சாகார உலகத்தின் செய்திகளைக் கூறுகிறார். சத்யுகத்தில் இது தெரியாது. அங்கேயோ இராஜ்ஜியம் மட்டும் செய்வீர்கள். இப்போது தான் நாடகத்தை நீங்கள் அறிகிறீர்கள். சத்யுகத்திற்காக நாம் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம் என உங்களுடைய ஆத்மா அறிகிறது. சொர்க்கத்திற்குச் செல்வதற்கு நிச்சயம் தகுதி அடைகிறீர்கள். தனக்கும் நன்மை, பிறருக்கும் நன்மை செய்வீர்கள். பிறகு அவர்களுடைய ஆசீர்வாதம் உங்கள் தலைமீது வந்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய திட்டம் எப்படி இருக்கிறது பாருங்கள். அச்சமயம் அனைவருக்கும் தனக்கென்று திட்டம் இருக்கிறது. பாபாவிற்கு திட்டம் இருக்கிறது. அவர்கள் அணைகள் போன்றவைகளைக் கட்டுகிறார்கள் என்றால் மின்சாரம் போன்றவைகளுக்காக செலவு செய்கிறார்கள். இப்போது அது அனைத்தும் அசுர திட்டங்கள் என பாபா கூறுகிறார். நம்முடையது ஈஸ்வரிய திட்டமாகும். இப்போது யாருடைய திட்டம் வெற்றி வெறும். அவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வார்கள். அனைவரின் திட்டமும் மண்ணோடு மண்ணாகி விடும். அவர்கள் யாரும் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யவில்லை. அவர்கள் எது செய்தாலும் துக்கத்திற்காகவே ஆகும். பாபாவின் திட்டம் சொர்க்கத்தை உருவாக்குவதாகும். நரகவாசி மனிதர்கள் நரகத்தில் இருப்பதற்காக திட்டம் போடுகிறார்கள். பாபாவினுடைய திட்டம் சொர்க்கத்தை உருவாக்குவதற்காகப் போய் கொண்டிருக்கிறது. உங்களுக்கு எவ்வளவு குஷி ஏற்பட வேண்டும். உங்களுடைய கருணையினால் அளவிலா சுகம் கிடைக்கிறது என பாடுகிறார்கள். அதை முயற்சி செய்து அடைய வேண்டும் அல்லவா. எதை வேண்டுமோ அதை அடையுங்கள் என பாபா கூறுகின்றார். வேண்டுமானால் உலகிற்கே இராஜா, இராணி ஆகுங்கள், வேண்டுமென்றால் வேலைக்காரனாகுங்கள். எவ்வளவு முயற்சி செய்வீர்களோ அதற்கேற்ப ஒன்று தூய்மையாகுங்கள், மேலும் ஒவ்வொருவருக்கும் பாபாவின் அறிமுகத்தை கொடுத்துக் கொண்டே இருங்கள் என்று மட்டும் பாபா கூறுகிறார். அப்பாவை நினைத்தால் சொத்து இராஜ்யம் உங்களுடையதாகும். பாபாவை நினைப்பதில் தான் மாயா மிகவும் தடைகளை ஏற்படுத்துகிறது. புத்தியோகத்தைத் துண்டிக்கிறது. எவ்வளவு என்னை நினைக்கிறீர்களோ அவ்வளவு பாவங்கள் எரிந்து போகும். மேலும் உயர்ந்த பதவி பெறுவீர்கள் என பாபா கூறுகிறார். ஆகவே பாரதத்தின் பழமையான யோகம் பிரசித்தமானது. பாபாவை விடுவிக்கக் கூடியவர் என்று கூட கூறுகிறார்கள். 21 பிறவிகளுக்கு பாபா உங்களை துக்கத்திலிருந்து விடுவிக்கிறார். பாரதவாசிகள் சுகதாமத்தில் இருப்பார்கள். மற்ற அனைவரும் சாந்திதாமத்தில் இருப்பார்கள். நிராகார உலகம் மற்றும் சாகார உலகத்தின் திட்டத்தைக் காண்பித்தால் உடனே புரிந்துக் கொள்வார்கள். மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்கள் சொர்கத்திற்கு வர முடியாது. சொர்கத்திலோ தேவி தேவதைகள் தான் இருப்பார்கள். இந்த நாடகத்தின் ஞானத்தை பாபாவைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. பாபாவிடமிருந்து சொத்தை அடைவதற்காக குழந்தைகள் வருகிறார்கள். மிகுதியான சுகம் சத்யுகத்தில் தான் இருக்கிறது. பிறகு இராவண இராஜ்யம் ஆகிவிடுகிறது. அதில் மிகுதியான துக்கம் இருக்கிறது. இப்போது பாபா நமக்கு உண்மையிலும் உண்மையான கதையைக் கூறி அமரலோகத்திற்குச் செல்வதற்குத் தகுதி அடைய வைக்கிறார் என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இப்போது நீங்கள் 21 பிறவிகளுக்கு செல்வந்தர் ஆகக் கூடிய அளவிற்கு கர்மங்களைச் செய்கிறீர்கள். செல்வந்தர் ஆகுக, பிள்ளைப்பேறு பெற்றவர் ஆகுக..... என்று கூறுகிறார்கள். அங்கே உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை நிச்சயமாக இருக்கும். நீண்ட ஆயுள் உடையவராகுக, உங்களுடைய ஆயுள் கூட 150 வருடங்கள் இருக்கும். இருப்பினும் அகால மரணம் ஒருபோதும் இருப்பதில்லை. இதை பாபா தான் புரிய வைக்கின்றார். நீங்கள் அரை கல்பமாக என்னை அழைத்து வந்தீர். சன்னியாசிகள் இவ்வாறு கூறுவார்களா? அவர்களுக்கு என்ன தெரியும் ! பாபா எவ்வளவு அன்போடு புரிய வைக்கின்றார். குழந்தைகளே ! இந்த ஒரு பிறவி ஒரு வேளை தூய்மையாகினால் 21 பிறவிகள் தூய்மையான உலகத்திற்கு அதிபதியாகி விடுவீர்கள். தூய்மையில் தான் சுகம் இருக்கிறது அல்லவா? நீங்கள் தூய்மையான தெய்வீக தர்மத்தினராக இருந்தீர்கள். இப்போது அசுத்தமானவராகி துக்கத்தில் வந்திருக்கிறீர்கள். சொர்க்கத்தில் நிர்விகாரியாக இருந்தீர்கள். இப்போது விகாரி ஆனதால் நரகத்தில் துக்கம் அடைந்துள்ளீர்கள். தந்தையோ முயற்சி செய்விப்பார் அல்லவா? சொர்க்கத்திற்கு மகாராஜா மகாராணி ஆகுங்கள். உங்களுடைய மம்மா பாபா ஆகிறார்கள் என்றால், நீங்களும் முயற்சி செய்யுங்கள். இதில் குழம்புவதற்கு எந்த விஷயமும் இல்லை. பாபா யாரையும் காலில் விழுவதற்கு விடுவதில்லை.

 

நான் உங்களுக்கு தங்க, வைர மாளிகைகளை அளிக்கிறேன் என பாபா கூறுகிறார். சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றினார். பிறகு அரை கல்பம் நீங்கள் பக்தி மார்க்கத்தில் தலையைத் தாழ்த்தி (வணங்கி) கொண்டே வந்தீர்கள். பணமும் கொடுத்துக் கொண்டே வந்தீர்கள். அந்த தங்க வைரத்தின் மாளிகை அனைத்தும் எங்கே சென்றது. நீங்கள் சொர்க்கத்தில் இருந்து இறங்கி இறங்கி நரகத்தில் வந்து விட்டீர்கள். இப்போது உங்களை மீண்டும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறேன். உங்களுக்கு எந்த துன்பமும் கொடுக்கவில்லை. என்னை மட்டும் நினையுங்கள், தூய்மையாகுங்கள் ஒரு பைசாவும் கொடுக்க வேண்டியதில்லை. சாப்பிடுங்கள் அருந்துங்கள், படியுங்கள் புததுணர்வு அடைந்து செல்லுங்கள். படிப்பிற்கான பைசா எதுவும் வாங்குவதில்லை. பாபா நாங்கள் நிச்சயமாகக் கொடுப்போம், இல்லை என்றால் அங்கே மாளிகை போன்றவைகள் எப்படி கிடைக்கும்? என்பார்கள். பக்தி மார்க்கத்தில் கூட நீங்கள் ஈஸ்வரன் பெயரில் ஏழைகளுக்கு தானம் கொடுத்தீர்கள். பலனை ஈஸ்வரன் கொடுப்பார். ஏழை கொடுக்க முடியாது. ஆனால் அது ஒரு பிறவிக்காக கிடைக்கிறது. இப்போதா பாபா தாங்கள் நேரடியாக வந்திருக்கிறீர்கள். நாங்கள் இந்த சிறிதளவு பணத்தைக் கொடுக்கிறோம். தாங்கள் 21 பிறவிகளுக்கு எங்களுக்கு சொர்க்கத்தை கொடுங்கள். பாபா அனைவரையும் பணக்காரராக மாற்றிக் கொண்டிருக்கிறார். பணம் கொடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் வசிப்பதற்காகவே கட்டிடங்களை கட்டுகிறார். இல்லை என்றால், இது அனைத்தையும் எப்படி கட்ட முடியும்? குழந்தைகள் இந்த கட்டிடங்கள் போன்றவைகளைக் கட்டுகிறார்கள் அல்லவா? நான் இதில் வசிக்க வேண்டியதில்லை என்று சிவபாபா கூறுகிறார். சிவபாபாவோ நிராகாரர் வள்ளல் அல்லவா? நீங்கள் கொடுக்கிறீர்கள், உங்களுக்கு 21 பிறவிகளுக்கு பலன் கொடுக்கிறேன். நான் உங்களுடைய சொர்க்கத்தில் கூட வருவதில்லை. நான் உங்களை நரகத்திலிருந்து வெளியே எடுப்பதற்காக நரகத்தில் தான் வர வேண்டியிருக்கிறது. உங்களுடைய குரு போன்றோர்கள் இன்னும் புதை குழியில் மாட்ட வைக்கிறார்கள். அவர்கள் சத்கதியை அளிக்க முடியாது. பவித்ரமான உலகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இப்போது பாபா வந்திருக்கிறார். பின் ஏன் பாபாவை நினைப்பதில்லை. எந்த ஒரு பைசாவும் கொடுக்க வேண்டியதில்லை. என்னை மட்டும் நினைவு செய்தால் பாவங்கள் அழிந்து போகும். என்னிடம் வரலாம் என பாபா கூறுகின்றார். இந்த கட்டிடம் போன்றவைகள் குழந்தைகளாகிய நீங்கள், உங்களுக்காக கட்டியிருக்கிறீர்கள். இங்கே ஒரு பிடி அவலுக்கு கூட மகிமை இருக்கிறது அல்லவா. ஏழைகள் தங்களின் தைரியத்திற்கு ஏற்ப எவ்வளவு அளிக்கிறார்களோ அவ்வளவு அவர்களுடையதும் உருவாகிறது. எவ்வளவு பணக்காரர்களுக்கு பதவி இருக்கிறதோ அவ்வளவு ஏழைகளுக்கும் இருக்கிறது. இருவரும் ஒன்றாகி விடுகின்றனர். ஏழைகளிடம் இருப்பதே 100 ரூபாய் அதிலிருந்து ஒரு ரூபாய் அளியுங்கள். பணக்காரர்களிடம் நிறைய இருக்கிறது. அவர்கள் 100 ரூபாய் கொடுக்கிறார்கள். இரண்டிற்கும் ஒரே பலன் தான் கிடைக்கும். இதனால் பாபாவிற்கு ஏழை பங்காளன் என்று பெயர். அனைவரையும் விட ஏழைகள் பாரதத்தினர். அவர்களைத் தான் நான் வந்து பணக்காரனாக மாற்றுகிறேன். ஏழைகளுக்குத் தான் தானம் அளிக்கப்படுகிறது அல்லவா? எவ்வளவு தெளிவாக பாபா புரிய வைக்கின்றார். குழந்தைகளே ! இப்போது மரணம் எதிரிலேயே நிற்கிறது. இப்போது சீக்கிரம் சீக்கிரம் செல்லுங்கள். நினைவின் வேகத்தை அதிகரியுங்கள். மிகவும் இனிமையான தந்தையை எவ்வளவு நினைக்கிறீர்களோ அவ்வளவு ஆஸ்தி கிடைக்கும். நீங்கள் மிகவும் செல்வந்தர் ஆகிறீர்கள். நீங்கள் தலை வணங்குங்கள், பெரிய திருவிழாக்களுக்குவ் செல்லுங்கள் என்று பாபா உங்களுக்குப் கூறவில்லை. இல்லை. வீட்டில் அமர்ந்திருந்தாலும் அப்பா மற்றும் ஆஸ்தியை நினையுங்கள். அவ்வளவு தான் பாபா பிந்துவாக இருக்கிறார். அவருக்கு பரம்பிதா பரமாத்மா என்று பெயர். சுப்ரீம் ஸோல் எல்லாரையும் விட உயர்ந்ததிலும் உயாந்தவர். நானும் பிந்துவாக இருக்கிறேன். நீங்களும் பிந்துவாக உள்ளீர்கள் என கூறுகிறார். பக்தி மார்ப்கத்திற்காக எனது ரூபத்தைர் பெரியதாக்கி வைத்துள்ளனர். இல்லையென்றால் பிந்துவை எப்படி பூஜிப்பது? அவரை சிவபாபா என்று அழைக்கின்றனர். யார் கூறியது. சிவபாபா நமக்கு சொத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என நீங்கள் கூறுகிறீர்கள். அதிசயமாக இருக்கிறது அலலவா. 84ன் சக்கரம் சுழன்றுக் கொண்டிருக்கிறது. பலமுறை சொத்தை அடைந்து விட்டீர்கள். மேலும் அடைந்துக் கொண்டே இருப்பீர்கள் என்று எவ்வளவு நன்றாக பாபா புரிய வைக்கிறன்றார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. மரணம் எதிரிலேயே நிற்கிறது. ஆகவே இப்போது நினைவின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். சத்யுக உலகத்தில் உயர்ந்த பதவி பெற முழுமையான முயற்சி செய்ய வேண்டும்.

 

2. தனக்கும் பிறருக்கும் நன்மை செய்து ஆசீர்வாதத்தை அடைய வேண்டும். தூய்மையான உலகத்திற்குச் செல்வதற்காக தூய்மையாக நிச்சயம் மாற வேண்டும்.

 

வரதானம் :

 சதா மனனம் மூலமாக லயித்த நிலையின் கடலில் மூழ்கிய அனுபவம் செய்யக் கூடிய அனுபவி மூர்த்தி ஆகுக.

 

அனுபவங்களை அதிகரிப்பதற்கு ஆதாரம் மனன சக்தியாகும். மனனம் செய்யக் கூடியவர்கள் தானாகவே மூழ்கி இருப்பார்கள். மூழ்கிய நிலையில் யோகா செய்ய வேண்டியதில்லை. ஆனால் நிரந்தரமாக இணைப்பு இருக்கிறது. உழைக்க வேண்டியதில்லை. மூழ்குதல் என்றால் அன்பின் கடலில் கலந்திருத்தல் ஆகும். இவ்வாறு கலந்திருப்பவர்களை யாரும் பிரிக்க முடியாது. எனவே உழைப்பிலிருந்து விடுபடுங்கள் கடலின் குழந்தை என்றால் அனுபவங்களின் குளத்தில் குளிக்காதீர்கள், ஆனால் கடலில் கலந்து விடுங்கள். அப்போது அனுபவி மூர்த்தி என்பார்கள்.

 

சுலோகன் :

யாருடைய ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு நொடியும் சக்திசாலியாக இருக்கிறதோ அவர்களே ஞான சொரூப ஆத்மா ஆவர்.


***ஒம்சாந்தி***