BK Murli 1 November 2016 TamilBK Murli 1 November 2016 Tamil

01.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தை மூலமாக கிடைத்துள்ள ஞானத்தை புத்தியில் நிலையாக வைத்திருக்க வேண்டும். அதிகாலை எழுந்து சுயதரிசன சக்கரதாரியாகி ஞான சிந்தனை செய்ய வேண்டும்.

 

கேள்வி:

இந்த ஈசுவரிய படிப்பின் சட்டம் என்ன? அதற்காக எந்த ஒரு உத்தரவு கிடைத்துள்ளது?

 

பதில்:

இந்த ஈசுவரிய படிப்பின் சட்டமாவது - நியமப்படி படிப்பது. சில சமயம் படிப்பது, சில சமயம் படிக்காதிருப்பது - இது சட்டம் கிடையாது. பாபா படிப்பிற்காக நிறைய ஏற்பாடுகள் அமைத்துக் கொடுத்துள்ளார். படிப்பு (முரளி) இங்கிருந்து தபால் மூலம் செல்கிறது. 7 நாள் பாட முறை கற்ற பின் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம். படிப்பை ஒரு பொழுதும் தவற விடக் கூடாது.

 

பாடல்:

ஓம் நமோ சிவாயா.. .. ..

 

ஓம் சாந்தி.

இங்கு அமர்ந்திருக்கும் குழந்தைகள் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல் இடை கடை அல்லது சுயதரிசன சக்கரத்தை நினைவு செய்கிறார்கள். தந்தை சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள் என்று குழந்தைகளுக்கு ஞானம் அளித்துள்ளார். பிராமண குழந்தைகளாகிய நம்முடைய உத்தேசமாவது சுயதரிசன சக்கரதாரி ஆவதாகும். மூலவதனம், சூட்சுமவதனம், ஸ்தூல வதனம் மற்றும் இந்த 84 பிறவிகளின் சக்கரத்தை புத்தியிலிருத்த வேண்டும். மற்ற அனைத்தையும் புத்தியிலிருந்து நீக்கி விட வேண்டும். உண்மையில் பாபா நம்மை சூரியவம்சத்தினராக மற்றும் சந்திரவம்சத்தினராக ஆக்கி இருந்தார். பிறகு 84 பிறவிகள் எடுத்தோம் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்கிறது. நடந்தாலும் சென்றாலும் எழுந்தாலும் மற்றும் அமர்ந்தாலும் சுயம் ஆத்மாவிற்கு தந்தை மற்றும் படைப்பின் முதல் இடை கடை பற்றிய ஞானம் உள்ளது. இப்பொழுது சிவபாபா உங்களை சூத்திரரிலிருந்து பிராமணராக ஆக்கி உள்ளார். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தின் பந்தயத்தை எப்படி விளையாடுகிறீர்கள் என்பதை பாபா புரிய வைத்துள்ளார். முதன் முதலில் நாம் பிராமணர்கள் ஆவோம். பிராமணர்களாகிய நம்மை பிரம்மா மூலமாகப் படைப்பவர் சிவபாபா ஆவார். படைப்பவர் மற்றும் படைப்பினுடைய ஞானத்தினால் தான் நீங்கள் சுயதரிசன சக்கரதாரி ஆகிறீர்கள். இந்த ஞானத்தை புத்தியில் நிலையாக வைத்திருக்க வேண்டும். அதிகாலை எழுந்து சுயதரிசன சக்கரதாரி ஆகி அமர்ந்து விட வேண்டும். நாம் நமது 84 பிறவிகளின் சக்கரத்தை அறிந்து விட்டுள்ளோம். ஆத்மாக்களாகிய நம் அனைவரின் படைப்புகர்த்தாவான தந்தை ஒருவரே ஆவார். நாம் அனைவரும் சகோதர சகோதரர்கள், என்று கூறவும் செய்கிறார்கள். நமது தந்தையான அவர் நிராகாரமான பரமபிதா பரமாத்மா ஆவார். பரந்தாமத்தில் வசிப்பவர். நாம் கூட அங்குதான் இருந்தோம். அவர் நமது பாபா (தந்தை) ஆவார். பாபா என்ற வார்த்தை மிகவும் அழகானது. சிவபாபாவின் கோவிலுக்குச் சென்று எவ்வளவு பூஜை செய்கிறார்கள். நிறைய நினைவு செய்கிறார்கள். நான் உங்களை மனிதரிலிருந்து தேவதையாக, அற்பமான புத்தியிலிருந்து சுத்தமான புத்தியுடையவராக ஆக்குகிறேன். அற்பமான புத்தி என்றால் சூத்திர புத்தியிலிருந்து தூய புத்தியுடையவராக ஆக்கி இருந்தேன். அதாவது உயர்ந்த புத்தியுடையவராக புருஷோத்தம புத்தியுடையவராக ஆக்கி இருந்தேன். எல்லா ஆண்களும் பெண்களும் இந்த இலட்சுமி நாராயணரை வணங்குகிறார்கள். ஆனால் இவர்கள் யார்? எப்பொழுது வந்தார்கள்? என்ன செய்தார்கள்? என்பதை அறியாமல் உள்ளார்கள். இந்த பாரதம் அழியாத கண்டமாகும் என்பதை தந்தை புரிய வைத்துள்ளார். ஏனெனில் இது அவினர்ஷி தந்தையான பரமபிதா பரமாத்மாவின் பிறந்த பூமியாகும். பதீத பாவனர் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளலின் பிறந்த இடமாகும். எனவே இது பெரியதிலும் பெரிய தீர்த்த ஸ்தலம் ஆகும். ஆனால் நாடகப்படி இது நமது காட்ஃபாதர் அல்லது தாய் தந்தை பதீத பாவனர் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளலின் பிறந்த இடம் என்பது யாருக்குமே தெரியாது. எனவே பாரத பூமியை வந்தே மாதரம் என்றழைக்கிறார்கள். அதாவது இந்த பூமியின் மீது எந்த பெண் குழந்தைகள் ஸ்ரீமத்படி பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறார்களோ அவர்களுக்கு நாங்கள் ஸ்ரீமத் படி கல்ப கல்பமாக பாரதத்தை பேரடைஸ் சொர்க்கமாக ஆக்குகிறோம் என்ற இந்த போதை இருக்க வேண்டும். யார் எந்த அளவிற்கு ஸ்ரீமத்படி நடப்பார்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவியை அடைவார்கள். பாரதவாசிகள் கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடங்கள் என்று எழுதி விட்டுள்ளார்கள். பாரதம் பாபாவினுடைய பிறந்த இடமாகும். அவர் ஸ்தாபனை செய்த தர்மத்தினுடையது இந்த கீதை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதை பாரதவாசிகள் மறந்து விட்டுள்ளார்கள். எவ்வளவு வித்தியாசம் ஆகி விட்டுள்ளது. நிராகார சிவன் எங்கே ஸ்ரீ கிருஷ்ணர் எங்கே? தூய்மையாக இருந்த கிருஷ்ணருடைய ஆத்மா இப்பொழுது அநேக பிறவிகளின் கடைசி பிறவியில் தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். மீண்டும் இவருக்குள் பிரவேசம் செய்து இவரை அதே தூய்மையான ஸ்ரீ கிருஷ்ணராக ஆக்கிக் கொண்டிருக்கிறேன். எனவே கிருஷ்ணரை கருமையாக மற்றும் வெண்மையாக, ஷியர்ம் மற்றும் சுந்தர் என்று கூறுகிறார்கள். இவர் சத்யுகத்தின் முதல் நம்பர் அழகான இளவரசராக இருந்தார். மரியாதா புருஷோத்தமர், அஹிம்சா பரமோ தர்மம் என்பது இவருடைய மகிமையாகும். இராதை கிருஷ்ணர் மற்றும் இலட்சுமி நாராயணருக்கிடையே என்ன சம்பந்தம் உள்ளது என்பது பாரதவாசிகளுக்குத் தெரியாது. இதுவரையும் நீங்கள் என்ன படித்து கொண்டு வந்துள்ளீர்களோ அவற்றில் எந்த சாரமும் கிடையாது என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது நீங்கள் முன்னால் அமர்ந்துள்ளீர்கள். பாபா ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் நமக்கு மீண்டும் இராஜயோகத்தின் கல்வியை அளித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். கிருஷ்ணர் கீதையை கூறினார் என்று முழு உலகம் கூறுகிறது. கிருஷ்ணருக்கு படைப்பின் முதல் இடை கடை பற்றிய ஞானமே இல்லை என்று தந்தை கூறுகிறார். கிருஷ்ணருடைய ஆத்மா முந்தைய பிறவியில் இந்த ஞானத்தைப் பெற்றது. இப்பொழுது பெற்று கொண்டிருக்கிறார். அவருடைய பெயரை நான் பிரம்மா என்று வைத்துள்ளேன். அவருடைய அநேக பிறவிகளின் கடைசி பிறவியில் நான் பிரவேசம் செய்கிறேன். நீங்கள் மறு வாழ்வு உடையவராக ஆகி உள்ளீர்கள் அல்லவா? உங்களுக்கு அவ்யக்த பெயர்கள் கூட வைக்கப்பட்டன. இப்பொழுது வைப்பதில்லை. ஏனெனில், நிறைய பேர் கை விட்டு விட்டு போய் விட்டார்கள். தந்தையினுடையவராக ஆகி பெயர் வைத்த பிறகு ஓடி விடுவது. இதுவோ அழகாக இல்லை. எனவே பெயர் வைப்பதை நிறுத்தி விட்டார். இப்பொழுது நீங்கள் பிராமணராகி உள்ளீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள், சிவபாபாவின் பேரன்கள் ஆவீர்கள். நீங்கள் ஆஸ்தியை என்னிடமிருந்து எடுக்க வேண்டுமென்றால், என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். இது இவருடைய அநேக பிறவிகளின் கடைசி பிறவி ஆகும். சூட்சும வதனத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் பிரம்மாவோ தூய்மையானவர் ஆவார். சூட்சும வதனத்தில் பிரஜாபிதாவோ இருக்க முடியாது. இவர் ஸ்தூலத்தில் இருக்கிறார். விருட்சத்தின் கடைசியில் நின்றுள்ளார் என்று தந்தை புரிய வைக்கிறார். பவித்திர ஃபரிஷ்தா ஆவதற்காக இவர் குழந்தைகளுடன் யோகத்தில் அமர்ந்துள்ளார். எனவே சூட்சுமவதனத்தில் காண்பிக்க வேண்டி உள்ளது. இங்கு கூட பிரஜாபிதா அவசியம் வேண்டும். அவர் அவ்யக்தமானவர் (சூட்சுமமானவர்) இவர் வ்யக்தமானவர் (ஸ்தூலத்தில் இருப்பவர்) நீங்கள் கூட ஃபரிஷ்தா ஆவதற்காக வந்துள்ளீர்கள். இதில் தான் மனிதர்கள் குழம்புகிறார்கள். ஏனெனில் இது முற்றிலும் புதிய ஞானமாகும். எந்த ஒரு சாஸ்திரம் முதலியவற்றில் இந்த ஞானமில்லை. பகவான் ஒருவர் ஆவார். உயர்ந்ததிலும் உயர்ந்த நிராகார பரமபிதா பரமாத்மா அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். அவர் இருக்கக் கூடிய இடம் பரந்தாமமாகும். அவரை அனைவருமே வாருங்கள் எங்கள் மீது மாயையின் நிழல் பட்டிருக்கிறது என்று நினைவு செய்கிறார்கள். தூய்மையற்றவராக (பதீதமாக) ஆகி விட்டுள்ளோம். இந்த விஷயங்கள் புதியவர்களின் புத்தியில் பதியாது. இப்பொழுது நீங்கள் படைப்பின் முதல் இடை கடையை அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் நாம் மிகவும் குறைவானோர் ஆட்சி புரிந்து கொண்டு இருந்தோம். அங்கு அதர்மங்களின் விஷயம் இருக்கவே முடியாது. சாஸ்திரங்களில் எத்தனை விஷயங்கள் எழுதி விட்டுள்ளார்கள். ஆனால் அவற்றில் எந்த சாரமும் கிடையாது. படி இறங்கி இறங்கி இப்பொழுது கடைசியில் வந்து பதீதமாக ஆகி உள்ளார்கள். இப்பொழுது நீங்கள் உயரம் தாண்டி விடுகிறீர்கள். இறங்குவதற்கு 84 பிறவிகள் பிடித்தது. குதித்து தாண்டுவதை ஒரு நொடியில் செய்கிறீர்கள்.

 

குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். பிறகு சாந்தி தாமத்திற்குச் சென்று சுகதாமத்தில் வந்து விடுவீர்கள். இது துக்கதாமம் ஆகும். முதலில் நீங்கள் தான் வந்திருக்கிறீர்கள். எனவே தந்தை கூட முதன் முதலில் உங்களை சந்திக்கிறார். இங்கு தந்தை மற்றும் குழந்தைகள். ஆத்மா மற்றும் பரமாத்மாவின் மேளா (சந்திப்பு) நடக்கிறது. கணக்கு உள்ளது அல்லவா? தந்தையிடமிருந்து விடை பெற்று வந்து 5 ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. முதன் முதலில் சொர்க்கத்தில் பாகம் ஏற்று நடித்தீர்கள். அங்கிருந்து பாகத்தை ஏற்று நடித்து நடித்து நீங்கள் கீழே இறங்கியபடியே வந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தையிடம் வந்து விட்டுள்ளீர்கள். மீதி கொஞ்சநஞ்சம் யாரெல்லாம் அங்கு இருக்கிறார்களோ அவர்களும் வந்து விடுவார்கள். பிறகு உங்களது படிப்பு முடிந்து போய் விடும். அனைவரும் இங்கு வர வேண்டி உள்ளது. அங்கு காலியாக ஆகி விடும் பொழுது பின்னர் பாபா அனைவரையும் அழைத்துச் செல்வார். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். படிக்க வேண்டும். பள்ளிக் கூடத்திற்கு எப்பொழுதாவது செல்வது, எப்பொழுதாவது போகாமல் இருப்பது - இது சட்டம் கிடையாது. பாபா படிப்பிற்காக நிறைய ஏற்பாடுகளும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இல்லையென்றால் ஒரு பொழுதும் யாரிடமும் படிப்பு தபால் மூலமாக செல்வது இல்லை. இந்த எல்லையில்லாத தந்தையின் படிப்பு தபாலில் போகிறது. எவ்வளவு தாள்கள் அச்சிடப்படுகின்றன. எங்கெங்கெல்லாமோ செல்கிறது. 7 நாள் கோர்ஸ் எடுத்த பிறகு எங்கு வேண்டுமானாலும் போய் படித்துக் கொண்டே இருங்கள். இச்சமயம் எல்லோரும் அரை கல்பத்தின் நோயாளி ஆவார்கள். எனவே 7 நாள் பட்டியில் வைக்க வேண்டி இருக்கிறது. இந்த 5 விகாரங்களின் வியாதி முழு உலகத்திலும் பரவி உள்ளது. சத்யுகத்தில் உங்களது உடல் நோயற்றதாக இருந்தது. எவர் ஹெல்தி எவர் வெல்தி - என்றும் ஆரோக்கியமாகவும், செல்வம் நிறைந்தும் இருந்தீர்கள். இப்பொழுதோ என்ன நிலைமை ஆகி விட்டுள்ளது. இந்த முழு விளையாட்டே பாரதத்தில் தான் ஆகிறது. உங்களுக்கு இப்பொழுது 84 பிறவிகளின் நினைவு வந்துள்ளது. கல்ப கல்பமாக நீங்கள் தான் சுயதரிசன சக்கரதாரி ஆகிறீர்கள். மேலும் சக்கரவர்த்தி ராஜா கூட ஆகிறீர்கள். இது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் வரிசைக்கிரமமாக பதவிகள் இருக்கும். பிரஜைகள் கூட அநேகவிதமானோர் வேண்டும். நான் எத்தனை பேரை எனக்குச் சமானமாக சுயதரிசன சக்கரதாரி ஆக்குகிறேன் என்று நமது மனதையே கேட்க வேண்டும். எந்த அளவிற்கு யார் ஆக்குகிறார்களோ அவர்கள் தான் உயர்ந்த பதவியை அடைவார்கள். தந்தை உங்களுக்கு மாயையுடன் யுத்தம் செய்ய கற்பிக்கிறார். எனவே இவருக்கு யுதிஷ்டிரர் என்ற பெயர் வைத்துள்ளார்கள். மாயை மீது வெற்றி அடைவதற்கான யுத்தத்தை கற்பிக்கிறார். யுதிஷ்டிரர் மற்றும் திருதராஷ்டிரர் கூட காண்பிக்கிறார்கள். மாயையை வென்றவரே உலகை வென்றவர் என்று பாடவும் படுகிறது. எவ்வளவு காலம் உங்களுடைய வெற்றி நிலையாக இருந்தது. மேலும் எவ்வளவு காலம் தோல்வி அடைகிறீர்கள் என்பதைக் கூட நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது ஸ்தூல போர் கிடையாது. தேவதைகள் மற்றும் அசுரர்களுக்கிடையேயும் யுத்தம் நடக்கவில்லை. கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கிடையேயும் யுத்தம் நடக்கவில்லை. பொய்யான உடல், பொய்யான மாயை .. .. .. .. இந்த பாரதம் பொய்யான கண்டமாக உள்ளது. உண்மையான கண்டமாக இருந்தது. இராவண இராஜ்யம் ஆரம்பமானது முதற்கொண்டு பொய்யான கண்டம் ஆகி விட்டது. இறைவனை பற்றி எவ்வளவு பொய் பேசுகிறார்கள். எவ்வளவு களங்கம் விளைவிக்கிறார்கள். கலங்கி அவதாரம் என்று கூட பாடப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட அதிகமான களங்கம் தந்தை மீது ஏற்படுகிறது. அவரைப் பற்றி மீன் அவதாரம், ஆமை அவதாரம், கல் மண் அனைத்திலும் இறைவன் இருக்கிறார் என்கிறார்கள். இது நாகரீகமா என்ன? இப்பொழுது உங்களுக்கு தெளிவு கிடைத்துள்ளது. தந்தை நம்மைப் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல் இடை கடை பற்றிய இரகசியத்தைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது வேறு யாருக்குமே தெரியாது. தந்தை தான் சத்கதியின் வள்ளல் ஆவார். பாபாவின் ஞானத்தினால் அனைவருக்கும் சத்கதி ஏற்படுகிறது. மற்றபடி யார் சுயம் தாங்களே துர்க்கதியில் இருக்கிறார்களோ அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு சத்கதி அளிப்பார்கள். உங்களை வந்து இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆக்குகிறேன். நீங்கள் தான் பவித்திர பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது வந்து பூசாரியாகி உள்ளீர்கள். பவித்திர இராஜாக்களுக்கு அபவித்திர இராஜாக்கள் பூஜை செய்கிறார்கள். சத்யுகத்தில் இரட்டை கிரீடம் அணிந்தவர்களாக இருந்தார்கள். விகாரி இராஜாக்களாக இருக்கும் பொழுது ஒற்றை கிரீடம் இருக்கும். அவர்களும் மகாராஜா மகாராணி, ஆனால் தூய்மையானவர்களுக்கு முன் தூய்மையற்றவர்கள் தலை வணங்குகிறார்கள். அந்த பாரதவாசிகள் தூய்மையான இல்லற மார்க்கத்தினர். அதே பாரதவாசிகள் பதீதமான இல்லற மார்க்கத்தினராக ஆகிறார்கள். உங்களுக்கு இந்த மரண உலகத்தில் கடைசி பிறவி ஆகும் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். இப்பொழுது உங்களை மீண்டும் சத்யுகத்திற்கு அழைத்துச் செல்ல நான் வந்துள்ளேன். இந்த அணு ஆயுதங்களின் யுத்தம் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயும் நடந்திருந்தது. இந்த பழைய உலகம் முடியப் போகிறது. இல்லறத்தில் இருந்தபடியே தாமரை மலர் போல ஆக வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். பிராமணர்களாகிய நீங்கள் தாமரை மலர் போல ஆகி உள்ளீர்கள். ஆனால் இந்த அடையாளத்தை விஷ்ணுவிற்கு அளித்து விட்டுள்ளார்கள். ஏனெனில் நீங்கள் எப்பொழுதும் ஒரே ரசனையில் இருப்பதில்லை. இன்று தாமரை மலர் போல ஆகிறார்கள். இரண்டு வருடத்திற்கு பிறகு பதீதமாக ஆகி விடுகிறார்கள். உங்களுடையது இது சர்வோத்தம குலம் ஆகும். பிராமணர்களாகிய நீங்கள் குடுமியாக இருக்கிறீர்கள். பிறகு மறு பிறவி எடுத்து எடுத்து தேவதை க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிறீர்கள். சூத்திரரிலிருந்து சட்டென்று தேவதையாக ஆகி விடுகிறார்களா என்ன? பிராமணர்கள் குடுமியோ வேண்டும். இப்பொழுது பிராமணர்களுக்கு பாபா கற்பித்துக் கொண்டிருக்கிறார். எனவே இப்பேர்ப்பட்ட பாபாவை கை விட்டு போகலாமா? பாபா கூறுகிறார் - ஆச்சரியப்படும் வகையில் என்னுடையவராக ஆகிறார்கள், கேட்கிறார்கள், பிறகும் ஓடிப் போய் மாயையினுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். துரோகி ஆகி விடுகிறார்கள். எனக்கு நிந்தனை செய்விக்கிறார்கள். சத்குருவை நிந்திப்பவர்கள் சொர்க்கத்தின் பதவியை அடைய முடியாமல் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. மற்றபடி அந்த பக்தி மார்க்கத்தின் குருக்கள் ஒன்றும் சத்கதி அளிக்கும் வள்ளல்கள் கிடையாது. அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆசிரியர் குரு ஒரே ஒரு நிராகாரமான தந்தை ஆவார். அவரே அனைவரையும் உத்தாரம் செய்ய வந்துள்ளார். இனி முன்னால் போகப் போக புரிந்து கொண்டுவிடுவார்கள். பின்னர் டூ லேட், மிகவும் தாமதம் ஆகிவிடும். அவர்கள் பின் அவர்களுடைய தர்மத்தில் சென்று விடுவார்கள். சிறந்ததிலும் சிறந்தது தேவதா தர்மமாகும். அவர்களை விடவும் உயர்ந்தவர்கள் பிராமணர்களாகிய நீங்கள். ஏனெனில், தந்தையுடன் அமர்ந்துள்ளீர்கள். உங்களுக்கு கற்பிப்பவர் விசித்திரமானவர் மற்றும் விதேகி (தேகமற்றவர்) ஆவார். எனக்கு உடல் இல்லை என்று தந்தை கூறுகிறார். என்னை சிவன் என்று கூறுகிறார்கள். என்னுடைய பெயர் மாற முடியாது. மற்ற எல்லோருடைய சரீரங்களினுடைய பெயர்களும் மாறுகின்றன. நான் பரம ஆத்மா ஆவேன். என்னுடைய ஜாதகத்தை யாரும் தயாரிக்க முடியாது. எல்லையில்லாத இரவு ஏற்படும் பொழுது நான் பகலாக ஆக்குவதற்காக வருகிறேன். இப்பொழுது இருப்பது சங்கமம். இந்த விஷயங்களை நல்ல முறையில் புரிந்து கொண்டு பிறகு தாரணை செய்ய வேண்டும். நினைவில் எடுத்து வர வேண்டும். இங்கு குழந்தைகளாகிய நீங்கள் வருகிறீர்கள். நேரம் கிடைக்கிறது. இங்கு நல்ல முறையில் ஞான சிந்தனை செய்ய முடியும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்

.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சர்வோத்தம குலத்தின் நினைவின் மூலமாக இல்லற விவகாரங்களில் இருந்தபடியே தாமரை மலர் போல தூய்மையாக ஆக வேண்டும். ஒரு பொழுதும் சத்குருவிற்கு நிந்தனை செய்விக்கக் கூடாது.

 

2. ஸ்ரீமத் படி பாரதத்தை சொர்க்கமாக ஆக்கும் சேவை செய்ய வேண்டும். சுயதரிசன சக்கரதாரியாக வேண்டும் மற்றும் ஆக்க வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சிந்தனைக் கடலை அவசியம் கடைய வேண்டும் (ஞான சிந்தனை செய்தல்).

 

வரதானம்:

தெய்வீக குணங்களை வரவழைப்பதன் மூலமாக அவகுணங்களை நீக்கி விடக் கூடிய தெய்வீக குணங்கள் உடையவர்கள் ஆவீர்களாக.

 

எப்படி தீபாவளியின் பொழுது ஸ்ரீ இலட்சுமியை அழைக்கிறார்கள். அதே போல குழந்தைகளாகிய நீங்கள் சுயத்தில் தெய்வீக குணங்களை வரவழையுங்கள். அப்பொழுது அவகுணங்கள் ஆஹூதியின் ரூபத்தில் அழிந்து போய்விடும். பிறகு புதிய சம்ஸ்காரங்கள் என்ற புதிய ஆடையை தாரணை செய்வீர்கள். இப்பொழுது பழைய ஆடைகள் மீது சிறிதளவும் அன்பு இல்லாதிருக்கட்டும். என்னவெல்லாம் பலவீனங்கள், குறைகள், பலமற்ற நிலை, மென்மையானத் தன்மை மீதமிருக்கிறதோ அந்த அனைத்து பழைய கணக்குகளையும் இன்று முதல் சதாகாலத்திற்கும் நீக்கி விடுங்கள். அப்பொழுது தெய்வீக குணங்கள் உடையவர்களாக ஆகி விடுவீர்கள். மேலும் வருங்காலத்தில் முடிசூட்டு விழா நடக்கும். அதனுடைய நினைவார்த்தமே இந்த தீபாவளி ஆகும்.

 

சுலோகன்:

சுயராஜ்ய அதிகாரியாக வேண்டும் என்றால் மனம் என்ற மந்திரியை தனது சகயோகியாக (ஒத்துழைப்பு அளிப்பவர்) ஆக்கிக் கொள்ளுங்கள்.

 

***ஒம்சாந்தி***