BK Murli 19 November 2016 Tamil

BK Murli 19 November 2016 Tamil

19.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 
இனிமையான குழந்தைகளே - உங்களுடைய நடத்தை மிக-மிக இனிமையானதாகவும் ராயலாகவும் இருக்க வேண்டும், கோபம் எனும் பூதம் முற்றிலும் இருக்கக் கூடாது

 

கேள்வி:-

21 பிறவிகளின் பலனை அடைவதற்கு எந்த விஷயத்தில் குழந்தைகள் கண்டிப்பாகக் கவனம் வைக்க வேண்டும்?

 

பதில்:-

இந்த உலகத்தில் இருந்து கொண்டே, அனைத்தையும் செய்து கொண்டே, புத்தியின் தொடர்பு ஒரு உண்மையான பிரியதர்ஷனிடம் இருக்க வேண்டும். பாபாவின் கௌரவம் போகும்படியான கெட்ட பழக்கம் எதுவும் இருக்கக் கூடாது. வீட்டில் இருந்தாலும் கூட, இவர்களிடத்தில் மிக நல்ல தெய்வீக குணங்கள் இருக்கின்றன என்று மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு அன்போடு இருங்கள்.

 

பாட்டு:-

விழித்துக் கொள்ளுங்கள் பிரியதர்ஷினிகளே விழித்துக் கொள்ளுங்கள்..........

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டை கேட்டீர்கள். இதனுடைய அர்த்தத்தையும் கூட குழந்தைகள் கண்டிப்பாக புரிந்து கொண்டிருப்பார்கள். பாபா வந்து புதிய-புதிய விஷயங்களை கூறுகின்றார். புதிய உலகத்தின் புதிய யுகத்திற்காக இந்த விஷயங்களை குழந்தைகள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கூட கேட்டிருந்தார்கள். இப்போது மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். மற்றபடி இடையில் வெறும் பக்தி மார்க்கத்தின் விஷயங்களையே கேட்டிருக்கின்றீர்கள். சத்யுகத்தில் இந்த விஷயங்கள் இருப்பதில்லை. அங்கே ஞான மார்க்கத்தின் பலனாகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புதிய உலகத்திற்காக உண்மையான வருமானத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஞானம் வருமானத்திற்கான ஆதாரம் என்று சொல்லப்படுகிறது. படிப்பின் மூலம் சிலர் வக்கீலாக, பொறியாளராக ஆகின்றனர். வருமானமும் இருக்கிறது. நீங்கள் இந்த படிப்பின் மூலம் இராஜாவுக்கெல்லாம் இராஜாவாக ஆகின்றீர்கள். இது எவ்வளவு பெரிய வருமானமாக இருக்கிறது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த நிச்சயம் இருக்கிறது, ஒருவேளை சிறிது சந்தேகம் இருந்தாலும் கூட போகப்போக நிச்சயம் ஏற்பட்டு விடும். வினாடியில் ஜீவன்முக்தி என்று பாடப்பட்டுள்ளது. பாபா வினுடையவர்களாக ஆனீர்கள், ஆஸ்திக்கு எஜமானர்களாக ஆனீர்கள். சொர்க்கத்தைப் படைப்பவராக இருக்கும் பாபா நம்மை எஜமானர்களாக மாற்ற வந்துள்ளார். குழந்தைகளுக்கு இந்த நிச்சயம் இருக்க வேண்டும். இரண்டு தந்தையர் இருக்கின்றார்கள் என்பதையும் தெரிந்துள்ளீர்கள். ஒருவர் லௌகீக தந்தை மற்றொருவர் பரலௌகீக தந்தை, அவரைத் தான் பரமபிதா பரமாத்மா, ஓ இறை தந்தையே என்று கூறுகின்றனர். லௌகீக தந்தையை ஒருபோதும் பரமபிதா என்று சொல்வதில்லை. அனைவருக்கும் சுகத்தை வழங்கும் வள்ளல், அமைதியை வழங்கும் வள்ளல் அந்த ஒரு பரலௌகீக தந்தையே ஆவார். சத்யுகத்தில் அனைவரும் சுகமாக இருக்கிறார்கள். மீதமுள்ள ஆத்மாக்கள் சாந்தி தாமத்தில் இருக்கின்றன. சத்யுகத்தில் உங்களுக்கு சுகம்-அமைதி, செல்வம், வியாதியற்ற சரீரம் அனைத்தும் இருந்தது. எனவே அப்படிப்பட்ட மிகவும் அன்பான பாபாவை அனைவரும் அழைக்கிறார்கள். சாது-சன்னியாசி மக்கள் கூட சாதகம் செய்கிறார்கள், ஆனால் யாருடைய சாதகம் செய்கிறார்கள், என்பதைத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் பிரம்மத்தின் மீது சாதகம் செய்கிறார்கள். நாம் பிரம்மத்தில் ஐக்கியமாகி விட வேண்டும் என்று செய்கிறார்கள் ஆனால் ஐக்கியமாக முடியாது. பிரம்மத்தை நினைவு செய்வதின் மூலம் பாவம் அழியுமா என்ன! என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். சர்வசக்திவான் பிரம்ம தத்துவமாகிய இருப்பதற்கான இடமா அல்லது நானா? பிரம்ம மகாதத்துவத்தில் அனைத்து ஆத்மாக்களும் இருக்கிறன. ஆக பிரம்மத்தை அவர்கள் பகவான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி பாரதவாசிகள் ஹிந்துஸ்தானத்தில் இருக்கின்ற காரணத்தினால் தங்களுடைய தர்மம் ஹிந்து என்று நினைத்துக் கொள்கிறார்களோ அப்படி! அதுபோல் பிரம்ம தத்துவத்தில் இருக்கின்ற இடத்தை பரமாத்மா என்று புரிந்து கொண்டார்கள், அது பிரம்மாண்டமாகும். அங்கே ஆத்மாக்கள் ஜோதிர்பிந்து முட்டை ஆகாரத்தில் இருக்கிறது, ஆகையினால் அதை பிரம்மாண்டம் என்று சொல்கிறார்கள். இது மனித சிருஷ்டி ஆகும். பிரம்மாண்டம் தனி, மனித சிருஷ்டி தனியானதாகும். ஆத்மா என்பது என்ன என்பது யாருக்குமே தெரியவில்லை. இருபுருவங்களுக்கு இடையில் ஜொலிக்கும் நட்சத்திரம் என்றும் சொல்கிறார்கள். பிறகு பெருவிரல் போல் இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் பாபா கூறுகின்றார், ஆத்மா முற்றிலும் சூட்சுமமான புள்ளியாக இருக்கிறது, அதை இந்த கண்களின் மூலம் பார்க்க முடியாது, இதனை பார்ப்பதற்கு, பிடிப்பதற்கு நிறைய முயற்சி செய்கிறார்கள். ஆனால் யாருக்கும் தெரிவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள் இப்போது நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக்குவதில் பாபாவிற்கு உதவியாளர்களாகவும் ஆக வேண்டும். பாபா பாரதத்தில் தான் வருகின்றார். பாரதத்தில் தான் சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கிறிஸ்து ஆகி விட்டதால் கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்த்து எப்போது வந்தார் என்பதையும் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் பாரதவாசிகள் தந்தை எப்போது வந்தார், கிருஷ்ணர் எப்போது வந்தார்? என்பதைத் தெரிந்திருக்கவில்லை. யாருக்குமே அவர்களைப் பற்றி தெரிய வில்லை. கிருஷ்ணரைப் பற்றி அனைத்து மகிமைகளையும் பாடுகிறார்கள். அவரை ஊஞ்சலில் வைத்து ஆட்டு கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள், ஆனால் அவர் எப்போது பிறந்தார் என்பதைத் தெரிந்திருக்கவில்லை. துவாபர யுகத்தில் கீதை சொன்னார் என்று சொல்லி விடுகிறார்கள். ஆனால் கிருஷ்ணர் துவாபர யுகத்தில் வருவதில்லை. லீலைகள் அனைத்தும் ஒரு பாபாவினுடையதாகும். ஆகையினால் தான் உங்களுடைய வழியும் நிலையும் தனிப்பட்டது............. என்று அவரைப் பற்றி சொல்கிறார்கள். கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசர் ஆவார். முதலிலேயே யோகபலத்தின் மூலம் குழந்தை பிறக்கப்போகிறது என்பது தாய்க்குத் தெரிந்து விடுகிறது. அங்கே சரீரத்தையும் அப்படித் தான் விடுகிறார்கள். ஒரு சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்றை எடுக்கிறார்கள். பாம்பைப் போல் ஆகும். உண்மையில் சன்னியாசிகள் இந்த உதாரணத்தைக் கொடுக்க முடியாது. நீங்கள் விகார மனிதர்களுக்கு ஞானத்தின் பூம்-பூம் செய்து தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக மாற்றி விடுகிறீர்கள். இது உங்களுடைய தொழிலாகும் - பூம்-பூம் செய்து மனிதர்களை தேவதைகளாக மாற்றி விடுகிறீர்கள். ஆமை போன்றவற்றின் உதாரணம் கூட இந்த சமயத்தினுடையதாகும். கர்மம் செய்து விட்டு பிறகு எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அவ்வளவு நேரம் பாபாவை நினைவு செய்ய வேண்டும். இது நம்முடைய கடைசி பிறவி என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது நாடகம் முடியப்போகிறது, பழைய சரீரமாகும். இதனுடைய கர்மச்சுமையை முடிக்க வேண்டும். சதோபிரதானம் ஆகி விட்டீர்கள் என்றால் பிறகு கர்மாதீத் நிலை ஏற்பட்டு விடும், பிறகு நாம் இந்த சரீரத்தில் இருக்க முடியாது. கர்மாதீத் நிலை ஏற்பட்டு விட்டால் பிறகு சரீரத்தை விட்டு விடுவோம், பிறகு சண்டை ஆரம்பமாகி விடும். அனைவருடைய சரீரமும் அழிந்து கொசுக் கூட்டம் போல் ஆத்மாக்கள் சென்று விடும். தூய்மையாகாமல் யாரும் செல்ல முடியாது. இது இராவணன் ஸ்தாபனை செய்த துக்கதாமமாகும், மற்றும் இராமன் ஸ்தாபனை செய்தது சிவாலயமாகும். உண்மையில் பரமாத்மாவின் பெயர் சிவன் என்பதாகும், இராமன் கிடையாது. சத்யுகம்-சிவாலயத்தில் அனைத்து தேவதைகளும் இருக்கிறார்கள். பிறகு பக்தி மார்க்கத்தில் சிவனுடைய சிலைக்காக கோவில், சிவாலயம் போன்றவற்றை உருவாக்குகிறார்கள். இது சிவபாபாவின் சிம்மாசனமாகும் (பிரம்மாவின் புருவ மத்தி). ஆத்மா இந்த சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது. பாபாவும் கூட இங்கே பக்கத்தில் வந்து அமருகின்றார் வந்து படிப்பிக்கின்றார். எப்போதும் இருப்பதில்லை. நினைவு செய்தால் இதோ வந்து விடுகின்றார். பாபா கூறுகின்றார் - நான் உங்களுடைய எல்லையற்ற தந்தையாக இருக்கின்றேன். ஆஸ்தி என்னிடம் இருந்து உங்களுக்கு கிடைக்க வேண்டும். பிரம்மா எல்லையற்ற தந்தையா என்ன, ஆகையினால் நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள். இனிமையான குழந்தைகள், பாபா ஞானக்கடல், அன்புக்கடல் என்பதைத் தெரிந்திருக்கிறார்கள். எனவே குழந்தைகளாகிய நீங்களும் கூட அன்புக் கடலாக ஆக வேண்டும். கணவன்-மனைவி ஒருவர் மற்றவர் மீது உண்மையான அன்பு செலுத்துவதில்லை, அவர்கள் காம விகாரத்தைத் தான் அன்பு என்று புரிந்துள்ளார்கள். ஆனால் காமம் மிகப்பெரிய எதிரி என்று பாபா கூறியுள்ளார். இது முதல்-இடை-கடைசியில் துக்கம் கொடுக்கக் கூடியதாகும். தேவதைகள் நிர்விகாரிகளாக இருந்தார்கள், ஆகையினால் கிருஷ்ணரைப் போல் குழந்தை வேண்டும், கிருஷ்ணரைப் போல் கணவன் வேண்டும் என்று கேட்கிறார்கள். கிருஷ்ணபுரியை நினைவு செய்கிறார்கள் அல்லவா? இப்போது பாபா கிருஷ்ண புரியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் தாங்களே ஸ்ரீகிருஷ்ணரைப் போல் அல்லது மோகனைப் போல் ஆக முடியும். இன்னும் கூட இளவரசன் - இளவரசிகள் இருப்பார்கள். ஆக அனைவரும் இங்கே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பட்டியலும் இருக்கிறது. மாலையின் 8 மணிகளும் இருக்கின்றன, 108 மணிகளும் இருக்கின்றன. மக்கள் 9 ரத்தினங்களின் மோதிரம் அணிகிறார்கள். இந்த 8 பேர் யார்? இடையில் யார் இருக்கிறார்கள்? இனிமையிலும் இனிமையான பாபாவின் மூலம் நாம் இரத்தினங்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். குழந்தைகளே உங்களிடையே மிகவும் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று பாபா கூறுகின்றார். இல்லையென்றால் பாபாவின் பெயரைக் கெடுத்து விடுவீர்கள். சத்குருவை நிந்தனை செய்பவர்கள் உயர்ந்த பதவி அடைய முடியாது. ஒரு பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் அழுக்கு நீங்கி விடும் என்ற மந்திரத்தை அனைவருக்கும் சொல்ல வேண்டும். இவர்களிடத்தில் கோபமே இல்லை, மிகுந்த அன்பு வந்து விட்டது, என்று மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு வீட்டில் கூட அன்போடு நடக்க வேண்டும். சிகரெட் குடிப்பது கெட்ட பழக்கமாகும், இப்படிப்பட்ட கெட்ட பழக்கங்கள் அனைத்தையும் விட்டு விட வேண்டும். தெய்வீக குணங்களை இங்கேயே தான் தாரணை செய்ய வேண்டும். இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்கு உழைப்பு எடுத்துக் கொள்கிறது. மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்கள் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில்லை. அவர்கள் மேலிருந்து முற்றிலும் கடைசியில் வந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு பலனை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், இதில் மாயையின் புயல் நிறைய வரும். இருந்தாலும் முயற்சி செய்து தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். கோபத்தோடு பேசினீர்கள் என்றால் இவரிடத்தில் பூதம் இருக்கிறது என்று மக்கள் சொல்வார்கள். அப்படிச் செய்தால் எல்லையற்ற தந்தையின் மரியாதை இழக்கச் செய்ததாகும். பிறகு எப்படி உயர்ந்த பதவி அடைய முடியும்? மிகவும் இனிமையானவர்களாக ஆசையற்றவர்களாக ஆக வேண்டும். இங்கே இருந்து கொண்டே, அனைத்தையும் செய்து கொண்டே தொடர்பு ஒரு பிரியதர்ஷனோடு இருக்க வேண்டும். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவம் எரிந்து விடும் என்று பாபா கூறியிருக்கின்றார், இது யோக அக்னி என்று அழைக்ப்படுகிறது. இங்கே சரீரத்தினால் செய்யும் யோகத்திற்கு அவசியம் இல்லை. தங்களுடைய சரீரத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டும், மிகவும் மதிப்புமிக்க சரீரமாகும். சுத்தமான உணவை உண்ண வேண்டும். தேவதைகளுக்கு எப்படி பிரசாதம் வைக்கப்படுகிறது. ஸ்ரீநாத்துக்கு சென்று பாருங்கள், வங்காளிகள் ஆட்டை அறுத்து காளிக்கு பிரசாதமாக வைக்கிறார்கள். விவேகானந்தர் மீன் போன்ற அனைத்தையும் சாப்பிட்டார். பித்ரூகளுக்கு கூட மீன் பரிமாறினார்கள். இல்லையென்றால் பித்ரூ கோபித்துக் கொள்ளும் என்று புரிந்து கொண்டார்கள். யாரோ பழக்கத்தை ஏற்படுத்தினார், அது வழக்கமாகக் கொண்டிருக்கிறது. தேவி-தேவதைகளின் இராஜ்யத்தில் எந்த பாவமும் நடப்பதில்லை. அது இராம இராஜ்யமாகும். இங்கே கர்மங்கள் விகர்மங்களாக ஆகின்றன. அங்கே கர்மம் அகர்மமாக ஆகிறது. இப்போது ஹரிதுவாருக்குச் சென்று அமருகிறார்கள். கிருஷ்ணரை ஹரி என்று சொல்கிறார்கள். கிருஷ்ணர் சத்யுகத்தில் இருக்கின்றார். உண்மையில் ஹரி என்ற பெயர் சிவனுடையதாகும். துக்கத்தைப் போக்கக் கூடியவர். ஆனால் கீதையில் கிருஷ்ணருடைய பெயரை போட்டு, கிருஷ்ணரை ஹரி என்று புரிந்து கொண்டார்கள். உண்மையில் துக்கத்தைப் போக்கக் கூடியவர் சிவபாபா ஆவார். ஹரியினுடைய வாயில் சத்யுகம் என்று சொல்லப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் வாயில் என்னவெல்லாம் வருகிறதோ அதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் சங்கமயுகத்தில் பழைய உலகத்தைப் புதியதாக மாற்ற வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இராவணன் பழைய எதிரியாவார். ஒவ்வொரு ஆண்டும் அவரை எரிக்கிறார்கள். எவ்வளவு பணத்தை செலவழிக் கிறார்கள். நேரம், பணம் அனைத்தும் விரயம் ஆகிறது. வங்காளத்தில் எவ்வளவு தேவிகளை உருவாக்குகிறார்கள், அதற்கு படைத்து பூஜை செய்து பிறகு சென்று தண்ணீரில் மூழ்கடித்து விடுகிறார்கள். இதைப்பற்றி ஒரு பாடல் கூட இருக்கிறது. குழந்தைகள் மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும். ஒருபோதும் கோபத்தோடு பேசக்கூடாது. பாபாவோடு ஒருபோதும் கோபித்துக் கொள்ளகூடாது. ஒருவேளை கோபித்துக் கொண்டு படிப்பை விட்டு விட்டீர்கள் என்றால் தங்கள் கால் மீது தாங்களே கோடாரியால் வெட்டிக் கொள்வது போல் ஆகும். இங்கே உலகத்திற்கு எஜமானர்களாக ஆக வந்துள்ளீர்கள். மகாராஜா ஸ்ரீ நாராயணன், மகாராணி ஸ்ரீ லஷ்மி என்று சொல்லப்படுகிறது. மற்றபடி ஸ்ரீ ஸ்ரீ என்பது சிவபாபாவின் பட்டமாகும். தேவதைகளை ஸ்ரீ என்று சொல்லப்படுகிறது. ஸ்ரீ என்றால் உயர்ந்த என்று பொருளாகும். நாம் என்னவாக இருந்தோம்? என்று இப்போது சிந்தித்து பாருங்கள். மாயை நம்முடைய தலையினை திருப்பி நம்மை என்னவாக மாற்றி விட்டது. பாரதம் எவ்வளவு செல்வமிக்கதாக இருந்தது. பிறகு எப்படி எதுவும் இல்லாததாக ஆகிவிட்டது? என்னவாயிற்று? எதையும் புரிந்து கொள்வதில்லை. இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள், நாம் தான் தேவதைகளாக இருந்தோம், பிறகு சத்திரியர்களாக ஆனோம். அவர்கள் ஆத்மா தான் பரமாத்மா என்று சொல்லி விட்டார்கள். இல்லையென்றால் நாம் தான் அது என்பதின் அர்த்தம் எவ்வளவு சகஜமானது. அவர்கள் மனிதப்பிறவி ஒன்று என்று சொல்கிறார்கள். ஆனால் பாபா புரிய வைக்கின்றார், மனிதர்களுக்கு 84 பிறவிகள் இருக்கிறது. அந்த 84 பிறவியில் உங்களுடைய இந்த சங்கமயுகத்தின் ஒரு பிறவி கிடைப்பதற்கரியதாகும். இப்போது நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைகிறீர்கள். நீங்கள் மிகவும் ராயலான தந்தையின் குழந்தைகளாவீர்கள், எனவே உங்களிடம் எவ்வளவு இராஜ குணம் தன்மை இருக்க வேண்டும். ராயலான மனிதர்கள் ஒருபோதும் சப்தமாகப் பேசுவதில்லை. உலகத்தில் வீட்டுக்கு வீடு எவ்வளவு குழப்பம் நிலவுகிறது. சொர்க்கத்தில் அப்படிப்பட்ட விஷயம் எதுவும் இல்லை. இந்த பாபா கூட வல்லபாச்சாரி குலத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இருந்தாலும் அந்த சத்யுகத்தின் தேவதைகள் எங்கே?, இன்றைக்கு இருக்கும் தூய்மையற்ற வைஷ்ணவர்கள் எங்கே? வைஷ்ணவர்களாக இருந்தால் விகாரத்தில் செல்வதில்லை என்பது கிடையாது. இராவண இராஜ்ஜியத்தில் அனைவருமே விகாரத்தின் மூலம் தான் பிறக்கிறார்கள். சத்யுகத்தில் சம்பூரண நிர்விகாரிகள். இப்போது நீங்கள் சம்பூரண நிர்விகாரிகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் யோகபலத்தின் மூலம் உலகத்தின் எஜமானர்களாக ஆகின்றீர்கள். உங்களுடைய நடத்தை மிகவும் இனிமையானதாகவும் ராயலாகவும் இருக்க வேண்டும். வேறு எந்த வாதமோ, சாஸ்திரவாதமோ செய்யக் கூடாது. அவர்கள் சாஸ்திரவாதம் செய்யும் போது ஒருவர் மற்றவரை தடியால் கூட அடித்து விடுகிறார்கள். பாவம் அவர்கள் மீது எந்த தவறும் இல்லை. இந்த ஞானத்தை அவர்கள் தெரிந்திருக்கவே இல்லை. இது ஆன்மீக ஞானமாகும், இது ஆன்மீக தந்தையிடமிருந்து கிடைக்கிறது. அவர் ஞானக்கடலாக இருக்கின்றார். அவருக்கு சரீரத்தின் பெயர் கிடையாது, அவர் அவ்யக்த மூர்த்தியாக இருக்கின்றார். என்னுடைய பெயர் சிவன் என்று கூறுகின்றார். நான் ஸ்தூல சரீரமோ அல்லது சூட்சும சரீரமோ எடுப்பதில்லை. ஞானக்கடல் என்றும் ஆனந்தக்கடல் என்றும் என்னைத் தான் கூறுகிறார்கள். சாஸ்திரங்களில் என்னென்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள். ஹனுமன் வாயு புத்திரனாக இருந்தார், காற்றிலிருந்து எப்படி குழந்தை பிறக்கும்! பிறகு பரமாத்மாவை கச்ச அவதாரம், மச்ச அவதாரம் எடுத்தார் என்று சொல்லி எவ்வளவு நிந்தனை செய்துள்ளார்கள். நீங்கள் அசுர வழிப்படி என்னை எவ்வளவு நிந்தனை செய்துள்ளீர்கள், என்று பாபா புகார் கூறுகின்றார். 24 அவதாரங்கள் என்று சொல்லியும் போதவில்லை, பிறகு ஒவ்வொரு அணுவிலும், கல்-முள்ளிலும் நுழைத்து விட்டீர்கள். இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் துவாபர யுகத்தில் உருவாகின. முதன்-முதலில் சிவனின் பூஜை நடந்தது. கீதை கூட பின்னால் உருவாக்கப்பட்டது. இவையனைத்தும் அனாதியான விளையாட்டு, என்று பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது உங்களை உலகத்திற்கு எஜமானர்களாக்க நான் வந்திருக்கின்றேன், என்வே பாபாவை முழுமையாக பின்பற்ற வேண்டும். மிக நல்ல லட்சணங்களும் வேண்டும். இது கூட அதிசயமாக இருக்கிறது அல்லவா? கலியுகத்தின் கடைசியில் என்ன இருக்கிறது பிறகு சத்யுகத்தில் என்ன பார்க்கப் போகிறீர்கள். கலியுகத்தில் பாரதம் தன்னிறைவற்றதாக இருக்கிறது, சத்யுகத்தில் பாரதம் தன்னிறைவுற்றதாக இருக்கிறது. அந்த சமயத்தில் வேறு எந்த கண்டமும் இருப்பதில்லை. இந்த கீதையின் கதை திரும்பவும் நடந்து கொண்டிருக்கிறது. நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) நாம் ராயல் பாபாவின் குழந்தைகள், ஆகையினால் நமது நடத்தையை மிகவும் ராயலான வைத்துக் கொள்ள வேண்டும். சப்தமாக பேசக்கூடாது. மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும்.

 

2) ஒருபோதும் பாபாவிடமோ அல்லது தங்களுக்குள்ளோ கோபித்துக் கொள்ள கூடாது. கோபித்துக் கொண்டு ஒருபோதும் படிப்பை விடக்கூடாது. கெட்ட பழக்கங்கள் என்ன இருக்கிறதோ அதை விட்டு விட வேண்டும்.

 

வரதானம்:

ஒரு தந்தையின் நினைவில் சதா மூழ்கி இருந்து ஏக்ரஸ் நிலையை உருவாக்கக்கூடிய சாட்சி பார்வையாளர் ஆகுக !

 

எண்ணத்திலும், கனவிலும் கூட நினைக்காத அளவிற்கு இப்பொழுது பேப்பர் (பரீட்சை) வரப்போகின்றது. எவ்வாறு எல்லைக்குட்பட்ட நாடகம் சாட்சியாக இருந்து பார்க்கப்படுகிறது, வேதனை நிறைந்த காட்சியானாலும் சரி, மகிழ்ச்சியான காட்சியானாலும் சரி, வித்தியாசம் இருக்காது. உங்களுடைய பயிற்சியும் அவ்வாறு இருக்க வேண்டும். அவ்வாறு, யாருக்காவது ரமணீகரமான நடிப்பாக இருந்தாலும் சரி, சினேகி ஆத்மாவினுடைய கம்பீரமான நடிப்பாக இருந்தாலும் சரி ஒவ்வொரு நடிப்பையும் சாட்சி பார்வையாளராகிப் பாருங்கள். ஏக்ரஸ் நிலையில் இருக்க வேண்டும்.ஆனால், எப்பொழுது ஒரு தந்தையின் நினைவில் சதா மூழ்கி இருப்பீர்களோ அப்பொழுதே அத்தகைய மனோநிலை ஏற்படும்.

 

சுலோகன்:

உறுதியான நம்பிக்கையினால் தன்னுடைய அதிர்ஷ்டத்தை நிச்சயித்து விட்டீர்கள் என்றால் சதா கவலையற்றவராக இருப்பீர்கள்.

 

***ஓம் சாந்தி***