BK Murli 23 November 2016 Tamil

BK Murli 23 November 2016 Tamil

23.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! சங்கமயுகத்தில் உங்களுக்கு பாபாவின் மூலம் நல்ல புத்தியும் சிரேஷ்டமான அறிவுரையும் (மத்) கிடைக்கின்றது. இதனால் நீங்கள் பிராமணரில் இருந்து தேவதை ஆகி விடுகிறீர்கள்.

 

கேள்வி :

குழந்தைகள் நீங்கள் எந்த ஒரு போதையில் இருப்பீர்களானால் நடத்தை மிகவும் இராயலாக ஆகி விடும்?

 

பதில் :

உங்களுக்கு ஞானத்தின் போதை (குஷி) உயர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஓஹோ! நாம் பகவானுக்கு முன் அமர்ந்திருக்கிறோம். நாம் இங்கிருந்து வீட்டிற்குச் செல்வோம். சென்று உலகத்தின் எஜமானராகக், கிரீடமணிந்த இளவரசராக ஆவோம். அத்தகைய போதை இருக்கும் போது நடத்தை தானாகவே இராயல் ஆகி விடும். வாயில் இருந்து மிக இனிமையான வார்த்தைகள் வெளிப்படும். ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு இருக்கும்.

 

பாடல் :

கூட்டத்தில் ஜோதி எரிந்து எழுந்தது.......

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஆன்மிகக் குழந்தைகள் வந்து பிராமணர்கள் ஆகி ஆன்மிகத் தந்தை மூலம் இதை அவசியம் புரிந்து கொண்டுள்ளனர், அதாவது நாம் சங்கமயுக பிராமணர்கள். பாபா நமது புத்தியின் பூட்டைத் திறந்து விட்டிருக்கிறார். இது சங்கமயுகம் என்பதை இப்போது நாம் புரிந்து கொண்டுள்ளோம். பதீத் பிரஷ்டாச்சாரி (மிகத் தாழ்ந்த நிலையிலுள்ள) மனிதர்கள் பாவனமாகி வருங்காலத்தில் பாவன சிரேஷ்டாச்சாரி (உயர்ந்த) புருஷோத்தமர்கள் எனச் சொல்லப் படுவார்கள். இந்த லட்சுமி-நாராயணர் எப்போதோ புருஷார்த்தம் செய்து புருஷோத்தமர்களாக ஆகியுள்ளனர் இல்லையா? இவர்களுக்கு நிச்சயம் சரித்திரம் இருக்க வேண்டும். இந்த லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் எப்போது ஸ்தாபனை ஆயிற்று? கயுகத்திலும் இல்லை, சத்யுகத்திலும் இல்லை. சொர்க்கம் ஸ்தாபனை ஆவதே சங்கமயுகத்தில் தான். இவ்வளவு விஸ்தாரமாக யாரும் செல்வதில்லை. நீங்கள் அறிவீர்கள், இது சங்கமயுகம். கயுகத்திற்குப் பின் சத்யுகம் புது உலகம் இருக்கும். அப்போது நிச்சயமாக சங்கமயுகமும் இருக்கும். பிறகு புது உலகத்தில் புதிய இராஜ்யம் இருக்கும். புத்தியில் சிந்தனை ஓட வேண்டும். நீங்கள் அறிவீர்கள், பாபா மூலம் நமக்கு நல்ல புத்தி மற்றும் ஸ்ரீமத் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஹே ஈஸ்வரா, இவருக்கு சதா சு-மத் அல்லது நல்ல அறிவுரை கொடுங்கள் எனக் கேட்கின்றனர். அவர் முழு உலகத்திற்கும் தந்தை. அனைவருக்கும் நல்ல வழிமுறை தருபவர். சங்கம யுகத்தில் வந்து தம்முடைய குழந்தைகளுக்கு நல்ல வழிமுறை தருகிறார். அவர்களைப் பற்றி சாஸ்திரங்களில் பாண்டவ சம்பிரதாயம் என்றும் தெய்விக சம்பிரதாயம் என்றும் எழுதப் பட்டுள்ளது. பிராமண சம்பிரதாயம் மற்றும் தெய்விக சம்பிரதாயம் பற்றியும் யாரும் புரிந்து கொள்ள முடிவதில்லை. பிரம்மாவின் மூலம் தான் பிராமண சம்பிரதாயத்தினராக ஆக முடியும். பரமபிதா பரமாத்மா தான் பிரம்மா மூலம் இந்தப் படைப்பைப் படைக்கிறார். பிரஜாபிதா இங்கு இருப்பதால் இவ்வளவு பிரம்மாகுமார் குமாரிகள் உள்ளனர். எப்போது யாராவது வந்து பிராமணர்களாகிய உங்களிடம் ஞானம் பெற்றுக் கொள்ளவில்லையோ, அது வரை சத்கதி எப்படி ஏற்பட முடியும்? உங்களிடம் அநேகர் வருவார்கள். சந்நியாசிகளும் வருவார்கள். மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்களும் வருவார்கள், பாபாவிடம் ஆஸ்தி பெறுவதற்காக. சொர்க்கத்தில் அவர்களுக்கு பாகம் கிடையாது. ஆனால் பாபா வந்து விட்டார் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இந்தச் சமயம் இந்து எனச் சொல்க் கொள்பவர்கள் யாரும் தேவி-தேவதா தர்மத்தை அறிந்து கொள்ளவில்லை. ஆனால் பாபா வந்திருக்கிறார் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். முதல் சதோபிரதானமாக இருந்தவர்கள் பிறகு தமோவில் வந்த காரணத்தால் தங்களை தேவி-தேவதாக்கள் எனச் சொல்லிக்கொள்ள முடியாது. குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இராவணனின் இராஜ்யமும் இங்கே உள்ளது. மேலும் இராமர் எனச் சொல்லப் படுகின்ற பரமபிதா பரமாத்மாவின் ஜென்மமும் கூட இங்கே தான் நடைபெறுகின்றது. பதீத-பாவனா சீதாராம் எனப் பாடவும் செய்கின்றனர். ஆனால் பதீத்தாக ஆக்கியவர் யார்? இராவணன் யார்? பதீத-பாவனர் பாபாவை அழைப்பது ஏன்? இது யாருக்கும் தெரியவில்லை. நமக்குள் இருக்கும் 5 விகாரங்களே இராவணன் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. யாரிடம் 5 விகாரங்கள் இல்லையோ, அவர்கள் இராம சம்பிரதாயத்தினர் ஆவர். இப்போது இராமராஜ்யம் இல்லை. அதனால் புதிய உலகம், பவித்திர இராஜ்யம் வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். இராமர் எனச் சொல்லப் படுபவர் சிவபாபா. ஆனால் அவர்கள் இராமரைப் பரமாத்மா எனப் புரிந்து கொண்டுள்ளனர். அதனால் சிவபாபாவை அழைத்துள்ளனர். இராமராஜ்யம் எனச் சொல்லப் படுவது எது என்பதை நீங்கள் புரிய வைக்க முடியும். இராமரின் சீதை அபகரிக்கப் பட்டதாக சாஸ்திரங்களில் எழுதி விட்டுள்ளனர். இராஜாவின் ராணியை யாராவது அபகரித்துச் செல்வதென்பது நடக்க முடியுமா என்ன? சாஸ்திரங்களும் ஏராளமாக உள்ளன. முக்கியமான சாஸ்திரம் கீதையாகும். பிரம்மா மூலமாக பிராமண, தேவதா, சத்திரிய தர்மத்தின் ஸ்தாபனை செய்கிறார் என்று சாஸ்திரங்களில் எழுதப் பட்டுள்ளது. ஆக, பிரஜாபிதாவும் இங்கே தான் இருக்க வேண்டும். பிரம்மாவுக்கு இவ்வளவு ஏராளமான குழந்தைகள் உள்ளனர், இது முகவம்சாவளி. இவ்வளவு பேர் விகாரத்தில் பிறந்தவர்களாக இருக்க முடியாது. சரஸ்வதியும் கூட முகவம்சாவளி எனும்போது பிரம்மாவின் மனைவியாக அவர் இருக்க முடியாது. இப்போது பாபா சொல்கிறார்-பிரம்மாவின் வாயின் மூலம் (ஞானம் கேட்டு) நீங்கள் பிராமணர் ஆகிறீர்கள், என்னுடைய குழந்தைகள் ஆகிறீர்கள். சிவபாபாவுக்கு எவ்வளவு மகிமை உள்ளது என்பதைக் குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள். பாபா பதீத-பாவனர், பரேட்டராகவும் (விடுவிப்பவராக) உள்ளார். இதையெல்லாம் புகழ் பாடவும் செய்கின்றனர். ஆனால் புரிந்து கொள்ளவில்லை. அதனால் முதல் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும் – அவர் பதீத-பாவனராக உள்ளார், கீதையின் பகவானாகவும் உள்ளார். நிராகார் சிவபாபா என்றால் நிச்சயமாக வந்து ஞானம் சொல்லியிருப்பார். இப்போது எந்த சரீரத்தின் மூலம் ஞானம் சொல்கிறாரோ, அவரது பெயர் பிரம்மா என வைக்கப் பட்டுள்ளது. இல்லையென்றால் பிரம்மா எங்கிருந்து வந்தார்? பிரம்மாவின் தந்தை யார்? பிரம்மா-விஷ்ணு-சங்கரைப் படைத்தவர் யார்? இது ஆழமான கேள்வியாகும். திரிமூர்த்தி தேவதா என்றோ சொல்கின்றனர். ஆனால் இவர் எங்கிருந்து வந்தார்? இப்போது பாபா புரிய வைக்கிறார்-இவரைப் படைப்பவரும் உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான் தான். அவரைத் தான் சிவன் எனச் சொல்கின்றனர். இந்த மூன்று தேவதைகள் ஒளி வடிவத்தினர். இவர்களுக்குள் எலும்பு-சதை கிடையாது. ஆனால் மந்த புத்தியினர் புரிந்து கொள்ள முடியாது. இதைப் பற்றிப் புரிய வைக்க வேண்டும் - உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான். அவர் பிரம்மா மூலம் சொர்க்கத்தின் ஆஸ்தி தருகிறார். பாடவும் செய்கின்றனர்-மனிதரில் இருந்து தேவதையாக ஆக்கினார்..... பிறகு விஷ்ணுவின் நாபியில் இருந்து பிரம்மா வெளிப்பட்டதாகக் காட்டுகின்றனர். எப்போதாவது நாபியில் இருந்தும் கூடக் குழந்தை வெளிப்படுமா என்ன? இப்போது பாபா அமர்ந்து அனைத்து இரகசியங்களையும் புரிய வைக்கிறார். ஆனால் யாராவது இதைப் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா? நீங்கள் அறிவீர்கள், ஆத்மா தான் பாவாத்மா, புண்ணியாத்மா எனச் சொல்லப் படுகின்றது. பவித்திர ஆத்மாவே தான் பரமாத்மா என்பது கிடையாது. பரமாத்மா தந்தையோ சதா பாவனமாக உள்ளார். தமோபிர தானமாக இருப்பவர்கள் பதீத் எனச் சொல்லப் படுகின்றனர். சத்யுகத்தில் எப்போது சுகம் இருந்ததோ, அப்போது துக்கத்தின் பெயர்-அடையாளம் கூட இல்லாமல் இருந்தது. இப்போது இருப்பது தான் சொர்க்கம் என மனிதர்கள் சொல்லிவிடுகின்றனர். அவர்கள் எதையும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் கடைசியில் வந்து பாபாவிடம் ஆஸ்தி பெறுவார்கள். குழந்தைகள் நீங்கள் தான் அறிவீர்கள், நாம் நம்முடைய இராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். உலகத்தின் எஜமானராக வேறு யாரும் ஆக முடியாது. உலகத்தின் மீது இராஜ்யம் சத்யுகத்தில் இருக்கும். கயுகத்தில் முழு உலகின் மீதும் இராஜ்யம் செய்ய இயலாது. இதுவும் யாருக்கும் தெரியாது. கீதையிலும் உள்ளது, அதாவது மகாபாரத யுத்தம் நடந்த போது தான் அனைத்து தர்மங்களும் விநாசமாகின்றன. எப்படி ஓர் ஆலமரம் உள்ளது, அது காய்ந்து, பட்டுப் போய் ஒன்றுக்கொன்று உரசுவதால் நெருப்புப் பற்றிக் கொள்கிறது. அப்போது காடு முழுவதும் எரிந்து போகின்றது. இந்த மனித சிருஷ்டியின் மரமும் கூட இற்றுப் போய் விட்டுள்ளது. இதையும் இப்போது நெருப்புப் பற்றிக் கொள்ளப் போகிறது. ஒருவர் மற்றவரோடு சண்டையிட்டு அழிந்து போவார்கள். தீப்பற்ற வைப்பதற்கான பொருட்களை உருவாக்கிக் கொண்டே உள்ளனர். இப்போது அணுகுண்டுகள் மூலம் தீப்பற்றப் போகிறது. இந்த ரகசியத்தை அவர்கள் அறியவில்லை. இப்போது கலியுக நரகம் மாறி சொர்க்கமாகப் போகிறது. இந்த ஞானத்தில் போதை இருக்க வேண்டும். தன்னைத் தான் பார்க்க வேண்டும், நாம் அந்த போதை அல்லது நஷாவில் இருக்கிறோமா? நாம் பரமாத்மாவின் குழந்தை, அவரிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். தங்களுக்குள் உரையாடு வதற்கான ராயல்டி (உரிமை) இருக்க வேண்டும். இங்கிருந்து அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். பின்னால் இந்த சம்ஸ்காரத்தைத் தான் எடுத்துச் செல்வோம். மிக இனிமையானவராக ஆக வேண்டும். மிகுந்த நஷா இருக்க வேண்டும். நாம் சிவபாபாவின் குழந்தைகள். தேவதா பதவி அடையப் போகிறவர்கள். அதனால் ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்போடு பேச வேண்டும். ஆனால் குழந்தைகளின் வாயிலிருந்து இன்னும் பூக்கள் வெளிவரவில்லை. நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள்! உங்களுக்கு இது நினைவிலிருக்க வேண்டும்-நாம் சிவபாபாவின் குழந்தைகள். பிறகு சத்யுகத்தில் மகாராஜா ஆவோம். அதாவது நாம் உலகத்தின் கிரீடதாரி இளவரசர் ஆவோம்.

 

குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் குஷி இருக்க வேண்டும், நாம் பரமாத்மாவின் முன்னிலையில் அமர்ந்துள்ளோம். யாரிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறதோ, அவருடைய ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். நீங்கள் அறிவீர்கள், நமது இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இராஜதானியில் அனைவருமே வேண்டும். ஆனால் குழந்தைகள் உங்களுடைய வாயிலிருந்து எப்போதும் இரத்தினங்களே வெளிப்பட வேண்டும். பாபா ரூப் (யோகி) பஸந்த் (ஞானி) ஆகவும் இருக்கிறார். கதைகள் அனைத்தும் இப்போதைய சமயத்தினுடையவை. பாபா ஞானக்கடலாக உள்ளார். அவர் ஞான மழை பொழிவிக்கிறார். மற்றப்படி அந்த இந்திரன் என்ற தேவதா மழை பொழிவிக்கிறார் என்ற விஷயம் கிடையாது. இந்த மேகங்கள் இயற்கையாக உருவாகின்றன. மழை பொழிகின்றன. சத்யுகத்தில் இந்த 5 தத்துவங்களும் கூட உங்கள் அடிமை ஆகி விடும். ஆனால் இங்கே மனிதர்கள் அனைத்திற்கும் அடிமை ஆகி விட்டுள்ளனர். இங்கே ஒவ்வொரு விஷயத்திலும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. அங்கே அனைத்து விஷயங்களும் தாமாகவே நடைபெற்று விடுகின்றன. ஆக, குழந்தைகளுக்கு பாபாவின் நினைவு சதா இருந்து கொண்டிருக்க வேண்டும். இதனால் குஷியின் அளவு சதா அதிகரித்துக் கொண்டே இருக்கும். அவர்கள் (விஞ்ஞானிகள்) கூட சிந்தனை செய்கின்றனர். குழந்தைகள் நீங்கள் வாணியைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். புத்தியில் வாணியின் சிந்தனையின் ஓட்டம் அவ்வப்போது மிக நன்றாக உள்ளது. சில நேரம் குறைவாக உள்ளது. இது சிந்தனை செய்வது எனச் சொல்லப் படும். குழந்தைகள் தந்தையின் அவஸ்தாவைப் (மனநிலை) பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பாபா தம்முடைய அனுபவத்தைச் சொல்கிறார். ஆக, சில நேரம் அதிக எழுச்சியூட்டுவதாக உள்ளது. சில நேரம் குறைவாக உள்ளது. சில நேரம் மிக நல்ல பாயின்ட்டுகள் வெளிப்படுகின்றன. பாபாவும் உதவியாளராக ஆகி விடுகிறார். இதை நீங்களும் உணர்கிறீர்கள். பாபாவோ ஒரு போதும் முரளியைக் கையில் எடுத்துக் கொள்வதில்லை. குழந்தைகள் மேகசின் எழுதுகின்றனர். ஆக, பாபா அவ்வப்போது பார்க்கிறார்-குழந்தைகள் ஒரு போதும் கவனக்குறைவாக இல்லா திருக்கிறார்களா? மேகசினிலும் நல்ல-நல்ல முரளியின் பாயின்ட்டுகள் வருகின்றன, அவை எல்லாத் தரப்பிலும் சென்று கொண்டுள்ளன. யாருக்காவது முரளி போகவில்லை என்றால் பாபா சொல்கிறார், படைப்பவர்-படைப்பு பற்றிய ஞானத்தை ஏழு நாளில் புரிந்து கொண்டு விட்டனர் இல்லையா? வேறென்ன வேண்டும்? மற்றப்படி 5 விகாரங்களை பஸ்மம் செய்வதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும். வேறு எந்த ஒரு கஷ்டமும் கிடையாது.

 

குழந்தைகளாகிய நீங்கள் யாருடைய சத்சங்கத்திற்கும் செல்ல முடியும். சேவை செய்வதற்கும் ஊக்கம் வர வேண்டும். எப்போது அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகக் கூடுகின்றனரோ, அப்போது புரிய வைக்க வேண்டும்-ஒவ்வொருவரின் தர்மமும் தனித்தனி. சகோதர-சகோதரர்கள் எனச் சொல்கின்றனர் ஆனால் ஒன்றுகூடி ஒன்றாக (ஒரே தர்மமாக) முடியாது. இதை வெறுமனே ஒரு பேச்சுக்காக மட்டுமே சொல்கின்றனர். பாபா சொல்கிறார்-நான் வந்து பிராமணராக்கிப் பிறகு தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறேன். அங்கே வேறு எந்த ஒரு தர்மமும் இருக்காது. இது அதே மகாபாரத யுத்தம். கீதையிலும் கூட இது வர்ணனை செய்யப் பட்டுள்ளது. இது ஒரே ஒரு படிப்பு. படிப்பைச் சொல்லித்தருபவர் ஒருவர் தான். ஞானம் முழுவதும் முடிவடைந்து விட்டால் நானும் சென்று விடுவேன் என்று பாபா சொல்கிறார். நான் கலியுகத்தின் கடைசியில் ஞானம் சொல்ல வேண்டும். நான் கல்ப-கல்பமாக வர வேண்டும். ஒரு விநாடி கூட குறைவாக அல்லது அதிகமாக ஆகாது. ஞானம் முடிவடையும் போது கர்மாதீத் நிலைக்குச் சென்று விடுவீர்கள். அப்போது விநாசமும் ஆகி விடும். நாளுக்கு நாள் உங்கள் சேவை அதிகரித்துக் கொண்டே செல்லும். இங்கோ யாரிடமும் பவித்திரதா இல்லை, தெய்விக குணங்களின் தாரணையும் இல்லை. அங்கே பவித்திரதாவின் வித்தியாசம் பாருங்கள் எவ்வளவு உள்ளது! நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். இது தான் புருஷோத்தம யுகம். இப்போது நீங்கள் புருஷோத்தம் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அந்த அழகு, அந்த நடத்தையும் இருக்க வேண்டும். ஒரு போதும் வாயிலிருந்து கல் (கடும் சொல்) வெளிவரக் கூடாது. இரத்தினங்கள் தாம் வாயிலிருந்து வெளிவர வேண்டும். இப்போது நீங்கள் தேவதைக்கு சமமாக மணமுள்ள மலர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பகவான் வந்து பகவான்-பகவதி ஆக்குகிறார். தேவதைகளைத் தான் பகவான்-பகவதி எனச் சொல்கின்றனர். ஆனால் அது போல் ஆக்குபவர் யார்? இதை யாரும் அறிந்து கொள்ளவில்லை. உங்கள் புத்தியில் முழுமையாக படைப்பவர் மற்றும் படைப்பு பற்றிய ஞானம் உள்ளது. பிறகு மற்றவர்களையும் தங்களுக்குச் சமமாக ஆக்குவதற்கான பொறுப்பு உள்ளது. அநேகர் வந்து கொண்டே இருப்பார்கள். சுயதரிசனச் சக்கரதாரியாக பிராமணர்கள் தான் ஆகின்றனர். மாயாவின் புயல்களும் குழந்தைகளுக்குத் தான் வருகின்றன. எங்காவது புயல் வந்தால் எலும்புகள் நொறுங்கிப் போகின்றன. போகப்போக சிலர் சேவைக்குக் குந்தகமும் செய்து விடுகின்றனர். பாபா சொல்கிறார், எந்த ஒரு மோசமான காரியத்தையும் செய்யாதீர்கள். நீங்கள் முகவம்சாவளி பிராமணர்கள், அவர்கள் விகாரி வம்சாவளி. எவ்வளவு வித்தியாசம்! அவர்கள் சரீர சம்மந்தமான யாத்திரையில் அழைத்துச் செல்கின்றனர். உங்களுடையது ஆன்மிக யாத்திரை. நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த புத்தி கூட யாரிடத்திலும் இல்லை-அதாவது அவர்களும் பிராமணர்கள், நாமும் பிராமணர்கள். ஆனால் உண்மையான பிராமணர் யார்? அந்த பிராமணர்கள் தங்களை பிரம்மாகுமார் எனச் சொல்லிக்கொள்ள முடியாது. நீங்கள் தங்களை பிரம்மாகுமார் எனச் சொல்லிக் கொள்கிறீர்கள் என்றால் நிச்சயமாக பிரம்மாவும் இருப்பார். ஆனால் அவர்களின் புத்தியில் கேள்வி கேட்கும் அளவுக்கு இந்த விஷயங்கள் வருவதில்லை. பாபா கல்ப-கல்பமாக குழந்தைகளாகிய உங்களுக்கு வந்து இந்த விஷயங்களைப் புரிய வைக்கிறார் - நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்கள் அனைவரும் சகோதர- சகோதரர்கள் ஆகிறீர்கள். பிறகு அவர்கள் விகாரத்தில் எப்படிச் செல்ல முடியும்? யாராவது விகாரத்தில் செல்கிறார்கள் என்றால் பிராமண குலத்திற்குக் களங்கம் விளைவிக்கிறார்கள். தங்களை பிரம்மாகுமார்-குமாரிகள் எனச் சொல்லிக் கொண்டு பிறகு பதீத் ஆக முடியாது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) வாணி மூலம் என்ன கேட்கிறீர்களோ, அதைப் பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். புருஷோத்தம் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் நடத்தையை மிகவும் ராயலாக ஆக்கிக் கொள்ள வேண்டும். வாயிலிருந்து ஒரு போதும் கல்லை (கடும் சொல்) வெளிப்படுத்தக் கூடாது.

 

2) அநேகரைத் தனக்குச் சமமாக ஆக்குவதற்கான பொறுப்பாளி என உணர்ந்து சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். எந்த ஒரு மோசமான, அசுத்த காரியத்தையும் செய்து சேவைக்குக் குந்தகம் ஏற்படுத்தக் கூடாது.

 

வரதானம் :

ஒரு விநாடியில் தேகம் என்ற ஆடையில் இருந்து விலகி, கர்மபோகத்தின் (கர்மங்களின் விளைவு) மீது வெற்றி பெறக்கூடிய சர்வசக்தி நிறைந்தவர் ஆகுக.

 

எப்போது கர்மபோகத்தின் ஆதிக்கம் உள்ளதோ, கர்மேந்திரியங்கள் கர்மபோகத்தின் வசமாகித் தன் பக்கம் கவர்ந்திழுக்கின்றனவோ, அதாவது எப்போது அதிக மன வேதனை இருந்து கொண்டிருக்கிறதோ, அத்தகைய சமயத்தில் கர்மபோகத்தைக் கர்மயோகமாக மாற்றுபவர்கள், சாட்சி ஆகி கர்மேந்திரியங்கள் மூலமாகவே சகித்துக் கொள்பவர்கள் தான் சர்வ சக்திகள் நிறைந்த அஷ்டரத்தினம், வெற்றியாளர் எனச் சொல்லப் படுவார்கள். இதற்காக நீண்ட காலத்திற்கு தேகம் என்ற ஆடையிலிருந்து விலகி இருப்பதற்கான அப்பியாசம் இருக்க வேண்டும். இந்த ஆடை, உலகத்தின் அல்லது மாயாவின் கவர்ச்சியில் இறுக்கமாக, அதாவது ஈர்க்கப் பட்டவராக இருக்கக் கூடாது. அப்போது எளிதில் களைய முடியும்.

 

சுலோகன் :

அனைவரின் மரியாதை பெறுவதற்காக பணிவுள்ளவராக ஆகுங்கள். பணிவு என்பது மகானதாவின் (பெருந்தன்மையின்) அடையாளமாகும்.

 

***ஓம் சாந்தி***