BK Murli 24 November 2016 Tamil

BK Murli 24 November 2016 Tamil

24.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! சிவபாபாவுடையவர்களாக ஆகி எந்த தவறும் செய்யக் கூடாது, தவறு செய்வதன் மூலம் தந்தையின் பெயரைக் கெடுத்து விடுவீர்கள்.

 

கேள்வி:

அனைவரை விடவும் பெரிய இல்லறம் யாருடையது, மற்றும் எப்படி?

 

பதில்:

அனைவரை விடவும் பெரிய இல்லறம் சிவபாபாவுடையதாகும். பக்தியில் அனைவருமே நீயே என் தாயும் தந்தையும் என சொல்லி அழைக்கின்றனர் என்றால் இல்லறத்தவராகி விட்டார் அல்லவா. ஆனால் அவர் எதுவரை சாகாரத்தில் வரவில்லையோ அதுவரை அவருடைய இல்லறம் எதுவும் இருக்காது ஏனென்றால் மேலே ஆத்மாக்கள் தந்தையுடன் நிராகார ரூபத்தில் இருப்பார்கள். சாகாரத்தில் வந்து இவருக்குள் (பிரம்மாவுக்குள்) பிரவேசம் செய்யும் போது அனைத்திலும் பெரிய இல்லறமாகிறது.

 

ஓம் சாந்தி.

குறிப்பாக பாரதமும் பொதுவாக உலகமும் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை துறவறத்தவரா அல்லது இல்லறத்தவரா என்பதை அறிந்திருக்கவில்லை. தந்தை வரும்போது குழந்தைகளே, குழந்தைகளே என சொல்லி அழைக்கிறார், ஏனென்றால் அவர் நீயே தாயும் தந்தையும், நீயே. . . . என அழைக்கப்படுகிறார். சிவன் அங்கே (பரமதாமத்தில்) நிராகாரியாக இருக்கிறார் என அனைவரும் அறிவார்கள். சிவனின் ரூபம் இருக்கிறது, ஆனாலும் குழந்தைகள் கிடையாது. ஒருவேளை இருக்கின்றனர் என வைத்துக் கொண்டாலும் அனைத்து ஆத்மாக்களும் குழந்தைகள் ஆவர். அனைவருமே ஒரே மாதிரியாக இருக்கும் குழந்தைகள், எனவே அனைவரும் பரமாத்மா என புரிந்து கொண்டு விட்டனர். ஆத்மாவும் புள்ளி ரூபம், பரமத்மாவின் ரூபமும் புள்ளியாகும். நீயே தாயும் தந்தையும். . . . என இல்லறவாசி மனிதர்கள்தான் பாடுகின்றனர், துறவற மார்க்கத்தைச் சேர்ந்த சன்னியாசிகள் பரமாத்மா பிரம்மமாக இருக்கிறார் என சொல்லி விடுகின்றனர். அவர்கள் நீயே தாயும் தந்தையும். . . . . என சொல்ல மாட்டார்கள். அவர்களின் மார்க்கம் தனியானது. இவர்களும் கூட மனிதர்கள் லட்சுமி நாராயணரின் முன்னால் சென்று தவறுதலாக மகிமை பாடுகின்றனர் - நீயே தாயும் தந்தையும். . . அல்லது அச்சுதம் கேசவம். . . என்பார்கள். பக்தி மார்க்கத்தில் துதிப்பாடல்களும் நிறைய பாடுகின்றனர். உண்மையில் பரமாத்மா தந்தையாவார், அவரிடமிருந்து ஆஸ்தி எப்படி மற்றும் என்ன கிடைக்கும்? இவர் (பிரம்மா) தந்தையாகவும், மூத்த அண்ணனாகவும், பெரிய தாயாகவும், பிரஜாபிதாவாகவும் இருக்கிறார். இவர் மூலம் சொல்கிறார் - குழந்தைகளே, நான் உங்களுடைய தந்தையாகவும் இருக்கிறேன், பிறகு நானும் கூட இல்லற மார்க்கத்தில் வரவேண்டியிருக்கிறது. இவர் என்னுடைய ஜோடியாகவும் இருக்கிறார், குழந்தையாகவும் இருக்கிறார். இவருக்குள் பிரவேசமாகும்போது இல்லறவாசியாக ஆகி விடுகிறேன். என்னைத்தான் பரம (சுப்ரீம்) தந்தை, பரமா ஆசிரியர், பரம குரு எனவும் சொல்கின்றனர். குரு முக்திக்காக வழி காட்டுகிறார். அவர்கள் (உலககீய குரு) அனைவரும் பொய்யானவர்கள். இவர் சத்யமானவர். ஆங்கிலத்தில் பரமாத்மாவை சத்யமானவர் என சொல்கின்றனர். ஆக சத்யமானவர் வந்து எந்த உண்மையை சொல்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. என்னை உங்களுக்கும் கூட தெரியாமருலிந்தது. ஆக புதிய விஷயம் போலாகி விட்டதல்லவா. அவர் ஞானக்கடல், உண்மையான கண்டத்தை ஸ்தாபனை செய்பவர். கண்டிப்பாக எப்போதாவது உண்மையை சொல்லிவிட்டுச் சென்றிருப்பார், ஆகவேதான் பாடலும் உள்ளது. உண்மையான கண்டத்தை சொர்க்கம் என சொல்கின்றனர். அங்கே தேவதைகளின் இராஜ்யத்தை காட்டுகின்றனர். இப்போது பழைய உலகமாக உள்ளது, பிறகு புதிய உலகமாக ஆகவுள்ளது. பழைய உலகம் தீப்பிடிக்கப் போகிறது. ஸ்தாபனையின் நேரத்தில் வினாசமும் பாடப்படுகிறது. செய்து செய்விப்பவராக பரமாத்மா பாடப்பட்டுள்ளார். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை செய்கிறார். எப்படி செய்விக்கிறார்? அதனை தாமே வந்து தெரியப்படுத்துவார். மனிதர்களுக்கு எதுவும் தெரியாது. பரமாத்மா செய்து செய்விப்பவர் என சொல்கின்றனர். மேலும் பிறகு நாடகத்தைப் பற்றியும் தெரிந்து விட்டது. கலியுகத்தின் முடிவு, சத்யுகத்தின் தொடக்கம். . . இந்த சங்கமத்தைத்தான் உயர்வானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கலியுகத்திற்குப் பிறகு வருவது சத்யுகமாகும். பிறகு கீழே இறங்க வேண்டும். சொர்க்கமும், நரகமும் பாடப்பட்டுள்ளது. மனிதர்கள் இறக்கும்போது சொர்க்கத்திற்குச் சென்றார் என சொல்கின்றனர். கண்டிப்பாக ஏதோ ஒரு சமயத்தில் சொர்க்கவாசியாக இருந்தார். இதை பாரதவாசிகள்தான் சொல்கின்றனர், ஏனென்றால் பாரதமே அனைத்தையும் விட பழமையானது என தெரிந்திருக்கிறார்கள். ஆக கண்டிப்பாக இதுதான் சொர்க்கமாக ஆகும். விஷயங்கள் மிகவும் சகஜமானதேயாகும், ஆனால் நாடகத்தின்படி புரிந்து கொள்வதில்லை, ஆகையால்தான் புரிய வைப்பதற்காக தந்தை வருகிறார். பாபா வாருங்கள், உங்களுக்குள் உள்ள ஞானத்தை எங்களுக்கு கொடுங்கள் என கூப்பிடவும் செய்கின்றனர். தூய்மையற்றவர்களை தூய்மையாக்க வாருங்கள். பிறகு துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுங்கள் என சொல்கின்றனர், ஆனால் என்ன ஞானம் கொடுப்பார், என்ன சுகத்தைக் கொடுப்பார் என தெரியாது. அவர் தந்தை என்றால் கண்டிப்பாக தந்தையின் மூலம் படைப்பு படைக்கப்பட்டிருக்கும் என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். குழந்தைகள் தந்தை என சொல்லும்போது படைப்பு என ஆகிவிட்டது. படைப்பும் கூட கண்டிப்பாக எங்கிருந்தாவது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பிறகு குழந்தைகளுக்கு ஆஸ்தியும் கொடுத்திருக்க வேண்டும். இது பொதுவான விஷயமே ஆகும், ஆகவேதான் என்னை நீதான் என் தாயும் தந்தையும் என சொல்கின்றனர். ஆக, பாபா பெரிய குடும்பஸ்தர் ஆகிவிட்டார் அல்லவா. தாய், தந்தையானவரே வாருங்கள், வந்து தூய்மைப்படுத்துங்கள் என அழைக்கவும் செய்கின்றனர். இப்போது தந்தை இருக்கவே செய்கிறார், ஆனால் தாய் இன்றி படைப்பு எப்படி நடக்கும்? பிறகு இங்கே இந்த படைப்பை பாபா எப்படி படைக்கிறார்? இது முற்றிலும் புதிய விஷயமாகும். இங்கே கூட பலரின் புத்தியில் நிலைப்பதில்லை, மற்ற இடங்களில் பரமாத்மாவை மட்டும் தந்தையே என அழைக்கின்றனர். இங்கே தாய், தந்தை இருவரும் உள்ளனர் எனும்போது இல்லற மார்க்கமாக ஆகியுள்ளதல்லவா. அங்கே (மற்ற தர்மத்தினர்) தந்தை என மட்டும் சொல்வதன் மூலம் அவர்களுக்கு முக்தியின் ஆஸ்தி கிடைக்கிறது. அவர்கள் வருவதும் பின்னால்தான். கிறிஸ்தவ தர்மத்திற்கு முன்பு பௌத்த தர்மம் இருந்தது, அதற்கும் முன்பு இஸ்லாம் தர்மம் இருந்தது என அனைவருமே அறிவார்கள். இந்த ஏணியில் வேறு தர்மம் இல்லை, எனவே (சிருஷ்டி) சக்கரத்திற்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். இது பாடசாலையாகும். இப்போது பாடசாலையில் ஒரு புத்தகம் மட்டும் இருக்காது. பாடசாலையில் வரைபடங்களும் தேவைப்படுகின்றன. அந்த ஸ்தூலமான படிப்பு பயன்படாது. வரைபடங்களின் மூலம் மனிதர்கள் சட்டென புரிந்து கொண்டு விடுவார்கள். இவை உங்களுடைய முக்கியமான வரைபடங்களாகும். எவ்வளவு விஸ்தாரமாக புரிய வைக்கப்படுகிறது, ஆயினும் கல்புத்தியாக இருப்பவர்கள் புரிந்து கொள்வதில்லை. தந்தை புரிய வைத்திருக்கிறார் - கண்காட்சிகளில் முதல் திரிமூர்த்திகள் பற்றியே புரிய வைக்க வேண்டும். இவர் உங்களுடைய பாபா, இவர் தாதா. எப்படி ஞானத்தைக் கொடுப்பது? ஆஸ்தி எப்படி கொடுப்பது? பாரதவாசிகளுக்குத்தான் ஆஸ்தி கிடைக்க வேண்டும். பரமபிதா பரமாத்மா பிராமண, தேவதா, சத்ரிய என 3 தர்மங்ளைப் படைக்கிறார். பிரம்மாவின் மூலம் பிராமணர்களைத்தான் படைக்கிறார், இது யக்ஞமாகும், இது ருத்ர ஞான யக்ஞம் எனப்படுகிறது. பக்தி மார்க்கத்தின் மற்ற யக்ஞங்கள் தாமதமாக தொடங்குகின்றன, ஏனென்றால் முதன் முதலில் சிவனின் பூஜை நடக்கிறது, பிறகு தேவதைகளின் பூஜை. அந்த சமயத்தில் எந்த யக்ஞமும் இருக்காது. பிற்பாடு இந்த யக்ஞம் செய்வதை தொடங்கினார்கள். முதலில் தேவதைகளின் பூஜை செய்கின்றனர், மலர்களை சூட்டுகின்றனர். இப்போது நீங்கள் பூஜைக்குத் தகுந்தவர்களாக இல்லை. மனிதர்கள் சென்று சிவன் மீது ஊமத்தை மலர்களை ஏன் சூட்டுகின்றனர்? நீங்கள் அனைவரும் முட்களாக இருந்தீர்கள் என தந்தை புரிய வைக்கிறார். அதிலிருந்து சிலர் பட்டு ரோஜாவாக, சிலர் பன்னீர் ரோஜாவாக, சிலர் மல்லிகையாக ஆகின்றனர். பிறகு சிலர் எருக்க மலராகவும் கூட ஆகி விடுகின்றனர். முழுமையாக படிக்கவில்லை என்றால் எருக்க மலராகவும் ஆகி விடுகின்றனர். எதற்கும் உதவாதவர் ஆகின்றனர். சிவபாபாவிடம் அனைவரும் முட்களாக வருகின்றனர், பிறகு அவர்களை மலர்களாக ஆக்குகிறார், ஆனால் மலர்களிலும் வித விதமானவைகளாக ஆகின்றனர். தோட்டத்தில் பலவித மலர்கள் இருக்கும் அல்லவா. உங்களிலும் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். சிலர் சிம்மாசன அதிகாரி ஆகின்றனர், சிலர் வேறு ஏதாவதாக ஆகின்றனர் - இந்த அனைத்து விஷயங்களையும் தந்தைதான் புரிய வைக்கிறார், வேறு யாரும் புரிய வைக்க முடியாது. பக்தி மார்க்கம் எவ்வளவு நீண்டதாக உள்ளது. ஆனால் அதில் கொஞ்சம் கூட ஞானம் கிடையாது. சத்யுகத்தில் தேவி தேவதைகள் இருந்தனர். கலியுகத்தில் ஒரு தேவதை கூட இல்லை. ஆக கண்டிப்பாக பரமபிதா பரமாத்மா மனிதர்களை தேவதைகளாக ஆக்கியிருப்பார். ஆக தந்தை வந்து அப்படிப்பட்ட கர்மங்களை கற்றுத் தருகிறார், அதனை மனிதர்கள் கற்றுக் கொண்டு தெய்வீக குணங்களை தாரணை செய்து தேவி-தேவதைகளாக ஆகிவிடுகின்றனர். மற்ற தர்மத்தவர்கள் எதை கற்பிப்பார்கள்? ஏனென்றால் அவர்களுக்குப் பின்னால் அவர்களைச் சேர்ந்தவர்கள் மேலிருந்து வருகின்றனர். எனவே அவர்கள் தூய்மையின் ஞானத்தை மட்டும் கொடுக்கின்றனர். கிறிஸ்து வரும் சமயத்தில் கிறிஸ்தவர்கள் யாரும் இருப்பதில்லை. மேலிருந்து அவருக்குப் பின்னால் வருகின்றனர். முக்கிய தர்மங்கள் 4 என தந்தை புரிய வைத்திருக்கிறார், தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றவர்களின் சாஸ்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் எனப்படுகின்றன. முக்கியமானவை 4 தர்மங்களாகும். மற்ற அனைத்தும் சிறு சிறு தர்மங்கள், அவை வளர்ச்சி அடைந்தபடி இருக்கும். இஸ்லாம் தர்மத்தினருக்கு அவர்களுடைய சாஸ்திரம், பௌத்தத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களுடைய சாஸ்திரம் இருக்கும். ஆக, தர்ம சாஸ்திரம் என்பது இவை மட்டும்தான். பிராமண தர்மம் இப்போதையதாகும். பிராமண தேவதாய நமஹ . . . என அந்த மனிதர்கள் பாடுகின்றனர். ஆக, பரமபிதா பரமாத்மா வந்து பிரம்மாவின் மூலம் படைக்கக் கூடிய பிரம்மாவின் வாய்வழி வம்சாவளியினரே உண்மையான பிராமணர்கள், நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வாரிசுகளே அல்ல என அந்த பிராமணர்களுக்கு புரிய வைக்க வேண்டும். நீங்கள் தம்மை பிராமணர் என மட்டும் சொல்லிக் கொள்கிறீர்கள், ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பிரம்மா போஜனத்தை சாப்பிடும்போது சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகம் சொல்லி விட்டு பிரம்மா போஜனத்தின் மகிமையைப் பாடுகின்றனர். வீணாக மகிமை செய்கின்றனர். நீங்கள் எப்படி பிராமணராக இருக்க முடியும் என அவர்களை கேட்க வேண்டும். முதல் பிரம்மா வேண்டும், அவர் மூலமாக பரமாத்மா சிருஷ்டியை படைப்பார். ஆக நீங்கள் உண்மையான பிராமணர்கள். பிராமணர்களுக்கு உச்சிக் குடுமியை காட்டுகின்றனர் அல்லவா. விராட ரூப சித்திரத்தில் பிறகு பிராமணர்களை காட்டுவதில்லை எனும்போது எங்கிருந்து பிராமணர்கள் வந்தார்கள்? நீங்கள் தம்மை பிராமணர்கள் என சொல்லிக் கொள்கிறீர்கள் என்றால் பரமாத்மா வந்து பிரம்மாவின் மூலம் புதிய படைப்பை படைக்கும்போது பிராமணர்களாக ஆகிறீர்கள், பிறகு பிராமணர்களே தேவதை ஆகின்றனர். பிராமணர்கள் இருப்பதே சங்கமயுகத்தில்தான் ஆகும். கலியுகத்தில் இருப்பவர்கள் அனைவரும் சூத்திரர்கள் ஆவர். பிராமணர்களின் மகிமையை நிறைய செய்கின்றனர். இந்த அனைத்து விஷயங்களையும் பாபா புரிய வைக்கிறார். அல்லா மற்றும் ஆஸ்தி, மற்ற அனைத்தும் விரிவான விஷயங்கள் ஆகும். பக்தியைக் குறித்தும் புரிய வைக்க வேண்டும். நீங்கள் ஏதோ பக்தர்கள் என பாபா சொல்லி விடுகிறார், மற்றபடி பாபா ஒரு போதும் கோபித்துக் கொள்வதில்லை. தந்தை விழிப்புணர்வு கொடுப்பார் அல்லவா, ஏனென்றால் தப்பு செய்தார்கள் என்றால் யாருடைய பெயர் கெடுகிறது? சிவபாபாவின் பெயர். ஆகையால் பாபா குழந்தைகளின் நன்மைக்காக அறிவுரைகள் கொடுக்கிறார். இவரால் (பிரம்மாவால்) ஏதேனும் தவறு ஏற்பட்டது என வைத்துக் கொள்ளுங்கள், ஆயினும் அதனை சரிப்படுத்துவதும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. அதிருந்தும் கூட லாபம் உண்டாகும் ஏனென்றால் இவர் மூத்த குழந்தை அல்லவா. அனைத்தின் ஆதாரமும் இவர் மீதுள்ளது, இவரால் எந்த நஷ்டமும் ஏற்படாது. இவர் இப்படி செய்யுங்கள் என சொன்னார் என்றால் செய்து விட வேண்டும். அப்போது நஷ்டத்திலிருந்தும் கூட லாபம் உண்டாகும். நஷ்டத்தின் விஷயம் எதுவும் கிடையாது. அனைத்து விஷயங்களிலும் நன்மையோ நன்மை உள்ளது. நன்மையற்றதும் நாடகத்தில் இருந்தது. தவறுகள் அனைவரிடமிருந்தும் கூட ஏற்பட்டபடி இருக்கும். ஆனால் கடைசியில் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் நன்மை ஏற்பட வேண்டும், ஏனென்றால் தந்தை நன்மை செய்பவர் ஆவார். அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். அனைவருக்கும் சத்கதியை கொடுத்து விடுகிறார். இப்போது அனைவருக்கும் இறுதிக்கட்டமாகும். பாவங்களின் சுமை அனைவரின் தலை மீதும் உள்ளது எனும்போது அனைவருடைய கணக்கு வழக்கும் முடிந்து போகும். தண்டனைகள் கிடைப்பதில் தாமதம் எதுவும் இருக்காது. ஒரு வினாடியில் ஜீவன்முக்தி கிடைக்கும் என்றால் ஒரு வினாடியில் பாவங்களுக்கான தண்டனையை அனுபவிக்க முடியாதா? காசி கல்வெட்டில் நடப்பது போல. சரீரம் விடுபட்டு விடுகிறது. ஆனால் சிவபாபாவிடம் சென்று சந்திக்கலாம் என்றல்ல. இல்லை, முந்தைய பாவங்களின் கணக்கு முடிந்து பிறகு புதிதாகத் தொடங்குகிறது. இடையில் யாரும் திரும்பிச் செல்ல முடியாது. ஞானம் ஒரு வினாடிக்கானதாக இருக்கலாம், ஆனால் படிப்பை படிக்க வேண்டும். தினம்தோறும் சிவபாபாவின் ஆத்மா, ஞானக்கடலாக இருக்கும் அவர்தான் வந்து படிப்பிக்கிறார். கிருஷ்ணரோ தேகதாரி ஆவார். மறுபிறவிகளில் வருபவர். பாபா அஜன்மா (பிறப்பு இறப்பிற்கும் அப்பாற்பட்டவர்) யார் படிக்கப் போவதில்லையோ அவர்கள் கண்டிப்பாக தடைகளை ஏற்படுத்துவார்கள். யக்ஞத்தில் தடைகள் ஏற்படும். அபலைகள் மீது கொடுமைகள் இழைக்கப்படும். அவையனைத்தும் கல்பத்திற்கு முன்பு நடந்தது போல நடந்து கொண்டிருக்கின்றன. அசுரர்கள் எப்படி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர், படங்களை சிதைக்கின்றனர், சில சமயங்களில் நெருப்பு பற்ற வைப்பதற்கும் கூட தாமதிப்பதில்லை. நாம் என்ன செய்வது? உள்ளுக்குள் விதி என புரிந்து கொள்கிறோம், வெளிப்புறத்தில் போலீஸ் முதலானவர்களிடம் முறையிட வேண்டியுள்ளது. கல்பத்திற்கு முன்பு என்ன நடந்ததோ அதுவே நடக்கும் என உள்ளுக்குள் தெரிந்திருக்கிறோம், இதில் துக்கத்தின் விஷயம் எதுவுமில்லை. நஷ்டம் ஏற்பட்டது என்றால், அதனால் எந்த பாதிப்பும் கிடையாது, பிறகு மற்றொன்று தயாராகிவிடும்.

 

கண்காட்சி முதலானவை நடத்தினீர்கள் என்றால் 8 நாட்களுக்கு இன்μங்ரன்ஸ் (காப்பீடு) செய்து கொள்ளுங்கள் என பாபா சொல்லியிருக்கிறார். யாராவது நல்ல மனிதராக இருந்தால் அதற்கு கட்டணம் கூட வாங்க மாட்டார். இன்μங்ரன்ஸ் செய்யாவிட்டாலும் கூட என்ன! பிறகு புதிய நல்ல படங்கள் உருவாகிவிடும். ஒவ்வொரு காலடியிலும் கோடிகள் உள்ளன. உங்களுடைய ஒவ்வொரு காலடியும், ஒவ்வொரு வினாடியும் மிகுந்த மதிப்பு வாய்ந்ததாகும். நீங்கள் கோடிகளின் அதிபதி ஆகிறீர்கள், 21 பிறவிகளுக்காக பாபாவிடமிருந்து ஆஸ்தி எடுக்கிறீர்கள் என்றால் எவ்வளவு நல்ல விதமாக படிக்க வேண்டும்! அங்கே சொர்க்கத்தில் அளவற்ற செல்வம் இருக்கும். எண்ணக் கூடிய விஷயமே இருக்காது. ஆக பாபா எவ்வளவு உங்களை செல்வந்தர்களாக சுகம் மிக்கவர்களாக ஆக்குகிறார். வருமானம் எவ்வளவு உயர்ந்தது. பிரஜை கூட எவ்வளவு செல்வந்தராக ஆகிறார். இது 21 பிறவிகளுக்கான வருமானத்திற்கான வழியாகும். இது மனிதரிலிருந்து தேவதை ஆகக் கூடிய பாடசாலையாகும். யார் படிக்க வைப்பது? தந்தை. பிறகு இப்படிப்பட்ட படிப்பில் தவறு செய்யக் கூடாது. நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. இந்த நன்மை நிறைந்த யுகத்தில் அனைத்து விஷயத்திலும் நன்மை நிறைந்துள்ளது, நமக்கு நன்மையற்றது எதுவும் நடக்காது. ஒவ்வொரு விஷயத்திலும் நன்மையைப் புரிந்து கொண்டு எப்போதும் கவலையற்றவராக இருக்க வேண்டும்.

 

2. சதா ரோஜா மலர்போல ஆவதற்காக படிப்பின் மீது முழுமையிலும் முழுமையான கவனம் கொடுக்க வேண்டும். படிப்பில் தவறு செய்யக்கூடாது. எருக்க மலராகஆகி விடக்கூடாது.

 

வரதானம் :

பிரச்சினைகளை ஏறும் கலைக்கான சாதனமாக அனுபவம் செய்து எப்போதும் திருப்தியாக இருக்கக் கூடிய சக்திசாலி ஆகுக.

 

:சக்திசாலி ஆத்மாக்கள் பிரச்சினைகளை நேரான பாதையைக் கடப்பது போல கடந்து சென்றுவிடுவார்கள். பிரச்னைகள் அவர்களுக்கு ஏறும் கலைக்கான சாதனமாக ஆகி விடுகிறது. அனைத்து பிரச்சினைகளுமே தெரிந்ததாக, புரிந்ததாக அனுபவம் ஆகும். அவர்கள் ஒருபோதும் ஆச்சரியவசப்பட மாட்டார்கள், எப்போதும் திருப்தியாகவே இருப்பார்கள். வாயிலிருந்து ஒரு போதும் காரணத்திற்கான வார்த்தை வெளிப்படாது, ஆனால் அதே நேரத்தில் காரணத்தை நிவாரணமாக மாற்றி விடுவார்கள்.

 

சுலோகன் :

சுய நிலையில் நிலைத்திருந்து அனைத்து சூழ் நிலைகளையும் கடந்து செல்வதுதான் உயர்வான தன்மை (சிரேஷ்ட தன்மை) ஆகும்.

 

***ஓம் சாந்தி***