BK Murli 30 November 2016 Tamil

BK Murli 30 November 2016 Tamil

30.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நான் குழந்தைகளாகிய உங்களுக்காக உள்ளங்கையில் சொர்க்கத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் என்னை நினைவு செய்வீர்களானால் சொர்க்கத்தின் இராஜபதவி கிடைத்து விடும்.கேள்வி :

எல்லையற்ற குஷி எந்தக் குழந்தைகளுக்கு நிரந்தரமாக இருக்க முடியும்?பதில் :

யார் எல்லையற்ற சந்நியாசம் செய்திருக்கின்றனரோ, மற்ற சேர்க்கைகளை விட்டு ஒருவரின் தொடர்பில் இணைந்துள்ளனரோ, அவர்கள் தான் நிரந்தரக் குஷியில் இருக்க முடியும். 2. யார் தந்தையைப் பின்பற்றுகின்றனரோ, யாருக்கு சேவையில் ஆர்வம் உள்ளதோ, அவர்களின் குஷி ஒரு போதும் மறைய (இல்லாமல் போக) முடியாது.பாடல் :

ஆகாய சிம்மாசனத்தை விட்டு இறங்கி வாருங்கள்.....ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். இதை யார் சொன்னார்? தந்தை குழந்தைகளுக்குச் சொன்னார், பாடலைக் கேட்டீர்களா என்று. அதிக துக்கம் எப்போது வருகின்றதோ, அப்போது அழைக்கின்றனர். குழந்தைகள் அறிவார்கள், தந்தை தான் சுகதாமம் அல்லது தூய்மையான உலகத்தைப் படைக்கிறார் அல்லது பகவான்-பகவதியின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார். பகவான் மற்றும் பகவதி சொர்க்கத்திற்கு மகாராஜா, மகாராணியாக இருந்தனர். நீங்கள் பார்க்கிறீர்கள், லட்சுமி- நாராயணர் எவ்வளவு செல்வந்தராக இருந்தனர். எவ்வளவு பெரிய இராஜதானியாக இருந்தது! அவர்களின் இராஜதானியில் எந்த ஒரு கலகம் போன்றவை கிடையாது. தந்தை குழந்தைகளுக்கு போன்ற ஆஸ்தியே அது கொடுக்கிறார் என்றால் எவ்வளவு குஷியில் இருக்க வேண்டும்! ஆனால் நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் இருக்கவே செய்கின்றனர். ஒரு சிலரோ முழுமையாக ஞானத்தைப் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் அங்குள்ள குஷியிலும் இருப்பதில்லை, இங்குள்ள குஷியிலும் இருப்பதில்லை. இரண்டு இடங்களில் இருந்தும் சென்று விட்டனர் என்று அவர்களைச் சொல்வார்கள். ஏனென்றால் த்நதையிடம் ஆஸ்தி பெற்றுக் கொண்டிருந்தும் கீழே விழுந்து விடுகின்றனர். உலகத்தில் இது யாருக்கும் தெரியாது - பகவான் வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். ஏனென்றால் அவர் வருவதே குப்த ரூபத்தில். நிச்சயமாக பகவான் இச்சமயம் இருக்க வேண்டும் எனச் சொல்கின்றனர். ஏனென்றால் அனைவரும் காரிருளில் உள்ளனர். இரவு 12 மணி ஆனால் அது காரிருள் என்று சொல்லப் படுகிறது. இரவில் காரிருள், பகல் ஒளிப்பிரகாசம் இருக்கும். குழந்தைகளுக்குத் தெரியும், இப்போது பக்தி மார்க்கத்தின் இரவு முடிவடைகின்றது. அதில் தான் துக்கத்தின் மேல் துக்கம். பக்திக்குப் பிறகு பகவான் கிடைப்பார் என மனிதர்கள் நினைக்கின்றனர். நீங்கள் அறிவீர்கள், பாபா தான் வந்து நம் அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். குழந்தைகள் உங்களுக்குள்ளும் வரிசைப்படிதான் அவசியம் இருக்கிறீர்கள். சிலருக்கோ குஷியின் அளவு அதிகரித்துள்ளது. முயற்சியும் குஷியாக செய்கின்றனர். யாருக்காவது சென்று புரிய வைக்க வேண்டும் என்று சேவைக்கான ஆர்வம் உள்ளது. அதனால் பாபா கண்காட்சி மேளாவிற்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டே உள்ளார்-மற்றவர்களுக்குப் புரிய வைப்பதால் குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக. இங்கே யாரிடம் செல்வம் உள்ளதோ, அவர்கள் நாம் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனப் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் ஞானத்தைப் பெற்றுக் கொள்வது கஷ்டம். அதனால் பாடப் பட்டுள்ளது - கோடியில் சிலர் தான் இவ்வளவு புத்திசாலி ஆகி தந்தையின் ஆஸ்திக்கு அதிகாரி ஆகின்றனர். தந்தையைப் பின்பற்றுங்கள் எனப் பாடப் பட்டுள்ளது. ஆக தந்தையின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். யார் நல்லபடியாக ஸ்ரீமத் படி நடக்கின்றனரோ, அவர்கள் தந்தையைப் பின்பற்றி நடக்க வேண்டும். எப்படி இந்த குழந்தை (பிரம்மா) நல்லபடியாகச் நடந்துக் கொண்டிருக்கிறது. லௌகிக் குழந்தை அறிவுரைப்படி நடக்கவில்லை என்றால் உன் வழியைப் பார்த்துக் கொள் எனச் சொல்கின்றனர். இராவணனின் வழிப்படி நடப்பவர்கள் மற்றும் இராமரின் வழிப்படி நடப்பவர்கள் சேர்ந்து இருக்க முடியாது.குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பாரதத்தில் தான் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது. இவர்கள் 84 பிறவிகள் எடுத்துப் தூய்மை இழந்துவிட்டனர். அதனால் ஹே ! தூய்மை ஆக்குபவரே வாருங்கள் என அழைக்கின்றனர். இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள், இன்னும் கொஞ்சம் நாட்களே உள்ளன. தெய்வீக இராஜதானி ஸ்தாபனை ஆவதில் நேரம் பிடிக்கிறது. இது குப்தமானது. இதில் சண்டை முதயவற்றின் விஷியம் கிடையாது. படையெடுத்து இராஜ்யத்தை அடைகின்றனர் என்பது கிடையாது. இதுவோ பாபாவே வந்து ராஜாக்களுக்கெல்லாம் மேலான இராஜா ஆக்குகிறார். துக்கத்தைப் போக்கி சுகம் தருபவரே வாருங்கள் என்று அந்தத் தந்தையை நினைவு செய்கின்றனர். சந்நியாசி குருக்கள் துக்கத்தைப் போக்குபவர் ஆக முடியாது. அவர்களின் சந்நியாசம் எல்லைக்குட்பட்டதாகும். உங்களுடையது எல்லையற்றது. இதில் எல்லையற்ற குஷி உள்ளது. இந்த லட்சுமி-நாராயணர் பகவதி-பகவானுக்கும் கூட எல்லையற்ற குஷி உள்ளது இல்லையா? தூய்மையற்ற மனிதர்களோ என்ன தோன்றுகிறதோ, அதைப் பேசி விடுகின்றனர். நீங்களோ ஒவ்வொரு சொல்லையும் அர்த்தத்தோடு பேசுகிறீர்கள். புது உலகத்தில் இருப்பது ஒரே தர்மம். வேறு எதனுடனும் ஒப்பிட்டுப் பேசப் படுவதில்லை. பழைய உலகத்தில் ஒப்பிட்டுப் பேசப் படுகின்றது. பழைய உலகத்தில் என்ன இருக்கும் என்பது புது உலகத்தில் தெரியாது. அங்கே அனைத்தும் மறந்து போகும். இங்கே உங்களுக்கு அனைத்தும் சொல்லப் படுகின்றது-அதாவது புது உலகம் எப்போது ஸ்தாபனை ஆகும்? பழைய உலகம் எப்போது விநாசமாகும்? உங்களுக்கு அனைத்து ஞானமும் உள்ளது. சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்பவராகிய தந்தை இப்போது உங்களுக்குக் கிடைத்து விட்டார். ஆக, அவரிடமிருந்து நல்லபடியாக ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். யார் கல்பத்திற்கு முன் நன்றாகப் புருஷார்த்தம் செய்திருப்பார்களோ, அவர்களுக்குத் தான் ஆஸ்தி கிடைக்கும். அவர்களிலும் தரவரிசையாக உள்ளனர். இது முட்களின் உலகம். முதல் நம்பர் முள்ளோ அனைவருக்குள்ளும் உள்ளது. பழைய உலகம் மோசமானதாகவும், புது உலகம் நல்லதாகவும் உள்ளது.. சொர்க்கம் எனச் சொல்லப் படுவது எது என்பதும் யாருக்கும் தெரியாது. இன்னார் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று சும்மா பேச்சுக்கு சொல்லி விடுகின்றனர். சொர்க்கம் எங்கே உள்ளது, சொர்க்கவாசி ஆவதற்கு?நீங்கள் அறிவீர்கள், சொர்க்கமும் கூட இதே பாரதத்தில் இருந்தது. நரகமும் பாரதத்தில் தான் உள்ளது. இந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அந்த மனிதர்கள் சொல்லி விடுகின்றனர், சொர்க்கமும் நரகமும் இங்கேயே உள்ளது என்று. யாருக்கு அதிக செல்வம் உள்ளதோ, அவர்கள் எண்ணுகிறார்கள் சொர்க்கத்தில் உள்ளனர் என்று. ஆனால் அப்படியெல்லாம் கிடையாது. பாரதம் புதியதாக இருந்த போது சத்யுகம் இருந்தது. அது தான் சொர்க்கம் எனச் சொல்லப்படுகின்றது. இப்போது தூய்மையற்ற உலகமாகிய நரகம் உள்ளது. உலகமோ ஒன்று தான். புது உலகத்தில் லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. பழைய உலகத்தில் இராவணனின் இராஜ்யம் உள்ளது. பகவான் சொல்கிறார், நான் உங்களுக்கு 84 பிறவிகளின் இரகசியத்தைச் சொல்கிறேன். இந்த இராஜயோகத்தினால் உங்களை இராஜாக்களுக்கெல்லாம் மேலான, சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்குகிறேன். ஆக, நரகத்தின் விநாசம் அவசியம் நடந்தாக வேண்டும். சாஸ்திரங்களில் கிருஷ்ணரின் பெயரைப் போட்டு யுத்தம் முதலியவற்றைக் காட்டியுள்ளனர். பாண்டவர்களுக்கு சேனை முதலிய எதுவும் கிடையாது. தற்சமயம் கன்யாக்கள், மாதாக்களின் சேனையை உருவாக்கி அவர்களுக்கு துப்பாக்கி முதயவற்றை இயக்குவதற்குக் கற்றுத் தருகின்றனர். இங்கே உங்கள் கையில் துப்பாக்கி முதலிய எதுவும் கிடையாது. சிவசக்தி சேனை என்பது யார் என்று அவர்களுக்கு என்ன தெரியும்? சிவபாபாவோ ஒரு போதும் இம்சை செய்விக்க மாட்டார். சண்டையின் எந்த ஒரு விஷியமும் கிடையாது. நீங்கள் அறிவீர்கள், சிவபாபாவினுடையது ஆன்மிக சேனை என்று. சிவபாபா நம்மை இரட்டை அகிம்சையாளர்களாக ஆக்குகிறார். அவர்கள் நூறு சதவிகிதம் அகிம்சையாளர் எனச் சொல்லப் படுகிறார்கள். இங்கே இந்த உலகத்தில் இருப்பவர்கள் நூறு சதவிகிதம் இம்சையாளர்கள். ஒரே வெடிகுண்டினால் எவ்வளவு பேரை விநாசம் செய்து விடுகின்றனர்! எல்லையற்ற அமைதியில் இம்சைக்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது! இப்போது நீங்கள் எல்லையற்ற அகிம்சையில் இருக்கிறீர்கள். அந்தப் பக்கம் (உலகில்) எவ்வளவு யுத்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டே இருக்கின்றனவோ, அவ்வளவு சப்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விநாசத்தில் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன! ஸ்தாபனையிலோ எவ்வளவு அமைதியில் அமர்ந்திருக்கிறீர்கள்! இம்சையின் எந்த ஒரு விஷியமும் கிடையாது. உங்களுடையது இப்போது நடைமுறை வாழ்க்கை. பாபாவிடமிருந்து யோகபலத்தின் மூலம் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். தந்தையாகிய அல்லாவை நினைவு செய்வதன் மூலம் சொர்க்கத்தின் இராஜ பதவி கிடைக்கின்றது. இது எவ்வளவு சுலபம்! பாபா எவ்வளவு மிக இனிமையானவராக உள்ளார்! எவ்வளவு தூர தேசத்தில் இருந்து வருகிறார்! எப்படி வெளிநாட்டிலிருந்து யாருடைய தந்தையாவது வந்தால் குழந்தைகள் மிகவும் குஷியடைகின்றனர்! நமக்காகத் தந்தை வெளிநாட்டிலிருந்து நல்ல-நல்ல பொருட்கள் கொண்டு வருவார். இந்த எல்லையற்ற தந்தையோ ஒரே ஒரு முறை வருகிறார். என்ன பரிசு கொண்டு வருகிறார்? பாபா சொல்கிறார், நான் உங்களுக்காக உள்ளங்கையில் சொர்க்கத்தைக் கொண்டு வருகிறேன். எப்படி சொல்கின்றனர், அனுமான் சஞ்சீவி மூலிகையின் மலையைக் கொண்டு வந்தார். இப்போது மலையை ஒன்றும் தூக்க முடியாது. அது போலவே பாபா சொல்கிறார், நான் உள்ளங்கையில் சொர்க்கத்தைக் கொண்டு வருகிறேன். இப்போது சொர்க்கத்தை யாரும் உள்ளங்கையில் எடுப்பதில்லை. இதுவோ புரிந்து கொள்வதற்கான விஷியம். குழந்தைகளோ அறிவார்கள், பாபா நமக்காக நம்பர் ஒன் பரிசு கொண்டு வந்துள்ளார். பாபா சொல்கிறார், பாவன உலகின் எஜமானர் ஆக்குவதற்காக நான் வந்திருக்கிறேன் என்றால் நீங்கள் தூய்மையாக ஆக வேண்டும். இது இராஜயோகம் இல்லையா? பாரதத்தின் புராதன இராஜயோகத்தை கீதையின் பகவான் தான் கற்பித்திருந்தார் மற்றும் இராஜ்யத்தைக் கொடுத்திருந்தார். இப்போது மீண்டும் இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் சொல்கிறீர்கள், நாங்கள் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவராகிய தந்தையின் குழந்தைகள். தந்தை புது உலகத்தை ஸ்தாபனை செய்கிறார் என்றால் நிச்சயமாக யாருக்காவது இராஜ்யம் கிடைத்திருக்கும் இல்லையா? சொர்க்கத்தில் இருப்பவர்களுக்குத் தான் தந்தை கொடுத்திருப்பார் என்பது கிடையாது. மற்றும் அனைவருக்கும் தான் கொடுக்கிறார் இல்லையா? மற்ற அனைவருக்கும் டிராமாவின் அனுசாரம் முக்தியின் பாகம் கிடைத்துள்ளது. அனைவரும் முக்த் (விடுதலை)ஆகி விடுகின்றனர். ஒரு தந்தை மட்டுமே அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், வேறு யாரும் கிடையாது. உங்களிடம் கண்காட்சியில் புகழ் பெற்றவர்கள் யார் வருகின்றனரோ, நிச்சயமாக கீதையின் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அல்ல, சிவன் தான் என்பதை யார் ஏற்றுக் கொள்கின்றனரோ, அவர்களிடம் எழுதி வாங்க வேண்டும். பெரிய மனிதர்கள் சொல்வதைத் தான் கேட்பார்கள். ஏழைகள் சொல்வதையோ யாரும் கேட்பதில்லை. அதனால் கண்காட்சிகளில் முயற்சி செய்து இதை எழுதி வாங்குங்கள் - கீதையின் பகவான் ஒருவரே! அவர் அனைவரின் தந்தை. இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன் பாரதம் சொர்க்கமாக இருந்தது. லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. இப்போதோ முழு உலகின் மீதும் இராவணனின் இராஜ்யம் உள்ளது. இராவணன் தான் அனைவருக்கும் விரோதி. இவரைத் தான் அனைவரும் வருடா வருடம் எரிக்கின்றனர். பிறகும் இறந்து போவதில்லை. இப்போது பாரதத்தின் பெரிய விரோதி இந்த இராவணன். இந்த விஷியத்தை நீங்கள் மட்டுமே அறிந்திருக்கிறீர்கள். இப்போது இராமராகிய பரமபிதா பரமாத்மா, இராவணன் மீது வெற்றி பெறச் செய்கிறார். அவர் சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் உங்கள் பாவங்கள் அழிந்து விடும். நீங்கள் தகுதியுள்ளவர்களாக ஆகி விடுவீர்கள். அப்போது புது உலகம் வேண்டும். நிச்சயமாகப் பழைய உலகத்தின் விநாசமும் நடைபெற்றிருந்தது. இப்போதும் நடைபெறும். எப்போது இராவண இராஜ்யம் விநாசமாகி இராமராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டுமோ, அப்போது மகாபாரத யுத்தம் நடைபெற்றது. இராவண இராஜ்யத்தில் தான் ஐயோ என்ற கூக்குரல் ஆரம்பமாகின்றது. கூக்குரலுக்குப் பிறகு ஜெய-ஜெய என்ற வெற்றி முழக்கம் கேட்கும். உலகம் மாறுகின்றது. எப்படி பழைய வீட்டை இடித்து விட்டுப் புதிய வீடு உருவாக்கப் படுகின்றது. அது போல் இங்கும் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டுள்ளது. வெடிகுண்டுகள் முதலியவற்றை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர். ஏற்பாடுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போது தசரா வந்தது என்றால் இராவணனின் உருவத்தையும் தயார் செய்தனர். உங்களுடையது எல்லையற்ற விஷியம். இவர்கள் என்ன இப்படிச் செய்கிறார்கள் என்று உங்கள் புத்தியில் தோன்றுகிறது. சிரிப்பும் கூட வரும். யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்க முடியும் - இவ்வளவு பெரிய இராவணனோ இருக்க முடியாது. இப்போது பாபா சொல்கிறார், நீங்கள் இராமராஜ்யத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். 5 விகாரங்களின் தானம் கொடுத்து விட்டால் கிரகணம் விட்டுப் போகும். பாபா வந்து புரிய வைக்கிறார், இந்த 5 விகாரங்களின் கிரகணம் முழு உலகின் மீதும் படிந்துள்ளது. முற்றிலும் கருப்பாகி விட்டுள்ளனர். குழந்தைகளாகிய உங்களுக்கோ அளவற்ற குஷி இருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாள் மீதம் உள்ளது.இப்போது நீங்கள் படைப்பவர், இயக்குநர், முக்கிய நடிகர்கள், டிராமாவின் முதல்-இடை-கடை பற்றி அறிந்து கொண்டு விட்டீர்கள். வேறு யாருக்கும் தெரியாது. உங்களுக்கு இப்போது தூய்மையான புத்தி அமைந்துள்ளது. நீங்கள் பாபாவுடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். ஞானம் வருமானத்திற்கு ஆதாரம் எனச் சொல்லப் படுகின்றது. இது ஆன்மிக ஞானம். இதை பாபா தான் தருகிறார். மனிதர்கள் மனிதர்களுக்குக் கொடுக்க முடியாது. உலகத்தில் மனிதர்கள் அனைவரும் மனிதர்களுக்கு ஞானம் கொடுக்கின்றனர். உங்களுக்கோ தந்தையாகிய பரமாத்மா (சுப்ரீம் ஸோல்) வந்து ஞானம் தருகிறார். மற்ற அனைவரும் பக்தி மார்க்கத்தின் கட்டுக்கதைகளைச் சொல்பவர்கள். சத்திய நாராயணனின் கதை, இராமாயணத்தின் கதை......... எது நடந்து முடிந்ததோ, அதில் எதையாவது உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர். இதுவோ படிப்பு. படிப்பில் சரித்திர-பூகோளம் சொல்லப் படுகின்றது. இது உலகத்தின் சரித்திர-பூகோளம் - மிகப்பெரியது. நீங்கள் புரிய வைக்கிறீர்கள், பாபா 5000 ஆண்டுகளுக்கு முன்பும் சொல்லியிருந்தார். அந்த கீதை படிப்பவர்கள் எதையும் புரிந்து கொள்ளவில்லை. யாதவர், கௌரவர், பாண்டவர் என்று சொல்லப் படுபவர் யார்? நீங்கள் நடைமுறையில் பார்க்கிறீர்கள். ஐரோப்பியர்கள் யாதவர்கள் ஏவுகணைகளை வெளிப்படுத்தினர். விநாசம் நடைபெற்றது. விநாசத்திற்குப் பிறகு என்ன நடந்தது? அவர்கள் எதையும் காட்டுவதில்லை. பிரளயம் நடந்ததாக அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நீங்கள் சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று அவர்கள் கேட்கின்றனர். சொல்லுங்கள், நாங்கள் சாஸ்திரங்களை அறிவோம், ஏற்றுக் கொண்டுள்ளோம் - இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவை. ஞானத்தையோ ஒரு தந்தை மட்டுமே சொல்கிறார். அவர் ஞானக்கடலாக இருக்கிறார். இப்போது பக்தி முடிவடைந்து ஞானம் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய உலகத்தின் விநாசம் முன்னால் தயாராக உள்ளது. எதுவும் புதிதல்ல. நமது அன்பு பாபாவோடு உள்ளது. நாம் மற்ற சேர்க்கையை விட்டு ஒரு பாபாவின் தொடர்பில் (துணையில்) இணைந்துள்ளோம். பாபா சொல்கிறார், தன்னை ஆத்மா என உணர்ந்து என்னிடம் நினைவின் தொடர்பு - இது தான் பாரதத்தின் புராதன யோகம் எனச் சொல்லப் படுகின்றது. இதை பாபா மட்டுமே கற்றுத் தருகிறார். கிருஷ்ணரின் ஆத்மாவும் இச்சமயம் கடைசிப் பிறவியில் உள்ளது. இவருக்கு (பிரம்மாவுக்கு) சொல்கிறார், நீ உன்னுடைய ஜென்மங்களைப் பற்றி அறிய மாட்டாய். இது உன்னுடைய அநேக ஜென்மங்களின் கடைசி ஜென்மம் என்று. அதனால் நான் இவருக்குள் பிரவேசமாகி இருக்கிறேன். நான் இவருக்குள் அமர்ந்து குழந்தைகளாகிய உங்களை பிரம்மா முகவம்சாவளி ஆக்கி இராஜ்ய பாக்கியத்தைத் தருகிறேன். பாபாவைத் தவிர வேறு யாராலும் ஆக்க முடியாது. பாபாவோ தாமே இவருடைய வாயின் மூலம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த (பிரம்மா) பாபாவும் கூட முதலில் எதையும் அறிந்து கொள்ளாமல் இருந்தார். நீங்களும் கூட எதையும் அறியாதிலிருந்தீர்கள். பாரதவாசிகளுக்குத் தான் புரிய வைக்க வேண்டும். 84 பிறவிகளின் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது? இது அதே யுத்தம் ஏற்பட தயாராக உள்ளது. இதன் மூலம் சொர்க்கத்தின் கேட் திறக்கும். அந்தச் சமயத்தில் தான் பாபா வந்து இராஜயோகம் கற்பித்து மனிதர்களை தேவதையாக ஆக்கியிருந்தார். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்குஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) யார் நல்லபடியாக ஸ்ரீமத் படி நடக்கின்றனரோ, அவர்களைப் பின்பற்ற வேண்டும். எல்லையற்ற குஷியில் இருப்பதற்காக தன்னைப் போல் மற்றவர்களைஆக்குகிற சேவை செய்ய வேண்டும்.2) அன்பான புத்தி உள்ளவராகி மற்ற சேர்க்கைகளை விட்டு ஒரு தந்தையோடு இணைந்திருக்க வேண்டும். இரட்டை அகிம்சையாளர் ஆகி அமைதியில் இருந்து தனது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய வேண்டும்.வரதானம் :

ஆன்மிகத்தின் நறுமணத்தின் ஆதாரத்தில் அனைவருக்கும் பரமாத்மாவினுடைய செய்தியைக் கொடுக்கக் கூடிய விஷ்வ கல்யாண்காரி ஆகுக.ஆன்மிகத்தின் சர்வசக்திகளைத் தனக்குள் தாரணை செய்து கொள்வீர்களானால் ஆன்மிகத்தின் நறுமணம் சுலபமாகவே அநேக ஆத்மாக்களைத் தன் பக்கம் கவர்ந்திழுக்கும். எப்படி மனதின் சக்தி மூலம் இயற்கையைத் தமோபிரதானத்திருந்து சதோபிரதானமாக ஆக்குகிறீர்களோ, அது போல் உலகத்தின் மற்ற ஆத்மாக்கள், உங்கள் முன் வர முடியாதவர்களுக்கும் தூரத்தில் இருந்தவாறே கூட நீங்கள் ஆன்மிகத்தின் சக்தி மூலம் பாபாவின் அறிமுகம் அல்லது முக்கிய செய்தியைக் கொடுக்க முடியும். இந்த சூட்சும மெஷினரியை (இயக்கத்தை) வேகப்படுத்தும் போது தவித்துக் கொண்டிருக்கும் அநேக ஆத்மாக்களுக்கு அஞ்சலி கிடைக்கும். மேலும் நீங்கள் விஷ்வ கல்யாண்காரி எனச் சொல்லப் படுவீர்கள்.சுலோகன் :

தன்னிடம் உள்ள சுத்த மற்றும் உயர்வான எண்ணங்களை வெளிப்பட வைப்பீர்களானால் வீணானவை தாமாகவே உள்ளடங்கிப் போகும்.
***OM SHANTI***