BK Murli 4 November 2016 Tamil


BK Murli 4 November 2016 Tamil


04.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்இனிமையான குழந்தைகளே! இந்த இலட்சியம் மிகவும் உயர்ந்தது, ஆகையால் தனது நேரத்தை வீணாக்காமல் சதோ பிரதானம் ஆவதற்கான முயற்சி செய்யுங்கள்.


கேள்வி:

குழந்தைகளுக்கு முன்னேறும் கலை ஏற்படாததற்கு முக்கிய காரணம் என்ன?


பதில்:

போகப் போக சிறிது அகங்காரம் வந்தாலோ, தன்னை புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு முரளி தவற விடுவது, பிரம்மா பாபாவை அவமதித்தால் ஒருபோதும் முன்னேறும் கலை ஏற்படாது. சாகார உள்ளத்திலிருந்து இறங்கி விட்டீர்கள் எனில் நிராகாரமானவரின் உள்ளத்திலிருந்தும் இறங்கி விடுவீர்கள்.


பாட்டு:

இலட்சம் ஆண்டுகளுடைய .........


ஓம்சாந்தி.

குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். யாராவது நமக்கு சந்தேகம் ஏற்படுத்துவதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும், நாம் சந்தேகப்படமாட்டோம் என்று குழந்தைகள் கூறுகிறீர்கள். எவ்வளவு தான் தவறான, தலைகீழான விசயங்கள் கூறினாலும் நாம் சந்தேக புத்தியுடையவர்களாக ஆகமாட்டோம். ஸ்ரீமத் படி நடந்து கொண்டே இருப்போம். தந்தை தினம் தினம் வித விதமான கருத்துகளை புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். சத்யுகத்தில் 9 லட்சம் பேர் இருந்தனர். ஆக கண்டிப்பாக இவ்வளவு மனிதர்கள் அனைவரும் விநாசமாகி விடுவர். ஆக இந்த யுத்தத்தின் மூலம் தான் பல தர்மங்கள் அழிந்து ஒரு தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆக வேண்டும் என்பதை புத்திசாலிகளாக இருப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். யார் தகுதியானவர்களாக ஆவார்களோ அவர்களே மனிதனிலிருந்து தேவதைகளாக ஆவார்கள். தந்தையைத் தவிர யாரும் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆக்க முடியாது. ஆக இப்போது நாம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது குழந்தைகளுக்கு நினைவு இருக்க வேண்டும். ஆனால் மாயை அடிக்கடி மறக்க வைத்து விடுகிறது. இங்கேயே பாபாவை நினைவு செய்த சதோபிரதானமாக ஆக வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் யுத்தம் பெரியதாகி விடக் கூடும், நியமம் எதுவும் கிடையாது. முடிவு ஏற்படாத அளவிற்கு யுத்தம் ஏற்பட்டு விடலாம் என்றும் கூறுகின்றார். அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வர். ஆக விநாசத்திற்கு முன்பாகவே ஏன் நாம் நினைவிலிருந்து தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆவதற்கான முயற்சி செய்யக் கூடாது! நினைவு யாத்திரையில் தான் மாயை தடை போடுகிறது. அதனால் தான் பாபா தினம் தினம் கூறுகிறார் - சார்ட் வையுங்கள். 2 - 4 பேர் மட்டுமே எழுதுகின்றனர். மற்ற அனைவரும் தங்களது தொழில் போன்றவைகளிலேயே முழு நாளிலும் இருக்கின்றனர். பல வகையான தடைகளுடன் இருக்கின்றனர். நாம் அவசியம் சதோபிரதானமாக ஆக வேண்டும் என்பது குழந்தைகளுக்கு தெரியும். ஆக எங்கு இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும். மனிதர்களுக்குப் புரிய வைப்பதற்காக சித்திரம் போன்றவைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனெனில் இந்த நேரத்தில் மனிதர்கள் 100 சதவிகிதம் தமோபிரதானமாக இருக்கின்றனர். முதலில் முக்திதாமத்திலிருந்து வந்த போது சதோபிரதானமாக இருந்தனர். பிறகு சதோ, ரஜோ, தமோவில் வந்து வந்து இந்த நேரத்தில் அனைவரும் தமோபிரதானமாக ஆகிவிட்டனர். அனைவரும் தந்தையை நினைவு செய்தால் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகிவிடுவீர்கள் என்ற பாபாவின் செய்தியைக் கூற வேண்டும். விநாசமும் எதிரில் இருக்கிறது. சத்யுகத்தில் ஒரே ஒரு தர்மம் மட்டுமே இருந்தது, மற்ற அனைவரும் நிர்வாண்தாமத்தில் இருந்தனர். குழந்தைகள் சித்திரங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். பெரிய சித்திரமாக இருக்கும் போது நன்றாக புரிந்து கொள்ள முடியும். அனைவருக்கும் பாபாவின் செய்தியைக் கொடுக்க வேண்டும். மன்மனாபவ என்ற வார்த்தை முக்கியமானது அதாவது தந்தை மற்றும் ஆஸ்தியைப் பற்றி புரிய வைப்பதற்கு எவ்வளவு உழைப்பு செய்ய வேண்டியிருக்கிறது! புரிய வைப்பவர்களும் வரிசைக்கிரமமாக இருக்கின்றனர். எல்லையற்ற தந்தையின் மீது அன்பு இருக்க வேண்டும். நான் பாபாவின் சேவை செய்து கொண்டிருக்கிறேன் என்பது புத்தியில் இருக்க வேண்டும். அல்லாவின் உதவியாளர்களாக ஆக வேண்டும். அவர்கள் இந்த வார்த்தையைக் கூறலாம், ஆனால் பொருள் புரிந்து கொள்வது கிடையாது. குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக இப்போது பாபா வந்திருக்கின்றார். எவ்வளவு உத்தமமான தேவி தேவதைகளாக ஆக்குகின்றார்! இன்று நாம் எவ்வளவு ஏழைகளாக ஆகிவிட்டோம்! சத்யுகத்தில் சர்வ குணங்கள் நிறைந்தவர்களாக ஆகிவிடுவோம், இங்கு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். விநாசம் ஆகிவிடும் என்பது யாருக்கும் தெரியவில்லை. அமைதி ஏற்பட்டு விடும் என்று நினைக்கின்றனர், முற்றிலும் காரிருளில் இருக்கின்றனர். இப்போது அவர்களுக்குப் புரிய வைப்பவர்கள் தேவை. அயல்நாடுகளிலும் இந்த ஞானம் கொடுக்க முடியும். மகாபாரத யுத்தம் மிகவும் பிரபலமானது, இதன் மூலம் பழைய உலகம் விநாசம் ஆகியே தீரும் என்ற ஒரு விசயத்தை சபையில் அமர்ந்து புரிய வையுங்கள். இப்போது இறை தந்தையும் இங்கிருக்கின்றார், அவரே அவசியம் பிரம்மாவின் மூலம் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார். சங்கர் மூலம் கலியுகமும் விநாசம் ஆக வேண்டும். ஏனெனில் இப்போது சங்கமமாகும். இயற்கை சீற்றங்களும் ஏற்பட இருக்கிறது. மூன்றாவது உலக யுத்தம் தான் கடைசி யுத்தம் என்று கூறப்படுகிறது. இறுதி விநாசமும் அவசியம் ஏற்பட வேண்டும். எல்லையற்ற தந்தையை நினைவு செய்தால் முக்திதாமத்திற்குச் சென்று விடுவீர்கள் என்பதை இப்போது அனைவருக்கும் கூற வேண்டும். அவர்களது தர்மத்திலேயே இருக்கட்டும், இருந்தாலும் பாபாவை நினைவு செய்வதன் மூலம் தனது தர்மத்தில் உயர்ந்த பதவி அடைய முடியும்.


எல்லையற்ற தந்தை பிரஜாபிதா பிரம்மாவின் உடல் மூலம் நமக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள், பிறகு மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். வீட்டிலிருந்து தான் தர்மம் ஆரம்பமாக வேண்டும். அருகில் உள்ளவர்கள் அனைவருக்கும் செய்தி கொடுக்க வேண்டும். மற்ற தர்மத்தினர்களுக்கும் பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். வெளியில் உள்ளவர்களுக்கு, அரசர்களுக்கு ஞானம் கொடுக்க வேண்டும். அதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். முக்கிய சித்திரங்களாகிய திரிமூர்த்தி, சக்கரம், மரம் போன்றவைகளை துணிகளில் அச்சடித்து வெளியிலும் கொண்டு செல்ல முடியும் என்று பாபா கூறுகின்றார். பெரிய அளவில் அச்சடிக்க முடியவில்லையெனில் இரண்டாக பிரித்து விடுங்கள். முழு ஞானமும் இந்த திரிமூர்த்தி, மரம், சக்கரத்தில் இருக்கிறது. ஏணியின் ஞானமும் சக்கரத்தில் வந்து விடுகிறது. 84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம்? என்று விளக்கமாக ஏணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தில் அனைத்து தர்மத்தினர்களும் வந்து விடுகின்றனர். சதோபிரதானத்திலிருந்து சதோ, ரஜோ, தமோவில் எப்படி வருகிறோம்? எப்படி கீழே இறங்குகிறோம்? என்பது ஏணியில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று இப்போது பாபா கூறுகின்றார். பாபாவிற்கு முழு நாளும் சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கிறது. யாராவது பெரிய, புது கட்டடம் கட்டுகிறார்கள் எனில் அந்த சுவற்றில் 6 க்கு 9 என்ற அளவில் சித்திரம் உருவாக்க வேண்டும். 12 அடிக்கான சுவர் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் மொழிகளும் அதிகமாக இருக்கிறது. அனைத்து தர்மத்தினர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் எனில் எத்தனை மொழிகளில் உருவாக்க வேண்டும்! அந்த அளவிற்கு விசால புத்தியுடன் யுக்தி உருவாக்க வேண்டும். சேவையில் ஆர்வம் இருக்க வேண்டும். செலவு செய்தே ஆக வேண்டும். மற்றபடி நீங்கள் யாசிக்க வேண்டிய அவசியம் கிடையாது. தானாகவே உண்டியல் நிறைந்து விடும். நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. குழந்தைகளின் புத்தி வேலை செய்ய வேண்டும். ஆனால் குழந்தைகள் சிறிது செய்ததும் நான் மிகுந்த புத்திசாலி என்ற போதை ஏறி விடுகிறது. ஒரு ரூபாயில் 4 அனா அளவிற்குக் கூட கற்றுக் கொள்ளவில்லை என்று பாபா கூறுகின்றார். சிலர் இரண்டு அனா, சிலர் ஒரு அனா, சிலர் ஒரு பைசா அளவிற்குக் கூட கற்றுக் கொள்ளவில்லை. எதையும் புரிந்து கொள்வதே கிடையாது. முரளி படிப்பதிலும் ஆர்வம் கிடையாது. செல்வந்த பிரஜை, ஏழை பிரஜை அனைவரும் இங்கேயே உருவாக வேண்டும். சிலர் தந்தையிடம் உறுதிமொழி செய்து பிறகு முகத்தை கருப்பாக்கிக் கொள்கின்றனர். பாபா, தோல்வியடைந்து விட்டேன் என்று கூறுகின்றனர். நீங்கள் காலாட்படையிலும் மெதுவாக செல்பவர்கள், ஒரு பைசாவிற்கும் உதவாதவர்கள் என்ற தந்தை கூறுகின்றார். இப்படிப்பட்டவர்கள் என்ன பதவி அடைவார்கள்? இப்போது சூரியவம்சி இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. யாருக்கு பாபாவின் நினைவு இருக்கிறதோ அவர்களே குஷியாக இருப்பர். தந்தையின் மூலம் என்ன ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவு இருந்தாலே அதிக நன்மை ஏற்படும். தாரணை செய்து பிறகு தனக்குச் சமமாக ஆக்க வேண்டும். குழந்தைகள் சேவை செய்வது கிடையாது. சிறிது சேவை செய்ததும் நான் தேர்ச்சி அடைந்து விட்டேன் என்ற நினைக்கின்றனர். தேக அபிமானத்தில் வந்து விழுந்து விடுகின்றனர். ஒருவேளை பிரம்மா பாபாவிற்கு மரியாதை செலுத்தவில்லையெனில் எனக்கும் மரியாதை செலுத்தவில்லை என்று சிவபாபா கூறுகின்றார். பாப்தாதா இருவரும் சேர்ந்து இருக்கின்றனர் அல்லவா! எனக்கு சிவபாபாவிடம் தொடர்பு இருக்கிறது என்று இருக்கக் கூடாது, அரே, ஆஸ்தி இவர் மூலம் தான் கிடைக்கும் அல்லவா! இவரிடத்தில் மனதில் உள்ள விசயங்களைக் கூற வேண்டும். ஆலோசனை பெற வேண்டும். நான் சாகாரத்தின் மூலம் தான் ஆலோசனை கூறுவேன் என்று சிவபாபா கூறுகின்றார். பிரம்மா இன்றி சிவபாபாவின் ஆஸ்தியை எப்படி அடைவீர்கள்? தந்தையின்றி எந்த காரியமும் செய்ய முடியாது. ஆகையால் குழந்தைகள் மிக மிக கவனமுடன் இருக்க வேண்டும். தலைகீழான அகங்காரத்தில் வந்து தன்னையே கெடுத்துக் கொள்கின்றனர். சாகாரத்தின் (பிரம்மா) உள்ளத்திலிருந்து இறங்கி விட்டால் நிராகார (சிவபாபா) உள்ளத்திலிருந்தும் இறங்கி விடுகிறீர்கள். பலர் முரளியும் கேட்பது கிடையாது, கடிதமும் எழுதுவது கிடையாது. தந்தை என்ன நினைப்பார்? இலட்சியம் மிக உயர்ந்தது. குழந்தைகள் நேரத்தை வீணாக்கக் கூடாது. யார் தன்னை மகாரதி என்று நினைக்கிறார்களோ அவர்கள் உயர்ந்த காரியத்தில் உதவி செய்ய வேண்டும். ஆக குஷியடைந்து உதவி செய்ய வேண்டும், இதன் மூலம் பலருக்கு நன்மை ஏற்படும். கண்காட்சிகளில் பலர் வருகின்றனர். பிரஜைகள் உருவாகின்றனர். பாபாவிற்கு சேவாதாரிகளின் மீது பார்வை இருக்கிறது. சூரியவம்சி ராஜா ராணி ஆகக் கூடியவர்கள் இந்த இந்திர சபைக்கு வர வேண்டும். யார் சேவை செய்யவில்லையோ அவர்கள் தகுதியற்றவர்கள் ஆவர். யார், என்ன ஆவார்கள்? என்பது நாட்கள் செல்ல செல்ல தெரிந்து விடும். நாம் நாளை சொர்க்கத்திற்குச் சென்று இராஜகுமாரர்களாக ஆவோம் என்ற போதை குழந்தைகளுக்கு அதிகம் இருக்க வேண்டும். இங்கு நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். நல்ல முறையில் கற்றுக்கொள்ளவில்லையெனில் பதவி குறைந்து விடும். பாபாவிடம் சேவைச் செய்திகள் வர வேண்டும். பாபா இன்று நான் இந்த சேவை செய்தேன். கடிதம் எழுதவில்லையெனில் பாபா என்ன நினைப்பார்? இறந்து விட்டார். யார் சேவை செய்கிறார்களோ அவர்கள் தான் பாபாவின் நினைவில் வருகின்றனர். தந்தையின் அறிமுகம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். சிவபாபா பிரம்மாவின் மூலம் பிரம்மா குமார், குமாரிகளுக்கு ஆஸ்தி கொடுக்கின்றார். சிவபாபா பிரம்மாவின் மூலம் பிராமணர்களை படைக்கின்றார். இப்போது மற்ற அனைத்து தர்மங்கள் உள்ளன, மற்றபடி அஸ்திவாரமாக இருக்கக் கூடிய தேவி தேவதா தர்மம் மறைந்து விட்டது. இந்த விளையாட்டுக்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏணிப்படியில் அனைத்து தர்மங்களும் கிடையாது. இதன் காரணத்தினால் சக்கரத்தில் புரிய வைக்க வேண்டும், சக்கரத்தில் தெளிவாக இருக்கிறது. சத்யுகத்தில் தேவி தேவதைகள் இரட்டை கிரீடதாரிகளாக இருந்தனர் என்பதையும் புரிய வைக்க வேண்டும். இந்த நேரத்தில் தூய்மையின் கிரீடம் யாரிடத்திலும் கிடையாது. ஒளிக் கிரீடம் நாம் கொடுக்கும் அளவிற்கு ஒருவரும் கிடையாது. தனக்கும் கொடுத்துக் கொள்ள முடியாது. ஒளிக்காக நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இங்கு சரீரம் தூய்மையாகக் கிடையாது. ஆத்மா யோக பலத்தின் மூலம் தூய்மையாகி ஆகி கடைசியில் முழுமையாக தூய்மையாக ஆகிவிடும். கிரீடம் சத்யுகத்தில் தான் கிடைக்கும். சத்யுகத்தில் இரண்டு கிரீடம், பக்தி மார்க்கத்தில் ஒற்றை கிரீடம். இங்கு எந்த கிரீடமும் கிடையாது. இப்போது உங்களுக்கு மட்டும் தூய்மை கிரீடத்தை எப்படி காண்பிப்பது? ஒளியை எங்கு காண்பிப்பது? ஞானிகளாக ஆகிவிட்டீர்கள், ஆனால் எப்போது முழு தூய்மையாக ஆவீர்களோ அப்போது தான் ஒளியைக் காண்பிக்க வேண்டும். ஆக சூட்சும வதனத்தில் ஒளியைக் காண்பிக்கலாமா? எவ்வாறு மம்மா சூட்சும வதனத்தில் தூய ஃபரிஸ்தாவாக இருக்கிறார் அல்லவா! அங்கு ஒற்றைக் கிரீடம் இருக்கிறது. ஆனால் இப்போது ஒளியை எப்படி காண்பிப்பது? கடைசியில் தான் ஒளி ஏற்படும். யோகாவில் அமரும் போது ஒளி காண்பிக்கலாமா? இன்று ஒளி காண்பித்து விட்டு பிறகு தூய்மை இழந்துவிட்டால் ஒளி மறைந்து விடுகிறது. ஆகையால் கடைசியில் கர்மாதீத நிலை ஏற்படும் போது தான் ஒளியைக் காண்பிக்க முடியும். ஆனால் நாம் சம்பூர்ணம் ஆனதும் சூட்சும வதனத்திற்குச் சென்று விடுவோம். எவ்வாறு புத்தர், கிறிஸ்துவை காண்பிக்கின்றனர்! முதன் முதலில் தூய்மையான ஆத்மா தர்ம ஸ்தாபனைக்காக வருகிறது, அவர்களுக்கு ஒளியைக் கொடுக்க முடியும், கிரீடம் கொடுக்க முடியாது. நீங்களும் பாபாவை நினைவு செய்து செய்து தூய்மையாக ஆகிவிடுவீர்கள். சுயதரிசன சக்கரத்தை சுற்றி சுற்றி நீங்கள் இராஜ்ய பதவி அடைவீர்கள். அங்கு அமைச்சர்கள் இருக்கமாட்டார்கள். இங்கு பலரிடத்தில் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கிறது. அங்கு அனைவரும் சதோபிரதானமாக இருப்பார்கள். இவை அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். நல்லது.


இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.


தாரணைக்கான முக்கிய சாரம்:

1) பாப்தாதாவின் உதவி அடைவதற்காக தந்தையின் உயர்ந்த காரியத்தில் முழுமையிலும் முழுமையான உதவியாளர்களாக ஆக வேண்டும். பாபாவிற்கு தனது சேவைச் செய்திகளைக் கொடுக்க வேண்டும்.


2) தேக அபிமானத்தில் வந்து ஒருபோதும் அவமரியாதை செய்யக் கூடாது. தலைகீழான போதையில் வரக் கூடாது. தனது நேரத்தை வீணாக்கக் கூடாது. சேவைக்கான யுக்திகளை உருவாக்க வேண்டும், சேவாதாரிகளாக ஆக வேண்டும்.


வரதானம்:

திரிகாலதர்சி ஸ்திதியில் நிலைத்திருந்து சதா ஆடாத மற்றும் சாட்சியாக இருக்கக் கூடிய நம்பர் ஒன் அதிர்ஷ்டசாலி ஆகுக !


திரிகாலதர்சி ஸ்திதியில் நிலைத்திருந்து ஒவ்வொரு சங்கல்பம் மற்றும் ஒவ்வொரு காரியமும் செய்யுங்கள், மேலும் ஒவ்வொரு விசயத்தையும் பார்க்கின்ற போது ஏன், எதற்கு என்ற கேள்விகள் வராது, சதா முற்றுப் புள்ளி. எதுவும் புதிதல்ல. ஒவ்வொரு ஆத்மாவின் பாகத்தையும் நன்றாக அறிந்து கொண்டு பாகத்தை ஏற்று நடியுங்கள். ஆத்மாக்களின் சம்மந்தம் மற்றும் தொடர்பில் வந்தாலும் விடுபட்டவர் மற்றும் அன்பானவர் என்பதில் சமநிலையுடன் இருந்தால் குழப்பங்கள் தீர்ந்து விடும். எனவே இவ்வாறு சதா ஆடாத மற்றும் சாட்சி நிலையுடன் இருப்பது தான் நம்பர் ஒன் அதிர்ஷ்டசாலி ஆத்மாவின் அடையாளமாகும்.


சுலோகன்:

சகிப்புத்தன்மை குணத்தை தாரணை செய்தால் கடுமையான சம்ஸ்காரமும் குளிர்ச்சியாகி விடும்.


***ஒம்சாந்தி***