BK Murli 7 November 2016 Tamil

BK Murli 7 November 2016 Tamil

07.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்இனிமையான குழந்தைகளே! அனைவருக்கும் ஒரு பாபாவின் அறிமுகத்தைக் கொடுங்கள். ஒரு பாபாவிடம் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளுங்கள். பாபாவிற்கு தன்னுடைய உண்மையான கணக்கு வழக்கை ஒப்படையுங்கள்.

 

கேள்வி :

இன்னும் கூட குழந்தைகளிடம் பல தவறுகள் நடக்கிறது. அதற்கு காரணம் என்ன?

 

பதில்:

யோகத்தில் மிகவும் அரை குறையாக இருப்பதே முக்கிய காரணமாகும். பாபாவின் நினைவில் இருந்தால் ஒரு போதும் எந்த ஒரு தவறான வேலையும் நடக்காது. பெயர் ரூபத்தில் மாட்டிக் கொண்டால் யோகா செய்ய முடியாது. நீங்கள் அழுக்கானவரிலிருந்து தூய்மையாவதற்கான ஆர்வத்தில் இருங்கள். நிரந்தரமாக சிவபாபாவின் நினைவில் இருங்கள். உங்களுக்குள் உலகீய அன்பு இருக்கக் கூடாது.

 

பாடல் :

விட்டில் பூச்சிகள் ஏன் எரிவதில்லை.....

 

ஓம் சாந்தி.

இது பக்தி மார்க்கத்தின் பாட்டு பாடப்பட்டிருக்கிறது. கடைசியில் இது அனைத்தும் நின்று விடும். இதற்கு அவசியம் ஏற்படாது. ஒரு நொடியில் அப்பாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என பாடப்பட்டிருக்கிறது. எல்லையற்ற தந்தையிடமிருந்து ஜீவன் முக்தியின் ஆஸ்தி கிடைக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். ஜீவன் முக்தி என்றால் இந்த துக்க உலகத்திலிருந்து விடுபட்டு கீழான நிலையிலிருந்து விடுபடுதல் ஆகும். பிறகு எப்படி மாறுவீர்கள்? அதற்காக குறிக்கோளை மிகவும் நன்றாகப் புரிய வைக்க வேண்டும். பாபா இரவு கூட யார் வந்தாலும் முதலில் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் அறிமுகத்தைக் கொடுங்கள் என புரிய வைத்தார். இவ்விடத்தின் குறிக்கோள் என்ன என கேட்கிறார்கள். எனவே முதன் முதலில் எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும். என்னை நினைவு செய்தால் நீங்கள் தூய்மையாகி விடுவீர்கள் என இப்போது அவர் கூறுகின்றார். பதீத பாவனா வாருங்கள் என பாடுகிறார்கள். எனவே பாபாவிற்கு நிச்சயம் அத்தாரிட்டி இருக்கும் அல்லவா? ஏதாவது பாகம் கிடைத்திருக்கும் அல்லவா? உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை என அவரைக் கூறுகிறார்கள். அவர் பாரதத்தில் தான் வருகிறார். பாரதத்தில் தான் வந்து உயர்ந்ததிலும் உயர்ந்ததாக மாற்றுகிறார். வைகுண்டத்தின் பரிசை எடுத்து வருகிறார். மனித சிருஷ்டியில் உயர்ந்ததிலும் உயர்ந்த தேவி தேவதைகள், சூரிய வம்ச குலத்தினரே சத்யுத்தில் ராஜ்ஜியம் செய்தனர். சத்யுகத்தினை ஸ்தாபனை செய்யக் கூடியவர் பகவான் ஆவார். அவரைத் தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர், சொர்க்கத்தின் இறை தந்தை என கூறுகிறார்கள். அவர் தந்தையாக இருக்கிறார். தந்தை சர்வ வியாபி என்று ஒரு போதும் கூற முடியாது. சர்வ வியாபி என்று கூறுவதால் பாபாவின் சொத்து கிடைக்காது போய் விடுகிறது. அப்பா என்றாலே ஆஸ்தி ! எவ்வளவு இனிமையான விஷயமிது ! நிச்சயமாக தன்னுடைய குழந்தைகளுக்குத் தான் ஆஸ்தியை அளிப்பார். அனைத்து குழந்தைகளுக்கும் தந்தை ஒருவரே ஆவார். அவர் வந்து சுகம் சாந்தியின் ஆஸ்தியினை அளிக்கிறார். இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். மற்ற ஆத்மாக்கள் அனைவரும் கணக்கு வழக்கை முடித்து விட்டு திரும்பிப் போய் விடுவார்கள். இப்போது பழைய உலகம் முடியப்போகிறது. அதற்காகத்தான் இந்த மகாபாரத போர் ! பல தர்மங்களின் அழிவு, ஒரு தர்மத்தின் ஸ்தாபனை நடக்க வேண்டும். நிச்சயமாக கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும் என புத்தி கூறுகிறது. தேவி தேவதைகளின் வரலாறு ரிபீட். பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறார் என பாடப்பட்டிருக்கிறது உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடைய வைக்கின்றார்.

 

குழந்தைகளே ! இந்த கடைசி பிறவியில் தூய்மையாகுங்கள், என பாபா கூறுகிறார். இப்போது மரண உலகம் ஒழிக ஆகி அமர உலகம் வாழ்க என்றாக வேண்டும். நீங்கள் அனைவரும் பார்வதிகள், அமர கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் இருவரும் அமரர் ஆவீர்கள் அல்லவா ! இதற்கு அமர கதை என்றாலும் சரி, மூன்றாவது கண் கிடைத்த கதை என்றாலும் சரி. பெரும்பாலும் தாய்மார்கள் தான் கதையைக் கேட்கிறார்கள். அமரபுரியில் ஆண்கள் இருக்க மாட்டார்களா? இருவரும் இருப்பார்கள். பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன? மேலும் பாபா என்ன கூறுகின்றார். இதை பாபா தான் புரிய வைக்கிறார். பக்தியின் பலனை அளிக்க பகவான் வருகிறார் என்றும் கூறுகிறார்கள். உண்மையில் சத்யுகத்தில் இந்த தேவி தேவதைகள் தான் உலகத்தை ஆட்சி செய்தனர். இவர்களுக்கு யார் பலனை அளித்தார். எந்த ஒரு சாது சன்னியாசியும் அளிக்க முடியாது. பக்தியும் அனைவரும் ஒன்று போல செய்வதில்லை என அறிகிறீர்கள். யார் நிறைய பக்தி செய்வார்களோ அவர்களுக்கு பலனும் கூட நிச்சயம் இவ்வாறு தான் கிடைக்கும். யார் பூஜைக்குரியவர்களாக இருந்தனரோ அவர்களே பூஜாரி ஆகி, மீண்டும் பூஜைக்குரியவர் ஆவார்கள். பக்தியின் பலன் கிடைக்கும் அல்லவா? இந்த விஷயங்கள்அனைத்தையும் கூட புரிய வைக்க வேண்டும். முதன் முதலில் திரிமூர்த்தியைப் பற்றி புரிய வைக்க வேண்டும். முதலில் ஏணிப்படத்தைப் பற்றி புரிய வைக்கக் கூடாது. இது விரிவான விஷயம் ஆகும். முதன் முதலில் தந்தையைப் பற்றிய அறிமுகத்தை வழங்க வேண்டும். அவரே உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். பிறகே பிரம்மா, விஷ்ணு, சங்கர். அதன் பிறகு லஷ்மி நாராயணன் மற்றபடி பக்தி மார்க்கத்தில் நிறைய சித்திரங்கள் உள்ளன. முதன் முதலில் எல்லையற்ற தந்தையிட மிருந்து எல்லையற்ற ஆஸ்தியை அடைகின்றோம் என்பதைக் கூறுங்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான், ஆஸ்தியும் உயர்ந்ததிலும் உயர்ந்ததாக கொடுக்கிறார். பாரதத்தில் தான் சிவஜெயந்தி கூட கொண்டாடப்படுகிறது. நிச்சயமாக சொர்க்கத்தின் இறை தந்தை வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருப்பார். பாபா தான் சொர்க்கத்தை உருவாக்குகிறார். 5000 வருடங்களுக்குப் பிறகு அது நரகமாகிறது. இராமரும் வர வேண்டியிருக்கிறது, சரியான நேரத்தில் இராவணனும் வர வேண்டியிருக்கிறது. இராமர் சொத்தை அளிக்கிறார், இராவணன் சாபம் அளிக்கிறான். ஞானம் என்றால் பகல், முழுமை அடைந்து இரவு, தோன்றுகிறது. பகலில் சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர். இந்த விஷயங்களை சுருக்கமாகப் புரிய வைப்பது எளிதாகும். முதன் முதலில் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை யின் அறிமுகத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதுவே முக்கியமான விஷயமாகும். சத்யுகத்தில் தேவி தேவதை களின் வம்சம் இருந்தது. சதோபிரதானமாக இருந்தார்கள். பிறகு சதோ, ரஜோ, தமோவில் வந்தனர். இதுவே சக்கரம் ஆகும். ஒரே பொருள் நிலையாக இருக்க முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையை நினைக்க வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் நினைவிருக்க வேண்டும். இந்த நினைவில் மிகவும் காயாக இருக்கின்றனர். நினைவு தான் அடிக்கடி மறந்து விடுகிறது. ஏனென்றால், இவருக்கு மிகவும் கவலை இருக்கிறது என்று பாபாவும் தனது அனுபவத்தைத் தெரிவிக்கிறார். யாருடைய தலையில் நிறைய விஷயங்கள் நிறைந்திருக்குமோ அவர்கள் எப்படி நினைவில் இருக்க முடியும் என்று கூறப்படுகின்றது. பாபாவிற்கு முழு நாளும் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது. எத்தனை விஷயங்கள் எதிரில் வருகிறது. பாபாவிற்கு காலையில் எழுந்து அமர்தலில் ஆனந்தம் ஏற்படுகிறது. அந்த போதையும் இருக்கிறது. அவ்வளவு தான் இந்த ஸ்தாபனை நடந்த பிறகு நான் விஷ்வத்திற்கு மகாராஜாவாக மீண்டும் மாறுவேன். முதன் முதலில் முக்கியமானது பாபாவின் அறிமுகத்தை வழங்குவது என்று பாபா தனது அனுபவத்தைத் தெரிவிக்கின்றார். வேறு எந்த விஷயங்களை யார் கூறினாலும் அதில் எந்த நன்மையும் இல்லை. நாங்கள் உங்களுக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கின்றோம். அவரே உயர்ந்ததிலும் உயர்ந்த உலகத்திற்கு அதிபதியாகக்கூடிய ஆஸ்தியை அளிக்கின்றார். ஆரிய சமாஜத்தைச் சார்ந்தவர்கள் சித்திரங்களை ஏற்றுக் கொள்வதில்லை. உங்களிடம் சித்திரங்களை பார்க்கும் போது தான் விரோதம் கொள்கிறார்கள். யார் ஆஸ்தி அடைய வேண்டுமோ அவர்கள் அமைதியுடன் வந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானைப் பற்றியதே முக்கியமான விஷயமாகும். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்று பிரம்மா விஷ்ணு சங்கரரை கூற முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்த பாபாவிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. அவரே பதீத பாவனர் ஆவார். இந்த விஷயத்தை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். தந்தை ஒருவரே ! தந்தை என்றால் ஆஸ்தி ! பாரதத்தில் தான் வந்து ஆஸ்தியை வழங்குகிறார். பிரம்மா மூலமாக முழு உலகத்தின் ஸ்தாபனை சங்கர் மூலமாக அழிவு ஆகும். இந்த மகாபாரத யுத்தத்தினால் தான் சொர்க்கத்தின் கதவு திறக்கின்றது. அழுக்கிலிருந்து தூய்மையாகிறார்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து தான் பாரதத்திற்கு ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. வேறு எந்த விஷயமும் இல்லை. இங்கே ஒரேயொரு விஷயம் தான். என்னை நினைத்தால் தான் உங்களின் அழுக்கு நீங்கும் என்று பாபா கூறுகின்றார். இந்த ஒரு விஷயத்தைப் புரிந்துக் கொள்ளும் போது தான், பிறருக்கும் புரிய வைக்க முடியும். இத்தனை சித்திரங்கள் உள்ளன. இவை சிறிதே. ஞான அமிர்தத்தை குடித்து தூய்யைமாகுங்கள், என நாம் கூறுகின்றோம். அவர்கள் விஷம் வேண்டும் என்கிறார்கள். அதைப் பற்றித் தான் இந்த சித்திரங்கள் கூறுகின்றன. எனவே தான் அமிர்தத்தை விட்டு விட்டு விஷத்தை ஏன் அருந்த வேண்டும்? என கூறப்படுகிறது. இந்த ஆன்மீக ஞானத்தை ஆன்மீகத் தந்தை தான் அளிக்கிறார். அந்த தந்தை எப்படி சர்வ வியாபியாக இருக்க முடியும். நீங்கள் தந்தையை சர்வ வியாபி என ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ளுங்கள், நாங்கள் இப்போது ஏற்க மாட்டோம். முன்பு நாங்களும் ஏற்றுக் கொண்டோம் இப்போது இது தவறு என பாபா புரிய வைத்திருக்கிறார். பாபாவிடமிருந்து சொத்து கிடைக்கிறது. இப்போது பாரதம் நரகமாக இருக்கிறது. அதை மீண்டும் நாம் சொர்க்கமாக அதாவது தூய்மையான இல்லற ஆசிரமமாக மாற்றுகின்றோம். ஆதி சனாதன தேவி தேவதைகளின் தூய்மையான இல்லற ஆசிரமம் இருந்தது. இப்போது அழுக்கான விகார உலகமாக இருக்கிறது. என்னை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா, படைக்கக் கூடியர், அவரிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. இப்போது கலியுகத்தில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். சத்யுகத்தில் மிக குறைவான மனிதர்களே இருப்பார்கள். அச்சமயம் மற்ற அனைவரும் சாந்தி தாமத்தில் இருக்கிறார்கள். எனவே நிச்சயமாக இப்போது போர் ஏற்படும். அப்போது தான் முக்தியை அடைவார்கள். இந்த விஷயங்கள் அனைத்தும் குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். குழந்தைகள் நிறைய சேவை செய்ய வேண்டும். சேவையினால் தான் உயர்ந்த பதவியைப் பெற முடியும். தங்களுக்குள் ஒன்று பட வில்லை (சம்ஸ்கார உரசல்) என்றால், சிவபாபாவை மறந்துவிடுவதோ, சிவபாபாவை விட்டுவிடுதலோ கூடாது. பிறகு பதவி கீழானதாகி விடும். பிறகு இந்த சேவை செய்வதற்குப் பதிலாக டிஸ்சர்வீஸ் செய்து விடுவார்கள். தங்களுக்குள் உப்பு தண்ணீராகி (உறவு கசந்து போய்) சேவையை விட்டு விடுவது போன்ற கெட்ட வேலை வேறு எதுவும் கிடையாது. பாபாவை நினைவு செய்தால் வருமானமும் இருக்கிறது. இப்போது ஞானம் கிடைத்திருக்கிறது. தூய்மையாகுங்கள். மேலும் பாபாவை நினைவு செய்யுங்கள். ஞான தூறலுக்கு பீச்சாங்குழல் என்று கூறப்படுகிறது. ஞானம் மற்றும் விஞ்ஞானம் என கூறப்படுகிறது. விஞ்ஞானம் யோகமாகும், ஞானம் சிருஷ்டி சக்கரத்தினுடையதாகும். ஹோலி-பீச்சாங்குழல் பற்றி மனிதர்களுக்கு எதுவும் புரியவில்லை. பாபாவை நினைக்க வேண்டும். மேலும் அனைவருக்கும் ஞானத்தைக் கூற வேண்டும். உயர்ந்ததிலும் உயர்ந்த பாபாவை சர்வ வியாபி என கூற முடியாது என அடிக்கடி பாபா புரிய வைக்கின்றார். இல்லையென்றால், யாரை நினைக்க முடியும்? நிரந்தரமாக என்னை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். ஆனால் படைக்கக் கூடியவரை பற்றி அறியவில்லை என்றால், என்ன கிடைக்கும்? அறியாத காரணத்தால் சர்வ வியாபி என்று கூறி விடுகிறார்கள். எனவே உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்பதை தெளிவு படுத்திக் கூறினால் சர்வவியாபி என்ற விஷயம் புத்தியிலிருந்து விலகிப் போகும். நாம் அனைவரும் சகோதரர்கள்! பாபா ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகு வந்து ஆஸ்தியை அளிக்கிறார். சத்யுகத்தில் தேவி தேவதைகள் இருப்பார்கள். மற்ற அனைவரும் முக்திக்குச் செல்வார்கள். அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தை அளித்துக் கொண்டே இருங்கள். கிறிஸ்துவை பிரார்த்தனை செய்கிறார்கள். கிறிஸ்து அனைவருக்கும் தந்தை இல்லை தானே என கூறுங்கள். பிள்ளையிடமிருந்து ஆஸ்தி எப்படி கிடைக்கும்? கிறிஸ்து படைப்பு அல்லவா ! கிறிஸ்துவை நினைப்பதால் ஆத்மா தூய்மையாகிவிடும் என்று எந்த சாஸ்திரத்திலும் எழுதப்பட வில்லை. ஒரு கீதையில் தான் என்னை நினையுங்கள் ! என்று கூறப்பட்டுள்ளது. இறை தந்தையின் சாஸ்திரம் கீதையாகும். பாபாவின் பெயரை மாற்றிவிட்டு கிருஷ்ணரின் பெயரை எழுதிவிட்டனர். இந்த தவறை செய்துவிட்டனர். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை. அவரே சுகம் சாந்தியின் ஆஸ்தியைக் கொடுக்கிறார். சிவனின் சித்திரத்தை அனைவரும் தங்களிடம் வைக்க வேண்டும். சிவபாபா இந்த ஆஸ்தியை அளிக்கிறார். பிறகு 84 பிறவிகள் எடுத்து இழந்து விடுகிறார்கள். பதீத பாவனர் தந்தை வந்து தூய்மையாவதற்கான யுக்தியைத் தருகிறார் என ஏணிப்படியில் புரிய வைக்க வேண்டும். கிருஷ்ண பகவானின் வாக்கு என அவர்கள் கூறுகிறார்கள். சிவபகவான் வாக்கு என நீங்கள் கூறுகிறீர்கள். முதல் தளத்தில் உயர்ந்த தந்தை இருக்கிறார். பிறகு இரண்டாவது தளத்தில் சூட்சும வதனம். இது மூன்றாவது தளமாகும். சிருஷ்டி இங்கே இருக்கிறது. பிறகு சூட்சும வதனத்தில் செல்கிறார்கள். அங்கே நீதி மன்றம் இருக்கிறது. தண்டனைகள் கிடைக்கின்றது. தண்டனைகள் அடைந்து தூய்மையாகி மேலே செல்கிறார்கள். பாபா அனைத்து குழந்தைகளையும் அழைத்துச் செல்கிறார். இது சங்கமயுகம். இதற்கு 100 ஆண்டுகள் தர வேண்டும். குழந்தைகள் கேட்கின்றனர்: பாபா சொர்க்கத்தில் என்னென்ன இருக்கும்? பாபா கூறுகிறார்: குழந்தைகளே! அதை அங்கே போய்ப் பாருங்கள், முதலில் பாபாவை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். பதீதத்திலிருந்து பாவனம் ஆவதற்கான முயற்சியிலேயே இருங்கள். சொர்க்கத்தில் என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டுதானிருக்கும். பாபாவின் முழு ஆஸ்தியான புதிய உலகம் கிடைக்குமாறு தூய்மை ஆகுங்கள். மற்றபடி இடையில் என்ன நடக்குமோ, அதையும் இன்னும் போகப்போக பாôக்கலாம். இந்த விஷயங்கள் அனைத்தையும் நினைவில் வைக்க வேண்டும். நினைவு இல்லாத காரணத்தால், சரியான நேரத்தில் புரிந்து கொள்வதில்லை, மறந்து போகிறீர்கள். குழந்தைகள் செயல்களையும் நன்றாகச் செய்ய வேண்டும். பாபாவின் நினைவிலிருக்கும் போது கெட்ட செயல் நடைபெறாது. தீய செயல்களையும் செய்கின்றனர். குறிப்பிட்ட இந்த சகோதரியின் வகுப்பு மட்டும் தான் நன்றாயிருக்கிறது. அப்படியா! அந்த சகோதரி சென்று விட்டால் தானும் அவ்வளவு தான்! சகோதரியின் காரணமாக இறந்தே போய்விடுகின்றனர். அதாவது பாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதிலிருந்து இறந்து விடுகின்றனர். இதுவும் துரதிஷ்டம் என்றே கூறப்படுகிறது.

 

அனேக குழந்தைகள் ஒருவர் மற்றொருவரின் பெயர் ரூபத்தில் சிக்கிக் கொண்டு விடுகின்றனர். இங்கு உங்களது உலக ரீதியான அன்பு கூடாது. நிரந்தரமாக சிவபாபாவையே நினைக்க வேண்டும். எவரோடும் கொடுக்கல் வாங்கல் கூடாது. எங்களுக்கு ஏன் தருகிறீர்கள் என்று கேள்ளுங்கள். உங்களது யோகம் சிவபாபாவுடன் மட்டும் தானே! யார் நேரடியாக கொடுப்பதில்லையோ அது சிவாபாவிடம் சேமிப்பு ஆவதில்லை. பிரம்மா மூலம் ஸ்தாபனை ஆகிறது என்றால் அவர் மூலமே அனைத்தையும் செய்ய வேண்டும். இடையில் எவரேனும் சாப்பிட்டு விட்டால், சிவபாபாவிடம் போய் சேராதே! சிவபாபாவிற்குத் தர வேண்டுமானால் பிரம்மா மூலமாக! சென்டரைக் கூட பிரம்மா மூலமே திறக்க வேண்டும். நீங்களே சென்டரைத் திறந்தால் அது சென்டர் ஆகுமா என்ன? பாப்தாதா இருவரும் இணைந்தே இருக்கிறார்கள். இவரது கைப்பட்டால் சிவபாபாவின் கைப்பட்ட மாதிரி ! எவ்வளவு சென்டர்கள் இப்படியும் உள்ளன, அவர்களின் செய்தி எதுவுமே வருவதில்லை. சிவபாபா இது உங்கள் செண்டரின கணக்கு என்று எழுத வேண்டும். முதலாளியிடம் கணக்கு வர வேண்டும் இல்லையா? சிவபாபாவிடம் அனேகரின் கணக்கு சேமிப்பு ஆவதே இல்லை. இந்த அளவு கூட புத்தியில்லை. ஞானம் என்னவோ அதிகமாக உள்ளது, ஆனால் சரியான யுக்தி - வழி தெரிவதில்லை. நான் சென்டர் திறந்து விட்டேன், அவ்வளவே! நீ யாருக்குக் கொடுத்தாயோ அவர் தான் சென்டரைத் திறந்தார். அதனை சிவபாபாவா திறந்தார்? அந்த சென்டர் பிறகு வளமாய் நிரம்புவதில்லை! சென்டர் திறக்க வேண்டுமென்றால், சிவபாபாவின் மூலம் திறக்க வேண்டும். சிவபாபா நாங்கள் இதைக் கொடுக்கிறோம், இதில் அதை உபயோகியுங்கள். குழந்தைகள் நிறைய தவறுகளைச் செய்கின்றனர். யோகத்தில் கச்சாவாக இருக்கிறார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. ஞானத்தின் கூடவே தனது எதிர்காலத்தையும் வளமாக்கிக் கொள்ள வழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே தந்தையிடமிருந்து ஆஸ்தியையும் பெற வேண்டும். எந்த தேகதாரியின் பின்னாலும் சென்று துரதிஷ்டசாலியாகிக் கொள்ளக்கூடாது.

 

2. உங்களிடையே ஏற்படும் ஏதேனும் விஷயம் காரணமாக பாபாவின் சேவையை விட்டுவிடக்கூடாது. அதிகாலையில் எழுந்து தனக்குத் தானே பேசிக் கொள்ள வேண்டும். நினைவு செய்வதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

 

வரதானம் :

தங்களது சம்பூர்ண நிலையின் ஆதாரத்தில் நேரத்தை சமீபத்தில் கொண்டு வரக்கூடிய மாஸ்டர் படைப்பவர் ஆகுக !

 

நேரம் என்பது உங்களது படைப்பாகும். நீங்கள் மாஸ்டர் படைப்பவர் ஆவீர்கள். படைப்பவபர் படைப்பின் ஆதாரத்தில் இருப்பதில்லை. படைப்பவர் படைப்பை தனது அடிமையாக்குபவர். எனவே நேரம் - காலம் வந்து தானாகவே என்னை சம்பூர்ணம் ஆக்கிவிடும் என எண்ணாதீர்கள். நீங்கள் சம்பூர்ணமாகி நேரத்தை (இறுதி நேரத்தை) அருகாமையில் கொண்டு வர வேண்டும். ஏதேனும் தடை வந்தால், நேரத்தின் பிரகாரம் நிச்சயம் சென்று விடும். ஆனால் சமயத்திற்கு முன்னால் மாற்றும் சக்தி மூலம் அதனை மாற்றி விடுங்கள் – அப்போது அதன் பிராப்தி உங்களுக்கு கிடைத்து விடும். சமயத்தின் ஆதாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தால் அதன் பிராப்தி உங்களுக்குக் கிடைக்காது.

 

சுலோகன் :

கர்மம் மற்றும் யோகத்தின் சமநிலையை வைத்துக் கொள்பவர்களே உண்மையான கர்மயோகி ஆவர்.

 

***ஓம் சாந்தி***