BK Murli 11 December 2016 Tamil

BK Murli 11 December 2016 Tamil

11.12.2016    காலை முரளி            ஓம் சாந்தி         ''அவ்யக்த பாப்தாதா'',  ரிவைஸ் 15.04.1981. மதுபன்


'' நம்பர் ஒன் அதிர்ஷ்டசாலியின் விசேஷங்கள் ''


இன்று பாக்கியத்தை அளிக்கும் தந்தை தன்னுடைய சிரேஷ்ட பாக்கியசாலி ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் அவரவர்களின் முயற்சி மூலம் எப்படி அதிர்ஷ்ட ரேகையை போட்டிருக்கிறார்கள். வரிசைக்கிரமமான முயற்சியின் அனுசாரம் சிலர் நம்பர் ஒன் எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறார்கள், சிலர் இரண்டாம் நம்பரில் உருவாக்கியிருக்கிறார்கள். முதல் நம்பரின் எதிர்காலத்தில் அனைத்து பிராப்தி சொரூபம் இருக்கிறது. சர்வ குணங்களினாலும், ஞான பொக்கிஷத்தினாலும், அனைத்து சக்திகளினாலும் எப்பொழுதும் பிராப்திகளின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுதிலிருந்தே பிராப்தி இல்லை (கிடைக்காத) என்ற எந்த ஒரு பொருளும் இல்லை என்றிருக்கும் அந்த அதிர்ஷ்டசாலியின் வாழ்க்கை ஒவ்வொரு விநாடியில், ஒவ்வொரு மூச்சில், ஒவ்வொரு எண்ணத்திலும் அளவற்ற பொக்கிஷத்தை பிராப்தி செய்பவர். அந்த மாதிரி ஆத்மாவின் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் முன்னேறும் கலையின் அனுபவம் ஆகிறது. நாலாபுறங்களிலும் அனேக விதமான பொக்கிஷங்களே பொக்கிஷங்கள் தான் தென்படுகின்றன. ஒவ்வொரு ஆத்மாவும் மிக அன்பு நிறைந்த அனாதி சம்மந்தத்தின் சொரூபத்தினால் தன்னுடையவர்கள் என்ற அனுபவம் ஆகிறது. ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு தந்தையின் குழந்தை ஆன காரணத்தினால் சகோதரன் சகோதரன் என்ற அனுபவம் ஆகிறது. ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் இந்த அனைத்து ஆத்மாக்களும் எப்பொழுதும் சுகம், சாந்தி நிறைந்தவராக ஆகி விட வேண்டும் என்ற இந்த சுபபாவனை மற்றும் சுபவிருப்பங்கள் தான் வெளிப்படும் ரூபத்தில் இருக்கிறது. எல்லைக்கப்பாற்பட்ட பரிவாரம் எல்லைக்கப்பாற்பட்ட அன்பு இருக்கிறது. எல்லைக்குட்பட்டதில் துக்கம் இருக்கிறது மற்றும் எல்லைக்கப்பாற்பட்டதில் துக்கம் இருக்காது. ஏனென்றால் எல்லைக்கப்பாற்பட்ட நிலையில் வருவதினால் எல்லைக்கப்பாற்பட்ட சம்மந்தம் எல்லைக்கப்பாற்பட்ட ஞானம் எல்லைக்கப்பாற்பட்ட உள்உணர்வு, எல்லைக்கப்பாற்பட்ட ஆன்மீக அன்பு, துக்கத்தை அகற்றி சுக சொரூபமாக ஆக்கிவிடுகிறது. ஆன்மீக ஞானத்தின் காரணமாக ஒவ்வொரு ஆத்மாவின் கர்ம கதையின், பங்கின், சம்ஸ்காரங்களின் லைட் மைட் இருக்கும் காரணத்தினால் என்னவெல்லாம் பார்ப்பார்களோ, கேட்பார்களோ, தொடர்பில் மற்றும் சம்மந்தத்தில் வருவார்களோ அந்த ஒவ்வொரு காரியத்திலும் மிகவும் விலகியிருப்பவராகவும், மிகவும் அன்பானவராகவும் இருப்பார். விலகியிருந்து அன்பானவராக இருப்பதில் சமநிலை இருக்கும். எந்த நேரம் அன்பானவராக ஆக வேண்டும், எந்த நேரம் விலகியிருப்பவராக ஆக வேண்டும் என்ற இந்த பாகத்தை செய்வதின் விசேஷம் ஆத்மாவை எப்பொழுதும் சுகம் மற்றும் அமைதி நிறைந்தவராக ஆக்கிவிடுகிறது. ஆன்மீக சம்மந்தம் இருக்கும் காரணத்தினால் புத்தியின் ஒருமித்த நிலையின் காரணமாக நிர்ணய சக்தி, உள்ளடக்கும் சக்தி, எதிர்நோக்கும் சக்தி, சர்வ சக்திகள் ஒவ்வொரு ஆத்மாவின் பாகத்தை மற்றும் தன்னுடைய பாகத்தை மிக நல்ல முறையில் தெரிந்து பாகத்தில் வருகிறார்கள். எனவே ஆடாத அசையாதவராக மற்றும் சாட்சியாக இருக்கிறார்கள். அந்த மாதிரி எதிர்காலம் உள்ள ஆத்மா ஒவ்வொரு எண்ணம் மற்றும் செயலை, ஒவ்வொரு விஷயத்தை மூன்று காலங்களையும் தெரிந்த நிலையில் நிலைத்திருந்து பார்க்கிறார்கள். எனவே கேள்விக்குறி முடிவடைந்து விடுகிறது. இது ஏன், இது என்ன என்பது கேள்விக்குறி. எப்பொழுதும் முற்றுப்புள்ளி. அனைவருக்கும் மூன்று புள்ளிகளின் திலகம் இடப்பட்டு இருக்கிறது தான் இல்லையா? அதில் ஆச்சரியம் ஏற்படுவதில்லை. ஒன்றும் புதிதல்ல. என்ன நடந்தது என்றில்லாமல், என்ன செய்ய வேண்டும் என்பது இருக்க வேண்டும். இவர் தான் நம்பர் ஒன் எதிர்காலம் உள்ளவர்.நீங்கள் அனைவரும் நம்பர் ஒன் எதிர்காலம் உள்ளவரின் பட்டியலில் இருக்கிறீர்கள் தான் இல்லையா? அனைவருக்கும் ஃபர்ஸ்ட் கிளாஸ் (முதல் வகுப்பு) விருப்பம் தான் இல்லையா? நீங்கள் அனைவரும் தந்தையிடமிருந்து முழுமையான ஆஸ்தியை ப்பெறுவதற்காகத் தான் வந்திருக்கிறீர்கள். சந்திரவம்சியாக ஆவதற்குத் தயாரா? சூர்யவம்சி என்றால் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆகிவிட்டார். எப்பொழுதும் தன்னுடைய உயர்ந்த எதிர்காலத்தை நினைவில் வைத்து சக்தி சொரூபத்தில் இருங்கள். அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்கள் தான் இல்லையா. எது தந்தையின் குணமோ அதுவே என்னுடைய குணம். எப்பொழுதும் தன்னுடைய அனாதி உண்மையான சொரூபத்தின் நினைவில் இருக்கிறீர்கள் தான் இல்லையா.? மாயாவின் போயான சொரூபத்தின் அன்னப்பறவையாக ஆகிவிடுவதில்லையே! எப்படி நாடகம் போடுகிறீர்கள் என்றால், போலியான முகத்தை போட்டுக் கொள்கிறீர்கள் இல்லையா, எப்படி குணமோ அப்படி காரியம் அதே போலவே முகத்தை தயார் செய்து விடுகிறீர்கள். எனவே போலியான சொரூபத்தின் மேல் சிரிப்பு வருகிறது தான் இல்லையா! அதே போல் மாயாவும் போலியான குணம் மற்றும் காரியத்தின் சொரூபம் ஆக்கிவிடுகிறது. சிலரை கோபக்காரராகவும், சிலரை பேராசைக்காரராகவும் ஆக்கிவிடுகிறது. சிலரை மிக துக்கமானவராகவும், சிலரை அமைதியற்றவராகவும் ஆக்கிவிடுகிறது. ஆனால் உண்மையான சொரூபம் இந்த விஷயங்களிலிருந்து தனித்தன்மையானது. எனவே எப்பொழுதும் அந்த சொரூபத்தில் நிலைத்திருங்கள். நல்லது - எப்படி பக்தியில் இறுதியாக மூழ்கி எழுவது இருக்கிறது தான் இல்லையா? அதற்கும் மகத்துவம் இருக்கிறது. அதே போல் இங்கேயும் நீங்கள் அனைவரும் கடலில் மூழ்கி எழ வந்திருக்கிறீர்கள் மற்றும் அதில் மூழ்குவதற்கு வந்திருக்கிறீர்கள். அனைத்து விதமான பழக்க வழக்கங்களை இப்பொழுதிலிருந்தே தொடங்கி விடுகிறீர்கள். சங்கமயுகமே சந்திப்பதற்கான யுகம். அந்த மாதிரி இன்று எல்லைக்கப்பாற்பட்ட முக்கியமான நாள்.ஒவ்வொரு மண்டலத்திற்கும் அவரவர்களின் மகிமை இருக்கிறது. குஜராத் என்றால் ,எங்கு இரவு (ராத்) கடந்து சென்று விட்டது (குஜர் கயி). அதாவது எப்பொழுதும் பகல், எப்பொழுதும் வெளிச்சமே வெளிச்சம். இருள் அகன்று விட்டது. உ.பி-யின் விசேஷம் அங்கு சீனி அதிகம் தயாராகிறது. உ.பி-யில் எப்பொழுதும் நாலாபுறங்களிலும் ஸ்தூலத்திலும் மற்றும் சூட்சுமத்திலும் இனிமையே இனிமை தான்!இராஜஸ்தானோ உலகின் புது இராஜ்யத்திற்கான அஸ்திவாரம் போடுபவர்கள். இராஜஸ்தானில் தான் மகான் தீர்த்த ஸ்தலம் இருக்கிறது. இராஜஸ்தானின் விசேஷம் இருக்கிறது. ஏனென்றால் இராஜஸ்தான் தான் பாப்தாதாவின் கர்மபூமி மற்றும் சரித்திர பூமி. இராஜஸ்தானிற்கு எப்பொழுதுமே சர்வ சிரேஷ்ட மகிமை இருக்கிறது.பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதும் அகால்தக்த் அதாவது அழியாத ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்கள். பஞ்சாபைப் சேர்ந்தவர்களுக்கு அகால்தக்த் ஒருபொழுதும் மறப்பதில்லை. எப்பொழுதும் அகாலமூர்த் தந்தையுடன் அகால் சொரூபத்தில் இருப்பார்கள். தில்லி திலாராமின் தில்-ஐ அதாவது இதயத்தைப் பறிப்பவர்கள். பெயரும் தில்லி அதாவது தில்லி ஐ அதாவது இதயத்தை பறித்து விட்டார்கள். அப்படி பாப்தாதாவின் இதயத்தில் என்ன இருக்கிறது? முழு உலகத்திலும் நிரந்தரமாக சுகம் மற்றும் சாந்தியின் கொடி பறக்கட்டும். எப்பொழுதும் நிம்மதியின் புல்லாங்குழல் இசைக்கட்டும். தில்லியைச் சேர்ந்தவர்கள் இந்த லட்சியத்தை எடுத்துக் கொண்டு மகான் யக்ஞத்தில் மகா கடமையையும் செய்திருக்கிறார்கள். எப்பொழுதும் அனைவரின் சகயோகம் என்ற விரல் மூலம் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த முழக்கத்தை முழு உலகிற்கும் மிக சப்தமாக கூறியிருக்கிறார்கள். தில்லி மேல் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஏனென்றால் அனைவரும் இராஜ்ய அதிகாரியாக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் தான் இல்லையா? அப்படி சேவையில் புதுப்புது காரியத்தில் இதயத்தை பறிப்பவர்கள். மும்பையின் அரசாங்கமும் மிக அழகாக உருவாகிக் கொண்டிருக்கிறது, விஸ்தாரத்தை அடைந்து கொண்டிருக்கிறது. அதே போலவே பாண்டவர்களின் சேவையிலும் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. சகயோகி மற்றும் அதிகாரி. இரண்டு விதமான ஆத்மாக்களும் சேவையின் வளர்ச்சி அடைவதற்காக நல்ல பொறுப்பாளர் ஆகியிருக்கிறார்கள். வரதானம் கிடைத்திருக்கிறது தான் இல்லையா?மத்திய பிரதேசத்தில் ஒரு நிராகார தந்தையின் நினைவுச் சின்னம் நன்றாக இருக்கிறது. அதே போலவே பிராமண ஆத்மாக்களிலும் ஒரு தந்தையோடு அன்பில் மூழ்கியிருக்கக்கூடிய முதல் நம்பரில் வரக்கூடிய இதே ஆர்வத்தில் இருப்பவர்களின் பந்தயம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. விதியும் இருக்கிறது மற்றும் விருத்தியும் (வளர்ச்சியும்) அடைந்திருக்கிறது. இப்பொழுதோ அனைவரின் விசேஷங்களையும் கேட்டீர்கள் இல்லையா? அனைவரின் ஒன்றாக மூழ்கி எழுவது ஆகிவிட்டது இல்லையா? ஞானக்கடல் மற்றும் நதிகளின் இணைதல் ஆகிவிட்டது. இணைவது என்றால் பெறுவது. பொக்கிஷத்தை பெற்றுவிட்டீர்கள் தான் இல்லையா? உயர்ந்த எதிர்காலத்தின் ரேகை போடப்பட்டது தான் இல்லையா?பாப்தாதாவின் ஒரு சுலோகனை எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும் 'எப்பொழுதும் குஷியாக இருக்க வேண்டும், அனைவரையும் எப்பொழும் குஷிப் படுத்த வேண்டும். நாலாபுறங்களிலும் இப்பொழுது குஷியின் இசையை முழக்குங்கள். ஏனென்றால் நீங்களோ மிகவும் அதிர்ஷ்டசாலி ஆத்மாக்கள் தான்!அந்த மாதிரி உயர்ந்த எதிர்காலம் உள்ள, எப்பொழுதும் அனைத்து குஷிகளின் பொக்கிஷத்தினால் நிரம்பி அனைவருக்கும் சுகத்திற்கான வழி கூறக்கூடிய, மாஸ்டர் சுக வள்ளல், எப்பொழுதும் அனைவரின் சங்கடங்களை அகற்றும், விக்ன விநாஷக் சிரேஷ்டஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.தாதிஜி அவர்களுடன் சந்திப்பு - மகாவீரர்களின் சிரேஷ்ட சேவையின் சொரூபம் எது? எப்படி மற்ற அனைத்து சக்திகளும் படங்களில் காண்பிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அனைத்து சக்திகளில் சேவைக்காக விசேஷ சக்தி எது? அனைவரும் வாய்மொழி மூலம், விதவிதமான சாதனங்கள் மூலம், திட்டங்கள், நிகழ்ச்சிகள் மூலமாக சேவையோ செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய விசேஷ சேவை எது? எப்படி இந்த பழைய உலகத்தில் மற்றும் சரித்திரத்தில், முந்தைய காலங்களில் பறவைகள் மூலமாக செய்தி அனுப்பினார்கள். அந்த பறவைகள் செய்தியைக் கொடுத்து விட்டு பிறகு திரும்பி வந்து விடும். உங்களுடைய சேவை எது? அவர்கள் பறவைகள் மூலமாக செய்தி அனுப்பினார்கள் என்றால், நீங்கள் எண்ணத்தின் சக்தி மூலமாக எந்த ஆத்மாவிற்கும் சேவை செய்ய முடியும். எண்ணம் என்ற பொத்தானை அழுத்தினீர்கள் மற்றும் அங்கு செய்தி சென்றடைந்தது. எப்படி இறுதி வாகன உடல் மூலமாக சகயோகம் கொடுக்க முடியும். அதே போல் எண்ணத்தின் சக்தி மூலமாக அனேக ஆத்மாக்களின் பிரச்சனைக்கு தீர்வு செய்ய முடியும். தன்னுடைய சிரேஷ்ட எண்ணத்தின் ஆதாரத்தினால் அவர்களுடைய வீணான மற்றும் பலஹீனமான எண்ணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த விசேஷ சேவை நேரத்திற்கு ஏற்றபடி அதிகரித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனைகள் அந்த மாதிரி வரும் அப்பொழுது ஸ்தூல சாதனங்கள் இல்லாமல் ஆகிவிடும். பிறகு என்ன செய்ய வேண்டியதாக இருக்கும். தன்னுடைய எண்ணத்தை அந்த அளவு சக்திசாலியாக ஆக்க வேண்டும் அதனுடைய பிரபாவம் தொலைதூரம் வரை சென்றடைகிற மாதிரி! எவ்வளவு சக்தி அதிகமாக இருக்குமோ அந்த அளவு தொலைதூரம் வரை பரவும். அப்படி எண்ணத்திலும் அந்த அளவு சக்தி வந்து விடும். நீங்கள் இங்கே எண்ணத்தை உருவாக்கினீர்கள், பிறகு பலன் அங்கே கிடைத்து விடும். எப்படி தந்தை பக்தியின் பலனைக் கொடுக்கிறார். அதே போல் நீங்கள் சிரேஷ்ட ஆத்மாக்கள், ஈஸ்வரியக் குடும்பத்தில் சகயோகத்தின் பலனைக் கொடுப்பீர்கள், அவர்களும் அந்த பலனின் விதவிதமான அனுபவங்களைச் செய்வார்கள். இந்த சேவையும் தொடங்கி விடும்.மிகவும் புதியவர்களைப் பார்த்து, பரிவாரத்தின் வளர்ச்சியைப் பார்த்து, சேவையின் வெற்றியைப் பார்த்து குஷி ஏற்படுகிறது தான் இல்லையா? இதுவும் தன்னுடைய இராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இராஜ்ஜியத்திலோ அனைத்து விதமான ஆத்மாக்கள் தேவையாக இருக்கிறார்கள். தொடர்பில் இருப்பவர்களும் வேண்டும், சேவாதாரிகளும் வேண்டும், உறவினர்களும் வேண்டும் மற்றும் உரிமை உள்ளவர்களும் வேண்டும். இப்பொழுதோ சப்தம் மிக வலுவாக பரவிக் கொண்டிருக்கிறது. அங்கே இங்கே பார்த்து இது எங்கே இருந்து வரும் சப்தம் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கேட்க முடிகிறது ஆனால் இப்பொழுது தெளிவாகக் கேட்க முடிவதில்லை. எங்கிருந்து ஓசை வருகிறது, எந்த பக்கம் செல்ல வேண்டும் என்ற அதைப் புரிந்து கொள்ளவில்லை. எப்பொழுது தெளிவாகும் என்றால் எப்பொழுது வார்த்தைகளின் கூடவே சிரேஷ்ட எண்ணத்தின் சக்தி அவர்கள் வரை சென்றடையுமோ அப்பொழுது தான். இப்பொழுது கவனம் தொடங்கியிருக்கிறது.ஒவ்வொரு சீசனுக்கும் அவரவர்களின் பிரத்யேகமான மிகவும் இரம்மியமான பங்கு இருக்கிறது. பாப்தாதாவை பொறுத்தவரையிலோ அனைவரும் காணாமல் போய் கண்டெடுக்கப்பட்டவர்கள். அனைத்து காரியங்களும் சுலபமாக மற்றும் இயல்பாகவே வளர்ச்சியை அடைந்து கொண்டே இருக்கும். நீங்கள் எவ்வளவு பெரிய பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள்.சத்யுகத்தின் தொடக்கத்தின் ஜனத்தொகையை தன்னுடைய கண்களால் பார்ப்பீர்களா அல்லது இல்லையா? அல்லது கனவில் பார்ப்பீர்களா மற்றும் செய்தித்தாட்கள் மூலம் கேட்பீர்களா - என்ன நடக்கும்? இப்பொழுதோ ஒரு ஆயிரம் பேர்களைக் கூட அமர வைக்க முடியாது. பிறகு எங்கே அமர வைப்பீர்கள். அனைவரும் பிராமண பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள். எந்த நாள் அனைவரும் இந்த மதுபன் பூமியில் ஒன்றாகச் சேர்ந்து விடுகிறார்கள் என்றால், பிறகு குழப்பம் தொடங்கி விடும். அனைவரும் விரல் கொடுத்தார்கள் என்று ஒற்றுமையின் படத்தை (கோவர்த்தன மலை) காண்பித்திருக்கிறீர்கள் இல்லையா? சூட்சுமத்திலோ கொடுக்கவே செய்கிறீர்கள். ஆனால் இவ்வளவு பெரிய பரிவாரம், பரிவாரத்தையோ பார்க்க வேண்டும் இல்லையா? இதற்கான திட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்களா? சத்யுகத்திலோ உங்களுடைய பிரஜைகள் மட்டும் இருப்பார்கள், இங்கேயோ உங்களுடைய பக்தர்களும் வருவார்கள். இரட்டை வம்சாவளி இருக்கும். பக்தர்களுக்கு நம்முடைய இஷ்ட தேவி தேவதைகள் ஒன்றாக கூடியிருக்கிறார்கள் என்று தெரிந்து விட்டது என்றால், என்ன செய்வார்கள்? அவர்களும் கேட்க மாட்டார்கள் ஆனால் வந்து சேர்ந்து விடுவார்கள். எப்படி இப்பொழுது கூட அனேகர்கள் வந்து சேர்ந்து விடுகிறார்கள் தான் இல்லையா? பக்தர்களும் சாதக பறவை மாதிரி இருக்கிறார்கள்.சக்திகளின் பெயர் புகழ் அடைந்து கொண்டிருக்கிறது என்று பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். சர்வ சக்திவான் குப்தமாக இருக்கிறார். மேலும் சக்திகள் பிரத்யக்ஷ ரூபத்தில் இருக்கிறார்கள். எனவே சிவன், சக்திகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். பாப்தாதா வதனத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார், எவ்வளவு வரிசையில் நிற்கிறார்கள் என்ற இதையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு சைத்தன்ய மூர்த்திகளின் கோவில்களின் வெளியே வரிசையோ தொடங்கி விட்டது தான் இல்லையா? குழந்தைகளின் சேவையைப் பார்த்தும் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். தந்தையையும் விட லட்சக்கணக்கான மடங்கு அதிகமாக பிரத்யக்ஷ ரூபத்தில் சேவையின் மைதானத்தில் வந்து விட்டீர்கள், இன்னும் வருவார்கள்.பார்ட்டிகளுடன் சந்திப்பு - (உ.பி மண்டலம்)

எப்பொழுதும் தன்னை உலகிற்கு சரியான மார்க்கம் காண்பிக்கும் ஆன்மீக வழிகாட்டி என்று நினைக்கிறீர்களா? வழிகாட்டிகளின் பெயர் என்னவாக இருக்கிறது? உ.பி-யில் வழிகாட்டிகள் அதிகம் இருப்பார்கள் இல்லையா? அந்த வழிகாட்டிகள் என்ன செய்கிறார்கள் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர்கள் எந்த யாத்திரை செய்விக்கிறார்கள். மேலும் நீங்கள் எந்த யாத்திரை செய்விக்கிறீர்கள். நீங்கள் அந்த மாதிரி யாத்திரை செய்விக்கிறீர்கள் அதன் பலனாக பல ஜென்மங்களுக்கு யாத்திரை செய்வதிலிருந்து விடுபட்டு விடுவார். மேலும் அவர்கள் அடிக்கடி யாத்திரை செய்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி நீங்கள் நிரந்தரமாக முக்தி மற்றும் ஜீவன்முக்தியின் இலக்கை சென்றடைய வைக்கும் வழிகாட்டிகள். பாதியில் விட்டுச் செல்பவரோ அலைகழிப்பவரோ நீங்கள் இல்லை. இலக்கு வரை சென்றடையச் செய்பவர். எப்படி தந்தையின் காரியம் இருக்கிறது. தந்தை வழி காண்பித்திருக்கிறார் இல்லையா? அதே போல் குழந்தைகளுடைய காரியமும் அது தான். மார்க்கத்தைக் கூட யார் தெரிந்திருக்கிறாரோ அவர் தான் காண்பிக்க முடியும். மார்க்கம் என்றால் என்ன? ஞானம் மற்றும் யோகா. இதே மார்க்கம் மூலமாகத் தான் முக்தி மற்றும் ஜீவன்முக்தியின் இலக்கை சென்றடைந்து கொண்டிருக்கிறீர்கள். வழியின் பாதியில் என்னென்ன பக்கத்து காட்சிகள் வருகின்றனவோ அதில் நின்று விடவில்லையே? ஏனென்றால் மாயா பக்கத்து காட்சிகளின் ரூபத்தில் உங்களை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறது, ஏதாவது சூழ்நிலை மற்றும் விஷயம் அந்த மாதிரி வரும் அது நிறுத்துவதற்கு முயற்சி செய்யும் ஆனால் உறுதியான யாத்திரீகன் நிற்பதில்லை, இலக்கை சென்றடைபவர் இல்லையா? ஒருவேளை இந்த அனைத்து வழிகாட்டிகளும் தயாராகி விட்டார்கள், என்றால், அனேக ஆத்மாக்களுக்கு மார்க்கத்தைக் காண்பித்து விடுவார்கள். உலகில் எத்தனை ஆத்மாக்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் மார்க்கத்தைக் காண்பிக்க வேண்டும் இல்லையா?ஒவ்வொரு குரூப்போடும் தனித்தனியான சந்திப்பு -

1) அனைவரும் எப்பொழுதும் பார்வையாளர் நிலையில் நிலைத்திருந்து, உங்களது ஒவ்வொரு (பாகம்) பார்ட்டையும் செய்கிறீர்களா? பார்வையாளர் என்ற ஆசனம் எப்பொழுதும் நிலைத்திருக்கிறதா? சில நேரம் பார்வையாளருக்குப் பதிலாக தன்னுடைய பங்கை செய்து செய்து அந்த பங்கில் பார்வையாளரின் நிலை மறந்து விடுவதில்லையே. யார் பார்வையாளராக இருப்பாரோ அவர் ஒருபொழுதும் எந்த பங்கிலும் சஞ்சலம் அடைபவராக ஆக முடியாது. விலகியிருப்பார் அன்பாகவும் இருப்பார். நல்லதில் நல்லது, தீயதில் தீயது என்று அந்த மாதிரி இருக்க மாட்டார். பார்வையாளர் என்றால், எப்பொழுதும் ஒவ்வொரு காரியம் செய்து கொண்டே நன்மை பயக்கும் உள்உணர்வில் இருப்பவர். என்னென்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதில் நன்மை அடங்கியிருக்கிறது. ஒருவேளை ஏதாவது மாயாவின் தடையும் வருகிறது என்றால், அதிலேயும் லாபம் எடுத்து அறிவுரை பெற்று முன்னேறிச் செல்வார்கள், நிற்க மாட்டார்கள். நீங்கள் அந்த மாதிரியானவர்களா? இருக்கையில் அமர்ந்து காட்சிகளைப் பார்க்கிறீர்களா? பார்வையாளர் என்பது தான் இருக்கை. இந்த இருக்கையில் அமர்ந்து நாடகத்தை பார்த்தீர்கள் என்றால் மிகுந்த மகிழ்ச்சி வரும். தன்னை எப்பொழுதும் பார்வையாளர் என்ற இருக்கையில் அமர வையுங்கள், பிறகு ஆஹா நாடகமே! ஆஹா! என்ற இந்த பாடலைத் தான் பாடிக்கொண்டே இருப்பீர்கள்.2) அனைவரும் தீவிரமாக முயற்சி செய்பவர்கள் தான் இல்லையா? புதியவர்களாக இருப்பவர்கள் ஒவ்வொரு கல்பத்திலும் பழையவர்கள், பழையவர்கள் என்று புரிந்து கொள்வதினால் தன்னுடைய அதிகாரத்தை எடுத்து விடுவார்கள். நான் ஒவ்வொரு கல்பத்தின் உரிமையுள்ளவன் என்று நினைக்கிறீர்களா? கடைசியில் வந்திருந்தும் வேகமாகச் செல்ல வேண்டும். அதற்கான சுலபமான வழி - நிரந்தரமான நினைவு. நினைவில் இடைவெளி வரக்கூடாது. எப்பொழுதுமே கர்மயோகி. காரியமும் செய்யுங்கள் மற்றும் நினைவிலும் இருங்கள். யார் நிரந்தர கர்மயோகியின் நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் சகஜமாகவே கர்மாதீத் (முழுமையாக பாவ கர்மங்களை அழித்த நிலை) ஆக முடியும். எப்பொழுது விரும்புகிறீர்களோ அப்பொழுது காரியத்தில் வாருங்கள் மேலும் எப்பொழுது விரும்புகிறீர்களோ அப்பொழுது விலகியவர் ஆகிவிடுங்கள்.3) எப்பொழுதும் சேவையின் ஊக்கம் உற்சாகத்தில் இருந்து கொண்டே உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உள்உணர்வில் இருக்கிறீர்களா? எப்பொழுதும் நான் உலகிற்கு நன்மை செய்பவன், எனவே அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற இதே உள்உணர்வு இருக்கிறதா? எப்பொழுதுமே இந்த உள்உணர்வு இருந்தது என்றால், அதன் மூலமாக உலகிற்கு நன்மை செய்ய முடியும். வாய்மொழி மூலமாகவோ, உள்உணர்வு மூலமாகவோ ஆனால் எப்பொழுதும் நன்மை செய்பவரின் நினைவிலிருங்கள். எந்த அளவு இந்த உள்உணர்வு இருக்குமோ அந்த அளவே முன்னேறிச் சென்று கொண்டிருப்பார்கள். யார் எந்த அளவு சேவை செய்கிறாரோ அந்த அளவே மற்றவர்களின் குஷியின் பலனாக தனக்குள்ளும் குஷியின் பிராப்தியின் அனுபவம் ஆகும். இது மற்றவர்களின் சேவை இல்லை. எப்பொழுதும் முன்னேறும் கலையின் பக்கம் செல்பவர் நிற்பதற்கான நேரம் இப்பொழுது இல்லை. ஒருவேளை நின்று கொண்டே இருந்தீர்கள் என்றால் லட்சியம் வரை எப்படிச் சென்றடைவீர்கள்? ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விநாடியில் முன்னேறும் கலை. கவனத்தை கீழ்கோடிட்டீர்கள் என்றால் எப்பொழுதும் முன்னேறும் கலை இருந்து கொண்டே இருக்கும். நல்லது.வரதானம்:

எல்லைக்குட்பட்ட பொறுப்புகளை எல்லைக்கப்பாற்பட்டதில் பரிவர்த்தனை (மாற்றம்) செய்யக்கூடிய நினைவு சொரூபமான பற்றுதலை வென்றவர் ஆகுக.பற்றுதலை வென்றவர் ஆவதற்காக தனது நினைவு சொரூபத்தை பரிவர்த்தனை செய்யுங்கள். எப்பொழுது நான் குடும்பஸ்தன், என்னுடைய வீடு, என்னுடைய உறவினர்கள் என்ற இந்த நினைவு இருக்கிறதோ அப்பொழுது பற்றுதல் வருகிறது. இப்பொழுது இந்த எல்லைக்குட்பட்ட பொறுப்பை எல்லைக்கப்பாற்பட்ட பொறுப்பில் மாற்றம் செய்து விடுங்கள். எல்லைக்கப்பாற்பட்ட பொறுப்பை ஏற்று செய்தீர்கள் என்றால், எல்லைக்குட்பட்டது இயல்பாகவே நிறைவேறிவிடும். ஆனால் ஒருவேளை எல்லைக்கப்பாற்பட்ட பொறுப்பை மறந்துபோய் எல்லைக்குட்பட்ட பொறுப்பை மட்டும் எடுத்துச் செய்கிறீர்கள் என்றால், அதன் மூலம் இன்னும் நிலைகுலைந்து போகிறீர்கள். ஏனென்றால், இந்த கடமை பற்றுதன் கடமை ஆகிவிடுகிறது. எனவே தன்னுடைய நினைவு சொரூபத்தை பரிவர்த்தனை செய்து பற்றுதலை வென்றவர் ஆகுங்கள்.சுலோகன் :

அந்த மாதிரி மிக வேகமாக உயரே பறந்து செல்லுங்கள் அதன் மூலம் விஷயங்கள் பிரச்சனைகள் என்ற மேகத்தை ஒரு நொடியில் கடந்து சென்று விட வேண்டும்.


***OM SHANTI***