BK Murli 14 December 2016 Tamil

BK Murli 14 December 2016 Tamil

14.12.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! பாரத பூமி சுகமளிக்கும் வள்ளலாகிய பாபாவின் ஜென்மபூமியாகும். பாபா தான் வந்து அனைத்துக் குழந்தைகளையும் துக்கத்திலிருந்து விடுவிக்கிறார்.கேள்வி :

அனைத்தையும் விட உயர்ந்த பெரிய, நீண்ட கதை எது, அது குழந்தைகளாகிய உங்களுக்குப் பொதுவானது?பதில் :

இந்த டிராமாவின் முதல்-இடை-கடையின் கதை மிக நீண்டதாகவும் உயர்ந்ததாகவும் உள்ளது. இந்தக் கதையை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இந்தக் கதை மிகவும் சாதாரணமானதாகும். நீங்கள் அறிவீர்கள், இந்த டிராமா எப்படி அப்படியே ரிப்பீட் ஆகிறது, இந்த ஏணிப்படி எப்படி சுற்றிக் கொண்டே உள்ளது என்று.பாடல் :

ஓம் நமோ சிவாய.......ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகள் மகிமையின் பாடலைக் கேட்டீர்கள். இது யாருடைய மகிமை? உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவானின் மகிமை. அவரைத் தான் பதீத-பாவனர், துக்கத்தைப் போக்கி சுகமளிப்பவர் என்றும் சொல்கின்றனர். சுகம் தருபவர் நினைவு செய்யப் படுகிறார். குழந்தைகள் அறிவார்கள், சுகம் தருபவர் ஒரே ஒரு பரமபிதா பரமாத்மா மட்டுமே. மனிதர்கள் அனைவரும் அவரையே நினைவு செய்கின்றனர். மற்ற தர்மத்தினரும் சொல்கின்றனர்-தந்தை வந்து துக்கத்தைப் போக்கி சுகம் தருகிறார் என்று. ஆனால் எந்த தந்தை சுகம் தருகிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பிறகு துக்கத்தை யார் எப்போது தருகிறார் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். புது உலகம் தான் பிறகு பழையதாக ஆகிறது என்றால் அது துக்கதாமம் எனச் சொல்லப் படுகின்றது. கலியுகத்தின் கடைசிக்குப் பிறகு சத்யுகம் அவசியம் வரும். சிருஷ்டியோ ஒன்று தான். மனிதர்கள் இந்த சிருஷ்டிச் சக்கரத்தைப் பற்றி முற்றிலும் அறியாதிருக்கிறார்கள். அதனால் பாபா கேட்கின்றார் - உங்களை இப்படி புத்தியற்றவராக ஆக்குபவர் யார்? பாபாவோ யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. பாபாவோ சதா சுகம் தருகிறார். நீங்கள் அறிவீர்கள், சுகம் கொடுப்பவரின் ஜென்மமும் பாரதத்தில் தான். பாரதவாசிகள் சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர் என்ற போதிலும் எதையும் புரிந்து கொள்ளவில்லை. அது உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவானின் ஜெயந்தி. அவரது பெயர் சிவன். இது யாருக்கும் தெரிவதில்லை. இராவணனை வருடா வருடம் எரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அது என்ன பொருள், எப்போதிருந்து இருந்து வந்துள்ளது என்பது பற்றி எதுவும் தெரியாது. ஏன் எரிக்கின்றனர்? இதில் எதுவுமே அவர்களுக்குத் தெரியவில்லை. டிராமா பிளான் அனுசாரம் இதைப் பற்றி அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதே இல்லை. பாபா புரிய வைக்கிறார், ஒவ்வொருவரின் பாகமும் தனித்தனி. மனிதர்களின் பாகம் தான் பாடப் பட்டுள்ளது. மனிதர்கள் தான் புத்திசாலிகள். மிருகங்களோ புத்தியற்றவை. இச்சமயம் மனிதர்களும் கூட புத்தியற்றவர்களாக ஆகி விட்டுள்ளனர். இதை அறிந்து கொள்ளவே இல்லை, அதாவது துக்கத்தைப் போக்கி சுகம் கொடுப்பவர், பதீத-பாவனர் யார்? தூய்மையை எப்படி இழந்தோம், தூய்மையாக எப்படி ஆவோம்? அவரை அழைக்கின்றனர், ஆனால் அர்த்தம் தெரியாது. இச்சமயம் இருப்பது பக்தி மார்க்கம். சாஸ்திரங்கள் அனைத்தும் கூட பக்தி மார்க்கத்தினுடையவை தான். சாஸ்திரங்களில் சத்கதிக்கான ஞானம் எதுவும் கிடையாது. சொல்கின்றனர்-ஞானம், பக்தி, வைராக்கியம்....... அவ்வளவு தான். இவ்வளவு புத்தியில் வருகின்றது. இதன் அர்த்தமும் தெரியாது. ஞானக்கடலாக இருப்பவர் ஒரே ஒரு பரமபிதா பரமாத்மா நிச்சயமாக அவர்களுக்குத் தான் ஞானம் கொடுக்க வேண்டும். அவர் தான் சத்குரு, சத்கதி அளிப்பவர். அதனால் அவரை அழைக்கின்றனர், வந்து துர்கதியிலிருந்து காப்பாற்றுங்கள். துவாபரயுகத்தில் நாம் முதலில் சதோபிரதான பூஜாரி ஆகிறோம். பிறகு புனர்ஜென்மம் எடுத்து, கீழே இறங்கியே வருகிறோம். வருகின்ற மனிதர்கள் அனைவரும் நிச்சயமாக இறங்கவே செய்வார்கள். புத்தர் முதலியவர்களின் பெயர்கள் ஏணிப்படியில் தரப்படாமல் இருக்கலாம். அவர்களைக் காட்டினாலும் கூட அவர்களும் கூட இறங்கித் தான் ஆக வேண்டும் இல்லையா? அவர்கள் சதோ ரஜோ தமோவில் வந்தாக வேண்டும். இப்போது அனைவரும் தமோபிரதானமாக உள்ளனர். இப்போது பாபா புரிய வைக்கிறார் - இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவை. அதில் அநேக விதமான கர்ம காண்டங்கள் உள்ளன. ஞானம் தருபவர் ஒரே ஒரு பாபா. ஞானக்கடல் தான் வந்து உண்மையான ஞானம் சொல்கிறார். அரைக்கல்பம் பகல், அதில் பக்தியின் விஷயமே கிடையாது. பகல் ஒரு போதும் அடி வாங்குவதில்லை. அங்கோ சுகத்தின் மேல் சுகம். அந்தத் தந்தையின் ஆஸ்தி உங்களுக்குக் கல்பத்தின் சங்கமயுகத்தில் கிடைக்கின்றது. கல்பத்திற்கு முன் யாருக்குக் கொடுத்தாரோ, அதே குழந்தைகளுக்கு இந்த ஞானத்தை பாபா கொடுக்கிறார். கல்ப-கல்பமாகக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவர்களின் புத்தியில் தான் பதியும்-அதாவது படைப்பவர் தான் படைப்பினைப் பற்றிய ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சித்திரங்கள் எவ்வளவு உருவாக்குகின்றனர்! பிறகு அவற்றை வைத்துக் காலண்டர்களும் உருவாக்குவார்கள்.புதிய பொருள் ஏதாவது வெளியாகிறது என்றால் அது பரவுகின்றது. இப்போது பாரதத்தில் தந்தை வந்து படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவும் பரவும், மேலும் வெளியில் அனைவரிடமும் செல்லும். பிறகு நாம் சொர்க்கத்திற்கு ஏன் செல்வதில்லை என்று அவர்களால் சொல்ல முடியாது. அனைவருக்கும் தெரிந்து விடும். ஏற்கனவே உருவாக்கப் பட்ட டிராமா. இதில் வித்தியாசம் இருக்க முடியாது. உலகத்திலோ அநேக வழிமுறைகள். சிலர் இயற்கை எனச் சொல்கின்றனர். சிலர் ஆத்மாவில் பாவ-புண்ணியம் ஒட்டாது......... எனச் சொல்கின்றனர். கடைசி நேரத்தில் ஒரு தந்தை சொல்வதை மட்டுமே கேட்பார்கள். இந்த டிராமாவில் நாம் நடிகர்கள் என்பதை நிச்சயமாகப் புரிந்து கொள்வார்கள். பலவித தர்மங்களின் மரம். அனைவரின் புத்தியும் திறந்து கொள்ளும். இப்போது பூட்டப் பட்டுள்ளது. உங்கள் தர்மத்தின் விஷயம் வேறு. மற்றப்படி டிராமா பிளான் படி அவர்கள் சொர்க்கத்தில் வர முடியாது. நம்முடைய தர்ம ஸ்தாபகர் இன்ன சமயத்தில் வந்தார். கிறிஸ்து சொர்க்கத்தில் வர மாட்டார். இந்த அனைத்து விஷயங்களும் இந்த மரத்தின் (கல்ப விருட்சம்) மூலமாகத் தான் புத்தியில் வரும். ஏணிப்படியினால் அல்ல. கல்ப விருட்சம் மிக நன்றாக உள்ளது. இது உருவாக்கப் பட்ட டிராமா என்பதைப் புரிந்து கொள்வார்கள். மற்றப்படி யோகத்தின் விஷயத்தை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நாம் தூய்மையாகி பாபாவை நினைவு செய்வோமானால் விகர்மங்கள் விநாசமாகும். யோகத்துடன் கூடிய நிலையில் இருந்தால் அப்போது தன்னைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். படைப்பவர் மற்றும் படைப்பு பற்றிய ஞானத்தை இன்னும் போகப்போக அனைவரும் புரிந்து கொள்வார்கள். இப்போது இல்லை. டிராமாவும் மிகவும் யுக்தியுடன் உருவாக்கப் பட்டுள்ளது. யுத்தமோ நடைபெறத்தான் போகிறது. இப்போது உங்கள் புத்தியில் டிராமாவின் இரகசியம் தெரிந்துள்ளது. யாரேனும் புதிதாக வருவார்களானால் ஆரம்பத்திலிருந்து புரிய வைக்க வேண்டி உள்ளது. இது மிக நீண்ட கதையாகும். மிக உயர்ந்தது, ஆனால் உங்களுக்கு இது சாதாரணமானது தான். நீங்கள் அறிவீர்கள் இந்த ஏணிப்படியின் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்று.பாபா சொல்கிறார், இனிமையான குழந்தைகளே, பக்தி மார்க்கத்தில் நீங்கள் எவ்வளவு கஷ்டப் பட்டீர்கள்! இதுவும் டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. இந்த சுகம்-துக்கத்தின் விளையாட்டு உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மிக உயர்ந்தவர்களாகவும் ஆகிறீர்கள் என்றால் தாழ்ந்தவர்களாகவும் ஆகிறீர்கள். பாபா சொல்கிறார், இனிமையான குழந்தைகளே, நான் இந்த மனித சிருஷ்டியின் விதை வடிவம். கல்ப விருட்சத்தின் முழு ஞானமும் என்னிடம் தான் இருக்கும். ஆலமரத்தின் உதாரணமும் கூட இதைப் பற்றியது தான். சந்நியாசிகளும் உதாரணம் சொல்கின்றனர். ஆனால் அவர்களின் புத்தியில் எதுவும் இல்லை. நீங்களோ , எப்படி ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் மறைந்து விடுகிறது என்பது பற்றி அறிவீர்கள். இப்போது அந்த அஸ்திவாரம் இல்லை. மீதி மரம் முழுவதும் நின்று கொண்டுள்ளது. அனைத்து தர்மங்களும் உள்ளன.மற்றப்படி ஒரு தர்மம் மட்டும் இல்லை. ஆலமரமும் பாருங்கள், எப்படி நின்று கொண்டுள்ளது! அடிமரம் (தண்டு) இல்லை. பிறகும் மரம் சதா பசுமையாக உள்ளது. மற்ற மரங்கள் அஸ்திவாரம் இல்லாமல் பட்டுப் போகின்றது. ஏனென்றால் அடிமரம் இல்லாமல் தண்ணீர் எப்படிக் கிடைக்கும்? ஆனால் அந்த ஆலமரம் முழுவதும் பசுமையாக நின்று கொண்டுள்ளது. இது அதிசயம் இல்லையா? அதே போலத் தான் இந்த மரத்திலும் தேவி-தேவதா தர்மம் இல்லை. தங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளவே இல்லை. தேவதா தர்மத்திற்குப் பதிலாக இந்து எனச் சொல்லி விட்டுள்ளனர். எப்போதிருந்து இராவண இராஜ்யம் ஆரம்பமாயிற்றோ, அப்போதிலிருந்து தேவி-தேவதா எனச் சொல்லிக் கொள்வதற்குத் தகுதியற்றவர்களாக ஆகி விட்டுள்ளனர். ஆக, பெயரை மாற்றி இந்து என வைத்துக் கொண்டனர். தேவதைகளின் ஜட சித்திர அடையாளங்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன. அதன் மூலம் புரிந்து கொண்டுள்ளனர் - சொர்க்கத்தில் அவர்களின் இராஜ்யம் இருந்தது. ஆனால் அந்த சொர்க்கம் எப்போது இருந்தது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. சத்யுகத்தின் ஆயுளை மிக நீண்டதாகச் சொல்லி விட்டனர். எது நடந்து முடிந்ததோ, அது பிறகு தகுந்த சமயத்தில் தான் ரிப்பீட் ஆகும். அதே தோற்ற அமைப்பு இப்போது இருக்க முடியாது. அது பிறகு சொர்க்கத்தில் தான் இருக்கும். இந்த ஞானத்தை நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். மற்ற அனைவரும் பக்தி செய்து-செய்தே தூய்மை இல்லாதவர்களாக ஆகிக் கொண்டே இருக்கின்றனர். தூய்மையான உலகமாக இருந்தது. உங்களுக்கு பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். நீங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று சொல்லவும் செய்கின்றனர். பாபா சொல்கிறார், நான் ஒன்றும் ஒவ்வொருவரின் மனதையும் அமர்ந்து அறிந்து கொண்டிருக்க மாட்டேன். சிலர் சொல்கின்றனர், பாபா நீங்களோ அனைத்தையும் அறிந்திருக்கிறீர்கள். நாங்கள் விகாரத்தில் செல்கிறோம் - தாங்கள் அனைத்தும் அறிவீர்கள் என்று. பாபா சொல்கிறார், நான் நாள் முழுவதும் அமர்ந்து இதை அறிந்து கொண்டிருப்பேனா என்ன? நானோ தூய்மை இல்லாதவர்களை தூய்மையாக்குவதற்காகவே வருகிறேன்.நீங்கள் அறிவீர்கள், நாம் பாபாவிடமிருந்து சுகத்திற்கான ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். மற்ற அனைவரும் திரும்பவும் முக்திதாமத்திற்குச் சென்று விடுவார்கள். எப்படிச் செல்வார்கள்? இதைப் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டியது என்ன அவசியம்? பாபா தான் வந்து முக்தி-ஜீவன்முக்தியில் அழைத்துச் செல்கிறார். கணக்கு-வழக்கை முடித்து விட்டு அனைவரும் சென்றாக வேண்டும். நீங்கள் சதோபிரதானம் ஆக வேண்டும். நீங்கள் மற்றவர்களின் விஷயத்தில் ஏன் செல்கிறீர்கள்? தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானம் ஆக்குபவர் ஒரே ஒரு தந்தை. பக்தி மார்க்கத்தில் ஞானம் என்பது சிறிதளவு கூட இருக்க முடியாது. ஞானம் மற்றும் பக்தி என்று சொல்கின்றனர். ஞானம் எவ்வளவு காலம், பக்தி எவ்வளவு காலம் நடைபெறுகிறது எனக் கேளுங்கள். அதற்கு அவர்களால் எதுவும் சொல்ல இயலாது. பக்தி வேறு பொருள். பாபா தாமே புரிய வைக்கிறார்-நான் எப்படி வருகிறேன், யாருக்குள் பிரவேசமாகிறேன்? மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் சிக்கியிருப்பதால் என்னை அறிந்து கொள்வதில்லை. அதனால் நீங்கள் சிவ-சங்கர் சித்திரத்தைப் பற்றிப் புரிய வைக்கிறீர்கள். அவர்கள் இருவரையும் ஒருவராக்கி விடுகின்றனர். அவர் சூட்சுமவதனவாசி, இவர் பரந்தாமநிவாசி. இருவருடைய இருப்பிடமும் வெவ்வேறாகும். பிறகு ஒரு பெயர் எப்படி வைக்க முடியும்? அவர் ஆகாரி, இவர் நிராகாரி. சங்கருக்குள் சிவன் பிரவேசமாகி இருக்கிறார் என்று சொல்ல மாட்டார்கள். அதை நீங்கள் சிவசங்கர் எனச் சொல்லி விடுகிறீர்கள். பாபா புரிய வைக்கிறார், நானோ இந்த பிரம்மாவுக்குள் பிரவேசமாகிறேன். சிவன்-சங்கர் ஒருவர் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? சங்கரையோ யாரும் ஒரு போதும் காட் ஃபாதர் (இறைத் தந்தை) எனச் சொல்ல மாட்டார்கள். அவருக்கோ கழுத்தில் பாம்பை வைத்து முகத்தையே எப்படி ஆக்கி விட்டுள்ளனர்! பிறகு காளைமாட்டின் மீது சவாரி காட்டுகின்றனர். சங்கரையோ பகவான் என்று ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஒரு சிவபாபா தான் பக்தியில் அனைவரின் மன ஆசைகளை நிறைவேற்றுகிறார். சங்கரைப் பற்றியோ, கண்ணைத் திறந்ததுமே விநாசம் ஏற்பட்டதாகச் சொல்லி விடுகின்றனர். மற்றப்படி சூட்சுமவதனத்தில் காளை மாடு, பாம்பு போன்ற எதுவும் கிடையாது. அவையோ இங்கே தான் உற்பத்தியாகின்றன. எவ்வளவு கல்புத்தியாக ஆகி விட்டுள்ளனர்! நாம் தூய்மையின்றி உள்ளோம் என்பதையே புரிந்து கொள்வதில்லை. பாபா சொல்கிறார்-நான் இந்த சாதுக்களுக்கும் கூட விமோசனம் தருவதற்காக வந்துள்ளேன். சாதனை செய்யப்படுவது என்பது ஏதேனும் பலன் அடைவதற்காகத் தான். அவ்வாறாயின் சாதுக்கள் பிறகு தங்களை சிவன் அல்லது பகவான் என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? சிவனோ சாதனை செய்ய வேண்டிய தேவை கிடையாது. அவர்களுக்கோ பெயரே சந்நியாசி என்பதாக உள்ளது. பகவான் எப்போதாவது சந்நியாசம் செய்ய வேண்டி உள்ளதா என்ன? சந்நியாசத்தை தாரணை செய்பவர்கள் காவியுடை அணிய வேண்டி உள்ளது. பகவானும் கூட இந்த வேஷத்தை தாரணை செய்ய வேண்டுமா என்ன? அவரோ பதீத-பாவனராக உள்ளார். அவர் சொல்கிறார், இந்த வேஷதாரிகளுக்கும் கூட விமோசனம் அளிக்கிறேன். டிராமாவின் அனுசாரம் ஒவ்வொருவரும் அவரவர் பாகத்தை நடிக்கின்றனர். பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் என்னென்ன செய்கிறார்களோ, அதைப் பற்றி எதையும் புரிந்து கொள்வதில்லை. சாஸ்திரங்களால் யாருக்கும் சத்கதி கிடைப்பதில்லை. ஒரு சத்தியமான தந்தையினால் மட்டுமே சத்கதி கிடைக்கும். டிராமாவின் அனுசாரம் இந்த சாஸ்திரங்களும் அவசியமாக உள்ளன. கீதையில் என்னென்ன எழுதப் பட்டுள்ளது! கீதையைச் சொன்னவர் யார்? அதுவும் யாருக்கும் தெரியாது. நீங்கள் முக்கியமாக கீதை பற்றி வலியுறுத்திச் சொல்ல வேண்டும். கீதை தான் அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாய் போன்றது. இப்போது இந்த தர்ம சாஸ்திரங்களை யார் எப்போது உருவாக்கினார்? அதனால் என்ன ஆயிற்று? யாருக்கும் தெரியாது. கீதையில் எதையெல்லாம் எழுதி வந்திருக்கிறீர்களோ, அது மீண்டும் ரிப்பீட் ஆகும். நாம் அவர்களை நல்லவர் அல்லது கெட்டவர் என்று சொல்லவில்லை. ஆனால் இவை பக்தி மார்க்கத்தின் சாதனங்கள், இவற்றால் கீழே இறங்கியே வந்துள்ளோம் எனப் புரிந்து கொண்டுள்ளோம். 84 பிறவிகளை எடுத்து-எடுத்தே இறங்கும் கலையில் வந்து தான் ஆக வேண்டும். எப்போது அனைவரும் அவரவர் பாகத்தை நடிப்பதற்காக வந்து விடுகின்றனரோ, அப்போது கடைசியில் அனைவரையும் அழைத்துச் செல்வதற்காகத் தந்தை வருகிறார். அதனால் அவர் பதீத-பாவனர், அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் எனச் சொல்லப் படுகிறார். அவர் எப்போது வருகிறாரோ, அப்போது வந்து படைப்பவர் மற்றும் படைப்பின் முதல்-இடை-கடை பற்றிய ஞானத்தைச் சொல்கிறார். இப்போது தந்தை அமர்ந்து பாடம் கற்பிக்கிறார். இதையும் மாயா அடிக்கடி மறக்கச் செய்து விடுகின்றது. இல்லையென்றால் பகவான் நமக்குப் படிப்பு சொல்லித் தந்து உலகின் எஜமானர் ஆக்குகிறார் எனும் போது எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! சத்யுகத்தில் இந்த ஞானம் இருக்காது. பிறகு பக்தி மார்க்கத்தில் அதே பக்தியின் சாஸ்திரங்கள் இருக்கும். 2500 வருடங்கள் இந்த (பக்தியின்) பாகத்தை நடித்தாக வேண்டும். இந்தச் சக்கரத்தின் ஞானம் உங்களது புத்தியில் உள்ளது. அந்த மனிதர்களோ பதீத-பாவனர் பற்றியும் அறிந்திருக்கவில்லை, தூய்மையானவர்களை தூய்மை இல்லாதவர்களாக யார் ஆக்குகிறார் என்பது பற்றியும் அறிந்திருக்கவில்லை. வெறுமனே பொம்மைகளைத் தயாரித்து விளையாடிக் கொண்டே இருக்கின்றனர். எதையும் புரிந்து கொள்ளவில்லை. உங்களுக்குச் சொல்வார்கள், நீங்களும் பாரதவாசிகள். நீங்கள் பிறகு எப்படிச் சொல்கிறீர்கள், பாரதவாசிகள் தான் எதையும் புரிந்து கொள்ளவில்லை, புத்தியற்றவர்கள் என்று? நீங்கள் சொல்லுங்கள்-இந்த எல்லையற்ற தந்தை சொல்கிறார், அதே ஞானத்தை இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் இவர் மூலமாக புத்திசாலி ஆகி யிருக்கிறோம். கண்காட்சியில் அநேக மனிதர்கள் வருகின்றனர். இந்த ஞானம் மிக நன்றாக உள்ளது எனச் சொல்கின்றனர். வெளியில் சென்று விட்டால் முடிந்தது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் இராவணனின் சீடர்கள். நீங்கள் இப்போது இராமரின் சீடர்களாக ஆகியிருக்கிறீர்கள். நமக்கு படைப்பவராகிய தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்கிக் கொண்டிருக்கிறார். பாபா நமக்கு நன்மை செய்கிறார். நாம் பிறகு மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். எவ்வளவு அநேகருக்கு நன்மை செய்கிறீர்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். இது ஆன்மிக சேவை. ஆத்மாக்களுக்குத் தான் புரிய வைக்க வேண்டும். புரிந்து கொள்வதும் ஆத்மா தான். அரைக்கல்பம் நீங்கள் தேக அபிமானி ஆகிறீர்கள். ஆத்ம அபிமானி ஆவதால் அரைக் கல்பம் சுகம். தேக அபிமானி ஆவதால் அரைக் கல்பம் துக்கம். எவ்வளவு வேறுபாடு! நீங்கள் உலகத்தின் எஜமானராக இருந்த போது வேறு எந்த ஒரு தர்மமும் இல்லாதிருந்தது. இப்போது எவ்வளவு மனிதர்கள்! இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) நினைவின் பலத்தினால் அனைத்துக் கணக்கு-வழக்கையும் முடித்து விட்டு சதோபிரதானமாகி வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். மற்ற யாருடைய விஷயங்களிலும் போகக் கூடாது.2) பகவான் நமக்குப் படிப்பு சொல்லித் தந்து உலகத்தின் எஜமானர் ஆக்குகிறார். இதே குஷியில் இருக்க வேண்டும். ஆன்மிக சேவை செய்ய வேண்டும்.வரதானம் :

பவித்திரதாவின் (தூய்மை) ஆதாரத்தில் சுகம்-சாந்தியின் அனுபவம் செய்யக்கூடிய நம்பர் ஒன் அதிகாரி ஆகுக !எந்தக் குழந்தைகள் பவித்திரதாவின் உறுதிமொழியை சதா நினைவில் வைக்கின்றனரோ, அவர்களுக்கு சுகம்-சாந்தியின் அனுபவம் தானாகவே ஏற்படும். பவித்திரதாவின் மூலம் உரிமையைப் பெற்றுக்கொள்வதில் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும். அதாவது சர்வ பிராப்திகளில் நம்பர் ஒன் ஆக வேண்டும். அதனால் பவித்திரதாவின் அஸ்திவாரத்தை ஒரு போதும் பலவீனமாக ஆக்கக் கூடாது. அப்போது தான் கடைசியில் வந்தாலும் வேகமாகச் செல்வீர்கள். இதே தர்மத்தில் சதா நிலைத்திருக்க வேண்டும்-எது நடந்தாலும்- மனிதர்கள், இயற்கை, சூழ்நிலை போன்றவை எவ்வளவு தான் அசைத்தாலும் தர்மத்தை விடக் கூடாது. (எத்தகைய சூழ்நிலையிலும் நம்முடைய தாரணை மற்றும் ஈஸ்வரிய நியமங்களில் அசையாதவர்களாக இருக்க வேண்டும்).சுலோகன் :

வீணானவற்றில் வெகுளி (அறியாதவர்களாக) ஆகி விடுவீர்களானால் உண்மையிலும் உண்மையான புனிதர் (செயின்ட்) ஆகி விடுவீர்கள்.***OM SHANTI***