BK Murli 15 December 2016 Tamil

BK Murli 15 December 2016 Tamil

15.12.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே - நான் ஆத்மா, நான் ஆத்மா என்று பயிற்சி செய்யுங்கள், சரீர உணர்வை விட்டுவிடுங்கள், சிவபாபாவை நினைவு செய்து-செய்து வீட்டிற்குச் செல்ல வேண்டும் அவ்வளவு தான் !

கேள்வி:-

சிவபாபாவிற்கு எந்த குழந்தைகள் மீது மிக-மிக இரக்கம் வருகிறது?பதில்:-

எந்த குழந்தைகள் தங்களுடைய மதிப்புமிக்க நேரத்தை வீணாக்கி விடுகிறார்களோ, பாபா வினுடையவர்களாக ஆகி பாபாவின் சேவை செய்யவில்லையோ, அவர்கள் மீது பாபாவிற்கு அதிகம் இரக்கம் வருகிறது. பாபா கூறுகின்றார் - என்னுடைய குழந்தைகளாக ஆகியுள்ளீர்கள் என்றால், முதல் தரமானவர்களாக ஆகிக் காட்டுங்கள். ஞான ரத்தினம் என்ன கிடைக்கிறதோ, அதை தானம் செய்யுங்கள்.பாட்டு:-

அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன்..................ஓம் சாந்தி.

எப்படி பாபா ஞானக்கடலாக இருக்கின்றாரோ அதுபோல் குழந்தைகளுக்கும் கூட சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் ஞானத்தைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் படங்களைப் பற்றியும் நன்றாக புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். பாபாவிற்கு ஏணிப்படி படத்தைப் பற்றி முழுஇரவும் சிந்தனை சென்று கொண்டிருந்தது. ஏனென்றால், இது பாரதவாசிகளுக்குப் புரியவைப்பதற்கு அனைத்திலும் நல்ல சித்திரமாகும். சிவபாபா ஞானக்கடல் ஆவார், இந்த பாபாவும் கூட ஞானத்தின் துளிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், இதைத் தான் ஞான சிந்தனை என்று சொல்லப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு மிகக் குறைவாகவே ஞான சிந்தனை செல்கிறது. நிறைய குழந்தைகளுக்கு ஞான சிந்தனை செல்வதே இல்லை. ஒவ்வொருவருடைய புத்தியும் சிந்திக்க வேண்டும். ஏணிப்படியைப் பற்றி நிறைய சிந்தனை செல்கிறது. மேலே மூலவதனத்தையும் காட்ட வேண்டும். ஏணிப்படி ஸ்தூல வதனத்தினுடையதாகும், 84 பிறவிகளின் கதையாகும். ஞானம் இல்லாமல் இந்த சித்திரத்தை யாரும் உருவாக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களிடத்தில் தான் ஞானம் இருக்கிறது. ஏணிப்படியை உருவாக்கும்போது கூட ஞான சிந்தனை சென்று கொண்டிருக்க வேண்டும். இது மிகவும் நல்ல பொருளாகும். மேலே கண்டிப்பாக மூலவதனமும் வேண்டும். ஆத்மாக்கள் மூலவதனத்தில் நட்சத்திரத்தைப் போல் இருக்கிறது என்று புரிய வைக்கப்படுகிறது. மூலவதனத்திற்குப் பிறகு பிரம்மா-விஷ்ணு-சங்கர் ஆகியோரின் வதனம் இருக்கிறது, அதைத் தான் சூட்சும வதனம் என்று சொல்லப்படுகிறது. ஏணிப் படியில் பாரதத்தைப் பற்றித் தான் காட்டுகிறார்கள். பாரதம் தூய்மையானதாக இருந்தது, இப்போது தூய்மையற்றதாக இருக்கிறது. வார்த்தைகள் அனைத்தையும் எழுத வேண்டியிருக்கிறது. பாவம் மனிதர்கள் எதையும் தெரிந்திருக்கவில்லை. யார் பூஜிக்கத்தக்கவர்களாக இருந்தார்களோ, அவர்கள் தான் பூஜாரியாக ஆகியிருக்கிறார்கள், இது யாருக்கும் தெரியவில்லை. உங்களில் கூட வரிசைக்கிரமமாகத் தான் தெரிந்துள்ளீர்கள். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சிலர் மிக நன்றாக முயற்சி செய்வதில் ஈடுபடுகிறார்கள். நான் ஆத்மாவாக இருக்கின்றேன். சரீரத்தை மறந்து விடுகிறார்கள், வேறு எதுவும் தென்படுவதில்லை. ஏனென்றால், நீ தன்னை ஆத்மா என்று புரிந்து கொள் என்று புரிய வைக்கப்படுகிறது. சரீர உணர்வு உடைந்து விட வேண்டும். நீங்கள் இறந்து விட்டால், இந்த உலகம் உங்களுக்கு இறந்ததாக ஆகி விடும், என்று சொல்லப்படுகிறது அல்லவா? சிவபாபாவை நினைவு செய்து-செய்து தங்களுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். இந்த நிலையை உருவாக்குவதில் தான் உழைப்பு இருக்கிறது. பாரதத்தில் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது. அப்போது சுகம்-அமைதி-தூய்மை இருந்தது என்று ஏணிப்படி படத்தில் புரிய வைக்கப்படுகிறது. இப்போது மனிதர்கள் துக்கமடையும்போது வீட்டை நினைவு செய்கிறார்கள். யாருக்கு வேண்டுமானாலும் இந்த ஏணிப்படி படத்தைப் புரிய வைப்பது மிகவும் நல்லதாகும். ஏணிப்படி படத்திற்கு முன் சென்று அமர்ந்து கொண்டால், பாரதவாசிகளாகிய நாம் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். 84 பிறவிகளை நிரூபிக்க வேண்டும். பிறகு இந்த கணக்கி-ருந்து, யார் அரை கல்பத்திற்குப் பிறகு வருகிறார்களோ, அவர்களுக்கு கண்டிப்பாக குறைவான பிறவிகளே இருக்கும், என்று புரிய வைக்கப்படுகிறது. முழு நாளும் இந்த ஞானம் புத்தியில் வந்து கொண்டே இருக்க வேண்டும். சத்யுகம் திரேதாவில் சம்பூரண நிர்விகாரிகளாக, பூஜிக்கத்தக்கவர்களாக இருந்தார்கள், பிறகு விகார பூஜாரிகளாக ஆகி விட்டனர். விகாரிகளாக ஆன காரணத்தினால் தான் தங்களை இந்து என்று சொல்-க் கொண்டிருக்கிறார்கள். வேறு யாரும் தங்களுடைய தர்மத்தின் பெயரை மாற்றவில்லை. இந்துக்கள் தான் மாற்றியிருக்கிறார்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கிறது. ஞானக்கடல் பாபா உங்களுக்கு புதிய ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஏணிப்படி படத்தில் நிறைய குழந்தைகள் கவனம் அளிக்க வேண்டும். யாரும் படத்திற்கு முன்னால் வந்து அமர்ந்தால் கூட புத்தியில் அனைத்தும் வந்து விடும். 84 பிறவிகளின் சக்கரத்தை எப்படி புரிய வைப்பது? என்று முழு இரவும் புத்தி வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். அரைகல்பம் இராவண இராஜ்யம், பின்னால் யார் வருகிறார்களோ அவர்கள் இந்த ஞானத்தை எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள். சத்யுகம் திரேதாவில் வருபவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். யார் சத்யுகம் திரேதாவில் வரவே வேண்டாமோ, அவர்கள் இந்த ஞானத்தை எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள். இப்போது பாரதத்தில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள். சத்யுகத்தில் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை தான் இருக்கும். கடைசியில் கொஞ்சம் குழப்பம் நடக்கிறது, ஆனால் விகாரத்தின் விஷயம் எதுவும் கிடையாது. துவாபர யுகத்தில் தான் இராவண இராஜ்யம் நடக்கிறது. ஆனால் திரேதாவில் இரண்டு கலைகள் குறைந்து விடுவதின் மூலம் சிறிது தூய்மை குறைந்து விடுகிறது. இராவண இராஜ்யம் மற்றும் இராம இராஜ்யத்தைப் பற்றியும் யாரும் புரிந்து கொள்வதில்லை. இராஜ்ய பதவி அடையக் கூடியவர்கள் நன்றாகப் படிப்பார்கள். யாருக்காவது நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வேண்டும். ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் முயற்சியே செய்வதில்லை. தாரணை செய்து கொண்டே சென்றால் பாபாவும் சேவைக்கு அனுப்பி வைப்பார். யாருக்கு சேவையில் ஆர்வம் இருக்கிறதோ, அவர்கள் இரவும் பகலும் சேவை செய்கிறார்கள். யாராவது ஏணிப்படியின் இரகசியத்தைப் புரிந்து கொண்டால் குஷியின் அளவு அதிகரித்து விடும். பாபா ஞானக்கடலாக இருக்கின்றார், குழந்தைகளாகிய நாம் நதிகளாக இருக்கின்றோம் என்றால் அதை வெளிப்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்லும். இராஜ்யம் ஸ்தாபனை ஆகத்தான் வேண்டும். சத்யுகத்தில் உயர்ந்த தூய்மையான பாரதம் தான் இப்போது தூய்மையற்ற கீழான துர்கதியை அடைந்த பாரதமாக இருக்கிறது என்பது ஏணிப்படியில் காட்டப்பட்டுள்ளது. அனைவரும் துர்கதியை அடைந்துள்ளனர், ஆகையினால் தான் பாபா வந்து சத்கதி அடையச் செய்கின்றார். இதில் சில ஆத்மாக்கள் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். தர்ம சிந்தனையுடைய மனிதர்கள் அந்தளவிற்கு பாவ கர்மம் செய்வதில்லை. வேசிகள் போன்றோர் நிறைய பாவ கர்மம் செய்கிறார்கள். இது விஷம் நிறைந்த உலகமாகும். சத்யுகம் சிவாலயமாகும், அதனை சிவபாபா ஸ்தாபனை செய்கின்றார். அதனை கிருஷ்ணபுரி என்றும் சொல்கிறார்கள் அதாவது கிருஷ்ணாலயம் என்றும் சொல்லலாம்... ஆனால் ஸ்தாபனை செய்வது சிவபாபா ஆவார். இந்த ஏணிப்படி படம் கூட அவசியமானதாகும். இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏணிப்படியைப் பார்த்தவுடன் முழு 84 பிறவிகளின் சக்கரமும் புத்தியில் வந்து விடுகிறது. ஆனால் உள்ளுக்குள் மிகுந்த தூய்மை இருக்க வேண்டும். சிவபாபாவுடன் யோகம் இருக்க வேண்டும். அப்போது தான் போதை அதிகரிக்கும், மேலும் பதவியும் அடைய முடியும். எந்த பதவி கிடைத்தாலும் பரவாயில்லை, அதிர்ஷ்டத்தில் என்ன இருக்குமோ........... சேவைக்கான ஆர்வம் வைக்க வேண்டும். சரீரத்தின் மீது நம்பிக்கை இல்லை. இன்னும் போகப்போக இயற்கைச் சீற்றங்களும் வேகமாக வந்து கொண்டிருக்கும். பிறகு வெறும் கையோடு செல்வீர்கள். பூகம்பத்தில் லட்சக்கணக்கானவர்கள் இறக்கிறார்கள் என்றால், பயம் இருக்க வேண்டும், யோக யாத்திரையின் மூலம் நாம் சதோபிரதானமானவர்களாக ஆகி விட வேண்டும் பிறகு மற்றவர்களையும் மாற்ற வேண்டும். செல்வத்தை பிறருக்குக் கொடுத்தால் செல்வம் குறையாது........... உழைக்க வேண்டும். நீங்கள் 21 பிறவிகளுக்கு தங்களுடைய சொந்த கா--ல் நிற்க வேண்டும், ஆகையால் நல்ல விதத்தில் முயற்சி செய்து கொண்டிருங்கள் என்று பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். முயற்சி செய்ய வேண்டிய நேரமே இது தான். 21 பிறவிகளுக்கு இராஜ்யம் எப்படி கிடைக்கிறது என்று உலகத்தில் யாருக்குமே தெரியாது. நீங்கள் இந்த ஏணிப்படி படத்தின் மூலம் நன்றாகப் புரிய வைக்க முடியும். 84 பிறவிகள் எப்படி எடுக்கிறார்கள்? சிவபகவானுடைய மகாவாக்கியம், நிராகாரமான தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் ஞானக்கடல் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார், என்று மேலே எழுதப்பட்டிருக்கிறது. யாருக்குப் புரிய வைக்கின்றீர்களோ, அவர்கள் பிறகு மற்றவர்களுக்கும் புரிய வைப்பார்கள், குழந்தைகளே! இப்போது உங்களுக்கு அளவற்ற செல்வம் கிடைக்கிறது எனும்போது அதைப் பெற வேண்டும். உயர்ந்த பதவி அடைய வேண்டும். இது குடும்ப மார்க்கத்தின் ஞானமாகும். ஒரே வீட்டில் ஒருவர் ஞானத்தில் இருக்கிறார், மற்றவர் இல்லை. பிரச்சனைகள் வரத்தான் செய்யும். நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் பூஜிக்கத்தக்க நிலையி-ருந்து எப்படி பூஜாரிகளாக ஆனோம் என்ற இரகசியம் புரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். யார் அனைத்திலும் அதிகமாக பூஜிக்கத்தக்க தூய்மையானவர்களாக ஆகிறார்களோ, அவர்கள் தான் அனைத்திலும் அதிகமாக தூய்மையற்றவர்களாக ஆகிறார்கள். இவருடைய (பிரம்மா பாபாவின்) நிறைய பிறவிகளின் கடைசியில் தான் பிரவேசித்திருக்கிறேன். அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? பாபாவும் புரிய வைக்கின்றார் என்றால், தாதாவும் புரிய வைக்கின்றார், மேலும் தாதிகளும் புரிய வைக்கின்றார்கள். சகோதர-சகோதரிகளின் தொழிலே இது தான் ! குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக இருந்தார்கள் என்றால், உங்களை விடவும் வேகமாக செல்லலாம். யார் முட்கள் நிறைந்த காட்டில் இருந்து கொண்டே சேவை செய்கிறார்களோ, அவர்களுக்கு அதிக பலன் கிடைக்கிறது. குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே யார் நன்றாக சேவை செய்கிறார்களோ, அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். சிவபாபாவும் உதவி செய்வார் அல்லவா? நல்லது, சேவையைவிட்டு விட்டு இந்த இடத்திற்கு செல்லுங்கள் என்று சொல்வார். புரொஜக்டர் காட்சிக்காக அழைப்பு வருகிறது. கூடவே 4-5 முக்கியமான படங்களையும் எடுத்துச் செல்லுங்கள். அங்கே சேவை செய்து விட்டு வாருங்கள். யாருக்கு சேவையின் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள், நாங்கள்சென்று புரிய வைக்கிறோம் என்று சொல்வார்கள். அங்கே செண்டர் கூட திறக்கலாம். நிறைய அழைப்புகள் வரலாம். சேவை வளர்ந்து கொண்டே செல்லும். பாபா புகழ் பாடுவார் அல்லவா? இந்த குழந்தை மிகவும் நன்றாக சேவை செய்ய கூடிய குழந்தை என்று. சிலர் சேவை என்றால் 3 காத தூரம் ஓடுகிறார்கள். சேவையில் ஆர்வம் வைக்கும் போது உதவியும் கிடைக்கிறது. எந்தளவிற்கு பாபாவின் சேவை செய்வீர்களோ, அந்தளவிற்கு சக்தி கிடைக்கும், ஆயுளும் அதிகரிக்கும். குஷியின் அளவு அதிகரிக்கும். தங்களுடைய குலத்தில் பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். முயற்சியின் மூலம் இந்தளவிற்கு உயர்ந்தவர்களாக ஆக முடியும் என்றால் அந்தளவிற்கு முயற்சி செய்ய வேண்டும். யாருக்கு சேவையின் மீது ஆர்வம் இருக்கிறது என்பது, நடத்தையின் மூலமே தெரிந்து விடுகிறது. இரவும்-பகலும் தங்களுடைய வருமானத்தின் கவலை இருக்க வேண்டும். மிகப் பெரிய வருமானமாகும். பாபாவிற்கும் கூட அடிக்கடி குழந்தைகளை புத்துணர்வுபெறச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை வருகிறது. மிகுந்த குஷி ஏற்படும்.பாபாவிற்கு சேவாதாரி குழந்தைகள் தான் நினைவுக்கு வருகிறார்கள். அமிர்தவேளையில் ஞான சிந்தனையின் நடனம் மிக நன்றாக நடக்கிறது. யாருக்கு என்ன தொழிலோ அதிலேயே ஈடுபட்டு இருக்கிறார்கள். அதிகாலையில் ஞான சிந்தனை நடக்கிறது. குழந்தைகள் கூட முத-ல் முரளியை நல்ல விதத்தில் தாரணை செய்ய வேண்டும். ரிவைஸ் செய்ய வேண்டும், பிறகு வந்து முரளி வாசிக்க வேண்டும். முன்பெல்லாம் பாபா இரவு இரண்டு மணிக்கு எழுந்து எழுதுவார். பிறகு அதிகாலையில் மம்மா முரளியைப் படித்து விட்டு பிறகு வகுப்பு நடத்துவார். முரளி கையில் இல்லாமல் இருந்தாலும் கூட நன்றாக நடத்த முடியும். எந்தெந்த குழந்தைகளுக்கு முரளியை படிப்பதற்கும் அதைப்பற்றி சிந்தனை செய்வதற்கும் ஆர்வம் இருக்கிறதோ, அவர்கள் சேவை செய்து கொண்டே இருப்பார்கள். முரளியைப் படிப்பதின் மூலம் விழித்துக் கொள்வார்கள். இந்த முரளியை பதிப்பிக்கும் காரியம் மிக ஜோராக நடக்கும். டேப்ரிகார்டரின் வேலையும் அதிகம் வளர்ந்து விடும். வெளி நாடுகள் வரை கூட முரளி  செல்லும் .யாருடைய புத்தியிலாவது பதிந்து விட்டால் ஒரேடியாக போதை ஏறிவிடும் . எழும்போதும்-அமரும்போதும் 84 பிறவிகளின் சக்கரம் புத்தியில் சுற்றிக் கொண்டே இருக்கும். சிலருடைய புத்தியில் எதுவும் நிற்பதில்லை. குஷியின் அளவு அதிகரிப்பதில்லை. உங்களுடைய முழு நாள் வேலையும் இதுவாகவே இருக்க வேண்டும். இது உயர்ந்ததிலும் உயர்ந்த காரியமாகும். பாபாவை வியாபாரி என்றும் சொல்லப்படுகிறது. இந்த அழிவற்ற ஞான ரத்தினங்களின் வியாபாரத்தை வெகு சிலரே செய்கிறார்கள். முழு நாளும் இதே விஷயம் புத்தியில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் மேலும் குஷியில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இவையனைத்தும் உள்ளார்ந்த குஷி ஆகும். ஆஹா - ஆத்மாவிற்கு குஷி ஏற்படுகிறது. நமக்கு பாபா கிடைத்து விட்டார். எல்லையற்ற தந்தை 84 பிறவிகளின் கதையைக் கூறியிருக்கின்றார். குழந்தைகளே, தந்தைக்கு, டீச்சருக்கு நன்றி தெரிவிப்பீர்கள் அல்லவா? மாணவர்கள் டீச்சரின் மூலம் தேர்ச்சி பெறுகிறார்கள் என்றால் டீச்சருக்கு பரிசு கூட அனுப்புகிறார்கள். பாபா நமக்கு உயர்ந்த கல்வியைக் கற்பிக்கின்றார், அதன் மூலம் நாம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகி விடுகிறோம், என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இந்த படிப்பு மிகவும் சகஜமானதாகும். ஆனால் முழுமையாக கவனம் கொடுப்பதில்லை. முதல்தரமான ஞானமாகும். இதனைப் புரிந்து கொள்வதின் மூலம் எதிர்காலத்திற்கு அளவற்ற பொக்கிஷம் கிடைக்கிறது. அதிசயம் அல்லவா! நாம் எந்த தரத்தில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கொள்ள முடியும். அனைத்தும் சேவையில் தான் ஆதாரப்பட்டிருக்கிறது. மூன்றாம் தரத்தி-ருந்து முதல் தரத்திற்கு வந்து விடுங்கள். அப்போது தான் ஏதாவது பதவி அடைய முடியும், என்று பாபா கூறுவார். 21 பிறவிகளின் முடிவு வெளிவந்து விடுகிறது. பாபாவிற்கு இரக்கம் வருகிறது. நேரத்தை வீணாகச் செலவழிக்கிறார்கள். சத்கதியை அளிப்பதற்காக நாடகத்தின் திட்டப்படி நான் வர வேண்டியிருக்கிறது என்று பாபா புரிய வைக்கின்றார். இது துர்கதியில் இருக்கும் உலகமாகும். நீங்கள் துர்கதியில் இருக்கின்றீர்களா என்று கேளுங்கள்? எங்களுக்கு இதுவே சொர்க்கம் தான் என்று சொல்வார்கள். நாங்கள் சொர்க்கத்தில் தான் அமர்ந்திருக்கிறோம். சத்யுகத்தை தான் சொர்க்கம் என்று சொல்லப்படுகிறது என்பது அவர்கள் புத்தியில் வருவதில்லை. பெரிய-பெரிய பண்டிதர்கள் வித்வான்கள் இருக்கிறார்கள். யாருடைய புத்தியிலும் இது பழைய க-யுக உலகம் என்பது வருவதில்லை. மிகவும் கர்வத்தோடு அமர்ந்திருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தின் வேகம் எவ்வளவு இருக்கிறது. பக்தியின் பகட்டு அதிகம் இருக்கிறது. கும்பமேளாவில் லட்சக்கணக்கான மனிதர்கள் செல்கிறார்கள். இது கடைசி பகட்டாகும். மாயை இந்தப் பக்கம் வர விடுவதில்லை. எ-யைப் போல் ஊதி விடுகிறது, இரத்தம் அனைத்தையும் உறிஞ்சி விடுகிறது. நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) அதிகாலையில் எழுந்து ஞான சிந்தனை செய்ய வேண்டும். முரளியைப் படித்து அதைப் பற்றி சிந்தனை செய்து தாரணை செய்ய வேண்டும். அழிவற்ற ஞான ரத்தினங்களின் வியாபாரம் செய்ய வேண்டும்.2) சேவை செய்வதற்கு மிகுந்த ஆர்வம் வைக்க வேண்டும். சரீரத்தின் மீது எந்த நம்பிக்கையும் கிடையாது, எனவே 21 பிறவிகளுக்கான வருமானத்தை இப்போதே சேமிக்க வேண்டும்.வரதானம்:-

இரக்கமுடைய பார்வை மூலம் வெறுப்பு நிறைந்த பார்வையை மாற்றக் கூடிய ஞானம் நிறைந்தவர் ஆகுக !எந்த குழந்தை மற்றவருடைய சம்ஸ்காரங்களை அறிந்து சம்ஸ்கார மாற்றம் செய்வதில் ஈடுபாட்டில் உள்ளாரோ இவர் இப்படித்தான் என்று ஒருபோதும் யோசிப்பதே இல்லை அப்படிப்பட்டவரைத்தான் ஞானம் நிறைந்தவர் எனக் கூறுவர். அவர்கள் தன்னைப் பார்ப்பதோடு தடையற்றவர் ஆகின்றனர். அவர்களுடைய சம்ஸ்காரங்கள் தந்தைக்கு சமமான இரக்க மன முடையதாக ஆகிவிடுகிறது. இரக்கப் பார்வை, வெறுப்பான பார்வை இல்லாமலாக்கி விடுகிறது. அவ்வாறான இரக்க மன முடைய குழந்தை ஒருபோதும் தங்களுக்குள் சண்டை சச்சரவு செய்வதில்லை. அவர்கள் நல்ல குழந்தைகளாகி நிரூபிக்கின்றனர்.சுலோகன்:-

எப்போதுமே பரமாத்ம சிந்தனை செய்பவர்கள் தான் கவலையற்ற ( பாதுஷா) இராஜா ஆவார்கள். அவர்களுக்கு எந்த விதமான கவலையும் இருக்க முடியாது.***OM SHANTI***