BK Murli 16 December 2016 Tamil

BK Murli 16 December 2016 Tamil

16.12.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் அரைக் கல்பத்திற்கு சுகதாமத்தில் விடுமுறை நாள் கொண்டாடுவீர்கள், ஏனெனில் அங்கு துக்கத்தின் பெயர், அடையாளம் கிடையாது. கேள்வி: தனது வாழ்க்கையை வெற்றியுடையதாக ஆக்கிக் கொள்ளும் அளவிற்கு பிராமண குழந்தைகளுக்கு தந்தை என்ன யுக்தி கூறுகின்றார்?கேள்வி:

தனது வாழ்க்கையை வெற்றியுடையதாக ஆக்கிக் கொள்ளும் அளவிற்கு பிராமண குழந்தைகளுக்கு தந்தை என்ன யுக்தி கூறுகின்றார்?பதில்:

பாபா கூறுகின்றார் - இனிய குழந்தைகளே! தனது வாழ்க்கையை (வெற்றி) பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமெனில் தனது உடல், மனம், பொருள் அனைத்தையும் ஈஸ்வரிய சேவையில் ஈடுபடுத்துங்கள். தந்தையைப் பின்பற்றுங்கள். பிறகு பாருங்கள், அதற்கு கைமாறாக என்ன கிடைக்கிறது! ஆத்மா தங்கமாக ஆகி விடும். உடலும் மிக அழகானதாக கிடைக்கும். அளவற்ற செல்வமும் கிடைத்து விடும்.பாட்டு:

கடைசியில் அந்த நாள் இன்று வந்து விட்டது .........ஓம்சாந்தி.

எப்போது தந்தை ஓம்சாந்தி என்று கூறுகிறாரோ அப்போது தாதாவும் (பிரம்மாவும்) ஓம்சாந்தி என்று கூறுகின்றார். குழந்தைகளும் உள்ளுக்குள் ஓம்சாந்தி என்று கூறுகின்றனர். யாராவது சொற்பொழிவு செய்யும் போதும் கூட ஓம்சாந்தி என்று கூறுகின்றனர். அங்கு அமர்ந்திருக்கும் அனைவரும் கூட ஓம்சாந்தி என்று கூறுகின்றனர். அவசியம் பதிலுரை செய்ய வேண்டியிருக்கிறது. ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்திருக்கிறீர்கள். ஆத்மா பரமாத்மாவைப் பிரிந்து வெகு காலம் ஆகிவிட்டது என்று பாடப்பட்டிருக்கிறது. யாரைப் பிரிந்து வெகு காலம் ஆகிவிட்டதோ அவரை இப்போது நேரில் சந்திக்கிறீர்கள். அவர் தனது நடிப்பை நடிப்பதற்காக வருகின்றார். பக்தி மார்க்கத்தில் யாரை அரைக் கல்பமாக தேடிக் கொண்டிருக்கிறீர்களோ அவரை சந்திக்கக் கூடிய நாளும் வந்து விட்டது. ஒரே ஒரு பாரதம் மட்டுமே அழிவற்ற கண்டமாகும், மற்ற அனைத்தும் அழியக் கூடிய கண்டங்களாகும். புது உலகில் பாரதம் மட்டுமே இருக்கும். பாரதம் ஒருபோதும் அழிவது கிடையாது. இது இருக்கவே செய்கிறது. இப்போது எத்தனையோ கண்டங்கள் உள்ளன! பாரதத்தில் எப்போது தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்ததோ, அப்போது அங்கு வேறு எந்த கண்டமும் கிடையாது, பாரதவாசிகள் மட்டுமே இருந்தனர், வேறு எந்த மனிதர்களும் கிடையாது. பாரதத்தில் சூரியவம்சி தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இப்போது அவர்களது சிலைகள் மட்டுமே இருக்கிறது. நினைவுச் சின்னங்கள் இருக்க வேண்டும் அல்லவா! முன்பு எவ்வளவு சிறிய மரமாக இருந்தது. அது தான் இராம இராஜ்யம், ஈஸ்வரிய இராஜ்யம் என்று கூறப்படுகிறது. ஈஸ்வரனால் ஸ்தாபனை செய்யப்பட்டது அல்லவா! இப்போது அசுர ஸ்தாபனை மற்றும் சத்யுகம் தெய்வீக ஸ்தாபனை ஆகும். ஈஸ்வரிய ஸ்தாபனை அரைக் கல்பத்திற்கு நடைபெறுகிறது, பிறகு அசுர ஸ்தாபனை ஏற்படுகிறது. அது இராவண இராஜ்யம் என்று கூறப்படுகிறது. அது விகாரமற்ற உலகமாகும், இது விகார உலகமாகும். இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? என்பதை உலகில் யாரும் அறியவில்லை. தேவி தேவதைகள் எங்கு சென்றனர்? தூய்மையான நிலையிலிருந்து பிறகு தூய்மையில்லாமல் எவ்வாறு ஆனார்கள்? ஏணியில் இறங்க வேண்டியிருக்கும் அல்லவா! கலைகள் குறைந்து கொண்டே செல்கிறது. சந்திரகிரகணம் ஏற்படும் போது தானம் கொடுத்தால் கிரகணம் நீங்கி விடும் என்று கூறுவார்கள். 5 விகாரங்களை விட்டு விடுங்கள் என்று தந்தை இப்போது கூறுகின்றார். எப்போது நீங்கள் இராவணனின் சிறையிலிருந்து விடுபடுவீர்களோ அப்போது இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகிவிடும். அங்கு 5 விகாரங்கள் இருக்காது என்பதும் யாருக்கும் தெரியாது. இது சதா காலத்திற்கும் நடைபெற்று வருவதாக மனிதர்கள் நினைக்கின்றனர். உலக மனிதர்களிடத்தில் பல வழிகள் உள்ளன. நீங்கள் ஒரே வழியில் இருக்கிறீர்கள் - இது தான் அத்வைத வழி என்று கூறப்படுகிறது. இங்கு அசுர வழி இருக்கிறது. பாரதவாசிகளாகிய நாம் இராம இராஜ்யத்தில் இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பூஜைக்குரிய நிலையிலிருந்து பூஜாரிகளாக ஆகிவிட்டோம். குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இப்போது இந்த ஞானம் அமர்ந்திருக்கிறது. நாம் தான் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், பிறகு மறுபிறப்பு எடுத்து எடுத்து பூஜாரிகளாக ஆகிவிட்டோம். பரமாத்மா தான் பூஜைக்குரிய நிலையிலிருந்து பூஜாரியாக ஆகின்றார் என்று அவர்கள் நினைக்கின்றனர். அனைத்தும் அவரது லீலைகள் தான், அனைவரும் பரமாத்மாவாக இருக்கின்றனர், இது அனைத்தையும் விட மிகப் பெரிய தவறாகும். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு குஷி ஏற்படுகிறது. எந்த தந்தையை அரைக் கல்பம் நினைவு செய்தோமோ அவர் இப்போது கிடைத்திருக்கின்றார். துக்கத்தின் போது அனைவரும் நினைவு செய்வர், சுகத்தின் போது யாரும் நினைக்க மாட்டார்கள் என்று கூறுகின்றனர். அதே ஆத்மாக்கள் துக்கப்படுகின்ற பொழுது தந்தையை நினைவு செய்கின்றனர். சத்யுகத்தில் யாரும் தந்தையை அழைக்கமாட்டார்கள். ஆக இப்போது ஆத்மாக்கள் பரமாத்மாவுடன், பரமாத்மா ஆத்மாக்களுடன் சந்திப்பு நிகழ்கிறது. தந்தை தான் ஞானக் கடலானவர், இதில் தண்ணீருக்கான விசயம் கிடையாது. சங்கமத்தில் எவ்வளவு பெரிய மேளா (திருவிழா) நடைபெறுகிறது பாருங்கள்! இப்போது உங்களது உண்மையிலும் உண்மையான திருவிழா நடைபெறுகிறது. அனைவரும் ஒரே நேரத்தில் சந்திக்க முடியாது. சிலர் எங்கிருந்தோ, சிலர் வேறு எங்கிருந்தோ வருகின்றனர்! மேளா நடைபெறும் இடத்திற்கு குளிப்பதற்காக லட்ச கணக்கில் மனிதர்கள் செல்கின்றனர். ஜென்ம ஜென்மமாக இவ்வாறு குளித்து வருகின்றனர். இந்த மேளா கால காலமாக நடைபெற்று வருகிறது என்று கூறுகின்றனர். சிறிய கும்ப மேளா என்றும் பெரிய மேளா என்றும் கூறுகின்றனர். இப்போது தூய்மை இல்லாதவர்களை தூய்மை ஆக்குவதற்காக தந்தை ஒரே ஒரு முறை தான் வருகின்றார். கங்கை பதீத பாவனி (தூய்மை ஆக்கக் கூடியது) எனில் அது ஞானம் கூறுமா? இங்கு பதீத பாவன் (தூய்மைபடுத்தும்) தந்தை அமர்ந்து சிருஷ்டி சக்கரத்தின் முதல், இடை, கடையின் ஞானத்தை கூறுகின்றார். உலகின் நிலை என்ன? என்பதை குழந்தைகள் அறிவீர்கள். குழந்தைகள் விநாசத்தை பார்த்திருக்கிறீர்கள். இந்த பிரம்மா தான் அர்ஜுன் அல்லவா! இது மனித ரதமாகும். நான் விநாசத்தையும் பார்த்திருக்கிறேன், தனது இராஜ்யத்தையும் பார்த்திருக்கிறேன், அதனால் தான் அனைத்தையும் விட்டு விட்டேன் என்று இவர் கூறுகின்றார். வீடு போன்றவைகளை உடனேயே விட்டு விட்டார். விநாசம் ஏற்பட்டே ஆக வேண்டும். இது ஒன்றும் புதிய விசயம் அல்ல.இது ஈஸ்வரிய சபை ஆகும். இதில் தூய்மையற்ற யாரும் அமரக் கூடாது. இல்லையெனில் தூய்மை இழந்தவர் ஆவதனால் அவர் ஒரேயடியாக பாதாளத்திற்கு சென்று விடுவார், ஆகையால் தூய்மை இல்லாதவர்கள் வருவதற்கு உரிமை கிடையாது. இவ்வாறு சிலர் வந்து விடுகின்றனர். நான் விகாரத்தில் சென்றது இவர்களுக்கு எப்படி தெரியும்? என்று நினைக்கின்றனர். இது மிகவும் தீய விசயமாகும். அயல்நாட்டில் 4-5 குழந்தைகளை பெற்றெடுப்பவர்களுக்கு பரிசு கிடைக்கிறது. சத்யுகத்தில் ஒரே ஒரு குழந்தை தான் இருக்கும், அதுவும் விகாரத்திற்கான விசயம் அங்கு இருக்காது. அங்கு இராவண இராஜ்யமே கிடையாது. அது இராம இராஜ்யமாகும். கன்னி பெண்ணுக்கு திருமணம் செய்கின்றனர் எனில் யாருக்கும் தெரியாத அளவிற்கு அவருக்கு குப்தமான முறையில் அதிகம் சீர் செய்கின்றனர். குழந்தைகளே! உங்களுக்கு குப்தமாக தானம் செய்கிறேன் என்று தந்தையும் (சிவபாபா) கூறுகின்றார். நான் என்ன கொடுக்கிறேன் என்பது யாருக்காவது தெரியுமா என்ன? இது குப்தமானது ஆகும். இந்த பி.கு உலகிற்கு எஜமானர்களாக ஆவார்கள் என்பது யாரும் புரிந்து கொள்ள முடியாது. இதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள், நாம் உலகிற்கு எஜமானர்களாக இருந்தோம், பிறகு 84 பிறவிகள் எடுக்கிறோம். நாம் கல்ப கல்பத்திற்கு பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைகிறோம். பாபா, நாங்கள் கல்ப கல்பமாக உங்களை சந்திக்கிறோம் என்று கூறுகிறீர்கள். கல்பத்திற்கு முன்பும் சந்தித்திருந்தீர்கள். பாபாவைத் தான் ராம் என்று கூறுகிறோம். திரேதா யுகத்தில் வரக் கூடிய ராமர் அல்ல, அவரை அவரது குழந்தை மட்டுமே பாபா என்று கூறுவார். இவர் எல்லையற்ற தந்தை ஆவார். இப்போது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்து தேவ-தேவிகளாக ஆக வேண்டும். இந்த தேவி தேவதைகளுக்கு எவ்வளவு மகிமை செய்கின்றனர்! ஆனால் எதுவும் புரிந்து கொள்வது கிடையாது. அச்சுதம் கேசவம் ....... என்று கூறுகின்றனர். இராமர் எங்கிருக்கின்றார், நாராயணன் எங்கிருக்கின்றார்! அனைவரையும் ஒன்றாக்கி விடுகின்றனர். எந்த பொருளும் வெளிப்படுவது கிடையாது. இப்போது உங்களுக்கு சுருக்கமாக புரிய வைக்கப்படுகிறது. துவாபர யுகத்திலிருந்து இந்த பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறது. 84 பிறவிகள் எடுத்து கீழே இறங்கியே ஆக வேண்டும். 84 பிறவிகள் என்று கூறப்படுகிறது. இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் 84 பிறவிகள் எடுப்பீர்களா? அல்லது சிலர் 80-82 பிறவிகளும் எடுப்பீர்களா? என்று பாபா கேட்பார். அனைவரும் தேர்ச்சி அடைந்து விடுவீர்களா? (பாபாவின் கை விட்டு) செல்பவர்களுக்கு பிறவிகள் குறைந்து விடாதா? மனநிலையைப் பொறுத்து தான் ஒவ்வொருவரின் பாகமும் இருக்கும் அல்லவா! பலர் ஆச்சரியப்படும் அளவிற்கு ஓடி விடுவார்கள். பிறகு சத்யுகத்திற்கு எப்படி வருவார்கள்! அவர்கள் பிரஜைகளிலும் மிக தாமதமாக வருவார்கள். ஏனெனில் நிந்தனை செய்கின்றனர். இவ்வளவு பேரும் சூரிய வம்சத்திற்கு வந்து விட முடியாது. வரிசைக் கிரமமான முயற்சியின் படி மாலை உருவாகிறது. தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார். அவரிடத்தில் எந்த ஞானம் இருக்கிறது. என்பதையும் யாரும் அறியவில்லை. இப்போது உங்களுக்கு ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் புகழ் மட்டுமே பாடுகின்றனர், எதையும் புரிந்து கொள்வது கிடையாது. இது தான் பக்தி மார்க்கம் என்று கூறப்படுகிறது. கொண்டாடப்படும் விழாக்கள் (சடங்குகள்) அனைத்தும் இந்த நேரத்திற்கானது ஆகும், இதையே பின் நாட்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. உங்களுக்கு அரைக் கல்பம் சுகத்தில் விடுமுறை நாட்கள் கிடைத்து விடுகிறது. ஒருபோதும் துக்கத்தின் பெயரை பார்க்கமாட்டீர்கள். விடுமுறை நாட்களாகி ஆகிவிடும், ஏனெனில் நீங்கள் தூய்மையாக ஆகிவிடுகிறீர்கள் அல்லவா! இது உங்களது கடைசிப் பிறவி என்று தந்தை புரிய வைக்கின்றார். எப்போது இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறதோ அது மரண உலகம் என்று கூறப்படுகிறது. மரண உலகம் ஒழிக ...... அமரலோகம் வாழ்க என்றாகி விடும். சுகம் மற்றும் துக்கம், இராமர் மற்றும் இராவணனின் விளையாட்டு இது. இராமர் மூலம் நீங்கள் இராஜ்யத்தை அடைகிறீர்கள், இராவணனின் மூலம் நீங்கள் இராஜ்யத்தை இழக்கிறீர்கள். தந்தை கூறுகின்றார் - நீங்கள் உங்களது வாழ்க்கையை அறிந்திருக்கவில்லை. வேறு யாரும் இவ்வாறு கூற முடியாது, தந்தை தான் கூறுகின்றார். அவர்கள் 84 லட்சம் பிறவிகள் என்று கூறி விட்டனர். பிறகு கல்பத்தின் ஆயுள் பல இலட்சம் ஆண்டுகளாக ஆகிவிடுகிறது. எதுவும் புத்தியில் வருவது கிடையாது, இந்த விசயங்களை யாரும் புரிந்து கொள்ளவும் முடியாது. கல்பத்தின் ஆயுளையும் தவறாக எழுதி விட்டனர். இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையது. குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு எளிதாகப் புரிய வைக்கப்படுகிறது! நாளடைவில் இன்னும் நல்ல முறையில் புரிய வைப்பேன். யாராவது இறக்கின்றனர் எனில் அந்த நேரத்தில் மட்டும் சிறிது வைராக்கியம் வந்து விடுகிறது. அது மயான வைராக்கியம் என்று கூறப்படுகிறது. மயானத்திலிருந்து வெளியே வந்து மார்கெட்டுக்குச் சென்று விட்டால் அவ்வளவு தான், மாமிசம் போன்றவைகளை வாங்குகின்றனர். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது முழு பழைய உலகின் மீது வைராக்கியம் ஏற்படுகிறது. வைராக்கியம் இரண்டு வகையாக உள்ளது என்று பாபா புரிய வைக்கின்றார். துறவற மார்க்கத்திலுடைய வர்களுடையது எல்லைக்குட்பட்ட வைராக்கியம். அவர்கள் இல்லற மார்க்கத்தினர்களுக்கான ஞானம் கொடுக்கவே மாட்டார்கள். இருவரும் தூய்மையாக ஆகுங்கள் என்று அவர்கள் கூற முடியாது. அவர்கள் கீதை கூற முடியாது. உங்களுக்கு ஞானக் கடலின் மூலம் ஞானம் கிடைக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளவும் செய்கின்றனர், ஆனால் அவர்களுக்கு பயம் இருக்கிறது. கீதை கிருஷ்ணர் கூறவில்லை என்பதை நாளடைவில் ஏற்றுக் கொள்வார்கள். இப்போது அவர்கள் கூறுகிறார்கள் எனில் அவர்களை பின்பற்றக் கூடியவர்கள் அனைவரும் அவர்களை விட்டுச் சென்று விடுவார்கள். இவருக்கு பி.கு மந்திரம் போட்டு விட்டனர் என்று உடனேயே கூறுவர்.தேவதை ஆக வேண்டுமெனில் தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். முக்கிய விசயம் தூய்மை. இங்கு மனிதர்கள் சாப்பிடும் உணவு முறைகளைப் பாருங்கள், எவ்வளவு அசுரத்தனமாக இருக்கிறது! ஜென்ம ஜென்மங்களுக்கான பாவ ஆத்மாக்கள் ஆவர். ஒருவர் கூட புண்ணிய ஆத்மா கிடையாது. இப்போது நீங்கள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சத்யுகத்தில் அனைவரும் புண்ணிய ஆத்மாக்களாக இருப்பர். அங்கு இருப்பவர்கள் சிரேஷ்டமானவர்கள்,  ய்மையானவர்கள். இங்கு கீழானவர்கள், தூய்மை இல்லாதவர்கள். சத்யுகத்தில் 5 விகாரங்கள் இருக்காது. இராம இராஜ்யத்தில் எவ்வளவு வித்தியாசங்கள் ஏற்பட்டு விடுகிறது! இதை இராவண இராஜ்யம் என்று கூறலாம் அல்லவா! பதீத பாவன் ஒரே ஒரு இறை தந்தை ஆவார். அவர் நமது எல்லையற்ற தந்தை என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லையற்ற தந்தை, படைப்பவரை படைப்புகள் நினைவு செய்கின்றன. சத்யுகத்தில் ஒரு தந்தை, பிறகு இரண்டு தந்தைகள் என்பதை பாபா புரிய வைத்திருக்கின்றார். லௌகீகம் மற்றும் பரலௌகீகம். உங்களுக்கு மூன்று தந்தைகள். லௌகீகம், பரலௌகீகம், அலௌகீகம். பக்தி மார்க்கத்தில் லௌகீகத் தந்தை இருந்தாலும் பரலௌகீகத் தந்தையை நினைவு செய்கின்றனர். இங்கு பாப் மற்றும் தாதா என்பது ஆச்சரியமான விசயமாகும். இருவரும் அமர்ந்திருக்கின்றனர். இதையும் குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இருப்பினும் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். பிரஜாபிதா பிரம்மா என்று பாடப்பட்டிருக்கிறது அல்லவா! சிவபாபாவை இப்போது தான் சந்திக்கிறோம். பிரஜாபிதா பிரம்மா சாகாரத்தில் இருக்கிறார். அவர் நிராகாரமானவர். நிராகாரம் மற்றும் சாகாரம் இருவரும் சேர்ந்து இருக்கின்றனர். இருவரின் பதவியும் உயர்ந்தது. இவர்களை விட உயர்ந்தவர் யாரும் இருக்க முடியாது. ஆனால் எவ்வளவு சாதாரணமாக அமர்ந்திருக்கின்றனர்! படிப்பும் குழந்தைகளுக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது! தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று மட்டுமே தந்தை கூறுகின்றார். ஆத்மா அழிவற்றது, இந்த தேகம் அழியக் கூடியது. ஒரு சரீரத்திலிருந்து ஆத்மா நீங்கி மற்றொரு சரீரத்தை எடுக்கிறது. நீங்கள் அழ வேண்டிய அவசியமில்லை. மனிதர்கள் சரீரத்தை நினைவு செய்து அழுகின்றனர். நீங்கள் அழ வேண்டிய அவசியமில்லை. சத்யுகத்தில் ஒருபோதும் அழமாட்டார்கள். அங்கு மோகமற்றவர்களாக இருப்பார்கள். இது போன்ற அனைத்து விசயங்களும் உங்களுக்கு சங்கமயுகத்தில் புரிய வைக்கப்படுகிறது. நீங்கள் இந்த லெட்சுமி நாராயணனின் சித்திரத்தைப் பார்க்கின்ற பொழுது மிகுந்த குஷியடைய வேண்டும். ஆகையால் இந்த லெட்சுமி நாராயணன், திரிமூர்த்திக்கான பேட்ஜ் அல்லது மெடல் ஜேப்பில் (பையில்) வைத்திருங்கள் என்று தந்தை கூறியிருக்கின்றார். அடிக்கடி பையிலிருந்து வெளியே எடுத்துப் பாருங்கள். ஆஹா, நான் இவ்வாறு ஆகப் போகிறேன். மிகுந்த குஷி ஏற்படும். மற்றவர்களுக்கும் காண்பித்து நாம் இவ்வாறு ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று குஷிபடுத்துங்கள். பார்த்ததும் குஷி ஏற்படும். நான் சிவபாபாவின் குழந்தை. நான் எந்த விசயத்தைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. சிறிது நஷ்டம் ஏற்பட்டாலும் என்ன! நான் எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கு பல மடங்கு செல்வந்தனாக ஆகிறேன். பாருங்கள், பாபா அனைத்தையும் கொடுத்து விட்டார். பிறகு லாபம் அடைந்தாரா? அல்லது நஷ்டப்பட்டாரா? பாபா இப்போது எதிரில் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். உங்களது இந்த செல்வம் அனைத்தும் மண்ணோடு மண்ணாக ஆகப் போகிறது. தனது வாழ்க்கையை வெற்றி உடையதாக ஆக்க வேண்டுமெனில் தனது உடல், மனம், பொருளை இதில் பயன்படுத்துங்கள். பிறகு இதற்கு கைமாறாக உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை பாருங்கள்! ஆத்மாவும் தங்கமாக ஆகிவிடும், உடலும் அழகானதாக, செல்வமும் அளவற்று இருக்கும். நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) நான் சிவபாபாவின் குழந்தை, நான் எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கு பல மடங்கு செல்வந்தனாக ஆக வேண்டும் என்ற குஷியில் இருக்க வேண்டும் மற்றும் அனைவரையும் குஷிப்படுத்த வேண்டும். எந்த ஒரு விசயமாக இருந்தாலும் கவலைப்படக் கூடாது.2) ஒரே ஒரு தந்தையின் (அத்துவைத) ஒரே வழிப்படி நடந்து எல்லையற்ற வைராக்கியம் உடையவர்களாக ஆக வேண்டும். ஒரு தந்தையை பின்பற்ற வேண்டும்.வரதானம்:

பொறுமை (சகிப்பு) சக்தி என்ற விசேஷதாவின் மூலம் மற்றவர்களது சம்ஸ்காரங்களை மாற்றக் கூடிய திட சங்கல்பமுடையவர் ஆகுக.எவ்வாறு பிரம்மா பாபா ஞானி மற்றும் அஞ்ஞானி ஆத்மாக்களின் நிந்தனைகளை சகித்துக் கொண்டு அவர்களை மாற்றினாரோ அதே போன்று தந்தையைப் பின்பற்றுங்கள். இதற்கு தனது சங்கல்பங்களில் உறுதித்தன்மையை தாரணை செய்தால் போதும். எவ்வளவு காலம் நடைபெறும் என்று யோசிக்காதீர்கள். எப்படி நடக்கும்? எப்படி சகித்துக் கொள்வது? என்று முதலில் சிறிதும் தோன்றும். உங்களிடம் யாராவது, ஏதாவது கூறுகின்றனர் எனில் நீங்கள் அமைதியாக இருங்கள், சகித்துக் கொள்ளுங்கள். அப்போது அவர்களும் மாறிவிடுவார்கள். மனம் உடைந்தவர்களாக ஆகிவிடாதீர்கள்.சுலோகன்:

சங்கமயுகத்தில் சகித்துக் கொள்வது, தலை குனிவது (பணிவு) தான் அனைத்தையும் விட மிகப் பெரிய மகான் நிலையாகும். ***OM SHANTI***