BK Murli 17 December 2016 Tamil

BK Murli 17 December 2016 Tamil

17.12.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! சத்தியமான தந்தையிடம் சத்தியமானவராக ஆகுங்கள். ஒருவேளை சத்தியத்தை கூறவில்லை என்றால் பாவம் விருத்தி (அதிகம்) அடைந்து கொண்டே இருக்கும்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் கர்மாதீத நிலையின் அருகாமையில் வரும்பொழுது என்ன அனுபவம் செய்வீர்கள்?

 

பதில்:

மாயையின் புயல் அனைத்தும் முடிந்துவிட்டதாக அனுபவம் ஆகும். எந்தத் தடையைக் கண்டும் பயம் கொள்ளமாட்டீர்கள். மனோநிலையானது மிகவும் பயமற்றதாக இருக்கும். எதுவரை அந்த நிலையானது தொலைவில் உள்ளதோ, அதுவரை மாயையின் புயல் மிகவும் தொந்தரவு செய்யும். இனிமையான குழந்தைகளே! நீங்கள் எந்தளவு பலவான் ஆகிறீர்களோ, அந்தளவு மாயை கூட பலவான் ஆகி வரும், ஆனால், நீங்கள் வெற்றியை பிராப்தம் செய்ய (பலனாக அடைய) வேண்டும், பயம் கொள்ளக்கூடாது என்று பாபா கூறுகின்றார். சத்தியமான தந்தையிடம் சத்தியம், தூய்மையுடன் நடந்து கொள்ளுங்கள். ஒருபொழுதும் எந்த விஷயத்தையும் மறைக்கக்கூடாது.

 

பாடல்:

விழித்தெழுங்கள் நாயகிகளே விழித்தெழுங்கள்

 

ஓம்சாந்தி.

இந்தப் பாடலை இங்கே இருக்கும் குழந்தைகள் தினமும் கேட்கின்றனர். பி.கு.வாக உள்ளவர்கள் எந்த சென்டரில் இருந்தாலும், அவர்கள் கேட்கிறார்கள். வெளியில் உள்ளவர்கள் கேட்பதில்லை. உண்மையில் இந்தப் பாடலை ஒப்பற்ற குழந்தைகள் அனைவரும் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அனைவரையும் விழிப்படையச் செய்ய வேண்டும். ஏனென்றால், இந்த பாடன் இரகசியம் மிக நன்றாக உள்ளது. புதுயுகம் வந்து கொண்டிருக்கிறது. புதுயுகம் என்றால் சத்யுகம். இது கயுகம் ஆகும். கலியுகத்தின் அழிவு ஏற்பட வேண்டும். சத்யுகத்தில் பாரதவாசிகளின் இராஜ்யம் நடைபெறுகிறது. அதை பொன்னுலகம் (Golden aged world) என்று சொல்லப்படுகிறது. பொன்னுலகத்தில் பொன்னான பாரதம். இரும்புயுக உலகத்தில் இரும்பு போன்ற பாரதம். இதையும் கூட நீங்கள் தான் அறிந்திருக்கிறீர்கள். பொன்னுலகத்தில் வேறு எந்த கண்டம் மற்றும் தர்மம் இருக்காது. இப்பொழுது இரும்புயுகம் ஆகும், இதில் அனைத்து தர்மங்களும் உள்ளன. அவசியம் பாரதத்தின் தர்மமும் உள்ளது. ஆனால், அந்த தேவி தேவதை தர்மம் இல்லை. பின்னர் அவசியம் வர வேண்டும். எனவே, நான் வந்து ஸ்தாபனை செய்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். முதன்முதல் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். சாஸ்திரங்களைப் பற்றி எப்பொழுதாவது யாராவது பேசினால், இது பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்கள் ஆகும், ஞான மார்க்கத்தில் சாஸ்திரங்கள் கிடையாது என்று அவர்களிடம் கூறவேண்டும். பரமபிதா பரமாத்மாவை ஞானக்கடல் என்று சொல்லப்படுகிறது. அவர் எப்பொழுது வந்து ஞானம் அளிப்பாரோ, அப்பொழுது தான் சத்கதி ஏற்படும். இந்த கீதை முதயவை கூட பக்தி மார்க்கத்திற்காகத் தான் உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு நான் வந்து ஞானம் மற்றும் யோகத்தைக் கற்பிக்கின்றேன். பிறகு, பிற்காலத்தில் அவர்கள் சாஸ்திரங்களை உருவாக்குகிறார்கள், அது பின்னர், பக்தி மார்க்கத்தில் பயன்படுகின்றன. இப்பொழுது உங்களுடைய ஏறும் கலை ஆகும். உங்களுக்கு தந்தை வந்து ஞானம் சொல்கின்றார். நான் உங்களுக்கு சத்கதிக்காக என்ன ஞானம் அளிக்கின்றேனோ, அது மறைந்துவிடுகிறது என்று சுயம் தந்தையே கூறுகின்றார். நீங்கள் எந்தவொரு சாஸ்திரம் போன்றவற்றைக் கேட்காதீர்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். அனைவருடைய ஆன்மிகத் தந்தை அவர் ஒருவரே ஆவார். அவரிடமிருந்து தான் சத்கதிக்கான ஆஸ்தி கிடைக்கிறது. இதுவோ துர்கதிக்கான தாமம் ஆகும். சத்யுகம் சத்கதி அடையும் தாமம் என்று அழைக்கப்படுகிறது. யாராவது சாஸ்திரங்களுடைய, வேதங்களுடைய அல்லது கீதையினுடைய விஷயங்களைப் பற்றி பேசினால், “ நாங்கள் அனைத்தையும் அறிந்திருக்கிறோம், ஆனால், இவை பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவை ஆகும். இப்பொழுது ஞானக் கடல் பரமபிதா பரமாத்மா எங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார் எனும்பொழுது, நாங்கள் அவற்றின் பெயரை ஏன் எடுக்க வேண்டும்? என்று சொல்லுங்கள். தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது இந்த யோக அக்னி மூலம் உங்களுடைய விகர்மங்கள் (பாவ கர்மங்கள்) அழிந்துவிடும் என்று தந்தை கூறுகின்றார். பக்தி மார்க்கத்திலோ மேன்மேலும் விகர்மங்களே செய்து வந்திருக்கிறீர்கள். தந்தை நமக்கு மன்மனாபவ என்று கூறியிருக்கின்றார். அவரே ஞானக் கடல், பதீத பாவனர் ஆவார். கிருஷ்ணரை பதீத பாவனர் என்று கூறப்படுவதில்லை. இப்பொழுது நாம் ஒரு தந்தை கூறுவதை மட்டும் கேட்கிறோம். சிவ பரமாத்மாய நமஹ: என்று அவரை வழிபடுகிறார்கள், மற்ற அனைவருக்கும் தேவதாய நமஹ : என்று கூறுவார்கள் இந்த சமயமோ அனைவரும் தமோபிரதானமாக உள்ளனர். சதோபிரதானம் ஆவதற்கான வழியை ஒரு தந்தை தான் கூறுகின்றார். இப்பொழுது அந்த ஒரு தந்தையை மட்டும் தான் நினைவு செய்ய வேண்டும். பிரம்மத்தை நினைவு செய்யக்கூடாது, அது வீடு ஆகும். வீட்டை நினைவு செய்வதால் விகர்மங்கள் அழியாது. ஆனால், வீட்டில் (பிரம்மத்தில்) இருக்கக்கூடிய பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் அழிந்துவிடும். மேலும், ஆத்மா சதோபிரதானம் ஆகி தனது வீட்டிற்குச் சென்றுவிடும், பிறகு நடிப்பு நடிப்பதற்காக வரும். சக்கரத்தின் இரகசியத்தைப் பற்றி புரிய வைக்க வேண்டும். முதல், இவர்களுக்கு ஞானம் சொல்லக்கூடியவர் நிராகாரமான பரமபிதா பரமாத்மா ஆவார் என்பதை புரிய வைக்க வேண்டும். நீங்கள் பிரம்மாவிடமிருந்து கேட்கிறீர்கள் என்று யாராவது கூறினால், இல்லை, நாங்கள் மனிதர் மூலம் கேட்கவில்லை. இவர் மூலம் எங்களுக்கு பரமபிதா பரமாத்மா புரிய வைக்கின்றார். நாங்கள் இவரை (பிரம்மாவை) பரமாத்மாவாக ஏற்கவில்லை, என்று கூறுங்கள். சிவன் தான் அனைவருடைய தந்தை ஆவார். ஆஸ்தி கூட அவரிடமிருந்து கிடைக்கிறது, இவர் மூலமாக. பிரம்மாவிடமிருந்து எதுவும் கிடைப்பதில்லை. அவருடைய மகிமை என்ன உள்ளது? மகிமை அனைத்தும் ஒரு சிவனுடையது ஆகும். ஒருவேளை அவர் இவருக்குள் வரவில்லை என்றால் நீங்கள் எப்படி வந்திருப்பீர்கள்? சிவபாபா பிரம்மா மூலமாக உங்களை தத்தெடுத்திருக்கின்றார். ஆகையாலேயே நீங்கள் பி.கே என்று கூறிக் கொள்கிறீர்கள். பிராமண குலம் வேண்டும் அல்லவா. எந்த மனிதரோ அல்லது சாஸ்திரம் போன்றவையோ முக்தி, ஜீவன்முக்திக்கான வழியைக் கூற இயலாது. நிராகாரமான பரமபிதா பரமாத்மா சத்கதியை அளிக்கும் வள்ளல் தான் வழி கூறுகின்றார். அதிகமாகப் பேசக்கூடாது. நாங்கள் ஜென்ம ஜென்மங்களாக பக்தி செய்திருக்கிறோம் என்று உடனடியாகச் சொல்லி விட வேண்டும். இப்பொழுது தந்தை எங்களுக்கு, இந்த கடைசிப் பிறவியில் இல்லறத்தில் இருந்துகொண்டே தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக இருங்கள் மற்றும் என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்களுடைய இந்தக் கடைசி பிறவியினுடைய மற்றும் முந்தைய பிறவிகளுடைய பாவங்கள் என்ன உள்ளனவோ அவை சாம்பலாகிவிடும். மேலும், நீங்கள் தனது வீட்டிற்குச் சென்றுவிடுவீர்கள், என்று கூறுகின்றார். தூய்மை ஆகாமல் யாரும் செல்ல முடியாது. முதன்முதலில் விஷயமாக இந்த ஒன்றைப் புரிய வையுங்கள் - “ ஹே ஆத்மாக்களே, நான் பிரம்மாவின் உடலில் பிரவேசம் ஆகி ஞானம் அளிக்கின்றேன். பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்கின்றேன். பிராமணர்களுக்கு படிப்பினை (ஞானம்) அளிக்கின்றேன் என்று நிராகார சிவபாபா கூறுகின்றார். ஞான யக்ஞத்தை பாதுகாக்கக்கூடியவர்கள் கூட பிராமணர்கள் தான் வேண்டும் அல்லவா! நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியிருக்கிறீர்கள். இந்த மரண உலகம் இப்பொழுது முடிய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். கலியுகத்தை மரணஉலகம் என்றும் மற்றும் சத்யுகத்தை அமரலோகம் என்றும் கூறப்படுகிறது. பக்தியின் இரவு இப்பொழுது முடிவடைகிறது. பிரம்மாவின் பகல் ஆரம்பம் ஆகிறது. பிரம்மா தான் விஷ்ணு ஆகிறார் என்பதையும் கூட யாரும் புரிந்திருக்கவில்லை. எப்பொழுது முழுமையான 7 நாட்கள் வந்து கேட்கின்றார்களோ, அப்பொழுதே புரிந்து கொள்வார்கள். கண்காட்சியில் யாருடைய புத்தியிலும் தங்குவதில்லை. வழி நன்றாக உள்ளது, புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது என்று மட்டும் கூறுகிறார்கள். கீதையின் பகவான் நிராகாரமான சிவன் தான் என்ற முக்கியமான விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும். அவர், என்னை நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். மற்ற இவை அனைத்தையும் ஜென்ம ஜென்மங்களாகப் படித்து கீழே இறங்கியே வந்திருக்கிறீர்கள். பிறகு, ஏணிப்படியிலிருந்து மரத்திற்கு (கல்ப விருட்சம்) அழைத்துச் செல்ல வேண்டும். நீங்கள் சந்நியாச மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவீர்கள். நாங்கள் இல்லற மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுடையது எல்லையற்ற சந்நியாசம் ஆகும். எப்பொழுது பக்தி முடிவடைகிறதோ, அப்பொழுது முழு உலகத்தின் மீதும் வைராக்கியம் ஏற்படுகிறது. மேலும், பக்தியின் மீதும் வைராக்கியம் ஏற்படுகிறது. இராவண இராஜ்யத்தில் பக்தி செய்யப்படுகிறது. இப்பொழுது சிவபாபா சிவாலயத்தை ஸ்தாபனை செய்கின்றார். சிவஜெயந்தி கூட பாரதத்தில் தான் கொண்டாடப் படுகிறது எனில், சிவபாபா வந்து பாரதத்தை சொர்க்கமாக ஆக்கினார் மற்றும் நரகத்தை வினாசம் செய்தார் என்பது உறுதி ஆகிறது. புது உலகிற்கு வரப்போகிறவர்கள் தான் இந்த இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். சொர்க்கத்தில் தூய்மை, அமைதி, செழுமை ஆகிய அனைத்தும் இருக்கிறது. இங்கிருக்கும் சந்நியாசிகள் பாதி தூய்மையாக இருக்கிறார்கள். அவர்கள் கிரஹஸ்தி, விகாரி வீட்டில் பிறப்பெடுத்து பின்னர் சந்நியாசம் செய்கிறார்கள். இது புரிய வைக்கப்படுகிறது. பதீத பாவனர் சிவபாபா நமக்கு பிரம்மா மூலம் புரிய வைக்கின்றார். பிரம்மா மூலமாக இராஜயோகத்தைக் கற்பித்து இவ்வாறு (தேவதை) ஆக்கிக் கொண்டிருக்கின்றார். இராஜயோகம் மூலம் தான் இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த கீதை இப்பொழுது மீண்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்களும் இராஜயோகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் வந்து கற்றுக்கொள்ளுங்கள். இந்த ஞானம் இல்லற மார்க்கத்திற்கானது ஆகும்.

 

பகவானின் மகாவாக்கியம் - இல்லறத்தில் இருந்து கொண்டே தூய்மை ஆகி என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகிவிடும். மேலும், தூய்மை ஆவதற்கான வேறு உபாயமே (வழியே) கிடையாது. கொஞ்சம் சொல்ல வேண்டும். குழம்பக் கூடாது. இரவில் அமர்ந்து, இன்று முழு நாளில் என்ன கடந்து முடிந்ததோ, என்ன சேவை நடந்ததோ, அது நாடக திட்டத்தின் அனுசாரம் நடந்தது என்று சிந்தனை செய்யுங்கள் என்பதை தந்தை புரிய வைத்திருக்கின்றார். முயற்சி செய்ய வேண்டும் அல்லவா. கண்காட்சியில் குழந்தைகள் எவ்வளவு முயற்சி செய்கிறார்கள். மாயையின் புயல் மிகவும் கடுமையானது ஆகும் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள். பாபா, இதை (மாயையை) வருவதை நிறுத்துங்கள், எங்களுக்கு எந்த விகல்பமும் (விகார எண்ணம்) வரக்கூடாது என்று சில குழந்தைகள் கூறுகிறார்கள். பாபா கூறுகின்றார், இதில் ஏன் பயப்படுகிறீர்கள்? இன்னும் வேகமாக புயலைக் கொண்டுவா என்று மாயைக்கு யாம் கூறுவோம். குத்துச்சண்டையில், நான் கீழே விழுந்துவிடும்படியாக என்னை வேகமாக, தலைகீழாக போட்டுவிட வேண்டாம் என்று ஒருவருக்கு ஒருவர் கூறுவார்களா என்ன! நீங்களும் கூட யுத்த மைதானத்தில் இருக்கிறீர்கள் அல்லவா! பாபாவை மறந்தால் மாயை அடி கொடுக்கும். மாயையின் புயலோ இறுதிவரை வந்துகொண்டே இருக்கும். கர்மாதீத நிலை ஏற்படும்பொழுதே இது முடிவடையும். புயல் அதிகம் வரும், இதில் பயம் கொள்வதற்கான விஷயம் எதுவும் இல்லை. பாபாவிடம் சத்தியமாக நடந்து கொள்ள வேண்டும். உண்மையான சார்ட் அனுப்ப வேண்டும். சில குழந்தைகள் அதிகாலை எழுந்து நினைவில் அமர்வதில்லை, தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நான் ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால், கல்ப கல்பத்திற்கு நான் என்னுடைய (அதிர்ஷ்டத்தை) சர்வ நாசம் செய்கிறேன் என்பதை புரிந்திருக்கவில்லை. மிகப் பலமான அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை பேசாத குழந்தைகளும் சிலர் உள்ளனர், பிறகு, அவர்களுடைய நிலை என்னவாகும்? கீழே விழுந்துவிடுவார்கள். மாயை மிக பலமாக அடி கொடுக்கிறது. தெரிவதேயில்லை. முழு நாளும் வேண்டாத வீணான விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையைக் கூறாததனால் பின்னர், அதிகரித்து விடுகிறது. இல்லையென்றால் சத்தியத்தைச் சொல்ல வேண்டும். இன்று இந்த தவறு செய்துவிட்டேன், பொய் பேசிவிட்டேன். ஒருவேளை, சத்தியத்தைச் சொல்லவில்லை என்றால் அதிகமாகிக் கொண்டே இருக்கும், பிறகு, ஒருபொழுதும் சத்தியமானவர் ஆகமாட்டார்கள். நான் இந்த, இந்த எதிர்மறையான சேவை (க்ண்ள்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) செய்தேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்ல வேண்டும். சத்தியத்தைச் சொல்லவில்லை என்றால் உள்ளத்தில் அமர இயலாது. சத்தியமே ஈர்க்கிறது. யார் யார் நல்ல முறையில் சேவை செய்கிறார்கள் என்பதை குழந்தைகளே அறிந்திருக்கிறீர்கள். நல்ல நல்ல குழந்தைகள் மிகக் குறைவாகவே உள்ளனர். கிராமங்களுக்கு நல்ல நல்ல குழந்தைகளே (சகோதரிகளை) அனுப்ப வேண்டும் என்று விரும்புகின்றேன். அப்பொழுது அனைவரும், பாபா எங்களுக்கு பம்பாயின் பொறுப்பு சகோதரியை (ட்ங்ஹக்), கல்கத்தாவின் பொறுப்பு சகோதரியை அனுப்பி வைத்தார் என்று மகிழ்ச்சி அடைவார்கள். யாரை சந்தித்தாலும் அவர்களிடம், பதீத பாவனர், பரமபிதா பரமாத்மா சங்கமயுகத்தில் வந்து என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள் என்ற மகாமந்திரத்தைக் கொடுக்கின்றார் என்ற விஷயத்தை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். பாபா உங்களுக்குத் தான் இராஜயோகம் கற்பிக்கின்றார். பிறருக்கும் கூட வழி காண்பிப்பது உங்களுடைய வேலை ஆகும். குழந்தைகள் கல்கத்தாவிற்கு வாருங்கள் என்று அழைக்கிறார்கள். இப்பொழுது பாபா, குழந்தைகள் அல்லாமல் வேறு யாருடனும் பேச முடியாது. பிறகு, இவரோ யாரையும் சந்திப்பதில்லை, இவர் யார் என்பதை நாங்கள் எவ்வாறு புரிந்து கொள்வது என்று கூறுவார்கள். ஏனென்றால், அவர்களுடையதோ பக்தியின் விஷயங்கள் ஆகும். ஆத்மாக்களின் தந்தை யார் என்பதை யாரும் கூற இயலாது. சிவபாபா வருவதே பாரதத்தில் தான். இத்தகைய விஷயங்களைப் புரிய வைப்பதற்கு ஒரு மணிநேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். பாபாவோ யாருடனும் சந்திப்பது இல்லை. குழந்தைகள் தான் தலையை உடைத்துக் கொள்ள வேண்டும் (புரிய வைப்பதற்கு அதிக முயற்சி செய்ய வேண்டும்). இங்கே கூட பாருங்கள் குழந்தைகளை சீர்திருத்துவதற்காக எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியதாக உள்ளது. பாபாவிற்கு யாரும் உண்மையான சமாச்சாரத்தைச் சொல்வதில்லை. பாபா, நான் சந்நியாசியிடம் உரையாடினேன், இந்தக் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. நான் இந்த தவறு செய்தேன். இவ்வாறு முழு நாளும் என்ன என்ன செய்கிறீர்களோ, அதை எழுத வேண்டும். என்னைக் கேட்காமல் யாருக்கும் கடிதம் எழுதக் கூடாது என்று பாபா குழந்தைகளுக்குப் புரிய வைத்திருக்கின்றார். பாபாவிடம் கேட்டால், பாபா ஒருவருக்கு நன்மை விளைவதற்கான வழி கொடுப்பார்கள். பாபாவிடம் எழுதி அனுப்பினால் பாபா அதை சரிசெய்து (கடெக்ட் செய்து) கொடுப்பார். பாபா யுக்தி கூறுவார். ஆத்ம அபிமானி ஆகி எழுதினீர்கள் என்றால் அவர் படித்துவிட்டு அதிக சந்தோஷம் அடைவார். மிக நல்ல அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. இலட்சுமி, நாராயணர் ஆவதே உங்களுடைய குறிக்கோள் ஆகும். இவர் உங்களுடைய தந்தை, ஆசான், குரு, சகோதரன் ஆகிய அனைத்தும் ஆவார். ஒவ்வொரு விஷயத்திலும் ஆலோசனை வழங்கிக் கொண்டே இருப்பார், பிறகு உங்களைவிட்டு பொறுப்பு விலகிவிடும். ஏனென்றால், ஸ்ரீமத்படி நடந்தீர்கள் அல்லவா. தொழில் போன்ற வற்றிற்காகவும் கூட புரிய வைப்பார். எப்பொழுதாவது வேறு வழியற்ற நிலையில் பிறருடைய கையால் உணவு உட்கொள்ள வேண்டியதாக உள்ளது. இல்லையென்றால், வேலை போய்விடும். தேனீர் அருந்தவில்லை என்றால் மந்திரி கோபித்துக் கொள்வார். நான் இந்த நேரம் தேனீர் அருந்துவதில்லை. அருந்தினால், எனக்கு கஷ்டம் ஆகிவிடும் என்று யுக்தியாகக் கூறவேண்டும். திருமண நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை என்றால் கோபம் கொள்வார்கள். இப்படி இப்படிச் செய்யுங்கள் என்று பாபா கூறுவார். அனைத்து யுக்திகளையும் சொல்லிக் கொடுப்பார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்காக முக்கியமான சாரம்:-

1. தந்தையிடம் உண்மையாக இருக்க வேண்டும். இதய சிம்மாசனதாரி ஆவதற்காக ஸ்ரீமத்படி முழுமையிலும் முழுமையாக நடக்க வேண்டும்.

 

2. யுத்த மைதானத்தில் மாயையின் விகல்பங்களை, தடைகளைக் கண்டு பயப்பட வேண்டாம். தன்னுடைய உண்மையான சார்ட் எழுத வேண்டும். வேண்டாத வீணான விஷயங்களில் ஈடுபடக்கூடாது.

 

வரதானம்:

டபுள் லைட் ஆகி கர்மாதீத நிலையின் அனுபவம் செய்யக்கூடிய கர்மயோகி ஆகுக.

 

எவ்வாறு கர்மத்தில் வருவது இயல்பானதாக ஆகிவிட்டதோ, அவ்வாறு கர்மாதீத் ஆவதும் இயல்பாக ஆக வேண்டும். இதற்காக டபுள் லைட்டாக இருங்கள். டபுள் லைட்டாக இருப்பதற்காக கர்மம் செய்து கொண்டே தன்னை டிரஸ்டி (பொறுப்பாளர்) எனப் புரிந்துக் கொள்ளுங்கள் மற்றும் ஆன்மிக ஸ்திதியில் இருப்பதற்கான பயிற்சி செய்யுங்கள். இந்த இரண்டு விஷயங்களில் கவனம் கொடுப்பதன் மூலம் ஒரு நொடியில் கர்மாதீத நிலை, ஒரு நொடியில் கர்மயோகி ஆகிவிடுவீர்கள். நிமித்தமாகி கர்மம் செய்வதற்காக கர்மயோகி ஆகுங்கள் பிறகு கர்மாதீத நிலையின் அனுபவம் செய்யுங்கள்.

 

சுலோகன்:

யாருடைய உள்ளம் பெரியதாக (விசாலமானதாக) உள்ளதோ, அவர்களுக்கு சம்பவிக்க முடியாத காரியம் கூட சம்பவமாகிவிடுகிறது. 

 

***ஒம்சாந்தி***