BK Murli 2 December 2016 Tamil

BK Murli 2 December 2016 Tamil

02.12.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது உண்மையிலும் உண்மையான சத்சங்கத்தில் அமர்ந்த்திருக்கிறீர்கள், நீங்கள் சத்திய கண்டம் (யுகத்திற்குச்) செல்வதற்கான மார்க்கத்தை சத்திய தந்தை கூறிக் கொண்டிருக்கின்றார்.கேள்வி:

எந்த நிச்சயத்தின்ஆதாரத்தில் தூய்மைஆவதற்கான சக்தி தானாகவே வந்து விடுகிறது?பதில்:

இந்த மரண உலகில் இது நமது கடைசிப் பிறவியாகும், இந்த தூய்மை இல்லாத உலகம் விநாசம் ஆகிவிடும். தூய்மையாகிவிட்டீர்களானால் தூய்மையான உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள் என்பது தந்தையின் ஸ்ரீமத் ஆகும், இந்த விசயத்தில் நிச்சயம் ஏற்படுவிட்டால் தூய்மையாவதற்கான சக்தி தானாகவே வந்து விடும்.பாட்டு:

கடைசியில் அந்த நாள் வந்து விட்டது .......ஓம்சாந்தி,

இனிமையிலும் இனிய ஆன்மீகக் குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். இந்த பாட்டு உங்களுக்கு வைரம் போன்றதாகும். மேலும் யார் உருவாக்கினாரோ அவருக்கு சோழி போன்றதாகும். அவர்கள் கிளியைப் போன்று பாடுகின்றனர். எந்த பொருளையும் அறியாமல் இருக்கின்றனர். நீங்கள் பொருளைப் புரிந்து கொள்கிறீர்கள். கலியுகம் மாறி சத்யுகம் அல்லது தூய்மையற்ற உலகம் மாறி தூய்மையான உலகம் வரக் கூடிய அந்த நாள் வந்து விட்டது. ஹே பதீத பாவனனே ! (தூய்மை ஆக்குபவரே) வாருங்கள் என்று மனிதர்கள் அழைக்கின்றனர். தூய்மையான உலகில் யாரும் அழைக்கமாட்டார்கள். நீங்கள் இந்த பாட்டின் பொருளை நன்றாக அறிவீர்கள், அவர்கள் அறியவில்லை. பக்தி மார்க்கம் அரைக்கல்பம் நடைபெறுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எப்போது இராவண இராஜ்யம் ஆரம்பமானதோ அப்போதிலிருந்து பக்தி ஆரம்பமாகி விடுகிறது. ஏணியில் இறங்க வேண்டியிருக்கிறது. இந்த இரகசியம் குழந்தைகளின் புத்தியில் பதிவாகியிருக்கிறது. எந்த பாரதவாசிகள் 16 கலைகள் நிறைந்தவர்களாக இருந்தார்களோ அவர்களே 14 கலைகள் உடையவர்களாக ஆனார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். யார் 16 கலைகள் உடையவர்களாக ஆகியிருந்தார்களே அவசியம் அவர்களே 14 கலைகள் உடையவர்களாக ஆவார்கள் அல்லவா! இல்லையெனில் யார் ஆவார்கள்? நீங்கள் 16 கலைகள் உடையவர்களாக இருந்தீர்கள், இப்போது மீண்டும் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் கலைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். உலகின் கலைகளும் அதிகரிக்கும். முதலில் சதோபிரதானமாக இருந்த கட்டடம் அவசியம் தமோபிரதானமாக ஆக வேண்டும். சத்யுகம் சதோபிரதான உலகம் என்றும், கலியுகம் தமோபிரதான உலகம் என்றும் கூறப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். சதோ பிரதானமுடையவர்கள் தான் தமோ பிரதானமாக ஆகின்றனர், ஏனெனில் 84 பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. உலகம் அவசியம் புதியதிலிருந்து பழையதாக ஆகிறது, அதனால் தான் புது உலகம், புது இராஜ்யத்தை விரும்புகின்றனர். புது உலகில் யாருடைய இராஜ்யம் இருந்தது என்பதும் யாருக்கும் தெரியாது. நீங்கள் இந்த சத்சங்கத்தின் மூலம் அனைத்தும் அறிந்து கொள்கிறீர்கள். இது தான் இந்த நேரத்தில் உண்மையிலும் உண்மையான சத்சங்கம் ஆகும், இதற்குத் தான் பிறகு பக்தி மார்க்கத்தில் மகிமை நடைபெறுகிறது. இது பரம்பரையாக நடைபெற்று வருவதாக கூறுவர் அல்லவா! ஆனால் உங்களது இந்த சத்சங்கம் தான் உண்மையிலும் உண்மையானது என்பதை நீங்கள் அறிவீர்கள். மற்ற அனைத்தும் பொய்யான சத்சங்கமாகும். உண்மையில் அது சத்சங்கமே கிடையாது. அதன் மூலம் கீழே இறங்கியே வர வேண்டும். இந்த சத்சங்கம் தான் அனைத்தையும் விட மிகப் பெரிய திருவிழா ஆகும். ஒரு சத்திய தந்தையிடம் தொடர்பு ஏற்படுகிறது. வேறு யாரும் சத்தியத்தை கூறுவதே கிடையாது. இது பொய்யான கண்டமாகும். பொய்யான மாயை, பொய்யான உடல் ....... ஈஸ்வரவன் சர்வவியாபி என்று கூறுவது தான் முதல் பொய்யாகும். இறைவனையே பொய்யாக ஆக்கி விட்டனர். ஆக நீங்கள் முதன் முதலில் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். அவர்கள் தவறான அறிமுகம் கொடுத்து விடுகின்றனர். பொய் என்றால் பொய்யே தான் உள்ளது, உண்மை எதுவும் கிடையாது. இது ஞான விசயமாகும். தண்ணீரை தண்ணீர் என்று கூறுவது பொய் கிடையாது. இது ஞானம் மற்றும் அஞ்ஞானத்திற்கான விசயமாகும். ஞானத்தை ஒரே ஒரு ஞானக் கடல் தந்தை கொடுக்கின்றார், இது தான் ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது. சத்யுகத்தில் பொய் என்பது இருக்காது. இராவணன் வந்து உண்மையான கண்டத்தை பொய்யான கண்டமாக ஆக்கி விடுகிறது. நான் சர்வவியாபி கிடையாது என்று தந்தை கூறுகின்றார். உண்மையை நான் தான் கூறுகிறேன். நான் வந்து சத்திய மார்க்கம் அதாவது சத்திய கண்டம் செல்வதற்கான மார்க்கம் கூறுகிறேன். நான் உங்களது உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஆவேன். உங்களுக்கு ஆஸ்தி கொடுப்பதற்காகவே வருகிறேன். குழந்தைகளாகிய உங்களுக்கான ஆஸ்தி எடுத்து வந்திருக்கிறேன். எனது பெயரே சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் தந்தை. கைகயில் சொர்கம் எடுத்து வந்திருக்கிறேன். சொர்க்கத்தில் சொர்க்கவாசி தேவதைகளின் இராஜ்யம் இருக்கும். இப்போது உங்களை சொர்க்கவாசிகளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார். சத்தியமானவர் ஒரே ஒரு தந்தையாவார். அதனால் தான் தீயவைகளை கேட்காதீர்கள், தீயவைகளைப் பார்க்காதீர்கள் ......... இவர்கள் அனைவரும் இறந்து விட்டனர். சுடுகாடாக இருக்கிறது, இதைப் பார்த்தும் பார்க்காது இருக்க வேண்டும். புது உலகிற்கு நீங்கள் தகுதியானவர்களாக ஆக வேண்டும். இந்த நேரத்தில் அனைவரும் தூய்மையின்றி இருக்கின்றனர். அதாவது சொர்க்கத்திற்கு தகுதியானவர்களாக கிடையாது. உங்களை இராவணன் தகுதியற்றவர்களாக ஆக்கி விட்டது என்று தந்தை கூறுகின்றார். பிறகு தந்தை வந்து அரைக் கல்பத்திற்கு தகுதியானவர்களாக ஆக்குகின்றார். எனவே அவரது ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். பிறகு அவர் பொறுப்பாளியாக ஆகிவிடுவார். முழு உலகையும் தூய்மை ஆக்கும் பொறுப்பை தந்தை எடுத்திருக்கின்றார். அவர் என்ன வழி கூறினாலும் அது முந்தைய கல்பத்திற்கானதைப் போலவே இருக்கும், இதில் குழப்பமடையக் கூடாது. எது கடந்து முடிந்ததோ, நாடகப்படி முடிந்தது என்று கூறலாம். விசயம் முடிவடைந்து விட்டது. இப்படி செய்யுங்கள் என்று ஸ்ரீமத் கூறினால் அதன்படி செய்ய வேண்டும். அவர் சுயம் பொறுப்பாளியாக ஆகிவிடுகிறார். ஏனெனில் அவர் தான் கர்மத்திற்கான தண்டனை கொடுக்கின்றார் எனில் அவரது விசயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இனிய குழந்தைகளே! இல்லறத்தில் இருந்தாலும் இந்த கடைசிப் பிறவியில் தூய்மையாக இருங்கள் என்று கூறுகின்றார். இந்த மரண உலகில் இது நமது கடைசிப் பிறவியாகும். இந்த விசயத்தைப் புரிந்து கொண்டால் தான் தூய்மை ஆக முடியும்.எப்போது தூய்மை இல்லாத உலகம் விநாசம் ஆக வேண்டுமோ அப்போது தான் தந்தை வருகின்றார். முதலில் ஸ்தாபனை, பிறகு விநாசம் என்று அர்த்தம் தரும்படியான வார்த்தை எழுத வேண்டும். ஸ்தாபனை, பாலனை, விநாசம் என்று கிடையாது. இப்போது நாம் படித்து உயர்ந்த பதவி அடைவோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இதை புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். சில குழந்தைகள் நன்றாகப் புரிய வைக்கின்றனர், ஆனால் உண்மையான அந்த குஷி யாருக்கும் இருப்பது கிடையாது. கிளியைப் போன்று நினைவு செய்கின்றனர் அல்லவா! உங்களது புத்தியிலும் நன்றாக தாரணை செய்ய வேண்டும். என்னவெல்லாம் சாஸ்திரங்கள் இருக்கிறதோ அது பக்தி மார்க்கத்தினுடையது, ஆகையால் சத்தியம் எது? என்பதை முடிவெடுத்துக் கொள்ளுங்கள். சத்திய நாராயணனின் கதையை உங்களுக்கு தந்தை தான் ஒரே ஒரு முறை கூறுகின்றார். தந்தை ஒருபோதும் பொய் கூற முடியாது. தந்தை தான் சத்திய கண்டத்தை ஸ்தாபனை செய்கின்றார். சத்தியமான கதை கூறுகின்றார். இதில் பொய் இருக்க முடியாது. நாம் யாருடன் அமர்ந்திருக்கிறோம் என்ற நிச்சயம் குழந்தைகளுக்குள் இருக்க வேண்டும். தன்னிடம் (யோகா) நினைவால் தொடர்பு வைத்துக் கொள்ள தந்தை கற்றுக் கொடுக்கின்றார். சத்தியமான அமரக் கதை அதாவது சத்திய நாராயணன் கதையைக் கூறிக் கொண்டிருக்கின்றார். இதன் மூலம் நாம் நரனிலிருந்து நாராயணனாக ஆகிக் கொண்டிருக்கிறோம். பிறகு இதற்குத் தான் பக்தியில் மகிமை பாடப்படுகிறது. இதை புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு எந்த மனிதனும் கற்பிப்பது கிடையாது. ஆத்மாக்களாகிய நமக்கு ஆன்மீகத் தந்தை கற்பிக்கின்றார். ஆத்மாக்களாகிய நமக்கு தந்தையாக இருக்கும் சிவபாபா நமக்கு கற்பிக்கின்றார். சிவபாபாவின் எதிரில் இப்போது நாம்  அமர்ந்திருக்கிறோம். மதுவனத்திற்கு வருகிறீர்கள் எனில் போதை அதிகரிக்கிறது. இங்கு உங்களுக்கு புத்துணர்வு கிடைக்கிறது, சிறிது காலத்திற்கு இங்கு வருவதன் மூலம் புத்துணர்வு அடைந்து விடுகிறோம் என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். வெளியில் தொழில் போன்ற விசயங்கள் இருக்கின்றன. தந்தை கூறுகின்றார் - ஹே ! ஆத்மாக்களே! என்று தந்தை ஆத்மாக்களுடன் பேசுகின்றார். தந்தையும் நிராகாராக இருக்கின்றார், அவரை யாரும் அறியவில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் அறியவில்லை. அனைவரிடத்திலும் சித்திரம் இருக்கிறது. காகிதத்தின் சித்திரத்தை பார்த்து சிலர் கிழித்து விடுகின்றனர். சிலர் வெகு தொலைவில் சென்று எவ்வளவு பூஜைகள் செய்கின்றனர்! சித்திரங்களை வீட்டிலும் வைத்திருக்கின்றனர் அல்லவா! பிறகு இவ்வளவ தூரம் சென்று அலைவதனால் என்ன பலன்? இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கிறது, அதனால் அது பொய்யானதாக தோன்றுகிறது. கிருஷ்ணரை இங்கேயே வெள்ளையாக அல்லது கருப்பாக உருவாக்கி விட முடியும். பிறகு ஏன் ஜெகந்நாத்புரிக்கு செல்கின்றனர்? இந்த விசயங்களையும் நீங்கள் அறிவீர்கள், கிருஷ்ணரை ஏன் சியாம் சுந்தர் என்று கூறுகிறோம்? ஆத்மா தமோபிரதானமாக ஆகின்ற பொழுது கருப்பாகி விடுகிறது. பிறகு ஆத்மா தூய்மையாக ஆகின்ற பொழுது சுந்தர் ஆகிவிடுகிறது. இந்த பாரதம் தங்கமாக இருந்தது, 5 தத்துவங்களும் இயற்கையான அழகுடன் இருந்தது. சரீரமும் இவ்வாறு அழகாக உருவானது. இப்போது தத்துவங்களும் தமோ பிரதானமாக ஆன காரணத்தினால் சரீரமும் இவ்வாறு கருப்பாக, சிலர் முடமாக, கூனியாக போன்று பிறக்கின்றனர். இது தான் நரகம் என்று கூறப்படுகிறது. இது மாயையின் கவர்ச்சியாகும். அயல்நாடுகளில் லைட் அந்த (விளக்கு) மாதிரி இருக்கிறது, அதாவது ஒளி இருக்கும், ஆனால் தீபம் அல்லது விளக்கு தென்படாது. அங்கும் இவ்வாறு வெளிச்சம் இருக்கும். விமானம் போன்றவைகள் அங்கும் இருக்கும். கர்வமுள்ள விஞ்ஞானிகளும் இங்கு வருவார்கள். பிறகு அங்கும் இந்த விமானம் போன்ற அனைத்தையும் உருவாக்குவார்கள். நீங்கள் எந்த அளவிற்கு நெருக்கத்தில் வருவீர்களோ உங்களுக்கு அனைத்தும் சாட்சாத்காரம் ஏற்படும். மின்சாரத்துறையைச் சார்ந்தவர்கள் போன்ற அனைவரும் இங்கு வந்து ஞானம் அடைவார்கள். சிறிது ஞானம் அடைந்தாலும் பிரஜைகளாக வருவார்கள். கலையை கூடவே எடுத்துச் செல்வார்கள். புத்தியின் கடைசி நிலையின் போலவே ஆகிவிடும். ஆம், உங்களைப் போன்று கர்மாதீத நிலை அடையமாட்டார்கள். மற்றபடி ஆத்மாவானது கலையை எடுத்துச் செல்லும் அல்லவா! டெலிவிசன் போன்றவைகளில் தூரத்தில் அமர்ந்து கொண்டே பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். நாளுக்கு நாள் பிராயணம் செய்வது கடினமாகி விடும். உலகில் எதுவெல்லாம் கண்டுபிடித்து பொருட்களை உருவாக்குகின்றனர்! இயற்கை சீற்றங்களில் எத்தனை பேர் இறந்தனர், வெள்ளம் போன்றவைகளும் ஏற்படும். சமுத்திரமும் சீற்றமடையும். சமுத்திரமும் கூட வறண்டு விடும் அல்லவா!இந்த உலகில் என்ன என்ன இருக்கிறது? பிறகு புது உலகில் என்னென்ன இருக்கும்? என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாரத கண்டம் மட்டுமே இருக்கும். அதுவும் சிறியதாக இருக்கும். மற்ற அனைவரும் பரந்தாமத்திற்குச் சென்று விடுவார்கள். இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது? இவை எதுவும் இருக்காது. நீங்கள் தங்களது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். விநாசத்திற்கு முன்பாகவே உங்களது பாகம் (நடிப்பு) பதிவாகியிருக்கிறது. இந்த சீ சீ உலகில் நீங்கள் இன்னும் சிறிது காலத்திற்கு இருப்பீர்கள். பிறகு தங்களது புது உலகிற்குச் சென்று விடுவீர்கள். இதை மட்டுமே நீங்கள் நினைவு செய்து கொண்டிருந்தால் குஷியாக இருப்பீர்கள். இவை அனைத்தும் அழியப் போகிறது என்பது உங்களது புத்தியில் இருக்கிறது. இவ்வளவு கண்டங்கள் இருக்காது. பழமையான பாரத கண்டம் மட்டுமே இருக்கும். இல்லறத்தில் இருங்கள். காரியம் போன்றவைகள் செய்யுங்கள். புத்தியில் பாபாவின் நினைவு இருக்க வேண்டும். மனிதனிலிருந்து தேவதை ஆகக்க கூடிய கல்வி நீங்கள் படிக்க வேண்டும். இல்லறத்தில் இருந்தாலும், தொழில் செய்தாலும் தந்தை மற்றும் சக்கரத்தை நினைவு செய்யுங்கள். ஏகாந்தத்தில் அமர்ந்து ஞானச் சிந்தனை செய்யுங்கள். பயங்கரமான ஆபத்துக்கள் வரும், அதன் மூலம் முழு உலகமும் அழிந்து விடும். சத்யுகத்தில் மிகக் குறைவான மனிதர்கள் இருப்பார்கள். அங்கு கால்வாய் போன்றவைகளுக்கான அவசியம் இருக்காது. இங்கு எத்தனை கால்வாய்கள் தோண்டுகின்றனர். பல நதிகள் உள்ளன. சத்யுகத்தில் யமுனை நதிக்கரை இருக்கும். அங்கு இனிய நதிக்கரையில் தான் அனைத்து மாளிகைகளும் இருக்கும். இந்த மும்பை இருக்காது. இதை யாரும் புது மும்பை என்று கூறமாட்டார்கள். நாம் சொர்க்கத்திற்கான இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம், பிறகு இந்த நரகம் இருக்கவே இருக்காது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இராவணபுரி அழிந்து விடும். இராமபுரி ஸ்தாபனை ஆகிவிடும். தமோபிரதான பூமியில் தேவதைகளின் பாதங்கள் படாது. எப்போது மாறி விடுமோ அப்போது பாதங்கள் பூமியில் படும். அதனால் தான் லெட்சுமியை அழைக்கின்ற போது சுத்தப்படுத்துகின்றனர். லெட்சுமியை வரவேற்கின்றனர். சித்திரத்தை வைக்கின்றனர். ஆனால் அவரது தொழில் பற்றி யாருக்கும் தெரியாது. அதனால் தான் உருவ வழிபாடு என்று கூறப்படுகிறது. கல் சிலையை பகவான் என்று கூறி விடுகின்றனர். இந்த அனைத்து விசயங்களையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொண்டீர்கள். பரமாத்மா தான் அமர்ந்து புரிய வைக்கின்றார். ஆத்மா, ஆத்மாவிற்குப் புரிய வைக்க முடியாது. ஆத்மா எப்படி மற்றும் என்னென்ன பாகம் எடுத்து நடிக்கிறது? என்பதையும் இப்போது நீங்கள் புரிய வைக்க முடியும். ஆத்மா என்றால் என்ன? என்பதை பாபா வந்து உணர வைக்கின்றார். மனிதர்கள் ஆத்மாவையும், பரமாத்மாவையும் அறியவில்லை. ஆக அவர்களை என்னவென்று கூறுவது? மனிதர்களாக இருந்து கொண்டு நடத்தைகள் மிருகம் போன்று இருக்கிறது. இப்போது உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது. ஏணியை வைத்து மற்றவர்களுக்குப் புரிய வைப்பது மிகவும் எளிதாகும். அதுவும் நன்றாகப் புரிய வைக்க வேண்டும். பாரதவாசிகளாகிய நாம் தேவி தேவதா தர்மத்தினர்களாக இருந்தோம், அவர்கள் எப்படி சதோபிரதானமாக ஆனார்கள்? பிறகு சதோ, ரஜோ, தமோவில் எப்படி வந்தார்கள்? இவை அனைத்து விசயங்களையும் தாரணை செய்ய வேண்டும், அப்போது தான் ஞானச் சிந்தனை ஏற்படும். தாரணையே செய்யவில்லையெனில் பிறகு ஞானச் சிந்தனையும் ஏற்படாது. ஞானத்தைக் கேட்டீர்கள் பிறகு தொழிலில் ஈடுபட்டு விடுவீர்கள். ஞான சிந்தனை செய்வதற்கு நேரம் கிடையாது. இல்லையெனில் குழந்தைகளாகிய நீங்கள் தினமும் முரளி படிக்க வேண்டும், மேலும் அதைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். முரளி எங்கிருந்தாலும் கிடைக்கும். விசால புத்தியுடன் இருக்கும் போது கருத்துகள் புரிந்து கொள்ள முடியும். பாபா தினமும் புரிய வைக்கின்றார். மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்கு பல கருத்துகள் உள்ளன. கங்கை கரைக்கும் நீங்கள் சென்று புரிய வைக்க முடியும். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் பாபாவா? அல்லது கங்கை நீரா? நீங்கள் ஏன் செல்வத்தை வீணாக்குகிறீர்கள்? ஒருவேளை கங்கையில் குளிப்பதன் மூலம் தூய்மை ஆகிவிட ஆக முடியும் என்றால் கங்கை கரையிலேயே அமர்ந்து விடுங்கள். வெளியே ஏன் செல்கிறீர்கள்? சுவாசத்திற்கு சுவாசம் என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இது யோக அக்னியாகும். யோகா என்றால் நினைவு. புரிய வைப்பதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் சதோபிரதான புத்தியுடையவர்கள் சிலர் உடனேயே புரிந்து கொள்கின்றனர். சிலர் ரஜோவாக, சிலர் தமோ புத்தியுடனும் இருக்கின்றனர். இங்கு வகுப்பறையில் வரிசைக்கிரமமாக அமர வைக்க முடியாது. இல்லையெனில் மனம் உடைந்து விடுவர். நாடகப்படி இராஜ்யம் முழுமையான முறையில் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. பிறகு சத்யுகத்தில் தந்தை ஒருபோதும் கற்பிக்கமாட்டார். தந்தை கற்பிக்கும் நேரம் ஒரே ஒரு முறை தான், பிறகு பக்தி மார்க்கத்தில் பொய்யான விசயங்களை உருவாக்குகின்றனர். ஆச்சரியமான விசயம் என்னவெனில் யார் முழு 84 பிறவிகள் எடுக்கிறாரோ அவரது பெயரை கீதையில் கூறிவிட்டனர். மேலும் யார் பிறப்பு இறப்பின்றி இருக்கிறாரோ அவரது பெயரை மறைத்து விட்டனர். ஆக 100 சதவிகிதம் பொய் ஆகிவிடுகிறது அல்லவா!குழந்தைகள் பலருக்கு நன்மை செய்ய வேண்டும். உங்களது அனைத்தும் குப்தமானது. இங்கு பிரம்மா குமார், குமாரிகளாகிய நீங்கள் தங்களுக்காகவே சொர்க்கம், சூரியவம்சம், சந்திரவம்ச இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். இதுவும் யாருடைய புத்தியிலும் வருவது கிடையாது. நீங்களே மறந்து விடும் போது மற்றவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்! நீங்கள் இதை மறக்கவில்லையெனில் சதாகுஷியாக இருப்பீர்கள். மறப்பதால் தான் மாயையின் அடி விழுகிறது. நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) அளவற்ற சுகத்தின்அனுபவம் செய்வதற்காக தந்தை என்ன கற்பிக்கிறாரோ அதை புத்தியில் தாரணை செய்ய வேண்டும். ஞானச் சிந்தனை செய்ய வேண்டும்.2) இந்த சுடுகாட்டை பார்த்தாலும் பார்க்காமல் இருக்க வேண்டும். தீயவைகளைக் கேட்கக் கூடாது, தீயவைகளைப் பார்க்கக் கூடாது ....... புது உலகிற்கு தகுதியானவர்களாக ஆக வேண்டும்.வரதானம்:

ஞானம் நிறைந்தவர், சக்தி நிறைந்தவர் மற்றும் அன்பு நிறைந்தவர் என்ற சொரூபத்தின் மூலம் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி அடையக் கூடிய வெற்றி சொரூபமானவர் ஆகுக.வார்த்தைகளினால் சேவை செய்யும் போது மனம் சக்திசாலியாக இருக்க வேண்டும். மனதின் மூலம் மற்றவர்களது மனதை மாற்றுங்கள், அதாவது மனதின் மூலம் மனதை கட்டுப்படுத்துங்கள், மேலும் வார்த்தைகளின் மூலம் லைட், மைட் கொடுத்து ஞானம் நிறைந்தவராக ஆக்குங்கள், செயலின் மூலம் அதாவது சம்மந்தம் அல்லது தனது மகிழ்ச்சிகரமான நடவடிக்கை மூலம் அவர்களுக்கு உண்மையான (ஈஸ்வரிய) குடும்பத்தின் அனுபவத்தை செய்வியுங்கள். எப்போது இவ்வாறு மூன்று சொரூபத்தில் இருந்து ஒவ்வொரு காரியமும் செய்வீர்களோ அப்போது வெற்றி சொரூபமாக தானாகவே ஆகிவிடுவீர்கள்.சுலோகன்:

தன்னிடத்தில் தூய எண்ணங்களின் சக்தியை சேமித்து வைத்திருந்தால் இந்த சக்தியானது பாதுகாப்பின் சாதனமாக ஆகிவிடும்.***OM SHANTI***