BK Murli 20 December 2016 Tamil

BK Murli 20 December 2016 Tamil

20.10.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! கோபம் கூட மிகப் பெரிய முள்ளாகும். இதனால் அநேகருக்கு துக்கம் ஏற்படுகிறது. எனவே இந்த முள்ளை நீக்கி உண்மையிலும் உண்மையான மலராகுங்கள்.கேள்வி:

முள்ளிலிருந்து மலராக ஆகக் கூடிய குழந்தைகளுக்கு தந்தை எந்த ஒரு தைரியம் அளிக்கிறார்?பதில்:

குழந்தைகளே இதுவரையும் முள்ளிலிருந்து மலராக ஆவதில் மாயை ஏற்படுத்தும் இந்த தடைகள் ஒரு நாள் முடிந்து போய் விடும். நீங்கள் அனைவரும் சொர்க்கத்திற்குச் சென்று விடுவீர்கள். இந்த கலியுக முட்கள் அழிந்து போய் விடும். தந்தை உங்களை சங்கமயுகம் என்ற தொட்டியில் போட்டுள்ளார். மாயை வாடிப்போகுமாறு செய்து விடுகிறது என்றாலும் கூட ஞானத்தின் விதை அழிவற்றதாகும். இந்த விதை அழிந்து போய் விட முடியாது.பாடல்:

நாங்களும் அவரை விட்டு பிரிய மாட்டோம்.. .. .. ..ஓம் சாந்தி.

சிவபாபா பிரம்மாவின் உடல் மூலமாக இனிமையிலும் இனிமையான அருமையான ஆன்மீகக் குழந்தைகளுக்காக ஆழமான இரகசியங்களை அல்லது ஞானத்தைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். ஒன்று பாபா எவ்வளவு தான் துன்பங்கள் சகித்துக் கொள்ள வேண்டி வந்தாலும் சரி, நாங்கள் உங்கள் மீது பயாவோம் என்ற பாடலைக் கேட்டீர்கள். துன்பம் ஏன் ஏற்படுகிறது. ஏனெனில், மனிதர்களுக்கு விஷம் (விகாரம்) கிடைப்பதில்லை. நாம் ஆத்மா மற்றும் பரமாத்மாவை அறியாமல் இருந்தோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். தன்னையும் அறியாமல் இருந்தோம். தந்தையையும் அறியாமல் இருந்தோம். எனவே விலங்கு புத்தி போல இருந்தோம். லௌகீக சம்பந்தத்திலோ தங்களை அறிந்திருப்பார்கள். தந்தையையும் அறிந்திருப்பார்கள். இச்சமயத்தின் மனிதர்கள் தங்களையும் பரலோகத் தந்தையையும் முற்றிலுமே அறியாமல் உள்ளார்கள். பரமாத்மாவிற்கு எந்த ஒரு பெயர் ரூபம் தேசம் காலம் இல்லவே இல்லை என்று கூறி விடுகிறார்கள். எனவே பிறகு ஆத்மாவினுடையதும் இருக்கக் கூடாது. ஆத்மா பற்றி கூட அவர்கள் அறியாமலே இருக்கிறார்கள். ஆத்மாவே பரமாத்மா என்று கூறி விடுகிறார்கள். இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்கள் பெயரளவில் மட்டுமே ஆத்மா மற்றும் சரீரம் உள்ளது என்கிறார்கள். ஆத்மா அழியாதது. உடல் அழியக் கூடியது. நல்லது. ஆத்மா என்ன பொருள் ஆகும். அதன் ரூபம், நிறம் என்ன? ஆத்மா என்ற பெயரை அறிந்துள்ளார்கள். ஆனால் அது எப்படி இருக்கிறது? என்ன செய்கிறது? எப்படி எப்படி பாகத்தை ஏற்று நடிக்கிறது? எவ்வளவு காலம் பாகத்தை ஏற்று நடிக்கிறது? இந்த ஆத்மாவின் ஞானம் யாருமே வர்ணிக்க முடியாது. ஆத்மா சிறிய நட்சத்திரம் ஆகும் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆத்மாவில் தான் முழுமையாக 84 பிறவிகளின் அழியாத பாகம் பொருந்தி உள்ளது. சங்கராச்சாரியாரின் ஆத்மா கூட தனது பாகத்தை நடித்துக் கொண்டிருக்கிறது. ஆத்மா எப்படி சதோபிரதானமாக, பிறகு சதோ ரஜோ தமோவில் வருகிறது என்பது கூட யாருக்கும் தெரியாது. புருவ மத்தியில் பிரகாசிக்கும் அதிசயமான நட்சத்திரம் என்று மட்டுமே கூறி விடுகிறார்கள். அவ்வளவே! வேறு எதுவும் தெரியாது. ஆத்மாவையே அறியவில்லை என்றால், பரமாத்மாவையும் அறியவில்லை.இச்சமயம் இது முட்களின் காடு ஆகும். எல்லோருமே முட்கள் ஆவார்கள். படைப்பவரான பரமபிதா பரமாத்மா வையும் அறியாமல் உள்ளார்கள். படைப்பினுடைய முதல் இடை கடை பற்றியும் அறியாமல் உள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மா மற்றும் பரமாத்மா பற்றி அறிந்துள்ளீர்கள். அது கூட வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப நிறைய குழந்தைகள் சரியான முறையில் அறியாமல் உள்ளார்கள். தேக அபிமானத்தில் இருக்கும் காரணத்தினால் முழுமையாக தாரணை ஆவதில்லை. வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள் அல்லவா? பாபா இவ்வாறு ஏன் இருக்கிறது என்று கேட்கிறார்கள். குழந்தைகளே! இது இராஜாங்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்று பாபா கூறுகிறார். இதில் எல்லா வகையினரும் அவசியம் வேண்டும். கல்புத்தியாக இருந்தார்கள் என்றால் தானே குறைந்ததிலும் குறைந்த பதவியை அடைவார்கள். ஒரு வேளை சுயம் அறிந்திருந்தார்கள் என்றால், மற்றவர்களுக்கும் புரிய வைக்கலாமே! இனி முன்னால் போகப் போக புரிய வைக்க முற்படுவார்கள் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் இப்படி கூட யாராவது வேண்டுமே ! அப்பொழுது தானே குறைந்த பதவி கிடைக்கும் இல்லையா? இராஜா எங்கே பிரஜை எங்கே? எவ்வளவு வித்தியாசம் உள்ளது. இங்கு இராஜா பிரஜை எல்லோருக்குமே துக்கம் உள்ளது. சத்யுகத்தில் இராஜாவிற்கும் துக்கம் இல்லை, பிரஜைக்கும் துக்கம் இல்லை. ஆனால் பதவியில் வித்தியாசம் உள்ளது. முழுமையாக தாரணை ஆகாத காரணத்தினால் எவரொருவருக்கும் புரிய வைக்க முடியாமல் இருக்கிறார்கள். பின் ஏதாவது ஒரு முள் குத்திக் கொண்டே இருக்கும். சிலசமயம் பேராசை, சில சமயம் மோகம்.. பூதங்களின் பிரவேசம் ஆகிக் கொண்டே இருக்கும். இதுவும் அவசியம் ஆக வேண்டி உள்ளது.நீங்கள் பிரஜாபிதா பிரம்மாகுமார் குமாரிகள் ஆவீர்கள். பிரஜாபிதாவின் தந்தை யார்? சிவபாபா. மற்றபடி சிவனுக்கு யாரும் தந்தை கிடையாது. இந்த பிரம்மா விஷ்ணு சங்கரன் கூட சிவனின் படைப்பு ஆகும். எனவே எல்லோரும் ஆத்மாக்கள் ஆகிறார்கள். பரமபிதா பரமாத்மா ஒருவர் ஆவார். பிரம்மா விஷ்ணு சங்கரன் அல்லது இலட்சுமி நாராயணர் ஆகிய எந்த ஒரு மனித ஆத்மாவினாலும் ஒரு பொழுதும் கதி சத்கதியின் ஆஸ்தி கிடைக்க முடியாது. மனிதர்கள் சரியான முறையில் ஆத்மாவையும் அறியாமல் உள்ளார்கள். பரமாத்மாவையும் அறியாமல் உள்ளார்கள். ஒரே ஒரு பரமபிதா பரமாத்மா மட்டுமே ஆத்மாவை உணருமாறு (ரியலைசேஷன்) செய்விக்க முடியும். ஞானத்தினால் சத்கதி ஆகிறது. ஞானம் ஒரு தந்தை தான் கொடுக்கிறார். ஒரு சில குழந்தைகள் பின் யக்ஞத்தின் ஸ்தூல சேவை கூட நிறைய செய்கிறார்கள். இந்த பாடத்திற்குக் கூட மதிப்பெண்கள் கிடைக்கிறது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை அமரகதை அதவாது மூன்றாவது கண்ணின் கதையைக் கூறுகிறார். இது உண்மையில் கதை கிடையாது. இது ஆன்மீக ஞானம் ஆகும். தன்னையும் தந்தையையும் அறிவது. அவர்கள் எப்படி தண்ணீரிலிருந்து நீர் குமிழி வெளிப்படுகிறது, பிறகு கலந்து விடுகிறது என்று கூறி விடுகிறார்கள். நாம் பிரம்மத்திலிருந்து உற்பத்தியாகி பாகத்தை ஏற்று நடித்துப் பின் பிரம்மத்தில் கலந்து போய் விடுகிறோம் அல்லது பிரம்மமே ஆகி விடுகிறோம். படைப்பு மற்றும் படைப்பவரின் வேறு எந்த ஞானமும் இல்லவே இல்லை. ஞானத்தை தந்தை தான் வந்து புரிய வைக்கிறார். இவருடைய பெயர் சிவன் என்பதாகும். பிறகு அவரை ஒரு சிலர் ருத்ரன் என்றும் கூறுகிறார்கள். ஒரு சிலர் பாபகடேஷ்வரன் என்றும் கூறுகிறார்கள். அநேக பெயர்கள் வைத்து பூஜையின் பொருட்களை அதிகரித்து விட்டுள்ளார்கள். பரமாத்மா என்னென்ன காரியம் செய்தாரோ அதன்படி பல்வேறு பெயர்களை வைத்து கோவில்கள் அமைத்து விட்டுள்ளார்கள். இது முட்களின் காடு, விகாரக் கடல் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். இறைவன் எங்கும் நிறைந்தவர் அல்ல என்பதும் எல்லோர் மூலமாக எழுத வைக்கப்படுகிறது. தந்தை வந்து பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறார். ஆக முழு உலகம் சொர்க்கம் ஆகி விடுகிறது. இது கூட யாருடைய புத்தியிலும் வருவதில்லை. சாஸ்திரங்கள் எல்லாமே பக்தியினுடையது ஆகும். மற்றபடி ஒவ்வொருவருக்கும் அவரவருடைய வேலை பற்றிய ஞானம் உள்ளது. தச்சனுக்கு தச்சு வேலை பற்றிய ஞானம் இருக்கும். மருத்துவருக்கு மருத்துவம் பற்றிய ஞானம் இருக்கும். இது ஆன்மீக ஞானம் ஆகும். இதை ஒரு பரமாத்மா தான் வந்து கொடுக்கிறார். பரமாத்மா என்று யாருக்கு கூறப்படுகிறது என்பது மனிதர்களுக்கு தெரியவே தெரியாது. கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை போட்டு விட்டுள்ளார்கள். முக்கியமான விஷயமே இது தான். தாய் தந்தையை குறையுள்ளதாக ஆக்கிய காரணத்தினால் மற்ற எல்லா சாஸ்திரங்களும் பொய்யாகி விட்டன. போகற்களினுடைய சுரங்கங்கள் கூட இருக்கும். இது கூட போகற்கள் போலத் தான். தங்க புத்தி உடையவர்கள் தங்க புரியான சத்யுகத்தில் இருப்பார்கள். இது நரகம் ஆகும். பதீத பாவனரே ! வாருங்கள், என்று அழைக்கிறார்கள் என்றால் அவசியம் பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறார்கள். நரகம் மற்றும் சொர்க்கம் இரண்டும் பாரதத்தில் தான் உள்ளது. யாராவது இறந்தார் என்றால் சொர்க்கம் சென்று விட்டார் என்று கூறுகிறார்கள். சொர்க்கம் என்று சத்யுகம் அழைக்கப்படுகிறது என்பது புத்தியில் வருவதில்லை. பரமாத்மா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார், நரகத்தை அல்ல. இராவண இராஜ்யம் எப்பொழுது முதல் ஆரம்பமாகிறது என்பது கூட யாருக்கும் தெரியாது. சாஸ்திரங்கள் நிறைய படிக்கிறார்கள்தான். பிரம்மசரியத்திலும் இருக்கிறார்கள். ஆனால் பிறப்பு விகாரத்தினால் ஆகிறது அல்லவா? சாது சந்நியாசி கூட சாதனை செய்கிறார்கள். தந்தையிடம் முக்தி வேண்டுகிறார்கள். ஏனெனில் சீ - சீ உலகத்தில் இருக்க விரும்புவதில்லை. ஆத்மா எப்படி பிறப்பு இறப்பில் வருகிறது என்று முதலில் ஆத்மாவை அறிந்து கொள்ளுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார்.எப்படி உண்மையான தங்கத்தில் துரு படுகிறது. எப்படி 84 பிறவிகள் பாகத்தை ஏற்று நடிக்கிறது. எல்லோரையும் விட அதிகமான பாகம் உங்களுடையதாகும். யார் தேவி தேவதைகளாக இருந்தார்களோ அவர்களே முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார்கள். இலட்சுமி நாராயணர் ஆட்சி புரிந்தார்கள். பிறகு எங்கே சென்றார்கள்? அவர்களுடைய ஆத்மா அவசியம் ஜென்மம் எடுத்திருக்கக் கூடும் அல்லவா? இப்பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? யாருக்குமே தெரியாது. கிறிஸ்து இப்பொழுது ஏழ்மையின் பாகத்தில் இருக்கக் கூடும் என்று கிறித்துவர்கள் அறிந்துள்ளார்களா? சொர்க்கத்திற்கு அதிபதியாக இருந்த இலட்சுமி நாராயணர் தான் புனர் ஜென்மம் (மறு பிறவிகள்) எடுத்து 84 பிறவிகளை முடிக்க வேண்டி உள்ளது என்பதை நீங்கள் நல்ல முறையில் அறிந்துள்ளீர்கள். எல்லா ஆத்மாக்களும் 84 பிறவிகள் எடுக்க மாட்டார்கள். இதுவும் ஞானம் புத்தியில் தாரணை செய்வதற்கானதாகும். யோகத்தில் இருந்தாலொழிய தவிர முட்களிலிருந்து மலர் ஆக முடியாது. யோகத்தினால் தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். மேலும் சதோபிரதானமான மலர் ஆகிடுவீர்கள். இங்கு இருக்கும்வரையும் ஏதாவது கொஞ்ச நஞ்சம் முள் தன்மையின் அம்சம் இருக்கும். மலர் ஆகி விட்டீர்கள் என்றால், நீங்கள் இங்கு இருக்க முடியாது. மலர்களின் தோட்டம் என்று சத்யுகத்திற்குக் கூறப்படுகிறது. இப்பொழுது நீங்கள் முட்களின் காடு அதாவது இராவணனினுடைய இராஜ்யத்தில் இருக்கிறீர்கள். எல்லோருமே முட்களே முட்களாக இருக்கிறார்கள். யார் அநேக முட்களை மலராக ஆக்குகிறார்களோ அவர்களுக்குத் தான் உண்மையான நறுமணமுள்ள மலர் என்று கூறுவார்கள். கிங் ஆஃப் ஃப்ளவர் மலர்களின் இராஜா என்று ஒரு பூ இருக்கிறது. வெண்மையாக இருக்கும். மேஜை மீது வைக்கப்படுகிறது. பிறகு அது மலர்ந்து கொண்டே இருக்கும். நறுமணம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இது போன்ற பூ வேறு எதுவும் இருக்காது. இப்பொழுது இராஜா மலர் இருக்கிறது என்றால் பின் இராணியும் வேண்டும். இரவின் இராணி - ரோஜா மலர், மல்லிகை ஆகிய நல்ல நல்ல மலர்கள் உள்ளன. மலர் கண்காட்சி காண்பிக்கிறார்கள். அங்கு எல்லாமே நல்ல நல்ல மலர்கள் எடுத்து வருகிறார்கள். யார் நல்ல நல்ல மலர்கள் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு பரிசுக் கூட கிடைக்கிறது. நீங்கள் கூட மலர்களின் தோட்டம் அமைக்கிறீர்கள் அல்லவா? சிவன் மீது மலர்களைப் படைக்கிறார்கள். அதில் சாமந்தி பூ, எருக்கம் பூ கூட படைக்கிறார்கள். நான் இங்கு குழந்தைகளாகிய உங்களை மலராக ஆக்குவதற்கான பாகத்தை ஏற்று நடிக்கிறேன் என்று பாபா புரிய வைத்துள்ளார். யார் ரோஜாமலர் யார் மல்லிகை, யார் சாமந்தி பூ, யார் எருக்கம் பூ என்பதை நான் அறிந்துள்ளேன். எல்லாவற்றையும் விட சீ - சீயாக எருக்கம் பூ போன்றவர்கள். அவர்களுடைய நடத்தையே முட்களைப் போல இருக்கும். ஒரு சிலர் மிகவும் கூர்மையான முள் ஆவார்கள். கோபம் கூட ஒரு முள் ஆகும். அநேகருக்கு துக்கம் கொடுக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் முட்களின் உலகத்திருந்துஒதுங்கி இருக்கிறீர்கள். சங்கமத்தில் இருக்கிறீர்கள். முட்களிலிருந்து மலராக ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். எப்படி தோட்டக்காரன் முட்களை நீக்கி மலர்களைத் தனியான தொட்டியில் வைக்கிறார். உங்களைக் கூட பாபா பிரித்து விட்டுள்ளார். நீங்கள் சங்கமத்தில் உள்ளீர்கள். உங்களுக்கு இப்பொழுது மராமத்து (பழுது பார்த்தல்) ஆகிக் கொண்டே இருக்கிறது. பிறகும் மாயை முள்ளாக ஆக்கி விடுகிறது. பிறகும் ஒரு முறை என்னுடையவர் ஆகி விட்டார் அல்லவா.. .எனவே இந்த மாயையின் தடை கூட ஒரு நாள் முடிந்து போய் விடும். பிறகு இந்த தொட்டியில் வைக்கப்பட்ட மலர்கள் எல்லாம் சொர்க்கத்திற்குச் சென்று விடும். கலியுக முட்கள் எல்லாம் சாம்பலாகி விடுவார்கள். நீங்கள் எவ்வளவு குறைவான மலர்கள் ஆவீர்கள். உங்களை சங்கமயுக தொட்டியில் போட்டிருக்கிறார். விதை விதைக்கப்பட்டுள்ளது. மாயையின் புயல்கள் தாக்கும் பொழுது வாடிப் போகுமாறு செய்து விடுகிறது. பிறகும் அவினாஷி ஞானத்தின் விதை ஒரு முறை விதைத்துள்ளது என்றால் அது அழிந்து போவதில்லை.தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் பயமற்றவர்களாக வேண்டும். ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இந்த மேளா கண்காட்சியை நாம் சங்கமத்தில் காண்பிக்க வந்துள்ளோம் என்று இதை எழுதி விடுங்கள் என்று பாபா கூறுகிறார். பழைய உலகத்தைப் புதியதாக ஆக்குவதற்கு அல்லது நரகவாசிகளை சொர்க்கவாசியாக ஆக்குவதற்காக இந்த யுத்தம் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு நிகழ்கிறது என்பதை எழுத வேண்டும். பாபா உத்தரவுகள் நிறைய கொடுக்கிறார். வழி முறைகள் மிகவும் சுலபமானதாகக் கூறுகிறார். தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் சொர்க்கத்தின் அரசாட்சி பெறுங்கள். மனிதர்கள் தண்ணீரில் முழுக்குப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். அது கூட கடலுக்கு போகலாம் அல்லவா? நதிகள் கடலிலிருந்து வெளிப்பட்டுள்ளது. நதிகளின் தந்தை கடல் ஆகும் அல்லவா? அங்கு போய் ஸ்நானம் செய்யலாமே ! ஆனால் அது உவர்ப்பாக இருக்கிறது. எனவே இனிமையான நதிகளில் ஸ்நானம் செய்கிறார்கள். இப்பொழுது நீங்கள் ஞானக் கடன்

குழந்தைகள் ஆவீர்கள். ஞானக் கடல் பதீத பாவனர் தந்தை ஆவார். நீங்கள் அவரது குழந்தைகள். யார் எவ்வளவு அதிகமாக சேவை செய்வார்களோ அவர்கள் நல்ல மலர்கள் ஆவார்கள் என்று தெரியவருவார்கள். கண்காட்சியில் கூட அடிக்கடி நல்ல மலர்களை அழைக்கிறார்கள். இன்னார் நம்மை விட புத்திசாலியாக இருக்கிறார் என்று நினைக்கிறார்கள். ஆனால் புத்திசாலியாக இருப்பவர்கள் மீது பின் மதிப்பு கூட வைக்க வேண்டும். ஒரு பொழுதும் கோபப்படாதீர்கள் என்று பாபா எப்பொழுதும் புரிய வைக்கிறார். அன்புடன் புரிய வையுங்கள். யாராவது கோபப்படுகிறார் என்றால், இவரிடம் கடுமையான பூதம் உள்ளது என்று பாபா நினைக்கிறார். தாய் தந்தையர் மீதும் கோபப்படுவதில் தாமதிப்பதில்லை. இன்னுமே துர்க்கதியை அடைந்து விடுவார்கள். ஏழைப்பங்காளன் எப்பொழுதாவது ஏழைகள் மீது கோபப்படுவாரா என்ன? ஏழைகளை செல்வந்தராக ஆக்குவதற்குத் தான் ஏழைப்பங்காளனான பாபா வந்துள்ளார். இங்கு கோடீசுவரனாக இருப்பவர்கள் அடுத்த பிறவியில் வேலைக்காரர்களாக ஊழியர்களாக ஆகி விடுவார்கள். எந்த ஏழைகள் நல்லமுறையில் படிப்பார்களோ அவர்கள் போய் இராஜா இராணி ஆவார்கள். ஈசுவரிய சேவையில் எதுவுமே கொடுக்காத அப்பேர்ப்பட்டவர்களும் சென்டர்களுக்கு வருகிறார்கள். சிறிதளவு விதை விதைத்தால் கூட நமது வருங்காலம் எவ்வளவு உயர்ந்ததாகி விடும் என்பது அவர்களுக்கு தெரியவே தெரியாது. குசேலரினுடைய உதாரணம் உள்ளது அல்லவா? இறைவன் பொருட்டு தானம் கொடுக்கிறார்கள். அடுத்த பிறவியில் பலன் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். குழந்தைகளே ! உங்களுக்கு ஒரு செங்கல்லுக்குப் பதிலாக மாளிகை கிடைத்து விடும் என்று பாபா எழுதி விடுகிறார். இங்கு சோழிகளைக் கொடுக்கிறீர்கள். அங்கு வைரங்களாக ஆகி விடுகிறது. எனவே ஓரு பிடி அரிசியின் பாடல் உள்ளது. குருநானக்கினுடைய இடத்திற்குச் செல்கிறார்கள். ஏதாவது அவசியம் அங்கு வைப்பார்கள். ஆனால் இங்கு தந்தை வள்ளல் ஆவார் அல்லவா? நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. மிகவும் பயமற்றவராகி முட்களை மலராக ஆக்கும் சேவை செய்ய வேண்டும். எல்லோருக்குள்ளும் அழிவற்ற விதையை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.2. கோபத்தின் முள் மிக பெரியதாகும். அதை விட்டு விட்டு மிக மிக அன்பானவர் ஆக வேண்டும். அன்புடன் சேவை செய்ய வேண்டும். சேவை செய்பவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.வரதானம்:

சத்தியத்தின் மகான் தன்மை மூலமாக சதா குஷியின் ஊஞ்சல் ஆடக் கூடிய அத்தாரிட்டி (அதிகார) சொரூபம் ஆகுக !சத்தியத்தின் அத்தாரிட்டி சொரூப குழந்தைகளின் பாடலாவது - சத்தியம் இருந்தால் நடனம் ஆடலாம்.சத்தியத்தின் படகு ஆடும், ஆனால் மூழ்கிப் போக முடியாது. உங்களை கூட யார் எவ்வளவு தான் அசைப்பதற்கு முயற்சி செய்தாலும் சரி ஆனால் நீங்கள் சத்தியத்தின் உயர்வுடைமை மூலமாக இன்னுமே குஷியின் ஊஞ்சல் ஊஞ்சலாடுகிறீர்கள். அவர்கள் உங்களை ஆட்டுவதில்லை. ஆனால் ஊஞ்சலை ஆட்டுகிறார்கள். இது அசைப்பது அல்ல, ஆனால் ஊஞ்சலாட்டுவது ஆகும். எனவே நீங்கள் ஊஞ்சலாட்டுங்கள். மேலும் நாங்கள் தந்தையுடன் கூட ஊஞ்சலாடுவோம் என்று நீங்கள் அவர்களுக்கு நன்றி கூறுங்கள்.சுலோகன்:

சர்வ சக்திகளின் ஒளி (லைட்) சதா கூட இருந்தது என்றால், மாயை சமீபத்தில் வர முடியாது.

  


***OM SHANTI***