BK Murli 3 December 2016 Tamil

BK Murli 3 December 2016 Tamil


03.12.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! படிப்பு மற்றும் நினைவு யாத்திரையே உயர்ந்த பதவிக்கான ஆதாரம் ஆகும். ஆகையால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக மு:னனேறி கிரஹித்துக் கொள்ளுங்கள்.கேள்வி:

எந்த ஒரு ஆழமான இரகசியத்தை முதன்முதல் புரிய வைக்கக் கூடாது? ஏன்?பதில்:

நாடகத்தின் ஆழமான இரகசியத்தை முதன்முதலில் புரிய வைக்கக்கூடாது. ஏனெனில், சிலர் குழம்பி விடுவார்கள். நாடகத்தில் இருந்ததென்றால் தானாகவே இராஜ்யம் கிடைக்கும், தானாகவே முயற்சி செய்துவிடுவோம்.. என்று கூறுகின்றனர். ஞானத்தின் இரகசியத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல் பைத்தியம் பிடித்தவர்கள் போல் ஆகிவிடுகின்றனர். முயற்சி செய்யாமல் தண்ணீர் கூட கிடைக்காது என்பதை புரிந்திருக்கவில்லை.பாடல்:

கள்ளம் கபடமற்றவர் தனிப்பட்டவர்ஓம்சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகளுக்கு காலை வணக்கம். பாபா மிகுந்த உற்சாக மூட்டும் படியாக குழந்தைகளுக்கு காலை வணக்கம் கூறினார். குழந்தைகள் பதிலுக்குத் திரும்ப சொல்லவில்லை. குழந்தைகள் இன்னும் அதிக சத்தமாகச் சொல்ல வேண்டும். ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளிடம் காலை வணக்கம் சொல்கின்றார். நாம் இந்த சரீரத்தின் மூலம் ஆன்மிகத் தந்தைக்கு காலை வணக்கம் செய்கிறோம் என்று குழந்தைகளும் அறிந்திருக்கிறீர்கள். எனவே குழந்தைகள், ஆஹா பாபா! கடைசியில் அந்த நாளும் இன்று வந்தது, யாரை முழு உலகம் அழைத்துக் கொண்டிருக்கிறதோ, அந்தத் தந்தை எதிரில் வந்து நம்மிடம் காலை வணக்கம் செய்து கொண்டிருக்கின்றார், என்று இவ்வளவு உற்சாகமாகச் சொல்ல வேண்டும். பின்னர், எப்பொழுது சதோபிரதானம் ஆகிவிடுவீர்களோ, அப்பொழுது பதீத பாவனரை நினைவு செய்யமாட்டீர்கள். இப்பொழுது தமோபிரதானமாக இருக்கிறார்கள். ஆகையால், ஹே! பதீத பாவனரே வாருங்கள், வந்து எங்களை தூய்மை ஆக்குங்கள் என்று நினைவு செய்கின்றனர். பதீத பாவனர் பாபா தான் வர வேண்டியதாக உள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவரே பரம தந்தை, இறை தந்தை ஆவார். கிறிஸ்துவை பரமதந்தை என்று கூற மாட்டார்கள். கிறிஸ்துவை கடவுளின் மகன் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அனைவரையும் விட மேலானவர் அவர் ஒருவர் மட்டும் தான் ஆவார். அந்த இறை தந்தை தான் இந்த தூதுவர்களை அனுப்புகின்றார் என்றும் புரிந்திருக்கின்றனர். தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குவதற்காக பரம தந்தை தான் வரவேண்டும் என்பதும் அவசியமானதாகும். இப்பொழுது அவரோ நிராகாரமாக இருக்கின்றார். பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்விக்கின்றார் என்றும் கூறுகின்றார். பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு இடையில் என்ன சம்மந்தம் உள்ளது என்பதும் யாருக்கும் தெரியாது. நிராகாரமானவருக்கு அவசியம் வாய் தேவை. ஆகையால், இவரை பகீரதன் (பாக்கியசாலி) என்று சொல்லப்படுகிறது. வாய் மூலம் தான் புரிய வைப்பார் அல்லவா. மன்மனாபவ என்று வழிகாட்டுகின்றார், என்றால் வாய் மூலமாக சொல்வார் அல்லவா. இதில் தூண்டுதலுக்கான (பிரேரணைக்கான) விஷயம் இருக்க முடியாது. தந்தை பிரம்மா மூலமாக அனைத்து வேதங்கள், சாஸ்திரங்களினுடைய சாரத்தை புரிய வைக்கின்றார். ஒவ்வொரு பொருளிற்கான சாரத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள் அல்லவா! தாய், தந்தை நீரே, நாங்கள் உங்களுடைய குழந்தைகள் என்று பாடுகிறார்கள். அவரே இவருக்குள் பிரவேசித்து உங்களுக்கு ஞானம் அளிக்கின்றார். எவ்வளவு புரிந்து கொள்வதற்கான விஷயங்கள் இவை! பிரஜாபிதா பிரம்மாவையும் கூட தந்தை என்று கூறுகின்றனர், எனில், தாய் எங்கே? இவர் பிரஜாபிதாவாகவும் இருக்கிறார், தாயாகவும் இருக்கிறார் என்று தந்தை புரிய வைக்கின்றார். நானோ அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவேன். என்னைத் தான் இறைதந்தை என்று கூறுகின்றனர். தாய், தந்தை நீரே என்று பாரதவாசிகள் அழைக்கிறார்கள், ஆனால், அதன் அர்த்தம் எதையும் அறியவில்லை. நிராகாரமானவரை தாய் என்று எவ்வாறு சொல்ல முடியும்? அவர் இவருக்குள் பிரவேசம் செய்து தத்தெடுக்கின்றார். எனவே, இந்த பிரம்மா தாய் ஆகிவிடுகிறார். இவர் மூலமாகத் தான் தெய்வீகப் படைப்பை படைக்கின்றார். இவரும் கூட தத்தெடுக்கப்பட்ட தாய் ஆவார். அவர் தந்தை ஆவார். பின்னர், இவரை (பிரம்மாவை) நந்தியாகவும், காளையாகவும் காண்பிக்கிறார்கள். ஒருபொழுதும் பசுவைக் காண்பிப்பதில்லை. இவை மிகவும் அற்புதமான விஷயங்கள் ஆகும். புதிதாக யாராவது வந்தால், விரிவாகச் சொல்ல வேண்டியதாக உள்ளது. இல்லையென்றால், இந்த விஷயங்களை அவர்கள் புரிந்து கொள்ள இயலாது. நுட்பமான புத்தி உள்ளவர்கள் உடனடியாக புரிந்து கொள்கிறார்கள். 30 வருடங்களாக இருப்பவர்களை விட ஒரு மாதமாக வருபவர்கள் வேகமாகச் சென்றுவிடுகின்றனர். ஆகையால், நாம் மிகவும் தாமதமாக வந்திருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். குழந்தைகளே, முயற்சி செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். கல்லூரிக்கு வருபவர்கள் படித்துக் கிரஹித்துக் கொள்கிறார்கள். இங்கேயும் அவ்வாறே உள்ளது. படிப்பு மற்றும் நினைவே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது. மூலவதனத்தில் ஆத்மாக்கள் சதோபிரதானமாக இருக்கின்றன என்று குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். தமோபிரதானமான ஆத்மாக்கள் அங்கே செல்ல இயலாது. பின்னர், நடிகர்கள் அனைவரும் அவரவர் பாகத்தின் அனுசாரமாக மேடைக்கு வருகிறார்கள். நாடகமே அவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. எல்லைக்குட்பட்ட நாடகத்தில் 50, 60 நடிகர்கள் இருப்பார்கள். இங்கேயோ எவ்வளவு பெரிய எல்லையற்ற நாடகம் இது! பாபா, நமது புத்தியின் பூட்டை திறந்துவிட்டார். எனவே இப்பொழுது, இந்த இலட்சுமி, நாராயணர் விஷ்வத்தின் எஜமானர்களாக இருந்தார்கள், எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தார்கள்! அரைகல்பமாக விஷ்வத்தின் எஜமானர்களாக இருந்தார்கள், என்று புரிந்திருக்கிறீர்கள். அதை அத்வைத (பிரிவினை இல்லாத) இராஜ்யம் என்று கூறப்படுகிறது. அங்கே ஒரு தர்மம் தான் இருக்கும். அது இராம இராஜ்யம் ஆகும், இது இராவண இராஜ்யம் ஆகும். இராம இராஜ்யத்தில் விகாரம் இருக்காது. உண்மையில், அதை ஈஸ்வரிய இராஜ்யம் என்று சொல்ல வேண்டும். ஈஸ்வரனை இராமர் என்று சொல்லப்படுவதில்லை. அனேக மக்கள் இராம், இராம் என்று மாலை உருட்டி ஜெபிக்கிறார்கள், ஆனால், பகவானைத் தான் நினைக்கிறார்கள். இராம் என்ற நாமம் சரியானது தான், ஏனென்றால், ஈஸ்வரனுடைய பெயர், ரூபம் என்ன என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. மனிதர்கள் அதிகமாகக் குழம்பி இருக்கின்றனர். இராவணன் யார் என்பதும் தெரியாது. இராவணனை எரிப்பதற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள். முற்காலத்தில் தசராவைக் பார்ப்பதற்காக வெளி நாட்டில் உள்ளவர்களையும் அழைத்தார்கள்.அறிவியல் முன்னேற்றத்தைப் பாருங்கள், இப்பொழுது எவ்வளவு வலிமையானதாக உள்ளது. இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் சுகத்திற்காகவும் உள்ளது மற்றும் துக்கத்திற்காகவும் உள்ளது. இதன் மூலம் அல்பகாலத்திற்கான சுகமே கிடைக்கிறது. இதன் மூலம் தான் இந்த உலகத்தினுடைய அழிவும் ஏற்படும். இது துக்கமானது அல்லவா. உங்களுடையது அமைதி சக்தி ஆகும். அவர்களுடையது அறிவியல் சக்தி ஆகும். நீங்கள் அமைதியாக தன்னுடைய சுயதர்மத்தில் இருக்கிறீர்கள் என்றால் தூய்மை ஆகிவிடுவீர்கள். நினைவின் மூலம் விகர்மங்கள் வினாசம் ஆகின்றன. நீங்கள் யோக சக்தி மூலம் இராஜ்யத்தை அடைகிறீர்கள். இதில் யுத்தம் போன்ற விஷயம் கிடையாது. நீங்கள் பாபாவிடமிருந்து இராஜ்யத்தின் ஆஸ்தியை அடைகிறீர்கள். உடல் வலிமையினுடைய விஷயம் தனிப்பட்டது ஆகும். கல்ப கல்பமாக குழந்தைகளாகிய நீங்கள் தான் தூய்மையற்ற நிலையிருந்து தூய்மை ஆகிறீர்கள். பிறகு, தூய்மையான நிலையில் இருந்து தூய்மையற்றவர்களாவீர்கள். இது வெற்றி, தோல்விக்கான நாடகம் ஆகும். ஆனால், இந்த விஷயங்கள் அனைவருடைய புத்தியிலும் தங்காது. அனைவரும் சத்யுகத்திற்கு வரமாட்டார்கள். எல்லையற்ற தந்தை தனது குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கின்றார். பிற தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வருவதே பின்னால் தான். இது பழைய உலகம் ஆகும். தெய்வீக தர்மத்தின் அஸ்திவாரமே இற்றுப் போய்விட்டது. அஸ்திவாரமே இல்லை என்று சொல்ல முடியாது. இருந்தது, ஆனால் இப்பொழுது இல்லை. மறைந்து விட்டது. இப்பொழுது அனேக தர்மங்கள் உள்ளன. இதை இராவண இராஜ்யம் என்று கூறுகிறார்கள். விஷ்ணுவினுடைய நாபியில் இருந்து பிரம்மா தோன்றினார் என்று கூறுகிறார்கள். யாரிடம் வேண்டுமானாலும், இந்தச் சித்திரத்திற்கான அர்த்தம் என்ன என்று சொல்லுங்கள் என்று கேட்டால் அவர்களால் சொல்ல இயலாது. ஆத்மா ஒன்று தான். அவரை விஷ்ணு என்று சொல்வார்கள். விஷ்ணுபுரி என்று கூட காண்பிக்கிறார்கள். இது சங்கமயுகம், பிரம்மாபுரி ஆகும். பிரஜாபிதா பிரம்மா அவசியம் தேவை. பிராமணர்கள் உச்சியில் இருப்பவர்கள் ஆவார்கள். இந்த விராட ரூப சித்திரம் கூட குறிப்பாக பாரதவாசிகளுக்கானதே ஆகும். மற்றும், பாரதத்தில் அனேக தர்மத்தினர் இருக்கின்றனர். ஆகையினால், இதை பலவகைப்பட்ட தர்மங்களின் மரம் என்றும் கூறப்படுகிறது. இது மனித சிருஷ்டி மரம் ஆகும். ஆனால், இதில் பல்வேறு தர்மங்கள் உள்ளன. முதலில் தேவதா தர்மம், பின்னர் இஸ்லாமிய தர்மம், இது பிராமண தர்மம் ஆகும். சங்கமயுகத்தின் இந்த தர்மத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. இது புருஷோத்தம சங்கமயுகம் ஆகும். புருஷோத்தம பிராமண தர்மம் ஆகும். இப்பொழுதே சமூக சேவை செய்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களை ஆன்மிக சமூக சேவகர்கள் என்று சொல்லப்படுகிறது. பாரதத்தில் சமூக சேவகர்கள் அனேகர் இருக்கின்றனர். அவர்களுக்கும் கூட, பணிவோடு சேவை செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். யார் காங்கிரஸில் உறுதியானவர்களாக இருந்தார்களோ, அவர்கள் கூட்டிப் பெருக்கவும் செய்தார்கள். தோட்டி செய்யும் வேலையைச் செய்தார்கள். முற்காலத்தில் யார் உறுதியானவர்களாக இருந்தார்களோ, அவர்கள் சீனப் பாத்திரத்தில் உணவு உண்ணமாட்டார்கள். எது நடந்து முடிந்ததோ, அது நாடகம் ஆகும். அதுவே திரும்பவும் நடைபெறும். இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் குழம்பிவிடுகிறார்கள். ஆகவே, நாடகத்தைப் பற்றிய இரகசியத்தை ஆரம்பத்தில் யாருக்கும் புரிய வைக்கக் கூடாது. ஒருவேளை நாடகத்தில் பதிவாகி இருந்ததென்றால், எங்களுக்கு தானாகவே இராஜ்யம் கிடைக்கும் மற்றும் முயற்சியும் தானாகவே செய்வோம் என்று கூறிவிடுவார்கள். அத்தகைய பைத்தியம் பிடித்தவர் போன்றவர்களும் இருக்கிறார்கள். ஞானத்தின் இரகசியங்களை முழுமையாகப் புரிந்திருக்கவே இல்லை. முயற்சி இல்லாமல் தண்ணீர் கூட கிடைக்காது. தானாகவே தண்ணீர் வந்து வாயில் விழாது.தந்தை வருவதே தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குவதற்காகத் தான். அவர் வந்து, ஆத்மாவை தூய்மை ஆக்குவதற்காக என்னை நினைவு செய்யுங்கள், விகர்மங்கள் (பாவ கர்மங்கள்) வினாசம் (அழிவு) ஆகிவிடும் என்று எளிதான வழியைச் சொல்கின்றார். தந்தை தான் தூய்மை ஆக்குவதற்காக, என்னை நினைவு செய்யுங்கள் என்ற ஸ்ரீமத் கொடுக்கின்றார். ஆனால், அவர் நிராகாரமாக இருக்கின்றார். எனவே, அவசியம் சாகாரத்தில் வந்து ஸ்ரீமத் கொடுப்பார். இந்த என்னுடைய சரீரம் கூட நிச்சயிக்கப்பட்டது ஆகும். இது மாற முடியாது. இதுவும் பதிவாகி உள்ளது. பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலம் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்விக்கின்றார் என்று பாடப்பட்டுள்ளது. இது பகவானின் மகாவாக்கியம் அல்லவா. எனவே, பேசுவதற்கு வாய் தேவை. தூண்டுதல் மூலம் கல்வி கற்பிக்கப்படுவதில்லை. தந்தை வந்து இவர் மூலம் டைரக்ஷன் (வழிகாட்டுதல்) கொடுக்கின்றார். இந்த சித்திரங்கள் முதலியவற்றை இந்த பிரம்மா உருவாக்கவில்லை. இவரும் கூட முயற்சியாளர் அல்லவா. இவர் (பிரம்மா) ஒன்றும் ஞானம் நிறைந்தவர் அல்ல. இவர் பக்தி மார்க்கத்தில் இருந்தார். பக்தர்களை பகவான் தான் விடுவித்து காப்பாற்ற வேண்டும். பக்தியின் பலனை வந்து கொடுக்கின்றார். குழந்தைகளாகிய உங்களை மனிதரிலிருந்து தேவதை ஆக்குகின்றார். தந்தை இவருக்குள் பிரவேசம் செய்து இராஜயோகம் கற்பிக்கின்றார். இவரது பெயர் சிவபாபா ஆகும். அவர், எனது இந்தப் பிறப்பானது தெய்வீகமானது, அலௌகீகமானது ஆகும். சங்கமயுகத்தில் ஒரே ஒரு முறை நான் வருவதற்கான பாகம் உள்ளது. ஆத்மாக்களாகிய உங்களுடைய அழைப்பிற்கு இணங்கி வருகின்றேன் என்பதல்ல. எப்பொழுது நான் வருவதற்கான சமயம் வருகிறதோ, அப்பொழுது ஒரு விநாடி கூட முன் பின் ஆகாது. துல்லியமான நேரத்தில் வருகின்றேன். உங்களுடைய அழைப்பைக் கேட்பதற்கு எனக்கு உறுப்புகள் எங்கே இருக்கின்றன? இது உருவான உருவாக்கப்பட்ட நாடகம் ஆகும். எப்பொழுது சமயம் வருகிறதோ அப்பொழுது வந்து தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குகின்றேன், என்று கூறுகின்றார். நம்முடைய கூச்சலை பகவான் கேட்கின்றார் என்பது கிடையாது. அனேகக் குழந்தைகள் பாபாவிடம், பாபா, தாங்கள் எல்லாம் அறிந்தவர், நாங்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவோமா? இந்தக் காரியம் நடக்குமா? சொல்லுங்கள், என்று கேட்கிறார்கள். நான் தூய்மையில்லாதவர்களை தூய்மைப்படுத்துவதற்கான வழியைச் சொல்லவே வருகின்றேன். என்னுடைய நடிப்பு என்ன இருக்குமோ, அதையே நடிப்பேன். எதைச் சொல்ல வேண்டியது இல்லையோ, அதைச் சொல்லமாட்டேன். இந்த விஷயங்களைச் சொல்வதற்காக நான் வரவில்லை. நான் கூட நாடகத்தின் பந்தனத்தில் (கட்டுபாட்டில்) கட்டுண்டிருக்கின்றேன். ஒவ்வொருவருடைய பாகமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது, என்று பாபா கூறுகின்றார். யார் நிச்சய புத்தி இல்லாதவர்களோ, அவர்கள் சொர்க்கம் செல்லத் தகுதியற்றவர்கள் ஆவார்கள். மேலும், அவர்கள் பேச்சும் கூட அதற்கேற்றார் போல் தான் இருக்கும். மற்றபடி யார் சூரியவம்சம் மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த ஆத்மாக்களோ, அவர்கள் அவசியம் பாபாவிடம் வந்து (ஞானம்) கேட்டாக வேண்டும் மற்றும் ஆஸ்தியைப் பெற வேண்டும். யார் அதிக முயற்சி செய்வதில்லையோ, அவர்களும் கூட சொர்க்கத்திற்கு அவசியம் வருவார்கள். ஆனால், தண்டனை அடைந்து ஏதாவதொரு பதவியை அடைவார்கள். பாபா நாங்கள் சூரிய வம்சத்தினர் ஆவோம், நாராயணர் ஆவோம் என்று அனேகர் சொல்கின்றார்கள். ஆனால், குழந்தைகள் அந்தளவு முயற்சியும் செய்ய வேண்டும். பாபாவைப் பின்பற்றுவதற்கும் கூட சக்தி வேண்டும். தந்தையைப் பின்பற்றுங்கள் என்று கூறுகின்றார் என்றால் இவரைப் (பிரம்மாவை) பாருங்கள், இவர் எப்படி சமர்ப்பணம் ஆகியிருக்கிறார்? அனைத்தையும் ஈஸ்வரனுக்காக அர்ப்பணம் செய்துவிட்டார். ஈஸ்வரனுக்காக அனைத்தையும் கொடுத்துவிட்டு தன்னுடைய பற்றை நீக்கிவிட வேண்டும். முன்னர் பட்டியிலிருந்து அதிகமானோர் உருவானார்கள். இப்பொழுது அவ்வாறு பட்டி நடத்த முடியாது. இந்தக் காரியத்தில் தாய்மார்கள், கன்னிகைகள் முன்னேறிச் செல்கிறார்கள். இதில் கூட கன்னிகைகள் தீவிரமாகச் செல்கிறார்கள். தேகம் மற்றும் தேகத்தின் சம்மந்தங்களை மறந்து விடவேண்டும். ஏனென்றால் இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்பொழுது தந்தை என்னை நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். இப்பொழுது நாடகம் முடிவடையப் போகிறது, மீதம் கொஞ்ச காலமே உள்ளது. எவ்வாறு நாயகன், நாயகி இருக்கிறார்கள், இந்த பாபா நாயகனாக இருக்கின்றார், நாயகி அல்ல. நீங்கள் தூய்மையை இழந்துள்ளீர்கள், . எனவே, நினைவு கூட நீங்கள் தான் செய்ய வேண்டும். உங்களை நினைவு செய்வதற்கு, நான் ஒன்றும் தூய்மையை இழக்கவில்லை. நான் யுக்தியைச் (வழியை) சொல்கின்றேன், அதன்படி நடங்கள். இந்த உலகிலிருந்து பற்றை நீக்கிக் கொண்டே செல்லுங்கள், என்று தந்தை கூறுகின்றார். புத்தியில் இந்த ஞானம் உள்ளது. இந்த சரீரம் கூட பழையது ஆகும். சத்யுகத்தில் நோயற்ற சரீரம் கிடைக்கும். பின்னர், நாம் வெண்மையாக (தூய்மையாக) ஆகிவிடுவோம். கருமை நிறத்திலிருந்து வெண்மையாக எவ்வாறு ஆகிறீர்கள் என்பதையும் கூட நீங்கள் தான் அறிந்திருக்கிறீர்கள். இராமரையும் கூட கருப்பாக உருவாக்கிவிட்டார்கள். சிவனுடைய லிங்கமும் கூட கருப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அவரோ ஒருபொழுதும் கருப்பாக ஆகுவதே இல்லை. அவர் எப்பொழுதும் தூய்மையாக இருக்கின்றார், அவரை வெண்ணிறத்தில் உருவாக்க வேண்டும்.பார்த்த உடனேயே கவர்ச்சிக்கும்படியான சித்திரத்தை உருவாக்குங்கள் என்று பாபா கூறுகின்றார். செய்தித் தாள்களில் எத்தனை சித்திரங்கள் வருகின்றன. உங்களுடையது வருவதில்லை. பாபா குழந்தைகளாகிய உங்களை புத்தியற்ற நிலையிலிருந்து புத்திசாலி ஆக்குகின்றார். இந்த இலட்சுமி, நாராயணரை புத்திவான்களாக ஆக்கியது யார்? தந்தை, யோகத்தின் மூலம் அவ்வாறு உருவாக்கினார். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கிறது, இதைப் பரப்ப வேண்டும். சிந்தனைக் கடலைக் கடைய (விசார் சாகர் மந்தன்) வேண்டும். அரசாங்கம் பொது ஜனங்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறது? இங்கேயோ, குழந்தைகளாகிய உங்களுடையது எதுவோ அது தந்தையினுடையது மற்றும் தந்தையினுடையது எதுவோ அது குழந்தைகளாகிய உங்களுடையது ஆகும். நான் சுயநலமற்ற சேவகனாக இருக்கின்றேன். நான் வள்ளலாக உள்ளேன் என்று தந்தை கூறுகின்றார். நாம் சிவபாபாவிற்குக் கொடுக்கின்றோம் என்று எண்ணக்கூடாது. சிவபாபா 21 பிறவிகளுக்கு விஷ்வத்தின் எஜமானர் ஆக்குகின்றார். இந்தத் தந்தை பெறுவதில்லை, கொடுக்கின்றார். பாபாவோ வள்ளல் ஆவார். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கியமான சாரம்:-

1. எவ்வாறு தந்தை பிரம்மா சமர்ப்பணம்ஆனாரோ, அவ்வாறு தந்தையைப் பின்பற்ற வேண்டும். தன்னுடைய அனைத்தையும் ஈஸ்வரனிடம் அர்ப்பணம் செய்து பொறுப்பாளர் (டிரஸ்டி)ஆகி பற்றை அழித்துவிட வேண்டும்.2. கடைசியில் வந்தாலும் கூட விரைந்து செல்வதற்காக நினைவு மற்றும் படிப்பின் மீது முழுமையிலும் முழுமையான கவனம் கொடுக்க வேண்டும்.வரதானம்:

மாஸ்டர் திரிகாலதரிசி (மூன்று காலமும் உணர்ந்தவர்) ஆகி ஒவ்வொரு கர்மத்தையும் யுக்தியுக்தாக (ஞானம் நிறைந்த நிலை) செய்யக்கூடிய கர்மபந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆகுக.எந்தவொரு எண்ணம், வார்த்தை மற்றும் செயல் எதுவானாலும், மாஸ்டர் திரிகாலதரிசி ஆகி செய்யுங்கள். அப்பொழுது எந்தவொரு செயலும் வீணாக அல்லது அர்த்தமற்றதாக ஆக இயலாது. திரிகாலதரிசி என்றால் சாட்சி மனோநிலையில் நிலைத்திருந்து, கர்மங்களின் ஆழமான நிலையை (கதியை) அறிந்து இந்த கர்ம இந்திரியங்கள் மூலம் கர்மம் செய்வியுங்கள். அப்பொழுது ஒருபொழுதும் கர்மத்தின் கட்டுப்பாட்டில் (பந்தனத்தில்) பிணைக்கப்படமாட்டீர்கள். ஒவ்வொரு கர்மம் செய்தாலும் கர்மபந்தனத்திலிருந்து விடுபட்டநிலை, கர்மாதீத நிலையின் அனுபவத்தைச் செய்து கொண்டே இருங்கள்.சுலோகன்:

யாரிடம் எல்லைக்கு உட்பட்ட ஆசைகளைப் பற்றிய அறியமை உள்ளதோ, அவர்களே மகான் செல்வந்தர்கள்ஆவார்கள்.***OM SHANTI***