BK Murli 6 December 2016 Tamil

BK Murli 6 December 2016 Tamil

06.12.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! சங்கமயுகம் புருஷோத்தம யுகமாகும். இங்கு படிக்கும் இந்த படிப்பின் மூலமாக 21 பிறவிகளுக்கு நீங்கள் உத்தமத்திலும் உத்தமமான புருஷராக ஆக முடியும்.கேள்வி:

உள்ளூர குஷியில் இருக்க வேண்டுமென்றால், எந்த ஒரு நிச்சயம் பக்குவமாக இருக்க வேண்டும்?பதில்:

நாம் உலகத்தின் அதிபதியாக இருந்தோம் மற்றும் மிகவும் செல்வந்தராக இருந்தோம் என்ற முதன் முதல் நிச்சயம் வேண்டும். நாம் தான் முழுமையாக 84 பிறவிகள் எடுத்துள்ளோம். இப்பொழுது பாபா நமக்கு மீண்டும் உலக அரசாட்சியை அளிக்க வந்துள்ளார். இப்பொழுது நாம் திரிகாலதரிசியாகி உள்ளோம். படைப்பவரான தந்தை மூலமாக படைப்பின் முதல் இடை கடை பற்றி நாம் அறிந்துள்ளோம். அப்பேர்ப்பட்ட நிச்சயம் இருந்தது என்றால் உள்ளூர குஷி இருக்கும்.பாடல்:

கண்ணில்லாதவருக்கு வழி காண்பியுங்கள் பிரபுவே.. .. ..ஓம் சாந்தி.

குழந்தைகள் பாடலின் வரி கேட்டீர்களா? இப்பொழுது பாபா வந்து புருஷோத்தமர் ஆவதற்கான எவ்வளவு நல்ல வழி கூறுகிறார். உலகத்தில் கூட அநேகவிதமான கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் உள்ளன. எல்லா இடங்களிலும் கூட பதவிக்காக படிக்கிறார்கள். பிறகு ஒருவர் எழுத்தர் மற்றொருவர் மேஜிஸ்டிரேட். ஒருவர் தலைமை நீதிபதி ஆகிறார். புருஷர்கள் உத்தம பதவியை அடைகிறார்கள். ஆனால் அவை எல்லாமே கலியுகத்தினுடைய உத்தம பதவிகள். தந்தை வந்து சத்யுகத்திற்கான உத்தம பதவியை பிராப்தி செய்விக்கிறார். இது சங்கமயுகம் ஆகும். இதில் உத்தமத்திலும் உத்தமமானவர் ஆக வேண்டும். மனிதர்கள் என்னவெல்லாம் ஞானம் படிக்கிறார்களோ அவை உத்தமராக ஆவதற்கு ஆகும். இப்பொழுது இந்த ஆன்மீக ஞானம் வருங்காலத்திற்காக உள்ளது. இந்த சங்கமயுகம் புருஷோத்தம யுகம் ஆகும். படங்களில் எங்கெல்லாம் சங்கமயுகம் இருக்கிறதோ அங்கு புருஷோத்தம என்று அவசியம் எழுத வேண்டும். ஒவ்வொரு பொருளும் உத்தமமானதாக அமைக்கப்படுகிறது. இந்த இலட்சுமி நாராயணர் எவ்வளவு புருஷோத்தமமானவர்கள் ஆவார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்களுடைய நகைகள் ஆடைகள் ஆகியவை எவ்வளவு அழகாக இருக்கும். எனவே அப்பேர்ப்பட்ட படங்களை அமைக்க வேண்டும். பாபா (டைரக்ஷன்) உத்தரவு தான் கொடுப்பார். குழந்தைகள் நகரங்களில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் எப்படி எப்படி அழகான கவரக் கூடிய நல்ல ஆடம்பரமான படங்களை அமைக்கலாம் என்பது கவனத்தில் வர வேண்டும். நாம் உத்தமத்திலும் உத்தமமான புருஷராக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பது புத்தியில் நாள் முழுவதும் நினைவிலிருக்க வேண்டும். யார் அது போல ஆக்குகிறார்? எல்லோரையும் விட உத்தமமானவர் தந்தை. எனவே உயர்ந்ததிலும் உயர்ந்த ஸ்ரீமத் ஒரு தந்தையினுடையது ஆகும். அதை தந்தை தான் கூறுகிறார். ஸ்ரீ என்பதன் பொருள் சிரேஷ்டமானது என்பதாகும். ஸ்ரீ என்ற பட்டம் தேவதைகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அவர்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே தூய்மையானதாகும். அவர்களுடைய ஜென்மம் கூட தூய்மையினால் தான் ஆகிறது. இங்கு எவரது பிறவியும் தூய்மையினால் ஆவதில்லை. சீக்கியர்கள் அழுக்கு துணிகளை.. .. .. என்று பாடுகிறார்கள். பாபா அந்த அழுக்கான துணிகளைத் துவைக்கிறார். மேலும் அவர்களை மனிதரிலிருந்து தேவதையாக ஆக்குகிறார். தேவதைகள் விகாரத்தின் மூலமாகப் பிறப்பதில்லை. ஆனால் விகாரமின்றி உலகம் எப்படி நடக்கும் என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். சொர்க்கத்தில் விகாரத்தின் பிறப்பு இருக்காது என்று தந்தை புரிய வைக்கிறார். நாம் நரனிலிருந்து நாராயணர் ஆவதற்காக வந்திருக்கிறோம் என்பதை இப்பொழுது மாணவர்களாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த இராஜயோகத்தின் மூலமாக நாம் இராஜ்யத்தை அடைந்திடுவோம். யாராவது தோல்வி அடைந்து விட்டார்கள் என்றால் சந்திரவம்சத்தில் சென்று விடுகிறார்கள். உங்களுடையது இராவணனுடன் யுத்தம் ஆகும். ஆனால் இராவணன் நம்முடைய பழைய எதிரி ஆவான் என்பது உலகத்தில் யாருக்குமே தெரியாது. இராவணன் என்பதன் பொருள் என்ன? பத்து தலைகள் யாவை? விகாரங்கள் பிரவேசம் ஆகும் பொழுது தான் இழிந்தவர்களாக ஆகிவிடுவோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் எல்லோருமே சிறந்தவர்களாக இருப்பார்கள். இச்சமயம் எல்லோருமே தமோபிரதான புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள், முற்றிலுமே இருளில் இருக்கிறார்கள் என்று தந்தை கூறுகிறார். கும்பகர்ணனின் உறக்கத்தில் தூங்கி இருக்கிறார்கள் என்பதும் பாடப்பட்டுள்ளது. நெருப்பு பிடிக்கும் பொழுது தான் விழிப்பார்கள். பாருங்கள் நீங்கள் இவ்வளவு எழுப்புகிறீர்கள். பிறகு உறங்கி விடுகிறார்கள். மேளாவில் நீங்கள் எவ்வளவு உழைக்கிகிறீர்கள். எவ்வளவு பேர் வெளிப்படுகிறார்கள்? கோடியில் ஒருவர். இனி மேல் போகப் போக நிறைய விருத்தியாகும். அப்பொழுது மனிதர்களின் புத்தி திறக்கும். மற்றவர்களுடைய தர்மங்களோ வெகுகாலமாக பழையதாக ஆகி விட்டுள்ளது. எனவே அவர்களுடையது விருத்தி ஆகிறது. உங்களுடையது இது சிறிய பழைய செடியாகும். அவர்கள் மாமிசம் மது எல்லாமே உட் கொள்கிறார்கள். விகாரங்களிலும் செல்கிறார்கள். நல்ல சகவாசம் உயர்த்தும், தீய சகவாசம் வீழ்த்தும் என்று கூறப்படுகிறது. சத்தியத்தின் தொடர்பு ஒரு தந்தையினுடையது மட்டுமே ஆகும். எந்த ஒரு சகவாசம் உயர்த்தும் என்பதை அறியாமல் உள்ளார்கள். படகோட்டியே ! எனது படகை கரையேற்று என்று பாடுகிறார்கள். ஹே ! தோட்டக்காரரே! முட்களை மலராக ஆக்குங்கள். இந்த முட்களின் காட்டிலிருந்து அப்பால் அழைத்து செல்லுங்கள். இப்பொழுது மலராக இங்கேயே ஆக வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். புருஷோத்தமராக ஆக வேண்டும். உணவு பழக்கங்கள் கூட தூய்மையானதாக இருக்க வேண்டும். எந்த பொருட்கள் தேவதைகளுக்கு படைக்கப்படுவதில்லையோ, தமோகுணமானதாக இருக்கிறதோ அவற்றை உட்கொள்ளக் கூடாது. காய்கறிகளில் கூட சதோ ரஜோ தமோ என்று உள்ளது. தற்காலத்தில் மனிதர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள் அல்லவா? ஞானம் கூட ஏழைகள் தான் எடுப்பார்கள். பணக்காரர்கள் நிறைய பணம் செலவழிக்கிறார்கள்.திரைப்படங்களைப் பார்ப்பது மிகவும் மோசமானது. திரைப்படங்கள் பார்க்க போவது என்றால், நரகத்திற்குச் செல்வது போல என்று பத்திரிக்கைகளிலும் வந்திருந்தது. எந்த அளவிற்கு பெரிய மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அதிகமாகவே அசுத்தம் செய்கிறார்கள். இச்சமயத்தில் முழுமையாக வைசியாலயமாக உள்ளது. தந்தை வந்து சிவாலயமாக ஆக்குகிறார். எல்லாமே தூய்மையைப் பொருத்துள்ளது. தூய்மை இருக்கிறது என்றால் அமைதியும் சுகமும் கூட இருக்கிறது. இராவண இராஜ்யத்தில் யாருமே தூய்மையாக இருக்க முடியாது. இங்கு தான் யுத்தத்தின் விஷயம் ஆகும். யோக பலத்தினால் தான் நீங்கள் இராவணன் மீது வெற்றி அடைகிறீர்கள். இங்கு எவ்வளவு ஏராளமான கோயில்கள் உள்ளன. ஆனால் அங்குள்ள தேவதைகளின் வாழ்க்கை சரித்திரம் பற்றி அறியாமல் உள்ளார்கள். சிவனுடைய கோயிலுக்குச் சென்று சிவனுடைய வாழ்க்கைச் சரித்திரத்தை கூறுங்கள் என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் கூற முடியாமல் இருப்பார்கள். உங்களிலும் கூட வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப ஞானத்தை அறிந்துள்ளீர்கள். உத்தமமானவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என்று இருப்பார்கள். எனவே குழந்தைகள் படிப்பின் மீது மிகுந்த கவனம் வைக்க வேண்டும். யோக அக்னியினால் உங்களுடைய பாவங்கள் சாம்பலாகிவிடும் மற்றும் சதோபிரதானமானவர்களாக ஆகி விடுவீர்கள் என்று சிவபகவான் கூறுகிறார். எனவே குழந்தைகளே, நினைவு யாத்திரையை மறக்காதீர்கள். நான் கண்காட்சியில் ஞானத்தை மிகவும் நன்றாகப் புரிய வைக்கிறேன். ஆனால் நினைவு யாத்திரையில் இருக்கிறேனா என்று உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள். நினைவில் ஃபெயிலாக இருக்கிறார்கள். எனவே அந்த நிலை அந்த குஷி நிலையாக இருப்பதில்லை. இந்த பாடத்தில் குழந்தைகள் அப்பியாசத்தை அதிகரிக்க வேண்டும். படங்கள் கூட யாராவது வந்து படித்த உடனேயே ஞானத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் அவ்வளவு அழகாக இருக்க வேண்டும். நல்ல பொருளாக இருந்தது என்றால், பார்ப்பதற்கு நிறைய பேர் வருவார்கள். இந்த படங்களைத் தயாரிப்பவர்களுக்கு எவ்வளவு பரிசு கிடைக்கிறது. தேவதைகளின் சித்திரங்களை பழையதாக ஆக்கி விற்கிறார்கள். பின்னர் அதை மனிதர்கள் மிகவும் விரும்புகிறார்கள். நிறைய பணம் கொடுத்துக் கூட விலைக்கு வாங்குகிறார்கள். தேவதைகள் சதோபிரதானமாக இருந்தார்கள். எனவே அவர்களுடைய சித்திரங்களுக்குக் கூட எவ்வளவு மரியாதை இருக்கிறது. ஆனால் பாரதம் தான் பழையதிலும் பழையதாகும் என்பதை அறியாமல் உள்ளார்கள். எல்லோரையும் விட பழையதிலும் பழையவர் சிவபாபா ஆவார். முதன் முதலில் சிவன் தான் வருகிறார். மனிதர்கள் குழம்பி இருக்கிறார்கள். முதலில் நாம் தாழ்ந்த புத்தியுடையவராக இருந்தோம் என்பதை இப்பொழுது நீங்கள் கூட புரிந்துள்ளீர்கள். இப்பொழுது எப்படி இருந்த நாம் எப்படி ஆகி விட்டுள்ளோம் ! நாம் உலகிற்கு அதிபதியாக இருந்தோம். மிகவும் செல்வந்தராக இருந்தோம். ஆனால் உங்களிலும் கூட நிச்சயபுத்தி உடையவர்கள் கொஞ்சம் பேர் தான் ஆவார்கள். இல்லையென்றால் குழந்தைகளுக்கு உள்ளூர மகிழ்ச்சி இருக்க வேண்டும். ஆஹா! நாங்கள் முழுமையாக 84 பிறவிகள் எடுத்துள்ளோம். குறைவாகப் படிப்பவர்களுக்கு குறைவாகப் பிறவிகள் கிடைக்கும். யார் சூரியவம்சத்தில் வருவர்களோ அவர்கள் அவசியம் நல்ல முறையில் படித்திருக்கக் கூடும். இந்த படிப்பு எவ்வளவு நன்றாக உள்ளது. படைப்பு கர்த்தா பாபா தான் வந்து படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய ஞானத்தை அளிக்கிறார். நீங்கள் திரிகாலதரிசி ஆகிறீர்கள். யாரிடமாவது நீங்கள் திரிகாலதரிசியா என்று கேளுங்கள். மூன்று காலங்களின் ஞானம் உங்களிடம் இருக்கிறதா? இவை எல்லாம் உங்களுடைய கற்பனை என்று கூறுவார்கள். யாராவது ஒருவர் கூறினார் என்றால் மற்றவர்களும் கூறிக் கொண்டே இருப்பார்கள். இப்பொழுது உங்களது புத்தியில் முழு ஞானம் உள்ளது. மேலும் பரமாத்மா தந்தை ஆவார். இதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். பரமாத்மாவின் ரூபமோ ஆயிரம் சூரியன்களை விட தேஜோமயமானது என்று கீதையில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அப்படி அல்ல. பாபா முற்றிலுமே குளிர்ச்சியாக இருக்கிறார். குழந்தைகளையும் வந்து குளிர்ந்தவர்களாக ஆக்குகிறார். எப்படி பாபா ஜோதி பிந்துவாக இருக்கிறாரோ அதைப் போல ஆத்மா கூட ஜோதி பிந்து ஆகும். எப்படி மின்மினிப் பூச்சி இருக்கிறது. அது கண்களுக்குத் தென்படுகிறது. பாபா திவ்ய திருஷ்டியின்றி புலப்படமாட்டார். பரமாத்மா ஞானக் கடல் ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் கூட மாஸ்டர் ஞானக் கடல் ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். ஆத்மா எவ்வளவு சிறியதாக உள்ளது. அதில் முழு ஞானம் நிரம்பியுள்ளது. ஆத்மா தான் கேட்கிறது. ஆத்மா தான் தாரணை செய்கிறது. ஆத்மா தான் சரீரத்தின் மூலமாகப் புரிய வைக்கிறது. இந்த விஷயங்கள் யாருக்குமே புரிய வைக்க வராது. நீங்கள் கூட தந்தை மூலமாகப் புரிந்து பின்னால் புரிய வைக்கக் கூடியவர்களாக ஆகிறீர்கள். பரமபிதா பரமாத்மா தான் பதீத பாவனர் ஞானக் கடல் ஆவார். கிருஷ்ணரை பதீத பாவனர் அல்லது ஞானக் கடல் என்று கூற முடியாது. ஹே ! பதீத பாவனரே ! வாருங்கள் என்று ஒருவரைத் தான் அழைக்கிறார்கள். கிருஷ்ணரையோ, இராமரையோ கூறுவதில்லை. சீதையின் இராமர் பதீதபாவனராக இருந்தாரா என்ன? நீங்கள் எல்லோரும் பக்தைகள் ஆவீர்கள். பகவான் ஒருவர் ஆவார். நீங்கள் எல்லோரும் மணமகள்கள் ஆவீர்கள். நான் உங்களது மணமகன் ஆவேன். நான் உங்களுக்கு அலங்காரம் செய்ய வருகிறேன். அனைத்து ஆத்மாக்களுக்கும் நான் வந்து பக்தியின் பலனைக் கூட கொடுக்கிறேன். இந்த படிப்பு எவ்வளவு பெரியதாகும். நரனிலிருந்து நாராயணராக ஆக்குகிறது. எவ்வளவு போதை இருக்க வேண்டும். தந்தை வந்திருப்பதே அழியாத ஞான ரத்தினங்களின் தானம் அளிக்க. இது நல்லதிலும் நல்ல தானம் ஆகும். சிவனுக்கு முன்னால் சென்று பையை நிரப்பிக் கொடுங்கள் என்று கூறுகிறார்கள். நாம் தான் இப்பொழுது சங்கமத்தில் இருக்கிறோம் என்று உங்களது புத்தியில் இப்பொழுது முழு ஞானம் உள்ளது. நம்மை சிவபாபா விஷ்ணுபுரிக்கு அதிபதியாக ஆக்குகிறார். இப்பொழுது நாம் பிராமணர்கள் ஆவோம். பிறகு நாம் தேவதை ஆகிடுவோம். பிறகு க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிடுவோம். இது தான் ஹம் சோ சோ ஹம் (நானே அது அதுவே நான்) என்பதன் இரகசியம் ஆகும். மனிதர்கள் ஆத்மாவே பரமாத்மா என்கிறார்கள். நாமே பூஜைக்குரியவராக இருந்து நாமே பூசாரி எப்படி ஆகிறோம் என்பதை தந்தை புரிய வைக்கிறார். சதோபிரதானம், சதோ ரஜோ தமோவில் எப்படி வருகிறோம்? இந்த இரகசியத்தை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். இவை தாரணை செய்ய வேண்டிய விஷயங்கள் ஆகும். இந்த படிப்பினால் எவ்வளவு எல்லையில்லாத இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வருங்கால 21 பிறவிகளுக்காக வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப படித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒருவர் ராஜா மற்றொருவர் ராணி மற்றும் ஒருவர் போய் பிரஜையாக ஆவார்கள். அங்கு அனைவருக்கும் சுகமே சுகம் இருக்கும். இங்கு கர்மங்களுக்கேற்ப துக்கம் கிடைக்கிறது. இது இருப்பதே துக்கதாமமாக. அது சுகதாமம் ஆகும்.குழந்தைகளே ! தண்டனை வாங்கும் வகையில் அப்பேர்ப்பட்ட எந்த ஒரு தீய செயலையும் செய்யாதீர்கள் என்று இப்பொழுது பாபா கூறுகிறார். ஒரு வேளை பிறகும் அப்பேர்ப்பட்ட கர்மம் செய்கிறார்கள் என்றால், பதவியும் அப்படியே கிடைக்கும். ஒரு வேளை நல்ல முறையில் படித்தீர்கள் என்றால் கல்ப கல்பமாக இந்த பிராப்தி கிடைக்கும். இப்பொழுது இந்த ஞானம் உள்ளது. பிறகு மறைந்து போய் விடும். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்யவில்லை என்றால், மிகவுமே பின்னால் பச்சாதாபப்படுவீர்கள். தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். இல்லையென்றால் கர்மம் விகர்மமாக ஆகி விடும் என்று தந்தை கூறுகிறார். இங்கு எல்லா மனிதர்களின் கர்மம், விகர்மம் ஆகி விடுகிறது. இது உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியவே தெரியாது. கீதையின் பகவான் எப்பொழுது வந்தார்? இதை யாரும் கூற முடியாது. துவாபரத்தில் வந்தார் என்று கூறுகிறார்கள். வேத சாஸ்திரங்கள் உருவாகியதே துவாபரத்தில் ஆகும். மேலும் துவாபரத்தில் தான் அசுர சம்பிரதாயத்தினர் ஆகி விட்டார்கள்.பாபா எங்களை இந்த பாவம் நிறைந்த உலகத்திலிருந்து அழைத்துச் செல்லுங்கள் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். அதாவது மரணத்தைக் கேட்கிறீர்கள். எனவே அவருக்கு காலன்களுக்கெல்லாம் காலன் என்று கூறப்படுகிறது. அவர்கள் அகால பீடம் என்று பெயர் மட்டும் வைத்து விட்டுள்ளார்கள். ஆனால் பொருள் எதுவும் தெரியாது. யார் மிகவும் உயர்ந்தவர்களாக ஆகிறார்களோ அவர்களே வந்து கீழேயும் விழுகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இந்த ஞானம் முழுவதும் புரிய வந்துள்ளது. இது மிகவும் அதிசயமான ஞானம் ஆகும். படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய ஞானம் வேறு யாரும் கொடுக்க முடியாது. இல்லையென்றால் அவர் வந்து கொடுக்காதவரை நிராகாரமானவருக்கு ஞானம் நிறைந்தவர் (நாலேஜ்ஃபுல்) என்று கூறுவதால் நன்மை தான் என்ன? அனைத்து ஆத்மாக்களும் நிராகாரி உலகத்திலிருந்து இங்கு வந்து தங்களது பாகத்தை ஏற்று நடிக்கிறார்கள். இப்பொழுது பகவானைக் கூப்பிடுகிறார்கள். அவருக்கு தனக்கென்று உடலோ கிடையாது. மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் அவரவருக்கென்று சரீரம் உள்ளது. எனவே பகவான் ஒரே ஒரு நிராகாரமானவர் ஆகிறார் அல்லவா? எனது பெயர் சிவன் என்பதாகும் என்று தந்தை கூறுகிறார். நான் இவருடைய உடலில் இவரது புருவ மத்தியில் வந்து அமருகிறேன். எப்படி ஆத்மா உறுப்புக்கள் மூலமாக பேசுகிறாரோ அதே போல பாபாவும் இவரது உறுப்புக்கள் மூலம் புரிய வைக்கிறார். புருவ மத்தியில் பிரகாசிக்கும் அதிசயமான நட்சத்திரம் என்றும் பாடப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த ஆழமான இரகசியங்களை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தனது உயர்ந்த பிராப்தியை அமைத்துக் கொள்வதற்காக நல்ல முறையில் கல்வியைக் கற்க வேண்டும். எந்த ஒரு தீய செயலும் செய்யக் கூடாது.2. தங்களது உணவு பழக்கத்தைத் தூயதாக வைத்திருக்க வேண்டும். தேவதைகளுக்கு எந்த பொருட்களை படைக்கிறார்களோ அவற்றையே உட்கொள்ள வேண்டும். புருஷோத்தமர் ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும்.வரதானம்:

பிறருக்கு மதிப்பு (ரிகார்டு) அளிப்பதற்கான பதிவேட்டினை ரெகார்டு சரியாக வைத்து குஷியின் மகாதானம் செய்யக் கூடிய புண்ணிய ஆத்மா ஆகுக !தற்சமயத்தில் நாலா புறங்களிலும் ரிகார்ட் மதிப்பு வைக்கக் கூடிய ரெகார்டு-பதிவேட்டினை சரி செய்வது அவசியமாக உள்ளது. இதே ரிகார்டு - ஒலிப்பதிவு நாலா புறங்களிலும் ஒலிக்கும் மதிப்பு-மரியாதை அளிப்பது மற்றும் மதிப்பு பெறுவது. சிறியவர்களுக்கும் மதிப்பு கொடுங்கள். பெரியவர்களுக்கும் மதிப்பு கொடுங்கள். இந்த ரிகார்டு (மதிப்பின்) ரெகார்டு (பதிவேடு) இப்பொழுது வெளிப்பட வேண்டும். அப்பொழுது குஷியின் தானம் செய்யும் மகாதானி புண்ணிய ஆத்மா ஆவீர்கள். எவரொருவருக்கும் மதிப்பு அளித்து குஷிப் படுத்துவது என்பது பெரியதிலும் பெரிய புண்ணிய காரியமாகும் மற்றும் சேவையாகும்.சுலோகன்:

ஒவ்வொரு கணத்தையும் கடைசி கணம் என்று கருதி நடந்தீர்கள் என்றால், எவர் ரெடியாக இருப்பீர்கள்.


***OM SHANTI***