BK Murli 8 December 2016 Tamil

BK Murli 8 December 2016 Tamil


0.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்இனிமையான குழந்தைகளே! நீங்கள் என்னவெல்லாம், கேட்கின்றீர்களோ, அதைப்பற்றி சிந்தனை செய்தீர்கள்என்றால் முழு நாளும் புத்தியில் இந்த ஞானம் துளித்துளியாக விழுந்து கொண்டே இருக்கும்கேள்வி:-

இங்கே இருக்கும் எந்தவொரு அறிவியலின் திறமை புதிய உலக ஸ்தாபனையின் காரியத்தில் வரும்?பதில்:-

இங்கே இருக்கும் அறிவியலின் திறன் - இந்த அறிவியல் திறனின் மூலம் விமானம், கட்டிடங்கள் போன்றவைகளை உருவாக்குகிறார்கள், இந்த சம்ஸ்காரத்தை அங்கேயும் உடன் எடுத்துச் செல்வார்கள். இங்கே ஞானம் எடுக்காமல் இருக்கலாம். ஆனால் அங்கே இந்த திறமை உடன் செல்லும். நீங்கள் இப்போது சத்யுகத்திலிருந்து கலியுகம் கடைசி வரையிலான வரலாறு புவியியலைத் தெரிந்துள்ளீர்கள். இந்த கண்களின் மூலம் இந்த பழைய உலகத்தின் எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ, அவையனைத்தும் அழியப்போகிறது, என்பது உங்களுக்குத் தெரியும்.பாட்டு:-

நீங்கள் இரவெல்லாம் உறங்கியே கழித்தீர்கள்.................ஓம் சாந்தி.

பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி புரிய வைத்தாரோ சரியாக அப்படியே, பழைய உலகத்தின் வினாசம் மற்றும் புதிய உலகம் சத்யுகத்தின் ஸ்தாபனை எப்படி நடக்கிறது என்பதை மீண்டும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது பழைய உலகம் மற்றும் புதிய உலகத்தின் சங்கமமாகும். புதிய உலகம் சத்யுகத்திலிருந்து இப்போது கலியுகம் கடைசி வரை என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பாபா புரிய வைத்திருக்கிறார். என்னென்ன பொருட்கள் இருக்கின்றன! என்னென்ன பார்க்கின்றீர்கள்! யக்ஞம், தவம், தான-புண்ணியம் போன்ற என்னென்ன செய்கிறார்கள். இங்கு என்னவெல்லாம் தெரிகிறதோ, இவை எதுவும் இருக்கப் போவதில்லை. பழைய பொருட்கள் எதுவும் இருக்கப்போவதில்லை. பழைய கட்டிடத்தை இடிக்கிறார்கள் என்றால் அதில் இருக்கும் மார்பள் கற்கள் போன்ற நல்ல பொருட்கள் இருந்தால் அதை வைத்துக் கொள்கிறார்கள். மற்றவற்றை உடைத்து விடுகிறார்கள். இந்த பழையன அனைத்தும் அழியப்போகிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மற்றபடி இந்த அறிவியல் திறமைகள் மட்டும் இருக்கும். இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சத்யுகத்திலிருந்து கலியுக கடைசி வரை என்னென்ன நடக்கிறது? இந்த அறிவியல் கூட ஒரு கல்வியாகும், அதன்மூலம் விமானம், மின்சாரம் போன்ற அனைத்தும் உருவாகியிருக்கிறது. முதலில் இவை இல்லை, இப்போது உருவாகியிருக்கிறது. உலகம் வேகமாகச் சென்று கொண்டே இருக்கிறது. பாரதம் அழிவற்ற கண்டமாகும், பிரளயமெல்லாம் ஏற்படுவதில்லை. எவ்வளவு சுகம் கிடைக்கிறதோ, அவை இதே அறிவியலின் திறமையினால் அங்கே கிடைக்கிறது. கற்றுக் கொண்ட திறமை அடுத்த பிறவியிலும் காரியத்திற்கு உதவுகிறது. ஏதாவது கொஞ்சம் திறமை இருக்கிறது. இங்கேயும் கூட பூகம்பம் எங்கேயாவது ஏற்படுகிறது என்றால், விரைவாக அனைத்தையும் புதியதாக உருவாக்கி விடுகிறார்கள். அங்கே புதிய உலகத்தில் விமானம் போன்றவற்றை உருவாக்குபவர்களும் இருப்பார்கள். உலகம் சென்று கொண்டே இருக்கிறது. இதை உருவாக்கு பவர்கள் மீண்டும் வருவார்கள். கடைசி நேரத்தில் புத்தியில் என்ன இருக்கிறதோ அப்படியே அதே நிலை உருவாகி விடும். அவர்களிடத்தில் இந்த ஞானம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக வருவார்கள், வந்து புதிய-புதிய பொருட்களை உருவாக்குவார்கள். இந்த சிந்தனை இப்போது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. இவையனைத்தும் அழிந்து விடும், மீதி பாரத கண்டம் மட்டுமே இருக்கும். நீங்கள் படை வீரர்கள். தங்களுக்காக யோகபலத்தின் மூலம் சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றீர்கள். அங்கே அனைத்தும் புதியதாக இருக்கும். தமோபிரதானமாக இருக்கும் தத்துவம் கூட சதோபிரதானமாக ஆகி விடும். நீங்களும் கூட புதிய தூய்மையான உலகத்திற்குச் செல்வதற்காக தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நாம் இதைக் (ஞானத்தை) கற்றுக் கொண்டு மிகவும் புத்திசாலிகளாக ஆகி விடுவோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மிகவும் இனிமையான மலர்களாக ஆகி விடுவீர்கள். நீங்கள் யாருக்காவது இந்த விஷயங்களைச் சொல்கிறீர்கள் என்றால், அவர் மிகவும் குஷி அடைகிறார். யார் எந்தளவு நல்ல விதத்தில் புரிய வைக்கிறாரோ அவர் மீது மிகுந்த குஷி அடைகிறார்கள். இவர்கள் நன்றாகப் புரிய வைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் கருத்தை எழுதிக் கேட்கும்போது யோசிப்போம் என்று சொல்கிறார்கள். இதற்குள் எப்படி எழுதுவது. ஒருமுறை கேட்பதின் மூலம் பாபாவிடம் எப்படி யோகம் வைப்பது, இதைக் கற்றுக் கொள்ள முடியாது. நன்றாக இருக்கிறது. இப்போது பழைய உலகம் அழிய வேண்டும், என்பதைக் கண்டிப்பாகப் புரிய வைத்திருப்பீர்கள். பாவங்களின் சுமை தலையில் அதிகம் உள்ளது. இது தூய்மையற்ற உலகமாகும், நிறைய பாவம் செய்திருக்கிறார்கள். இராவண இராஜ்யத்தில் அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள், ஆகையினால் தான் பதீத-பாவனர் பாபாவை அழைக்கிறார்கள். இந்த ஞானம் இப்போது உங்களுக்கு இருக்கிறது. சத்யுகத்தில் இதற்குப் பிறகு திரேதாயுகம் வரும் என்பதை யாரும் தெரிந்திருக்க மாட்டார்கள். அங்கே பலனை அனுபவிக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு புத்திவான்களாக ஆகின்றீர்கள், நமக்கு ஆன்மீகத் தந்தை கற்பிக்கின்றார் என்பதைத் தெரிந்துள்ளீர்கள். பாபா சர்வ சக்திவான் அதிகாரமுடையவராக இருக்கின்றார், அவர்கள் சாஸ்திரங்களின் அதிகாரமுடையவர்களாக இருக்கின்றனர். அந்த சாஸ்திரம் படிக்கக் கூடியவர்களை சர்வசக்திவான் என்று கூறப்படுவதில்லை. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களாகும். மற்றபடி பாபா என்ன உங்களுக்கு கற்பிக்கின்றாரோ, அதுவே புதிய உலகத்திற்கான புதிய விஷயங்களாகும். எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். முழு நாளும் இந்த ஞானம் துளித்துளியாக புத்தியில் வந்து கொண்டே இருக்க வேண்டும். மாணவர்கள் எதைப் படிக்கிறார்களோ, அதை திரும்பவும் ஒரு முறை படிக்கிறார்கள், இதைத் தான் ஞான சிந்தனை என்று சொல்லப்படுகிறது. பாபா நமக்கு எல்லையற்ற கல்வி அல்லது சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் அனைத்து இரகசியங்களையும் வந்து புரிய வைக்கின்றார், அதை உங்களைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது, எனவே உங்களுக்கு அதிக குஷி இருக்க வேண்டும், என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள்.நீங்கள் மிகப்பெரிய மனிதர்களாவீர்கள். உங்களுக்கு கற்பிப்பவர் கூட உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஆவார். எனவே உங்களுக்கு குஷியின் அளவு எப்போதும் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும். எப்போதும் இந்த விஷயங்களை புத்தியில் திரும்பக் கொண்டு வந்து கொண்டே இருங்கள், முதன்-முதலில் நாம் தூய்மையானவர்களாக இருந்தோம். பிறகு 84 பிறவிகள் எடுத்து தூய்மையற்றவர்களாக ஆகி விட்டோம், இப்போது நாடகத்தின் திட்டப்படி பாபா தூய்மையாக்கிக் கொண்டிருக்கின்றார். சாது-சன்னியாசிகள் அனைவரும் கூறுகிறார்கள், நாங்கள் படைப்பவர் தந்தை மற்றும் படைப்பினுடைய முதல் இடை கடைசியைத் தெரிந்திருக்க வில்லை. கிறிஸ்து அவருடைய சமயத்தில் மீண்டும் வருவார் என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். கிறிஸ்தவர் களின் இராஜ்யம் பூமி முழுவதும் இருந்தது போல் இருந்தது, இப்போது அனைவரும் தனித்தனியாக ஆகி விட்டார்கள், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஒரு இராஜ்யம் ஒரு மொழி வேண்டும் என்று இப்போது கூறுகிறார்கள். மதபேதம் இருக்கக் கூடாது, இது எப்படி நடக்க முடியும்? இப்போது தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இன்னும் உறுதியாகி விட்டார்கள். இப்போது அனைவருக்கும் பொதுவாக ஒரு தெய்வீக வழி உண்டாகி விட வேண்டும் என்பது நடக்காது. இராம இராஜ்யம் வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. உங்களுக்கும் கூட முதலில் ஒன்றும் தெரியாமல் இருந்தது. இப்போது நீங்கள் பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள், நம்முடைய யுகமே தனிப்பட்டது என்பதைத் தெரிந்துள்ளீர்கள். இந்த சங்கமயுகத்தில் பிரம்மா வாய் மூலம் ஞானம் பெற்ற வம்சாவழி பிராமண தர்மம் ஸ்தாபனை ஆகிறது. பிராமணர்களாகிய நீங்கள் இராஜரிஷிகள். நீங்கள் தூய்மையாகவும் இருக்கின்றீர்கள், சிவபாபாவிடமிருந்து இராஜ்யத்தையும் அடைகிறீர்கள். அவர்கள் பிரம்மத்தோடு யோகம் ஈடுபடுத்துகிறார்கள், ஒரு பாபாவிடம் வைப்பதில்லை. சிலர் யாரிடத்திலோ வைக்கிறார்கள், வேறு சிலர் வேறு யாரிடத்திலோ வைக்கிறார்கள். சிலர் இன்னாருடைய பூஜாரியாக இருக்கின்றார், சிலர் யாருடைய பூஜாரியாகவோ இருக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் யார் என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஆகையினால் தான் பாபா கூறுகின்றார் : இவர்கள் அனைவரும் அசுர சம்பிரதாயத்தவர்கள், கீழான புத்தியுடையவர்கள். இராவணனைப் பின்பற்றுபவர்கள். நீங்கள் இப்போது சிவபாபாவினுடையவர்களாக ஆகியுள்ளீர்கள். உங்களுக்கு புதிய உலகம் சத்யுகத்தின் ஆஸ்தி பாபாவிடமிருந்து கிடைக்கிறது. பாபா கூறுகின்றார் - ஹே ஆத்மாக்களே ! நீங்கள் இப்போது தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக கண்டிப்பாக ஆக வேண்டும் எனவே என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். எவ்வளவு சகஜமான விஷயமாக இருக்கிறது. கீதையில் கிருஷ்ணருடைய பெயரைப் போட்டு விட்டார்கள் பிறகு அவரை துவாபர யுகத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள். மிகப்பெரிய தவறு செய்திருக்கிறார்கள் ஆனால் இந்த விஷயங்கள் யார் நிலையாக இங்கே வந்து கொண்டிருப்பார்களோ, அவர்களுடைய புத்தியில் தான் நிற்கும். மேளாவில் நிறைய பேர் வருகிறார்கள், ஆனால் எவ்வளவு நாற்று நடப்படுகிறது பாருங்கள். அனேக தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வருகிறார்கள், அதிலும் கூட அதிகம் ஹிந்து தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வருகிறார்கள், அவர்கள் தேவி-தேவதைகளின் பூஜாரிகளாக இருப்பார்கள். தாங்களே தான் பூஜிக்கத்தக்கவர் தாங்களே தான் பூஜாரி...... இதனுடைய அர்த்தத்தைக் கூட புரிய வைக்க வேண்டியிருக்கிறது. மேளா, கண்காட்சியில் அவ்வளவு அதிகமாக புரிய வைக்க முடியாது. சிலர் 4-5 மாதங்கள் வருகிறார்கள், புரிந்து கொள்கிறார்கள். சிலர் கொஞ்சம் நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக கண்காட்சி மேளாக்கள் செய்கிறீர்களோ, அந்தளவிற்கு நிறைய பேர் வருவார்கள். ஞானம் மிகவும் நன்றாக இருக்கிறது சென்று புரிந்துகொள்வோம் என்று நினைப்பார்கள். சென்டரில் அவ்வளவு சித்திரங்கள் இருப்பதில்லை. கண்காட்சியின் நிறைய சித்திரங்கள் இருக்கின்றன. நீங்கள் புரிய வைக்கின்றீர்கள் என்றால், அவர்களுக்கு நன்றாகவும் இருக்கிறது. ஆனால் வெளியில் சென்றவுடன் மாயையின் சூழ் நிலை, தங்களுடைய தொழில் காரியங்களில் ஈடுபட்டு விடுகிறார்கள்.இப்போது இந்த பழைய உலகம் முடிந்து புதியதாக ஆகும். மேலும் பாபா நமக்காக சொர்க்கத்தின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். நாம் புதிய உலகத்தில் சென்று புதிய கட்டிடம் உருவாக்குவோம். கீழிருந்து மாளிகை வரும் என்பது கிடையாது. முதன் - முதலில் இந்த விஷயத்தை நிச்சயம் செய்ய வேண்டும், அவர் நம்முடைய தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார். மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கின்றார். அவரிடத்தில் அனைத்து ஞானமும் இருக்கிறது, ஆகையினால் தான் ஞானக்கடல்........... என்று மகிமை பாடுகிறார்கள். அந்த விதை ஜடமாக இருக்கிறது. அது பேச முடியாது. இவர் உயிரோட்டமுடையவராக இருக்கின்றார். பாபா உங்களுக்கு அனைத்து ஞானத்தையும் கொடுத்திருக்கிறார், அதை மற்றவர்களுக்கு நல்ல விதத்தில் புரிய வைக்க வேண்டும். மேளா அல்லது கண்காட்சியில் நிறைய பேர் வருகிறார்கள். வருவது கோடியில் சிலர். 7-8 நாட்கள் வந்து விட்டு பிறகு காணாமல் போய் விடுகிறார்கள். இப்படி செய்து - செய்து யாராவது ஒருவர் வருவார். நேரம் குறைவாக இருக்கிறது, வினாசம் எதிரிலேயே உள்ளது. கண்டிப்பாக கர்மாதீத் நிலையை அடைய வேண்டும். தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாவதற்கு நினைவு மிக அவசியமாகும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நான் சதோபிரதானம் ஆக வேண்டும் என்ற கவலை இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், தலையில் பல-பிறவிகளுக்கான சுமை இருக்கிறது. இராவண இராஜ்யமாக இருக்கின்ற காரணத்தினால் ஏணிப்படியில் இறங்கியே வந்துள்ளீர்கள். இப்போது யோக பலத்தின் மூலம் ஏற வேண்டும். இரவும் பகலும் நான் சதோபிரதானம் ஆக வேண்டும் என்ற கவலையே இருக்க வேண்டும், மேலும் சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் கூட புத்தியில் இருக்க வேண்டும். பள்ளியில் கூட நாம் இந்த-இந்த பாடங்களில் தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்று இருக்கிறது, இதில் முக்கியமான பாடம் நினைவு ஆகும். சிருஷ்டியின் முதல் இடை கடைசியின் ஞானமும் வேண்டும். உங்களுடைய புத்தியில் முழு ஏணிப்படியின் ஞானம் இருக்கிறது, இப்போது நாம் பாபாவின் நினைவின் மூலம் சத்யுக சூரியவம்சத்தின் ஏணிப்படியில் ஏறுகிறீர்கள். 84 பிறவிகள் எடுத்து ஏணிப்படி இறங்கி வந்துள்ளீர்கள், இப்போது உடனேயே ஏறிப்போய் விட வேண்டும். ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என்பது பாடப்பட்டுள்ளது அல்லவா.? இந்த பிறவியில் தான் பாபாவிடமிருந்து ஜீவன்முக்தியின் ஆஸ்தியை அடைந்து தேவதைகளாக ஆகி விடுவீர்கள். பாபா கூறுகின்றார், குழந்தைகளே நீங்கள் தான் சூரியவம்சத்தவர்களாக இருந்தீர்கள், பிறகு சந்திரவம்சத்தவர், வைசிய வம்சத்தவர்களாக ஆகியுள்ளீர்கள். இப்போது உங்களை பிராமணர்களாக மாற்றுகின்றேன். பிராமணர்கள் குடுமியைப் போன்றவர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பரமபிதா பரமாத்மா வந்து பிராமண, தேவதா, சத்திரியர் ஆகிய மூன்று தர்மங்களை ஸ்தாபனை செய்கின்றார். நாம் இப்போது பிராமண வர்ணத்தில் இருக்கின்றோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு தேவதா வர்ணத்தில் வருவோம். குழந்தைகளுக்கு தினமும் எவ்வளவு ஞானத்தை புத்தியில் நிரப்பிக் கொண்டிருக்கின்றார், அதனை தாரணை செய்ய வேண்டும். இல்லையென்றால் தங்களுக்குச் சமமாக எப்படி மாற்றுவீர்கள். சூரிய வம்சத்தில் மிகக் குறைவானவர்களே வருவார்கள், யார் நன்றாக படிக்கிறார்களோ, படிப்பிக்கிறார்களோ அவர்கள் தான் வருவார்கள். இந்த சமயத்தில் உங்களுடைய நிலை மற்றும் வழி உலகத்திலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக இருக்கிறது. எப்படி ஈஸ்வரனுடைய நிலை மற்றும் வழி தனிப்பட்டதோ அதுபோலாகும். உங்களைத் தவிர பாபாவிடம் யாரும் யோகம் ஈடுபடுத்துவதில்லை. கண்காட்சிக்கு வருகிறார்கள், பிறகு சென்று விடுகிறார்கள். அவர்கள் பிரஜைகளாகி விடுகிறார்கள். மற்றபடி யார் நல்ல விதமாகக் கற்பார்களோ, கற்பிப்பார்களோ அவர்கள் நல்ல பதவியை அடையலாம். பிறகு உங்களுடைய இந்த மிஷனரி (இயக்கம்) கூட நன்றாக நிரம்பும். நிறைய பேருக்கு கவர்ச்சி ஏற்படும், வந்து கொண்டே இருப்பார்கள். புதிய விஷயம் பரவுவதற்கு நேரம் எடுத்துக் கொள்கிறது. சித்திரங்கள் கூட உடனே அதிகமாக உருவாகி விடும். நாளுக்கு நாள் மனிதர்களும் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள்.இந்த அணுகுண்டுகளின் சண்டை ஏற்படும், பிறகு என்ன நிலை ஏற்படும் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாளுக்கு நாள் அளவற்ற துக்கம் ஏற்பட்டுக் கொண்டே செல்லும். கடைசியாக இந்த துக்கமான உலகம் அழிந்து விடும். முழுமையாக வினாசம் ஆகாது. சாஸ்திரங்களில் இந்த பாரதம் அழிவற்ற கண்டம் என்று பாடப்பட்டுள்ளது. நம்முடைய நினைவுச் சின்னம் அபுவில் அப்படியே இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உலகத்திலுள்ளவையாவும் ஜடமான நினைவுச் சின்னம் என்று அதைப்பற்றி புரிய வைக்க வேண்டும். இங்கே நடைமுறையில் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. வைகுண்டத்திற்காக இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தில்வாலா கோயில் எவ்வளவு நன்றாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நாம் கூட இங்கே வந்து அமர்ந்துள்ளோம். முதலிலேயே நம்முடைய நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் சொர்க்கத்தின் இராஜ்யத்தை அடைவதற்காக இங்கே அமர்ந்துள்ளீர்கள். பாபா நாங்கள் தங்களிடமிருந்து இராஜ்யத்தை அடைந்து விட்டு தான் செல்வோம் என்று கூறுகிறீர்கள். யார் முழு நாளும் நல்ல விதத்தில் சிந்தனை செய்தும், செய்ய வைத்தும் இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் குஷியும் இருக்கும். நாம் தேர்ச்சி பெறுவோமா மாட்டோமா என்று மாணவர்கள் அவர்களாகவே புரிந்து கொள்கிறார்கள். லட்சம் கோடிக்கணக்கானவர்களில் மிகக் குறைவானவர்களுக்கே ஸ்கர்லர்டீப் கிடைக்கிறது. முக்கியமானது தங்கத்தினால் ஆன 8 பிறகு வெள்ளியால் ஆன 108, மீதம் 16000 செம்பினுடையதாகும். போப் மெடல் கொடுக்கின்றார்  என்றால், அனைவருக்கும் தங்கத்திலா கொடுப்பார். சிலருக்கு தங்கத்தினால், சிலருக்கு வெள்ளியினால். மாலையும் கூட அப்படி உருவாக்கப்படுகிறது. தங்கப்பரிசு வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். வெள்ளி பரிசு வாங்குவதின் மூலம் சந்திரவம்சத்தில் வந்து விடுவீர்கள். பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகும். வேறு எந்த உபாயமும் கிடையாது. தேர்ச்சி பெறுவதற்கான இந்த கவலையையே வையுங்கள். சண்டையின் ஏதாவது கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டால் பிறகு தீவிரமாக முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பரிட்சை நேரத்தில் மாணவர்கள் கூட மேக்கப் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இது எல்லையற்ற பள்ளியாகும். கண்காட்சியில் நன்றாகப் பயிற்சி செய்து கொண்டே இருங்கள். கண்காட்சியை பார்த்து அதிசயப்படும் அளவிற்கு புரொஜக்டர் மூலம் அந்தளவிற்கு ஈர்க்கப்படுவதில்லை. நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும், காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) பழைய உலகம் வினாசம் ஆவதற்கு முன்னால் தங்களுடைய கர்மாத்தீத் நிலையை உருவாக்க வேண்டும், நினைவில் இருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும்.2) நமக்கு கற்பிபிக்கக் கூடியவர் சுயம் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை என்ற குஷியிலேயே எப்போதும் இருக்க வேண்டும். படிப்பை நல்ல விதத்தில் படிக்க வேண்டும் மேலும் கற்பிக்கவும் வேண்டும். ஞானத்தைக் கேட்டு ஞான சிந்தனை செய்ய வேண்டும்.வரதானம்:

நான் என்கிற பாரதத்தை முடித்துவிட்டு பிரத்யக்க்ஷ (வெளிப்படையான) பலனை அனுபவம் செய்யக் கூடிய பாலகர்களிலிருந்து எஜமானர்கள் ஆகுக !ஏதேனும் விதமான நான் என்கிற கர்வ உணர்வு வருகிறது எனில், பாரம் தலையில் ஏறிவிடுகிறது. ஆனால் அனைத்து பாரங்களையும் என்னிடம் ஒப்படைத்து விடு, நீங்கள் ஆடுங்கள்... பாடுங்கள்.... என முன் வரும்போது, இந்த கேள்வி ஏட்ன? சேவை எப்படி நடக்கும் ? சொற்பொழிவு எப்படி ஆற்றுவது? நீங்கள் உங்களை நிமித்தமாக மட்டும் உணர்ந்து, தொடர்பை சக்தி நிலையத்துடன் (பவர் ஹவுஸ்) இணைத்து, அமர்ந்து விடுங்கள், மனம் சோர்ந்து போகாதீர்கள், பாப்தாதா அனைத்தையும் தானாகவே செய்து விடுவார். பாலகனிலிருந்து எஜமானன் என புரிந்து கொண்டு , சிரேஷ்ட்ட ஸ்திதியில் ஸ்திரமாய் இருங்கள். பிரத்யக்க்ஷ பலனை அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள்.சுலோகன் :

ஞான தானத்தின் கூடவே குணதானமும் செய்யுங்கள். வெற்றி கிடைத்துக் கொண்டேயிருக்கும்.


***OM SHANTI***