BK Murli 24 March 2017 Tamil

BK Murli 24 March 2017 Tamil

24.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! தந்தையிடமிருந்து உங்களுக்கு நன்மை நிறைந்த வழிமுறைகள் கிடைத்துள்ளது, உங்களது புத்தி என்ற பூட்டு திறக்கப்பட்டிருக்கிறது, ஆகையால் அனைவருக்கும் தனது புத்தியின் சகயோகம் (உதவி) செய்வது தான் உங்களது கடமையாகும்.கேள்வி:

சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய உங்களிடம் எந்த ஆசை ஏற்படுகிறது, அதை தந்தை மட்டுமே நிறைவேற்றுகின்றார்?பதில்:

சங்கமத்தில் குழந்தைகளாகிய உங்களிடம் சொர்க்கம் செல்வதற்கான ஆசை ஏற்படுகிறது. நாம் சொர்க்கத்திற்குச் செல்வோம் என்று ஒருபோதும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது இந்த புது ஆசை உருவாகியிருக்கிறது. இந்த ஆசையை ஒரு தந்தை மட்டுமே நிறைவேற்றுகின்றார், இந்த ஆசை நிறைவேறிய பின்பு வேறு எந்த ஆசையும் இருக்காது. தேவதைகளின் பொக்கிஷங்களில் எந்த குறையும் இருக்காது என்றும் பாடப்பட்டிருக்கிறது.பாட்டு:

கடைசியில் அந்த நாள் வந்தது ........ஓம்சாந்தி.

அனைத்து பக்தர்களுக்காகவும் அவசியம் ஏதாவது ஒரு நாள் அவசியம் வரும். அனைவரும் பகவானைத் தான் நினைவு செய்கின்றனர். மற்றபடி அனைவரும் சீதைகள், பக்தைகள் ஆவர், அனைவரும் துக்கத்தில் இருக்கின்றனர். நினைவு செய்து செய்து கடைசியில் அந்த நாள் வந்து விடுகிறது, தந்தை வந்து தஞ்சம் அளிக்கின்றார். அவர் படகோட்டி, தோட்டக்காரன், பதீத பாவனன் என்றும் கூறப்படுகின்றார். நாம் இப்போது ஒருவரின் கையை பிடித்திருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். நாஸ்திகனிலிருந்து ஆஸ்திகனாக ஆகியிருக்கிறோம். தந்தை குழந்தைகளுக்கு தனது அறிமுகம் கொடுத்து, சொர்க்கத்தின் ஆஸ்தி கொடுப்பதற்காக தன்னுடையவராக ஆக்கியிருக்கின்றார். தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கும் அல்லவா! இப்போது இவர் எல்லையற்ற தந்தை, பரம்பிதா ஆவார், அதனால் தான் பக்தர்களாக இருக்கும் அனைத்து குழந்தைகளும் அவரை நினைவு செய்கின்றனர். ஆனால் இந்த விசயங்களை பக்தர்கள் புரிந்து கொள்வது கிடையாது. எவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் பாட்டுக்களை பாடிக் கொண்டு தீர்த்த யாத்திரைகள் செல்கின்றனர்! கும்பமேளா நடைபெறுகிறது எனில் வேத சாஸ்திரம் போன்றவைகளை படிக்கின்றனர். இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சடங்குகளாகும். பகவான் வந்து இந்த துர்கதியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக பகவானை நினைவு செய்கின்றனர். அழைத்துக் கொண்டே இருக்கின்றனர், ஆனால் தந்தையைப் பற்றி யாருக்கும் தெரியாது. யாருக்கு தந்தையைப் பற்றி தெரியவில்லையோ அவர்கள் குழந்தையே கிடையாது. தந்தையை அறிந்து கொள்ளாத காரணத்தினால், நாஸ்திகனாக ஆனதினால் மிகுந்த துக்கத்துடன் இருக்கின்றனர். தந்தையின் குழந்தை ஆகிவிட்டதால் சதா சுகமோ சுகம் தான். தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். அங்கு அனைவரும் சென்று விடமாட்டார்கள். தந்தையிடம் ஆஸ்தி அடைவதற்கு மிகச் சிலரே வருவர். மற்ற அனைத்து தர்மத்தினர்களும் முக்திக்கான ஆஸ்தியடையவே வருவார்கள். தந்தையிடமிருந்து தான் அனைவரும் அடைய வேண்டும்.இப்போது நான் உங்களுக்கு மிக எளிமையாக விசயங்களைப் புரிய வைக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். உங்களது தந்தையாகிய என்னை நினைவு செய்தால் போதும், மேலும் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பும் நீங்கள் சந்தித்திருந்தீர்கள், ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகும் சந்தித்துக் கொண்டே இருப்பீர்கள் என்பதை தந்தை தான் புரிய வைக்கின்றார். தன்னை பொருத்தவரை இது பழைய விசயமாகும். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் இராஜ்யத்தை அடைகிறீர்கள், இழக்கிறீர்கள், மீண்டும் அடைகிறீர்கள். 84 பிறவிகள் நீங்கள் தான் எடுக்கிறீர்கள். இது பல பிறவிகளின் கடைசிப் பிறவியாகும். நாம் முதலில் பாற்கடலில் இருந்தோம், பிறகு வந்து விஷக் கடலில் மாட்டிக் கொண்டோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாற்கடல் அல்லது விஷக் கடல் என்று எதுவும் கிடையாது. ஆனால் தூய்மையாக இருந்தோம், பிறகு மாயை இராவணன் தூய்மை இழக்க வைத்துவிட்டான். இப்போது தந்தை மீண்டும் தூய்மை ஆக்குவதற்காக வந்திருக்கின்றார். கடைசியில் அந்த நாள் வந்து விட்டது என்று பாட்டிலும் கூறப்பட்டிருக்கிறது. நாம் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக வேண்டும் என்ற ஆசை பக்தியில் உங்களுக்கு இல்லாமல் இருந்தது. இந்த விசயம் புத்தியில் இல்லவே இல்லை. இந்த பாபாவும் கீதை அதிகம் படித்திருந்தார், கேட்டிருந்தார். ஆனால் நான் இராஜயோகம் கற்று நரனிலிருந்து நாராயணன் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருந்தது. ஆனால் திடீரென்று தந்தை வந்து பிரவேசம் செய்து விட்டார். உங்களது சொர்க்கத்தின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நான் வந்திருக்கிறேன் என்று பாபா கூறுகின்றார். சொர்க்கம் செல்வதற்கான ஆசையை புத்தியில் தாரணை செய்யுங்கள். சொர்க்கத்தை படைப்பவர் தந்தை. அவர் மிகவும் எளிய முறையில் அமர்ந்து புரிய வைக்கின்றார். ஆம், காமம் மிகப் பெரிய எதிரி, இதை சந்நியாசிகளும் கூறுகின்றனர், அதனால் தான் வீடு வாசலை விட்டு விடுகின்றனர். அது ஒரு சிலருக்கான விசயம். நாடகத்தில் அவர்களுக்கு துறவர மார்க்கம் இருக்கிறது. அவர்களும் பக்தர்கள் தான். பரம்பிதா என்று கூறுகின்றனர், ஆனால் அவர் யார்? என்பதை அறியவில்லை. இராதே கோவிந்த் ....... என்று பஜனை செய்யுங்கள் என கூறுகின்றனர். யாரை பூஜிப்பது? கோவிந்தன் என்ற பெயர் கிருஷ்ணருக்கு வைத்து விட்டனர். எதை கேட்கிறார்களோ அதை அப்படியே எழுதி வைத்து விட்டனர், கோவிந்தன் என்று யாரை கூறுவது? பசுமாடுகளை மேய்பவர், முரளி கூறக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். பசு என்பது மனிதர்களுக்கான விசயமாகும். முன்பு நீங்களும் கூட எதையும் புரியாமல் இருந்தீர்கள். இப்போது தந்தை வந்து நன்மை அடைவதற்கான அறிவுரை கொடுத்திருக்கின்றார். மாயை, இராவணன் தீய வழிமுறை கொடுக்கிறான். தந்தை நல் வழி கொடுக்கின்றார். நன்மைக்கான வழிமுறை சிவபாபாவினடையது, கெட்ட வழிமுறை இராவணனினுடையது. சுபமான வழிமுறை என்றால் ஸ்ரீமத், தீய வழி பொய்யான வழி முறையாகும். இப்போது நீங்கள் வித்தியாசத்தை அறிவீர்கள். நாம் பொய்யான வழியில் நடந்து வந்தோம், சொர்க்கத்தின் ஆசையின்றி இருந்தோம். இப்போது தந்தை புது ஆசையை உருவாக்கியிருக்கின்றார். அங்கு கிடைக்கவில்லை என்பது போன்ற எந்த பொருளும் இருக்காது. அதாவது அதை அடைவதற்கு கஷ்டப்பட வேண்டியிருக்காது. இப்போது உங்கள் அனைவருக்கும் புது ஆசை இருக்கிறது. முயற்சியும் வரிசைக்கிரமமாகவே செய்கிறீர்கள். தந்தை நம்பர் ஒன் வழி கொடுக்கிறார் அல்லவா! பிரம்மாவே இறங்கி வந்தாலும் அவரது வழியை இவர் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று (ஒருசிலரை) கூறுகின்றனர். இது கடைசி நேரத்தின் நிலையாகும். உங்களது மகிமை கடைசியில் பாடப்படும். எப்போது நீங்கள் சம்பூர்ணம் ஆகிவிடுவீர்களோ அப்போது ஆஹா ஆஹா என்று வெளிப்படும். இப்போது ஏற்ற இரக்கத்துடன் இருக்கிறீர்கள். அவ்வப்பொழுது குஷியில் ஆடுகிறீர்கள், அவ்வபொழுது பிணம் போன்று ஆகிவிடுகிறீர்கள். மாயை வித விதமான முறையில் அடி கொடுத்து விடுகிறது. சில நேரங்களில் மனதை குழப்பி விடுகிறது, அதாவது ஸ்ரீமத்தை விட்டு விட்டு இராவணனின் வழிப்படி நடக்க ஆரம்பித்து விடுகின்றனர், பிறகு கதறி அழுதுக் கொண்டே இருப்பர்.ஒவ்வொரு அடியிலும் அறிவுரை (ஸ்ரீமத் ) மூலம் எச்சரிக்கை பெற்றுக் கொண்டே இருங்கள் என்று பாபா கூறுகின்றார். ஸ்ரீமத் படி நடப்பதில் தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது. ஸ்ரீமத் படி நடக்கும் போது தான் இந்த லெட்சுமி நாராயணன் போன்று ஆவீர்கள் என்ற ஆசையை உங்களுக்குள் தந்தை ஏற்படுத்தியிருக்கின்றார் அல்லவா! இவர் (பிரம்மா) எப்படி ஆகியிருக்கிறாரே அவ்வாறே ஆகுக! இந்த விசயத்தை மறந்து விடாதீர்கள். ஆனால் மாயையானது. ஸ்ரீமத் பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுப்பதே கிடையாது. அவ்வப்பொழுது தலைகீழான காரியங்களை செய்வித்து விடுகிறது. செய்த பின்பு வந்து பாபா, நான் இந்த காரியம் செய்து விட்டேன் என்று கூறுவர். போதனை அடைவதற்கு நேரம் கிடைக்கவில்லை. இப்போது என்ன செய்வது? மாயை உங்களை அடித்து விட்டது, இதில் தந்தை என்ன செய்வார்? ஒவ்வொரு விசயத்திலும் ஒவ்வொரு அடியிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி சேர்ந்திருந்தாலும் தூய்மையாக இருக்க முடியும் என்று சந்நியாசிகள் ஒருபோதும் கூறமாட்டார்கள். இதில் அதிக யுக்திகள் உள்ளன. பிரம்மா குமார், குமாரி என்று கூறுவது எவ்வளவு பெரிய யுக்தியாகும். குழந்தைகளாகிய நீங்கள் பிராமண பிராமணிகளாக ஆகிறீர்கள் எனில் ஒருபோதும் குலத்தை களங்கப்படுத்தக் கூடாது. சகோதரன், சகோதரி என்ற சம்மந்தம் ஒருபோதும் தலைகீழாக (தீயதாக) ஆகாது. சகோதரன், சகோதரி தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது சட்டம் கிடையாது. இங்கு அனைவரும் சகோதரன், சகோதரிகளாக ஆகிவிடுகிறீர்கள். இது என்ன பழக்கம்? என்று அவர்கள் கேலி செய்கின்றனர். இதுவோ புதிய விசயமாகும். இவ்வாறு அறிவுரை (வழி) ஒருபோதும் யாரும் கொடுக்க முடியாது. நீங்கள் பி.கு எனில் சகோதரன், சகோதரிகளாக ஆகிவிடுகிறீர்கள் என்று யாராவது கேட்டால் அவர்கள் புத்தியில் பதியும்படி புரிய வைக்க வேண்டும். ஏனெனில் அனைவரின் புத்தி பூட்டும் மூடப்பட்டிருக்கிறது. கல்புத்தியுடையவர் எனில் நீங்கள் அவர்களது புத்தி பூட்டை திறக்க வேண்டும். பல கிளை நிலையங்கள் உள்ளன, அதில் அனைவரும் தன்னை பிரம்மா குமார், குமாரி என்று கூறிக் கொள்கிறீர்கள் எனில் சகோதரன் சகோதரி ஆகிவிடுகிறீர்கள் அல்லவா! கெட்டப் பார்வை கூடவே கூடாது, முடியாத காரியமாகும். இது ஈஸ்வரனின் புதிய படைப்பாகும். கீதையில் ஒருபோதும் கேள்விப்படவேயில்லை என்று அவர்கள் கேட்கின்றனர். நான் உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன், பிறகு சிவபாபாவும் இருக்கமாட்டார், பி.கு க்களும் இருக்கமாட்டார்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த ஞானம் மறைந்து போய் விடும். பிறகு நீங்கள் எப்படி கேட்க முடியும்? இப்போது நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். எப்போது இராஜ்யம் ஸ்தாபனை ஆவது நிறைவடைந்து விடுகிறதோ, பிறகு இவை அனைத்தும் அழிந்து விடும். பாண்டவர்கள் இராஜ்யம் ஸ்தாபனை செய்தனர். இதுவும் சாஸ்திரங்களில் கிடையாது. தேவதைகள் தூய்மையான உலகிற்கு எஜமானர்களாக இருந்தனர். அசுரர்கள் தூய்மை இல்லாத உலகில் இருக்கின்றனர். பிறகு இவர்களுக்குள் எப்படி சண்டை நடைபெற முடியும்? சொர்க்கத்தில் இருந்து கொண்டு நரகத்திலுள்ளவர்களுடன் சண்டையிடுவார்களா என்ன? நல்லது, அசுரர்கள் மற்றும் தேவதைகளுக்கு சண்டை எப்படி நடைபெறும்? அவசியம் சங்கமத்தில் தான் நடைபெற வேண்டும். அவர்கள் தங்களது படையுடன் வந்து யுத்தம் செய்வர், இப்படி கணக்கே கிடையாது. எங்கு அசுரர்கள் இருப்பார்களோ அங்கு தேவதைகள் யாரும் கிடையாது. எங்கு தேவதைகள் இருப்பார்களோ அங்கு அசுரர்கள் கிடையாது. பிறகு எப்படி யுத்தம் நடைபெறும்? கௌரவர்கள் பாண்டவர்களின் யுத்தமும் ஏற்படவில்லை. யார் ஸ்ரீமத் படி நடக்கிறார்களோ அவர்கள் யாரிடத்திலாவது எப்படி சண்டையிடுவார்கள்? சண்டையிடக் கூடியவர்கள் மனிதர்கள் ஆவர். சண்டையிடுவதற்கோ அல்லது சூதாட்டம் விளையாடுவதற்கோ தந்தை அனுமதி கொடுப்பது கிடையாது. சூதாடும் அளவிற்கோ அல்லது தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுமளவிற்கோ பாண்டவர்கள் மூர்க்கர்கள் அல்ல.இது பாபாவின் ருத்ர ஞான யக்ஞம் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். அபலைகளின் மீது அதிகமான கொடுமை ஏற்படுகிறது. விஷத்திற்காக எவ்வளவு தொந்தரவு செய்கின்றனர்! காமம் மிகப் பெரிய எதிரி, இதன் மீது வெற்றியடையும் போது நீங்கள் சொர்க்கத்திற்கு வந்து விடுவீர்கள் என்று பகவான் கூறுவதாக கூறுங்கள். இவ்வாறு புரிய வைப்பதன் மூலம் பலர் வெற்றியடையவும் செய்கின்றனர். பிறகு அவர்களை தேவி என்று கூறி பூஜிக்கின்றனர். உதவியும் கிடைக்கிறது. கணவன் மனைவி ஒன்றாக இருந்து தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை கேட்டு மனிதர்கள் பயந்து விடுகின்றனர், இது முடியாத காரியம். அவசியம் ஏதோ மந்திரம் இருப்பதாக கூறுகின்றனர். இப்படிப்பட்ட சத்சங்கத்திற்கு ஒருபோதும் செல்லக் கூடாது என்று கூறியதால் ஆரம்பத்தில் வந்த சில சகோதரிகள் விட்டு சென்று விட்டனர். பட்டி நடைபெற்ற போது மேலும் பயம் ஏற்பட்டிருக்கக் கூடும். காரணம் தவறுதலாக புரிந்து கொண்டனர். பந்தனமுள்ளவர்களுக்கு அதிக வழிமுறைகள் கிடைக்கிறது, இதில் துணிச்சல் தேவை. ஏழைகள் புரிந்து கொள்வார்கள், நஷ்டமொன்றும் இல்லை. இதன் காரணத்தினால் நாம் ஏன் சொர்க்க இராஜ்யத்தை இழக்க வேண்டும்! இவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள், பரவாயில்லை, நாம் சென்று பாத்திரம் சுத்தம் செய்வோம், வீடு கூட்டுவோம். செல்வந்த வீட்டில் உள்ளவர்கள் இவ்வாறு விட்டு விடமாட்டார்கள். ஆரம்பத்தில் சகோதரிகளின் பாகம் இருந்தது. ஏழைகளுக்கு மிகவும் எளிதாகும். பாபா கூறுகின்றார் - பாபாவிடத்தில் வருகிறீர்கள் எனில் முதலில் வீடு கூட்ட வேண்டும், அனைத்தும் செய்ய வேண்டியிருக்கும். மாயையின் புயல்களும் மிகவும் ஜோராக வரும். குழந்தைகளின் நினைவு வரும், ஆகையால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதலில் பற்றற்றவர்களாக ஆக வேண்டும், மற்றவைகள் பிறகு தான். சிவபாபா அறிவுரைகள் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஞானம் கிடைத்து விட்டது, உடைகள் எப்படி வேண்டுமென்றாலும் உடுத்திக் கொள்ளுங்கள், பரவாயில்லை. தந்தை உங்களை கண்களில் அமர வைத்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். நாயகனின் பின்னால் நாயகி செல்கிறார் எனில் மண் விளக்கில் தீபத்தை ஏற்றுகின்றனர். அனைவரையும் மலர்களாக ஆக்கி அழைத்துச் செல்ல தந்தை வந்திருக்கின்றார். அனைவரும் தூய்மையானவர்களாக ஆவார்கள். பாவங்களின் சுமைகள் தலைமீது இருக்கிறது எனில் கணக்கு வழக்குகளை கடைசியில் முடித்து விட்டு செல்ல வேண்டும், அதற்காகத் தான் நீங்கள் நினைவில் இருப்பதற்கு இந்த அளவிற்கு முயற்சி செய்கிறீர்கள். யார் செய்யவில்லையோ அவர்கள் எளிதாக முக்திக்கு சென்று விடமாட்டார்கள். கடைசி நேரத்தில் அதிக தண்டனைகள் அடைந்து பிறகு முக்திதாமத்திற்கு செல்வார்கள். ஆத்மாவின் சுயதர்மம் அமைதியாகும். நாம் அசரீரியாகி அமர்கிறோம். இந்த கர்மேந்திரியங்களினால் காரியங்கள் செய்யாமல் அமைதியாக அமர்ந்து விடுகிறோம். ஆனால் எது வரை? முடிவில் காரியங்கள் செய்தே ஆக வேண்டும் அல்லவா! ஆத்மாவின் சுயதர்மமே அமைதி தான் என்பது சாது, சந்நியாசி போன்றவர்களுக்கும் தெரியாது. சந்நியாசிகள் அமைதியைத் தேடி செல்கின்றனர். அமைதி என்பது உங்களது கழுத்து மாலை என்று பாபா கூறுகின்றார். பிறகு நாம் ஏன் காட்டிற்கு செல்ல வேண்டும்? நாம் கர்மயோகிகளாக இருக்கிறோம். என்னை நினைவு செய்தால் விகர்மங்கள் விநாசம் ஆகும் என்று பாபா கூறுகின்றார். பிறகு சொர்க்கத்தை நினைவு செய்யுங்கள், 63 பிறவிகளின் தீவிர பக்தியானது குழப்பமடைய செய்து விட்டது. இப்போது உங்களை அனைத்து குழப்பங்களிலிருந்தும் விடுவித்து விட்டேன்.இப்போது அசரீரி ஆகுங்கள் என்று பாபாவிடமிருந்து கட்டளை கிடைக்கிறது, ஏனெனில் நீங்கள் என்னிடத்தில் வர வேண்டும், பிறகு உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்து விடுவேன். இதில் குழப்பமடைவதற்கான விசயம் எதுவுமில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் ஏமாற்றமடைந்தீர்கள், அவ்வாறு மீண்டும் அடைய வேண்டியிருக்கும். அனைவரும் மறுபிறவி எடுத்து எடுத்து தமோ பிரதானமாக ஆகியே தீர வேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஒவ்வொரு அடியிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஸ்ரீமத்தில் குழப்பமடையக் கூடாது. ஒருபோதும் குலத்திற்கு களங்கம் விளைவிக்கக் கூடாது.2) தந்தையிடம் செல்வதற்காக பழைய கணக்கு வழக்குகளை முடிக்க வேண்டும். அசரீரி ஆவதற்கான முழு முயற்சி செய்ய வேண்டும்.வரதானம்:

ஞானம் என்ற ஒளி (லைட்) மற்றும் சக்தியின் (மைட்) மூலம் ஆத்ம அபிமானத்தில் இருக்கக் கூடிய நினைவு சொரூபம் ஆகுக.உங்களது அநாதி ரூபம் நிராகார ஜோதி சொரூப ஆத்மா ஆகும், மேலும் ஆதி சொரூபம் தேவ ஆத்மா ஆகும். இரண்டு சொரூபத்தின் நினைவு சதா இருக்க வேண்டுமெனில் ஞானத்தின் லைட் மற்றும் மைட்டின் ஆதாரத்தில் ஆத்ம அபிமானி ஸ்திதியில் இருப்பதற்கான பயிற்சி இருக்க வேண்டும். பிராமணன் ஆவது என்றால் ஞானத்தின் லைட், மைட் நினைவு சொரூபம் ஆவதாகும். யார் நினைவு சொரூபமாக ஆகிறார்களோ அவர்கள் தானும் திருப்தியாக இருப்பார்கள், மற்றவர்களையும் திருப்திப்படுத்துவார்கள்.சுலோகன்:

சாதாரண நிலையிலும் மகான் நிலையின் (மேன்மை தன்மையை) அனுபவம் செய்வது தான் மகான் (உயர்வான) ஆத்மா ஆவதாகும்.


***OM SHANTI***