BK Murli 28 March 2017 Tamil

BK Murli 28 March 2017 Tamil

28.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! இந்த பழைய தேகத்தின் உணர்வை மறந்து விடுங்கள். இதன் மீதுள்ளபற்றை நீக்குங்கள். அப்பொழுது உங்களுக்கு முதல் தரமான சரீரம் கிடைத்துவிடும். தற்போது இந்த சரீரம் அழிந்து விட்டது போலவே தான்.கேள்வி:

இந்த நாடகத்தின் எந்த ஒரு நிலையான நியமத்தை மனிதர்கள் அறியாமல் இருக்கிறார்கள்?பதில்:

ஞானம் இருக்கும் பொழுது பக்தி இல்லை. மேலும் பக்தி இருக்கும் பொழுது ஞானம் இல்லை. பாவன உலகமாக இருக்கும் பொழுது யாருமே பதீதமானவர்கள் (தூய்மையற்றவர்கள்) இருக்க மாட்டார்கள். மேலும் பதீத (தூய்மையற்ற) உலகமாக இருக்கும் பொழுது யாருமே பாவனமானவர் இருக்க மாட்டார்கள். இந்த நாடகத்தின் நிலையான நியமத்தை மனிதர்கள் அறியாமல் உள்ளார்கள்.கேள்வி:

உண்மையான காசி கல்வட் - தன்னை பலியிடுதல் என்று எதனைக் கூறுவார்கள்?பதில்:

கடைசியில் யாருடைய நினைவும் வரக் கூடாது. ஒரு தந்தையின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். இது தான் உண்மையான காசி கல்வட் செய்வது - பலியிடுவது. காசி கல்வட் செய்வது என்றால், பாஸ்வித் ஆனர் ஆகி விடுவது. இதில் சிறிதளவு கூட தண்டனை வாங்க வேண்டி இருக்காது.பாடல்:

வாசலுக்கு வந்துள்ளோம் சபதம் எடுத்து.. .. ..ஓம் சாந்தி.

தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஏனெனில், குழந்தைகள் தந்தையை தன்னுடையவராக ஆக்கி இருக்கிறார்கள். மேலும் தந்தை குழந்தைகளை தன்னுடையவராக ஆக்கி இருக்கிறார். ஏனெனில், துக்கதாமத்திலிருந்து விடுவித்து சாந்திதாமம் மற்றும் சுகதாமத்திற்கு அழைத்துச் செல்லவேண்டியுள்ளது. இப்பொழுது நீங்கள் சுகதாமம் செல்வதற்காக தகுதி உடையவர் ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். பதீத மனிதர்கள் யாருமே பாவன உலகத்திற்குச் செல்ல முடியாது. சட்டமே கிடையாது. இந்த சட்டத்தைப் பற்றிக் கூட குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். மனிதர்கள் இச்சமயத்தில் பதீதமாக (தூய்மையற்றவர்களாக) விகாரியாக இருக்கிறார்கள். எப்படி நீங்கள் பதீதமாக இருந்தீர்கள்? இப்பொழுது நீங்கள் எல்லா பழக்கங்களையும் நீக்கி சர்வ குண சம்பன்னராக, தேவி தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாடல் கூறினீர்கள் -நாங்கள் உயிருடன் இருந்து இறப்பதற்கு அல்லது உங்களுடையவராக ஆக வந்துள்ளோம். பிறகு நீங்கள் என்ன வழி கொடுப்பீர்களோ .. .. .. ஏனெனில் உங்களுடைய வழி சர்வோத்தமானது. பிற என்னவெல்லாம் அனேக வழிகள் உள்ளனவோ அவை எல்லாம் அசுர வழிகள் ஆகும். நாம் இவ்வளவு காலம் ஏதோ அசுர வழிப் படி நடந்து கொண்டிருக்கிறோம் என்பது எங்களுக்குக் கூட தெரியாமல் இருந்தது. நாம் ஈசுவரிய வழிப்படி நடக்காமல் இருக்கிறோம் என்பதை உலகத்தார் கூட புரியாமல் இருக்கிறார்கள். இராவணனுடைய வழிப் படி இருக்கிறார்கள். குழந்தைகளே அரைகல்பமாக நீங்கள் இராவணனின் வழிப் படி நடந்து கொண்டே வந்துள்ளீர்கள் என்று பாபா கூறுகிறார். அது பக்தி மார்க்கம், இராவண இராஜ்யம் ஆகும். இராம இராஜ்யம் ஞான காண்டம். இராவண இராஜ்யம் பக்தி காண்டம் என்று கூறுகிறார்கள். எனவே ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம். எதிலிருந்து வைராக்கியம்? பக்தியிலிருந்து. மேலும் பழைய உலகத்திலிருந்து வைராக்கியம். ஞானம் என்பது பகல். பக்தி என்பது இரவு. இரவிற்குப் பிறகு பகல் வருகிறது. வைராக்கியம் பக்தியிலிருந்து மற்றும் பழைய உலகத்திலிருந்து.இது எல்லையில்லாத நேர்மையான வைராக்கியம் ஆகும். சந்நியாசிகளின் வைராக்கியம் தனி ஆகும். அவர்கள் வீடு வாசல் ஆகியவற்றின் மீது மட்டும் வைராக்கியம் கொள்கிறார்கள். அது கூட நாடகத்தில் பொருந்தி உள்ளது. எல்லைக்குட்பட்ட வைராக்கியம் அல்லது குடும்பத்தின் சந்நியாசம். நீங்கள் எல்லையில்லாத சந்நியாசத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் ஆத்மா ஆவீர்கள். பக்தியில் ஆத்மா பற்றிய ஞானமும் இருப்பதில்லை. பரமாத்மா பற்றிய ஞானமும் இருப்பதில்லை. ஆத்மாக்களாகிய நாம் யார், எங்கிருந்து வந்துள்ளோம், என்ன பாகம் ஏற்று நடிக்க வேண்டும் .. .. எதுவுமே தெரியாமல் உள்ளார்கள். சத்யுகத்தில் ஆத்மா பற்றிய ஞானம் மட்டுமே உள்ளது. ஆத்மாவாகிய நான் ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்கிறேன். பரமாத்மாவின் ஞானத்தின் அவசியம் அங்கு இருப்பதில்லை. எனவே பரமாத்மாவை நினைவு செய்வதில்லை. இது நாடகம். இது போல அமைக்கப்பட்டுள்ளது. தந்தை ஞானம் நிறைந்தவர் ஆவார். சிருஷ்டி சக்கரத்தின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் தந்தையிடம் தான் உள்ளது. தந்தை உங்களுக்கு ஆத்மா, பரமாத்மாவின் ஞானத்தை அளித்துள்ளார். ஆத்மாவின் ரூபம் என்ன என்று நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். அது ஜோதி சொரூபம் ஆகும் என்பார்கள். ஆனால் அது என்ன பொருள் என்று எதுவும் அறியாமல் உள்ளார்கள். ஆத்மா முற்றிலுமே சிறிய புள்ளி நட்சத்திரமாகும் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். பாபா கூட நட்சத்திரம் போல இருக்கிறார். ஆனால் அவரது மகிமை நிறைய உள்ளது. நீங்கள் முக்தி, ஜீவன் முக்தியை எப்படி அடைய முடியும் என்பதை இப்பொழுது தந்தை முன்னால் அமர்ந்து புரிய வைக்கிறார். ஸ்ரீமத் படி நடப்பதால் நீங்கள் உயர்ந்த பதவியை அடைய முடியும். ஜனங்கள் தான புண்ணியம் வேள்வி ஆகியவை செய்கிறார்கள். பகவான் கருணை புரிந்து நம்மை இங்கிருந்து அழைத்துச் செல்வார் என்று நினைக்கிறார்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் சந்தித்து விடுவாரோ தெரியவில்லை. எப்பொழுது சந்திப்பார் என்று கேளுங்கள். ஆக இன்னும் நிறைய காலம் மீதி உள்ளது என்பார்கள். கடைசியில் சந்திப்பார். மனிதர்கள் முற்றிலுமே இருளில் இருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது வெளிச்சத்தில் உள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது பதீதர்களை (தூய்மையற்றவர்களை) பாவனமாக ஆக்குவதற்கு மறைமுகமான ரூபத்தில் கருவியாக ஆகி உள்ளீர்கள். நீங்கள் மிகவும் அன்புடன் காரியத்தை சாதிக்க வேண்டும். மனிதனிலிருந்து தேவதை அல்லது சோழியிலிருந்து வைரம் போல ஒரு நொடியில் ஆகிவிடும் அளவிற்கு அவ்வளவு அன்புடன் புரிய வையுங்கள். கல்ப கல்பமாக நான் வந்து குழந்தைகளாகிய உங்களுடைய சேவையில் ஆஜராக ஆக வேண்டி உள்ளது என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படி நடக்கிறது என்பது பற்றி புரிய வைக்க வேண்டும். அங்கு தேவதைகள் மிகவும் ஆனந்தமாக இருப்பார்கள். பாபாவினுடைய ஆஸ்தி பெறப்பட்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு யோசனை அல்லது கவலையின் விஷயம் கிடையாது. கார்டன் ஆஃப் அல்லா.. .. .. என்று பாடப்படுகிறது. அங்கு வைரம் வைடூரியங்களின் அரண்மனை இருந்தது. மிகவும் செல்வந்தராக இருந்தீர்கள். இச்சமயம் பாபா உங்களை ஞானரத்தினங்களால் மிகவுமே செல்வந்தராக ஆக்கிக் கொண்டிருக்கிறார். பிறகு உங்களுக்கு சரீரம் கூட முதலில் தரமானதாக கிடைக்கும். தேக அபிமானத்தை விடுத்து ஆத்ம உணர்வுடையவராக ஆகுங்கள் என்று இப்பொழுது பாபா கூறுகிறார். இந்த தேகம் மற்றும் தேக சம்பந்தம் ஆகியவை எதெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்தும் ஸ்தூலமானவை. நீங்கள் தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள். 84 பிறவிகளின் ஞானம் புத்தியில் உள்ளது. இப்பொழுது நாடகம் முடிவடைகிறது. இப்பொழுது நமது வீட்டிற்குச் செல்வோம். போதும், இப்பொழுது இந்த ஸ்தூலத்தை விட்டே விட்டோம் என்பதே புத்தியில் இருக்கட்டும். அப்பொழுது தானே புத்தியோகம் தந்தையுடன் கூட இருக்கும். மேலும் விகர்மங்களும் விநாசம் ஆகும். இல்லற விவகாரங்களில் தாமரை மலர் போல இருக்க வேண்டும். விடுபட்டவராக ஆகி இருங்கள். வானபிரஸ்தியினர் வீடு வாசலிலிருந்து ஒதுங்கி விட்டு சாதுக்களிடம் போய் உட்கார்ந்து விடுகிறார்கள். ஆனால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற ஞானம் இல்லை. உண்மையில் பிராப்தி பற்றியும் தெரிந்திருக்கும் பொழுது தான் பற்று நீங்கி விடுகிறது. கடைசி நேரத்தில் குழந்தை குட்டிகள் நினைவிற்கு வரக் கூடாது என்பதற்காக ஒதுங்கிக் கொண்டு விடுகிறார்கள். இந்த பழைய உலகத்தின் மீதுள்ள பற்றை நீக்கி விடுவதால் நாம் உலகிற்கு அதிபதி ஆகி விடுவோம் என்பதை இங்கு நீங்கள் அறிந்துள்ளீர்கள். இங்கு வருவாய் மிகவும் உயர்ந்தது ஆகும். பிற என்னவெல்லாம் செய்கிறார்களோ, அவை குறுகிய கால சுகத்திற்காகப் படிக்கிறார்கள். குறுகிய கால சுகத்திற்காக பக்தி செய்கிறார்கள். மீராவிற்கு சாட்சாத்காரம் (காட்சிகள் தெரிதல்) ஆகியது. ஆனால் இராஜ்யம் கிடைக்கவில்லை.பாபாவின் வழிப் படி நடப்பதால் பெரிய வெகுமதி கிடைக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தூய்மை, சுகம், சாந்தியை நிலைநாட்டுவதால் உங்களுக்கு எவ்வளவு பரிசு கிடைக்கிறது ! இப்பொழுது தேக உணர்வை நீக்கிக் கொண்டே செல்லுங்கள் என்று தந்தை கூறுகிறார். நான் உங்களுக்கு சத்யுகத்தில் முதல் தரமான தேகம் மற்றும் தேக சம்பந்தியினரைக் கொடுப்பேன். அங்கு துக்கத்தின் பெயர் அடையாளமே இருக்காது. எனவே இப்பொழுது என்னுடைய வழி படி மிகச் சரியாக நடங்கள். மம்மா பாபா நடக்கிறார்கள். எனவே ஒ அவர்களுக்குத் தான் முதல் அரசாட்சி கிடைக்கிறது. இச்சமயத்தில் ஞான ஞானேஷ்வரி ஆகிறார்கள். சத்யுகத்தில் இராஜ இராஜேஷ்வரி ஆகிறார்கள். இறைவனின் ஞானத்தினால் நீங்கள் இராஜாக்களுக்கு இராஜா ஆகி விடும்பொழுது பிறகு அங்கு இந்த ஞானம் இருப்பதில்லை. இந்த ஞானம் உங்களுக்கு இப்பொழுது உள்ளது. தேக உணர்வை இப்பொழுது துண்டிக்க வேண்டும். என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தை, இவை அனைத்தையும் மறக்க வேண்டும். இவை எல்லாமே இறந்து விட்டுள்ளன. எனது சரீரம் கூட இறந்து விட்டுள்ளது. நான் தந்தையிடம் செல்ல வேண்டும். இச்சமயத்தில் ஆத்மாவினுடைய ஞானம் கூட யாருக்கும் இல்லை. ஆத்மா பற்றிய ஞானம் சத்யுகத்தில் இருக்கும். அது கூட கடைசி நேரத்தில் சரீரம் முதுமை அடையும் பொழுது. இப்பொழுது எனது சரீரம் முதுமை அடைந்துள்ளது. இப்பொழுது நான் புதிய சரீரத்தை எடுக்க வேண்டி உள்ளது என்று ஆத்மா கூறுகிறது. முதலில் நீங்கள் முக்தி தாமம் செல்ல வேண்டும். சத்யுகத்தில் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கூறமாட்டார்கள். இல்லை. வீடு திரும்புவதற்கான நேரம் இது ஆகும். இங்கு நேரில் எவ்வளவு அடித்து அடித்து உங்களது புத்தியில் இருத்துகிறார். நேரிடையாகக் கேட்பதற்கும் முரளி படிப்பதற்குமிடையில் இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. ஆத்மாவிற்கு இப்பொழுது அறிமுகம் கிடைத்துள்ளது. அதற்கு ஞானக் கண் என்று கூறப்படுகிறது. எவ்வளவு விசாலமான புத்தி வேண்டும். சிறிய நட்சத்திரம் போன்ற ஆத்மாவில் எவ்வளவு பாகம் நிரம்பி உள்ளது. இப்பொழுது பாபாவிற்குப் பின்னால் நாமும் ஓடுவோம். சரீரம் எல்லோருடையதும் முடியப் போகிறது. உலக சரித்திரம் மற்றும் பூகோளம் மீண்டும் நடைபெற வேண்டி உள்ளது. வீடு வாசலை விட வேண்டியதில்லை. பற்றை மட்டும் நீக்க வேண்டும். மேலும் தூய்மையானவர் ஆக வேண்டும். யாருக்குமே துக்கம் கொடுக்காதீர்கள். முதலில் ஞான மனனம் செய்யுங்கள். பிறகு அனைவருக்கும் அன்புடன் ஞானத்தைக் கூறுங்கள். சிவபாபா சிந்தனைக் கடலை கடையமாட்டார் (ஞான மனனம் செய்தல்). இவர் குழந்தைகளுக்காகச் செய்கிறார். இருப்பினும் சிவபாபா புரிய வைக்கிறார் என்றே புரிந்திருங்கள். நான் கூறுகிறேன் என்றெல்லாம் இவருக்கு இருப்பதில்லை. சிவபாபா கூறுகிறார். இதற்கு நிரகங்காரி தன்மை என்று கூறப்படுகிறது. நினைவு ஒரு சிவபாபாவை செய்ய வேண்டும். தந்தை ஞான மனனம் செய்து அதைக் கூறுகிறார். இப்பொழுது குழந்தைகளும் பின்பற்றுங்கள். கூடுமானவரை உங்களிடம் நீங்களே உரையாடிக் கொண்டு இருங்கள். இரவு விழித்து கூட சிந்தனை செய்ய வேண்டும். உறங்கியபடி அல்ல. எழுந்து அமர்ந்து விட வேண்டும். நானாகிய ஆத்மா எவ்வளவு சிறிய புள்ளி ஆவேன். பாபா எவ்வளவு ஞானம் புரிய வைத்துள்ளார். என்னே சுகம் அளிக்கும் தந்தையின் அற்புதம். உறக்கத்தை வெல்லும் குழந்தைகளே ! மற்ற எல்லா தேக சகிதம், தேகத்தின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை மறக்க வேண்டும் என்று தந்தை கூறுகிறார். இவை அனைத்தும் முடியப் போகிறது. நாம் பாபாவிடமிருந்து தான் ஆஸ்தி பெற வேண்டும். மேலும் அனைத்திலிருந்தும் பற்றை நீக்கி இல்லற விவகாரங்களில் இருந்தபடியே தூய்மையாக இருக்க வேண்டும். சரீரத்தை விடும் பொழுது எந்த ஒரு பற்றுதலும் இருக்கக் கூடாது. இப்பொழுது உண்மையிலும் உண்மையான காசி கல்வெட் - தன்னை பலியிடுதல் கூட செய்ய வேண்டும். சுயம் காசிநாதரான சிவபாபா கூறுகிறார் - நான் உங்கள் அனைவரையும் கூட்டிச் செல்ல வந்துள்ளேன். இப்பொழுது காசி கல்வட் - பலியிடுதல் ஆகியே தீர வேண்டும். இயற்கையின் சீற்றங்கள் கூட இப்பொழுது வரப் போகிறது. அச்சமயத்தில் நீங்கள் கூட நினைவில் இருக்க வேண்டும். அவர்கள் கூட (காசி கல்வட் செய்பவர்கள்) நினைவில் இருந்து கிணற்றில் குதித்து விடுவார்கள். ஆனால் கிணற்றில் குதிப்பதால் ஒன்றும் ஆவது இல்லை. இங்கு நீங்கள் எப்படி ஆக வேண்டும் என்றால், தண்டனை வாங்காதிருக்க வேண்டும். இல்லை என்றால், உயர்ந்த அளவு பதவியை அடைய முடியாது. பாபாவின் நினைவினால் தான் விகர்மங்கள் விநாசம் ஆகிறது. கூடவே நாம் மீண்டும் 84ன் சக்கரம் சுற்றி வருவோம் என்ற ஞானம் உள்ளது. இந்த ஞானத்தை தாரணை செய்வதால் நாம் சக்கரவர்த்தி இராஜா ஆகிடுவோம். எந்த ஒரு விகர்மமும் கூட செய்யக் கூடாது. ஏதாவது கேட்க வேண்டும் என்றால், பாபாவிடம் ஆலோசனை கேட்கலாம். (சர்ஜன்) மருத்துவர் நான் ஒருவன் தான் இல்லையா? நேரிடையாகக் கேட்டாலும் சரி கடிதம் மூலமாகக் கேட்டாலும் சரி, பாபா வழி கூறுவார். பாபா எவ்வளவு சிறிய நட்சத்திரம் ஆவார். ஆனால் மகிமை எவ்வளவு உயர்ந்ததாக உள்ளது. காரியம் செய்திருக்கிறார். அதனால் தானே மகிமை பாடுகிறார்கள். இறைவன் தான் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஆவார். இவருக்குக் கூட (பிரம்மா) ஞானம் அளிப்பவர் அந்த பரமபிதா பரமாத்மா ஞானக் கடல் ஆவார்.குழந்தைகளே ! ஒரு பாபாவை நினைவு செய்யுங்கள், என்று பாபா கூறுகிறார். மேலும் மிகவுமே இனிமையானவர் ஆக வேண்டும். சிவபாபா எவ்வளவு இனிமையானவராக இருக்கிறார். அன்புடன் அனைவருக்கும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். பாபா அன்பின் கடல் ஆவார். எனவே அவசியம் அன்பு தான் காட்டுவார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, யாருக்குமே மனம், சொல், செயலால் துக்கம் கொடுக்காதீர்கள் என்று தந்தை கூறுகிறார். உங்களுக்கு யாரிடமாவது பகைமை இருந்தாலும் சரி, அப்பொழுது கூட உங்களுடைய புத்தியில் துக்கம் கொடுக்கும் எண்ணம் வரக்கூடாது. அனைவருக்கும் சுகத்தினுடைய விஷயமே கூற வேண்டும். உள்ளுக்குள் யார் மீதும் வெறுப்பு வைக்கக் கூடாது. பாருங்கள் அந்த சங்கராச்சாரியார் ஆகியோரை எவ்வளவு பெரிய பெரிய வெள்ளி சிம்மாசனத்தில் அமர்த்துகிறார்கள். இங்கு உங்களை சோழியிலிருந்து வைரம் போல ஆக்கிக் கொண்டிருக்கும் சிவபாபாவிற்கு வைரங்களின் சிம்மாசனம் இருக்க வேண்டும். ஆனால் நான் தூய்மையற்ற (பதீதமான) சரீரம் மற்றும் பதீதமான உடலில் வருகிறேன் என்று சிவபாபா கூறுகிறார். பாருங்கள் பாபா எப்பேர்ப்பட்ட நாற்காலி எடுத்திருக்கிறார். தான் இருப்பதற்காக எதையுமே கேட்பதில்லை. எங்கு வேண்டுமானாலும் இருத்துங்கள். மடியில் கர்த்தரைப் பார்த்தோம் என்று பாடுகிறார்கள். பகவான் வந்து (இப்போது) பழைய மடியில் அமர்ந்துள்ளார். இப்பொழுது தந்தை தங்க யுக உலகிற்கு அதிபதியாக ஆக்க வந்துள்ளார். எனக்கு இந்த பதீத உலகத்தில் 3 அடி நிலம் கூட கிடைப்பதில்லை என்று கூறுகிறார். உலகத்திற்கு அதிபதியாக கூட நீங்கள் தான் ஆகிறீர்கள். எனக்கு நாடகத்தில் பாகமே இப்படி இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் கூட நான் சுகம் அளிக்க வேண்டி உள்ளது. மாயை மிகவுமே துக்கமடையச் செய்கிறது. தந்தை துக்கத்திலிருந்துவிடுவித்து சாந்திதாமம் மற்றும் சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். இந்த நாடகத்தையே யாரும் அறியாமல் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஒன்று இருப்பது பக்தியின் பகட்டு, மற்றொன்று மாயையின் பகட்டு. விஞ்ஞானத்தினால் பாருங்கள் என்னென்னவெல்லாம் அமைத்து விட்டுள்ளார்கள். நாம் சொர்க்கத்தில் அமர்ந்துள்ளோம் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். இது விஞ்ஞானத்தின் பகட்டு ஆகும் என்று தந்தை கூறுகிறார். இவை எல்லாமே போன மாதிரியே தான். இங்கு இருக்கும் இத்தனை எல்லா பெரிய பெரிய வீடுகள் ஆகியவை எல்லாமே விழுந்து விடும். பிறகு இந்த விஞ்ஞானம் சத்யுகத்தில் உங்களுக்கு வசதியாக உதவப் போகிறது. இந்த விஞ்ஞானத்தினால் தான் விநாசம் ஆகப் போகிறது. பிறகு இதன் மூலமாகவே நிறைய சுகத்தை அங்கு அனுபவிப்பீர்கள். இது நாடகம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆக வேண்டும். மம்மா பாபா ஒரு பொழுதும் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. குழந்தைகளே ! ஒரு பொழுதும் தங்களுக்குள் சண்டையிடாதீர்கள் என்று புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். எங்குமே கூட தாய் தந்தையின் மதிப்பை இழக்குமாறு செய்யாதீர்கள். இந்த உலகீய ஸ்தூல தேகத்தின் மீதுள்ள பற்றை நீக்குங்கள். ஒரு பாபாவை நினைவு செய்யுங்கள். எல்லாமே முடியப் போகின்ற பொருட்கள் ஆகும். இப்பொழுது நாம் திரும்பிச் செல்ல வேண்டும். சேவையில் பாபாவிற்கு உதவி செய்ய வேண்டும். உண்மையிலும் உண்மையான மீட்பு படை நீங்கள் ஆவீர்கள். இறை சேவகர்கள் ஆவீர்கள். உலகத்தின் மூழ்கி இருக்கும் படகை நீங்கள் கரையேற்றுகிறீர்கள். இந்த சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதிகாலை 3-4 மணிக்கு எழுந்து சிந்தனை செய்தீர்கள் என்றால், நிறைய குஷி இருக்கும். மேலும் பக்குவமானவர் ஆகி விடுவீர்கள். ரிவைஸ் செய்யவில்லை என்றால் மாயை மறக்க வைத்து விடும். இன்றைக்கு பாபா என்ன புரிய வைத்தார் என்பதை மனனம் செய்யுங்கள். தனிமையில் அமர்ந்து ஞான மனனம் செய்ய வேண்டும். இங்கு கூட தனிமை நன்றாக உள்ளது. நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. மனம், சொல், செயலால் யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது. யாருடைய விஷயத்தையும் மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது. தந்தைக்குச் சமானமாக அன்புக் கடல் ஆக வேண்டும்.2. தனிமையில் அமர்ந்து ஞான மனனம் செய்ய வேண்டும். மனனம் செய்து பிறகு அன்புடன் புரிய வைக்க வேண்டும். பாபாவின் சேவையில் உதவி செய்பவர் ஆக வேண்டும்.வரதானம்:

சிநேகத்தின் மூலம் பறப்பதன் மூலமாக சமீப நிலையை அனுபவம் செய்யும் பாஸ் வித் ஆனர் ஆவீர்களாக !சிநேகத்தின் சக்தியினால் அனைத்து குழந்தைகளும் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள். சிநேகத்தின் பறத்தல் உடலாலே, மனதினாலே அல்லது இதயத்தினாலே தந்தைக்கு சமீபத்தில் எடுத்து வருகிறது. ஞானம், யோகம், தாரணையில் அவரவர் சக்திக்கேற்ப வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். ஆனால் சிநேகத்தில் ஒவ்வொரு வரும் முதல் நம்பரில் உள்ளார்கள். சிநேகத்தில் எல்லோருமே பாஸ் ஆவார்கள். சிநேகத்தின் பொருளே பாஸ் அருகாமையில் இருத்தல். மேலும் பாஸ் - தேர்ச்சி பெறுதல் அல்லது ஒவ்வொரு நிலைமையையும் சுலபமாக பாஸ் கடந்து சென்று விடுவது. இது போல பாஸ் அருகில் இருப்பவர்களே பாஸ் வித் ஆனர் ஆகிறார்கள்.சுலோகன்:

மாயை மற்றும் இயற்கையின் புயல்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் இதய சிம்மாசனத்தில் அமருபவர் ஆகி விடுங்கள்.***OM SHANTI***