BK Murli 26 May 2017 Tamil

BK Murli 26 May 2017 Tamil

26.05.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களது அனைத்து தூய்மையான விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக தந்தை வந்திருக்கின்றார். இராவணன் அசுத்த விருப்பங்களை நிறைவேற்றுகிறது, தந்தை தூய விருப்பங்களை நிறைவேற்றுகின்றார்.கேள்வி:

எந்த குழந்தைகள் ஸ்ரீமத்தை அவமதிக்கிறார்களோ அவர்களது கடைசி நிலை எப்படி இருக்கும்?பதில்:

ஸ்ரீமத்தை அவமதிப்பவர்களை மாயை என்ற பூதம் கடைசியில் இராமன் துணையாக இருக்கின்றார் ....... என்று கூறி வீட்டிற்கு அழைத்துச் செல்லும். பிறகு அதிக, கடுமையான தண்டனை அடைய வேண்டியிருக்கும். ஸ்ரீமத் படி நடக்கவில்லையெனில் இறந்து விடுவீர்கள். தர்மராஜர் முழு கணக்கையும் பார்ப்பார், அதனால் தான் தந்தை நல்ல அறிவுரைகளைக் கொடுக்கின்றார், குழந்தைகளே! மாயையின் கெட்ட வழியிலிருந்து பாதுகாப்பாக இருங்கள். தந்தையினுடையவராகி ஏதாவது பாவ காரியம் செய்து பிறகு 100 மடங்கு தண்டனை அடையமளவிற்கு இருக்கக் கூடாது. ஸ்ரீமத் படி நடக்காமல் இருப்பது, படிப்பை விட்டு விடுவது இவை தானே தன் மீதே சாபம் கொடுப்பதாகும், கருணையற்று இருப்பதாகும்.பாட்டு:

ஓம் நமோ சிவாய .......ஓம்சாந்தி.

பரம்பிதா பரமாத்மாவின் இந்த மகிமையை பக்தி மார்க்கத்தினர் பாடுகின்றனர். ஹே பகவான், ஹே சிவபாபா என்றும் கூறுகின்றனர். இதை கூறுவது யார்? ஆத்மா தனது தந்தையை நினைவு செய்கிறது. ஏனெனில் நமக்கு லௌகீக தந்தையும் இருக்கிறார், இவர் பரலௌகீகத் தந்தை, சிவபாபா என்பதை ஆத்மா அறிந்திருக்கிறது. அவர் வருவதே பாரதத்தில் தான் மேலும் ஒரே ஒரு முறை தான் அவதாரம் எடுக்கின்றார். ஹே பதீத பாவனனே! தூய்மை இல்லாத, கீழானவர்களை உயர்ந்த, தூய்மையானவர்களாக ஆக்குவதற்கு வாருங்கள் என்று பாடவும் செய்கின்றனர். ஆனால் அனைவரும் தங்களை தூய்மையற்ற, கீழானவர் என்பதை புரிந்து கொள்வது கிடையாது. அனைவரும் (அதிர்ஷ்டம்) ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. ஒவ்வொருவரின் பதவியும் தனித்தனியானது. ஒவ்வொருவரின் கர்ம கணக்கு தனிப்பட்டது, ஒருவருடையது போல் மற்றவருக்கு இருக்காது. தந்தை வந்து புரிய வைக்கின்றார் - நீங்கள் தந்தையை அறியாத காரணத்தினால் இந்த அளவிற்கு அநாதைகளாக, அசுத்தமாக ஆகிவிட்டீர்கள். ஹே பதீத பாவன், அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் நீங்கள் என்று கூறவும் செய்கின்றனர். அப்படியானால் கீதை அல்லது கங்கை எப்படி பதீத பாவன் (தூய்மைப் படுத்துவதாக) ஆக முடியும்? உங்களை இந்த அளவிற்கு புத்தியற்றவர்களாக ஆக்கியது யார்? இந்த ஐந்து விகாரங்கள் என்று இராவணன். இப்போது அனைவரும் இராவண இராஜ்யத்தில் அதாவது சோகவனத்தில் இருக்கின்றனர். தலைமையாக இருப்பவர்களுக்கு அதிக கவலை இருக்கிறது. அனைவரும் துக்கத்தில் இருக்கின்றனர், அதனால் தான் ஹே பாபா, நீங்கள் வாருங்கள், எம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அழைக்கின்றனர். சதா நோயற்றவர்களாக, நீண்ட ஆயுள் உடையவர்களாக, அமைதி நிறைந்தவர்களாக, செல்வந்தவர்களாக ஆக்குங்கள். தந்தை சுகம், சாந்தியின் கடல் அல்லவா! மனிதர்களுக்கு இந்த மகிமை செய்ய முடியாது. மனிதர்கள் தன்னை சிவோஹம் (நானே சிவன்) என்று கூறிக் கொள்ளலாம், ஆனால் அசுத்தமாக (பதீதமாக) இருக்கின்றனர். நீங்கள் தந்தையை சர்வவியாபி என்று கூறுகிறீர்கள், அதனால் தான் எந்த விசயமும் புத்தியில் பதிவது கிடையாது என்ற தந்தை புரிய வைக்கின்றார். பக்தியும் செய்ய முடியாது. ஏனெனில் பக்தர்கள் பகவானை நினைவு செய்கின்றனர். பகவான் ஒரே ஒருவர், பக்தர்கள் பலர் இருக்கின்றனர். எப்போது அனைவரும் பகவானாகிய என்னை கல், முள்ளில் எல்லாம் இருப்பதாகக் கூறிவிட்டார்களோ அப்போது நான் வர வேண்டியிருக்கிறது. பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தூய்மையான உலகை ஸ்தாபனை செய்விக்கிறேன். இவர்கள் பிரஜாபிதா பிரம்மாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், எத்தனையோ குழந்தைகள் இருக்கின்றனர்! மேலும் விருத்தி (அதிகம்) அடைவார்கள். யார் பிராமணர்களாக ஆவார்களோ அவர்கள் தான் பிறகு தேவதைகளாக ஆவார்கள். முன்பு நீங்கள் சூத்திரர்களாக இருந்தீர்கள். பிறகு பிரம்மாவின் வாய்வழி பிராமணர்களாக ஆகி, பிறகு தேவதை, சத்திரியர்களாக ஆவீர்கள். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். இதை தந்தை தான் புரிய வைக்கின்றார். இது மனித சிருஷ்டியாகும், சூட்சுமவனத்தில் இருப்பவர்கள் ஃபரிஸ்தாக்கள். அங்கு எந்த மரமும் கிடையாது. மனித சிருஷ்டிக்கான மரம் இங்கு இருக்கிறது. ஆக தந்தை வந்து இந்த ஞான அமிர்த கலசத்தை தாய்மார்களின் மீது வைக்கின்றார். உண்மையில் அமிர்தம் எதுவும் கிடையாது. இது ஞானமாகும். தந்தை வந்து எளிய இராஜயோகத்தின் கல்வி கொடுக்கின்றார். நான் நிராகாராக இருக்கிறேன், நம்பர் ஒன் மனிதனின் உடலில் பிரவேசிக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். நான் எப்போது பிரம்மாவின் உடலில் பிரவேசம் ஆகிறேனோ அப்போது தான் பிராமண குலம் ஏற்படும் என்று சுயம் கூறுகின்றார். பிரம்மா இங்கு தான் தேவை. அந்த சூட்சுமவதனத்தில் இருப்பவர் அவ்யக்த பிரம்மா. இவரை பரிஸ்தா ஆக்குவதற்காக நான் இந்த வியக்தத்தில் (சாகாரத்தில்) பிரவேசிக்கின்றேன். நீங்களும் கடைசியில் பரிஸ்தா ஆகிவிடுவீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் இங்கேயே தூய்மையாக ஆக வேண்டும். பிறகு தூய்மையான உலகிற்கு சென்று பிறப்பு எடுப்பீர்கள். நீங்கள் இருவரும் இம்சை செய்வது கிடையாது. காமத்தில் செல்வது அனைத்தையும் விட பெரிய இம்சையாகும். இதன் மூலம் மனிதர்கள் முதல், இடை, கடை துக்கம் அடைகின்றனர். துவாபரத்திலிருந்து காம விகாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.. அப்போதிலிருந்தே வீழ்ச்சியடைய ஆரம்பித்து விட்டீர்கள். மனிதர்களிடத்தில் பக்தியின் ஞானம் இருக்கிறது. வேத சாஸ்திரம் படிப்பது, பக்தி செய்வது. ஞானம், பக்தி, வைராக்கியம் என்று பாடவும் செய்கின்றனர். பக்திக்குப் பிறகு தான் பாபா முழு உலகின் மீது வைராக்கியம் ஏற்படுத்துகின்றார். ஏனெனில் இந்த அசுத்தமான உலகம் விநாசம் ஆக வேண்டும். ஆகையால் தேக சகிதமாக தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் மறந்து விடுங்கள். என் ஒருவனுடன் புத்தியோகத்தை ஈடுபடுத்துங்கள். கடைசி நேரத்தில் வேறு எந்த நினைவும் வராத அளவிற்கு பயிற்சி இருக்க வேண்டும். இந்த பழைய உலகத்தை தியாகம் செய்விக்கின்றார். எல்லையற்ற சந்நியாசம் எல்லையற்ற தந்தை செய்விக்கின்றார். அனைவரும் மறுபிறவி எடுத்தே ஆக வேண்டும், இல்லையெனில் எப்படி மனித ஆத்மாக்களின் பெருக்கம் ஏற்படும்? எல்லைக்குட்பட்ட சந்நியாசிகளிடமிருந்து தூய்மைக்கான பலம் பாரதவாசிகளுக்கு கிடைக்கிறது. பாரதம் போன்ற தூய்மையான கண்டம் வேறு எதுவும் கிடையாது. தந்தையின் பிறப்பிடம் கூட இதுவாகும். ஆனால் தந்தை எப்படி அவதாரம் எடுக்கின்றார்? என்ன செய்கின்றார்? போன்ற எதையும் மனிதர்கள் அறியவில்லை. பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என்றும் கூறுகின்றனர். பகல் என்றால் சொர்க்கம், இரவு என்றால் நரகம் என்பதை அறியவில்லை. பிரம்மாவின் இரவு என்றால் குழந்தைகளாகிய உங்களது இரவு. பிரம்மாவின் பகல் என்றால் குழந்தைகளாகிய உங்களுக்கும் பகலாகி விடுகிறது. இராவண இராஜ்யத்தில் அனைவரும் துர்கதி அடைந்திருக்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் மூலம் சத்கதியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்த நேரத்தில் ஈஸ்வரிய வம்சத்தினர்களாக இருக்கிறீர்கள். பரம்பிதா பரமாத்மாவின் குழந்தையாக பிரம்மாவும், நீங்கள் அவர் மூலம் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள். எனவே சிவபாபாவிற்கு பேரன்களாக ஆகிவிடுகிறீர்கள். இந்த பிரம்மா குழந்தையும் கேட்கிறார் எனில் பேரன் பேத்திகளாகிய நீங்களும் கேட்கிறீர்கள். இப்போது மீண்டும் இந்த ஞானம் மறைந்து போய் விடும். இந்த இராஜயோகத்தை தந்தை வந்து தான் கற்றுக் கொடுக்கின்றார். சந்நியாசிகளின் பாகமே தனிப்பட்டது, மேலும் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தினர்களாகிய உங்களது பாகமும் தனிப்பட்டது. அங்கு தேவதைகளின் ஆயுளும் அதிகமாக இருக்கும். அகால மரணம் ஏற்படாது. அங்கு தேவதைகள் ஆத்ம அபிமானிகளாக இருப்பர். பரமாத்ம அபிமானிகளாக இருக்க மாட்ôர்கள். பிறகு மாயை பிரவேசமாவாதால் தேக அபிமானியாக ஆகிவிடுகிறீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஆத்ம அபிமானியாகவும் இருக்கிறீர்கள், பரமாத்ம அபிமானியாகவும் இருக்கிறீர்கள். நாம் பரமாத்மாவின் குழந்தைகள் என்பதை இந்த நேரத்தில் நீங்கள் அறிவீர்கள், பரமாத்மாவின் தொழிலை அறிவீர்கள். இது தூய அபிமானமாகும். தன்னை சிவோஹம் அல்லது பரமாத்மா என்று கூறுவது அசத்த அபிமானமாகும். நீங்கள் இப்போது பரமாத்மாவின் மூலம் தன்னையும், பரமாத்மாவையும் அறிந்து கொண்டீர்கள். பரம்பிதா பரமாத்மா கல்ப கல்பத்திற்கு வருகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்திலும் அல்ப கால சுகத்தை அவர் கொடுக்கின்றார். மற்றபடி அந்த சிலை ஜடமானது. நீங்கள் எந்த மன ஆசையுடன் பூஜை செய்கிறீர்களோ நான் உங்களது அனைத்து மன ஆசைகளையும் நிறைவேற்றுகிறேன். அசுத்த ஆசைகளை இராவணன் நிறைவேற்றுகிறது. பலர் மாயா ஜாலங்களை கற்றுக் கொள்கின்றனர். அது இராவணனின் வழியாகும். நானோ சுகம் கொடுக்கும் வள்ளலாக இருக்கிறேன். நான் யாருக்கும் துக்கம் கொடுப்பது கிடையாது. துக்கம், சுகம் ஈஸ்வரன் தான் கொடுக்கின்றார் என்று கூறுகின்றனர். இதுவும் என் மீது களங்கம் ஏற்படுத்துவதாகும். ஒருவேளை அவ்வாறு இருந்தால் பரமாத்மாவே! கருணை காட்டுங்கள், மன்னித்து விடுங்கள் என்று ஏன் அழைக்கிறீர்கள்? தர்மராஜ் மூலம் அதிக தண்டனை கொடுப்பார் என்பதை அறிவீர்கள்.குழந்தைகளே! பக்தி மார்கத்தின் இந்த சாஸ்திரம் போன்றவைகளில் எந்த சாரமும் கிடையாது என்பதை தந்தை புரிய வைக்கின்றார். இப்போது உங்களுக்கு பக்தி பிரியமானதாக கிடையாது. ஹே பகவான் என்றும் கூறுவது கிடையாது. ஆத்மா உள்ளத்திற்குள் நினைவு செய்கிறது. அவ்வளவு தான், இது தான் நினைவாகும். ஆத்மாக்களிடத்தில் நிராகார தந்தை உரையாடுகின்றார். ஆத்மா கேட்கிறது. ஒருவேளை சர்வவியாபி என்று கூறினால் அனைவரும் பரமாத்மாவாக ஆகிவிடுவர். எவ்வளவு கல்புத்தியுடையவர்களாக ஆகிவிட்டனர் என்று தந்தை கூறுகின்றார். குரு சாபம் கொடுத்து விடக் கூடாது என்ற பயம் மனிதர்களுக்கு அதிகம் இருக்கிறது. தந்தை சுகம் கொடுக்கும் வள்ளல் ஆவார். சாபம் அல்லது கருணையற்ற நிலை தந்தை ஒருபோதும் குழந்தைகளின் மீது காட்டுவது கிடையாது. குழந்தைகள் ஸ்ரீமத் படி நடக்கவில்லை, படிக்கவில்லை எனில் தன் மீது தானே சாபமிட்டுக் கொள்கின்றனர். தந்தையாகிய என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். சத்யுகம், திரேதாவில் பக்தி கிடையாது. இப்போது இரவாகும், மனிதர்கள் ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றனர், அதனால் தான் சத்குரு இல்லாததால் காரிருள் என்று கூறப்படுகிறது. சத்குரு வந்து தான் முழு சக்கரத்தின் ரகசியத்தையும் புரிய வைக்கின்றார், நீங்கள் தேவதைகளாக இருந்தீர்கள், பிறகு சத்ரியர்களாக ஆனீர்கள், பிறகு வைஷ்யர், சூத்ரர்களாக ஆனீர்கள். இவ்வாறு 84 பிறவிகள் முடித்து விட்டீர்கள். 8 பிறவிகள் சத்யுகத்தில், 12 பிறவிகள் திரேதாவில், பிறகு 63 பிறவிகள் துவாபர, கலியுகத்தில். சக்கரம் சுற்றியே ஆக வேண்டும். இந்த விசயங்களை மனிதர்கள் அறியவில்லை. இதே பாரதம் உலகிற்கு எஜமானர்களாக இருந்தது, வேறு எந்த கண்டமும் கிடையாது. எப்போது பொய்யான கண்டம் ஆரம்பமானதோ அப்போது மற்ற மற்ற கண்டங்களும் ஏற்பட ஆரம்பித்தது. இப்போது பாருங்கள் எவ்வளவு சண்டை, யுத்தம் நடைபெறுகிறது! இதுவோ அநாதைகளின் உலகமாகும், தந்தையை அறியவில்லை. ஹே பரமாத்மா ....... என்று கதறிக் கொண்டிருக்கின்றனர். நான் தூய்மை இல்லாத உலகை தூய்மை ஆக்குவதற்காக ஒரே ஒரு முறை வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார் என்று நினைத்து பாபுஜிக்கு (காந்திக்கு) அதிக செல்வம் கொடுத்தனர். ஆனால் அந்த பணத்தை ஒருபோதும் தனது காரியத்திற்குப் பயன்படுத்தவில்லை. இருப்பினும் இராம இராஜ்யம் ஏற்படவில்லை. இவர் சிவபாபா, வள்ளல் அல்லவா! விநாசம் ஆகப்போகிறது, அதற்குள் நீங்கள் செல்வத்தை வெற்றியுடையதாக ஆக்குங்கள் என்று கூறுகின்றார், அவ்வளவு தான். இது போன்ற சென்டர் திறங்கள். ஒரு தந்தையிடம் வந்து சொர்க்க ஆஸ்தியை விநாடியில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று போர்டு வையுங்கள். என் நினைவின் மூலம் தான் நீங்கள் தூய்மை ஆவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். உங்களது புத்தியில் இந்த சக்கரம் சுற்ற வேண்டும். பிராமணர்கள் தான் யக்ஞ பாதுகாவலர்களாக ஆகின்றனர். இது ருத்ர ஞான யக்ஞமாகும், கிருஷ்ண யக்ஞம் கிடையாது. சத்யுகத்தில் யக்ஞம் இருக்காது. இது ஞான யக்ஞமாகும். மற்ற அனைத்தும் பக்தியின் யக்ஞமாகும். பல விதமான சாஸ்திரங்களை யக்ஞத்தில் வைக்கின்றனர். பலவகையான இனிப்பு பதாôத்தங்களை பூஜையில் ஒன்றாக வைப்பது போல் ஆகிவிடுகிறது. ,ஆகையால் அதை ஞான யக்ஞம் என்று கூறுவது கிடையாது. நான் ருத்ர ஞான யக்ஞத்தை படைத்திருக்கிறேன் என்று பாபா கூறுகின்றார். யார் எனது வழிப்படி நடப்பார்களோ அவர்களுக்கு உலக இராஜ்யம் என்ற உயர்ந்த பரிசு கிடைக்கும். குழந்தைகளாகிய உங்களுக்கு முக்தி, ஜீவன் முக்திக்கான பரிசு கொடுக்கிறேன். மனிதர்கள் 84 இலட்சம் பிறவிகள் எடுப்பதாகவும் என்னை அணு அணுவில் இருப்பதாகவும் கூறி விட்டனர், இருப்பினும் நான் உபகாரம் செய்யும் சேவாதாரியாக இருக்கிறேன். நீங்கள் இராவணனின் வழியில் எனக்கு நிந்தனை செய்து வந்தீர்கள். இவ்வாறும் நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு அடியும் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தந்தை நல்ல வழி கொடுப்பார், மாயை தவறான வழி கொடுக்கிறது, ஆகையால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். என்னுடையவராகி ஏதாவது பாவ காரியம் செய்தால் நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். யோக பலத்தின் மூலம் சரீரமும் தூய்மையானதாக கிடைக்கும். ஆத்மாவில் எதுவும் ஒட்டாது (நிர்லேப்) என்று சந்நியாசிகள் கூறி விட்டனர். ஆனால் சரீரம் தூய்மை இல்லாமல் இருக்கிறது, அதனால் தான் கங்கையில் குளிக்கின்றனர். அரே, ஆத்மா உண்மையான தங்கமாக இல்லையெனில் பிறகு நகை எப்படி தங்கமாக ஆகும்! இந்த நேரத்தில் 5 தத்துங்களும் தமோ பிரதானமாக இருக்கிறது. உங்களது இந்த ஆன்மீக அரசாங்கம் உயர்ந்ததிலும் உயர்ந்தது ஆகும், ஆனால் சேவை செய்வதற்கு உங்களுக்கு 3 அடி இடம் கூட கிடைப்பது கிடையாது, இருப்பினும் உங்களை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகிறேன். அப்படிப்பட்ட உலக இராஜ்யத்தை கொடுக்கிறேன், அதாவது அங்கு யாரும் சண்டை சச்சரவு செய்ய முடியாது. வானம், கடல் போன்ற அனைத்திற்கும் எஜமானர்களாக ஆகிவிடுகிறீர்கள். எந்த எல்லையும் இருக்காது. இப்போது முற்றிலும் ஏழைகளாக ஆகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் எனில் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். ஸ்ரீமத் படி நடக்கவில்லையெனில் இறந்துவிட்டது போலாகி விடுவீர்கள். மாயையின் பூதம் உங்களை இராமர், இராமர் துணையாக இருக்கிறார் என்று கூறி வீட்டிற்கு அழைத்துச் செல்லும். பிறகு கடுமையான தண்டனை அடைவீர்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) யக்ஞ சேவையை அன்போடு செய்து, ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் படி நடந்து தந்தையிடமிருந்து மனதிற்கு பிடித்தமான பலன் அதாவது உலக இராஜ்யத்தை அடைய வேண்டும்.2) விநாசம் ஆகியே தீர வேண்டும், ஆகையால் தனது அனைத்தையும் பயனுடையதாக ஆக்க வேண்டும். செல்வம் இருக்கிறது எனில் சென்டர் திறந்து பலருக்கு நன்மை செய்வதற்கு நிமித்தமாக (பொருப்பானவர்) ஆக வேண்டும்.வரதானம்:

பரமாத்மாவின் அன்பினால் உலக கவர்ச்சியிலிருந்து மேலே பறக்கக் கூடிய மாயா புரூப் ஆகுக.பரமாத்மாவின் அன்பானது உலக கவர்ச்சியிலிருந்து மேலே பறந்து செல்வதற்கான ஆதாரமாகும். யார் உலகம் அதாவது தேக அபிமானத்தின் கவர்ச்சியிலிருந்து மேலே (விடுபட்டு) இருக்கிறார்களோ அவர்களை மாயை தன் பக்கம் கவர்ச்சிக்க முடியாது. யார் எவ்வளவு தான் கவர்ச்சிக்கும் ரூபத்தில் இருந்தாலும் பறக்கும் கலையில் உள்ள உங்களிடம் மாயையின் கவர்ச்சி ஒன்றும் செய்ய (நெருங்க) முடியாது. எவ்வாறு ராக்கெட் உலக கவர்ச்சியிலிருந்து விலகி விடுகிறது! அவ்வாறு நீங்களும் விலகி சென்று விடுங்கள், இதற்கான விதி, விடுபட்ட நிலையில் இருப்பது அல்லது ஒரு தந்தையின் அன்பில் கலந்து விடுவதாகும். இதன் மூலம் மாயா புரூஃப் ஆகிவிடுவீர்கள்.சுலோகன்:

கடின சூழ்நிலைகள் தன்னை ஏற்ற, இறக்கம் (நிலையில்லாமல்) செய்ய முடியாத அளவிற்கு சுய ஸ்திதியை சக்திசாலியாக ஆக்கிக் கொள்ளுங்கள்.***OM SHANTI***