BK Murli 17 June 2017 Tamil

BK Murli 17 June 2017 Tamil

17.06.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தையிடம் கொடுத்த வாக்குறுதின்படி முழுமையாக நடக்க வேண்டும். பூமியே பிளந்தாலும் தர்மத்தை விடக் கூடாது - இதுவே அனைத்திலும் உயர்வான வேண்டும். வாக்குறுதியை மறந்து, தலைகீழான காரியம் செய்தால் பதிவேடு (ரெஜிஸ்டர்) கெட்டு விடும்.கேள்வி:

யாத்திரையில் நாம் விரைவாகச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதன் அறிகுறி அல்லது அடையாளம் என்ன?பதில்:

யாத்திரையில் விரைவாகச் சென்று கொண்டிருந்தால் புத்தியில் சுய தரிசனச் சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கும். எப்போதும் தந்தை மற்றும் ஆஸ்தியைத் தவிர வேறு எந்த நினைவும் இருக்காது. சரியான நினைவு என்றாலே இங்குள்ள எதுவும் தென்படக் கூடாது. பார்த்துக் கொண்டிருந்தாலும் பார்க்காதது போல ஆகும். அப்படிப்பட்டவர்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், இவையனைத்தும் மண்ணில் மறைய வேண்டும் என்று புரிந்து கொள்வார்கள். இந்த மாளிகை முதலானவை அழிய வேண்டும். இவை எதுவும் நம்முடைய இராஜ்யத்தில் இருக்கவில்லை. இனியும் இருக்காது.பாடல்:

என்னுடைய அதிர்ஷ்டத்தை நோக்கி அழைத்துச் செல்லும் படகோட்டியே. . .ஓம் சாந்தி.

உண்மையில் இந்தப் பாடலின் அர்த்தம் தவறானதாகும். குழந்தைகளே, நான் உங்களை அழைத்துச் செல்ல வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். எங்கே அழைத்துச் செல்வார்? முக்தி மற்றும் ஜீவன் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வார். எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு உயர்ந்த பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எங்கு விரும்புகிறாரோ அங்கே அழைத்துச் செல்வார்.... என்பதல்ல. முயற்சி செய்ய வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் நாடகத்தின்படி அனைத்து முயற்சியாளர்களும் ஒரே மாதிரி ஆவதில்லை. தம் மீது குழந்தைகள் தாமே இரக்கம் காட்ட வேண்டும். ஞானக் கடல் ஞானம் மற்றும் யோகத்தைக் கற்றுக்கொடுக்க வந்துள்ளார். இது அவருடைய கருணை, ஆசிரியர் படிக்க வைக்கிறார். யோகி யோகம் கற்றுக் கொடுக்கிறார். மற்றபடி, அதிகமாகவோ, குறைவாகவோ கற்றுக் கொள்வது அவரவரைப் பொருத்தது ஆகும். நாம் அனைவரும் உண்மையானவருடன் அமர்ந்திருக்கிறோம், பொய்யானவருடன் அல்ல என்று நீங்கள் அறிவீர்கள். சத்தியமானவரின் தொடர்பு ஒருவரோடுதான் ஆகும். ஏனென்றால் சத்தியமானவர் ஒருவரே ஆவார். சத்யுகத்தின் ஸ்தாபனையைக் கூட அவர்தான் செய்கிறார், மற்றும் சத்யுகத்தில் அழைத்துச் செல்வதற்காக முயற்சியும் செய்விக்கிறார். உண்மையே பேச வேண்டும், உண்மையாக நடக்க வேண்டும், அப்போதுதான் உண்மையான கண்டத்திற்குச் செல்ல முடியும் என்று உண்மையைக் குறித்து ஒரு சுலோகனும் உள்ளது. சத் ஸ்ரீ அகால் என்று சீக்கியர்களும் கூட கூறுகின்றனர். அந்த சத்ய தந்தை ஒருவரே அனைவரையும் விட உயர்வானவர் ஆவார். அகால மூர்த்தி ஆவார். அவரை காலன் ஒரு போதும் அழிப்பதில்லை. மனிதர் களையோ அடிக்கடி காலன் அழிக்கிறான். ஆக, குழந்தைகளாகிய நீங்கள் உண்மையான சத்சங்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். பொய்யான கண்டமாக உள்ள பாரதத்தை உண்மையான கண்டமாக ஆக்கக் கூடியவர் ஒரு தந்தையே ஆவார். அனைத்து குழந்தைகளும் தேவி தேவதைகள் ஆவார்கள். இங்கிருந்து குழந்தைகள் புண்ணிய ஆத்மா ஆனதினால் ஆஸ்தியை எடுத்துச் செல்கின்றனர். இங்கேயோ பொய்யே பொய்தான் உள்ளது. அரசாங்கம் எடுக்கக் கூடிய சத்யப் பிரமாணமும் பொய்யானதே ஆகும். நாங்கள் இறைவன் மீது சத்தியம் உண்மையாகக் கூறுகிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் இதைச் சொல்லும்போது மனிதர்களுக்கு பயம் இருப்பதில்லை. அதைவிட நாங்கள் எங்கள் குழந்தையின் மீது சத்தியமாக கூறுகிறோம் என்று கூற வேண்டும். அப்போது குழந்தைக்கு கஷ்டம் உண்டாகும் என்று தயங்குவார்கள். ஏனென்றால் ஈஸ்வரன் நமக்கு குழந்தைகள் கொடுக்கிறார் என்று புரிந்து கொள்கின்றனர். எனவே இறைவனின் பெயரால் குழந்தையின் மீது ஆணையிட்டால் குழந்தை இறந்து விடுமோ, தெரியவில்லையே என்று இதில் தயங்குவார்கள். மனைவி, கணவர் பெயரால் சத்யம் செய்யமாட்டார். கணவர்கள் தம் மனைவியின் பெயரால் விரைவில் சத்யம் செய்து விடுவார்கள். ஒரு மனைவி போய்விட்டால் மற்றொருவரை அடைந்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள். மனிதர்கள் செய்யக்கூடிய சத்தியம் அனைத்தும் பொய்யே ஆகும். முதலில் இறைவனை தந்தை என்று அறிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், தந்தை என்ற போதை ஏறாது. சத் ஸ்ரீ அகாலன் (மரணமே இல்லாதவர்) என்று அந்த தந்தை அழைக்கப்படுகிறார். இதில் சத் என்று அழைக்கப்படுபவரின் பெயர் சிவன் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ருத்ரன் என்று மட்டும் கூறினீர்கள் என்றால் குழப்பம் அடைவார்கள். ஆனால் புரிய வைப்பதற்காகக் கூற வேண்டி இருக்கும். கீதையிலும் கூட ருத்ர ஞான யக்ஞம் என்று உள்ளது. அதிலிருந்து வினாச ஜுவாலை வெளிப்பட்டது. அதுவும் கூட இங்கே உள்ள விசயமே ஆகும். யக்ஞத்தில் கிருஷ்ணருடைய பெயர் இல்லை. இரண்டையும் ஒன்றாக கலந்து விட்டார்கள். சத்யுக திரேதாயுகத்தில்ம் யக்ஞம் எதுவும் நடப்பதில்லை என்று புரிய வைக்கப்பட்டுள்ளது. ஒரு ஞானத்தினுடைய யக்ஞம் தான் நடக்கிறது. மற்றபடி அனைத்துமே ஸ்தூலமான யக்ஞமாகும். புத்தகங்கள் படிப்பது, பூஜை செய்வது அனைத்தும் பக்தி மார்க்கமாகும். ஞானமோ ஒன்று தான், அதை சத்தியமான பரமாத்மா கொடுக்கிறார். மனிதர்கள் அனைவரும் ஈஸ்வரனைப் பற்றியும் பொய்யாகவே சொல்கின்றனர். ஆகையால் தான் பாரதம் ஏழையாகி விட்டுள்ளது. இதைப் போன்ற பெரியதிலும் பெரிய பொய் ஏதுமில்லை. இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நினைவு-மறதியின் விளையாட்டு என்று ஒரு பெயர் உள்ளது. அதாவது தந்தையை மறந்து போய் அலைவது, பிறகு தந்தை வந்து அலைவதிலிருந்து விடுவித்து விடுகிறார். இது நாடகத்தில் வெற்றி தோல்வியின் விளையாட்டாகும். தோல்வி அடைவதற்கு அரைகல்ப காலம் பிடிக்கிறது. அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடுகிறது. பிறகு அரைகல்ப காலம் நம்முடைய வெற்றி இருக்கும். இந்த விசயங்கள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. பெரிய பெரிய கீதா உபதேச பாடசாலைகள் இருக்கின்றன. கீதையின் பாரத வித்யா பவன் கூட உருவாக்கப்பட்டுள்ளது. கீதையின் பெயர் மிக உயர்வானது. கீதை அனைத்து சாஸ்திரங்களின் சிரோன்மணி என்று கூறப்படுகிறது. ஆனால் பெயரை மாற்றியதால் பயனற்றதாகிவிடுகிறது. கீதையின் பெயரோ மிகவும் மகிமையாகப் பேசப்படுகிறது. பாபா சொல்கிறார் - நான் தான் கீதையின் பகவான் ஆவேன், ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல, இப்போது சங்கமயுகமாகும். தந்தை படைக்கக்கூடியவர், சொர்க்கத்தைப் படைக்கும்போது தான் இராதா கிருஷ்ணர் அல்லது ஸ்ரீ நாராயணர் வந்தனர். தந்தை நம்மைத்தான் ஜெகதம்பா மற்றும் ஜெகத்பிதா மூலமாக சொர்க்கத்தின் எஜமான் ஆக்குகிறார். இராஜயோகத்தை பகவானைத் தவிர வேறு யாரும் கற்றுத் தர முடியாது. ஜெகதம்பா மிகவும் பெயர் புகழ் வாய்ந்தவர் ஆவார். கலசமும் கூட ஜெகதம்பா மீது வைக்கிறார்கள். லட்சுமி நாராயணன் அல்லது இராதா கிருஷ்ணர் இப்போது இல்லை. கிருஷ்ணருடன் ராதையும் கூட இருக்க வேண்டும். கீதையில் இராதையைப் பற்றி சிறிதும் வர்ணனை செய்யவில்லை. பாகவதத்தில் உள்ளது. இராதா கிருஷ்ணராக இருந்தவர்கள் இப்போது 84வது இறுதிப்பிறவியில் இருக்கின்றனர் என்று தந்தை கூறுகிறார். நான் அவர்களையும் அவர்களுடைய இராஜ்யத்தையும் மீண்டும் எழுப்பிக் கொண்டிருக்கிறேன். அனைவரையும் அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். இவை மிகவும் ஆழமான விசயங்களாகும். உங்களுக்குத்தான் இது தெரியும். நாம் சூரிய வம்ச சந்திரவம்சத்தைச் சேர்ந்த தெய்வீக குலத்தவர்கள் என்பதை நீங்கள் தான் அறிவீர்கள். நாம் 84 பிறவிகள் அனுபவித்தோம். இப்போது மீண்டும் நாம் சத்யுகத்திற்குச் செல்வோம். சத்யுகத்திலிருந்து தான் கணக்கு எடுப்போம் அல்லவா! 84 பிறவிகளின் சக்கரமும் கூட மிகவும் புகழ்வாய்ந்தது. நீங்கள் ஆஸ்தியை அடிக்கடி நினைவு செய்கிறீர்கள் அல்லவா! இப்போது 84 பிறவிகளின் சக்கரத்தை நினைவு செய்யுங்கள். இந்த சக்கரத்தை நினைவு செய்வது என்றால் முழு உலகத்தின் வரலாறு புவியியலை நினைவு செய்வதாகும். எந்த அளவு சுயதரிசன சக்கரம் சுற்றியபடி இருக்கிறாரோ, அந்த அளவு அவர் யாத்திரையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொள்ளுங்கள். இப்போது முட்களின் உலகமாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். தமோபிரதான மனிதர்கள் 5 விகாரங்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். நான் என்ற அகந்தையை விடுங்கள் என்று தந்தை கூறுகிறார், ஆனால் விடுவதில்லை. இவ்வளவு எல்லைக்கப்பாற்ப்பட்ட இராஜ்யம் கிடைக்கிறது என்றாலும் கூட, பார்ப்போம், யோசிப்போம் என்று கூறுகின்றனர். இந்த விகாரங்கள் அவ்வளவு பிடித்திருக்கிறதா (அன்பு அதன் மீது அவ்வளவு உள்ளதா) என்ன? அதை விடுவதற்கு யோசிப்போம் என்று கூறுகிறீர்கள். அட, இப்போது உறுதிமொழி கொடுத்தீர்கள் என்றால், தந்தையிடமிருந்து உதவி கிடைக்கும். வாக்குறுதி கொடுத்து பிறகு குலத்திற்கு களங்கம் விளைவிப்பவராக ஆகக் கூடாது என்பது மிகவும் அவசியமானதாகும். பூமியே பிளந்தாலும் தர்மத்தை விடக்கூடாது. மிகவும் கடினமான இலட்சியமாகும். தந்தையோ முழுமையாக முயற்சி செய்வார் அல்லவா! இலேசாக விட்டு விடுவதில்லை. நல்லது, ஒரு முறை மன்னிப்பார். ஒரு வேளை மீண்டும் செய்தால் இறந்து (தந்தையை விட்டு விலகியவர்களாகி) விடுவார்கள். இதில் பதிவேடு (ரெஜிஸ்டர்) கெட்டு விடும். இந்த விகாரம் விஷம் போன்றதாகும். ஞானம் அமிர்தம் போன்றது. இதன் மூலம் மனிதரிலிருந்து தேவதைகள் ஆகிறார்கள். அதுவோ கெட்ட தொடர்பாகும். சீக்கியர்கள் சத்ய ஸ்ரீ அகாலன் என்று கூறி மிகவும் ஆரவாரம் செய்கின்றனர். ஏனென்றால் சத்ய ஸ்ரீ அகாலன் அனைவரையும் முன்னேற்றினார். ஆனால் அவரை மறந்து விட்டனர். மறப்பதும் கூட நாடகத்தில் உள்ளது. ஜெயின் மதத்தைச் சார்ந்தவர்களின் சன்னியாசம் மிகவும் கடுமையானதாகும். நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்றுக் கொடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். ஆனால் தந்தை எந்த கஷ்டமும் கொடுப்பதில்லை. ஆகாய விமானத்தில் செல்லுங்கள், மோட்டார் வாகனங்களில் சுற்றித் திரியுங்கள், ஆனாலும் உண்பது-குடிப்பதில் பத்தியத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். உணவுக்கு திருஷ்டி கொடுத்து பிறகு உண்ண வேண்டும். ஆனால் குழந்தைகள் இதை மறந்து விடுகின்றனர். இதில், தந்தையை அல்லது பிரியதர்ஷனை மகிழ்ச்சியுடன் நினைவு செய்ய வேண்டும். பிரியதர்ஷனே, நாங்கள் உங்களின் நினைவில் இருந்து உங்களுடன் உணவை உண்கிறோம். உங்களுக்கோ உங்களுடைய உடலோ கிடையாது. நாங்கள் உங்களுடைய நினைவில் உணவை உண்கிறோம் மற்றும் நீங்கள் வாசனை எடுத்தபடி இருங்கள். இப்படியாக நினைவுசெய்து கொண்டே இருந்தால் பழக்கம் ஏற்பட்டுவிடும். மேலும் குஷியின் அளவு அதிகரித்தபடி இருக்கும். ஞானத்தின் தாரணையும் ஏற்பட்டபடி இருக்கும். மனதில் ஏதாவது ஆசை இருந்தது என்றால் தாரணையும் குறைவாக இருக்கும். அவர்களுடைய அம்பு நன்றாக பாயாது (பிறருக்கு அனுபவம் செய்விக்க முடியாது). தந்தையிடம் நினைவின் தொடர்பு உள்ளது என்றால் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாலும், இந்த நல்ல நல்ல மாளிகைகளும் மண்ணோடு மண்ணாகும் என்று புரிந்து கொள்வார்கள். இவை நம்முடைய இராஜ்யத்தில் இருக்கவில்லை. இப்போதோ நம்முடைய இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, அதில் இவை எதுவும் இருக்காது. புதிய உலகமாக இருக்கும். இந்த பழைய மரம் முதலான எதுவும் இருக்காது. அங்கே அனைத்து பொருட்களும் முதல் தரமானதாக இருக்கும். இவ்வளவு பிராணிகள் முதலான அனைத்தும் அழிந்து விடும். அங்கே நோய் நொடி முதலான எதுவும் இருக்காது. இவை அனைத்தும் பின்னர் வெளிப்படும். சத்யுகம் என்றாலே சொர்க்கம். இங்கோ அனைத்து பொருட்களுமே துக்கத்தைக் கொடுக்கக் கூடியவை ஆகும். இந்த சமயத்தில் அனைவருடையதும் அசுர வழியாக உள்ளது. அரசாங்கமும் விரும்புகிறது - குழந்தைகள் சஞ்சலம் அடையாதபடி படிப்பு இருக்க வேண்டும். இப்போது நிறைய சஞ்சலங்கள் (நிலையின்மை) உண்டாகிவிட்டன. தர்ணா செய்வது, உண்ணா விரதம் இருப்பது போன்ற அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன அல்லவா! இவையனைத்தையும் யார் கற்றுக் கொடுத்தது? தன்னால் கற்றுக் கொடுக்கப்பட்டதே தன் முன்னால் வருகிறது. குழந்தைகளே! அமைதியாக இருங்கள் என்று தந்தை கூறுகிறார். மிக ஒலியுடன் ஜால்ரா வாசிப்பது, கூக்குரல் போடுவது இவையனைத்தும் பக்தியின் அடையாளங்களாகும். நீங்கள் சாதனையை (தவம் செய்வது முதலானவை) பல பிறவிகளாக செய்து வந்தீர்கள். சாதனை என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் சத்கதியோ யாருக்கும் ஏற்படவில்லை. உங்களிடம் படங்கள், பிரசுரம் போன்றவை கூட இல்லாமருந்தாலும், கோவில்களில் சென்று புரிய வைக்க முடியும் - இந்த இலட்சுமி நாராயணர் முதலில் சொர்க்கத்தின் எஜமானாக இருந்தனர் அல்லவா! அவர்களுக்கு கண்டிப்பாக சொர்க்கத்தைப் படைப்பவரிடமிருந்து ஆஸ்தி கிடைத்திருக்கும். சொர்க்கத்தைப் படைக்கக்கூடியவரோ பரமபிதா பரமாத்மா ஆவார். அவர் தான் புரிய வைக்கிறார். கோயில்களைக் கட்டுபவர்களுக்கு இது தெரியாது. அவர்களுக்கு பரமபிதா பரமாத்மாவிடமிருந்து ஆஸ்தி கிடைத்தது என்று குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைப்பீர்கள். கண்டிப்பாக கலியுகத்தின் கடைசியில் தான் கிடைத்திருக்கும் அல்லவா! கீதையில் இராஜயோகத்தின் விசயம் உள்ளது. கண்டிப்பாக சங்கமயுகத்தில் தான் இராஜயோகம் கற்றுக் கொண்டிருப்பார்கள். மேலும் பரமபிதா பரமாத்மாவிடமிருந்து தான் கற்றிருப்பார்கள். படைப்பாகிய ஸ்ரீகிருஷ்ணரிடமிருந்தோ கற்றிருக்க மாட்டார்கள். படைக்கக்கூடியவர் ஒரே ஒரு தந்தையே ஆவார். அவரைத்தான் சொர்க்கத்தின் இறைதந்தை என்று கூறுகின்றனர். நல்ல விசால புத்தி உள்ளவர்கள் நல்ல விதமாகப் புரிந்து கொண்டு தாரணை செய்வார்கள். இவர்களை படைக்கக்கூடியவர் யார் என்று சின்னஞ்சிறு குழந்தைகள் பெரிய மனிதர்களிடம் அமர்ந்து பேச வேண்டும், படங்களை வைத்து புரிய வைக்க வேண்டும். வழக்கமான படங்களாக இருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கலாம். குழந்தைகள் கிளிப்பிள்ளை மொழியில் புரிய வைக்க முடியும். சிறுகுழந்தைகள் புத்திசாலிகளாக இருந்தார்கள் என்றால், இவர்கள் இந்த ஒரு தந்தைக்கு பலி ஆனவர்கள், அவர்தான் இவர்களை இப்படிப்பட்ட புத்திசாலிகளாக ஆக்கியுள்ளார் என்று சொல்வார்கள். எனக்குத் தெரியும் அதனால் தான் உங்களுக்குக் கூறுகின்றேன் என்று குழந்தைகள் கூறுவார்கள். எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தை இப்போது இராஜயோகத்தைக் கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறார். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகின்றார். எந்த தேகதாரியையும் குரு என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. ஒரு சத்குரு தான் கரை சேர்ப்பவர், மற்ற அனைவரும் மூழ்கடிக்கக்கூடியவர்கள் ஆவர். இப்படி கிளிப்பிள்ளை போல சொன்னால் பெயர் பிரபலமாகும். கன்னியாக்கள் மூலம் ஞான அம்புகள் செலுத்தப்பட்டதாக (புராணத்தில் ) காட்டப்பட்டுள்ளது அல்லவா! அனைவரும் புரிந்து கொண்டு விடுவார்கள் என்பதல்ல. யார் நம்முடைய தர்மத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனரோ அவர்கள் விரைவாகப் புரிந்து கொண்டு விடுவார்கள். வானபிரஸ்த நிலையில் உள்ளவர்களுக்கும் கோயில்களைக் கட்டுபவர்களுக்கும் சென்று புரிய வைக்க வேண்டும். அவர்களை கை கொடுத்து தூக்கி விட வேண்டும். நாங்கள் உங்களுக்கு சிவபாபாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறோம், பிரம்மா விஷ்ணு சங்கரர் இரண்டாவது நம்பர் ஆவார்கள். மனிதர்கள் எப்படி 84 பிறவிகள் எடுக்கிறார்கள் என்ற உலகத்தின் வரலாறு புவியியலை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். இது 84 பிறவிகளின் சக்கரமாகும். பிரம்மா சரஸ்வதி போன்ற அனைவரின் கதையையும் அமர்ந்து கூற வேண்டும். இதை குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இலட்சுமி நாராயணர் இராஜ்யத்தை எப்படிப் பெற்றனர் மற்றும் இராஜ்யத்தை எப்படி இழந்தனர் என்பதை உங்களுக்குக் கூறுகின்றோம்! வாருங்கள்! நல்லது. இதைக் கூட புரிந்து கொள்ளவில்லை என்றால் மன்மனா பவ என்று மட்டும் ஆகிவிடுங்கள். (ஒரு தந்தையை மனதால் நினைவு செய்யுங்கள்) இப்படி இப்படி குழந்தைகள் சென்று சேவை செய்ய வேண்டும். நல்லதுஇனிமையிலும் இனிமையான காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாராம்:

1. உள்ளுக்குள் ஏதேனும் ஆசை இருந்தால் அதை சோதனை செய்து நீக்கிவிட வேண்டும். பாபாவிடம் என்ன உறுதிமொழி கொடுத்தீர்களோ அதில் உறுதியாக இருக்க வேண்டும்.2. உணவை மிக சுத்தமாக திருஷ்டி கொடுத்து உண்ண வேண்டும். தந்தை அல்லது பிரியதர்ஷனின் நினைவில் உண்ண வேண்டும்.வரதானம்:

சிரேஷ்ட கர்மத்தின் மூலம் ஆசீர்வாதங்களின் ஸ்டாக்கை சேமிப்பு செய்யக் கூடிய சைத்தன்ய தரிசனம் கொடுக்கக் கூடிய மூர்த்தி ஆகுக !என்ன கர்மம் (செயல்) செய்தாலும் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள் மற்றும் ஆசீர்வாதங்களைக் கொடுங்கள். சிரேஷ்ட கர்மங்களைச் செய்வதன் மூலம் அனைவருடைய ஆசீர்வாதங்களும் தானாகவே கிடைக்கின்றன. அனைவருடைய வாயிலிருந்தும் இவர்கள் மிகவும் நல்லவர்கள், ஆஹா! என்பது வெளிப்படும். அவர்களுடைய கர்மமே நினைவுச் சின்னம் ஆகிவிடுகிறது. என்ன வேலை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், குஷியைப் பெறுங்கள் மற்றும் குஷியை அளித்திடுங்கள், ஆசீர்வாதங்களைப் பெறுங்கள், ஆசீர்வாதங்களைக் கொடுங்கள். இப்பொழுது சங்கமயுகத்தில் ஆசீர்வாதங்களை அடைந்தீர்கள் மற்றும் கொடுத்தீர்கள் என்றால் உங்களுடைய ஜடச் சித்திரங்கள் மூலம் கூட ஆசீர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கும் மற்றும் நிகழ் காலத்திலும் கூட சைத்தன்ய தரிசனம் கொடுக்கும் மூர்த்தி ஆகிவிடுவீர்கள்.சுலோகன்:

எப்பொழுதும் ஊக்கம், உற்சாகத்தில் இருந்தீர்கள் என்றால், அலட்சியம் அழிந்து விடும்.


***OM SHANTI***