BK Murli 3 August 2017 Tamil

BK Murli 3 August  2017 Tamil

03.08.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது கலங்கரை விளக்காக ஆக வேண்டும், உங்களின் ஒரு கண்ணில் முக்தி தாமமும், இன்னொரு கண்ணில் ஜீவன்முக்தி தாமமும் உள்ளன, நீங்கள் அனைவருக்கும் வழி கூறிக் கொண்டே இருங்கள்.கேள்வி:

அழிவற்ற பதவியின் கணக்கு சேமிப்பு ஆகிக் கொண்டே இருப்பதற்கான விதி என்ன?பதில்:

எப்போதும் புத்தியில் சுயதரிசன சக்கரம் சுற்றியபடி இருக்க வேண்டும். நடந்து, சுற்றியபடி தனது சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தின் நினைவு இருந்தது என்றால் ஒரு பக்கம் பாவ கர்மங்கள் அழியும், இன்னொரு பக்கம் அழிவற்ற பதவியின் கணக்கும் கூட சேமிப்பாகிக் கொண்டிருக்கும். தந்தை சொல்கிறார் – நீங்கள் கலங்கரை விளக்காக ஆக வேண்டும், ஒரு கண்ணில் சாந்திதாமம், மறு கண்ணில் சுகதாமம் இருக்க வேண்டும்.பாடல்:

விழித்திடுங்கள் பிரியதர்ஷினிகளே விழித்திடுங்கள். . .ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இனிமையிலும் இனிமையான பாடலைக் கேட்டீர்கள். இப்படி பாடக்கூடியவர்கள் கண்டிப்பாக ஏதாவது சினிமாத் துறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஞானத்தைப் பற்றி, தேவதைகளைப் பற்றி மற்றும் பரமாத்மாவைப் பற்றி பாடுவதெல்லாம் தலைகீழாகத்தான் பாடுகின்றனர். இது தலைகீழ் உலகம் என்றுதான் சொல்லப்படுகிறது. அல்லா அமர்ந்து புரிய வைக்கிறார் -நீங்கள் மாயையின் தூக்கு மேடையில் தொங்கிக் கொண்டிருந்தீர்கள். மாயை அனைத்து குழந்தைகளையும் ஆந்தைகளாக மாற்றிவிட்டுள்ளது. அவர்களை தலைகீழாக தொங்க விட்டு விட்டது. தந்தை வந்து குழந்தைகளை நேராக மாற்றுகிறார். பாடல் எவ்வளவு நன்றாக உள்ளது. விழித்திடுங்கள் பிரியதர்ஷினிகளே...என யார் சொல்கிறார்? முழு உலகத்தின் பிரியதர்ஷினிகளை குறித்து, விழித்தெழுங்கள் பிரியதர்ஷினிகளே, என வேறு யாரும் சொல்ல முடியாது. இப்போது புதுயுகம் வந்துள்ளது. இதனை அறிந்தவர்கள் உலகில் எந்த மனிதரும் கிடையாது. மாயை அப்படிப்பட்டதாக உள்ளது - எவ்வளவுதான் புரிய வைத்தாலும் புரிந்து கொள்வதில்லை. இப்போது புதிய யுகம், புதிய தேவதைகளின் இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கலியுகத்திற்குப் பிறகு கண்டிப்பாக சத்யுகம் வரப்போகிறது என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள். ஆக பகவான் பக்தர்களிடம் வரவே வேண்டியுள்ளது என இதிலிருந்து நிரூபணமாகிறது. பகவானுடன் சந்திக்க வேண்டும் என பக்தர்கள் விரும்பவும் செய்கின்றனர். ஆக பகவான் கண்டிப்பாக வருவார் என புரிந்து கொள்ள வேண்டும். அரைக் கல்பம் பக்தர்கள் துடிக்கின்றனர் எனும்போது ஏதாவது கொடுப்பார் அல்லவா. பகவான் ஜீவன்முக்தியை கொடுப்பார் என பக்தர்கள் அறிவார்கள். அந்த பதித பாவனர் (தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர்)தான் அனைவரையும் தூய்மையாக்குவார். அனைத்து ஆத்மாக்களும் எப்போது தூய்மையடைகின்றனர் என குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டுவிட்டீர்கள். சத்யுகத்தில் நீங்கள் தூய்மையாய் இருக்கிறீர்கள். மற்ற அனைத்து ஆத்மாக்களும் நிர்வாண தாமத்தில் இருப்பார்கள். நீங்கள் தூய்மையான யுகத்தில் வருகிறீர்கள், நிர்வாண தாமத்தை யுகம் என சொல்ல மாட்டோம். அது இந்த யுகங்களுக்கும் அப்பாற்பட்டது. இப்படி இப்படியான விஷயங்கள் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. நாம் பரமதாமத்தில் வசிக்கிறோம். யுகங்கள் இங்கே இருக்கின்றன - சத்யுகம், திரேதா. . . இந்த பெயர்களே இங்கே உள்ளவையாகும். வினாசமும் பாடப்பட்டுள்ளது. திரிமூர்த்தியையும் காட்டுகின்றனர். அந்த மனிதர்கள் திரிமூர்த்திக்குக் கீழே எழுதுகின்றனர் - சத்யமேவ ஜயதே (வாய்மையே வெல்லும்). . . இது ஆன்மீக அரசாங்கம் அல்லவா. அஹிம்சையான சக்தி சேனையும் பாடப்பட்டுள்ளது. ஆனால் வெறும் பெயரளவில் மட்டுமே ஆகும். ஆக உங்களுடைய அரசாங்கத்திற்கும் சின்னம் வேண்டும். நீங்கள் பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கு கீழே எழுத முடியும் - வாய்மையே வெல்லும். நாம் பாண்டவ அரசாங்கத்தின் குழந்தைகள் என குழந்தைகளின் புத்தியில் வரவேண்டும். பிரஜைகள் தம்மை குழந்தைகள் என்றுதான் புரிந்து கொள்கின்றனர். ஆக எப்படி அரசு சின்னத்தை உருவாக்கலாம் என புத்தியில் வர வேண்டும். இது குருட்டு நம்பிக்கையின் உலகம் ஆகும். பார்த்துக் கொண்டிருப்பவற்றை எல்லாம் பகவான் என சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆக குருட்டு நம்பிக்கையாகிவிட்டதல்லவா. அணு அணுவிலும் பகவான் இருக்கிறார் என சொல்லிவிடுகின்றனர். உண்மையில் மனிதர்கள் அனைவரின் நடிப்பும் தனித்தனியானதாகும். ஆத்மா சரீரத்தை எடுத்து நடிப்பை நடிக்கிறது. அனைத்துமே பகவானே பகவான் என சொல்ல மாட்டோம். பகவான்தான் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறாரா என்ன? இது 100% குருட்டு நம்பிக்கையாகும். புதிய வீடு கட்டப்படுகிறது என்றால் 100% புதியது என சொல்வோம். பழையதை 100% பழையது என சொல்வோம். பாரதம் புதியதாகவும் இருந்தது, இப்போது பழைய உலகமாக உள்ளது. எத்தனை விதமான பல தர்மங்கள் உள்ளன. இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளதல்லவா. கண்டிப்பாக சத்யுகத்தில் சுகமே சுகமாக இருந்தது, தேவதைகள் இராஜ்யம் செய்து கொண்டிருந் தனர். இப்போது இந்த பழைய உலகத்தில் துக்கமே துக்கமாக உள்ளது. இப்போது எவ்வுளவு துக்கம் உள்ளது, மேலும் போகப் போக காலப் போக்கில் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். வேட்டையாடப்பட்ட விலங்குக்கு திண்டாட்டம், வேட்டைக்காரனுக்குக் கொண்டாட்டம். . . என பாடப்பட்டுள்ளது. எதையும் புரிந்து கொள்வதில்லை. மனிதர்களை கொல்வதில் யாருக்கும் இரக்கமே ஏற்படுவதில்லை. இப்படியே யாராவது ஏதாவது செய்து விட்டால் போலீஸ் வழக்கு பதிவு செய்வார்கள். பாருங்கள் - எவ்வளவு அணுகுண்டுகள் முதலானவற்றை செய்து ஒருவர் மற்றவரை அழித்தபடி இருக்கின்றனர், தினமும் பத்திரிக்கையில் எழுதுகின்றனர் - இன்ன இன்ன இடத்தில் இவ்வளவு பேர் இறந்தனர். அவர்கள் மீது வழக்குப் போட வேண்டும் என யாருடைய புத்தியிலும் வருவதில்லை.இது பழைய பாவம் நிறைந்த உலகம் என நீங்கள் அறிவீர்கள். சத்யுகம் புதிய உலகமாகும். சத்யுகம், திரேதாவில் யாரும் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. பெயரே சொர்க்கம், ஹெவன், மலர்த் தோட்டம். . . வரலாறில் கூட படிக்கின்றனர். அங்கே அளவற்ற செல்வம் இருந்தது. அவற்றை கோவில்களிலிருந்தும் கூட கொள்ளையடித்து எடுத்துச் சென்றனர். ஆக யார் கோவில்களை கட்டினார்களோ அவர்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்திருப்பார்கள். தங்கத்தாலான துவாரகையை காட்டுகின்றனர் அல்லவா. சமுத்திரத்திற்குக் கீழே போய்விட்டது என சொல்கின்றனர். நாடகத்தின் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சத்யுகம் கீழே போய் கலியுகம் மேலே வந்து விடுகிறது. இந்த சக்கரம் சுற்றுகிறது. சக்கரத்தின் ஞானமும் உங்களுக்கு இருக்கிறது. சக்கரத்தையும் பல மனிதர்கள் உருவாக்குகின்றனர். ஆனால் அதன் ஆயுள் என்ன என்பது யாருக்கும் தெரியாது. உண்மையான சக்கரத்தைப் பற்றி யாரும் சொல்ல மாட்டார்கள். உங்களின் புத்தியில் முழு சக்கரமும் இருக்கிறது, ஆகையால் சொல்லப்படுகிறது - சுயதரிசன சக்கரத்தை சுற்றிக் கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களுடைய பாவ கர்மங்கள் அழியும். இது ஞானத்தின் விஷயமாகும். நாம் சுயதரிசன சக்கரத்தைச் சுற்றியபடி இருக்கிறோம் என நீங்கள் அறிவீர்கள், இதன் மூலம் நம்முடைய பாவ கர்மங்கள் அழிந்தபடி செல்லும் மேலும் மற்றொரு பக்கம் அழிவற்ற பதவியின் கணக்கு சேமிப்படைந்தபடி செல்லும். ஆனாலும் நாங்கள் சுயதரிசன சக்கரத்தை சுற்றுவதற்கு மறந்து விடுகிறோம் என சொல்கின்றனர். நீங்கள் கலங்கரை விளக்காக ஆக வேண்டும் என தந்தை சொல்கிறார். கலங்கரை விளக்கம் பாதை காட்டுகிறது அல்லவா. உங்களுடைய ஒரு கண்ணில் சாந்திதாமம், மற்றொரு கண்ணில் சுகதாமம் உள்ளது. துக்கதாமத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் கலங்கரை விளக்காக இருக்கிறீர்கள் அல்லவா. உங்களுடைய மந்திரமே மன்மனாபவ, மத்யாஜீபவ, சாந்திதாமம் மற்றும் சுகதாமம் என்பதாகும். நடந்தாலும் சுற்றினாலும் சாந்திதாமம் மற்றம் சுகதாமம் புத்தியில் இருக்கட்டும். இப்படிப்பட்ட நிலையில் அமர்ந்து இருக்கும் போதே சிலருக்கு காட்சிகள் தெரியலாம். யாராவது முன்னால் வந்தாலே காட்சிகளை பார்ப்பார்கள். நம்முடைய வேலையே இங்கேதான். அங்கே எதுவும் கிடையாது. ஆக குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இந்த பயிற்சியை செய்ய வேண்டும் - நாம் வழி காட்டக் கூடிய கலங்கரை விளக்கம் மற்றும் இப்போது துக்க தாமத்தில் நின்றிருக்கிறோம். இது சகஜமானது தான் அல்லவா. கலங்கரை விளக்கம் அல்லது சுயதரிசன சக்கரம் - விஷயம் ஒன்றுதான். ஆனால் இதில் (சக்கரத்தில்) விளக்கம் இருக்கிறது. அதில் இரண்டு விஷயங்கள் மட்டும் உள்ளன - சுகதாமம் மற்றும் சாந்தி தாமம். (அல்ஃ) அல்லா - முக்தி தாமம், (பே) ஆஸ்தி - ஜீவன்முக்தி தாமம். எவ்வளவு சகஜமானது. ஆத்மாக்களாகிய நாம் எங்கிருந்து வருகிறோமோ அது சாந்திதாமம் ஆகும். அறிவியலை அறிந்தவர்கள் அல்லது இயற்கையை ஏற்பவர்கள் இந்த விஷயங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். மற்றபடி தேவதைகளை ஏற்பவர்கள் புரிந்து கொள்வார்கள். இலட்சுமி நாராயணரின் கோவில்களுக்குச் செல்வது மிகவும் நல்லது. பாருங்கள், இவர்கள் சுக தாமமாகிய சத்யுகத்தின் எஜமானாக இருந்தனர் அல்லவா. இப்போது கலியுகமாக உள்ளது. அவர்களும் மனிதர்களாகத்தான் இருந்தனர். இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது அல்லவா. எப்போதாவது கீதையை கேட்டிருக்கிறீர்களா? இலட்சுமி நாராயணரின் அல்லது இராதா கிருஷ்ணரின் கோவிலுக்கு வருபவர்கள் கீதையையும் கேட்பார்கள். யாருக்கு கிருஷ்ணர் மீது அன்பு இருக்குமோ அவர்களுக்கு கீதையின் மீதும் அன்பு இருக்கும். இலட்சுமி நாராயணரின் கோவிலுக்குச் செல்பவர்களுக்கு கீதை அவ்வளவாக சிந்தனையில் வராது. இலட்சுமி நாராயணரைப் பற்றி அவர்கள் வைகுண்டத்தில் இருந்தார்கள் என புரிந்து கொள்கின்றனர். இப்போது நரகமாக உள்ளது. தந்தை வருவதே நரகத்தில், வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். என்னை நினைவு செய்தீர்கள் மற்றும் சுகதாமம், சாந்திதாமத்தை நினைவு செய்தீர்கள் என்றால் படகு கரை சேர்ந்து விடும். முதலில் வீட்டிற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். நல்லது சிலர் ஸ்ரீகிருஷ்ணரை ஏற்பவர்களாக இருப்பார்கள், அவர்களிடம் சொல்லுங்கள் - கிருஷ்ணர் சத்யுகத்தில் இருந்தார் அல்லவா. அப்படியானால் புதிய உலகத்தை நினைவு செய்யுங்கள். இந்த பழைய உலகிலிருந்து உறவை துண்டியுங்கள். கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும். தூய்மையற்றவர்கள் யாரும் அங்கே இருப்பதில்லை. எந்த விதத்திலாவது யுக்தியை உருவாக்க வேண்டும்.சேவை குறைவாக உள்ளது, குளிர்விட்டுப் போய் உள்ளது என குழந்தைகள் எழுதுகின்றனர். தந்தை சொல்கிறார் - குழந்தைகள் குளிர்விட்டுப் போய் விட்டனர், ஆனால் சேவையோ நிறைய செய்ய முடியும். எவ்வளவு கோவில்கள் இருக்கின்றன. என்னுடைய பக்தர்களுக்கு ஞானம் கொடுங்கள் என தந்தை சொல்கிறார். நீங்களும் பக்தர்களாக இருந்தீர்கள் அல்லவா. இப்போது ஸ்ரீகிருஷ்ணபுரியின் எஜமான் ஆகிறீர்கள். கிருஷ்ணபுரியான வைகுண்டத்தை நினைவு செய்வோம், வைகுண்டத்தை ராமராஜ்யம் என சொல்ல மாட்டோம். இலட்சுமி நாராயணரின் இராஜ்யத்தைத்தான் வைகுண்டம் என சொல்வோம். நீங்கள் புரிய வைக்கும்போது, இது சரியான விஷயம்தான் என சொல்வார்கள். உங்களின் இந்தப் படங்களில் மிகவும் ஞானம் அடங்கியுள்ளது. யார் கவனத்தோடு இந்தப் படங்களை பார்க்கின்றனரோ அவர்கள் உடனே நமஸ்காரம் செய்வார்கள். உங்களை நமஸ்கரிக்க மாட்டார்கள். உண்மையில் உங்களைத்தான் நமஸ்கரிக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் தான் அப்படி ஆகக் கூடியவர்கள், ஆகையால் பிராமண குலம் உயர்ந்த குலமாகும். நீங்கள் முயன்று அப்படிப்பட்ட தேவதையாக ஆகிறீர்கள். முதலில் ஈஸ்வரிய வாரிசு. பாடலும் இந்த சமயத்தினுடையதுதான் ஆகும். மனிதர்கள் புத்திசாலிகளாக இருந்தனர் என்றால் இலட்சுமி நாராயணரின் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். அவர்களுக்கு தெரியவே தெரியாது, இலட்சுமியிடம் சென்று செல்வத்தை வேண்டுவார்கள். அட, அவர்களின் ஜாதகத்தைத் தெரிந்து கொள்ளுங்களேன். அவர்கள் எப்போது வந்திருந்தார்கள் என்பதும் கூட அவர்களுக்குத் தெரியாது. விஷ்ணுவுக்கு 4 புஜங்களை காட்டுகின்றனர், அதாவது இலட்சுமி நாராயணரின் இணைந்த சொரூபம் ஆகும். இலட்சுமி நாராயணரின் பூஜை செய்கின்றனர், ஆனால் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை தெரிந்து கொள்வதில்லை. அவர்கள் எதனுடைய எஜமானர்கள். சூட்சும வதனத்தின் எஜமானர்கள் அல்ல. அது விஷ்ணுபுரி என சொல்லப்படுவதில்லை. சூட்சும வதனத்தில் புரி (நகரம், நாடு) இருப்பதில்லை. இலட்சுமி நாராயணரின் இராஜ்யத்தை புரி (நகரம், நாடு) என சொல்வோம், பிறகு இராமன் சீதையின் புரி, மற்றபடி இராதா கிருஷ்ணருடையதை எதுவும் காட்டுவதில்லை. துவாபரத்தில் இஸ்லாம், பௌத்த மதத்தினர் முதலானவர்கள் வருகின்றனர். ஆக குழந்தைகளாகிய நீங்கள் விளக்கி புரிய வைக்க வேண்டும். சொர்க்கத்தையும் நினைக்கின்றனர். யாராவது பெரிய மனிதர் இறந்தால் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என சொல்கின்றனர். ஆக கண்டிப்பாக நரகத்தில் இருந்தார், எனவேதான் சொர்க்கத்திற்குச் சென்றார். இந்த சமயத்தில் அனைவருமே நரகவாசிகளாக தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர். எவ்வளவு போதை இருக்கிறது! நாங்கள் கோடீஸ்வரர்கள் என காட்டிக் கொள்கின்றனர். ஆனால் அனைவருமே நரகவாசிகள் தான். நரகவாசிகள் சொர்க்கவாசிகளின் முன் தலை வணங்குகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள்தான் சரியாகப் புரிய வைக்க முடியும். நீங்களும் கூட அனைத்தும் தெரிந்தவரின் (சிவபாபா) குழந்தைகள் ஆவீர்கள். உங்களின் புத்தியில் முழு சக்கரமும் விரிவாக சுற்றிக் கொண்டிருக்கிறது. வீட்டிற்குச் சென்றதும், சம்பந்தங்களின் முகத்தைப் பார்த்ததும் அனைத்தும் மறந்து போய்விடுகிறது, ஆகையால் கல்லூரியுடன் கூட விடுதியும் (ஹாஸ்டல்) இருக்கிறது. இங்கே உங்களுடைய விடுதியும் இருக்கிறது. இங்கே நீங்கள் படிப்பதில் ஈடுபட்டிருக்கிறீர்கள். புத்தி வேறு எந்த பயனற்ற வேலைகளிலும் போவதில்லை. மாணவர்களுடன் ஞானத்தைப் பற்றிய விஷயங்கள் இருக்கும். விடுதியில் இருப்பதில் நிறைய வித்தியாசம் உள்ளது. தந்தையிடம் விரைவாக புத்துணர்ச்சி பெறுவதற்காக வர வேண்டும். தட்சணை தர வேண்டியிருக்கும் என புரிந்து கொள்ள வேண்டாம். அப்படிப்பட்டவர்களை நாம் மூடர்கள் என நினைக்கிறோம். பாபா வள்ளலாக இருக்கிறார். கொடுக்க வேண்டுமே என்ற யோசனை ஒரு போதும் வரக்கூடாது. இங்கே சேவை செய்யத் தகுந்தவர்கள் மட்டுமே புத்துணர்ச்சி அடைய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் வருகிறீர்கள். ஏதோ சாது, மகாத்மாவிடம் வருகிறீர்கள் என்பது போல் அல்ல, தட்சிணை தர வேண்டும் என்ற சிந்தனை வரக்கூடாது. பெண் குழந்தைகள் வருகிறார்கள் என்றால் அவர்களிடம் பணம் இருக்கிறதா என்ன? அவர்களுக்கு சேவை மையத்தில் அனைத்தும் கிடைக்கிறது. யாருக்கு தம்முடைய பாக்கியத்தை உருவாக்க வேண்டும் என உள்ளதோ அவர்கள் தம்முடைய முயற்சியை செய்கின்றனர். மற்றவர்களுடையதெல்லாம் வெறும் சாக்கு போக்கு மட்டுமே, வேலை இருக்கிறது, இது இருக்கிறது, . . . விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏதாவது காரணத்தைச் சொல்லிவிடுப்பு வாங்க முடியும். இது பொய் ஆகாது. இவரைப் போன்ற சத்தியமானவர் யாரும் இல்லை. ஆனால் தந்தை சொல்வதன் மீது அந்த அளவு மதிப்பு இல்லை. எவ்வளவு மதிப்பு வாய்ந்த (அளவற்ற) பொக்கிஷம் கிடைக்கிறது. பாபா எங்கோ தூரத்தில் இல்லை. எங்கிருந்தாலும் தனது முன்னேற்றத்திற்காக புத்துணர்ச்சி அடைவதற்காக வந்து விட வேண்டும். புத்துணர்ச்சி அடைவதன் மூலம் பலருக்கு நன்மை செய்ய முடியும். நீங்கள் சேவை செய்ய வேண்டும். இது புத்தியோகத்தின் பலமாகும். அது புஜ பலமாகும் (தோள் வலிமை).இங்கே ஆயுதங்கள் எதுவும் கிடையாது. யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. அனைவருக்கும் சுகத்தின் வழியைக் காட்ட வேண்டும். சத்யுகத்திற்கும் கலியுகத்திற்கும் இடையில் இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. இராவண இராஜ்யத்திற்கு அரைக் கல்பம் நடக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் சுகதாமத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர்கள். ஒருபோதும் எந்த கசப்பான வார்த்தைகளையும் பேசக் கூடாது. கேட்டும் கேளாதவராக ஆகி விட வேண்டும். கேட்டால் பிறகு பேசவும் தொடங்கி விடுகின்றனர். கோபத்தின் அம்சமும் கூட மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. யாரிடமாவது கோபித்துக் கொண்டால் அது துக்கம் கொடுப்பதே ஆகும். துக்கம் கொடுத்தீர்கள் என்றால் துக்கம் அடைந்து இறப்பீர்கள் நிறைய தண்டனைகள் அனுபவிக்க வேண்டியிருக்கும். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. தந்தையின் மீதும் படிப்பின் மீதும் மதிப்பு வைக்க வேண்டும். அவ்வப்போது தன்னை புத்துணர்வு அளித்துக் கொள்வதற்காக யுக்திகளை உருவாக்க வேண்டும். பலரின் நன்மைக்காக நிமித்தமாக ஆக வேண்டும்.2. தங்களுக்குள் ஞானத்தின் விஷயங்களைத்தான் பேசிக்கொள்ள வேண்டும். கோபத்தின் அம்சத்தையும் கூட நீக்கிவிட வேண்டும். யாராவது கசப்பான விஷயங்களைப் பேசினால் கேட்டும் கேளாதவராக ஆகிவிட வேண்டும்.வரதானம் :

தன்னுடைய முகம் மற்றும் நடத்தையின் மூலம் ஆன்மீக இராயல் தன்மையின் அனுபவம் செய்விக்கக் கூடிய முழுமையான தூய்மையானவர் ஆகுக.ஆன்மீக இராயல் தன்மையின் அடித்தளம் முழுமையான தூய்மையாகும். முழுமையான தூய்மையே இராயல் தன்மையாகும். இந்த ஆன்மீக இராயல்தன்மையின் ஜொலிப்பு தூய்மையான ஆத்மாவின் சொரூபத்தின் மூலம் பிரதிபலிக்கும். இந்த ஜொலிப்பை ஒருபோதும் மறைக்க முடியாது. ஒருவர் எவ்வளவுதான் தன்னை மறைமுகமாக வைத்தாலும் அவருடைய பேச்சு, அவருடைய சம்மந்தம் - தொடர்பு, ஆன்மீக செயல்பாடுகளினால் ஏற்படும் தாக்கம் அவர்களை வெளிப்படுத்திவிடும். ஆக ஒவ்வொருவரும் ஞானத்தின் கண்ணாடியில் பாருங்கள் - என்னுடைய முகத்தில், நடத்தையில் அந்த இராயல் தன்மை தென்படுகிறதா அல்லது சாதாரண முகம், சாதாரண நடத்தை உள்ளதா?சுலோகன் :

எப்போதும் பரமாத்மாவின் வளர்ப்பிற்குட்பட்டு உள்ளே இருப்பது தான் பாக்கியவான் ஆவது ஆகும்.***OM SHANTI***