BK Murli 21 December 2017 Tamil


BK Murli 21 December 2017 Tamil

21.12.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தங்களுக்குள் கோபித்துக் கொண்டு ஒருபோதும் படிப்பை விட்டு விடக் கூடாது, படிப்பை விடுவது என்றால் தந்தையை விட்டு விடுவதாகும்.கேள்வி:

சேவையின் வளர்ச்சி ஏற்படாததன் காரணம் என்ன?பதில்:

எப்போது தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறதோ அப்போது சேவை வளர்ச்சியடைவதில்லை. ஒரு சில குழந்தைகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படிப்பை விட்டு விடுகின்றனர். பாபா எச்சரிக்கை கொடுக்கிறார் - குழந்தைகளே கருத்து வேறுபாடுகளில் வராதீர்கள், ஒரு போதும் வீண் வம்பு பேச்சுக்களைக் கேட்காதீர்கள். ஒரு தந்தை சொல்வதைக் கேளுங்கள், தந்தையிடம் விசயத்தை சொன்னீர்கள் என்றால் உங்களுக்கு பாபா 16 கலைகளும் நிரம்பியவர்களாக ஆவதற்கான வழி கூறுவார்.கேள்வி:

படிப்பை விடுவதற்கான முதல் காரணம் என்னவாக இருக்கும்?பதில்:

பெயர் ரூபத்தில் சிக்குவதால் ஏற்படும் நோய். யாராவது தேகதாரியின் பெயர் உருவத்தில் மாட்டிக் கொண்டால் படிப்பில் மனம் ஈடுபடாது. மாயை இந்த விசயத்தில்தான் தோற்கடித்து விடுகிறது, இதுவே மிகப் பெரிய தடையாகும்.ஓம் சாந்தி.

குழந்தைகள் அமர்ந்திருக்கின்றனர், எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்துள்ளார், எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி கொடுக்கிறார் என மனதில் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை என்பதை தெரிந்திருக்கிறீர்கள். இந்த சரீரத்தின் மூலம் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கல்பத்திலும் இதே போல் தான் புரிய வைக்கிறார் மற்றும் ஆஸ்தி தருகிறார், மேலும் இந்த ஞானத்தை வேறு யாராலும் தர முடியாது. ஒரு போதும் எந்த தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது, 5 தத்துவங்களால் ஆன சரீரம் பூதம் எனப்படுகிறது என பாபா புரிய வைக்கிறார். எனவே நீங்கள் 5 தத்துவங்களாலான சரீரத்தை நினைவு செய்யக் கூடாது. மாயை நிறைய தடைகளை ஏற்படுத்தலாம், ஆனால் நீங்கள் தோற்கக் கூடாது. என்னுடையவர் ஒரு பாபா வேறு யாரும் இல்லை என்பது புத்தியில் இருக்க வேண்டும். இந்த பாபாவின் சரீரத்திடம் கூட குழந்தைகளாகிய உங்களுடைய அன்பு இருக்கக் கூடாது. எந்த சரீரத்திடமாவது அன்பு வைத்தால் சிக்கிக் கொண்டு விடுவீர்கள். பல ஆண்களும் கூட தமக்குள் ஒருவர் மற்றவருடைய பெயர் உருவத்தில் மாட்டிக் கொண்டு இறந்து விடும்படியாக நட்பு ஏற்பட்டு விடுகிறது என்பதை பாபா அறிவார். சிவபாபாவை மறந்து விடுமளவு அன்பு ஏற்பட்டு விடுகிறது. சிவபாபாவை மறந்து விடும் அளவிற்கு அந்த அன்பின் ஈடுபாடு உள்ளது. இரு (பெண்கள்) கன்யாக்களிடையிலும் கூட தங்களுக்குள் பிரியதர்ஷினிகளாக ஆகும் அளவுக்கு அன்பு ஏற்பட்டு விடுகிறது. அவர்களுக்கு எவ்வளவுதான் ஞானத்தைப் புரிய வைத்தாலும் கூட மாயை விடுவதில்லை ஏனென்றால் ஈஸ்வரிய வழிக்குப் புறம்பாக நடக்கின்றனர். ஞானத்தையும் கூட எடுத்திருக்கலாம், ஆனால் மன நிலை தடுமாற்றம் ஆகிறது. யோகத்தின் மூலம் பாவ கர்மங்கள் அழிவது கிடையாது. இப்படிப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர், பாபா பெயரை கூறுவதில்லை.இன்னொரு விசயம் பாபா புரிய வைக்கிறார் - ஒரு போதும் படிப்பை விட்டு விடக் கூடாது. பிராமணியுடன் (பொறுப்பு சகோதரியுடன்) ஒத்துப் போகாமல் இருக்கலாம், மனக் கசப்பு ஏற்பட்டு விடுகிறது என்றாலும் படிப்பை கண்டிப்பாக விட்டு விடக் கூடாது. பாபாவுக்கு செய்தியை கொடுத்தபடி இருக்க வேண்டும். கடைசியில் பாபா கருத்து வேறுபாட்டை நீக்கி விடுவார். கருத்து வேறுபாட்டின் காரணமாக பல குழந்தைகள் தங்கள் கணக்கை கெடுத்துக் கொள்கின்றனர், (பதிவேட்டில் கறை படிந்து விடுகிறது), படிப்பை விட்டு விடுகின்றனர். எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக் கூடாது. இப்படி பலர் விழுந்து விடுகின்றனர். பாபா எச்சரிக்கை கொடுக்கிறார் - குழந்தைகளே நீங்கள் யாரிடமும் வீண் வம்பு பேச்சுக்களை கேட்கக் கூடாது. ஒரு பாபாவிடம் மட்டுமே கேட்க வேண்டும். பல குழந்தைகள் இருக்கின்றனர், அவர்கள் தேக அபிமானத்தின் வியாதியிலேயே இறந்து விடுகின்றனர். குழந்தைகளுக்கு கட்டளை என்னவென்றால் எப்போதும் தந்தையை நினைவு செய்தபடி அவருடைய மகிமைகளையே பாடிக் கொண்டிருக்க வேண்டும். சிவபாபாதான் கலியுகத்தின் தூய்மையற்ற உலகத்தை தூய்மையான மிக உயர்வானதாக ஆக்குகிறார். மாயை எங்காவது குழந்தைகளை அடித்து நோயாளியாக ஆக்கி விடக் கூடாதே என பாபாவுக்கு குழந்தைகளைப் பற்றிய சிந்தனை இருக்கிறது. குழந்தைகள் ஒரு வேளை செய்தி கொடுக்கவில்லை என்றால் மாயையிடமிருந்து நன்றாக அடி வாங்கியுள்ளது என புரிந்து கொள்வேன். ஆகையால் முரளியில் புரிய வைக்கப்படுகிறது. அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் தமது தொழிலிலேயே ஈடுபட்டு விடுகின்றனர். ஒரு சிலரோ ஒருவர் மற்றவரின் பெயர் ரூபத்தில் பிரியதர்சன், பிரியதர்சினியாக ஆனது போல மாட்டிக் கொள்கின்றனர். பிறகு மம்மா பாபாவைக் கூட நினைப்பதில்லை. ஒருவர் மற்றவரை நினைவு செய்தபடி இருக்கின்றனர். இந்த தடைகள் அனைத்தையும் மாயை ஏற்படுத்துகிறது. யாருடைய அதிர்ஷ்டத்திலாவது இல்லை என்றால் வீணான விசயங்களை பேசாதீர்கள் என பாபா எவ்வளவுதான் புரிய வைத்தாலும் பேசியபடியே இருக்கின்றனர். சிலர் அஞ்ஞானத்தில் வாழ்க்கை வரலாற்றை எழுதுகின்றனர். நீங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டியதில்லை. நாம் பாபாவைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யக் கூடாது. நேரு இறந்த போது அவரை எவ்வளவு நினைவு செய்தனர். நீங்களும் அது போல நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? ஞான மார்க்கத்தில் மிகவும் புத்திசாலித்தனம் தேவை. சிவபாபாவிடம் நினைவின் தொடர்பு இல்லாதவருக்கு புத்தியின் பூட்டு திறக்காது. சேவை செய்ய முடியாது, பதவி கீழானதாகி விடும், ஆகையால் பாபா எச்சரிக்கை கொடுக்கிறார் – ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தது என்றால் பாபாவுக்கு எழுதுங்கள். அனைவருமே 16 கலைகளில் நிரம்பியவர்களாக ஆகி விடவில்லை. சிலர் பக்குவமற்றவர்களாகவும் இருக்கின்றனர், தவறுகள் செய்யக் கூடும். புத்திசாலிகளாக இருக்கும் குழந்தைகள் சட்டென செய்தியை எழுதுவார்கள். சிலரிடம் இன்னும் கோபம் இருக்கிறது என பார்த்தார்கள் என்றால் அவரிடமிருந்து மனம் விலகிப் போய் விடுகிறது, பின்னர் வீட்டில் அமர்ந்து விடுகின்றனர். சில பிராமணிகள் கூட இனி இந்த செண்டருக்கு வர வேண்டாம் என சொல்லிவிடுகின்றனர்.பாபாவுக்கு சேவையின் செய்திகளைக் கொடுக்க வேண்டும். குழந்தை சேவையின் செய்தியை கொடுக்கிறது என பாபா மகிழ்ச்சியடைவார். பாபா இன்று அவரிடம் பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன உறவு? என கேட்டு புரிய வைத்தேன். பாபா சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுக்கிறார். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் கூட கொடுத்திருந்தார். இந்த இலட்சுமி நாராயணரின் படங்களும் கூட இருக்கின்றன. எப்போதாவது யாராவது எதிர் சேவை (டிஸ் சர்வீஸ்) செய்வதைப் பார்த்தால் உடன் தெரியப்படுத்துங்கள் என பாபா புரிய வைத்தபடி இருக்கிறார். அனைவருமே முழுமையடைந்து விடவில்லை. குழந்தைகள் அனைத்தையும் புரிய வைக்க வேண்டும்.நான் குழந்தைகளுக்கு முன்பாக பிரத்யட்சம் ஆகிறேன் (வெளிப்படுகிறேன்) என தந்தை சொல்கிறார். பல குழந்தைகளுக்கு என்னையே தெரியாது எனும் போது அவர்கள் முன்பாக எப்படி வருவேன். குழந்தைகளுக்குச் சொல்கிறேன் - இனிமையான குழந்தைகளே, ஸ்ரீமத்படி நடந்து தனது முயற்சியை செய்து வாழ்க்கையை உயர்வானதாக ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் முழு உலகத்தின் எஜமானாக ஆக வேண்டியவர் கள். எந்த அளவு அதிகமாக என்னை நினைவு செய்வீர்களோ அந்தளவு உயர்ந்த பதவியை அடைவீர்கள், இதில் செலவு செய்யக் கூடிய விசயம் எதுவுமில்லை, படிப்பு மட்டுமே ஆகும். யாருடைய அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ அவர்கள் உறுதியாக ஆகி விடுவார்கள். 6-8 வருடங்கள் ஆகியவர்கள் கூட இன்று இல்லை மாயை அப்படிப்பட்டதாக உள்ளது. தந்தையிடம் கோபித்துக் கொள்வதில்லை, ஆனால் பிராமணியிடம் கோபித்துக் கொள்கின்றனர். பாபாவோ இங்கே அமர்ந்திருக்கிறார். சிவபாபாவிடம் கோபித்துக் கொண்டார்கள் என்றால் அழிந்து போய்விடுவார்கள். பாபா இல்லாமல் முரளி எப்படி கேட்க முடியும்.மற்றொரு விசயம் - சில சமயம் தியானத்தின் (டிரான்ஸ்) பார்ட் நடக்கிறது இன்னாருக்குள் மம்மா வந்தார், பாபா வந்தார் - இதுவும் மாயை ஆகும். மிகவும் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். எப்படி பேசுகின்றனர் என்பதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்குள் மாயாவின் பூதம் வந்து விடுகிறது, பிறகு சிவபாபா வந்தார், முரளி நடத்துகிறார் என சொல்கின்றனர், இந்த தடைகள் அனைத்தையும் மாயை ஏற்படுத்துகிறது. பல துரோகிகள் வெளியேறி விடுகின்றனர். மிகவும் ஏமாற்றுகின்றனர். இந்த அனைத்து விசயங்களிலும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். படிப்பின் மீது முழுமையான கவனம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாயை மிகவும் தொந்தரவு செய்யும். நிறைய புயல்கள் வீசும் – மருத்துவர்கள் நோய் குணமாகி விடும் என சொல்வது போல, பயப்படக் கூடாது. போகப் போக மாயை போதை ஏற்படுத்தி விடும், பாபாவை மறக்கடித்து விடும். தோற்கடிக்க மிகவும் முயற்சி செய்யும். யுத்தமே 5 விகாரங்களின் இராவணனுடன் ஆகும். எந்த அளவு தந்தையை நினைவு செய்வீர்களோ அந்த அளவு பாவ கர்மங்கள் அழியும். மாயையை வென்று உலகை வென்றவராகவும் ஆவீர்கள். மற்றபடி ஸ்தூலமான சண்டையின் விசயம் எதுவும் கிடையாது. யோகபலத்தின் மூலமே உலகின் இராஜ்யம் கிடைக்கும். இந்த சமயத்தில் யோகபலமும் உள்ளது, புஜபலமும் உள்ளது. இந்த கிறிஸ்தவர்கள் இருவருமே இணைந்து விட்டார்கள் என்றால் உலகத்தின் எஜமானாக ஆக முடியும். அந்த அளவு சக்தி அவர்களுக்குள் இருக்கிறது, ஆனால் சட்டத்தில் இல்லை. இரண்டு பூனைகளைப் பற்றிய கதை கூட உள்ளது. கிருஷ்ணரையும் பாருங்கள் எப்படி கையில் வெண்ணை உருண்டை காட்டப்பட்டுள்ளது. எனவே உங்கள் நினைவு நிரந்தரமாக இருக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் படிப்பை விட்டு விடக் கூடாது. தடைகள் கண்டிப்பாக ஏற்படும். மாயை அப்படிப்பட்டதாக உள்ளது, முகத்தை (கவனத்தை) திருப்பி விட்டு விடும், மாரடைப்பை ஏற்படுத்தி விடும், ஆகையால் மற்ற அனைத்து விசயங்களையும் விடுத்து என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். விதையை நினைவு செய்யும்போது மரமும் நினைவில் வரும். இல்லற விசயத்தில் இருந்தபடி இந்த படிப்பை படியுங்கள். பக்தர்கள் அதிகாலையில் எழுந்து பக்தி செய்கின்றனர். காசியில் சிறு சிறு அறைகள் இருக்கின்றன, அனைவரும் அதில் அமர்ந்து விஸ்வநாத், கங்கா என சொல்கின்றனர், எதுவும் தெரியாது. ஈஸ்வரன் எங்கும் நிறைந்தவர் என சொல்லிவிடுகின்றனர். தம்மை தத்துவ யோகி, பிரம்ம யோகி என சொல்லிக்கொள்கின்றனர். இந்த பாபா (பிரம்மா) அனைத்து விசயங்களிலும் அனுபவம் மிக்கவர் ஆவார். இவருடைய இரதத்தில் அமர்ந்து சொல்கிறார் - இந்த அனைத்தையும் விடுங்கள், மற்ற அனைவரையும் விளையாட்டு பொம்மைகளாக ஆக்கி விட்டனர். விஷ்ணுவின், சங்கரனின், கிருஷ்ணரின் பொம்மைகளை உருவாக்கி அமர்ந்து பூஜை செய்கின்றனர். யாரையும் தெரியாது, பூஜைக்கு நிறைய செலவு செய்கின்றனர். கல் மூர்த்திகளை உருவாக்கி அவற்றை அலங்கரிக்கின்றனர். செல்வந்தர்கள் ஆபரணங்களையும் அணிவிக்கின்றனர். பக்தியில் யார் என்ன பாவனையுடன் செய்கின்றனரோ அதற்கான பலனை ஏதாவது ஒன்று நான் தருகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அடுத்த பிறவியில் நல்ல பக்தர்களாக ஆகி விடுகின்றனர். யாராவது பணத்தை தானம் செய்தால் செல்வந்தர்களின் வீட்டில், நிறைய தானம் செய்தால் அரச குடும்பத்தில் பிறவி கிடைக்கும். என்றாலும் இந்த உலகத்தில் எப்போதும் சுகம் இருப்பதில்லை, ஆகையால் சன்னியாசிகள் இந்த சுகத்தை ஏற்பதில்லை. காகத்தின் எச்சத்தைப் போன்றது என புரிந்து கொள்கின்றனர். ஆக அவர்கள் எப்படி இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? எல்லைக்கப்பாற்பட்ட தந்தையைத் தவிர முழு உலகத்தின் எஜமானாக வேறு யாரும் உருவாக்க முடியாது. உங்களுக்கு இராஜயோகத் தைக் கற்பிப்பதற்காக மீண்டும் வந்துள்ளேன் என இப்போது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நேரில் புரிய வைக்கிறார். கிருஷ்ணரின் 84 பிறவிகளின் இறுதியில் நான் பிரவேசமாகியிருக்கிறேன், இவருடைய பெயரை பிரம்மா என வைத்துள்ளேன். எனக்கு பிரம்மா கண்டிப்பாக தேவை எனும்போது பிரஜாபிதா பிரம்மாவும் தேவை. அவருக்குள் பிரவேசம் செய்து வருவேன், இல்லாவிட்டால் எப்படி வருவேன்? இந்த இரதம் எனக்காக நிர்ணயிக்கப்பட்டதாகும். ஒவ்வொரு கல்பத்திலும் இவருக்குள்தான் வருகிறேன். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை என எழுதவும் பட்டுள்ளது. எதனுடைய ஸ்தாபனை? விஷ்ணுபுரியின் ஸ்தாபனை. இப்போது நீங்கள் பாரதத்தை விஷ்ணுபுரியாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பரமபிதா பரமாத்மாவின் நடிப்பின் பாகம் என மற்றவர் யாரும் இந்த விசயத்தைப் புரிந்து கொள்வதில்லை. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகின்றனர், நரகத்தை சொர்க்கமாக ஆக்குபவர் தந்தை அல்லவா. யார் பிராமணராக ஆகி முழுமையாக முயற்சி செய்கின்றனரோ அவர்கள் பிராமணரிலிருந்து தேவதையாக ஆவார்கள், பரமபிதா பரமாத்மா பிராமண, சூரியவம்சம், சந்திர வம்சம் என 3 தர்மங்களை ஸ்தாபனை செய்கிறார் என பாடலும் உள்ளது. அங்கே இரண்டு யுகங்களில் ஒரு தர்மம் மட்டுமே இருக்கும், வேறு எந்த தர்மமும் இருக்காது. மற்ற இரண்டு யுகங்களில் பாருங்கள் எத்தனை தர்மங்கள் இருக்கின்றன.குழந்தைகள் படிப்பின் மீது முழுமையான கவனம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகவும் அழ வேண்டியிருக்கும். அனைவருக்காகவும் விசாரணைக் குழு அமரும். நீ இன்ன இன்ன பாவங்களை செய்தாய் என சொல்வார்கள், ஆகையால் நான் உங்களுக்கு நிறைய புரிய வைக்கிறேன் - பாவம் செய்யக் கூடாது, புண்ணிய ஆத்மாவாக ஆக வேண்டும். பாவம் செய்தீர்கள் என்றால் நூறு மடங்கு தண்டனைக்கு நிமித்தமாக ஆவீர்கள். என்னுடையவர்களாக ஆகி, விகாரத்தில் சென்றால், தந்தையின் (ஸ்ரீமத்) உயர்ந்த வழியை அவமதித்தால் உங்களுக்கு நிறைய தண்டனைகள் கிடைக்கும். அந்த தண்டனைகளும் மிகவும் கடுமையானதாக இருக்கும். நான் பரமதாமத்தில் வசிக்கிறேன் என தந்தை சொல்கிறார். இங்கே பழைய உலகத்தில் வந்து உங்களுக்கு ஆஸ்தி கொடுக்கிறேன். அப்போதும் கூட நீங்கள் பெயரை கெடுக்கிறீர்கள், ஆகவேதான் சத்குருவை நிந்தனை செய்பவர்கள் சூரிய வம்சத்து குலத்தில் நிலைக்க முடியாது என சொல்லப்பட்டுள்ளது. விழுந்து விடுகின்றனர், நிறைய வாக்குறுதி கொடுக்கின்றனர். நான் உங்களுக்கு நல்ல குழந்தையாக இருப்பேன். இப்படி இரத்தத்தாலும் கூட எழுதுகின்றனர். குழந்தையாகி உங்களிடம் முழுமையான ஆஸ்தியை எடுப்பேன் என பரமபிதா பரமாத்மாவிடம் வாக்குறுதி கொடுக்கின்றனர். ஆனால் மாயை அப்படிப்பட்டதாக உள்ளது, அப்படி சொன்னவர்கள் இன்று இல்லை. வாக்குறுதி கொடுத்து பிறகு தூய்மையை இழந்தால் மிகவும் அடி வாங்குவார்கள். ஈஸ்வரனுக்கு அவமரியாதை உண்டானது அல்லவா. பாபா சைகையில் அனைத்தையும் புரிய வைக்கிறார். மாயை மிகவும் தொந்தரவு செய்யும். இல்லை என்றால் யுத்தம் எதற்காக? உலகின் எஜமானாக ஆவது என்பது குறைந்த விசயம் அல்ல. தப்பு செய்யக் கூடாது. படிப்பை முற்றிலும் விடவே கூடாது. பாபாவிடம் வழி கேட்டுக் கொள்ளுங்கள், பிறகு பொறுப்பு பாபாவுடையதாக ஆகி விடும். படிப்பில் மனிதர்கள் எவ்வளவு உழைக்கின்றனர். பரீட்சையின் நேரத்தில் நிறைய முயற்சி செய்கின்றனர். நீங்களும் கூட இன்னும் போகப் போக நேரம் நெருங்குவதைப் பார்க்கும் போது இரவும் பகலும் படிப்பில் ஈடுபட்டு விடுவீர்கள். இப்போது அந்த நேரம் வரவிருக்கிறது. நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. தங்களுக்குள் வீணான விசயங்களை பேசக் கூடாது. ஒரு போதும் கருத்து வேறுபாட்டில் வரக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் படிப்பை விட்டு விடக் கூடாது.2. தந்தையை ஒரு போதும் அவமதிக்கக் கூடாது. வாக்கு கொடுத்து அதன் மீது நிலைத்து நிற்க வேண்டும். சேவையில் எப்போதும் ஆர்வம் வைக்க வேண்டும்.வரதானம் :

எல்லைக்கப்பாற்பட்ட அதிகாரி எனும் நினைவின் மூலம் அபாரமான குஷியில் இருக்கக் கூடிய எப்போதும் கவலையற்றவர் ஆகுக.இன்றைய நாட்களில் யாருக்காவது வழக்கப்படி அதிகாரம் கிடைத்தாலும் கூட எவ்வளவு முயற்சி செய்து அதிகாரத்தை கைபற்றுகின்றனர், உங்களுக்கோ முயற்சியே செய்யாமல் அதிகாரம் கிடைத்து விட்டது. குழந்தை ஆவது என்றால் அதிகாரம் கிடைப்பது ஆகும். என்னுடையது என்றால் இன்னும் அதிகாரம் கிடைத்தது. எனவே ஆஹா! நான் உயர்ந்த அதிகாரி ஆத்மா! என்ற இந்த எல்லைக்கப்பாற்பட்ட அதிகாரத்தின் குஷியில் இருங்கள். இந்த அழிவற்ற அதிகாரம் நிச்சயிக்கப்பட்டதே ஆகும் மற்றும் எங்கே நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ அங்கே கவலை கிடையாது.சுலோகன் :

அனைவரின் ஆசீர்வாதங்களின் மூலம் பறப்பதில் வேகத்தை அதிகப்படுத்தினீர்கள் என்றால் பிரச்னைகள் என்ற மலையை சகஜமாக கடந்து செல்வீர்கள். ***OM SHANTI***

Powered by Blogger.