BK Murli 22 December 2017 Tamil


BK Murli 22 December 2017 Tamil

22.12.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே ! உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுப்பதற்காக யோகேஷ்வரன் பாபா வந்துள்ளார், இந்த யோகத்தின் மூலம் தான் நீங்கள் விகர்மாஜீத் (பாவ கர்மங்களை வென்றவர்) ஆகி, எதிர்காலத்தில் விஷ்வ மகாராஜன் - மகாராணி ஆகின்றீர்கள்"கேள்வி:

பாவ கர்மங்கலிளிருந்து தங்களைக் காத்துக் கொள்ள எந்த உறுதிமொழியை நினைவிற் கொள்ள வேண்டும்?பதில்:

எனக்கு ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒரு பாபாவிடம் உண்மையான ஆன்மீக அன்பு வைக்க வேண்டும். இந்த உறுதிமொழி நினைவிருந்தால் பாவ கர்மம் ஏற்படாது. மாயை தேக-அபிமானத்தில் கொண்டு வந்து தலைகீழான கர்மங்களைச் செய்ய வைக்கிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர் பாபா அவரை நினைவு செய்து மாயையுடன் முழுமையாக யுத்தம் செய்தீர்கள் என்றால் தோல்வி ஏற்பட முடியாது.கேள்வி:

பாபாவிற்கு தன்னுடைய குழந்தைகளிடத்தில் என்ன ஆசை இருக்கிறது?பதில்:

எப்படி லௌகீக தந்தை, "என்னுடைய குழந்தைகளை உயர்ந்த கல்வி கற்க வைப்பேன்", என்று விரும்புகிறாரோ, அதேபோல் எல்லையற்ற தந்தையும் கூட, நான் என்னுடைய குழந்தைகளை சொர்க்கத்தின் தேவதைகளாக ஆக்குவேன், என்று கூறுகின்றார். குழந்தைகள் என்னுடைய ஸ்ரீமத் படி மட்டும் நடந்தால் உயர்ந்தவர்களாக ஆகிவிடுவார்கள்.பாட்டு:

அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன் .................ஓம் சாந்தி.

நாம் நம்முடைய புதிய அதிர்ஷ்டத்தை உருவாக்க வத்திருக்கின்றோம் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். யாரிடம் வந்துள்ளார்கள்? யோகேஷ்வரிடம், கற்றுக் கொடுக்கக் கூடிய ஈஸ்வரனிடம். இது இராஜயோகம் என்று கூறப்படுகிறது. ஈஸ்வரன் யோகம் கற்றுத் தருகின்றார், என்ன யோகம்? அனேக விதமான ஹடயோகங்கள் இருக்கின்றன. இது உடல் சார்ந்த யோகம் இல்லை. சன்னியாசிகளுடையது தத்துவ யோகம், பிரம்ம யோகமாகும். அவர்களுக்கு ஈஸ்வரன் யோகம் கற்றுக் கொடுப்பதில்லை. பரமபிதா பரமாத்மா நமக்கு கல்பத்திற்கு முன் போலவே மீண்டும் இராஜயோகம் கற்றுத் தருகின்றார், என்று குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். சன்னியாசிகள் ஒருபோதும் அப்படி சொல்ல மாட்டார்கள். இந்த யோகத்தை கல்பத்திற்கு முன்பும் கற்றுக் கொடுத்தேன், இப்போதும் கற்றுத் தருகின்றேன். அவர்கள் ஹடயோகிகள், இராஜயோகம் கற்றுத் தர முடியாது, என்று குழந்தைகளாகிய நீங்கள் சொல்லலாம். நமக்குக் கற்றுக் கொடுப்பவர் சிவபாபா ஆவார், அவரைத் தான் யோகேஷ்வர் என்று கூறுகிறோம். மனிதர்கள் தவறுதலாக கிருஷ்ணரை யோகேஷ்வர் என்று கூறிவிட்டார்கள். கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசர் ஆவார், அங்கே யோகம் போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லை. இது மிகவும் நல்ல பாயிண்ட் ஆகும், புரியவைக்கும் முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். யுக்தியாக புரியவைக்கப்படுகிறது. உங்களுடைய அனைத்தும் யோகத்தில் ஆதாரத்தில் உள்ளது, எந்தளவிற்கு யோகத்தில் இருக்கின்றீர்களோ அந்தளவிற்கு விகர்மங்களை வென்றவர்களாக ஆவீர்கள். பாரதத்தின் பழமையான யோகம் அதிகமாக பாடப்பட்டுள்ளது. இந்த இராஜயோகத்தை பரமபிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் கற்றுக் கொடுக்க முடியாது, ஆகையினால் தான் அவருடைய பெயர் யோகேஷ்வர் ஆகும். ஈஸ்வரன் தான் இராஜயோகம் கற்றுத் தருகின்றார். எதற்காக இராஜயோகம் கற்றுத் தருகின்றார்? பாரதத்திற்கு இராஜ்ஜியத்தை கொடுப்பதற்காகவா? இல்லை, இது பாரதத்தின் விஷயம் மட்டும் அல்ல! குழந்தைகளாகிய உங்களை முழு உலகத்திற்கும் எஜமானர்களாக மாற்றுவதற்காக இராஜயோகம் கற்றுத் தருகின்றார். இந்த குறிக்கோள் மிகவும் தெளிவானதாக இருக்கிறது இராஜ்ஜியம் என்னவோ ஒரு பாகத்தில் தான் செய்வார்கள், முழு உலத்திலும் இராஜ்யம் செய்ய மாட்டாரகள் என்றாலும் சொல்லும் போது உலத்தின் எஜமானர்கள் என்றே சொல்லப்படுகிறது.புதிய உலகத்திற்காக அதிர்ஷ்டத்தை உருவாக்க வந்துள்ளீர்கள், என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். முழு உலகமும் புதியதாகி விடுகிறது. தலைநகரம் பாரதமாகும். உங்களுடைய புதிய உலகத்திலும் தலைநகரம் தில்லியாகவே இருக்கும். அதனுடைய பெயர் பரிஸ்தானம் (தேவதைகள் வாழும் இடம்) என்று பாடப்பட்டுள்ளது. நீங்கள் ஞான பரிகள் ஆவீர்கள். ஞானக் கடலில் முழுக்கு போட்டு மனிதனிலிருந்து மாறி சொர்க்கத்தின் தேவதைகளாக ஆகிவிடுகின்றீர்கள். இது மான சரோவர் அல்லவா? அங்கே குழப்பதின் மூலம் மனிதர்கள் தேவதைகளாக ஆகிவிடுகின்றனர், என்று சொல்கிறார்கள். நீங்கள் இங்கே சொர்க்கத்தின் தேவதைகளாக ஆக வந்துள்ளீர்கள். நீங்கள் இராஜ்யத்தை அடைகின்றீர்கள். உங்களிடத்தில் ஆபரணங்கள் போன்றவைகள் அதிகம் இருக்கும். நாங்கள் இராஜயோகம் கற்றுக் கொள்கிறோம், இதன் மூலம் எதிர்காலத்தில் மகாராஜன்- மகாராணி ஆவோம், என்று சொல்வீர்கள். ஆனால் ஸ்ரீமத்படி நடந்தால் தான் அப்படி ஆக முடியும். பிரஜையாகக் கூடியவர்களை (பரி) தேவதைகள் என்று சொல்வோம், என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள், அப்படி கிடையாது. ஸ்ரீமத்படி தெய்வீக குணங்களைத் தாரணை செய்ய வேண்டும். லௌகீக தந்தைக்கு குழந்தைகளிடத்தில் மோகம் இருப்பதால், உயர்ந்த படிப்பு படிக்க வைப்பேன் என்று சொல்கிறார்கள். இந்த தந்தையும் சொல்கிறார், நான் இவர்களை ஒரேயடியாக சொர்க்கத்தின் தேவதைகளாக ஆக்கிவிடுவேன் என்று சொல்கிறார். எந்தளவிற்கு ஸ்ரீமத்படி நடக்கின்றார்களோ அந்தளவிற்கு உயர்ந்தவர்களாக ஆவார்கள். எந்த கஷ்டமும் இல்லை. செல்வந்தர்களுக்கு கேட்பதற்கு நேரம் கிடைப்பதில்லை, ஏழைகளுக்குத் தான் நேரம் கிடைக்கிறது. உங்களுக்கு நேரம் இருப்பதைப் போல் வேறு யாருக்கும் நேரம் இருப்பதில்லை, யாரிடம் பொய்மை அதிகமாக இருக்கிறதோ, அவர்களுக்கு யோகம் வராது.நீ யாருடைய ரதத்திற்கு சேவை செய்து கொண்டிருக்கின்றாய் தெரியுமா என்று குழந்தையிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். நாம் இந்த தலைவருடைய குதிரையைப் பராமரித்துக் கொண்டிருக்கின்றோம் என்று குதிரையைப் பராமரிப்பவருக்குத் தெரியும். இந்த ரதம் யாருடையது என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் சிவபாபாவை நினைத்துக் கொண்டு இந்த ரதத்திற்கு சேவை செய்தீர்கள் என்றால், அனேகரை விட நல்ல பதவி அடைய முடியும். இது ரதமாகும், சிவபாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும். இது கூட நினைவு இருந்தது என்றால் துன்பம் விலகி விடும். பாபா எதற்காக இராஜயோகம் கற்றுத் தருகின்றார்? எதிர்கால புதிய உலகத்திற்காக, அதுவும் சங்கயுகத்தில் கற்றுத் தருகின்றார். கிருஷ்ணர் எப்படி இராஜயோகம் கற்றுத் தருவார்? அவரோ சத்யுக இராஜ்யத்தில் இருந்தார், ஆனால் அந்த இராஜ்யத்தை யார் ஸ்தாபனை செய்தது? பாபா ஆவார். ஆதிகால தேவி-தேவதைகளை அப்படி உருவாக்கியது யார்? யார் இராஜயோகத்தைக் கற்றுக் கொடுத்தது? அவர்கள் கிருஷ்ணருடைய பெயரை எடுக்கிறார்கள். பாபா கூறுகின்றார், நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளீர்கள், எதிர்கால புதிய உலகத்தில் உயர்ந்த பதவி அடைவதற்காக. பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால், தூய்மையான உலகத்திற்கு எஜமானர்கள் ஆவீர்கள், வேறு எந்த உபாயமும் இல்லை. ஒருபுறம் பதீத-பாவனனே (தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர்) வா என்று நினைவு செய்கிறார்கள், மறு புறம், நதிகளை பதீத பாவனி (தூயமையற்றவர்களை தூய்மையாக்குவது).......... என்று சொல்கிறார்கள். எவ்வளவு தவறு! விஷயம் சிறியது தான், ஆனால் மனிதர்களின் கண்கள் திறக்க வேண்டும். பாபா வரும்போது, நான் தான் தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குபன் என்று புரியவைக்கின்றார். நான் தான் உங்களை ஞான ஸ்நானம் செய்ய வைத்து தூய்மையாக ஆக்குகின்றேன். இது தூய்மையற்ற உலகமாகும். சன்னியாசிகள் அனேக விதமான யோகங்களைக் கற்றுத் தருகிறார்கள். ஆனால் இராஜயோகத்தைக் கற்றுக் கொடுப்பவன் நான் ஒருவனே! பரமபிதா பரமாத்மாவைத் தான் பதீத-பாவனன் என்று சொல்லப்படுகிறது. அவரை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும், மேலும் நல்ல நடத்தைகளும் வேண்டும். நாம் 16 கலைகள் நிரம்பியவர்களாக ஆகின்றோம். உணவுப் பழக்கம் மிகவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். சிலர் உடனே தாரணை செய்கிறார்கள். ஒரு வினாடியில் ஜீவன் முக்தி என்று பாடப்பட்டுள்ளது. ஒரு ஜனகர் மட்டுமா இருப்பார். ஒருவருடைய உதாரணம் காட்டப்படுகிறது. ஒரு திரௌபதி மட்டுமா இருப்பார், அனைவருக்கும் கௌரவம் கொடுக்கிறார்கள். ஆண் பெண் இருவரையும் பதீதம் (தூய்மையற்ற நிலை) ஆவதிலிருந்து காப்பாற்றுகிறார். கீதையில் கிருஷ்ணருடைய பெயரை எழுதி விட்டார்கள். இந்த சமயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் என்னவெல்லாம் செய்கின்றீர்களோ, அவையனைத்தும் பக்தி மார்க்கத்தில் நினைவுச் சின்னங்களாகின்றன. சிவபாபாவிற்கு எவ்வளவு பெரிய கோவில் இருக்கிறது. யார் சேவை செய்கிறார்களோ அவர்களுடைய பெயர், புகழ் வெளிவருகிறது. தில்வாலா கோவில் உங்களுடைய துல்லியமான நினைவுச் சின்னமாகும். கீழே தவம் செய்து கொண்டிருக்கிறார்கள், மேலே இராஜ்யத்தின் படங்கள் இருக்கின்றன. நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆவதற்கு, இப்போது பாபாவிடம் யோகம் செய்துக் கொண்டிருக்கின்றீர்கள். சொர்க்கத்தையும் நினைவு செய்கிறீர்கள். யாராவது இறந்துவிட்டால் சொர்க்க பதவி அடைந்துவிட்டார் என்று சொல்கிறார்கள், ஆனால் சொர்க்கம் எங்கே இருக்கிறது, என்பது யாருக்கும் தெரியாது. பாரதம் சொர்க்கமாக இருந்தது என்று புரிந்து கொள்கிறார்கள், பிறகு மேலே இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். பாபா புரிய வைக்கின்றார், ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என்று பாடப்பட்டுள்ளது. இருந்தாலும் ஞானக் கடல் என்று சொல்கிறார்கள். காட்டிலுள்ள மரங்களை பேனாவாக்கி, கடலை மையாக்கினாலும்....... முடியாது, கடைசி வரை செல்லும். ஆகவே முயற்சி (உழைப்பு) செய்யப்படுகிறது. ஒரு வினாடியின் விஷயம் என்பதும் சரிதான். பாபாவை தெரிந்து கொண்டீர்கள் என்றால், பாபாவின் ஆஸ்தி ஜீவன்முக்தி ஆகும். கூடவே சக்கரம் எப்படிச் சுற்றுகிறது? தர்மம் எப்படி ஸ்தாபனை ஆகிறது? என்பதும் புரிய வைக்கப்படுகிறது. புரிந்து கொள்வதற்கு எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. கூடவே பாபாவை நினைவு செய்யுங்கள், ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். நாம் உலகத்தின் இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கின்றோம், என்று நீங்கள் நினைவு செய்கின்றீர்கள், உறுதியும் கொள்கிறீர்கள். பிறகு ஏன் மறந்து விடுகிறீர்கள்? ஆகையினால் பாபா கூறுகின்றார், எவ்வளவு நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு விகர்மங்களை வென்ற நிலை ஏற்படும். கர்மாதீத் நிலையை அடைந்து விட்டால் பிறகு நீங்கள் இங்கு இருக்கவே முடியாது. குழந்தைகளுக்கு பல வருடங்களாகப் புரிய வைக்கப்படுகிறது, விஷயம் மிகவும் சகஜமானதாகும். அலஃப் (அல்லா) மற்றும் பே (ஆஸ்தி - இராஜ்ஜியம்), சக்கரத்தின் இரகசியத்தையும் பாபா புரியவைக்கின்றார். புத்தியில் முழு இரகசியமும் புரிகிறது என்றால், பிறகு மற்றவர்களுக்கும் புரியவைக்கப் படுகிறது. முழு மரமும் புத்தியில் வந்து விடுகிறது. பாபாவிடமிருந்து சகஜத்திலும் சகஜமான ஆஸ்தியை எடுக்க வேண்டும். பாபா யோகம் ஈடுபடுவதே இல்லை, என்று கூறுகிறார்கள். மாயை விகர்மம் செய்ய வைத்து விடுகிறது. குழந்தைகளே ஒருவேளை விகர்மம் செய்து விட்டீர்கள் என்றால் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும், என்று பாபா புரிய வைக்கின்றார். மாயை தேக அபிமானத்தில் கொண்டுவந்து பாவ கர்மங்களைச் செய்ய வைத்து விடுகிறது. பாபா கூறுகின்றார், குழந்தைகளே! என்னுடையவர்களாக ஆகிவிட்டு எந்தவொரு விகர்மமும் செய்யாதீர்கள். எனக்கு ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை, என்று நீங்கள் உறுதியளித்துள்ளீர்கள். எப்படி கன்னியர்களுக்கு நிச்சயமாகி விட்டால் கணவன் மீது எவ்வளவு அன்பு ஏற்பட்டுவிடுகிறது. அதுபோல் எல்லையற்ற தந்தையிடம் எவ்வளவு அன்பு இருக்க வேண்டும். உங்களுடைய அன்பு எவ்வளவு மறைமுகமானதாக இருக்கிறது. அது உலகீய தேக அன்பு, இது ஆன்மீக அன்பாகும். அது பழக்கப்பட்டதாகிவிட்டது. இதை நீங்கள் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள், ஏனென்றால், இது புதிய விஷயமாகும். தன்னை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் இறைவனுடைய உதவியாளர்கள் (குதாயீ கித்மத்கார்) ஆவீர்கள். நீங்கள் ஆன்மீக சேவாதாரிகள். நீங்கள் யுத்த பூமியில் நின்று கொண்டிருக்கின்றீர்கள். பாபா குரு நின்று கொண்டிருக்கின்றார். இந்த 5 விகாரங்களும் பிரவேசம் ஆகாத அளவிற்கு மாயையுடன் முழுமையாக யுத்தம் செய்யுங்கள், என்று பாபா கூறுகின்றார். பாபா இந்த பூதம் வந்து விட்டது என்று கடிதம் எழுதுகிறார்கள். பாபா கூறுகின்றார், இந்த பூதங்களை விரட்டிக் கொண்டே இருங்கள். இது கடைசி வரை வந்து கொண்டுதான் இருக்கும். மேலும் வேகமாக புயல் (மாயை) வரும். அஞ்ஞான காலத்தில் கூட ஒருபோதும் வந்திருக்காது. வானபிரஸ்தத்தில் இருந்தேன், ஒருபோதும் எண்ணத்தில் கூட வரவில்லை, என்று நீங்கள் சொல்வீர்கள். ஞானத்தில் வந்த பிறகு காமத்தின் போதை மீண்டும் வந்து விட்டது. கனவிலும் வந்து கொண்டிருக்கிறது, இது என்ன? இது அதிசயமான ஞானமாக இருக்கிறது. சிலர் குழப்பத்தில் கைவிட்டு கூட சென்று விடுகிறார்கள். நிறைய புயல் வரும், என்று பாபா சொல்லிவிடுகிறார். எந்தளவிற்கு பலசாலியாகிறீர்களோ, மாயை தானே தோற்று விடும் , ஆகையினால் மகாவீரனாகி உறுதியாக இருக்க வேண்டும். பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். கர்மத்தில் வரக்கூடாது. கர்மத்தில் வருவதின் மூலம் விகர்மமாக ஆகிவிடுகிறது. கெட்ட பழக்கங்களை நீக்குவதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். அழிவற்ற டாக்டருக்குத் தெரியும், இந்த பாபாவும் (பிரம்மா) தெரிந்துள்ளார். மாயையின் அனேக விதமான தடைகள் ஏற்படுகிறது. மிகவும் சுத்தமானவர்களாக (தூய்மை) ஆக வேண்டும். சூரியவம்சத்தவர்களாக ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், அதற்குத் தகுதியானவர்களாக ஆக வேண்டும். இது பிரஜாயோகம் இல்லை, இராஜயோகமாகும். ஆகையினால் முயற்சி செய்து இராஜ்யத்தை அடைய வேண்டும். நீங்கள் யுக்தியோடு மறைமுகமான முறையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நாங்கள் துக்கத்திலிருந்து விடுபட யாரை நினைவு செய்ய வேண்டும் சொல்லுங்கள்?, என்று கேளுங்கள். பாரதத்தின் பழமையான யோகம் என்று சொல்லுகிறார்கள், அது என்ன? நாங்கள் இராஜா ஆவதற்கு எங்களுக்கு இராஜயோகம் கற்றுத் தருவீர்களா? இது போன்று விஷயங்களைப் பேசி ஞானத்திற்கு அழைத்து வர வேண்டும். ஒரே விஷயத்தில் அவர்களுடைய புத்தி மந்தமாகிவிடும் அளவிற்கு உங்களுடைய பலத்தைக் காட்டுங்கள். யுக்தியானவர்கள் வேண்டும், அதனால் தான் பாபா கேட்கின்றார், அந்தளவிற்கு சேவாதாரியாக ஆகியுள்ளீர்களா? மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் உலகம் மிகவும் அழுக்கடைந்துள்ளது. திரௌபதிக்கு பின்னால் கீசகன் சென்றான் ........., இது கூட ஒரு கதை இருக்கிறது. ஆகையினால் பாபா கூறுகின்றார், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இராஜயோகம் தான் முக்கியமான விஷயமாகும். இராஜயோகம் தந்தை கற்றுக் கொடுத்தார், குழந்தை யின் பெயரை போட்டுவிட்டார்கள், என்று யாருக்கு வேண்டுமானாலும் புரிய வையுங்கள். கிருஷ்ணர் பகவான் இல்லவே இல்லை என்று நிரூபியுங்கள். கீதையின் பகவான் சிவன் ஆவார், அவர் மூலம் தான் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. புரிய வைப்பதற்கு யுக்தி வேண்டும்.உங்களுடையது ஆன்மீக சேவையாகும். அவர்கள் உடல் சார்ந்த சமூக சேவை செய்கிறார்கள். அது உடல் சார்ந்த சமுதாயமாகும். இது ஆன்மீக சமுதாயமாகும். ஆத்மாவிற்கு ஊசி போடப்படுகிறது, அதைத் தான் சொல்கிறார்கள் ஞான மை இட்டார் சத்குரு என்று........ ஆனால் இப்போது ஆத்மாவின் ஜோதி அணைந்திருக்கிறது. மனிதர்கள் இறந்துவிட்டால் தீபம் ஏற்றுகிறார்கள். ஆத்மா இருளில் செல்லும் என்று புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் எல்லையற்ற இருளாகும். அரைகல்பம் நெய் விடுவது இல்லை. ஆத்மாவின் ஜோதி அணைந்துவிட்டது. இப்போது ஞானம் எனும் நெய் ஊற்றப்படுவதின் மூலம் வெளிச்சமாகி விடுகிறது. இப்போது என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று பாபா குழந்தைகளுக்குக் கூறுகின்றார். இதை கிருஷ்ணர் கூற முடியாது. நாம் ஆத்மாக்கள் சகோதர - சகோதரர்கள், ஆஸ்தி எடுத்துக் கொண்டிருக்கின்றோம். நல்லது நாம் எவ்வளவு நேரம் நினைவில் இருக்கிறோம் -- இந்த சார்ட் வைப்பது நல்லதாகும். பயிற்சி செய்து-செய்து அந்த நிலை உறுதியாகி விடும். இந்த யுக்தி நன்றாக இருக்கிறது, சேவையும் செய்து கொண்டே இருங்கள். சார்ட்டும் (குறிப்பு) வையுங்கள், பிறகு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருப்பீர்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாய் தந்தையான பாப் தாதாவின் அன்பு நினைவும், காலை வணக்கமும் உரித்தாகுக. ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகளுக்கு வணக்கம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

(1) எந்தவொரு பூதமும் பிரவேசம் ஆகாத அளவிற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாயையின் புயல்களில் ஒருபோதும் குழப்பமடையக் கூடாது. கெட்ட பழக்கங்களை நீக்கி விட வேண்டும்.(2) நினைவினுடைய சார்ட் வைக்க வேண்டும், கூடவே ஆன்மீக சேவாதாரி ஆகி ஆத்மாக்களுக்கு ஞான ஊசி போட வேண்டும்.வரதானம் :

தனது வாழ்க்கையை வைரத்திற்குச் சமமாக விலை மதிப்புள்ளதாக ஆக்கக் கூடிய நினைவு மற்றும் மறத்தல் எனும் சக்கரத்திலிருந்து முக்தி அடைக !இந்த சங்கமயுகம் ஸ்மிருத்தி (நினைவு) யின் யுகமாகும். கலியுகம் விஸ்மிருத்தியின் (மறதி) யுகமாகும். ஒருவேளை தனது சிரேஷ்ட பாக்கியத்தின் சதா நினைவிருந்தால், வைரத்திற்குச் சமமாக விலை மதிப்பானவர் கள், மறதி என்றால் கல் போன்றதாகும். இது நினைவு மறதியின் விளையாட்டாகும். சங்கமயுகத்தில் வசிப்பவர்கள் ஒரு போதும் கலியுகத்தில் சுற்றி வர சொல்ல முடியாது. சிறிதே புத்தி சென்றாலும், சக்கரத்தில் சிக்கிக் கொள்வர், ஏனெனில் கலியுகத்தில் மிகவும் பிரகாசம் உள்ளது. அது ஏமாற்றக் கூடிய பிரகாசமாகும்.சுலோகன் :

தனது கர்மேந்திரியங்களை சட்டம், ஒழுங்கு படி, நடத்துவோரே உண்மையான யோகிகளாவர்.

***OM SHANTI***

Powered by Blogger.