BK Murli 23 December 2017 Tamil


BK Murli 23 December 2017 Tamil

23.12.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த படிப்பில் சப்தத்திற்கு அவசியம் இல்லை, குழந்தைகளே! அமைதியாக இருந்து என்னை நினைவு செய்யுங்கள், என்ற ஒரே ஒரு மந்திரம் தான் தந்தை வழங்கியுள்ளார்.கேள்வி:

ஈஸ்வரிய போதையுள்ள குழந்தைகளின் அடையாளம் என்ன?பதில்:

ஈஸ்வரிய போதையிலுள்ள குழந்தைகளின் அடையாளம் மிகவும் மேன்மையாக (ராயல்) இருக்கும். (2) வாயினால் மிகவும் குறைவாகப் பேசுவார்கள். (3) அவர்களது வாயிலிருந்து எப்போதும் ஞான இரத்தினம் தான் வெளிவரும். மேன்மையான மனிதர்கள் மிகக் குறைவாக பேசுவார்கள். நீங்கள் ஈஸ்வரிய வாரிசுகள், நீங்கள் மேன்மைத்தன்மையோடு இருக்க வேண்டும்.ஓம் சாந்தி!

எல்லையற்ற தந்தை அமர்ந்து எல்லையற்ற குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். எல்லையற்ற குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றேன் என்று வேறு யாரும் கூறமாட்டார்கள். சிவ தந்தை என்று யாரை அழைக்கிறோமோ அவர் தான் நமது எல்லையற்ற தந்தை என குழந்தைகள் புரிந்துள்ளனர். பல மனிதர்களுக்குக் கூட சிவன் என்று பெயர் உள்ளது. ஆனால் அவர்கள் எல்லையற்ற தந்தை கிடையாது. எல்லையற்ற தந்தை ஒருவர் தான். அவர் பரந்தாமத்திலிருந்து வந்துள்ளார். நிராகாரமான (உருவமற்ற) அவரைத்தான் அழைக்கின்றனர். அவரை பகவான் என்று கூறுகிறோம். பிரம்மா, விஷ்ணு, சங்கர் தேவதைகள். பரந்தாமத்திலிருக்கும் பகவான் தான் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை. நீங்கள் எந்த குருவின் முன்னாலும் வரவில்லை. நாம் நல்லையற்ற தந்தையின் முன்னால் அமர்ந்துள்ளோம் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லையற்ற தந்தை மதுபனில் வந்துள்ளார். அவர்கள் கிருஷ்ணர் மதுவனத்தில் வந்தார் என்று கூறுகிறார்கள். ஆனால் இல்லை. எல்லையற்ற தந்தையின் முரளி தான் மதுபனில் ஒலிக்கின்றது. தந்தை புரிய வைக்கின்றார். நான் கல்ப கல்பமாக சங்கம யுகத்தில் தான் வருகிறேன் மற்றபடி ஒவ்வொரு யுகத்திலும் வருவது கிடையாது. ஒவ்வொரு யுகத்திலும் வருகின்றார் என்று கூறி தவறு செய்துவிட்டார்கள். சாஸ்திரங்கள் என்னென்ன உள்ளனவோ அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையது. அவை அனாதியானது (ஆரம்பம் இல்லாதது) கிடையாது. பாபா புரிய வைத்துள்ளார், இந்த கடல் மற்றும் நீரின் நதிகள் தான் அனாதியானது. மற்றப்படி பக்தி அனாதியானது கிடையாது. சத்யுகம், திரேதா யுகத்தில் பக்தி இருக்காது என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். பக்தி துவாபர யுகத்தில் தான் ஆரம்பிக்கின்றது. ஞானக்கடலான எல்லையற்ற தந்தை இந்த பிரம்மா மூலமாக ஞானம் கூறுகின்றார். சூட்சும வதனத்தில் உட்கார்ந்து கூற மாட்டார் அல்லவா? தந்தை இங்கு நமக்கு முன்னால் அமர்ந்து புரிய வைக்கின்றார். அதனால் தான் தூர தேசத்தில் வசிப்பவர்... என்று பாடுகின்றனர். நாம் ஆத்மாக்கள் சகோதரர்கள் என்று அறிந்துள்ளீர்கள். நாம் தூர தேசத்தில் வசிப்பவர்கள். இவ்வாறு பாடுபவர்கள் ஒன்றும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் பிரயாணிகள், தூரதேசத்திலிருந்து பாகத்தை நடிக்க வந்துள்ளீர்கள். இது கர்ம சேக்ஷத்திரம் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். இங்கு வெற்றி தோல்வியின் விளையாட்டு உள்ளது. இதுவும் தந்தை தான் புரிய வைக்கின்றார். அனைத்து மனிதர்களும் அமைதி வேண்டும் என்று விரும்புகிறார்கள். முக்தி தாமத்திற்காக சாந்தி கேட்பதில்லை. இங்கேயே அமைதி வேண்டும் என்று கேட்கின்றனர். ஆனால் இங்கு மன அமைதி கிடைக்காது. சன்னியாசிகள் அமைதிக்காக வனத்திற்கு செல்கின்றனர். ஆனால் ஆத்மாக்களாகிய நமக்கு நிராகார உலகில் தான் அமைதி கிடைக்கும் என்பது அவர்களுக்கு தெரியாது. ஆத்மா, பிரம்மம் அல்லது பரமாத்மாவில் கலந்து விடும் என்று புரிந்துள்ளனர். ஆத்மாவின் சுய தர்மமே அமைதி தான் என்று கூட அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆத்மா தான் இவற்றை பேசுகின்றது. ஆத்மா சாந்தி தாமத்தில் வசிக்கின்றது. அங்கு தான் ஆத்மாவிற்கு அமைதி கிடைக்கும். இச்சமயத்தில் அனைவருக்கும் அமைதி வேண்டும். சுகத்தை எந்த சன்னியாசியும் ஏற்றுக் கொள்வது கிடையாது. சுகத்தை நிந்தனை செய்கின்றார்கள் ஏனென்றால் சாஸ்திரங்களில் சத்யுக, திரேதாயுகத்தில் கூட கம்சன், ஜராசந்தன் இருந்தார்கள் என்று காண்பிக்கப்பட்டுள்ளது. லட்சுமி-நாராயணனை மறந்து விட்டார்கள். தமோபிரதான புத்தி ஆகிவிட்டது. தந்தை கூறுகிறார் நான் நிராகார். பரமாத்மா பெயர் ரூபம் இல்லாதவர் என்று உலகிய மனிதர்கள் கூறுகிறார்கள். ஒரு பக்கம் அவரது மகிமையைப் பாடுகின்றனர். பிறகு அவர் பெயர் ரூபம் இல்லாதவர் என்கின்றனர். பெயர் ரூபம் இல்லாதவர் எப்படி சர்வ வியாபியாக இருக்க முடியும். ஆத்மாவிற்கு அவசியம் ரூபம் உள்ளது. ஆத்மா பெயர்-ரூபம் இல்லாதது என்று யாரும் கூறமுடியாது. இரு புருவ மத்தியில் நட்சத்திரம்.... என்று கூறுகின்றனர். அவ்வாறென்றால் ஆத்மா தான் ஒரு உடலை விட்டு மற்றொன்று எடுக்கின்றது. பரமாத்மா புனர் ஜென்மத்தில் வருவது கிடையாது. பிறப்பு இறப்பில் ஆத்மா தான் வருகிறது. இது உங்களது படிப்பு. படிப்பில் எந்த இசைக்கருவியும் வாசிக்க மாட்டார்கள். உங்களது படிப்பு அதிகாலையில் நடக்கிறது. அந்த சமயத்தில் நீங்கள் எந்த பாட்டும் கூடபோட வேண்டிய அவசியம் இல்லை. நாம் சப்தங்களை கடந்து செல்கிறோம். இங்கு அனைவரையும் எழுப்புவதற்காக பாடல் போட வேண்டியுள்ளது. முரளி படிக்கும்போது அல்லது கேட்பதில் எந்த சப்தமும் வெளியே செல்லாது. படிப்பில் சப்தம் ஏற்படாது. குழந்தைகளே! அமைதியாக இருந்து என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை அமர்ந்து மந்திரம் கூறுகின்றார். ஒவ்வொருவருக்கும் அமர்ந்து காதில் மந்திரம் சொல்ல இங்கு எந்த குருவும் இல்லை. பிறகு யாருக்கும் சொல்லாதீர்கள் என்று கூறுகின்றனர். இங்கு அந்த விசயம் இல்லை. பாபா ஞானக்கடல்.இது கீதா பாடசாலை. பாடசாலையில் மந்திரம் சொல்வார்களா என்ன? நீங்கள் யாருக்காவது தனியாக புரிய வைக்கும்போது பாட்டு போடுவீர்களா? இல்லை. வகுப்பிலும் இவ்வாறு புரிய வைக்க வேண்டும். சித்திரங்களும் எதிரில் இருக்கின்றது. யார் ஒருபோதும் வரை படம் பார்த்ததேயில்லையோ அவர்கள் இங்கிலாந்து, நேபாளம், எங்கு உள்ளது என்று எப்படி புரிந்து கொள்வார்கள். வரைபடம் பார்த்திருந்தால் புத்தியில் வரும். குழந்தைகளாகிய உங்களுக்கு சித்திரங்களைக் காண்பித்து நாடகத்தின் முழு ரகசியத்தையும் புரிய வைக்கப்படுகிறது. இந்த ஞானத்தை சித்திரங்களை காண்பிக்காமலும் புரிய வைக்கலாம். மனிதர்களுக்கு பகவானைப் பற்றி எதுவும் தெரியாது. கல்பத்தின் ஆயுள் நீண்டதாக கூறிவிட்டனர். இப்போது தந்தை உங்களுக்குப் புரிய வைத்துள்ளார். நீங்கள் பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். நான்கு யுகங்களை உடையது, நான்கு பாகம் செய்ய வேண்டும். பிறகு மொத்தமாக பாதி பாதியாக காண்பிக்க வேண்டும். பாதி புது உலகம். பாதி பழைய உலகம். புதிய உலகத்திற்கு ஆயுன் நீண்டதாக காண் பிக்க முடியாது. உதாரணமாக ஒரு வீட்டிற்கு 50 வருடம் ஆயுளாகி விட்டது என்றால் பாதியில் அதனை பழையது எனக் கூறுவர். உலகத்தினுடைய விஷயமும் அதே போன்றது தான். இவை அனைத்தும் தந்தை தான் வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். இதில் பாட்டு பாடுவதற்கு அல்லது கவிதை கூறுவதற்கான அவசியம் இல்லை. சங்கமயுக பிராமணர்களாகிய நம்முடைய பழக்க வழக்கமே முற்றிலும் தனிப்பட்டது. சங்கமயுகம் என்று எதைக் கூறுகின்றோம்? சங்கமத்தில் என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது. தூர தேசத்தில் வசிக்கும் தந்தை தூய்மை இல்லாத உலகத்திற்கு வந்துள்ளார் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கர் தூர தேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சிவபாபா மற்றும் ஆத்மாக்களுடைய தேசம் தான் தூர தேசம். நாம் அனைவரும் நிராகார உலகில் வசிப்பவர்கள். முதலில் நிராகார (அசரீரி) உலகம். பிறகு ஆகார சூட்சும உலகம். பிறகு சாகார (சரீரம்) உலகம். நிராகார உலகத்திலிருந்து முதலில் தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்த ஆத்மாக்கள் வருகின்றனர். முதலில் சூரிய வம்ச குலம் இங்கு இருந்தது. பிறகு சந்திர வம்ச குலத்தின் ஆத்மாக்கள் வருவார்கள். சூரிய வம்சிகள் இருக்கும் போது சந்திர வம்சிகள் கிடையாது. சந்திர வம்சிகள் இருக்கும் போது சூரிய வம்சிகள் வாழ்ந்து சென்றார்கள் என்று கூறுவார்கள். திரேதா யுகத்தில் லெட்சுமி, நாராயணருடைய பாகம் கடந்து சென்றது என்று கூறுவார்கள். மற்றபடி நாம் பிறகு வைசியர்கள், சூத்திரர்கள் ஆவோம் என்று கூற மாட்டார்கள். இந்த ஞானம் உங்களுக்கு இப்பொழுது தான் உள்ளது. தந்தை உங்களுக்கு சக்கரத்தின் இரகசியத்தைப் புரிய வைத்துள்ளார். அவர்கள் திரிமூர்த்தியை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் சிவனை அதில் காண்பிக்கவில்லை. சிவனைத் தெரிந்தால் தான் சக்கரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். சிவனை தெரியாத காரணத்தினால் சக்கரத்தையும் தெரிந்து கொள்ளவில்லை. தூர தேசத்தில் வசிப்பவரே... என்று பாட்டு பாடுகிறார்கள். ஆனால் பகவான் தான் பதீத பாவனன் (தூய்மை படுத்துபவர்) என்று தெரிந்து கொள்ளவில்லை. நம்முடைய இந்த யக்ஞம் மிகவும் பெரியது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த யக்ஞத்தில் எள்ளு... போன்றவைகளை போடுகிறார்கள். இது ராஜஸ்வ அஸ்வ மேத ருத்ர ஞான யக்ஞம். இந்த யக்ஞத்தில் முழு பழைய உலகின் பொருட்களும் சுவாகா ஆக வேண்டும். யார் இராஜ்யம் அடைய வேண்டுமோ அவர்கள் முழுமையாக யோகத்தில் இருப்பார்கள். திரேதா காலத்திலும் கூட இரண்டு கலை குறைவாக உள்ளது என்று கூறுகிறார்கள். முதலில் 1250 வருடங்கள் சத்யுகத்தினுடையது. பிறகு 625 வருடங்களில் ஒரு கலை குறைவாக உள்ளது. ஏனென்றால் இறங்கும் கலை அல்லவா. திரேதா யுகத்தில் மேலும் கலப்படம் ஆகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்பட்டு இருக்கின்றது - எவ்வளவு தந்தையுடன் புத்தி யோகம் இருக்குமோ அந்த அளவுக்கு கலப்படமான அசுத்தங்கள் நீங்கும். இல்லை யென்றால் தண்டனை அடைந்து பிறகு வெள்ளி திரேதா யுகத்தில் வர வேண்டி இருக்கும். கிருஷ்ணர் மீதும் எல்லோரும் அன்பு காட்டுகிறார்கள். ஊஞ்சலில் வைத்து ஊஞ்சல் ஆட்டுகிறார்கள். இராமரை அந்த அளவுக்கு ஊஞ்சலாட்ட மாட்டார்கள். இன்றைய காலத்தில் போட்டி போடுகிறார்கள். ஆனால் யாருக்கும் லட்சுமி, நாராயணர் தான் சிறு வயதில் இராதை, கிருஷ்ணர் என்பது தெரியாது. இராதை, கிருஷ்ணர் மீது நிறைய குற்றம் கூறுகிறார்கள். லட்சுமி, நாராயணர் மீது கூறுவதில்லை. கிருஷ்ணர் சிறு குழந்தை. குழந்தையும், மகாத்மாவும் சமமானவர்கள் என்று கூறப்படுகிறது. மகாத்மாக்கள் சந்நியாசம் செய்கிறார்கள். கிருஷ்ணர் சந்நியாசம் செய்வதற்கு தூய்மை இல்லாதவர் கிடையாது. சிறு குழந்தை தூய்மையாக இருக்கின்றது. அதனால் அதன் மீது அனைவரும் அன்பு காட்டுகிறார்கள். முதலில் சதோ பிரதான நிலை. பிறகு சதோ. ரஜோ, தமோவில் வருகிறது. கிருஷ்ணரை எல்வோரும் மிகவும் நினைவு செய்கின்றனர். பாபாவுடைய மன்மனாபவ மந்திரம் மிகவும் புகழ் வாய்ந்தது. ஆத்ம அபிமானி ஆகுங்கள். தேகத்தினுடைய அனைத்து தர்மங்களையும் விட்டு விடுங்கள். இந்த ஞானத்தை நீங்கள் எந்த தர்மத்தினைச் சேர்ந்தவருக்கும் கொடுக்க முடியும். எல்லையற்ற தந்தை கூறுகிறார் - அல்லாவை நினைவு செய்யுங்கள். ஆத்மா அல்லாவின் குழந்தை. ஆத்மா கூறுகிறது - குதா தாளா, அல்லா ஸாயி. (தலைவனாகிய அல்லா) எப்போது அல்லா என்று கூறுகின்றார்களோ அப்போது அவசியம் ஆத்மாவின் தந்தையான நிராகாரமான வரைத்தான் நினைவு செய்கின்றார்கள். அல்லா என்று கூறும் போது பார்வை மேலே செல்கிறது. அல்லா மேலே தான் இருக்கின்றார் என்பது புத்தியில் வருகின்றது. இது சாகார உலகம். நாம் அங்கு வசிக்கக்கூடியவர்கள். தந்தை கூறுகிறார் - நானும் பிரயாணி (பயணம் செய்பவர்), நீங்களும் பிரயாணி. ஆனால் பிரயாணிகளாகிய நீங்கள் புனர் ஜென்மத்தில் வருகின்றீர்கள். பிரயாணியாகிய நான் புனர் ஜென்மத்தில் வருவது கிடையாது. நான் உங்களை அசுத்தமான புனர் ஜென்மத்திலிருந்து விடுவிக்கின்றேன். இந்த இராவண இராஜ்யத்தில் நீங்கள் மிகவும் துக்கமாக உள்ளீர்கள் அதனால் தான் என்னை அழைக்கின்றீர்கள். தந்தை எவ்வளவு நல்ல நல்ல விஷயங்களை உங்களுக்குப் புரிய வைக்கின்றார். குழந்தைகளே இப்போது விளையாட்டு முடிவடையப் போகிறது. இங்கு அதிக துக்கம் உள்ளது. ஒவ்வொரு பொருளும் எவ்வளவு அதிகமான விலை உடையதாக ஆகி விட்டது. பிறகு விலை குறையாது. முந்தைய (ஆரம்ப) காலத்தில் விலை மலிவாக இருந்தது. எல்லோரிடத்திலும் தானியம் போன்றவை மிக அதிகமாக இருந்தது. சத்யுகத்தை பொற்காலம் என்று கூறுகின்றோம். அங்கு தங்க நாணயங்கள் இருந்தது. அங்கு தங்கமோ தங்கம் தான் இருக்கும். வெள்ளி கூட கிடையாது. அங்கு சந்தை கூட மிகவும் பகட்டாக இருக்கும். வைரம் மாணிக்கம் போன்றவற்றால் என்னவெல்லாம் அணிந்து கொண்டு இருப்பார்கள். அங்கு வைரம் மாணிக்கங்களை வைத்துத்தான் விளையாடுவார்கள். வயல் வெளிகள் நிறைய இருக்கும். இங்கு அமெரிக்காவில் தானியங்கள் அவ்வளவு அதிகமாக இருக்கிறது, தானியங்களை எரித்து விடுகிறார்கள். இப்போது என்ன சேமிப்பில் இருக்கின்றதோ அவற்றை விற்று விடுகிறார்கள். பாரதத்திற்கு தானம் செய்கின்றார்கள். பாரதத்தின் நிலைமை என்னவாகி விட்டது பாருங்கள். தந்தை கூறுகிறார் – நான் உங்களுக்கு எவ்வளவு இராஜ்ய பாக்கியத்தைக் கொடுத்து இருந்தேன். உங்களுடைய தேவி தேவதா தர்மம் மிகவும் சுகம் தரக் கூடியது. அதைத்தான் பொற்காலம் என்று கூறுகின்றோம். முகம்மது கஜினி எவ்வளவு வைரம், மாணிக்கங்கள் நிறைந்த பொருட்களை ஒட்டகத்தில் நிரப்பிக் கொண்டு சென்றார். எவ்வளவு பொருட்களை எடுத்துச் சென்றிருப்பார்? அதை யாரும் கணக்கிடவே முடியாது. இப்போது நீங்கள் மீண்டும் செல்வந்தர்களாக ஆகிக்கொண்டு இருக்கின்றீர்கள். ஒரு பிரயாணி தான் முழு உலகத்தையும் அழகாக மாற்றக்கூடியவர். சுடு காட்டை மாற்றி தேவதைகளுடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். இங்கு குழந்தைகள் நீங்கள் புத்துணர்வு பெற வந்துள்ளீர்கள். பிரயாணியை நினைவு செய்கின்றீர்கள். நீங்களும் பிரயாணிகள் தான். இங்கே வந்து 5 தத்துவங்களாலான சரீரத்தை எடுத்துள்ளீர்கள். சூட்சம வதனத்தில் 5 தத்துவங்கள் கிடையாது. இங்கு தான் 5 தத்துவங்கள் இருக்கின்றது இங்கு தான் நடிப்பை நடிக்கின்றீர்கள். நம்முடைய உண்மையான தேசம் அங்கு உள்ளது. இச்சமயத்தில் ஆத்மா தூய்மையை இழந்து விட்டது. அதனால் தந்தையை அழைக்கின்றார்கள் - நீங்கள் வாருங்கள். வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று. இராவணன் நம்மை தூய்மையை இழக்க வைத்து கருப்பாக்கி விட்டான். எப்போதிருந்து இராவணன் வர ஆரம்பித்தானோ அப்போதிருந்தே தூய்மையை இழந்து விட்டோம். இப்போது நாம் முன்பு தூய்மையாக இருந்தோம் என்பதை அவசியம் புரிந்து கொண்டீர்கள் அதனால் தான் . . . ஏ பதீத பாவனா வாருங்கள் என்று நினைவு செய்கின்றீர்கள். யாரோ ஒருவர் இருக்கின்றார். அவரைத்தான் அழைக்கின்றார்கள். குழந்தைகள் தந்தையை அழைக்கின்றார்கள் - ஓ, இறை தந்தையே!. அவருடைய பெயரே சொர்க்கத்தை படைக்கும் இறை தந்தை. அப்படியெனில் அவசியம் சொர்க்கத்தைத்தான் அவர் படைப்பார்.பாபா புரிய வைக்கின்றார் - படிப்பில் பாட்டு, இசைக்கான அவசியம் இல்லை. பாபா கூறி இருக்கின்றார் - சில நல்ல நல்ல பாடல்கள் இருக்கின்றன. அதை பாபா தயார் செய்ய வைத்துள்ளார். அவற்றை எப்போதெல்லாம் மனச் சோர்வு ஏற்படுகிறதோ அப்போது உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்துக் கொள்ள தாராளமாக அந்த பாடல்களைக் கேளுங்கள். ஆனால் எவ்வளவு சப்தத்தை குறைவாக வைக்கின்றீர்களோ அவ்வளவு நல்லது. மேன்மையான மனிதர்கள் குறைவான சப்தமே எழுப்புவார்கள். வாயினால் குறைவாகப் பேசுவார்கள். வாயிலிருந்து இரத்தினங்கள்தான் வெளி வரும். நீங்கள் ஈஸ்வரனுடைய குழந்தைகள். அதனால் எவ்வளவு மேன்மை குணம், எவ்வளவு நஷா இருக்க வேண்டும். உங்களுக்கு எவ்வளவு போதை இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ராஜாவுடைய குழந்தைகளுக்கு இருக்காது. நல்லது,இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம் :

(1) தன்னை எப்போதும் புத்துணர்வுடன் இருக்க வேண்டும். வாயிலிருந்து இரத்தினங்கள் தான் வெளி வர வேண்டும். எப்போதாவது மனச்சோர்வு ஏற்பட்டால் பாபாவால் உருவாக்கப் பட்ட பாடல்களைக் கேளுங்கள்.(2) ஆத்ம அபிமானி ஆவதற்கான பயிற்சி செய்யுங்கள். நினைவில் இருந்து கறையை நீக்குவதற்கான முயற்சி செய்யுங்கள்.வரதானம் :-

நடக்க முடியததையும் கூட நடத்திக் காட்டக் கூடிய யோகசொரூப ஆத்மா ஆகுக !சாந்தி சக்தி அனைத்தையும் விட சிரேஷ்டமான சக்தி ஆகும். மற்ற அனைத்து சக்திகளும் இந்த ஒரு சக்தியிலிருந்து உருவானவை ஆகும்.. விஞ்ஞான சக்தி கூட இந்த சாந்தி சக்தியிலிருந்து உருவாகியுள்ளது தான். சாந்தி சக்தி மூலம் நடக்க முடியாததையும் கூட நடத்திக் காட்ட முடியும். எதை உலகத்தினர் நடக்க முடியாதது என்று கூறுகின்றனரோ, அது யோக சொரூப ஆத்ம குழைந்தைகளாகிய உங்களுக்கு சகஜமாக நடக்கக் கூடியதாக இருக்கின்றது. பரமாத்மாவோ மிகவும் உயர்ந்த ஆயிரம் சூரியனைவிட பிரகாசமானவர் என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால், நாங்கள் அவரை அடைந்துவிட்டோம், சாந்தி சக்தி மூலமாக அன்புக் கடல் மூழ்கி விட்டோம் என்று நீங்கள் தன்னுடைய அனுபவத்தில் கூறுகிறீர்கள்.சுலோகன்:-.

நிமித்தம் ஆகி படைப்பு காரியம் செய்யக்கூடியவர்கள் தான் உண்மையான சேவாதாரி ஆவார்கள்.***OM SHANTI***

Powered by Blogger.