BK Murli 24 December 2017 Tamil


BK Murli 24 December 2017 Tamil24.12.2017   காலை முரளி    ஓம்சாந்தி      அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           13.04.1983           மதுபன்பரசிந்தன் (மற்றவர்கள்/மற்றவைகளின் சிந்தனை) மற்றும் பரதர்ஷணில் (மற்றவர்களை/மற்றவற்றை பார்ப்பது) - னால் ஏற்படும் நஷ்டங்கள்அனைத்து சிரேஷ்ட ஆத்மாக்கள் சங்கமயுகத்தின் வைரத்திற்கு சமமான சிரேஷ்ட மேளாவைக் (சந்திப்பை) கொண்டாடுவதற்காக வந்திருக்கிறீர்கள், அதாவது வைரத்திற்கு சமமான விலைமதிக்க முடியாத வாழ்க்கையை நிரந்தரமாக அனுபவம் செய்வதற்கான விசேஷ சாதனம் மீண்டும் நினைவு சொரூபம் மற்றும் சக்திசாலியான சொரூபம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதற்காக தந்தையிடமிருந்து அல்லது தன்னுடைய பரிவாரத்திலிருந்து அல்லது வரதான பூமியிலிருந்து அனுபவம் பெறுவதற்காக வந்திருக்கிறீர்கள். வைரத்திற்கு சமமான வாழ்க்கை பிறந்ததிலிருந்தே கிடைத்திருக்கிறது. ஆனால் வைரம் எப்பொழுதும் மின்னிக் கொண்டிருக்க வேண்டும், எந்த விதமான தூசியும் கறையும் படிந்து விடக்கூடாது, அதற்காக மீண்டும், மீண்டும் பாஷ் செய்வதற்காக வருகிறார்கள், அதற்காகத்தான் வருகிறீர்கள் இல்லையா? பாப்தாதா தன்னுடைய வைரத்திற்கு சமமான குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியும் அடைகிறார், மேலும் எந்தக் குழந்தைகளுக்கு தூசியின் பாதிப்பு வந்து விடுகிறது, மேலும் தொடர்பின் பாதிப்பில் வருவதினால் சிலருக்கு சிறிய மற்றும் பெரிய கறையும் பதிந்து விடுகிறது என்பதை சோதனையும் செய்கிறார், எந்த தொடர்பு கறை ஏற்படுத்துகிறது. அதற்கான மூல காரணக்கள் இரண்டு மற்றும் முக்கியமான விஷயக்கள் இரண்டு.ஒன்று - பரசிந்தனை, இன்னொன்று - பரதர்ஷன், பரசிந்தனையில் வீணான சிந்தனையும் வந்து விடுகிறது, இந்த இரண்டு விஷயங்கள் தான் தீய சேர்க்கையின் பாதிப்பில் சுத்தமான வைரத்தை கறையுள்ளதாக ஆக்கிவிடுகிறது. இதே பரதர்ஷண், பரசிந்தனையின் விஷயங்களை வைத்து சென்ற கல்பத்தின் நினைவுச் சின்னமாக இராமாயண கதை உருவாக்கப் பட்டிருக்கிறது. கீதா ஞானம் மறந்து விடுகிறது. கீதா ஞானம் என்றால் சயசிந்தனை, சுயதர்ஷண சக்ரதாரி ஆவது, கீதா ஞானத்தின் சாரத்தை மறந்து நடைமுறையில் இராமாயணக் கதையை கொண்டு வருகிறார்கள். யார் மரியாதை என்ற கோட்டிற்கு வெளியில் சென்று விடுகிறார் களோ, அவர்கள் தான் சீதையாகவும் ஆகிறார்கள்.அது ஒன்று முறையிடுவது, மற்றொன்று நினைவு செய்வது. சீதையை இரண்டு ரூபத்தில் காண்பித்திருக்கிறார்கள். ஒன்று எப்பொழுதும் உடன் இருப்பவர் மற்றும் இன்னொன்று சோக வனத்தில் இருப்பவர். தீய சேர்க்கையில் வந்து சோகவனத்து சீதை ஆகிவிடுகிறார்கள். அது ஒன்று முறையீடு செய்யும் ரூபத்தில் வந்து விடுகிறார்களோ, அப்பொழுது முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு வந்து விடுகிறார்கள், எனவே எப்பொழுதும் கறையற்ற உண்மையான வைரமாக, மின்னிக் கொண்டிருக்கும் வைரமாக, விலை மதிக்க முடியாத வைரம் ஆகுங்கள், இந்த இரண்டு விஷயங்களிலிருந்து எப்பொழுதும் விலகியிருந்தீர்கள் என்றால், தூசி மற்றும் கறை பட முடியாது, விரும்புவதில்லை, ஆனால் செய்து விடுகிறார்கள், புதுப் புது இரமணிகரமான பெரிய விஷயத்தை கூறினோம் என்றால், மிகப்பெரிய சாஸ்திரம் ஆகிவிடும், ஆனால் காரணம் என்ன? தன்னுடைய பலஹீனம், ஆனால் தன்னுடைய பலஹீனத்தின் மேல் வெள்ளை அடித்து விடுகிறீர்கள், மேலும் மறைப்பதற்காக மற்றவர்களின் காரணங்களின் கதைகளை நீளமாக்கி விடுகிறீர்கள், இதன் மூலமாகத் தான் பரதர்ஷணம், பரசிந்தனை தொடங்கி விடுகிறது எனவே இந்த விசேஷ மூல ஆதாரத்தை, மூல விதையை அழியுங்கள், அந்த மாதிரி விடைபெற்றுச் சென்றதின் பாராட்டு விழாவை கொண்டாடுங்கள்,மேளாவில் விழா கொண்டாடுகிறீர்கள் தான் இல்லையா! இந்த விழாவைக் கொண்டாடுவதைதத் தான் தந்தைக்கு சமமாக ஆவது என்று கூறப்படுகிறது. தன்னுடைய மகிமையையோ மிக அதிகம் கேட்டிருக்கிறீர்கள், மகிமையில் கூட எந்தக் குறையும் இருக்கவில்லை, ஏனென்றால் எது தந்தையின் மகிமையோ, அதுதான் குழந்தைகளின்மகிமை. ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்கு சமமாக சம்பன்னம் ஆகி விட வேண்டும் என்ற இந்த விசேஷ அன்புதான் பாப்தாதாவிடம் இருக்கிறது. நேரத்திற்கு முன்பு நம்பர்ஒன் வைரம் ஆகிவிட வேண்டும் இப்பொழுது ரிஸல்ட் வெளியாகவில்லை. என்ன ஆக விரும்புகிறீர்களோ, இப்பொழுது வர வாய்ப்பு இருக்கிறது, எனவே பறக்கும் கலைக்கான முயற்சி செய்யுங்கள். கறையற்ற மின்னிக் கொண்டிருக்கும் நம்பர் ஒன் வைரம் ஆகிவிடுங்கள். என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டீர்களா? மதுபன் சென்று வந்திருக்கிறோம், மிகுந்த கொண்டாட்டங்களை கொண்டாடி வந்திருக்கிறோம் என்று இதை மட்டும் அங்கு சென்று கூறாதீர்கள், ஆனால் ஆகி வந்திருக்கிறோம் என்று கூற வேண்டும். எப்பொழுது எண்ணிக்கையில் வளர்ச்சி ஆகிக் கொண்டிருக்கிறது என்றால் முயற்சி செய்யும் விதியிலும் வளர்ச்சி அடையுங்கள். நல்லது.அந்த மாதிரி அனைத்து பறக்கும் கலையின் முயற்சியாளர்களுக்கு, அனைத்து பௌதீக தொடர்பிலிருந்து விலகியிருக்கக் கூடிய, ஒரே ஒரு சம்பூர்ண நிலையில் வண்ணமாக்கப்பட்ட ஆத்மாக்களுக்கு, நேரத்திற்கு முன்பு தன்னை சம்பன்னம் ஆக்கக் கூடியவர்களுக்கு, பிராப்தி சொரூப ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.பார்ட்டிகளுடன் சந்திப்பு

1. அனைத்து உறவுகளினால் தந்தையை தன்னுடையவர் ஆக்கி விட்டீர்களா? எந்த உறவிலும் இப்பொழுது பற்றுதல் இல்லையே? ஏனென்றால் ஏதாவது ஒரு உறவைக் கூட தந்தையோடு இணைக்கவில்லை என்றால், பற்றுதலை வென்று நினைவு சொரூபமாக ஆக முடியாது, புத்தி அலைந்து கொண்டே இருக்கும், தந்தையை நினைவு செய்வதற்காக அமருவார்கள், ஆனால் பேரன், பேத்தியின் நினைவு வரும்.. யார் மீது பற்றுதல் இருக்குமோ, அவர் நினைவு தான் வரும். பற்றுதல் சிலருக்கு பணத்தின் மேல் இருக்கும், சிலருக்கு நகை மீது இருக்கும், சிலருக்கு ஏதாவது உறவின் மேல் இருக்கும், எங்கேயிருந்தாலும் அங்கு புத்தி செல்லும். ஒருவேளை அடிக்கடி புத்தி அங்கு செல்கிறது என்றால் ஒரே இரசனையில், ஒருவரின் இரசனையில் இருக்க முடியாது, அரைக்கல்பம் அலைந்து, அலைந்து என்ன நிலைமை ஆகிவிட்டது என்று அதையும் பார்த்து விட்டீர்கள் தான் இல்லையா! அனைத்தையும் இழந்து விட்டீர்கள். உடலும் (உடலின் ஆரோக்கியம்) சென்று விட்டது, செல்வமும் சென்று விட்டது, சத்யுகத்தில் எவ்வளவு செல்வம் இருந்தது, தங்க மாளிகைகளில் வாழ்ந்தீர்கள்.,இப்பொழுது செங்கல் வீடுகளில், கல் வீடுகளில் வசிக்கிறீர்கள், அந்த மாதிரி அனைத்தையும் இழந்து விட்டீர்கள் இல்லையா! எனவே இப்பொழுது அலைவது முடிவடைந்து. ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற இந்த பாடலைத் தான் மனதால் பாடுங்கள். ஒருபொழுதும், இவரோ மாறுவதில்லை, இதுவோ நடப்பதில்லை, எப்படி நடந்து கொள்வது, நான் என்ன செய்வது என்று கூறாதீர்கள். இந்த சுமையிலிருந்தும் பளுவற்றராக இருங்கள். இது நடந்து விட வேண்டும், இவருடைய நோய் அகன்று விட வேண்டும் என்ற பாவனையோ நல்லது தான், ஆனால் இப்படி சொல்வதினால் நடக்காது இல்லையா! இதைச் சொல்வதற்கு பதிலாக நீங்களே சுமையற்றவராகி பறக்கும் கலையின் அனுபவத்தில் இருந்தீர்கள் என்றால், அதற்கும் சக்தி கிடைக்கும்,. மற்றபடி இதை யோசிப்பது மற்றும் கூறுவது வீணானது. தாய்மார்கள் என்னுடைய கணவன் சரியாகிவிட வேண்டும், தொழில் சரியாகி விட வேண்டும் என்ற இந்த விஷயங்களைத் தான் யோசிக்கிறீர்கள் மற்றும் கூறுகிறீர்கள். ஆனால் இந்த விருப்பம் எப்பொழுது நிறைவேறும் என்றால் எப்பொழுது நீங்கள் சுமையற்றவராகி தந்தையிடமிருந்து சக்தி பெறுவீர்களோ, அப்பொழுது தான் இதற்காக புத்தி என்ற பாத்திரம் காலியாக இருக்க வேண்டும், என்ன நடக்கும், எப்பொழுது நடக்கும், இப்பொழுதோ இன்னும் நடக்கவில்லை என்ற இவற்றிலிருந்து காலியாகி விடுங்கள், அனைவருக்கும் நன்மை நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் சுயம் நீங்கள் சக்தி ரூபம் ஆகி சர்வசக்திவானின் துணைவனாகி சுபபாவனை வைத்து நடந்து கொண்டே இருங்கள். சிந்தனை மற்றும் கவலை வைக்காதீர்கள். பந்தனத்தில் மாட்டாதீர்கள். ஒருவேளை பந்தனம் இருக்கிறது என்றால் அதை அகற்றுவதற்கான முறை நினைவு, சொல்வதினால் விடுபடாது, உங்களை விடுவித்துக் கொண்டீர்கள் என்றால், விடுபட்டு விடுவீர்கள்.2. சங்கமயுகத்தின் அனைத்து பொக்கிஷங்களும் பிராப்தி ஆகிவிட்டதா? ஒருபொழுதும் தன்னை ஏதாவது பொக்கிஷத்தினால் காலியாகி இருக்கின்றேன் என்று நினைக்க வில்லையே? ஏனென்றால் காலியாகும் நேரம் இப்பொழுது கடந்து சென்றுவிட்டது, இப்பொழுது நிரப்புவதற்கான நேரம், பொக்கிஷம் கிடைத்திருக்கிறது என்பதின் அனுபவமும் இப்பொழுது ஆகுகிறது. பிராப்தியின்மையிலிருந்து பிராப்தி ஆகி விட்டது என்றால், அதன் போதை இருக்கும். எனவே நிரம்பிய ஆத்மாக்களாக ஆகியிருக்கிறீர்களா? அனைத்து சக்திகளும் இருக்கின்றன, ஆனால் சகித்துக் கொள்ளும் சக்தி இல்லை, அமைதியின் சக்தி இல்லை என்று அப்படியோ கூறுவதில்லையே? கொஞ்சம் கோபம் அல்லது ஆவேசம் வந்து விடுகிறது. நிரம்பிய ஒன்றில் இன்னொரு பொருள் வரமுடியாது. மாயாவின் குழப்பம் இருக்கிறது என்றால் காலியாக இருக்கிறது, எவ்வளவு நிரம்பியிருக்குமோ, அவ்வளவு குழப்பம் இல்லை, கோபம், மோகம். அனைத்திற்கும் விடை கொடுத்து விட்டீர்களா? அல்லது எதிரியையும் விருந்தினர் ஆக்கி விட்டீர்களா? எப்பொழுது கவனக்குறைவு இருக்கிறதோ, அப்பொழுது தான் வலுக்கட்டாயமாக உள்ளே வந்து விடுகிறான், ஒருவேளை பூட்டு உறுதியாக இருக்கிறது என்றால் எதிரி வரமுடியாது, இன்றைய நாட்களிலும் பாதுகாப்பாக இருப்பதற்காக மறைவான பூட்டு வைத்திருக்கிறார்கள். இங்கேயும் இரட்டைப்பூட்டு இருக்கிறது. நினைவு மற்றும் சேவை இது தான் இரட்டைப்பூட்டு, இதன் மூலமாகத்தான் பாதுகாப்பாக இருப்பீர்கள். இரட்டைப்பூட்டு என்றால் இரட்டை பிஸி. பிஸியாக இருப்பது என்றால் பாதுகாப்பாக இருப்பது. அடிக்கடி நினைவில் இருப்பது, இது தான் பூட்டை பூட்டுவது. நானோ, பாபாவின் குழந்தையாகவே தானிருக்கிறேன் என்று அப்படி நினைக்காதீர்கள், ஆனால் அடிக்கடி நினைவு சொரூபமாக ஆகுங்கள். ஒருவேளை பாபாவின் குழந்தையாகத் தான் இருக்கிறேன் என்றால் நினைவு சொரூபம் இருக்க வேண்டும். அந்த குஷி இருக்க வேண்டும். இருக்கிறேன் என்றால் ஆஸ்தி பிராப்தி ஆக வேண்டும். நான் இருக்கவே இருக்கிறேன் என்ற அலட்சியத்தில் இல்லை, ஆனால் ஒவ்வொரு வினாடியும் தன்னை நிறைந்த சக்தி நிறைந்தவர் என்று அனுபவம் செய்யுங்கள். இதைத் தான் நினைவு சொரூபத்திலிருந்து சக்தி சொரூபம் ஆவது என்று கூறுவது. மாயா தாக்குவதற்காக வரக்கூடாது, ஆனால் நமஸ்காரம் செய்ய வர வேண்டும்.3. அனைவரும் தன்னை பூஜைக்குரிய ஆத்மா என்று அனுபவம் செய்கிறீர்களா? பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர் ஆகிவிட்டீர்கள் இல்லையா! பூஜைக்குரியவரை உயர்ந்த ஸ்தானத்தில் வைப்பார்கள். எந்த ஒரு ஜைக்குரிய விக்ரஹத்தை கீழே தரையில் வைக்க மாட்டார்கள். பூஜைக்குரிய ஆத்மாக்களுக்கு எவ்வளவு மரியாதை வைக்கிறார்கள். எப்பொழுது ஜட விக்ரஹங்களுக்கு இவ்வளவு மரியாதை இருக்கிறது என்றால் உங்களுக்கு எவ்வளவு இருக்கும்! உங்களுடைய மரியாதையை நீங்களே தெரிந்திருக்கிறீர்களா? ஏனென்றால் யார் எந்தளவு தன்னுடைய மரியாதையை தெரிந்திருக்கிறாரோ, அந்தளவு மற்றவர்களும் அவருக்கு மரியாதை கொடுப்பார்கள். தன்மீது மரியாதை வைப்பது என்றால் தன்னை எப்பொழுதும் மகான் சிரேஷ்ட ஆத்மா அனுபவம் செய்வது. எப்போதாவது மகான் ஆத்மாவிலிருந்து சாதாரண ஆத்மாவாகவோ ஆகி விடுவதில்லையே! பூஜைக்குரியவரோ நிரந்தரமாக பூஜைக்குரியவராக இருப்பார் இல்லையா! இன்று பூஜைக்குரியவர், நாளை பூஜைக்குரியவர் இல்லை என்று அப்படியோ இல்லை தான் இல்லையா! எப்பொழுதும் பூஜைக்குரியவர் என்றால் எப்பொழுதும் மகான். எப்பொழுதும் விசேஷமானவர். சிலர் நானோ, முன்னேறிக் கொண்டிருக்கிறேன், ஆனால் மற்றவர்கள் நான் முன்னேறுவதற்கு மரியாதை கொடுப்பதில்லை என்று நினைக்கிறார்கள் இதற்கு என்ன காரணம்? யார் சுய மரியாதையில் இருக்கிறாரோ, அவர் மரியாதையை கேட்பதில்லை தானாகவே கிடைக்கும். யார் எப்பொழுதும் பூஜைக்குரியவராக இல்லையோ, அவருக்கு எப்பொழுதும் மரியாதை கிடைக்க முடியாது. ஒருவேளை விக்ரஹம் தன்னுடைய ஆசனத்தை விட்டு விடுகிறது அல்லது அதைத் தரையில் வைத்து விட்டார்கள் என்றால், அதற்கு என்ன மதிப்பு இருக்கும். விக்ரஹத்தை கோயிலில் வைத்தார்கள் என்றால் அனைவரும் மகான் ரூபத்தில் பார்பார்கள். எனவே எப்பொழுதும் மகான் ஸ்தானத்தில் அதாவது உயர்ந்த நிலையில் இருங்கள், கீழே வராதீர்கள், இன்றைய நாட்களில் உலகத்தில் எந்த விசேஷத்தைக் காண்பிக்கிறார்கள்? சாகுங்கள் மற்றும் கொல்லுங்கள் இந்த விசேஷத்தைத் தான் காண்பிக்கிறார்கள் இல்லையா! அப்படி இங்கேயும் ஒரு நொடியில் இறப்பவர். மெது மெதுவாக இறப்பவர் அல்ல. இன்று மோகத்தை விட்டேன், ஒரு மாதத்திற்கு பிறகு கோபத்தை விடுவேன், ஒரு வருடத்திற்கு பிறகு அகம்பாவத்தை விடுவேன்.. என்று அப்படியல்ல. ஒரே வெட்டில் இரண்டு துண்டு ஆபவர்கள், எனவே அனைவரும் இறந்து மறுபிறவி எடுத்ததில் ஒரே வெட்டில் இரண்டு துண்டு ஆகி விட்டீர்களா? அல்லது சில நேரம் உயிரோடும், சில நேரம் இறந்தும் இருக்கிறீர்களா? சிதையிலிருந்து எழுந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். விழித்து விடுவார்கள், நீங்கள் அனைவரும் ஒரே வெட்டில் இறந்து மறுபிறவி எடுத்தவர்கள் ஆகிவிட்டீர்கள் இல்லையா! எப்படி வெளி உலகத்தில் கூட வெளியுலக மனிதர்கள் தன்னுடைய சிறப்புகளை காண்பிக்கிறார்கள், அதேபோல், ஆன்மீக உலகத்திலும் நீங்கள் உங்கள் சிறப்புகளை காண்பியுங்கள். சதா சிரேஷ்ட, சதா பூஜைக்குரிய, ஒவ்வொரு காரியம், ஒவ்வொரு குணத்தின் கீர்த்தனையை அனைத்து மனிதர்களும் பாடிக் கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது ஏதாவது ஒரு இடத்தில் குழப்பம் ஏற்படுகிறது என்றால், அந்த சண்டை சச்சரவான நேரத்தில் அமைதி சக்தியின் அதிசயம் காண்பியுங்கள். இங்கேயோ அமைதிக் குண்டம் இருக்கிறது என்று அனைவரின் புத்தியில் வரவேண்டும். அமைதிக் குண்டமாகி அமைதியின் சக்தியை பரப்புங்கள். எப்படி நாலாபுறங்களிலும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது, மேலும் ஒரு மூலையாவது சீதள குண்டமாக இருக்கிறது என்றால் அனைவரும் அந்தப் பக்கம் ஓட்டமாகச் செல்வார்கள். அந்த மாதிரி சாந்தி சொரூபமாகி சாந்திக் குண்டத்தின் அனுபவம் செய்வியுங்கள். அந்த நேரம் வாய்மொழி சேவை செய்ய முடியாது, ஆனால் மனசக்தி மூலம் சாந்திக் குண்டத்தின் பிரத்யக்ஷ்த்தை செய்ய முடியும், எங்கெல்லாம் சாந்திக் கடலின் குழந்தைகள் இருக்கிறார்களோ, அந்த ஸ்தானம் சாந்திக்குண்டமாக இருக்கட்டும், எப்போது அந்த அழியும் யாகக்குண்டம் தன் பக்கம் ஈர்க்கிறது, என்றால் இந்த சாந்திக்குண்டம் தன்பக்கம் ஈர்க்கவில்லை என்பது இருக்க முடியாது, இங்கிருந்து தான் அமைதி கிடைக்கும், அனைவருக்கும் வைப்ரேஷன் வரவேண்டும், அந்த மாதிரி வாயுமண்டலத்தை உருவாக்குங்கள். சகோதரி அவர்களே! அமைதி கொடுங்கள் என்று அனைவரும் யாசிக்க வருவார்கள். அந்த மாதிரி சேவை செய்யுங்கள்.சேவாதாரி டீச்சர் சகோதரிகளுடன் சந்திப்பு

டீச்சர்கள் என்றால் சேவாதாரி, சேவாதாரி என்றால் தியாக மூர்த்தி மற்றும் தபஸ்யா மூர்த்தி, எங்கு தியாகம், தபஸ்யா இல்லையோ, அங்கு வெற்றி இல்லை, தியாகம் மற்றும் தபஸ்யா இரண்டின் சகயோகத்தினால் சேவையில் எப்பொழுதும் வெற்றி கிடைக்கிறது, தபஸ்யா என்றாலே ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை, இது தான் நிரந்தரமான தபஸ்யா. எனவே யார் வந்தாலும் உங்களை குமாரி என்று பார்க்கக் கூடாது, ஆனால் தபஸ்வி குமாரி என்று பார்க்க வேண்டும். எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அது தபஸ்யா குண்டமாக அனுபவம் ஆக வேண்டும். நல்ல இடம், தூய்மையான இடம் என்பது சரி தான், ஆனால் தபஸ்யா குண்டமாக அனுபவம் ஆக வேண்டும், தபஸ்யா குண்டத்தில் யாரெல்லாம் வருவாரோ, அவரே தபஸ்வி ஆகிவிடுவார். எனவே தபஸ்யாவின் நடைமுறை சொரூபத்தில் செல்லுங்கள், அப்பொழுது தான் வெற்றி முழக்கம் ஏற்படும், தபஸ்யாவின் எதிரில் அனைவரும் தலை வணங்குவார்கள், பி.கு-வின் எதிரில் மகிமை செய்வார்கள், மேலும் தபஸ்வி குமார்/குமாரிக்கு எதிரில் தலை வணங்குவார்கள், தபஸ்யா குண்டமாக ஆக்குங்கள், பிறகு எத்தனை விட்டில் பூச்சிகள் அவர்களாகவே வருகிறார்கள் என்று பாருங்கள்! தபஸ்யாவும் ஜோதி, ஜோதி மேல் விட்டில் பூச்சிகள் அவர்களாகவே வருகிறார்கள். சேவாதாரி ஆவதற்கான பாக்கியம் உருவாகி விட்டது, இப்பொழுது தபஸ்வி குமாரி ஆவதற்கான எண்ணைர் பெறுங்கள். எப்பொழுதும் சாந்தியின் தானம் செய்யும் மகாதானி ஆத்மா ஆகுங்கள். தற்சமயம் மனசேவையின் மேல் பாப்தாதா விசேஷ கவனம் கொண்டு வருகிறார், வாய்மொழி சேவை மூலம் இத்தனை சக்திசாலியான ஆத்மாக்கள் பிரத்யக்ஷ்ம் ஆவார்கள் வாய்மொழி சேவையோ நடந்து கொண்டே இருக்கிறது, இப்பொழுது சுத்த எண்ணத்தின் சேவையையும் சேர்த்துக் கொள்வது அவசியம். எனவே சொரூபமாகி, சொரூபமாக ஆக்கும் சேவை செய்யுங்கள். இப்பொழுது இதற்குத் தான் அவசியமாக இருக்கிறது, இப்பொழுது அனைவரின் கவனம் இந்த விஷயத்தின் மேல் இருக்கட்டும், இதன் மூலம் தான் பெயர் புகழடையும். அனுபவம் நிறைந்தவர்கள் அனுபவம் செய்விக்க முடியும், இதன் மேலேயே விசேஷ கவனம் கொடுத்துக் கொண்டே இருங்கள். இதன் மூலமாகத்தான் உழைப்பு குறைவு, வெற்றி அதிகம் ஏற்படும். மனசக்தி பூமியை பரிவர்த்தனை செய்து விடும். எப்பொழுதும் இதே விதமாக வளர்ச்சி செய்து கொண்டே இருங்கள். இப்பொழுது வளர்ச்சியடைவதற்கான விதி இது தான். நல்லது.12 மணி நேரம் குழந்தைகளை சந்தித்த பிறகு காலை 6 மணிக்கு பாப்தாதா சத்குருவார் தினத்திற்கான அன்பு நினைவுகளை அனைத்து குழந்தைகளுக்கும் கொடுத்தார்.அனைத்து குரு திசையிலுள்ள, உயர்ந்த பாக்கிய ரேகை உள்ள சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, பாப்தாதா இன்று பிரஹஸ்பதி நாளுக்கான அன்பு நினைவுகள் கொடுக்கிறார். விருட்சபதி தந்தை அனைத்துக் குழந்தைகளின் உயர்ந்த எதிர்காலத்தை அழியாததாக ஆக்கிவிட்டார். இதே அழியாத அதிர்ஷ்டம் மூலம் நீங்களும் சம்பன்னமாக இருப்பீர்கள், மேலும் மற்றவர்களையும் சம்பன்னமாக்கிக் கொண்டே இருப்பீர்கள். விருக்ஷபதி நாள் அனைத்துக் குழந்தைகளும் கல்வியில் சம்பன்னம் ஆனதின் விசேஷ நினைவு நாளாகும். இதே கல்வியின் நினைவு தினத்தன்று ஆசிரிய ரூபத்தில் பாப்தாதா அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒவ்வொரு பாடத்திலும் எப்பொழுதும் முழுமையாக தேர்ச்சியடைய வேண்டும் என்ற இலட்சியத்தை வைத்துக் கொண்டே மதிப்புடன் தேர்ச்சி பெறுவதற்கான மேலும் மற்றவர்களையும் அந்த மாதிரி ஊக்கம் உறசாகத்தில் கொண்டு வருவதற்கு, ஆசிரியரின் ரூபத்தில் எப்பொழுதும் சம்பன்னம் ஆவதற்கான அன்பு நினைவுகள் கொடுக்கிறார். மேலும் பிரஹஸ்பதியின் அதிர்ஷ்ட ரேகையை போடக்கூடிய பாக்கியத்தை உருவாக்கும் தந்தையின் ரூபத்தில் எப்பொழுதும் உயர்ந்த பாக்கியத்திற்காக வாழ்த்துக்கள் கொடுக்கிறார். நல்லது. அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.கேள்வி:

எந்த நினைவு எப்பொழுதும் இருக்கிறது என்றால் வாழ்க்கையில் ஒருபொழுதும் மனமுடைந்து போகுபவர் ஆக முடியாது?பதில்:

நான் சாதாரண ஆத்மா அல்ல. நான் சிவ சக்தி, தந்தை என்னுடையவர், மேலும் நான் தந்தையினுடையவர் என்ற இதே நினைவில் இருந்தீர்கள் என்றால் ஒருபொழுதும் தனிமை அனுபவம் ஆகாது. ஒருபொழுதும் மனமுடைந்து போக மாட்டீர்கள். எப்பொழுதும் ஊக்கம், உற்சாகம் இருக்கும், சிவசக்தியின் அர்த்தமே சிவன் மற்றும் சக்தி இணைந்திருக்கிறார்கள். எங்கு சர்வசக்திவான், ஆயிரம் புஜங்கள் உள்ள தந்தை இருக்கிறாரோ, அங்கு எப்பொழுதுமே ஊக்கம், உற்சாகம் உடன் இருக்கும்.வரதானம்:

சுயமரியாதையில் நிலைத்திருந்து தேக உணர்வை அகற்றக் கூடிய அழியாத ஆசனதாரி, அழியாதவர் ஆகுக.சங்கமயுகத்தில் தந்தை மூலமாக அனேக சுயமரியாதைகள் பிராப்தியாகியிருக்கின்றன. தினமும் ஒரு சுய மரியாதையை நினைவில் வைத்தீர்கள் என்றால், சுயமரியாதையின் எதிரில் தேக உணர்வானது வெளிச்சத்தின் எதிரில் இருள் எப்படி ஓடி விடுகிறதோ, அதே போல் ஓடிவிடும். நேரமும் எடுப்பதில்லை, கடின உழைப்பும் அவசியமில்லை, உங்களிடம் நேரடியாக பரமாத்மா என்ற மின்சாரத்தின் இணைப்பு இருக்கிறது. நேரடி இணைப்போடு நினைவு என்ற பொத்தானை (பட்டன்) மட்டும் செயல்படுத்தி விட்டீர்கள் என்றால் அந்த அளவு ஒளி வந்து விடும், அதன் மூலம் நீங்களும் ஒளியில் இருப்பீர்கள், ஆனால் மற்றவர்களுக்காகவும் லைட் ஹவுஸ் ஆகி விடுவீர்கள், யார் அந்த மாதிரி சுயமரியாதையில் இருக்கிறார்களோ, அவர்களைத் தான் அழியாத ஆசனத்தில் அமர்ந்திருப்பவர், அழியாதவர் என்று கூறப்படுகிறது.சுலோகன்:

தன்னுடைய நிலையை உயர்ந்ததாக ஆக்கினீர்கள் என்றால் சூழ்நிலைகள் சிறியதாக ஆகிவிடும்.***OM SHANTI***

Powered by Blogger.