BK Murli 26 December 2017 Tamil


BK Murli 26 December 2017 Tamil

26.12.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே - எந்த அளவிற்கு ஞான இரத்தினங்களை தானம் செய்வீர்களோ, அந்த அளவிற்கு பொக்கிஷங்கள் நிரம்பி கொண்டே போகும். ஞான மனனம் நடந்து கொண்டே இருக்கும். தாரணை நன்றாக இருக்கும்.கேள்வி:

எந்த ஆத்மாக்களின் பாக்கியத்தில் எல்லையில்லாத சுகம் இல்லையோ, அவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்?பதில்:

அவர்கள் ஞானம் கேட்பார்கள், ஆனால் தலை கீழான குடம் போல. புத்தியில் எதுவும் பதியாது. நல்லது, நல்லது என்பார்கள். மகிமை செய்வார்கள். ஆம், அனைவருக்கும் இதை கூற வேண்டும். மார்க்கம் மிகவும் நன்றாக உள்ளது என்பார்கள். ஆனால் சுயம் அதன் படி நடக்க மாட்டார்கள். இது கூட அதிர்ஷ்டம் என்று பாபா கூறுகிறார். சேவை செய்வது குழந்தைகளாகிய உங்களது கடமை ஆகும். ஆயிரக்கணக்கானோருக்கு கூறிக் கொண்டே இருங்கள். பிரஜைகளோ ஆகிறார்கள். தாய் தந்தையரைப் போல எல்லையில்லாத தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்யுங்கள். ஞானத்தை தாரணை செய்து தனக்குச் சமானமாக ஆக்கிக் கொண்டே இருங்கள்.பாடல்:

அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன் .. .. .. ..ஓம் சாந்தி.

அதிர்ஷ்டம் எப்பொழுதும் இரண்டு விதமானதாக இருக்கும். ஒன்று நல்லது, மற்றொன்று தீயது. ஒன்று சுகத்தினுடையது மற்றொன்று துக்கத்தினுடையது. பாரதத்தின் சுகத்தின் அதிர்ஷ்டமும் உள்ளது. பின் துக்கத்தின் துரதிருஷ்டம் கூட உள்ளது. பாரதம் தான் சுகதாமமாக இருந்தது. பாரதம் தான் துக்கதாமமாக உள்ளது. வீடு புதியதாக இருக்கிறது என்றால், அதிர்ஷ்டம் நன்றாக உள்ளது. பழையது என்றால் துரதிர்ஷ்டம் ஆகும். பாரதம் தான் முதலில் புதியதாக இருந்தது. இப்பொழுது பின் பழையதாக ஆகி விட்டுள்ளது. இந்த விஷயங்களைக் கூட குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொள்ள முடியும். உலகத்திற்குத் தெரியாது. உங்களது கவனம் இந்த விஷயங்கள் பக்கம் ஈர்க்கப்படுகிறது - குழந்தைகளே, நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகளôக இருந்தீர்கள். தேவி தேவதைகளாக உலகத்தின் அதிபதியாக இருந்தீர்கள். இப்பொழுது இல்லை. நல்ல அதிர்ஷ்டம் மாறி இப்பொழுது துரதிருஷ்டமாக ஆகி விட்டுள்ளது. நல்ல அதிர்ஷ்டம் எப்படி மற்றும் எப்பொழுது ஆகிறது என்பது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். புரிய வைப்பவர் ஒரே ஒரு எல்லையில்லாத தந்தை ஆவார். பாரதத்தினுடைய உயர்ந்த அதிர்ஷ்டம் எப்பொழுது இருந்தது? சொர்க்கமாக இருக்கும் பொழுது. கெட்ட அதிர்ஷ்டம் இப்பொழுது உள்ளது. பதீத பாவனரே வந்து எங்களது தூய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துங்கள் என்று பாடவும் செய்கிறார்கள். பாரதம் பாவனமாக இருக்கும் பொழுது பலமான அதிர்ஷ்டம் இருந்தது. இப்பொழுது அதே பாரதம் பதீதமாக (தூய்மையற்றதாக) இருக்கிறது. ஏனெனில், விகாரியாக உள்ளது. விகாரி மற்றும் நிர்விகாரி இருவரும் இருக்கிறார்கள். இப்பொழுது நாம் நிர்விகாரி ஆனோம் என்றால் தேவதையாக ஆகிடுவோம். இப்பொழுது தந்தையை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். கும்பமேளாவில் கூட அவசியம் பதீத பாவன சீதாராம்.. . என்று பாடிக் கொண்டு இருக்கக் கூடும். பதீத பாவனி என்பது நதியாகவோ இருக்க முடியாது. மனிதர்களது அதிர்ஷ்டம் கெட்டுவிடும் பொழுது எவ்வளவு கல்புத்தியினராக ஆகி விடுகிறார்கள். இது துக்கம் மற்றும் சுகத்தினுடைய விளையாட்டு ஆகும். துக்கம் யார் கொடுக்கிறார்கள்? சுகம் யார் கொடுக்கிறார்கள்? இரண்டினுடைய படங்களும் மிகவும் பிரசித்தமானவை ஆகும். சுகத்திற்காக பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்கிறார்கள். ஹே, துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவரே! என்று. எனவே தந்தை ஒரு போதும் துக்கம் கொடுப்பதில்லை என்பது நிரூபணமாகிறது. பகவான் தான் துக்கம் சுகம் இரண்டையும் கொடுக்கிறார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு பைசா அளவிற்கான விஷயத்தைக் கூட யாரும் புரியாமல் உள்ளார்கள். இப்பொழுது உங்களை தந்தை தங்கபுத்தியினராக ஆக்கி உள்ளார். புத்தியின் பூட்டைத் திறந்துள்ளார். சிருஷ்டி சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிருஷ்டி பழையதாக ஆகி விடும் பொழுது அதில் துக்கம் இருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு 3 கண்கள் கிடைத்துள்ளன. நீங்கள் எல்லோருக்கும் புரிய வைக்கலாம் - பதீத பாவனரே வாருங்கள் என்று பாடுகிறீர்கள் என்றால் பின் நதியிடம் வந்து ஏன் அமர்ந்துள்ளீர்கள்? இந்த யக்ஞம் தவம் ஆகியவை செய்வது, வேத சாஸ்திரம் ஆகியவை படிப்பது எல்லாமே பக்தி மார்க்கம் ஆகும். நான் இவற்றின் மூலம் கிடைப்பதில்லை என்று தந்தை கூறுகிறார். உங்களுடைய பக்தி முடிவடையும் பொழுது நான் வந்து சத்கதி அளிக்கிறேன். யோகத்தைப் பற்றிய ஞானம் கூட வேண்டும். பாவனம் ஆவதற்கான ஞானம் கூட வேண்டும். சாஸ்திரங்கள் படிப்பது மூலம், பாவனம் ஆவதற்கான எந்த விஷயமு கிடையாது. பாதரம் பாவனமாக இருக்கும் பொழுது, சம்பூர்ண நிர்விகாரியாக இருக்கும் பொழுது, செல்வந்தர்கள் கூட நிறைய பேர் இருந்தார்கள் என்று விவேகம் கூறுகிறது. இது போல செல்வந்தராக, மேலும் தூய்மையாக யார் ஆக்கியது? கங்கா ஸ்நானத்தினால் ஆனீர்களா? இல்லை சாஸ்திரங்களைப் படிப்பதால் ஆனீர்களா? இதுவோ நீங்கள் செய்தபடியே வந்துள்ளீர்கள். பிறகும் ஹே பதீத பாவனரே வாருங்கள்! என்று அழைக்கிறார்கள். பதீதமான (தூய்மையற்ற) உலகத்தின் காலம் முடியும் பொழுது தான் பதீத பாவன தந்தை வந்து சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்வார். பாவன உலகம் என்பது சத்யுகம் ஆகும். பதீத உலகம் என்பது கலியுகம் ஆகும். பதீத பாவனர் ஒரே ஒரு பரமாத்மா ஆவார் என்பதை யாருமே புரிந்து கொள்வது இல்லை. பதீத பாவன சீதாராம் என்று பாடுகிறார்கள். அதனுடைய பொருள் கூட தந்தை தான் புரிய வைக்கிறார் - அனைத்து சீதைகளின் இராமர் ஒரே ஒரு பரமாத்மா ஆவார். அனைவரின் வள்ளல் இராமர் என்று கூறுகிறார்கள். வள்ளல் என்றால் என்ன? இதுவும் புரியாமல் உள்ளார்கள். அனைவருக்கும் அளிக்கும் வள்ளலான இராமரோ ஒரே ஒரு நிராகாரமானவர் ஆவார் என்பதை தந்தை புரிய வைக்கிறார். புத்திக்கு முற்றிலும் பூட்டு இடப்பட்டுள்ளது. புத்தியில் பதிவதே இல்லை. சத்யுகத்தில் எல்லோரும் தங்கபுத்தியாக (பாரஸ் புத்தி) இருப்பார்கள். பெயரே பாரஸ்நாத், பாரஸ்புரி என்பதாகும். குழந்தைகளாகிய நீங்கள் கூட இச்சமயம் பாரஸ்நாத் ஆகிறீர்கள். ஆத்மா தங்கயுகத்தினுடையதாக ஆகிறது. இப்பொழுது இரும்பு யுக புத்தி ஆகும். தங்கயுக புத்தியினர் சுகம் பெறுகிறார்கள். இரும்பு யுக புத்தியினர் துக்கம் பெறுகிறார்கள். மனிதர்கள் விஷத்திற்காக (விகாரம்) எவ்வளவு துன்பப்படுத்துகிறார்கள். தூய்மையாக ஆவதில் எவ்வளவு குழப்பங்கள் விளைவிக்கிறார்கள். கம்சன், ஜராசந்தன், துச்சாதனன், பூதனை, சூர்ப்பனகை.. என்றெல்லாம் கூட எழுதப்பட்டுள்ளது. இவை எல்லாமே கடந்து போன விஷயங்களாகும். அவசியம் சங்கமயுத்தினுடைய விசயங்களே ஆகும். ஒவ்வொரு விஷயமும் சங்கமத்தினுடையது தான் பாடப்படுகிறது. நான் கூட பதீதர்களை (தூய்மையற்றவர்களை) பாவனமாக ஆக்குவதற்கு ஒரே ஒரு முறை வருகிறேன். பாபாவின் தொழிலே பதீதர்களை பாவனமாக ஆக்குவது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை படைப்பவர் என்றால் அவசியம் புதிய படைப்பைத் தான் படைக்கிறார். பதீதமாக ஆக்குபவன் இராவணன் ஆவான். தந்தை பாவனமாக ஆக்குபவர் ஆவார். அவருடைய சரியான பெயர் சிவன் என்பதாகும். சிவராத்திரி கூட கொண்டாடுகிறார்கள். இராத்திரி என்பதன் பொருளை நீங்கள் புரிந்துள்ளீர்கள். பக்தி அதாவது இரவு முடிந்து பகல் ஆகக் கூடிய நேரத்தில் தான் தந்தை வருவார். குழந்தைகளே பாவனம் ஆகுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டி உள்ளது. சத்யுகம் இருந்தது, இப்பொழுது மீண்டும் சக்கரம் திரும்ப நடைபெற வேண்டி உள்ளது. குழந்தைகளாகிய உங்களை மனிதனிலிருந்து தேவதையாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன். தேவதைகள் கூட மனிதர்களாகத் தான் இருந்தார்கள். வேறு எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் வெண்மையாக அதாவது தூய்மையாக இருந்தார்கள், அவ்வளவே! மேலும் இப்போதைய மனிதர்கள் கருமையாக அதாவது (பதீதமாக) தூய்மையற்று இருக்கிறார்கள். பாரதம் தங்க யுகத்தினுடையதாக இருந்தது. இப்பொழுது இரும்பு யுகத்தினுடையதாக இருக்கிறது. ஆத்மாவில் துரு படிந்துள்ளது. அது யோக அக்னியினால் தான் நீங்கும். இதற்கு முன்பு மன்மனா பவ என்ற வார்த்தையைப் படித்து கொண்டிருந்தோம். அர்த்தம் எதுவும் புரியாமல் இருந்தோம். பரமபிதா பரமாத்மா உடன் புத்தியோகத்தை ஈடுபடுத்த வேண்டும். ஆனால் அவரது ரூபம் பற்றியே யாருக்கும் தெரியவில்லை என்றால் யோகம் எப்படி ஏற்பட முடியும்? பரமாத்மா பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று கூறுகிறார்கள். பின் யோகம் யாருடன் கொள்வது? பகவான் கூறுகிறார் - மன்மனாபவ. தேகத்தின் அபிமானத்தை விடுங்கள் தன்னை ஆத்மா என்று உணருங்கள். ஆத்மாவின் ரூபம் என்ன? ஆத்மா நட்சத்திரம் போல உள்ளது. புருவ மத்தியில் இருக்கிறது என்று கூறுகிறார்கள். எனவே ஆத்மாக்களின் தந்தை கூட அப்படியே தான் இருப்பார். அவரைப் பிறகு பெயர் ரூபத்திலிருந்து அப்பாற்பட்டவர் என்று கூறுகிறார்கள். தந்தையை பிரம்மம் என்றும், அகண்ட சோதி தத்துவம் என்றும் கூறுகிறார்கள். பிரம்மமோ முடிவில்லாததாகும். ஆகாயத்தின் கரையைக் காண முடியாது. நல்லது! அப்படியே யாராவது முடிவை அடைந்தே விட்டார்கள் என்றாலும் கூட அதனால் முக்தி, ஜீவன் முக்தியோ யாருக்கும் கிடைப்பதில்லை. முக்தி, ஜீவன் முக்தி என்பதன் பொருள் கூட குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்துள்ளீர்கள். உலகமோ எதையும் அறியாமல் உள்ளது. ஞானக்கடல், மனித சிருஷ்டியின் விதை ரூபம் என்றும் பாடுகிறார்கள். சத்தியமானவர் ஆவார். உயிரூட்டமுடையவர் ஆவார். பதீத பாவனர் ஆவார். அவசியம் (பதீதமான) தூய்மையற்ற உலகத்தில் வருவார். ஞானம் இருக்கும் பொழுது பக்தி இருக்க முடியாது என்று நீங்கள் புரிய வைக்கிறீர்கள். ஞானம் என்பது பகல் -சத்யுகம், திரேதா யுகம். பக்தி என்பது இரவு. ஞானக் கடல் பரமபிதா பரமாத்மா ஆவாரேயன்றி தண்ணீர் அல்ல. இதை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். முழு பாரதத்திற்கு எப்படி செய்தியைக் கொடுக்க வேண்டும்? அதற்காக பாபா நல்ல நல்ல யுக்தி களை (வழிமுறைகளை) புரிய வைத்துக் கொண்டேருக்கிறார். ஆத்மா மற்றும் பரமாத்மாவினுடைய மேளா தான் உண்மையில் பாடப் பட்டுள்ளது. பரமாத்மாவோ ஒருவர் ஆவார். பரமாத்மா சர்வ வியாபி, எங்கும் நிறைந்தவர் ஆவார் என்பதில் எந்தவொரு கணக்கும் சரி வருவதில்லை. தந்தை தான் வந்து அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்கிறார். துக்கத்தில் எல்லோரும் நினைவு செய்கிறார்கள். எவ்வளவு அடித்துக் கொள்கிறார்கள். இது எப்பொழுதி-ருந்து முதல் செய்தபடியே வந்துள்ளீர்கள் என்று கேளுங்கள்? பரம்பரையாக என்பார்கள். பிறகு பாவனமாகவோ யாருமே ஆகவில்லை. இன்னுமே பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகிக் கொண்டே சென்று விட்டார்கள்.உங்களது புத்தியில் இப்பொழுது முழு ஞானம் நிரம்பி உள்ளது. ஞானத்திற்கு பிரம்மாவின் பகல் என்று கூறப்படுகிறது. விஷ்ணுவின் பகல் என்று கூறுவதில்லை. ஏனெனில் ஞானம் இப்பொழுது தான் கிடைக்கிறது. நாளுக்கு நாள் குறிப்புக்கள் நுண்ணியமானதாக வெளிப்பட்டுக் கொண்டே போகிறது. ஜீவன் முக்தி இருப்பது கூட ஒரு நொடியின் விஷயம் ஆகும். பிறகு கூறுகிறார்கள், ஞானக் கடல் ஆவார். எவ்வளவு தான் எழுதிக் கொண்டே போனாலும் கூட முடிவு வராது. தந்தை புரிய வைத்து முடிக்கும் பொழுது பின்னர் தேர்வு கூட முடிவடைந்து விடுகிறது. ஆரம்ப முதல் எவ்வளவு கேட்டபடியே வந்துள்ளீர்கள். கீதையையோ முற்றிலுமே சிறியதாக ஆக்கி விட்டுள்ளார்கள். எவ்வளவு ஞானத்தின் விஷயங்கள் உள்ளன. புரிய வைப்பதும் மிகவும் சுலபம் ஆகும். உண்மையில் சத்யுகத்தில் ஒரு தர்மம் இருந்தது. இப்பொழுதோ எத்தனை தர்மங்கள் உள்ளன. எவ்வளவு குழப்பம் இருக்கிறது. தங்களுக்குள்ளேயே எவ்வளவு குழப்பம் ஆகி விட்டுள்ளது. ஒரு தர்மம் இருக்கும் பொழுது சண்டை ஆகியவற்றின் பெயரே இருக்கவில்லை. சுகமே சுகம் இருந்தது. சக்கரத்தின் இரகசியம் புத்தியில் இருக்கிறது. நீங்கள் எப்படி 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் என்பதை குழந்தைகள் புரிய வைக்க வேண்டும். சக்கரம் திரும்பவும் சுற்றுகிறது. இப்பொழுது நீங்கள் யோக பலத்தினால் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது ஆஸ்திகராக ஆகி உள்ளீர்கள். திரிகாலதரிசி கூட ஆகி உள்ளீர்கள். உலகத்தில் வேறு யாருமே படைப்பவர் மற்றும் படைப்பை பற்றி அறியாமல் உள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். ஆனால் தாரணை செய்து மற்றவர்களுக்குப் புரிய வைப்பது இல்லை. எனவே (பாயிண்ட்ஸ்) குறிப்புக்கள் மறந்து போய் விடுகிறது. ஒரு பொருள் புத்தியில் பதிவதில்லை என்றால் மற்றது எப்படி பதிய முடியும்? தானம் கொடுத்துக் கொண்டே சென்றீர்கள் என்றால் கஜானா நிரம்பிக் கொண்டே போகும். ஞான மனனம் நடந்து கொண்டே இருக்கும். யாருக்கு எப்படி புரிய வைக்கலாம். ஞானம் இல்லாமல் இருக்கும் பொழுது பக்திக்கு மகிமை இருக்கிறது. யார் சேவையில் இருக்கிறார்களோ அவர்களது புத்தியில் போதை இருக்கும். வரிசைக்கிரமமாகவோ இருக்கவே இருக்கிறார்கள். யார் மற்றவர்களை தனக்குச் சமமாக ஆக்கிக் கொண்டே இருக்கிறார்களோ அவர்கள் தான் மகாரதி ஆவார்கள். ஞானத்தை தாரணை செய்கிறார்கள். பதவியும் அவர்களுக்கு அவ்வாறே கிடைக்கிறது. இந்த உழைப்பு முழுமையாக மறைமுகமாக உள்ளது. நீங்கள் தந்தையினுடையவராக ஆகி உள்ளீர்கள். எனவே தந்தையிடமிருந்து அவசியம் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கும் என்று புரிந்துள்ளீர்கள். அங்கு இராவணன் இருப்பதில்லை. இராவணனின் இராஜ்யமே தனி, இராம இராஜ்யம் தனி ஆகும். இராமாயணம், பாகவதம் ஆகியவற்றில் எல்லாமே இச்சமயத்தின் விஷயங்கள் உள்ளன என்பதை புரிந்துள்ளீர்கள். பொம்மைகளின் விளையாட்டு ஆகும். இச்சமயம் முழு விருட்சமே தமோபிரதானமாக உள்ளது என்று தந்தை புரிய வைக்கிறார். முடிந்து போகப் போகிறது. உங்களது புத்தியில் முழு இரகசியம் உள்ளது. புரிய வைப்பதற்காக எவ்வளவு யுக்திகள் கூறிக் கொண்டே இருக்கிறார். பிறகும் கோடியில் ஒருவர் தான் புரிந்து கொள்கிறார்கள். நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்ற தர்மங்களில் மாறி சென்றவர்கள் எல்லோருமே வெளி வருவார்கள். இந்துக்கள் உண்மையில் அசல் தேவி தேவதா தர்மத்தினர்கள் ஆவார்கள். பாரதவாசிகளாகிய நீங்கள் தேவி தேவதாவினுடையவர்கள் ஆவீர்கள் அல்லவா என்று புரிய வைக்க வேண்டும். தேவி தேவதைகளைத் தான் பூஜிக்கிறீர்கள். தேவதை தான் உங்களது தர்மம் ஆகும். முதலில் நீங்கள் தேவதைகளாக இருந்தீர்கள். பிறகு நீங்கள் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரராக ஆனீர்கள். இப்பொழுது மீண்டும் நீங்கள் பிராமணர் ஆகி தேவதை ஆகுங்கள். நாம் பாரதவாசிகளுக்கு புரிய வைப்போம். இப்பொழுது நாற்று நடப்படுகிறது. தந்தை வந்து புரிய வைக்கிறார். நான் எப்படி சூத்திரரிலிருந்து மாற்றம் செய்கிறேன். பிராமணர் ஆகி பிறகு தேவதை ஆகிடுவீர்கள். விளக்கங்கள் எவ்வளவு நன்றாக உள்ளது. உங்களிடம் யாராவது நீங்கள் சாஸ்திரங்கள் படித்துள்ளீர்களா என்று கேட்டால், பக்தி மார்க்கத்தில் எல்லா சாஸ்திரங்களும் படித்துள்ளோம் என்று கூறுங்கள். ஆனால் சத்கதியோ தந்தை தான் வந்து கொடுக்கிறார். அதனால் தானே நீங்கள் ஹே பதீத பாவனரே வாருங்கள்! என்று அவரை அழைக்கிறீர்கள்! யுக்தியுடன் புரிய வைத்தீர்கள் என்றால் அவசியம் புரிந்து கொள்வார்கள். புரிய வைப்பதற்கு குழந்தைகளுக்கு தைரியம் வேண்டும். டிராமா உங்களை சேவை செய்விக்கும் -இது போல தெரிய வருகிறது. முந்தைய கல்பத்தில் கூட இவர் இவ்வளவு முயற்சி செய்து இந்த பதவியை அடைந்தார். பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) முழுமையாக செய்ய வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என்றால் இராவணனின் ஆஸ்தி மீது நாம் ஏன் கை வைக்க வேண்டும்? ஏன் இனிமையானவராக ஆகி விடக் கூடாது. அனைத்து குணங்களும் நிறைந்தவர் ஆக வேண்டும். இது இராஜயோகம் ஆகும். நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான அதாவது இராஜ்யத்தை அடைவதற்கான யோகம் ஆகும்.நான் பல கல்பமாக, ஒவ்வொரு கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். இது ஏறும் கலைக்கான யுகம் ஆகும் மற்றது எல்லாமே இறங்கும் கலையின் யுகம் ஆகும். ஏறும் கலை மற்றும் இறங்கும் கலை ஆகிறது. இந்த சக்கரம் புத்தியில் இருக்க வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை வந்து ஆத்மாக்களிடம் (குழந்தைகளிடம்) உரையாடுகிறார். இந்த கடைசி பிறவியில் பதீதமாக (தூய்மையில்லாதவராக) ஆகாதீர்கள். அப்பொழுது நான் உங்களை உலகத்திற்கு அதிபதியாக ஆக்குகிறேன். நீங்கள் நான் கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? பிறகோ எல்லையில்லாத சுகத்தைக் கூட நீங்கள் அடைய முடியாமல் போய்விடுவீர்கள். நீங்கள் இந்த பிறவியிலாவது தூய்மை ஆகுங்கள். உங்களை உலகத்திற்கு அதிபதியாக ஆக்குகிறேன் என்று நான் உத்தரவாதம் கொடுக்கிறேன். தந்தையினுடையதைக் கூட ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்ன? யார் மலராக ஆகக் கூடியவர்களாக இருப்பார்களோ அவர்களுக்கு சட்டென்று அம்பு போல பதியும். பாக்கியத்தில் இல்லையென்றால் தலைகீழான குடம் போல கேட்பார். கண்காட்சியில் நீங்கள் எவ்வளவு பேருக்கு புரிய வைக்கிறீர்கள். நன்றாக உள்ளது நன்றாக உள்ளது என்பார்கள். பாதை மிகவும் சுலபமானதாகும் என்று கூறுவார்கள். ஆனால் சுயம் தாங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். மகிமை மட்டும் செய்வார்கள். மற்றவர்களுக்கு நன்றாக உள்ளது என்பார்கள். ஆனால் சுயம் தான் நடக்க வேண்டியது இல்லை என்று நினைத்தால் இதனால் என்ன ஆகும்? அதிர்ஷ்டத்தில் இல்லை என்று தான் கூற வேண்டும். இது போன்றவர்கள் பிரஜைகளில் வருவார்கள். ஆனால் குழந்தைகளிடம் சேவையின் ஆர்வம் இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கானோருக்கு கூற வேண்டி உள்ளது. எல்லையில்லாத தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்காக தாய் தந்தையைப் போல (புருஷார்த்தம்) முயற்சி செய்ய வேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி பெறுவதற்காக மிகவுமே இனிமையானவராக, சர்வ குணங்களில் நிறைந்தவராக ஆக வேண்டும். இராவணனினுடைய ஆஸ்தியில் கை வைக்கக் கூடாது.2. ஞானத்தை தாரணை செய்து ஆன்மீக போதையில் இருந்து சேவை செய்ய வேண்டும். எல்லையில்லாத சுகத்தைப் பெறுவதற்காக தந்தையின் ஒவ்வொரு ஆலோசனையையும் ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும்.வரதானம்:

யோகம் என்ற மின் சக்தியின் (கரெண்ட்) வைப்ரேஷன் (அதிர்வலைகள்) மூலமாக கோட்டையை வலுப்படுத்தக் கூடிய யக்ஞ இரட்சகர்கள் ஆவீர்களாக.எப்படி பிராமண குடும்பத்தை அதிகரிப்பதற்காக திட்டமிடுகிறீர்கள், அதே போல எந்தவொரு ஆத்மா கூட பிராமண குடும்பத்திலிருந்து ஒதுங்கிப் போய் விடக் கூடாது என்பதற்கான திட்டமும் இப்பொழுது தீட்டுங்கள். கோட்டையை எப்படி வலுப்படுத்த வேண்டும் என்றால் யாரும் போகவே கூடாது. எப்படி நாலா புறங்களிலும் மின்கம்பிகளைப் போட்டு விடுகிறார்கள். அதே போல நீங்கள் கூட யோகத்தின் (வைப்ரேஷன்) அதிர்வலைகள் மூலமாக மின் கம்பிகளைப் போட்டு விடுங்கள். இந்த யக்ஞத்தின் கோட்டையை தங்களது யோகத்தின் சக்தி வாய்ந்த அதிர்வலைகள் (பவர் ஃபுல் வைப்ரேஷன்) மூலமாக வலுப்படுத்தக் கூடிய சங்கல்பம் வெளிப்பட்டு இருக்க வேண்டும். அப்பொழுது தான் யக்ஞ இரட்சகர்கள் என்று கூறுவார்கள்.சுலோகன்:

யாருடைய கர்மம் சாதாரணமாக இருக்கும் போது கூட, ஸ்திதி புருஷார்த்தமமாக இருக்கிறதோ அவர்கள் தான் ஞானம் நிறைந்த ஆத்மா ஆவார்கள். ***OM SHANTI***

Powered by Blogger.