BK Murli 27 December 2017 Tamil


BK Murli 27 December 2017 Tamil

27.12.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! மூன்று தந்தையரின் இரகசியத்தை அனைவருக்கும் கதையைப் போல் சொல்லுங்கள். எது வரை தந்தையை அறிந்து கொண்டு தூய்மையாகவில்லையோ அது வரை ஆஸ்தி கிடைக்காது.கேள்வி:

பாபா முற்றிலும் புதியவர். அவர் உங்களுக்குத் தம்முடைய எந்த ஒரு புதிய அறிமுகம் கொடுத்துள்ளார்?பதில்:

பாபாவை மனிதர்கள் ஆயிரம் சூரியன்களை விடப் பிரகாசமானவர் எனச் சொன்னார்கள். ஆனால் பாபா சொல்கிறார், நானோ ஒரு புள்ளியாக (பிந்தி) இருக்கிறேன். ஆக, புதிய பாபா ஆகிறார் அல்லவா! முதலில் பிந்தியின் சாட்சாத்காரம் கிடைத்தால் யாரும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். அதனால் யாருக்கு எத்தகைய பாவனை உள்ளதோ, அவருக்கு அப்படியே சாட்சாத்காரம் ஆகி விடுகிறது.பாடல்:

ஓம் நமோ சிவாயஓம் சாந்தி.

நிராகார் பகவான் வாக்கு. வெறுமனே பகவான் வாக்கு எனச் சொல்வதால் கிருஷ்ணரின் பெயர் நினைவு வந்து விடுகிறது. ஏனென்றால் தற்போது அனைவரும் பகவான் ஆகி விட்டனர். அதனால் நிராகார் சிவபகவான் என்று சொல்கிறோம். காட் ஃபாதர் எனச் சொல்லப் படுகிறது. நிராகார் சிவபகவான் வாக்கு யாருக்காக? நிராகாரரின் குழந்தைகளாகிய ஆத்மாக்களிடம். ஆன்மிக பகவான் வாக்கு அல்லது ஈஸ்வரன் வாக்கு என்ற வார்த்தை நன்றாக இல்லை. நிராகார் பகவான் வாக்கு என்று சொன்னால் நன்றாக உள்ளது. இப்போது அடிக்கடியோ சொல்ல மாட்டார். இவர் மிகவும் குப்தமானவர். இவருடைய சித்திரத்தை வெளிப்படுத்த முடியாது. ஒரு பிந்தியை உருவாக்கி பகவான் வாக்கு என்று எழுதினால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பகவானின் யதார்த்தமான பெயர், வடிவம், தேசம், காலம் இவற்றை யாருமே அறிந்திருக்கவில்லை. தந்தையை அறிந்து கொண்டால் படைப்பு பற்றியும் அறிந்து கொள்ளலாம். ஆனால் அறியாமல் இருப்பது தான் அவர்களுக்கு டிராமாவில் விதிக்கப் பட்டதாகும். அப்போது தான் பாபா வந்து தம்முடைய அறிமுகம் கொடுப்பார். பாபா சொல்கிறார், தூய்மை இல்லாதவர்களை தூய்மையாக்குவதற்கான எனது பார்ட் எப்போது வருகிறதோ, அப்போது தான் நான் வந்து எனது அறிமுகம் கொடுக்கிறேன். பழைய உலகத்தைப் புதியதாக ஆக்குகிறேன். பழைய உலகத்தில் இருக்கும் மனிதர்கள் புது உலகில் வசிக்கும் மனிதர்களைப் பூஜிக்கின்றனர். குழந்தைகள் நீங்கள் இதைப் புரிய வைக்க வேண்டும். ரிஷி-முனி முதலான அனைவரும் படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி எங்களுக்குத் தெரியாது என்று சொல்கின்றனர். பிறகு நீங்கள் மட்டும் எங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்? நீங்கள் தந்தையைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள் என்றால் எங்களுக்கு ஞானம் கொடுங்கள். ஒரு போதும் யாரும் கொடுக்க முடியாது. ஆஸ்தி தர முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு பாபாவிடம் இருந்து ஆஸ்தி கிடைத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற தந்தை வந்து விட்டார், புது உலகத்தின் ஆஸ்தி அல்லது சுகம் தருவதற்காக. ஆக, நிச்சயமாக துக்கம் முடிந்து போகும். அது சுகதாமம். இது துக்கதாமம். இப்போது இந்த துக்கதாமத்தின் விநாசம் நடைபெற வேண்டும். புது உலகம் தான் இப்போது பழைய உலகமாக ஆகியிருக்கிறது. பிறகு புதியதாக ஆகி விடும். புது உலகம் சத்யுகம் என்றும் பழைய உலகம் கயுகம் என்றும் சொல்லப் படுகிறது. புது உலகத்தில் நிச்சயமாக மனிதர்கள் கொஞ்சம் பேர் தான் இருக்க வேண்டும். சத்யுகத்தில் ஒரு தர்மம் மட்டுமே இருந்தது. இச்சமயமோ அநேக தர்மங்கள் உள்ளன. துக்கமும் உள்ளது. சுகத்திலிருந்து துக்கம், துக்கத்திலிருந்து பிறகு சுகம் ஏற்படுகிறது. இந்த விளையாட்டு உருவாக்கப் பட்டதாகும். துக்கத்தை யார் தருகிறார் என்பது யாருக்கும் தெரியாது. இராவணன் மாயா எனச் சொல்லப் படுகிறது. செல்வம் மாயா எனச் சொல்லப் படுவதில்லை. விகாரி மனிதர்கள் அறிவார்கள், தேவதைகள் நிர்விகாரிகள். ஆனால் அந்த மனிதர்களுக்கு விகாரங்களின் போதை ஏறியுள்ளது. தேவதைகளுக்கு இருப்பது விகாரமற்ற தன்மையின் போதை. அங்கே தூய்மை இல்லாதவர்கள் யாரும் இருப்பதில்லை. சங்கமயுகத்தில் தான் குழந்தைகளாகிய உங்களுக்குப் தூய்மையின் இரகசியம் புரிய வைக்கப் படுகிறது. நீங்கள் பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.பாபாவோ முழு உலகத்திற்கும் அமர்ந்து புரிய வைக்க மாட்டார். குழந்தைகள் தான் புரிய வைக்க வேண்டும். ஆனால் புரிய வைப்பதற்கு மிகுந்த யுக்தி வேண்டும். அனைவருக்கும் சொல்லுங்கள், சொர்க்கமாக, புது உலகமாக இருந்த பாரதம் இப்போது பழைய உலகமாக ஆகி விட்டது. படைப்பவரோ தந்தை தான். அவர் தாமே சொல்கிறார், நான் பிரம்மா மூலமாகப் புது உலகத்தின் ஸ்தாபனை செய்கிறேன். குழந்தைகளைத் தத்தெடுக்கிறேன். பிரம்மாவின் பெயர் தான் பிரஜாபிதா. ஆக, நிச்சயமாக இத்தனை குழந்தைகளைத் தத்தெடுக்கத் தான் செய்வார். எப்படி சந்நியாசிகள் சீடர்களைத் தத்தெடுக்கின்றனர். கணவன் மனைவியைத் தத்தெடுக்கிறார்  நீ என்னுடையவள் என்று. இங்கேயும் நீங்கள் சொல்கிறீர்கள், சிவபாபா, நான் உங்களுடையவன். வீட்டில் அமர்ந்திருக்கும் போதே கூட அநேகருக்கு இப்படி டச்சாகிறது. பிறகு என்ன சொல்கின்றனர்? பாபா, நான் உங்களைப் பார்த்ததில்லை. ஏனென்றால் பந்தனத்தில் இருக்கிறேன். வர முடியவில்லை, ஆனால் நான் உங்களுடையவள். தூய்மையாகவோ கண்டிப்பாக ஆக வேண்டும். தூய்மை இல்லாதவர்கள் முக்தி-ஜீவன்முக்தியில் செல்ல முடியாது. தூய்மை இல்லாதவர்கள் தான் அழைக்கின்றனர் - வாருங்கள், வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று.பாரதம் சொர்க்கமாக இருந்தது என்பதைக் குழந்தைகள் நீங்கள் புரிய வைக்க வேண்டும். இந்த லட்சுமி- நாராயணர் சொர்க்கத்தின் மகாராஜா மகாராணியாக இருந்தனர். நிச்சயமாக இராஜபரம்பரை நடைபெற்றிருக்கும். புது உலகத்தில் புதிய இராஜ்யம் இருந்தது. இப்போது அது இல்லை. மற்ற அநேக தர்மங்கள் உள்ளன. தேவதா தர்மம் மட்டும் இல்லை. இந்தப் பழைய உலகம் எது வரை நடைபெறும்? அவர்கள் சத்யுகத்திற்கு லட்சக் கணக்கான வருடங்கள் எனச் சொல்லிவிடுகின்றனர். மகாபாரத யுத்தம் பற்றியும் பாடல் உள்ளது. இடையில் சிறிதளவு போர் ஏற்பட்டது என்றால் சொன்னார்கள், மகாபாரத யுத்தத்தின் சமயம் என்று. யாதவர்களின் யுத்தத்தையும் கூடக் காட்டுகின்றனர், அதாவது ஏவுகணைகள் மூலம் தங்களைத் தாங்களே விநாசம் செய்து கொண்டனர். சில நேரம் எழுதுகின்றனர் - பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கிடையில் யுத்தம் என்று, சில நேரம் எழுதுகின்றனர் - அசுரர்களுக்கும் தேவதைகளுக்கும் இடையில் யுத்தம் என்று. அசுர உலகத்திற்குப் பிறகு உடனே தெய்விக உலகம். அது தூய்மையற்றது இது தூய்மையான தேவதைகள் எப்படிச் சண்டை யிடுவார்கள்? அவர்கள் சத்யுகத்தில். இவர்கள் கலியுகத்தில். இருவருக்கும் இடையில் எப்படிச் சண்டை நடைபெறமுடியும்? தேவதைகள் அஹிம்சையாளர்கள். அசுரர்கள் இம்சை செய்பவர்கள். தேவதைகள் நரகத்தில் எப்படி வருவார்கள்? இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். புது உலகம் ஸ்தாபனை ஆகிறது. அதற்காக நீங்கள் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இரண்டு தந்தையரின் இரகசியத்தையும் கூட கதை போல் புரிய வைக்க வேண்டும். சத்யுகத்தில் இருப்பவர் ஒரு தந்தை. அங்கே எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதே இல்லை. ஏனென்றால் அது சுகதாமம். துவாபரயுகத்தில் இரண்டு தந்தையர். லௌகிக் தந்தை இருந்த போதிலும் பரலௌகிக் தந்தையை நினைவு செய்கின்றனர். ஆத்மா தான் தன்னுடைய தந்தையை நினைவு செய்கிறது. ஏனென்றால் ஆத்மா தான் துக்கத்தை சகித்துக் கொள்கிறது. புண்ணியாத்மா, பாவாத்மா. ஆத்மா தான் கேட்கிறது. சம்ஸ்காரம் ஆத்மாவில் உள்ளது. யாரிடம் தெய்விக சம்ஸ்காரம் இல்லையோ, அவர்கள் தெய்விக சம்ஸ்காரம் உள்ளவர்களுக்கு மகிமை பாடுகின்றனர். பாடவும் படுகிறது, நீங்களே பூஜைக்குரியவர், நீங்களே பூஜாரி என்று. பூஜாரி ஆகின்றனர் என்றால் பாடுகின்றனர் - நான் எந்த குணமும் இல்லாதவன் அவர்களிடம் நற்குணங்கள் உள்ளன. நம்மிடம் இல்லை. பூஜைக்குரியவர் தான் பிறகு பூஜாரி ஆகின்றனர். நீங்கள் தான் பூஜைக்குரிய தேவதையாக இருந்தீர்கள். பிறகு நீங்களே பூஜாரி ஆகியிருக்கிறீர்கள். 84 பிறவிகள் எடுத்திருக்கிறீர்கள். அரைக்கல்பம் பூஜைக்குரியவர், அரைக்கல்பம் பூஜாரி. கணக்கைப் புரிய வைக்க வேண்டும். தேவதா, சத்திரிய, வைசிய, சூத்திர இச்சமயம் நாம் பிராமணர். பி.கே. இச்சமயம் நமக்கு 3 தந்தையர் ஆகின்றனர். லௌகிக் தந்தை, நிராகார் பரலௌகிக் தந்தை. மூன்றாவது பிறகு பிரஜாபிதா பிரம்மா. அவர் மூலமாகத் தான் பிராமணர்களாகிய நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். பிரஜாபிதா என்ற பெயரையோ கேட்டிருக்கிறீர்கள் தானே? பிரம்மாவின் மூலம் படைக்கிறார். நீங்களும் பிராமணர்கள். நீங்களும் பாபாவை நினைவு செய்யுங்கள்.பாபா சொல்கிறார், நான் வந்திருக்கிறேன் -- உங்களைத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக. நிராகார் தந்தை ஆத்மாக்களோடு பேசுகிறார். நீங்கள் சொல்லவும் செய்கிறீர்கள், நாங்கள் ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுக்கிறோம். சரீரத்தின் பெயர் வடிவம் மாறி விடுகிறது. ஆத்மாவோ ஒன்று தான். பாபாவின் பெயரும் ஒரே சிவன் தான். அவருக்கு சரீரமோ கிடையாது. இந்தப் பாயின்ட்டையும் குறித்து வைக்க வேண்டும். பிறகு எப்படி மனிதரோ அப்படியே அதற்குத் தகுந்தவாறு புரிய வைக்க வேண்டும். நாம் பி.கே. தாத்தாவிடம் இருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டே இருக்கிறோம். அவர் தான் இராஜயோகம் மற்றும் ஞானத்தின் அறிவின் அறிமுகம் தருகிறார். மனிதரில் இருந்து தேவதை ஆவது என்பதும் கூட ஞானம் தான். ஞானம் கிடைப்பது சங்கமயுகத்தில். இதன் மூலம் பிறகு புது உலகத்தில் ஆஸ்தி பெறுகிறோம். தூய்மையற்ற உலகத்தில் வந்து தூய்மையான உலகை ஸ்தாபனை செய்கிறார். இப்போது வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக பாபா வந்துள்ளார். டிராமாவின் அனுசாரம் அனைவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டும். முதலாவதாக சூரிய வம்சி அதன் பிறகு சந்திரவம்சி, பிறகு வைசிய, சூத்திர வம்சி ஆகின்றனர். அது நிராகார் ஆத்மாக்களின் மரம். இது சாகாரி மனிதர்களின் மரம். பிராமண், தேவதா, வைசிய, சூத்திர இதில் முழு விராடரூபம் வந்து விடுகிறது. பிராமணர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. ருத்ர மாலை மற்றும் விஷ்ணுவின் மாலை உருவாகும். பிரம்மாவின் மாலை எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் மாறிக் கொண்டே இருக்கின்றனர். அதனால் ருத்ர மாலை பூஜிக்கப் படுகிறது. இவை புதுப்புது விஷயங்களாகும். இந்த விஷயங்கள் எவருடைய புத்தியிலும் கொஞ்சம் கூடக் கிடையாது. கல்பத்தின் ஆயுள் லட்சம் வருடம் எனச் சொல்லிவிடுகின்றனர். அதனால் நீங்கள் சொல்வது அனைவருக்கும் புதிதாகத் தோன்றுகிறது. பாபாவும் உண்மையில் புதியவர். அவர்களோ சொல்கின்றனர், பெயர் வடிவத்திற்கு அப்பாற் பட்டவர் அல்லது ஆயிரம் சூரியனை விடவும் பிரகாசமானவர் எனச் சொல்லிவிடுகின்றனர். அதுவும் எப்படி பாவனையோ அப்படி சாட்சாத்காரம் ஆகும். பிந்தியின் சாட்சாத்காரம் ஆனால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த அனைத்து விஷயங்களும் புதிதாக இருக்கும் காரணத்தால் குழப்பமடைகின்றனர். யார் இங்குள்ளவராக இருப்பார்களோ, அவர்களுடைய கன்று தான் நடப்படும். குழந்தைகள் நீங்கள் இப்போது நல்லபடியாகப் புரிந்து கொண்டீர்கள் என்றால் பரலௌகிக் தந்தை பற்றியும் புரிய வைக்க வேண்டும். நீங்கள் அரைக்கல்பமாகவே அவரை நினைவு செய்தே வந்திருக்கிறீர்கள். சுகம் தருபவர் தான் நினைவு செய்யப் படுகிறார். இராவணன் அனைவருக்கும் விரோதி ஆவான். அதனால் தான் அவனை அனைவரும் எரிக்கின்றனர். கேளுங்கள் - இராவணனை எவ்வளவு காலமாக எரிக்கிறீர்கள்? என்று. தொன்று தொட்டு எரிக்கிறோம் என்பார்கள். இராவணன் எப்போதிருந்து வருகிறான் என்பதே அவர்களுக்குத் தெரியாது. சத்யுகத்திலோ இராவணன் இருப்பதில்லை. பாரதத்தின் அனைவரிலும் பழைய விரோதி இராவணன் ஆவான். அவன் ஆத்மாவைப் தூய்மை இழக்கச் செய்பவன். ஆத்மாவின் விரோதி யார்? இராவணன். ஆத்மாவோடு சரீரமும் உள்ளது. ஆக, இரண்டுக்கும் விரோதி யார்? (இராவணன்). இராவணனுக்குள் ஆத்மா உள்ளதா? இராவணன் என்பது என்ன பொருள்? விகாரங்கள் தான் இராவணன். இராவணனுக்குள்ளும் கூட ஆத்மா உள்ளது என்பது கிடையாது. 5 விகாரங்கள் தான் இராவணன் எனச் சொல்லப் படுவது. ஆத்மாவுக்குள் தான் 5 விகாரங்கள் உள்ளன. அதனுடைய உருவத்தைத் தயார் செய்கின்றனர் (எரிப்பதற்காக). நீங்கள் அறிவீர்கள், இப்போது துக்கம், பிறகு சுகத்தில் செல்ல வேண்டும் என்றால் நிச்சயமாக பாபா வந்து அழைத்துச் செல்வார். அவர் தான் பதீத-பாவனர். எப்படி மற்ற ஆத்மா வருகிறதோ, அதே போல் இவரும் கூட வருகிறார். சிரார்த்தம் (தீதி) படைக்கும் போது ஆத்மாவை அழைக்கின்றனர். பிராமணரைத் தான் தன்னுடைய தந்தை எனப் புரிந்து கொண்டு அனைத்தையும் செய்கின்றனர். புரிந்து கொண்டுள்ளனர், இந்த ஆத்மா வருகிறது. ஆத்மா பேசுகிறது. ஆம், இவர் (சிவபாபா) வருவது தனிப்பட்டதாகும். இவர் (பிரம்மா) பகவானுடைய ரதம். பாகீரதம் எனச் சொல்கின்றனர். தண்ணீரின் விஷயம் கிடையாது. இது முழுவதும் ஞானத்தின் விஷயமாகும். பாபா புரிய வைக்கிறார், நான் சாதாரண உடலில் பிரவேசமாகிறேன். இவருடைய பெயர் பிரம்மா என வைக்கிறேன். இவரை நான் தத்தெடுப்பதில்லை. இவருக்குள் பிரவேசமாகிறேன். பிறகு உங்களைத் தத்தெடுக்கிறேன். நீங்கள் சொல்கிறீர்கள் -- சிவபாபா, நான் உங்களுடையவன். உங்கள் புத்தியோகம் மேலே சென்று விடுகிறது. ஏனென்றால் பாபா தாமே சொல்கிறார் -- என்னை நினைவு செய்வீர்களானால் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகி விடும். இந்த நினைவின் யாத்திரையில் இருங்கள். இந்த பாபா எங்காவது செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும் சிவபாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும். சிவபாபா இந்த ரதத்தில் டெல்லி சென்றார், கான்பூர் சென்றார் புத்தியில் சிவபாபாவின் நினைவு இருந்தது. கீழே இருக்கக் கூடாது. புத்தி மேலே இருக்க வேண்டும். ஆத்மா, பரமாத்மா தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாபா சொல்கிறார், நான் வசிக்கும் இருப்பிடமோ அங்கே உயரத்தில் உள்ளது. எனக்குப் பின்னால் இங்கே அலைய வேண்டாம். நீங்கள் என்னையும் அங்கே (பரந்தாமத்தில்) நினைவு செய்யுங்கள். ஆத்மாக்கள் நீங்களும் கூட பாபாவுடன் கூடவே வசிப்பவர்கள் தான். பாபாவின் இருப்பிடம் வேறு, உங்களுடையது வேறு என்பது கிடையாது. இந்த விஷயங்களை புத்தியில் பதிய வைக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் எப்படி நீங்கள் கராச்சியில் தனித்தனியாகப் புரிய வைத்தீர்களோ, அதுபோல் செய்வது நன்றாக உள்ளது. சேர்ந்தாற்போல் ஒருவர் மற்றவருடைய வைப்ரேஷன் நிற்க விடாது. பக்தியும் கூடத் தனிமையில் செய்கின்றனர். இந்தப் படிப்பையும் தனிமையில் படிக்க வேண்டும். முதலில் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பாபா பதீத-பாவனர். அவர் மூலமாக நாம் தூய்மையாகிக் கொண்டிருக்கிறோம்.பாபா சொல்கிறார் -- குழந்தைகளே, இந்தக் கடைசிப் பிறவியில் தூய்மையானவர்களானால் உலகத்தின் எஜமானர் ஆவீர்கள். எவ்வளவு பெரிய வருமானம்! பாபா சொல்கிறார் - தொழில் முதயவற்றைச் செய்யுங்கள். ஆனால் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் மற்றும் தூய்மையாகுங்கள். அப்போது யோகபலத்தின் மூலம் உங்களுடைய கறை நீங்கி விடும். நீங்கள் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். ஒருவரின் நினைவால் கர்மாதீத் நிலை அமைந்து விடும். புத்தியில் ஞான சிந்தனை செய்து கொண்டே இருங்கள். உற்றார் உறவினர்களுக்கும் கூட இதைப் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். கல்பத்திற்கு முன்பும் கூட உங்களுக்கு இது போல் புரிய வைக்கப் பட்டது. புதிய விஷயம் ஒன்றும் கிடையாது. கல்ப-கல்பமாக பாபா வந்து நமக்குப் புரிய வைக்கிறார். நாம் பிறகு உலக மனிதர்களுக்குப் புரிய வைக்கிறோம். பாரதம் நிச்சயமாக சொர்க்கமாக இருந்தது, மீண்டும் அது போல் ஆகும். இந்தச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. சத்யுகத்திற்கு லட்சக் கணக்கான வருடங்கள் எப்படி இருக்க முடியும்? அவ்வளவு மக்கள்தொகை எங்கே இருக்கிறது? பிறகோ எண்ணில் அடங்காததாக ஆகி விடும். நான்கு யுகங்கள். ஒவ்வொரு யுகத்தின் ஆயுள் 1250 வருடங்கள். எப்படி நீங்கள் புரிந்து கொண்டீர்களோ, அது போல் மற்றவர்களுக்கும் புரிய வைத்துக் கொண்டே இருப்பீர்கள். மரத்தின் வளர்ச்சி நடந்து கொண்டே இருக்கும். சில நேரம் கிரகச்சாரி அமர்ந்து கொள்கிறது. பிறகு இறங்கிக் கொண்டே செல்கிறது. பாபா சொல்கிறார் -- புரிய வைப்பது மிகவும் சுலபம். அலஃப் மற்றும் பே (அப்பா மற்றும் ஆஸ்தி). முக்கிய விஷயம் நினைவின் யாத்திரை. முயற்சியும் செய்ய வேண்டி உள்ளது. கல்பத்திற்குப் பிறகு இந்த நினைவு என்ற தொழில் கிடைக்கிறது. ஆனால் குப்தமானது. இது கஷ்டமான பாடம் (சப்ஜெக்ட்). அலஃபை நினைவு செய்ய வேண்டும். அலஃபைத் தான் மறந்து விட்டீர்கள். பகவானைப் பற்றி யாரும் அறிந்து கொள்ளவில்லை. பாடப் படவும் செய்கிறது -- சத்குரு இல்லையென்றால் பயங்கர இருள். ஒளிப் பிரகாசத்தை நோக்கி ஒரே ஒரு சத்குரு தான் அழைத்துச் செல்கிறார். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கிய சாரம்:

1. யோகபலத்தின் மூலம் ஆத்மாவை சதோபிரதானமாக ஆக்கி ஒருவரின் நினைவின் மூலம் கர்மாதீத் நிலை வரை சென்று சேர வேண்டும். நினைவின் குப்தமான முயற்சி செய்ய வேண்டும். தனிமையில் இந்த ஞானத்தின் படிப்பைப் படிக்க வேண்டும்.2. பாபாவிடம் இருந்து முக்தி-ஜீவன் முக்திக்கான ஆஸ்தியைப் பெறுவதற்காக இந்தக் கடைசிப் பிறவியில் அவசியம் தூய்மையாக ஆக வேண்டும்.வரதானம்:

அனைத்து விகாரங்களின் அம்சத்தையும் கூடத் தியாகம் செய்து சம்பூர்ண தூய்மையானவர்களாக ஆகக் கூடிய நம்பர் ஒன் வெற்றியாளர் ஆகுக.யாருக்குள் தூய்மையின்மையின் அம்ச மாத்திரம் கூட இல்லாமல் இருக்கிறதோ, அவர் தான் சம்பூர்ணமாக தூய்மையானவர். தூய்மை தான் பிராமண வாழ்க்கையின் பர்சனாலிட்டி (ஆளுமை - ஆத்மாவின் தனித்தன்மை). இந்தப் பெர்சனாலிட்டி தான் சேவையில் சுலபமாக வெற்றி கிடைக்கச் செய்யும். ஆனால் ஒரு விகாரத்தின் அம்சம் கூட இருக்குமானால் அடுத்த துணையும் (மற்ற விகாரங்கள்) கூட அதனுடன் அவசியம் இருக்கும். எப்படி தூய்மையுடன் கூடவே சுகம்-சாந்தி உள்ளது, அது போல் தூய்மையின்மையின் கூடவே ஐந்து விகாரங்களின் ஆழமான சம்மந்தம் உள்ளது. அதனால் ஒரு விகாரத்தின் அம்சம் கூட இல்லாதிருக்க வேண்டும். அப்போது நம்பர் ஒன் வெற்றியாளர் ஆவீர்கள்.சுலோகன்:

தைரியத்தின் ஓரடி எடுத்து வைப்பீர்களானால் ஆயிரம் மடங்கு (தந்தைûயின்) உதவி கிடைத்து விடும்.***OM SHANTI***

Powered by Blogger.