BK Murli 30 December 2017 Tamil


BK Murli 30 December 2017 Tamil

30.12.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் நடிப்பதற்காக கர்ம சேத்திரத்திற்கு வந்திருக்கின்றீர்கள். நீங்கள் கண்டிப்பாக கர்மங்களைச் செய்ய வேண்டும். ஆத்மாவின் சுயதர்மம் அமைதி. ஆகையால் அமைதியை கேட்கத் தேவையில்லை. சுயதர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும்கேள்வி:

ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் கூட தந்தை எந்த விசயத்தை கூறுவதில்லை? காரணம் என்ன?பதில்:

நாளை என்ன நடக்கும் என்று தந்தை தெரிந்திருந்தாலும் கூறமாட்டார். நாளை பூகம்பம் நடக்கும் என்று இன்றே கூறி விடமாட்டார். ஒருவேளை கூறி விட்டால் நாடகம் உண்மையானதாக இருக்காது. நீங்கள் அனைத்தையும் சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டால் அந்த நேரத்தில் உங்களுக்கு தந்தையின் நினைவும் மறந்து போகும். கடைசி கால காட்சிகளைப் பார்ப்பதற்கு நீங்கள் மகாவீரர்களாக ஆக வேண்டும். உறுதியானவர்களாக, நிலையானவர்களாக இருக்க வேண்டும். தந்தையின் நினைவில் சரீரத்தை விட வேண்டும், அதற்காக பரிபக்குவ (பண்பட்ட) நிலையை உருவாக்க வேண்டும்.ஓம் சாந்தி.

ஓம் சாந்தி என்பதன் பொருள் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. மனதிற்கு அமைதி வேண்டும் என்று மனிதர்கள் கூறுகின்றனர், அது எவ்வாறு கிடைக்கும்? இதைப்பற்றி ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்திருக்கின்றார், நீங்களும் ஓம் சாந்தி என்று கூறுகின்றீர்கள். இதன் பொருள் என்ன? சிலர் ஓம் என்பதற்குப் பொருள் பகவான் என்று நினைக்கின்றனர். தந்தையும் கூறுகின்றார் - ஓம் சாந்தி. ஓம் என்றால் நான் ஆத்மா. பிறகு எனது சரீரம் என்று கூறுகின்றோம். ஆக ஆத்மா சுயம் கூறுகின்றது - ஓம் சாந்தி. என்னுடைய சுய தர்மம் சாந்தி, மேலும் இருக்கக் கூடிய இடமும் நிர்வாண்தாமம், சாந்திதாமம் ஆகும். நான் சாந்தி சொரூபமானவன் என்று ஆத்மா சுயம் தனது அறிமுகத்தினைக் கொடுக்கின்றது. பிறகு அமைதி எப்படி கிடைக்கும்? என்று கேட்க வேண்டிய அவசியமே யில்லை. தந்தையும் கூறுகின்றார் - ஓம் சாந்தி. நானும் பரம் ஆத்மாவாக இருக்கின்றேன், அனைத்து ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தந்தையாக இருக்கின்றேன். சாந்திதாமத்தில் இருக்கக் கூடியவன். ஆத்மாக்களாகிய நீங்கள் நடிப்பதற்காக இங்கே சரீரத்தை தாரணை செய்திருக்கின்றீர்கள். பிறகு மன அமைதிக்கான கேள்வியே எழ முடியாது. ஓம் என்பதன் பொருளையும் யாரும் தெரிந்திருக்கவில்லை. அதனால் தான் மன அமைதிக்காக அலைந்து கொண்டே இருக்கின்றனர். ஆத்மா அசரீரியாக இருக்கும் பொழுது அமைதியாக இருந்தது. சரீரத்தில் வரும்பொழுது கண்டிப்பாக கர்மேந்திரியங்கள் வேலை செய்யும். கர்ம சேத்திரத்தில் கண்டிப்பாக காரியங்கள் செய்தே ஆக வேண்டும். ஆக அமைதிக்காக எந்த புத்தகத்தையும் வெளியிட வேண்டிய அவசியமில்லை. இது புரிந்து கொள்வதற்கு விநாடிக்கான விசயமாகும். ஆத்மா சுயம் ஓம் சாந்தி என்று கூறுகின்றது. பாக்கி என்ன வேண்டும்? எங்கிருந்து அமைதி கிடைக்கும்? ஆத்மாவின் தேசம் சாந்தி தாமமாகும். இப்பொழுது அங்கு சென்று இருக்க முடியாது. நடிப்பு கண்டிப்பாக நடிக்க வேண்டும். அதே போன்று பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து ஜீவன்முக்தி அடைவதற்கு எந்த புத்தகமும் அவசியமில்லை. இது ஒரு விநாடியின் விசயமாகும். புத்தகங்கள் பக்தி மார்க்கத்தில் உருவாக்குகின்றனரே தவிர ஞான மார்க்கத்தில் அல்ல. இருப்பினும் வெளியில் உள்ளவர்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதற்காக உண்மையான மன அமைதி, உண்மையான கீதையைப்பற்றி எழுத வேண்டியுள்ளது. இல்லையெனில் தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள், சுகம்தாமம் மற்றும் சாந்திதாமத்தை நினைவு செய்யுங்கள், கடைசி நிலை நல்ல நிலையாக ஆகிவிடும் என்று புத்தி கூறுகின்றது. மற்றபடி இங்கு மனம் அமைதியாக இருக்கவே முடியாது. சாந்திதாமம் என்பது நிர்வாண்தாமம், அங்கு தந்தையும் இருக்கின்றார் மற்றும் ஆத்மாக்களாகிய நாமும் இருக்கின்றோம். ருத்ர மாலை என்றும் கூறுகின்றனர் எனில் ருத்ர ஞான யக்ஞமும் ஒன்றே ஒன்று தான். ஞானக் கடலான தந்தை மட்டுமே இந்த ஞானத்தைக் கூற முடியும். மற்ற ஞானங்கள் அநேக விதத்தில் இருக்கின்றன. விஞ்ஞானத்தின் ஞானம், கை வினைக்கான ஞானமும் உள்ளன. ஆனால் அவையனைத்தும் தொழில் சம்மந்தப்பட்ட விசயங்களாகும். ஞானத்தின் மூலம் மனிதர்கள் மிகுந்த அறிவாளிகளாக ஆகின்றனர். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு உலகின் முதல், இடை, கடைக்கான ஞானம் கிடைத்திருக்கின்றது. இது பாடசாலையாகும். இங்கு கற்பிக்கப்படுகின்றன. தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார், அவரிடத்தில் அனைத்து ஞானமும் இருக்கின்றன. வேத சாஸ்திரங்கள் போன்ற அனைத்தையும் அறிந்துள்ளவர். சரி-தவறு, பொய்-உண்மை எது? என்று நான் புரிய வைக்கின்றேன். உண்மை எது? என்று இப்பொழுது கூறுங்கள். சர்வவியாபி என்று கூறுவது உண்மையா? நான் உங்களது தந்தையாக இருக்கின்றேன். சர்வவியாபி என்று கூறுவதன் மூலம் எந்த ஞானமும் அடைய முடியாது. முயற்சி செய்ய முடியாது. சர்வவியாபி ஆகி என்ன செய்வது? சுயம் எஜமானாக இருக்கின்றார், பகவான் ஒருபொழுதும் தூய்மை இழப்பதில்லை. அவர் எப்பொழுது விரும்புகின்றாரோ திரும்பிச் சென்று விடுவார். இங்கு எல்லோரும் தூய்மையின்றி இருப்பதால் யாரும் திரும்பிச் செல்ல முடியாது. தூய்மை இல்லாமல் ஆகும் பொழுது முழு ஞானமும் இல்லாமல் போய் விடுகின்றது. புத்தி அழுக்காகி விடுகின்றது. யோகா வருவதில்லை, நினைவில் தடைகள் ஏற்பட்டு விடுகின்றது. ஆகையால் எந்த பாவ காரியமும் செய்யக் கூடாது. கண்டிப்பாக நினைவும் செய்ய வேண்டும். தந்தையைத் தவிர பழைய பாவங்களை யாரும் அழிக்க முடியாது. ஹரிதுவாரில் இருப்பதன் மூலம் பாவங்கள் நீங்கிவிடும் என்று நினைக்காதீர்கள். பாவங்கள் என்பது செய்து கொண்டே இருக்கின்றனர். சாது, சந்நியாசிகளுக்கு ஒருவேளை நமது வீடு சாந்திதாமம் என்பது தெரிந்து விட்டால் அங்கிருந்து வந்துவிடுவர். பாபா உங்களுக்கு அனைத்தையும் சாட்சாத்கார் ஏற்படுத்துகின்றார். நீங்கள் அங்கிருந்துதான் வந்திருக்கின்றீர்கள். திவ்ய திருஷ்டியின் மூலம் பக்தி மார்க்கத்திலும் சாட்சாத்கார் ஏற்படுகின்றது. நீங்கள் சத்யுகத்தில் இருக்கும் பொழுது இந்த கண்களால் லெட்சுமி, நாராயணனைப் பார்ப்பீர்கள். அவர்களும் உங்களைப் பார்ப்பார்கள். இப்பொழுது சாட்சாத்கார் மூலமாக பார்க்கின்றீர்கள். பாபாவிடத்தில் திவ்ய திருஷ்டிக்கான சாவியிருக்கின்றது. அதனை வேறு யாரும் அடைய முடியாது. நான் இந்த சாவியை வேறு யாருக்கும் கொடுப்பதில்லை என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். இதற்குப் பதிலாக நான் சொர்க்கத்தில் இராஜ்யம் செய்வதில்லை. தராசை சமமாக வைக்கின்றேன். நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள், நான் ஆவதில்லை. பக்தியில் சாட்சாத்கார் செய்கின்றனர் எனில் அதுவும் அந்த மூர்த்தியில் எந்த சக்தியும் கிடையாது.மன ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக நான் சாட்சாத்கார் செய்விக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். கணேசர், ஹனுமான் போன்று யாரையெல்லாம் பூஜிக்கின்றனரோ நான் தான் திவ்ய காட்சியைக் (சாட்சாத்கார்) காண்பிக்கின்றேன். ஆனால் பரமாத்மா அனைவரிடத்திலும் இருக்கின்றார் என்று அவர்கள் நினைக்கின்றனர். அதனால் தான் என்னை சர்வவியாபி என்று கூறிவிட்டனர், ஞானத்தை தவறாக எடுத்துவிட்டனர். உண்மை யில் அனைவரும் சகோதரர்களாக இருக்கின்றீர்கள். அனைவரிடத்திலும் ஆத்மா இருக்கிறது. அனைவரும் தந்தைகளாக ஆக முடியாது. பரமபிதாவே, கருணை காட்டுங்கள் என்று அனைவரும் அழைக்கின்றனர் எனில் அனைவரும் குழந்தைகளாக ஆகி விட்டனர். குழந்தைகள் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டுமெனில் தேகாபிமானத்தை விட வேண்டும். நான் ஆத்மா, தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கின்றேன் என்று நினைத்தால் போதும். ஆத்மாவை ஆண் என்றோ பெண் என்றோ கூறுவ தில்லை. பெண் உடலாக இருந்தாலும் ஆஸ்தியடைந்து கொண்டு இருக்கின்றேன் என்று கூறுவது சரியே. தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கின்றது. நான் கிறுஸ்துவனாக, நான் இன்னாராக இருக்கின்றேன். இவையனைத்தும் சரீர தர்மங்களாகும். ஆத்மா ஒன்று தான், சரீரம் மாறிக் கொண்டே இருப்பதால் இவர் முஸ்லீம், இவர் இந்து என்று கூறுகின்றனர். ஆத்மாவின் பெயர் மாறுவதில்லை, சரீரம் பெயர் மாறிக் கொண்டேயிருக்கும். தந்தை பதீத பாவனாக, ஞானக் கடலாக இருக்கின்றார். தந்தையின் மகிமை தனிப்பட்டதாகும். அவர் அமைதிக் கடலாகவும், ஞானக் கடலாகவும் இருக்கின்றார். அவரிடம் இப்பொழுது தொடர்பு வைப்பதன் மூலம் நாம் சாந்திதாமத்திற்குச் சென்று விடுவோம். இப்படிப்பட்ட யோகா யாரும் செய்ய முடியாது. நீங்கள் சாந்திதாமத்தை தெரிந்திருக்கின்றீர்கள். மற்றபடி சிவபாபாவை நினைவு செய்கின்றீர்கள். நாம் பிரம்ம ஞானி என்று சந்நியாசிகள் கூறுகின்றனர். பிரம்மத்தை நினைவு செய் கின்றனர், ஆனால் அதன் மூலம் விகர்மம் விநாசம் ஆக முடியாது. அந்த யோகம் தவறானதாகும். பிரம்மம் என்பது வசிக்கக் கூடிய இருப்பிடமாகும். பிரம்ம ஞானியென்றாலும் தத்துவ ஞானியென்றாலும் ஒன்று தான். இது இவர்களது பிரம்மையாகும் என்று தந்தை கூறுகின்றார். பிரம்மா பதீத பாவனாக ஆக முடியாது. ஆத்மாக்களின் தந்தையாக சிவன் இருக்கின்றார், அவரையே பதீத பாவன் என்று கூறப்படுகின்றது. மற்றபடி யாரும் திரும்பிச் செல்ல முடியாது. அனைவரும் சதோ பிரதானத்தலிருந்து தமோ பிரதானமாக கண்டிப்பாக ஆக வேண்டும். முதல் நம்பரில் வரக் கூடிய நாராயணனே ஆகும் பொழுது மற்ற அனைவரும் கண்டிப்பாக தமோ பிரதானமாக ஆவார்கள். மறுபிறப்பு எடுத்துக் கொண்டே வருவர். இதனையும் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு தர்மத்தைச் சார்ந்தவர்களும் எத்தனை பிறப்பு எடுப்பார்கள்? என்பது உங்களுக்குத் தெரியும். தேவதைகள் முழுமையாக 84 பிறப்புகள் எடுப்பவர்கள் என்று கூறுகின்றோம். மற்றவர்களது பிறப்புகளை மிகச் சரியாகக் கூற முடியாது. யாராவது கணக்கு செய்தால் கூற முடியும். ஆனால் அவசியமில்லை. நாம் நமது முயற்சியில் இருக்க வேண்டுமே தவிர வேறு எந்த விசயத்திலும் அதிகம் செல்லக் கூடாது. உங்களுக்கு முக்தி, ஜீவன்முக்தி வேண்டுமெனில் மன்மனாபவ. (என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்). நான் பதீத பாவனாக இருக்கின்றேன், வந்து இராஜயோகத்தை கற்பிக்கின்றேன். பதீத பாவன் கண்டிப்பாக கலியுகத்தின் கடைசியில் வருவாரே தவிர துவாபர யுகத்தில் அல்ல. சிவராத்திரி என்று மட்டும் எழுதுவதால் பொருள் வெளிப்படுவதில்லை. திரிமூர்த்தி சிவராத்திரி என்று எழுத வேண்டும். பக்தியில் ஆழ்ந்த இருளில் இருக்கின்றனர், அதனால் தான் ஞான சூரியன் வெளிப்பட்டால் ...... (பாடப்படுகிறது) ஆக கண்டிப்பாக கலியுகக் கடைசியாக இருக்கும். சத்யுகத்தில் வெளிச்சம் இருக்கும். தந்தை கண்டிப்பாக சங்கம யுகத்தில் வருவார். அனைவரும் தூய்மையற்றவர்களாக ஆகும் பொழுது தான் தந்தை வந்து தூய்மையாக்குகின்றார். ஏனெனில் அனைவருக்கும் தொடர்பு இருக்கின்றதல்லவா! மனதிற்கு அமைதி எப்படி கிடைக்கும் என்று அதிகமான சந்நியாசிகளும் கூறுகின்றனர். ஆத்மாவின் சுயதர்மம் சாந்தி. பாரதவாசிகள் தங்களது தேவி தேவதா தர்மத்தை மறந்தது போன்று ஆத்மாவும் தனது சுய தர்மத்தை மறந்து விட்டது. என்னை அசாந்தியாக ஆக்கியது இராவணன் என்பது ஆத்மாவிற்குத் தெரியும். இந்த ஞானம் இப்பொழுது தான் கிடைத்திருக்கின்றது. இங்கு ஒருபொழுதும் அமைதி அடைய முடியாது. சாந்திதாமத்தில் மட்டுமே அமைதி அடைய முடியும். அங்கு அனைவரும் செல்ல வேண்டும். நாம் சாந்திதாமத்திற்குச் சென்று பிறகு சுகதாமத்திற்கு வருவோம். மற்ற தர்மத்தினருக்கு அதிகமாக அமைதி கிடைக்கின்றது, நமக்கு சுகம் அதிகமாக கிடைக்கின்றது. அவர்களுக்கு அந்த அளவிற்கு சுகமும் கிடைக்காது, துக்கமும் கிடைக்காது. இது விரிவான விசயமாகும். சிலர் இலட்சியத்தை மிகவும் நன்றாக பிடித்திருக் கின்றனர். வீட்டிலிருந்தாலும் தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து கொண்டேயிருங்கள். ஆனால் பிரஜைகளை உருவாக்க முடியாது. பிரஜைகளை உருவாக்கக் கூடியவர்களே ராஜா, ராணி, எஜமானர்களாக ஆவார்கள். முயற்சி இருக்கின்றதல்லவா! புரொஜெக்டர் மூலமாக புரிய வைப்பது சுலபம். பெரிய பெரிய மனிதர்களை அழைத்து அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகமானவர்களுக்கு நன்மை செய்ய முடியும். இந்த புதிய முறையும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புரஜெக்டர் சிலைடுகளை ஆங்கிலத்தில் உருவாக்கி அயல்நாட்டிற்குச் சென்று காண்பிக்க முடியும். சக்கரம் போன்றவைகளைப் பார்க்கும் பொழுது இது பாரதத்தின் தத்துவ ஞானம் என்பதை புரிந்து கொள்வார்கள். இந்த ஞானத்தை தந்தை மட்டுமே கொடுக்க முடியும். இது ஆன்மீக ஞானமாகும். ஆத்மாவின் மூலம் தான் ஆன்மீக ஞானம் கிடைக்கின்றது. உண்மையான தத்துவ ஞானத்தில் பட்டம் பெற்ற டாக்டர்கள் நீங்கள் தான். தந்தை ஆன்மீக சர்ஜனாக இருக்கின்றார். ஆத்மாக்களுக்கு ஊசி போடுகின்றார். உங்களுடையது அனைத்தும் ரகசியமானதாகும். அவர்கள் சாஸ்திரங்களைப் படிக்கும் பொழுது அவர்களுக்கு மிகுந்த மரியாதை ஏற்படுகின்றது. ஆனால் ஆத்மா தூய்மை இல்லாதது என்று புரிந்து கொள்வதில்லை. எதுவும் ஒட்டாது என்று கூறிவிடுகின்றனர். ஆக உண்மையிலும் உண்மையான ஞானம் நீங்கள் மட்டுமே கொடுக்க முடியும். அவர்களுடையது எல்லைக்குட்பட்ட சந்நியாசம், உங்களுடையது எல்லையற்ற சந்நியாசம், அதனை எல்லையற்ற தந்தை மட்டுமே கற்றுக் கொடுக்கின்றார் என்றும் புரிய வைக்கப்பட்டுள்ளது. அது ஹடயோகம், இது இராஜயோகமாகும். அவர்கள் ஹடயோகத்தின் மூலம் கர்மேந்திரியங்களைக் கட்டுப்படுத்த விரும்புகின்றனர். நீங்கள் இராஜயோகத்தின் மூலம் கர்மேந்திரியங்களை வசமாக்குகின்றீர்கள். அதிகமான வித்தியாசங்கள் உள்ளன. இப்பொழுது தந்தையின் மூலமாக நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக ஆகிக் கொண்டேயிருக்கின்றீர்கள். ஆனால் வரிசைக்கிரமமாக ஆவீர்கள். அப்படிப்பட்ட தந்தையின் மீது எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்! இது ரகசியமான (குப்தமான) அன்பு ஆகும். ஆத்மாவும் குப்தாமானது. நமக்கு பாபா கிடைத்திருக்கின்றார் என்பது ஆத்மாவிற்குத் தெரியும். துக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கின்றார். பாபா, நீங்கள் அதிசயம் செய்து விட்டீர்கள்! கல்ப கல்பமாக நீங்கள் எங்களுக்கு ஞானம் கொடுக்கின்றீர்கள், பிறகு நாம் மறந்து விடுகின்றோம். தந்தை கூறுகின்றார் - ஆம், குழந்தைகளே! இந்த ஞானம் மறைந்து போய் விடும் என்று நான் கூறியிருக்கின்றேன். சத்யுகத்தில் இந்த ஞானம் இருக்காது. இவையனைத்தும் நாடகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சிறிதும் வித்தியாசம் ஏற்பட முடியாது. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகமாகும், ஆகையால் எது நடந்தாலும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டே செல்லுங்கள். விநாசம் ஏற்படும், ஸ்தாபனை ஆகும், சாட்சியாகப் பார்க்க வேண்டும். நாளை பூகம்பம் நடக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள், நாளை இவ்வாறு நடக்கும் என்று நான் கூறிவிட மாட்டேன். பிறகு அனைவரும் முன்னேற்பாடு செய்து கொள்வார்கள். சாட்சியாக பார்த்துக் கொண்டே செல்லுங்கள். என்னை நினைவு செய்யுங்கள் என்பது தான் மூல விசயமாகும். இல்லையெனில் என்னையும் மறந்து விடுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மகாவீரர்களாக ஆக வேண்டும். மகாவீர், மகாவீராங்கனைகளை கல்வியின் தேவி, தேவதைகள் என்று கூறப்படுகின்றனர். கடவுள் யோகத்தை கற்றுக் கொடுத்து மகாவீரர்களாக ஆக்குகின்றார். கடைசியில் பூகம்பங்கள் போன்றவை ஏற்படும் பொழுது மகாவீரத்தன்மை தேவை. இப்பொழுது நீங்கள் முயற்சியாளர்களாக இருக்கின்றீர்கள். உறுதியானவர்களாகவும், நிலையானவர்களாகவும் இருக்க வேண்டும். கூடவே பாபாவின் நினைவில் இறப்பது மிகவும் நல்லதாகும். யார் ஞானத்தில் உறுதியானவர்களாகவும், திடமானவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்கள் அமர்ந்து கொண்டே சரீரத்தை விட்டு விடுவார்கள். பிறகு கர்மாதீத நிலைக்குச் சென்று சேவை செய்வார்கள். குழந்தைகள் பரிபக்குவ (முதிர்ச்சி அடைந்த) நிலையில் சரீரத்தை விட்டு சூட்சும் லோகத்திற்குச் சென்று, பிறகு புது உலகிற்கு வரவேண்டும். நல்லது,. பாபாவிடமிருந்து முழு ஆஸ்தியடைவதற்காக குழந்தைகள் சதா தனது சார்ட்டைப் பார்க்க வேண்டும். எந்த விசயத்திலும் சந்தேகத்தில் வந்து படிப்பை ஒருபொழுதும் விட்டுவிடக் கூடாது. பாபா அடிக்கடி கூறுகின்றார் - என்னை நினைவு செய்தால் விகர்மம் விநாசமாகும். நல்லது.இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) எந்த விசயத்திலும் சந்தேக புத்தியுடையவர்களாக ஆகி படிப்பை விட்டு விடக் கூடாது. தனது மன நிலையை (ஸ்திதியை) உறுதியானதாகவும், நிலையானதாகவும் ஆக்க வேண்டும். ஒரு தந்தையிடத்தில் உண்மையான அன்பு வைக்க வேண்டும்.2) விஸ்தாரமான விசயங்களில் தனது நேரத்தை வீணாக்கக் கூடாது. எந்த செயலிலும் புத்தி அழுக்காகிவிடக் கூடாது, இதில் முழு கவனம் கொடுக்க வேண்டும்.வரதானம்:

நான் என்ற வார்த்தையின் நினைவின் மூலம் தன்னுடைய உண்மையான சொரூபத்தில் நிலைத்து இருக்கக்கூடிய தேகத்தின் பந்தனத்தில் இருந்து விடுபட்டவர் ஆகுக.நான் என்ற ஒரு வார்த்தை தான் பறக்கவைக்கக் கூடியது மற்றும் நான் என்ற வார்த்தை தான் கீழே வர வைக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. நான் என்று கூறுவதன் மூலம் உண்மையான நிராகார சொரூபம் நினைவு வரவேண்டும், இது இயல்பாக இருக்க வேண்டும், தேக உணர்வின் நான் என்பது முடிவடைந்துவிட்டது என்றால் தேக பந்தனத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள். ஏனென்றால், இந்த நான் என்ற வார்த்தை தான் தேக அகங்காரத்தில் கொண்டு வந்து கர்மபந்தனத்தில் மாட்டிவிடுகிறது. ஆனால், நான் நிராகார ஆத்மா என்ற நினைவு எப்பொழுது வருகிறதோ, அப்பொழுது தேக உணர்விலிருந்து கடந்து இருப்பீர்கள், கர்மத்தின் சம்மந்தத்தில் வருவீர்கள், பந்தனத்தில் வரமாட்டீர்கள்.சுலோகன்:

நிச்சயிக்கப்பட்ட வெற்றி மற்றும் கவலையற்ற நிலையினுடைய அனுபவம் செய்வதற்காக முழுமையான நிச்சயபுத்தி உடையவர் ஆகுங்கள்.=***OM SHANTI***

Powered by Blogger.