BK Murli 15 January 2018 Tamil


BK Murli 15 January 2018 Tamil

15.01.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த சங்கமயுகத்தில் தான் ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சங்கமம் (மேளா) நடக்கின்றது. சத்குரு ஒரே ஒரு முறை வந்து குழந்தைகளுக்கு சத்திய ஞானத்தை அளிக்கின்றார். சத்தியத்தை (உண்மை) பேசுவதைக் கற்பிக்கின்றார்.கேள்வி :

எந்த குழந்தைகளின் நிலை மிகவும் நன்றாக இருக்கின்றது?பதில் :

இது அனைத்தும் பாபாவினுடையது என்று யாருடைய புத்தியில் இருக்கின்றதோ, ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்தை அடையக்கூடிய, முழுமையாக தியாகம் செய்யக்கூடிய குழந்தைகளின் நிலை மிகவும் நன்றாக இருக்கின்றது. யாத்திரை நீளமானது. ஆகவே உயர்ந்த பாபாவின், உயர்ந்த வழியை பெற்றுக் கொண்டேயிருக்க வேண்டும்.கேள்வி :

முரளி கேட்கும் பொழுது எந்த குழந்தைகள் அளவற்ற சுகத்தை உணர்கிறார்கள்?பதில்:

நாம் சிவபாபாவின் முரளியைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம், இந்த முரளியை சிவபாபா பிரம்மாவின் உடல் மூலமாகக் கூறியிருக்கின்றார். மிகவும் அன்பான தந்தை நம்மை சதா சுகமானவராக, மனிதனிலிருந்து தேவதையாக மாற்றுவதற்காக இதைக் கூறிக்கொண்டு இருக்கின்றார் என யார் புரிந்து கொண்டு, முரளி கேட்கும் பொழுது நினைவில் வைத்திருந்தால் அவர்களுக்கு சுகம் ஏற்படும்.பாடல் :

அன்பானவரை வந்து சந்தியுங்கள் .....ஓம் சாந்தி.

இந்த துக்கம் நிறைந்த மனதினர் துக்க தாமத்தில் தான் இருக்கின்றனர். சுகம் நிறைந்த ஜீவ ஆத்மாக்கள் சுக தாமத்தில் இருக்கிறார்கள். அனைத்து பக்தர்களுக்கும் அன்பானவர் ஒருவரே அவரைத்தான் நினைவு செய்கின்றனர். அவருக்கு அன்பானவர் என்று கூறப்படுகிறது. துக்கம் ஏற்படும் பொழுது நினைக்கிறார்கள். இதை யார் அமர்ந்து புரிய வைக்கிறார்கள்? உண்மையிலும் உண்மையான அன்பானவர். உண்மையான தந்தை, உண்மையான டீச்சர், உண்மையான சத்குரு...... அனைவருக்கும் அன்பானவர் அவர் ஒருவரே. ஆனால் அன்பானவர் எப்போது வருகிறார் என யாரும் அறியவில்லை. அன்பானவரே வந்து தன்னுடைய பக்தர்களுக்கு, தன்னுடைய குழந்தைகளுக்கு, நான் சங்கமயுகத்தில் ஒரு முறை தான் வருகிறேன் என்று தெரிவிக்கிறார். நான் வருவதற்கும் போவதற்கும் இடைப்பட்டது தான் சங்கமம் என்று கூறப்படுகிறது. மற்ற அனைத்து ஆத்மாக்களும் பல முறை பிறப்பு, இறப்பில் வருகின்றன. நான் ஒரு முறை தான் வருகின்றேன். நான் சத்குரு ஒருவனே. மற்ற குருக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை சத்குரு என்று கூறமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் யாரும் சத்தியத்தைப் பேசுவதில்லை. அவர்கள் சத்தியமான பரமாத்மாவை அறியவும் இல்லை. யார் சத்தியத்தை அறிகிறார்களோ, அவர்கள் எப்பொழுதும் சத்தியத்தையே பேசுவார்கள். அந்த சத்குரு தான் சத்தியத்தைப் பேசக்கூடிய உண்மையான சத்குரு ஆவார். உண்மையான தந்தை, உண்மையான டீச்சர் அவரே வந்து நான் சங்கமயுகத்தில் வருகிறேன் என தெரிவிக்கிறார். எவ்வளவு நேரம் நான் வருகிறேனோ அதுவே என்னுடைய ஆயுள் என்கிறார். பதீதமானவர்களை தூய்மையாக்கி விட்டுத்தான் நான் செல்கிறேன். எப்பொழுது என்னுடைய பிறப்பு ஏற்படுகிறதோ, அப்பொழுதிலிருந்து நான் சகஜ இராஜயோகத்தைக் கற்பிக்க ஆரம்பிக்கிறேன். எப்பொழுது கற்பித்து முடிக்கின்றேனோ அப்பொழுது தூய்மையற்ற உலகம் அழிவை அடைகிறது. மேலும் நான் சென்று விடுகிறேன். அவ்வளவு தான். நான் இவ்வளவு நேரம் தான் வருகிறேன். சாஸ்திரங்களில் எந்த நேரமும் இல்லை. சிவபாபா எப்பொழுது பிறக்கிறார். எவ்வளவு நாட்கள் பாரதத்தில் இருக்கின்றார்? இதை பாபா தானே அமர்ந்து நான் சங்கமயுகத்தில் வருகிறேன் என தெரிவிக்கிறார். சங்கமயுகத்தின் ஆதி, சங்கமயுகத்தின் முடிவு தான் நான் வருவதன் ஆரம்பம், போவதன் முடிவு ஆகும். மற்றபடி இடையில் அமர்ந்து நான் இராஜயோகத்தை கற்பிக்கின்றேன். நான் இவருடைய வானப்பிரஸ்த நிலையில் வேற்று தேசம், வேற்று உடலில் வருகிறேன் என்றால் விருந்தினன் ஆகிவிட்டேன் அல்லவா ! எனக் கூறுகின்றார். நான் இந்த இராவணனின் உலகத்தில் விருந்தினன். இந்த சங்கமயுகத்தின் மகிமை மிகவும் பிரசித்தமானது. பாபா இராவண இராஜ்ஜியத்தை அழித்து, இராம இராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காகத்தான் வருகிறார். சாஸ்திரங்களில் கட்டுக் கதைகள் பல எழுதிவிட்டார்கள். இராவணனை எரித்துக் கொண்டே வருகிறார்கள். முழு உலகமும் இச்சமயம் இலங்கை போன்றதாகும். சிலோனை மட்டும் இலங்கை என்று கூறமுடியாது. இந்த முழு சிருஷ்டியும் இராவணன் வசிப்பதற்கான இடமாகும் அல்லது சோகவனம் ஆகும். அனைவரும் துக்கத்தில் இருக்கின்றார்கள். நான் இதை அசோகவனமாகவும், சொர்க்கமாகவும் மாற்ற வருகிறேன் என பாபா கூறுகின்றார். சொர்க்கத்தில் அனைத்து தர்மத்தினரும் இருப்பதில்லை. அங்கே ஒரே தர்மம் தான் இருந்தது. அது இப்போது இல்லை. இப்போது மீண்டும் தேவதையாக மாற்றுவதற்காக இராஜயோகத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றேன். அனைவரும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். நான் பாரதத்தில் தான் வருகிறேன். பாரதத்தில் தான் சொர்க்கம் இருக்கின்றது. கிறிஸ்துவர்கள் கூட சொர்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். சொர்க்கத்திற்கு சென்று விட்டனர் என்று கூறுகின்றனர், இறை தந்தையிடம் சென்றுவிட்டனர். மற்றபடி சொர்க்கத்தைப் புரிந்து கொண்டனர் என்பது கிடையாது. சொர்க்கம் தனிப்பட்ட விசயம் ஆகும். நான் எப்பொழுது எப்படி வருகிறேன், எப்படி திரிகாலதர்லியாக மாற்றுகிறேன் என பாபாவே புரிய வைக்கின்றார். வேறு யாரும் திரிகாலதர்லி ஆக முடியாது. சிருஷ்டியின் முதல், இடை, கடையை நான் தான் அறிகிறேன். இப்போது கலியுகம் அழிய வேண்டும். அறிகுறிகள் கூட தென்படுகிறது. அதே சங்கமத்தின் சமயமாகும். நேரத்தைத் துல்லியமாக யாரும் கூற முடியாது. மற்றபடி ஆம் ராஜ்ஜியம் முழுமையாக உருவாகிக் கொண்டு இருக்கும். குழந்தைகள் கர்மாதீத நிலையை அடைந்தால் ஞானம் முடிந்து போகும் சண்டை ஆரம்பமாகும். நானும் என்னுடைய தூய்மையாக்கும் பாகத்தை முடித்துவிட்டு போவேன். தேவி தேவதா தர்மத்தை உருவாக்குவதே என்னுடைய பாகம் ஆகும். பாரதவாசிகள் இதை எதையும் அறியவில்லை. இப்போது சிவராத்திரி கொண்டாடுகிறார்கள் என்றால் நிச்சயமாக சிவபாபா ஏதாவது காரியத்தை செய்திருப்பார். அவர்களோ கிருஷ்ணரின் பெயரைப் போட்டுவிட்டனர். இந்த பொதுவான தவறு பார்க்கும் பொழுதே தெரிகிறது. சிவபுராணம் போன்ற எந்த சாஸ்திரத்திலும் சிவபாபா வந்து இராஜ யோகத்தைக் கற்பித்தார் என்பது இல்லை. உண்மையில் ஒவ்வொரு தர்மத்திற்கும் ஒரு சாஸ்திரம் இருக்கிறது. தேவதா தர்மத்திற்கு கூட ஒரு சாஸ்திரம் இருக்க வேண்டும். ஆனால் அதைப் படைக்கக்கூடியவர் யார்? இதில் தான் குழம்பிப் போயிருக்கிறார்கள்.நான் நிச்சயமாக பிரம்மா மூலமாக பிராமண தர்மத்தைப் படைக்க வேண்டியிருக்கிறது என பாபா புரிய வைக்கிறார். பிரம்மா வாய் வழி வம்சத்தைச் சார்ந்த பிரம்மா குமார், பிரம்மா குமாரிகள் ஆகியிருக்கின்றனர். பலரின் பெயர் மாற்றப்பட்டு இருந்தது. அவர்களில் பலர் ஓடிவிட்டனர். கூடவே அதற்கு பதிலாகவும் வருகிறார்கள். மற்றபடி பார்க்கும் பொழுது பெயர் வைப்பதால் எந்த நன்மையும் இல்லை. அதை மறந்தும் போகிறார்கள். உண்மையில் நீங்கள் பாபாவுடன் தொடர்பு கொள்ள வேண்டும். உடலுக்குத்தான் பெயர் கிடைக்கிறது. ஆத்மாவிற்கு பெயர் கிடையாது. ஆத்மா 84 ஜென்மங்களை எடுக்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் பெயர், ரூபம், தேசம் காலம் அனைத்தும் மாறுகிறது. டிராமாவில் யாருக்குமே ஒரு முறை கிடைத்த நடிப்பின் பாகம், அதே ரூபத்தில் மீண்டும் ஒருபோதும் அந்த பாகத்தை நடிக்க முடியாது. அதே பாகத்தை மீண்டும் 5000 வருடங்களுக்குப் பிறகு தான் நடிப்பார்கள். கிருஷ்ணர் அதே பெயர், ரூபத்தில் மீண்டும் வரமுடியாது. இல்லை. ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொன்றை எடுக்கின்றது என்றால் ஒன்றைப் போலவே இன்னொன்று இருக்காது. 5 தத்துவங்களைப் பொறுத்து தோற்றம் மாறிக் கொண்டே போகின்றது. எவ்வளவு தோற்றங்கள் இருக்கின்றது. ஆனால் இது அனைத்தும் முதலில் இருந்தே டிராமாவில் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. புதியதாக எதுவும் உருவாக்கப்படவில்லை. இப்பொழுது சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. நிச்சயமாக சிவன் வந்துள்ளார். அவரே முழு உலகத்திற்கும் அன்பனாக இருக்கின்றார். இலட்சுமி, நாராயணன் அல்லது இராதா, கிருஷ்ணர் அல்லது பிரம்மா, விஷ்ணு போன்ற யாரும் அன்பன் கிடையாது. இறை தந்தை தான் அன்பன் ஆவர். பாபா நிச்சயமாக சொத்து கொடுக்கின்றார். ஆகவே பாபா அன்பானவராக இருக்கின்றார். என்னை நினையுங்கள். ஏனென்றால் என்னிடமிருந்து தான் நீங்கள் ஆஸ்தி பெற வேண்டும் என பாபா கூறுகின்றார். இந்தப் படிப்பிற்கு ஏற்ப சூரிய வம்ச தேவதை அல்லது சந்திரவம்ச சத்திரியர் ஆகலாம் என குழந்தைகள் அறிகிறார்கள். உண்மையில் அனைத்து பாரதவாசிகளின் தர்மம் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் தேவதா தர்மத்தின் பெயர் மாறி இந்து எனப் பெயர் வைக்கப்பட்டு இருக்கின்றது. ஏனென்றால் அந்த தெய்வீக குணம் இல்லை. இப்போது பாபா அமர்ந்து தாரணை செய்ய வைக்கின்றார். தன்னை ஆத்மா என உணர்ந்து அசரீரி ஆகுங்கள் என பாபா கூறுகின்றார். நீங்கள் ஒன்றும் பரமாத்மா கிடையாது. பரமாத்மா ஒரே ஒரு சிவன் ஆவார். அவர் அனைவரின் அன்பானவராக, ஒரே ஒரு முறை சங்கமயுகத்தில் வருகின்றார். இந்த சங்கமயுகம் மிகவும் சிறியதாகும். அனைத்து தர்மங்களும் அழியப்போகின்றது. பிராமண குலத்தினர் கூட திரும்பப் போக வேண்டும். ஏனென்றால் அவர்கள் தெய்வீக குலத்தில் மாற்றம் அடைய வேண்டும். உண்மையில் இது படிப்பாகும். அந்த சிற்றின்ப விகாரம் விஷம் ஆகும். இந்த ஞானம் அமிர்தம் ஆகும் என்று மட்டும் ஒப்பிடப்படுகிறது. இது மனிதர்களை தேவதையாக மாற்றக்கூடிய பாடசாலையாகும். ஆத்மாவில் துருபடிந்து ஒரேயடியாக முலாம் பூசப்பட்டு இருக்கின்றது. அதை பாபா வந்து வைரமாக மாற்றுகின்றார். சிவராத்திரி என்கிறார்கள். இரவில் சிவன் வந்தார். ஆனால் எப்படி வந்தார். யாருடைய கர்ப்பத்தில் வந்தார் அல்லது யாருடைய உடலில் பிரவேஷமாகினார்? கர்ப்பத்தில் வருவதில்லை. அவர் உடலை கடனாக எடுக்க வேண்டியிருக்கிறது. அவர் நிச்சயமாக வந்து நரகத்தை சொர்க்கமாக மாற்றுகிறார். ஆனால் எப்போது எப்படி வருகிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. நிறைய சாஸ்திரங்களைப் படிக்கிறார்கள். ஆனால் முக்தி, ஜீவன் முக்தி யாருக்கும் கிடைக்கவில்லை. இன்னும் தமோபிரதானமாகி விட்டுள்ளனர். இருந்தாலும் அனைவரும் நிச்சயமாக மாறவேண்டும். அனைத்து மனிதர்களும் மேடையில் நிச்சயமாக வரவேண்டும். பாபா கடைசியில் தான் வருகிறார். அனைவரும் அவருடைய மகிமையை உன்னுடைய வழியை நீதான் அறிவாய் என்று பாடுகிறார்கள். உனக்குள் என்ன ஞானம் இருக்கிறது. நீ எப்படி சத்கதி அளிக்கிறாய் என்பதை நீயே தான் அறிவாய். அப்படி என்றால் நிச்சயமாக அவர் ஸ்ரீமத் கொடுப்பதற்காக வருவார் அல்லவா! ஆனால் எப்படி வருகிறார்? எந்த உடலில் வருகிறார்? இதை யாரும் அறியவில்லை. சாதாரணமான உடலில் தான் நான் வருகிறேன் என்று அவரே கூறுகின்றார். எனக்கு பிரம்மா என்ற பெயர் தான் நிச்சயமாக வைக்க வேண்டும். இல்லையென்றால் பிராமணர்கள் எப்படி தோன்றுவார்கள்! பிரம்மா எங்கிருந்து வந்தார்? மேலிருந்து வரமாட்டார்! அவர் சூட்சும வதனவாசி, அவ்யக்த சம்பூர்ண பிரம்மா. இங்கே நிச்சயமாக உடலில் வந்து படைப்பைப் படைக்கிறார். நாம் அனுபவத்துடன் சொல்ல முடியும்-இவ்வளவு நேரம் வருகிறார், போகிறார். நானும் டிராமாவில் கட்டப்பட்டு இருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். என்னுடைய பாகம் ஒரு முறை மட்டுமே வருவதாகும். உலகத்தில் நிறைய துன்பங்கள் உண்டாகிக் கொண்டேயிருக்கிறது. அச்சமயம் எவ்வளவு ஈஸ்வரனை அழைக்கிறார்கள்! ஆனால் நான் என்னுடைய நேரத்தில் தான் வரவேண்டும். மேலும் வானப்பிரஸ்த நிலையில் வருகிறேன். இந்த ஞானம் மிகவும் எளிதாக இருக்கின்றது. ஆனால் நிலையை நன்றாக வைத்துக் கொள்வதில் கடின உழைப்பு இருக்கின்றது. ஆகையால் தான் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது என்று கூறுவார்கள். பாபா நாலேட்ஜ்புல் என்றால் நிச்சயமாக அவர் குழந்தைகளுக்கு ஞானத்தை கொடுத்திருப்பார். அப்போது தான் உன்னுடைய வழியை நீ தான் அறிவாய் என்று பாடியிருப்பார்கள். என்னிடம் உள்ள சுகம், சாந்தியின் பொக்கிஷத்தை குழந்தைகளுக்குத் தான் வந்து கொடுக்கிறேன் என பாபா கூறுகின்றார். தாய்மார்கள் மீது கொடுமைகள் போன்றவை இழைக்கப்படுகிறது. இதுவும் டிராமாவில் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. அப்போது தான் பாவ குடம் நிரம்பும். கல்ப கல்பமாக இவ்வாறு தான் திரும்ப நடக்கிறது. இந்த விஷயங்களைக் கூட இப்போது தான் நீங்கள் அறிகிறீர்கள். பிறகு மறந்து போவீர்கள். இந்த ஞானம் சத்யுகத்தில் கிடையாது. ஒருவேளை இருந்தால் பரம்பரையாக வந்திருக்கும். அங்கே இப்போதைய முயற்சிக்கு ஏற்ப பிராலப்தத்தை(பலன்) பெறுகிறீர்கள். இங்கே யாருக்கு ஞானத்தின் அவசியமோ, முயற்சி செய்யக்கூடிய ஆத்மாக்கள் அங்கே இருக்கிறார்கள். மற்ற ஆத்மாக்கள் அங்கே இருப்பதில்லை. யாராவது ஒரு சிலரே வருவார்கள் என்பதும் தெரியும். மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் கூறுவார்கள். யாராவது வெளிநாட்டவர் பெரிய ஆட்கள் வருகிறார்கள் புரிந்து கொள்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எங்கே பட்டியில் இருப்பார்கள்? என்ன புரிந்து கொள்வார்கள்! விசயம் சரிதான். ஆனால் தூய்மையாக இருக்க முடியாது என்பார்கள். அடே! இத்தனை பேர் பவித்திரமாக இருக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இருந்து தூய்மையாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் பரிசும் நிறைய கிடைக்கிறது. இதுவும் பந்தயம்(ரேஸ்) ஆகும். அந்த பந்தயத்தில் முதல் நம்பரில் வருபவர்களுக்கு நான்கு, ஐந்து லட்சம் கிடைக்கும். இங்கேயோ 21 பிறவிகளுக்கு இராஜ்ஜியம் கிடைக்கும். சாதாரண விசயமா! இந்த முரளி அனைத்து குழந்தைகளிடமும் போகும். டேப்பில் கூடக் கேட்பார்கள். சிவபாபா பிரம்மா உடலினால் முரளி கூறிக்கொண்டு இருக்கிறார் என்பார்கள். மேலும் குழந்தைகள் கூறுகின்றார்கள் என்றால் சிவபாபாவின் முரளியை கூறுகின்றார்கள், புத்தி ஒரேயடியாக அங்கே போக வேண்டும் என்பார்கள். அந்த சுகத்தை உள்ளுக்குள் உணர வேண்டும். மிகவும் அன்பான தந்தை நம்மை எப்போதும் சுகமுடையவராக, மனிதனிலிருந்து தேவதையாக மாற்றுகின்றார் என்றால் அவருடைய நினைவு நிறைய இருக்க வேண்டும். ஆனால் மாயை நினைவிலிருக்க விடுவதில்லை. முழுமையாகத் தியாகம் செய்ய வேண்டும். இது அனைத்தும் பாபாவினுடையது ஆகும். இந்த நிலை நன்றாக இருக்க வேண்டும். நிறைய குழந்தைகள் ஸ்ரீமத் பெற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். ஸ்ரீமத்தில் கண்டிப்பாக நன்மைதான் இருக்கும். வழியும் உயர்ந்தது, யாத்திரையும் நீண்டது. மீண்டும் நீங்கள் இந்த மரண உலகத்தில் வரமாட்டீர்கள். சத்யுகம் தான் அமரலோகம் ஆகும்.அங்கே நீங்கள் இறப்பதில்லை என்பதை பாபா மிகவும் நன்றாக அன்று புரிய வைத்தார். மகிழ்ச்சியுடன் பழைய உடலை விட்டு, விட்டு புதிய உடலை எடுக்கிறீர்கள். உங்களுக்காகவே பாம்பின் எடுத்துக் காட்டு இருக்கின்றது. வண்டின் (குளவி) எடுத்துக்காட்டும் உங்களுக்குப் பொருந்தும், ஆமையின் எடுத்துக்காட்டும் உங்களுக்காகவே ஆகும். சந்நியாசிகள் காப்பி செய்துள்ளனர். வண்டின் எடுத்துக்காட்டு நன்றாக இருக்கின்றது. விகாரமுடைய புழுக்களுக்கு ஞானம் அளித்து பூம், பூம் என்று செய்து (ஊதி, ஊதி) சொர்க்கத்தின் தேவதையாக மாற்றுகிறீர்கள். இப்போது நன்கு முயற்சி செய்ய வேண்டும். உயர்ந்த பதவி மற்றும் நல்ல நம்பர் அடைய வேண்டும் என்றால் கடினமாக உழைக்க வேண்டும். நல்லது, வேலை போன்றவைகளையும் செய்யுங்கள். அதற்கு நேரம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும் நேரம் நிறைய கிடைக்கின்றது. தங்களுடைய யோகத்தின் சார்ட்டை பாருங்கள். ஏனென்றால் மாயை மிகவும் தடைகளை ஏற்படுத்துகிறது.இனிமையான குழந்தைகளே ! மறந்தும் கூட இப்படிப்பட்ட மிகவும் அன்பான தந்தை அல்லது சாஜனுக்கு (மணமகன்) ஒருபோதும் விவாகரத்து கொடுக்காதீர்கள், இந்த அளவிற்கு மகா முட்டாள் யாரும் ஆகாதீர்கள் என்று அடிக்கடி பாபா புரிய வைக்கிறார். ஆனால் மாயை முட்டாளாக்கி விடுகிறது. யார் அர்ப்பணம் ஆகினார்களோ, மிகவும் நன்கு சேவை செய்தார்களோ அவர்களையும் கூட மாயை எப்படியெல்லாம் செய்கிறது என்று இன்னும் போகப்போக பார்ப்பீர்கள். ஏனென்றால் ஸ்ரீ மத்தை விட்டு விடுகிறார்கள். ஆகவே இப்படிப்பட்ட பெரியதிலும் பெரிய, மகா முட்டாள் ஆகாதீர் என்று பாபா கூறுகின்றார். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும், தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. பாபா மூலமாகக் கிடைத்துள்ள சுகம் சாந்தியின் பொக்கிஷத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஞானத்தினால் தன்னுடைய நிலையை நன்கு வைத்துக் கொள்ள கடினமாக உழைக்க வேண்டும்.2. தெய்வீக குணங்களை தாரணை செய்வதற்கு தேக உணர்வை மறந்து, தன்னை ஆத்மா என உணர்ந்து அசரீரியாகி ஒரு அன்பானவரை நினைக்க வேண்டும்.வரதானம் :

தன்னை எல்லையற்ற மேடையில் இருக்கிறோம் எனப் புரிந்து, எப்போதும் உயர்ந்த பாகத்தை நடிக்கக்கூடிய ஹீரோ நடிகர் ஆகுக.தாங்கள் அனைவரும் உலகம் என்ற ஷோகேஸில்(காட்சிப் பெட்டகம்) இருக்கக்கூடிய ஷோபீஸ்(காட்சிப் பொருள்) ஆவீர். எல்லையற்ற பல ஆத்மாக்களுக்கு இடையில் மிகப் பெரிய மேடையில் இருக்கிறீர்கள். இந்த நினைவினால் ஒவ்வொரு எண்ணம், பேச்சு மற்றும் கர்மத்தைச் செய்யுங்கள். அதாவது உலகத்தில் உள்ள ஆத்மாக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு நடிப்பும் உயர்ந்ததாக இருக்கும். மேலும் ஹீரோ நடிகர் ஆகி விடுவீர்கள். அனைவரும் நிமித்த ஆத்மாக்களாகிய உங்களிடம் பிராப்தியினுடைய பாவனை வைக்கிறார்கள் என்றால் சதா வள்ளலின் குழந்தைகள் கொடுத்துக் கொண்டேயிருங்கள். அனைவரின் ஆசைகளையும் நிறை-வேற்றிக் கொண்டேயிருங்கள்.சுலோகன் :

சத்தியத்தின் சக்தி உடனிருந்தால் மகிழ்ச்சி மற்றும் சக்தி கிடைத்துக் கொண்டேயிருக்கும்.***OM SHANTI***

Powered by Blogger.