30 April 2016

BK Murli 1 May 2016 Tamil


BK Murli 1 May 2016 Tamil

01.05.2016  காலை முரளி  ஓம் சாந்தி  ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ் 07.04.1981  மதுபன்


 ''சிந்தனை சக்தி மூலமாக சர்வ சக்திகளின் சொரூபத்தின் அனுபவம்''இன்று பாப்தாதா தன்னுடைய சென்ற கல்பத்து காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட அனைத்து குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி தந்தை மிக அன்புடன் குழந்தைகளை எப்பொழுதும் நினைவு செய்கிறாரோ அதே போலவே குழந்தைகளும் எப்பொழுதும் தந்தையை நினைவு செய்வதில் மற்றும் உயர்ந்த வழிப்படி நடப்பதில் இரவு பகலாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாப்தாதா குழந்தைகளின் ஈடுபாட்டை, குழந்தைகள் உள்ளப்பூர்வமாக மற்றும் உயிருக்குயிராக அன்பு மற்றும் சிநேகத்துடன் எப்பொழுதும் சேவையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து குழந்தைகளுக்கு அஞ்சலி கொடுக்கிறார். குழந்தைகளின் பாக்கியத்தின் பின்னால் இருக்கும் தியாகத்தைப் பார்த்து பாப்தாதா எப்பொழுதும் தியாகத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். அனைத்து குழந்தைகளின் ஒரே எண்ணமாக இருக்கின்ற, தந்தையை பிரத்யக்ஷ்ம் செய்ய வேண்டும் மற்றும் தன்னை சம்பன்னம் ஆக்க வேண்டும் என்ற இதையும் பார்த்து பாப்தாதா குஷி அடைகிறார். என்னவாக இருந்தோம் மற்றும் என்னவாக ஆகிவிட்டோம் என்ற இந்த வித்தியாசத்தை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டே அனைவரும் இதே ஈஸ்வரிய போதையில் இருக்கிறார்கள். இதைப் பார்த்து பாப்தாதாவும் 'ஆஹா சங்கமயுகத்து குழந்தைகளே ஆஹா' என்று பெருமிதத்துடன் கூறுகிறார். அந்த அளவு அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் தங்களுடைய இந்த கடைசி ஜென்மம் வரையிலும் தங்களுடைய அதிர்ஷ்டத்தின் ஓவியத்தை நெற்றியில் மகிமை மூலமாக, வாயில் பாடல்கள் மூலமாக மற்றும் கைகளினால் சித்திரங்கள் மூலமாக, கண்களில் அன்பு மூலமாக எதிர்காலத்தின் அதிர்ஷ்டத்தின் ஓவியத்தை வரைந்துக் கொண்டே இருக்கிறார்கள். இன்று வரையிலும் கூட உயர்ந்த ஆத்மாக்கள் உங்களுடைய நல்லகால தருணங்களை அது மீண்டும் எப்பொழுது வரும் என்று நினைவு செய்து கொண்டிருக்கிறீர்கள். மிகவும் ஈடுபாட்டுடன் வரவழைப்பு கோலாகலத்துடன் நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த மாதிரி அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் நீங்கள். உங்களுடைய அதிர்ஷ்டத்தை சுயம் தந்தை மகிமையாகப் பாடுகிறார். இறுதி காலத்து பக்தர்களோ உங்களுடைய பாதங்களையும் பூஜை செய்கிறார்கள். உங்களுடைய காலடிகளில் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மட்டும் தான் உங்களிடம் கேட்கிறார்கள். அந்த அளவு மகான் ஆத்மாக்கள் நீங்கள். எனவே பாப்தாதாவும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். எப்பொழுதும் தன்னுடைய அந்த மாதிரியான சிரேஷ்ட சொரூபத்தை, சிரேஷ்ட அதிர்ஷ்டத்தின் சித்திரத்தை நினைவில் வையுங்கள். இதனால் என்ன ஆகும்? சக்திசாலியான நினைவு மூலம், சம்பன்ன சித்திரத்தின் மூலம் சரித்திரமும் எப்பொழுதும் சிரேஷ்டமாகத் தான் இருக்கும். எப்படி சித்திரமோ அப்படி சரித்திரம் என்று கூறப்படுகிறது. எப்படி நினைவோ அப்படி நிலை. எனவே எப்பொழுதும் சக்திசாலியான நினைவு வைத்தீர்கள் என்றால் நிலையும் இயல்பாகவே சக்திசாலி ஆகிவிடும். எப்பொழுதும் தன்னுடைய அனைத்து குணங்கள், அனைத்து சக்திகள் நிரம்பிய சம்பூர்ண சித்திரத்தை எதிரில் வையுங்கள். அந்த மாதிரி சித்திரத்தை வைப்பதினால் இயல்பாகவே சரித்திரம் சிரேஷ்டமாக ஆகிவிடும். கடின முயற்சி செய்வதற்கு அவசியம் இருக்காது. எப்பொழுது சிந்தனை சக்தியின் குறை இருக்கிறதோ அப்பொழுது கடின முயற்சி செய்ய வேண்டியதாக இருக்கிறது. முழுநாளும் இதே சிந்தனை செய்துக் கொண்டிருங்கள், தன்னுடைய உயர்ந்த சித்திரத்தை எப்பொழுதும் எதிரில் வைத்தீர்கள் என்றால் சிந்தனை சக்தி மூலம் கடின முயற்சி முடிவடைந்துவிடும். அதிகமாக கேட்டும் இருக்கிறீர்கள், வர்ணனையும் அதிகமாக செய்கிறீர்கள். இருந்தும் நடைமுறையில் சில நேரம் தன்னை பலமற்றவராக ஏன் அனுபவம் செய்கிறீர்கள்? கடின உழைப்பை ஏன் அனுபவம் செய்கிறீர்கள்? கடினம் என்ற எண்ணம் ஏன் வருகிறது, இதற்கான காரணம் என்ன? கேட்டதின் பிறகு சிந்திப்பதில்லை. எப்படி உடலின் சக்திக்காக மிக அதிகமான ஜீரண சக்தி தேவையாக இருக்கிறது. அதே போல் ஆத்மாவை சக்திசாலியாக ஆக்குவதற்காக சிந்தனை சக்தியும் அந்த அளவே அவசியமாக இருக்கிறது. சிந்தனை சக்தி மூலம் தந்தையிடமிருந்து கேட்ட ஞானம் தன்னுடைய அனுபவமாக ஆகிவிடுகிறது. எப்படி ஜீரண சக்தி மூலம் உணவு உடலில் சக்தியாக இரத்தத்தின் ரூபத்தில் நிரம்பிவிடுகிறது. உணவின் சக்தி தன்னுடைய உடலுக்கு தேவையான சக்தி ஆகிவிடுகிறது. வேறு வேறாக இருப்பதில்லை. அதே போல் ஞானத்தின் ஒவ்வொரு துளியின் சிந்தனை சக்தி மூலமாக தனக்கு சக்தி ஆகிவிடுகிறது. எப்படி ஆத்மா என்ற முதல் ஞானத்துளியை கேட்ட பிறகு சிந்தனை சக்தி மூலமாக நினைவு சொரூபமாக ஆகிவிடும் காரணத்தினால், நினைவு 'நான் தான் எஜமானன்' என்று சக்தி நிரம்பியதாக ஆக்கிவிடுகிறது. இந்த அனுபவம் சக்தி சொரூபம் ஆக்கிவிடுகிறது. ஆனால் எப்படி ஆனது? சிந்தனை சக்தியின் ஆதாரத்தில். அப்படி ஆத்மாவின் முதல் ஞானத்துளி அனுபவ சொரூபம் ஆகிவிட்டது அல்லவா. இதே விதமாக நாடகத்தின் ஞானம் - நாடகம் என்று சொல்வதற்கும் மற்றும் கேட்பதற்கு மட்டும் அல்ல. ஆனால் நடைமுறையில் தன்னை கதாநாயக (முக்கிய) நடிகன் என்று அனுபவம் செய்தீர்கள் என்றால் சிந்தனை சக்தி மூலம் அனுபவ சொரூபம் ஆகிவிடுவது என்ற இது தான் முக்கியமான ஆத்மீக சக்தி ஆகும். அனைத்தையும் விட பெரியதிலும் பெரிய சக்தி அனுபவ சொரூபம் ஆகும்.அனுபவி எப்பொழுதும் அனுபவத்தின் அதிகாரத்துடன் நடந்துக் கொள்வார், அனுபவி ஒருபொழுதும் ஏமாற்றம் அடைவதில்லை. அனுபவி யாராவது அவரை நிலை குலைய வைத்தால், கேட்ட மற்றும் சொன்ன விஷயங்களினால் ஆடிப் போகமாட்டார்கள். அனுபவியின் ஒரு வார்த்தை ஆயிரம் வார்த்தைகளையும் விட அதிக மதிப்புள்ளதாக இருக்கிறது. அனுபவி எப்பொழுதும் தன்னுடைய அனுபவங்களின் பொக்கிஷங்களினால் நிரம்பியவராக இருக்கிறார். அந்த மாதிரி சிந்தனை சக்தியின் மூலமாக ஒவ்வொரு ஞானத்துளியின் அனுபவி எப்பொழுதும் சக்திசாலியாக, மாயா தாக்க முடியாதவராக, தடையால் தாக்கமடையாதவராக, எப்பொழுதும் அங்கதனுக்குச் சமமாக ஆடாதவராக, மற்றவர்களை அசைப்பவராக இருப்பார். ஆகவே இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா?எப்படி உடலின் அனைத்து நோய்களுக்கான காரணம் ஏதாவது வைட்டமின்களின் குறையாக இருக்கிறது என்றால் ஆத்மாவின் பலஹீனத்திற்கு காரணம் கூட சிந்தனை சக்தி மூலமாக ஒவ்வொரு ஞான விஷயத்தின் அனுபவத்தின் வைட்டமினின் குறை ஆகும். எப்படி அதில் கூட பல வகையான ஏ, பி, சி என வைட்டமின்கள் இருக்கின்றன இல்லையா. அதேபோல் இங்கேயும் ஏதோ ஒரு அனுபவத்தின் குறை இருக்கிறது என்று புரிந்துக் கொள்ளுங்கள். ஏ ஆத்மாவின் வைட்டமின், வைட்டமின் பி தந்தையினுடையது, வைட்டமின் சி டிராமா, கிரியேஷன் (படைப்பு) அல்லது சர்க்கிள் அதாவது சக்கரம் என்று கூறுங்கள். அப்படி ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். இதிலோ புத்திசாலிகள் தான் இல்லையா. அப்படி எந்த வைட்டமினின் குறை இருக்கிறது என்று சோதனை செய்யுங்கள். ஆத்மாவின் அனுபவத்தின் குறை, பரமாத்மா சம்மந்தத்தின் குறை, நாடகத்தின் ஆழமான அனுபவத்தின் குறை. தொடர்பில் வருவதற்கான விசேஷங்களின் அனுபவத்தின் குறை. அனைத்து சக்திகளின் சொரூபத்தின் அனுபவத்தின் குறை. நிச்சயமாக ஏதாவதொன்று இருக்கும் மேலும் இந்த குறைகளை சிந்தனை சக்தி மூலம் நிரப்புங்கள். கேட்பது மட்டுமே ஆன சொரூபம் அல்லது சொற்பொழிவு நிகழ்த்தும் சொரூபம் என்ற இதன் மூலமாக மட்டும் ஆத்மா சக்திசாலி ஆக முடியாது. ஞான சொரூபம் என்றால் அனுபவ சொரூபம். அனுபவங்களை அதிகரியுங்கள். அதற்கான ஆதாரம் சிந்தனை சக்தி. சிந்தனை செய்பவர் இயல்பாகவே அதில் மூழ்கியிருப்பார். மூழ்கிய நிலையில் யோகாவில் ஈடுபட வேண்டியதாக இருக்காது ஆனால் நிரந்தரமாக யோகாவில் ஈடுபாட்டில் இருப்பது தான் அனுபவத்தை ஏற்படுத்தும். கடின முயற்சி செய்ய வேண்டியதாக இருக்காது. மூழ்கியிருப்பது என்றால் அன்புக் கடலில் மூழ்கியிருப்பது. அந்தமாதிரி யாரும் பிரிக்க முடியாத அளவிற்கு மூழ்கியிருப்பது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து கடின உழைப்பிலிருந்தும் விடுபடுங்கள். வெளிமுகமாக இருப்பதை விட்டீர்கள் என்றால் கடின உழைப்பிலிருந்து விடுபடுவீர்கள். மேலும் அனுபவங்களின் உள்நோக்குமுக சொரூபத்தில் எப்பொழுதும் மூழ்கியிருங்கள். அனுபவங்களினாலும் கடல் இருக்கிறது இல்லையா. ஒன்றிரண்டு அனுபவம் இல்லை, அளவற்ற அனுபங்கள். ஒன்றிரண்டு அனுபவங்கள் செய்துவிட்டீர்கள் என்ற அனுபவத்தின் குளத்தில் குளிக்காதீர்கள். கடலின் குழந்தைகள் அனுபவங்களின் கடலில் மூழ்கிவிடுங்கள். நீங்கள் குளத்தின் குழந்தைகளோ இல்லை தானே. இந்த தர்ம தந்தைகள், மகான் ஆத்மாக்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அனைவரும் குளங்கள். நீங்களோ குளத்திலிருந்தோ வெளியில் வந்துவிட்டீர்கள் இல்லையா. அனேக குளங்களின் தண்ணீரை குடித்தாகிவிட்டது, இப்பொழுதோ ஒரு கடலில் மூழ்கிவிட்டீர்கள் இல்லையா.அந்த மாதிரி எப்பொழுதும் சக்திசாலியாக இருக்கும் ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் அனைத்து அனுபவங்களின் கடலில் மூழ்கியிருக்கும் ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் தன்னுடைய சம்பூர்ண சித்திரத்தை எதிரில் வைத்து சிரேஷ்ட சரித்திரவானாக ஆகும் ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் சிரேஷ்ட பாக்கியவான் ஆத்மாக்களுக்கு எப்பொழுதும் உள்நோக்குமுகமாக இருக்கும், அனைவரையும் சுகமானவர்களாக ஆக்கும் ஆத்மாக்களுக்கு, அந்த மாதிரி இரட்டை ஹீரோ (கதாநாயக) ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.பார்ட்டிகளுடன் -

எப்பொழுதும் தன்னை தந்தையின் அருகில் இருக்கும் இரத்தினமாக நினைக்கிறீர்களா? அருகில் இருக்கும் இரத்தினத்தின் அடையாளம் என்னவாக இருக்கும்? அருகாமையில் இருப்பது என்றால் சமமாக ஆவது. அருகாமை என்றால் தொடர்பில் இருப்பது. தொடர்பில் இருப்பதினால் என்னவாகும்? அதன் வண்ணம் அதாவது பிரபாவம் ஏற்படும் இல்லையா. யார் எப்பொழுதும் தந்தையின் அருகில் அதாவது தொடர்பில் இருப்பவர்களோ அவர்களுக்கு தந்தையின் பிரபாவம் ஏற்படும், அதனால் தந்தைக்குச் சமமாக ஆகிவிடுவார்கள். அருகில் என்றால் சமநிலை அப்படி அனுபவம் செய்கிறீர்களா? ஒவ்வொரு குணத்தை எதிரில் வைத்துக் கொண்டே எந்தெந்த குணத்தில் தந்தைக்குச் சமமாக ஆகியிருக்கிறேன் என்று சோதனை செய்யுங்கள். ஒவ்வொரு சக்தியை எதிரில் வைத்து நான் எந்த சக்தியில் சமமாக ஆகியிருக்கிறேன் என்று சோதனை செய்யுங்கள். உங்களுடைய பட்டமே மாஸ்டர் சர்வ குண சம்பன்னம், மாஸ்டர் சர்வ சக்திவான் என்பதாகும். அப்படி இந்தப் பட்டம் எப்பொழுதும் நினைவில் இருக்கிறதா? அனைத்து சக்திகளும் வந்துவிட்டது என்றால் வெற்றி கிடைத்துவிட்டது. பிறகு ஒருபொழுதும் தோல்வி ஏற்பட முடியாது. யார் தந்தையின் கழுத்தின் ஹார் (மாலை) ஆகிவிட்டாரோ அவருக்கு ஒருபொழுதும் ஹார் (தோல்வி) ஏற்பட முடியாது. எனவே நான் தந்தையின் கழுத்தின் மாலையாக இருக்கிறேன் என்ற இந்த நினைவை எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள், இதனால் மாயாவிடம் தோல்வி அடைவது முடிவடைந்துவிடும். தோல்வி அடைபவராக இன்றி தோல்வி அடையச் செய்பவராக ஆகிவிடுவீர்கள். அந்த மாதிரி போதை இருக்கிறதா? அனுமானை மகாவீர் என்று கூறுகிறார்கள் இல்லையா. மகாவீர் என்ன செய்தார்? இலங்கையை எரித்துவிட்டார் இல்லையா. அவர் எரியவில்லை, வால் மூலமாக இலங்கையை எரித்துவிட்டார். அப்படி நீங்களும் இலங்கையை எரிக்கக்கூடிய மகாவீர் தான் இல்லையா. தனக்கு அதிகாரம் உள்ளது என்று நினைத்து மாயா வரட்டும் ஆனால் நீங்கள் அதனுடைய அதிகாரத்தை அழித்து அடிமையாக்கிவிடுங்கள். அனுமானின் விசேஷமாக அவர் எப்பொழுதும் சேவாதாரியாக இருந்தார் என்று காண்பிக்கிறார்கள். அவர் தன்னை சேவகன் என்று நினைத்தார். அப்படி இங்கே யார் எப்பொழுதும் சேவாதாரியாக இருக்கிறாரோ அவர் தான் மாயாவின் அதிகாரத்தை அழிக்க முடியும். யார் சேவாதாரியாக இல்லையோ அவரால் மாயாவின் இராஜ்யத்தை எரிக்க முடியாது. அனுமானின் இதயத்தில் எப்பொழுதும் இராம் அமர்ந்திருந்தார் இல்லையா. ஒரு இராமை தவிர வேறு யாரும் இல்லை என்று இருந்தார். அப்படி தந்தையைத் தவிர வேறு யாருமே இதயத்தில் இருக்கக் கூடாது. தன்னுடைய உடலின் நினைவு கூட இதயத்தில் இருக்க வேண்டாம். உடல் கூட பிறருடையது என்று கூறினோம் இல்லையா, எப்பொழுது உடல் கூட நம்முடையது இல்லை என்றால் இன்னொருவர் இதயத்தில் எப்படி வர முடியும்.குடும்ப வாழ்க்கையில் இருந்துக் கொண்டே தன்னை குடும்பஸ்தன் என்று நினைக்காமல் டிரஸ்டி என்று புரிந்துக் கொள்ளுங்கள். குடும்பஸ்தன் என்று நினைப்பதினால் முந்தைய கடந்த காலத்து சுமை தலையில் வந்துவிடுகிறது. டிரஸ்டி என்றால் டபுள் லைட் அதாவது சுமையற்றவர். எப்பொழுது ஆத்மீக சொரூபத்தில் இருக்கிறீர்கள் என்றால் டிரஸ்டி, உடலின் நினைவு இருக்கிறது என்றால் குடும்பஸ்தன். குடும்பஸ்தன் என்றால் மோகம் - மாயாவின் வலையில் மாட்டிக் கொண்டிருப்பவர், டிரஸ்டி என்றால் எப்பொழுதும் இலேசாக ஆகி குஷியில் பறப்பவர். டிரஸ்டி என்றால் மாயாவின் வலை முடிந்தது.அவ்யக்த முரளியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட மகாவாக்கியங்கள் (கேள்வி - பதில்) கேள்வி:

நேரத்தின் அருகாமை அல்லது அதிகரித்துக் கொண்டிருக்கும் வெளிப்படுதலின் விளைவிற்கு ஏற்றபடி சேவையின் ரூபம், வடிவம் என்னவாக இருக்கும்?பதில்:

எப்படி இன்றைய நாட்களில் அறிவியல் மூலமாக ஒவ்வொரு பொருளின் பௌதீக அளவிற்கு (குவான்டிட்டி) பதிலாக தரத்தில் (குவாலிட்டி) கொண்டு வந்துக் கொண்டிருக்கிறார்கள், விஸ்தாரத்தை சாரத்தில் கொண்டு வருகிறார்கள். இதே போல் பாண்டவ சேனை அதாவது அமைதியின் சக்தியுள்ள சிரேஷ்ட ஆத்மாக்கள் ஒரு மணி நேரத்து சொற்பொழிவு மூலமாக அறிமுகம் கொடுப்பதற்கு பதிலாக ஒரு விநாடியின் சக்திசாலியான திருஷ்டி மூலமாக, சக்திசாலியான தன்னுடைய நிலை மூலமாக, நன்மை பயக்கும் பாவனை மூலமாக ஆத்மீக உணர்வு மூலமாக நினைவூட்டும் மற்றும் சாட்சாத்காரம் செய்விக்கும் சேவை செய்வார்கள்.கேள்வி:

அந்த மாதிரி சேவை செய்வதற்காக எந்த இரண்டு விஷயங்களின் மேல் கவனம் வேண்டும்?பதில்:

அந்த மாதிரி சேவை செய்வதற்காக இரண்டு விஷயங்களின் மேல் கவனம் வேண்டும் - 1) எந்தவொரு பொருளையும் வீணாக்காதீர்கள், 2) எடையை குறையுங்கள் அதாவது ஆத்மா மேல் என்ன சுமை இருக்கிறதோ, அந்த சுமை காரணமாக உயர்ந்த நிலையை அனுபவம் செய்ய முடிவதில்லை, அந்த எடையை குறையுங்கள்.கேள்வி:

சிரேஷ்ட ஆத்மாக்கள் உங்களுடைய காரியம் என்ன, அந்தக் காரியத்திற்கு ஏற்றபடி உங்களுடைய கடமை என்ன?பதில்:

சிரேஷ்ட ஆத்மாக்கள் உங்களுடைய கடமை முழு உலகிற்கு நன்மை செய்ய வேண்டும். ஏனென்றால் உலகின் அனைத்து ஆத்மாக்களும் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களுடைய பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள். எனவே எவ்வளவு பெரிய பரிவாரமாக இருக்குமோ அந்தளவு சிக்கனத்தையும் எண்ணத்தில் வைக்கப்படும். அதற்கான சேமிப்பு திட்டத்தை உருவாக்குங்கள். தனக்காக தேவையான நேரம் மற்றும் சக்திகளிலிருந்து சிக்கனத்தின் இலட்சியத்தை வைத்துக் கொண்டே சேமிப்பு செய்யுங்கள். அநேக ஆத்மாக்களின் சேவைக்காக கையிருப்பை சேமிக்க வேண்டும். தனக்காக சம்பாதித்தோம், சாப்பிட்டோம் மேலும் கொஞ்சம் இழந்தோம் என்று அப்படி இருக்க வேண்டாம். அந்த மாதிரி அலட்சியமானவராக இருக்க வேண்டாம்.கேள்வி:

யார் ஒவ்வொரு பாடத்திலும் மதிப்புடன் தேர்ச்சி அடையவில்லையோ அவர்கள் எந்த அனுபவத்தினால் தேர்ச்சி அடைய வேண்டியதாக இருக்கும்?பதில்:

ஒருவேளை ஒரு பாடத்திலாவது குறை இருக்கிறது என்றால் மதிப்புடன் தேர்ச்சி பெறுபவர் ஆக முடியாது. மேலும் மதிப்புடன் தேர்ச்சி பெறுபவராக இல்லை என்றால் தர்மராஜின் தண்டனையின் அனுபவத்தினால் தேர்ச்சி அடைய வேண்டியதாக இருக்கும். எனவே ஒவ்வொரு பாடத்திலும் முழுமையாக தேர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஒவ்வொரு பொக்கிஷத்தின் சேமிப்பை செய்யுங்கள். மேலும் பட்ஜட்டை உருவாக்குங்கள் அதாவது வீணாக்காதீர்கள். நல்லது!வரதானம்:

அனைத்து பொறுப்புக்களின் சுமையை தந்தைக்கு கொடுத்து விட்டு எப்பொழுதும் தன்னுடைய முன்னேற்றத்தை செய்யக்கூடிய சகஜயோகி ஆகுக!எந்தக் குழந்தைகள் தந்தையின் காரியத்தை நிறைவேற்றும் பொறுப்பிற்காக உறுதி மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு தந்தையும் அந்த அளவே சகயோகம் கொடுக்கிறார். என்னென்ன வீணானதின் சுமை இருக்கிறதோ அதை மட்டும் தந்தையிடம் விட்டு விடுங்கள். தந்தையின் குழந்தையாகி தந்தையிடம் பொறுப்புக்களின் சுமையை கொடுத்துவிடுவதினால் வெற்றியும் அதிகம், முன்னேற்றமும் சுலபமாக ஏற்படும். ஏன் மற்றும் என்ன என்ற கேள்வியிலிருந்து விடுபட்டு இருங்கள், முக்கியமாக முற்றுப்புள்ளி இடும் நிலையில் இருந்தீர்கள் என்றால் சகஜயோகி ஆகி அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்துக் கொண்டே இருப்பீர்கள்.சுலோகன்:

மனம் மற்றும் புத்தியில் நேர்மை இருக்கிறது என்றால் தந்தை மற்றும் பரிவாரத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ஆகிவிடுவார்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only