BK Murli 8 April 2016 In Tamil

BK Murli 8 April 2016 In Tamil

08.04.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஏகாந்தத்தில் அமர்ந்து உண்மையான நாயகனை நினைவு செய்யுங்கள், ஏனெனில் நினைவின் மூலம் தான் சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கும்.கேள்வி:

தந்தை கிடைத்திருப்பதால் எந்த சோம்பல் நீங்கி விட வேண்டும்?பதில்:

சில குழந்தைகள் சோம்பலுக்கு வசமாகி நான் தான் பாபாவின் குழந்தையாகத் தானே இருக்கிறேன் என்று கூறி நினைவிற்கான முயற்சி செய்யாமல் இருக்கின்றனர். அடிக்கடி நினைவு மறந்துவிடுகிறது. இது தான் சோம்பல் ஆகும். பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! நினைவில் இருந்தால் உள்ளுக்குள் நிலையான குஷி இருக்கும். எந்த வகையிலும் சோம்பல் வராது. பந்தனமுள்ள தாய்மார்கள் நினைவிற்காக தவிப்பது போன்று, இரவு பகல் நினைவு செய்து கொண்டிருப்பது போன்று உங்களுக்கும் நிரந்தர நினைவு இருக்க வேண்டும்.பாடல்:

அதிர்ஷ்டம் ஏற்படுத்தி வந்திருக்கிறேன் ........ஓம் சாந்தி.

தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்திருக்கின்றார், நீங்களும் ஓம் சாந்தி என்று கூறுகிறீர்கள். தந்தையும் ஓம் சாந்தி என்று கூறுகின்றார் அதாவது ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதி சொரூபமானவர்கள்.. தந்தையும் சாந்தி சொரூபமானவர், ஆத்மாவின் சுயதர்மம் அமைதியாகும். பரமாத்மாவின் சுயதர்மமும் அமைதியாகும். நீங்களும் சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். நானும் அங்கு வசிக்கக் கூடியவன் என்று தந்தையும் கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மறுபிறப்பு எடுத்து வருகிறீர்கள், நான் எடுப்பது கிடையாது. நான் இந்த இரதத்தில் பிரவேசம் செய்கிறேன். இது எனது இரதமாகும். ஒருவேளை சங்கரிடம் கேட்கலாமென்றால், கேட்க முடியாது. சூட்சுமவதனத்திற்கு சென்று யாராவது கேட்டால் இது எனது சூட்சும சரீரம் என்று கூறுவார். இது என்னுடைய சரீரம் கிடையாது என்று சிவபாபா கூறுகின்றார். இதை (பிரம்மா உடலை) நான் ஆதாரமாக எடுத்திருக்கிறேன். ஏனெனில் எனக்கும் கர்மேந்திரியங்களின் ஆதாரம் தேவை. முதன் முதலில் புரிய வைக்க வேண்டிய விஷயம் பதீத பாவன், ஞானக் கடல் ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. ஸ்ரீகிருஷ்ணர் அனைத்து ஆத்மாக்களையும் பதீதத்திலிருந்து பாவனம் ஆக்குவது கிடையாது. அவர் வந்து பாவன உலகை இராஜ்யம் செய்கின்றார். முதலிலில் இளவரசராக ஆகின்றார், பிறகு மகாராஜாவாக ஆகின்றார். அவரிடத்திலும் இந்த ஞானம் கிடையாது. படைப்புகளின் ஞானம் படைப்பவரிடம் மட்டுமே இருக்கும் அல்லவா! ஸ்ரீகிருஷ்ணரும் படைப்பு என்று தான் கூறுகிறோம். படைப்பவராகிய தந்தை வந்து தான் ஞானம் கொடுக்கின்றார். இப்பொழுது தந்தை படைத்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் எனது குழந்தைகள் என்று கூறுகின்றார். பாபா, நாங்கள் உங்களுடையவர்கள் என்று நீங்களும் கூறுகிறீர்கள். பிரம்மாவின் மூலம் பிராமணர்களின் படைப்பு என்றும் கூறப்படுகிறது. இல்லையெனில் பிராமணர்கள் எங்கிருந்து வருவார்கள்? சூட்சுமவதனத்தில் இருக்கும் பிரம்மா வேறு யாருமில்லை. மேலே இருப்பவர் தான் கீழேயும் இருக்கின்றார், கீழே இருப்பவர் தான் மேலேயும் இருக்கின்றார். ஒரே ஒருவர் தான். நல்லது, விஷ்ணு மற்றும் இலட்சுமி நாராயணன் இருவரும் ஒருவர் தான். அவர்கள் எங்கு வசிக்கக்கூடியவர்கள்? பிரம்மாவிலிருந்து விஷ்ணுவாக ஆகின்றனர். பிரம்மா சரஸ்வதி தான் இலட்சுமி நாராயணராக ஆகின்றனர், பிறகு அவர்களே முழு கல்பத்திலும் 84 பிறவிகள் எடுத்த பின்பு சங்கமத்தில் பிரம்மா சரஸ்வதியாக ஆகின்றனர். இலட்சுமி நாராயணனும் மனிதர்கள் தான், அவர்கள் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள். விஷ்ணுவிற்கும் 4 புஜங்கள் கொடுத்துவிட்டனர். இவ்வாறு இல்லற மார்க்கத்தை காண்பித்திருக்கின்றனர். பாரதத்தில் ஆரம்பத்திலிருந்தே இல்லற மார்க்கம் நடைபெற்று வந்தது, அதனால் தான் விஷ்ணுவிற்கு 4 புஜங்கள் கொடுத்துவிட்டனர். இங்கு பிரம்மா சரஸ்வதி, அந்த சரஸ்வதி தத்தெடுக்கப்பட்ட குழந்தை ஆவார். இவரது (பிரம்மாவின்) உண்மையான பெயர் லேக்ராஜ் ஆகும். பிறகு இவரது பெயர் பிரம்மாவாக வைக்கப்படுகிறது. சிவபாபா இவரிடம் பிரவேசம் செய்து இராதாவை தன்னுடையவராக ஆக்கிக் கொண்டு சரஸ்வதி என்று பெயர் வைத்தார். சரஸ்வதியின் லௌகீகத் தந்தை பிரம்மா கிடையாது. இவர்கள் இருவருக்கும் லௌகீகத் தந்தை தனித்தனியானவர்கள். இப்பொழுது அவர்கள் கிடையாது. சிவபாபா பிரம்மாவின் மூலம் தத்தெடுத்திருக்கிறார். நீங்கள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். பிரம்மாவும் சிவபாபாவின் குழந்தை ஆவார். பிரம்மாவின் தாமரை போன்ற வாயின் மூலம் (ஞானம் அளித்து) படைப்புகளை படைக்கின்றார். அதனால் தான் பிரம்மாவும் தாய் என்று கூறப்படுகின்றார். நீங்கள் தான் தாய், தந்தையாக இருக்கிறீர்கள், நாங்கள் உங்களது குழந்தைகள், உங்களது கருணையின் மூலம் சுகமான உலகம் ...... என்று பாடுகின்றனர் அல்லவா! பிராமணர்களாகிய நீங்கள் வந்து குழந்தைகளாக ஆகியிருக்கிறீர்கள். இதை புரிந்து கொள்வதற்கு மிகுந்த நல்ல புத்தி தேவை. குழந்தைகளாகிய நீங்கள் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியடைகிறீர்கள். பிரம்மா சொர்க்கத்தை படைப்பவர் அல்லது ஞானக் கடல் கிடையாது. ஞானக் கடல் ஒரே ஒரு தந்தை ஆவார். ஆத்மாக்களின் தந்தை தான் ஞானக் கடல் ஆவார். ஆத்மாவும் ஞானக் கடலாக ஆகிறது, ஆனால் இவரை ஞானக் கடல் என்று கூற முடியாது. ஏனெனில் கடலாக இருப்பவர் ஒரே ஒருவர் தான். நீங்கள் அனைவரும் நதிகளாக இருக்கிறீர்கள். கடலுக்கு (சிவபாபாவிற்கு) தனக்கென்று சரீரம் கிடையாது. நதிகளுக்கு (குழந்தைகளுக்கு) இருக்கிறது. நீங்கள் ஞான நதிகளாக இருக்கிறீர்கள். கல்கத்தாவில் பிரம்மபுத்திரா நதி மிகப்பெரியதாக இருக்கிறது. ஏனெனில் அதற்கு கடலுடன் தொடர்பு இருக்கிறது. அதற்கு மிகப்பெரிய மேளாவும் கொண்டாடப்படுகிறது. இங்கும் மேளா கொண்டாடப்படுகிறது. கடல் மற்றும் பிரம்மபுத்திரன் இருவரும் இணைந்து இருக்கின்றனர். இது சைத்தன்யமானது, அது ஜடமானது. இந்த விஷயங்களை தந்தைப் புரிய வைக்கின்றார். சாஸ்திரங்களில் கிடையாது. சாஸ்திரம் என்பது பக்தியின் துறையாகும் (டிபார்ட்மென்ட்). அதில் ஞானக் கடல் கிடையாது. பரம்பிதா பரமாத்மா, ஞானக் கடலானவர் சங்கமத்தில் வந்து ஞான ஸ்நானத்தின் மூலம் அனைவருக்கும் சத்கதி செய்கின்றார். எல்லையற்ற தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் சுகத்திற்கான அதிர்ஷ்டத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உண்மையில் நாம் சத்யுகம், திரேதாவில் பூஜைக்குரிய தேவி தேவதைகளாக இருந்தோம். இப்பொழுது நாம் பூஜாரி மனிதர்களாக இருக்கிறோம். பிறகு மீண்டும் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகிறீர்கள். பிராமணனிலிருந்து தேவதா தர்மத்திற்கு வருவீர்கள், பிறகு சத்ரியன், வைஷ்யன், சூத்திரனாக ஆனீர்கள். 84 பிறவிகள் எடுத்து எடுத்து கீழே இறங்க வேண்டியிருக்கிறது. இதையும் தந்தை உங்களுக்கு கூறியிருக்கின்றார். நீங்கள் உங்களது பிறப்புகளை அறியாமல் இருந்தீர்கள். 84 பிறவிகளும் நீங்கள் தான் எடுக்கிறீர்கள். யார் முதன் முதலில் வருகிறார்களோ அவர்கள் தான் முழு 84 பிறவிகள் எடுக்கின்றனர். யோகா மூலம் தான் கறைகள் நீங்குகின்றன. நினைவில் தான் முயற்சி இருக்கிறது. சில குழந்தைகள் ஞானத்தில் தீவிரமாக இருக்கலாம். ஆனால் நினைவில் குறையுடன் இருக்கிறார்கள். பந்தனமுள்ளவர்கள் நினைவு செய்வதில் பந்தனமற்றவர்களை விட நன்றாக இருக்கின்றனர். அவர்கள் சிவபாபாவை சந்திப்பதற்காக இரவு பகல் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். நினைவு செய்யுங்கள் என்று உங்களுக்குத் தான் கூறப்படுகிறது, ஆனால் நீங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள். உங்களுக்கு அதிக புயல்கள் வருகின்றன. அவர்கள் நினைவிற்காக ஏங்குகின்றனர். நீங்கள் ஏங்குவது கிடையாது. அவர்கள் வீட்டில் அமர்ந்திருந்தாலும் உயர்ந்த பதவி அடைந்துவிடுவர். பாபாவின் நினைவில் இருப்பதன் மூலம் நமக்கு சொர்க்க இராஜ்யம் கிடைக்கும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். எவ்வாறு குழந்தை கர்ப்பத்திலிருந்து வெளியேறுவதற்கு தவிக்குமோ! அதேபோன்று பந்தனமுள்ளவர்கள் ஏங்கி ஏங்கி அழைக்கின்றனர் - சிவபாபா இந்த பந்தனத்திலிருந்து நீக்குங்கள். இரவு பகல் நினைவு செய்கின்றனர். உங்களுக்கு தந்தை கிடைத்திருக்கின்றார், ஆனால் நீங்கள் சோம்பலுடன் இருக்கிறீர்கள். நாம் பாபாவின் குழந்தைகளாக ஆகிவிட்டோம், நாம் இந்த சரீரத்தை விட்டு சென்று இளவரசராக ஆவோம் என்ற குஷி உள்ளுக்குள் நிலையாக இருக்க வேண்டும். ஆனால் மாயை நினைவு செய்யவிடுவது கிடையாது. நினைவின் மூலம் அதிக குஷியுடன் இருப்பீர்கள். நினைவு செய்யவில்லை எனில் ஏமாற்றம் அடைந்து கொண்டே இருப்பீர்கள். அரைக் கல்பம் இராவண இராஜ்யத்தில் நீங்கள் அதிக துக்கம் அடைந்துவிட்டீர்கள். அகால மரணம் ஏற்பட்டுக் கொண்டே வந்தது. துக்கம் இருக்கவே செய்கிறது. எவ்வளவு தான் செல்வந்தர்களாக இருந்தாலும் துக்கம் ஏற்படவே செய்கிறது. அகால மரணம் ஏற்பட்டுவிடுகிறது. சத்யுகத்தில் இவ்வாறு அகால மரணம் இருக்காது. ஒருபொழுதும் நோய் எற்படாது. தகுந்த நேரத்தில் தானாகவே ஒரு சரீரம் விடுத்து மற்றொன்றை எடுத்துக் கொள்வர். அதன் பெயரே சுகதாமம். சொர்க்கத்தின் விஷயங்களை மனிதர்கள் கற்பனை என்ற நினைக்கின்றனர். சொர்க்கம் எங்கிருந்து வரும்? என்று கேட்கின்றனர். நாம் தான் சொர்க்கத்தில் வசிக்கக் கூடியவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பிறகு 84 பிறவிகள் எடுக்கிறோம். இந்த முழு விளையாட்டும் பாரதத்தில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாம் 21 பிறவிகளுக்கு பாவன தேவதைகளாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிறகு நாம் சத்ரியர், வைஷ்யர், சூத்திரர் ஆக ஆனோம். இப்பொழுது மீண்டும் பிராமணர்களாக ஆகியிருக்கிறோம். இந்த சுயதரிசன சக்கரம் மிகவும் எளிதாகும். இதை சிவபாபா வந்துப் புரிய வைக்கின்றார்.சிவபாபா பிரம்மாவின் இரதத்தில் (உடலில்) வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரம்மா தான் சத்யுக ஆரம்பத்தில் ஸ்ரீகிருஷ்ணராக இருந்தார். 84 பிறவிகள் எடுத்து பதீதமாக ஆகிவிட்டார், பிறகு இவரிடத்தில் தந்தை பிரவேசமாகி தத்தெடுக்கின்றார். நான் இந்த சரீரத்தை ஆதாரமாக எடுத்து உங்களை என்னுடையவராக ஆக்குகின்றேன் என்று சுயம் கூறுகின்றார். பிறகு உங்களை சொர்க்கத்தின் இராஜ்யத்திற்கு தகுதியுடையவர்களாக ஆக்குகின்றேன். யார் தகுதியானவர்களாக ஆகிறார்களோ அவர்கள் தான் இராஜ்யத்தில் வருவார்கள். இங்கு நடத்தைகள் நன்றாக இருக்க வேண்டும். முக்கியமானது தூய்மை. இதற்குத் தான் பெண்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. சில இடங்களில் ஆண்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. விகாரத்திற்காக ஒருவரையொருவர் தொந்தரவு செய்கின்றனர். இங்கு தாய்மார்கள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் சக்தி சேனைகள் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. வந்தே மாதரம். காமச் சிதையிலிருந்து இறங்கி தூய்மையாவதற்காக இப்பொழுது நீங்கள் ஞானச் சிதையில் அமர்ந்திருக்கிறீர்கள். துவாபரத்திலிருந்து காமச் சிதையில் அமர்ந்திருந்தீர்கள். ஒருவரையொருவர் விகாரத்தில் செல்வதற்கான கயிறை விகார பிராமணர்கள் கட்டுகின்றனர். நீங்கள் விகாரமற்ற பிராமணர்கள். நீங்கள் அதை நீக்கி விட்டு ஞானச் சிதையில் அமரச் செய்கிறீர்கள். காமச் சிதையின் மூலம் கருப்பாக ஆகிவிட்டீர்கள், ஞானச் சிதையின் மூலம் தூய்மையாக ஆகிவிடுவீர்கள். ஒன்றாக சேர்ந்து இருங்கள், ஆனால் நாம் விகாரத்தில் செல்லமாட்டோம் என்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாபா கூறுகின்றார். அதனால் தான் பாபா மோதிரமும் அணிய வைக்கின்றார். சிவபாபா பாபாவாகவும் இருக்கின்றார், நாயகனாகவும் (சாஜன்) இருக்கின்றார். அனைத்து சீதைகளுக்கும் இராமராக இருக்கின்றார். அவர் தான் பதீத பாவனாக இருக்கின்றார். மற்றபடி இரகுபதி இராகவ இராஜாராமின் விஷயம் கிடையாது. அவர் (இராஜா இராமன்) இந்த சங்கமத்தில் தான் இந்த பிராப்தியை அடைந்திருக்கின்றார். அவரிடத்தில் இம்சைக்கான அம்பு காண்பிப்பது தவறாகும். சித்திரங்களிலும் கூட காண்பிக்கக் கூடாது. சந்திரவம்சி என்று மட்டும் எழுத வேண்டும். சிவபாபா இவர் மூலம் நமக்கு இந்த சக்கரத்தின் இரகசியங்களைப் புரிய வைக்கின்றார் என்று குழந்தைகளுக்கும் புரிய வைக்க வேண்டும். சத்திய நாராயணனின் கதை இருக்கிறது அல்லவா! அது மனிதர்களால் உருவாக்கப்பட்ட கதையாகும். நரனிலிருந்து நாராயணனாக யாரும் ஆவது கிடையாது. சத்திய நாராயணன் கதையின் பொருளே நரனிலிருந்து நாராயணன் ஆவதாகும். அமரக் கதையையும் கூறுகின்றனர். ஆனால் அமரபுரிக்கு யாரும் செல்வது கிடையாது. மரண உலகம் 2500 ஆண்டு காலம் நடைபெறுகிறது. மூன்றாவது கண்ணினுடைய (தீஸ்ரி) கதையை தாய்மார்கள் கேட்கின்றனர். உண்மையில் இது மூன்றாவது கண் கொடுக்கும் கதையாகும். இப்பொழுது ஞானம் என்ற மூன்றாவது கண் ஆத்மாவிற்கு கிடைத்திருக்கிறது எனில் ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். நான் இந்த சரீரத்தின் மூலம் தேவதையாக ஆகிறேன். என்னிடத்தில் தான் சம்ஸ்காரம் இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் தேக அபிமானத்தில் இருக்கின்றனர். தந்தை வந்து ஆத்ம அபிமானிகளாக ஆக்குகின்றார். ஆத்மா, பரமாத்மா ஒன்று தான் என்று மனிதர்கள் கூறிவிட்டனர். பரமாத்மா இந்த அனைத்து ரூபங்களையும் தாரணை செய்திருக்கின்றார். இவை அனைத்தும் பொய் ஆகும் என்று தந்தை கூறுகின்றார். இது தான் பொய்யான அபிமானம், பொய்யான ஞானம் என்று கூறப்படுகிறது. நான் பிந்து (புள்ளி) போன்று இருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். நீங்களும் அறியாமல் இருந்தீர்கள், இவரும் அறியாமல் இருந்தார். இப்பொழுது தந்தை புரிய வைக்கின்றார் - இதில் சந்தேகம் வரக் கூடாது. நம்பிக்கை ஏற்பட வேண்டும். பாபா கூறுவது சத்தியம் தான். சந்தேகபுத்தி அழிவைத் தரும். அவர்கள் முழு ஆஸ்தி அடையமாட்டார்கள். ஆத்ம அபிமானி ஆவதில் தான் முயற்சி இருக்கிறது. உணவு சமைத்தாலும் புத்தி தந்தையின் பக்கம் இருக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் இந்த பயிற்சி செய்ய வேண்டும். ரொட்டி வேக வைத்தாலும் தனது நாயகனை (சிவ பாபாவை) நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும், இந்த பயிற்சி ஒவ்வொரு விஷயத்திலும் இருக்க வேண்டும். எவ்வளவு நேரம் கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் நினைவு செய்ய வேண்டும். நினைவின் மூலம் தான் சதோபிரதானமாக ஆவீர்கள். 8 மணி நேரம் காரியங்கள் செய்வதற்கு ஒதுக்குங்கள். இடையிலும் ஏகாந்தத்தில் சென்று அமர்ந்து விட வேண்டும். நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகமும் கூற வேண்டும். இன்று கேட்கவில்லையெனில் நாளை கேட்பார்கள். தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார், நாம் சொர்க்கத்தில் இருந்தோம், இப்பொழுது நரகவாசிகளாக ஆகிவிட்டோம். இப்பொழுது மீண்டும் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். பாரதவாசிகளுக்குத் தான் புரிய வைக்கின்றார். தந்தை வருவதே பாரதத்தில் தான். உங்களிடம் முஸ்லீம்களும் வருகின்றனர். அவர்களும் சென்டர் சம்பாலனை செய்கின்றனர். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றனர். சீக்கியர்களும் வருகின்றனர், கிறிஸ்தவர்களும் வருகின்றனர். நாள் செல்ல செல்ல பலர் வருவர். இந்த ஞானம் அனைவருக்கும் பொதுவானது ஆகும். ஏனெனில் இது எளிய நினைவு மற்றும் எளிய ஆஸ்தியாகும். ஆனால் அவசியம் தூய்மையாக ஆக வேண்டியிருக்கும். தானம் கொடுத்தால் கிரஹச்சாரம் நீங்கிவிடும். இப்பொழுது பாரதத்தில் இராகு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிறகு 21 பிறவிகளுக்கு குருதிசை நடைபெற ஆரம்பித்துவிடும். முதன் முதலிலில் குரு திசை நடைபெறுகிறது, பிறகு சுக்ர திசை ஆகும். சூரியவம்சத்தினர்களுக்கு குரு திசையாகும், சந்திரவம்சத்தினர்களுக்கும் சுக்ர திசை என்று கூறலாம். பிறகு திசைகள் குறைந்துக் கொண்டே செல்கின்றன. அனைத்தையும் விட மிகவும் கொடியது இராகு திசையாகும். குரு திசை என்றால் எந்த குருவும் கிடையாது. விருட்சபதியின் திசையாகும். விருட்சபதி தந்தை வருகின்ற பொழுது குருதிசை மற்றும் சுக்ர திசை ஏற்படுகிறது. இராவணன் வருகின்ற பொழுது இராகு திசை ஏற்பட்டுவிடுகிறது. குழந்தைகளாகிய உங்கள் மீது இப்பொழுது குரு திசை அமர்ந்திருக்கிறது. விருட்சபதியை மட்டும் நினைவு செய்யுங்கள், தூய்மையாகுங்கள் போதும். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்!தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டே ஆத்ம அபிமானி ஆவதற்கான பயிற்சி செய்ய வேண்டும். தேக அகங்காரத்தை ஒழித்து விட வேண்டும், இதற்கான முயற்சி செய்ய வேண்டும்.2) சத்யுக இராஜ்யத்திற்கு தகுதியானவர் ஆவதற்காக தனது நடத்தைகளை இராயலாக (அரசனுக்குரியதாக) ஆக்கிக் கொள்ள வேண்டும். அனைத்தையும் விட மிக உயர்ந்த நடத்தை தூய்மையாகும். தூய்மை ஆவதன் மூலம் தான் தூய்மையான உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள்.வரதானம்:

மூன்று காலங்களையும் அறிந்துள்ளதின் மூலம் மாயையின் யுத்தத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கக் கூடிய அதீந்திரிய சுகத்திற்கு அதிகாரி ஆகுக!சங்கமயுகத்தின் விசேஷ வரதானம் அல்லது பிராமண வாழ்வின் விசேஷத்தன்மை - அதீந்திரிய சுகம் ஆகும். இந்த அனுபவம் வேறு எந்த யுகத்திலும் ஏற்படுவது கிடையாது. ஆனால் இந்த சுகத்தின் அனுபவத்திற்காக மூன்று காலத்தை அறிந்துள்ள நிலை மூலம் மாயையின் யுத்தத்திலிருந்து பாதுகாப்பாக இருங்கள். ஒருவேளை அடிக்கடி மாயையிடம் யுத்தம் செய்து கொண்டே இருந்தால் விரும்பினாலும் அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்ய முடியாது. யார் அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்து செய்கின்றார்களோ அவர்களை இந்திரிய சுகம் கவர்ச்சிக்க முடியாது. ஞானம் நிறைந்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் முன்பு அது மிகவும் துக்கமாகத் தென்படும்.சுலோகன்:

செயல் மற்றும் மனம் இரண்டின் சேவையும் சமநிலையில் இருந்தால் சக்திசாலியான வாயுமண்டலத்தை உருவாக்க முடியும்.
***OM SHANTI***